அலோக் சாகர்: கவிஞர் தணிகை
இந்த அலோக் சாகர் பற்றி ஒரு நண்பர் அனுப்பிய மின்னஞ்சல் மூலம் அறிய நேர்ந்தது. இது போன்ற மனிதர்கள் இன்னும் இந்தியாவில் இருக்கிறார்கள் என்னும்போதே மாதவம் செய்தவராய் இருக்க வேண்டும் இவர் என்னும் ஞானம் எழுகிறது .இந்தியாவில் இப்படிப்பட்ட நபர்களும் இன்னும் இருக்கிறார்களே என்ற வியப்புடன்.
இவர் ரகுராம் ராஜன் நமது முன்னால் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்தவரின் பேராசிரியர், ஐ.ஐ.டியின் பேராசிரியர்,இவரும் ஐ.ஐ.டியில் படித்துவிட்டு தமது முதுகலைப் பட்டத்தையும் முனைவர் பட்டத்தையும் ஹூஸ்டனில் படித்தவர்.
இதெல்லாம் இவரை அடையாளப்படுத்தவில்லை. ஆனால் ஒரு காந்திய சிந்தனையாளராக மத்தியப்பிரதேச மலைவாழ் மக்களுக்காக அவர்களுடன் தங்கி வெறும் உடம்புடன் ஒரு மிதிவண்டியில் விதைகளை எடுத்துக் கொண்டு தேவையான இடங்களில் தேவையனவர்க்கு வழங்கி மரங்களை உற்பத்தி செய்யும் ஆர்வலராக இருந்தார் என்னும் செய்தி நெஞ்சை நெகிழச் செய்வதாக இருந்தது.
மேலும் இந்த பக்கிரி யார் என காவல்துறை விசாரித்துப் பார்த்து தமது வணக்கத்தையும் இவருக்கு செலுத்தியதாக செய்திகள் இருக்கின்றன. அவருக்கு நாம் செய்யும் காரியம் நம்மால் முடிந்த அவரைப்பற்றிய ஒரு பதிவு அவ்வளவுதான்.
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

அருமையான பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி கவிஞர் தணிகை.
ReplyDeleteபோற்றுதலுக்கு உரிய மனிதர் நண்பரே
ReplyDeleteஅவருக்கு நாம் செய்யும் காரியம் நம்மால் முடிந்த அவரைப்பற்றிய ஒரு பதிவு அவ்வளவுதான்.
உண்மை
உண்மை
நன்றி நண்பரே