எட்டுத் தோட்டாக்கள்: கவிஞர் தணிகை
superb
கணேஷ் என்ற ஒரு நல்ல திரைப்படக் கலைஞர் அருமையான திரைக்கதை அமைப்புடன் ஒரு நல்ல பல பரிமாணங்கள் கொண்ட கதையை திரைப்படமாக்கியிருக்கிறார் எட்டுத் தோட்டாவுக்குமே எட்டு உயிர்களைக் கொடுத்து...
எம்.எஸ்.பாஸ்கர்தான் நாயகர் என்றே சொல்லலாம், ஆனாலும் வெற்றி மிக அருமையாக அடக்கமாக அன்டர்ப்ளே செய்து நாயகன் பேரைத் தக்க வைத்துக் கொள்கிறார். நாயகி நன்றாக தமது ரோலை உணர்ந்து செய்திருக்கிறார். அவர் நடிகையாகவே தெரியவில்லை. அவ்வளவு குடும்பப் பாங்கு.அபர்ணா பாலமுரளியாம். அத்தனை நேரிய கனகச்சிதமான முக அமைப்புடையவரைத் தேர்வுசெய்திருக்கிறார் இயக்குனர்.
பொதுவாகவே இந்த எம்.எஸ்.பாஸ்கர், தம்பி இராமைய்யா, நாசர் போன்ற நடிகர்கள் எல்லாம் எந்த எப்படிப்பட்ட பாத்திரங்கள், ரோலைக் கொடுத்தாலுமே செதுக்கி விடுவார்கள்....இதில் எம்.எஸ்.பாஸ்கர் உன்னைப்ப்போல் ஒருவன் கமலைப் போல் அசத்தியுள்ளார்.
கைத்துப்பாக்கியைக் கையாளத் தெரிந்த ஒரு காவல்துறையில் பணி புரிந்து தண்டனையாக வேலை இழந்த ஒரு போலீஸ்காரர் எப்படி காவல் துறையை மிஞ்சி 8 தோட்டாக்களையும் உபயோகித்து விடுகிறார் என்பதே சுருக்கமான கதை.
பெரிய பெரிய பேனர் படங்களை எல்லாம் பார்ப்பதற்கு இது போன்ற படங்கள் எவ்வளவோ பரவாயில்லை,தேவலாம் சூப்பர் படம் பார்க்க ஆரம்பித்தால் முடித்தவுடன் தான் நமக்கு வெறு பக்கம் சிந்திக்கத் தோன்றுகிற அளவு அவ்வளவு கட்டிப் போட்டு விடுகிற படம்,
என்னைக் கேட்டால் காற்று வெளியிடை படத்தை இத்துடன் ஒப்பிடவே கூடாது ஆனாலும் இரண்டும் ஒரே நாளில் ரிலீஸ் என்பதால் காற்று வெளியிடை செல்வதற்கு பதிலாக இதற்கே சினிமா இரசிகர்கள் சென்றால் திருப்தி அடைவர்.
நல்ல கதைச் செதுக்கல். நல்லகதையமைப்பை உடைய படமே இனி வெற்றி பெறும் என்பதற்கு இந்தப் படமும் ஒரு எடுத்துக் காட்டு. 50களுக்கும் மேல் வயதாகிவிட்ட ஒரு நடுத்தர வயதான மனிதர் சமுகத்தின் எல்லாப் பக்கங்களிலும் எப்படி திருப்பிப் போடப்பட்டு ஒரு கொலைகாரராகி விடுகிறார். மாறுகிறார் என தெளிவாக சொல்கிறார்கள். இலஞ்சம், அரசு, காவல் துறை ஆகியவற்றின் பாதிப்புகளுடன் .முதுமை, பொருளாதாரம், நல்ல அரசின்மை, அரசு அலுவலகங்களின் மெத்தனம் , குடும்பத்தின் மனைவி இல்லா ஒரு கணவனின் ஏக்கம், செய்யாத குற்றத்திற்கு தண்டனை, காவல்துறை என்றாலே அச்சப்படும் ஒருவருக்கு காவல்துறைப் பணி, சிறுவர் கூர்மப் பள்ளியில் படித்த சிறுவன் காவல் துறை துணை ஆய்வாளராக ஆவது...
வேலையில்லாமல் தான் இருக்கிறார் என்று அந்தக் குற்றவாளியை பின் தொடரட்டும் என்று கையில் ஒரு கைத்துப்பாக்கி அதில் 8 தோட்டாக்களுடன் கதை செல்ல ஆரம்பிக்கிறது அதனுடன் நாமும் செல்கிறோம் ஒரு இடத்தில் கூட தொய்வில்லாமல்...
நல்ல படம் பார்க்க வேண்டிய படம். காவல்துறையின் கறைகளை ஒரளவு காட்டியுள்ள படம், சாடியுள்ள படம். எம்.எஸ். பாஸ்கர் புகுந்து விளையாடி இருக்கிறார். அந்த அளவு அவருக்கு வாய்ப்பை வழங்கி உள்ளார் இயக்குனர் கதை நாயகர் வெற்றியுடன் ஆரம்பித்து கைத்துப்பாக்கி தொலைந்து முதல் கிருஷ்ணா மூர்த்தி கிருஷ்ணமூர்த்தி மூர்த்தியை பின் தொடர ஆரம்பித்து விட்டது.
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.
அருமையான விமர்சனம். நன்றி.
ReplyDeletethanks sir vanakkkam
Deleteஅருமையான விமர்சனம்
ReplyDeleteபார்த்தே தீர வேண்டிய படம் என்பது புரிகிறது
நன்றி நண்பரே
thanks for your feedback on this post sir. vanakkam
Delete