Friday, April 14, 2017

ஒரு போராட்டக்காரனின் ஓலத் தூது: கவிஞர் தணிகை

ஒரு போராட்டக்காரனின் ஓலத் தூது: கவிஞர் தணிகை

போகிற போக்கில்  சிறு நூலில் இடம் பெற்ற பதிவு:2007.

Image result for uniform civil code in india


எங்கள் "பணம்" தானே
உங்கட்கு "எல்லாம்"


FIRING ORDER
சுட உத்தரவு கிடைத்தவுடன்
கற்ற வித்தையை
கருணையின்றி காட்டி விடுகிறீர்
எங்கள் மீதே.

இழப்பது யரை?
உங்கள்  குடும்பங்களையேயல்லவா?
வருந்தியழுவது யார்?
உங்கள் தாய்களேயல்லவா?

நீங்காவலி
நமக்கேயில்லையா?


தங்களை
வேறு வழியின்றி
கவசத்துள் நுழைத்துக் கொண்ட‌
இளையவரே:

நீங்கள் கூட‌
கொஞ்சம் சிந்திப்பதில் தவறில்லை

CEASEFIRE
போர் நிறுத்தம்
நமக்குள் தேவை

நாங்கள்
நியாயத்துக்காக போராடுகிறோம்
நாங்கள் வைத்த வேலக்காரர்கள்
நியாயமென உறுமிக் கொண்டு
எங்கள் தலைமீதே
கை வைக்க நேர்கையில்

அவேலைக்காரர்களின்
கைக்கூலிகளா(ய்)
நீங்கள்?

எங்கள் போராட்டத்தில்
வெற்றி பெற்றால்
அப்பயன் பகிர்வுகள்
உங்கள் குடும்பங்களுக்கில்லையா?

நீங்கள் மனிதரில்லயா?
எங்கள் மனிதரில்லையா?

காக்கச் சொன்னால்
எவனோ ஒருவன் தாக்கச் சொன்னானெ
எங்களது குடலை சரித்து விடுகிறீர்
எங்கள் குருதிக் குழல்களை
முறித்து விடுகிறீர்

மண்ணிற்காக
உடல்களை சாய்த்து விடுகிறீர்

இளகிய எங்கள் கசாப்புக்காரரே
காப்பு மனிதரே
நீங்களும் சிந்திப்பதில் தவறில்லை|

நீங்கள் நியமனத்தின் பக்கமா?
நியாயத்தின் பக்கமா?
நிர்ணயித்துக் கொள்ளுங்கள்

இது ஆய்தமேந்த‌
அங்கீகார அனுமதி பெற்ற‌
தங்கள் சகோதரர்க்கு
ஓர் போராட்டக்காரனின்
ஓலத் தூது|


கவிஞர் தணிகை
மறுபடியும் பூக்கும் வரை


கவிதைகள் இளகிய மனமே புகும்
ஒலி
வெற்றிடத்தில் பயணம் செய்வதில்லை.

2 comments: