Sunday, April 9, 2017

ஆர்.கே நகர் தேர்தலை நிறுத்து தமிழக அரசை கலை என்னும் பி.ஜே.பி கட்சி ஆட்சியின் மத்திய‌ நிலை? கவிஞர் தணிகை.

ஆர்.கே நகர் தேர்தலை நிறுத்து தமிழக அரசை கலை என்னும் பி.ஜே.பி கட்சி ஆட்சியின் மத்திய‌ நிலை? கவிஞர் தணிகை.
Image result for rk nagar by election 2017


4000 ரூபாய் கொடுப்பதை வீடியோவில் பார்த்தோம், வாக்காளர் பட்டியலுடன் அடுத்து ஜானகி என பல பேர்களும் சொல்வது காதில் ஒலிக்கின்றன. இதை செய்தது ஆளும் கட்சி, கசிந்த பட்டியலில் 85 கோடி சப்ளை செய்யவும் எடப்பாடி முதல்வர் பேர் முதற்கொண்டு 7 மந்திரிகளின் பேர் இருக்கிறது என்றும் தேர்தல் ஆணையம் தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் நிலை விளக்கி திங்கள் கிழமை 10.04.17ல் முடிவெடுக்க முடிவு என்றும் செய்திகள் அல்லோகலப்பட்டுக் கொண்டிருக்கிறது.

ஏற்கெனவே தஞ்சை, அரவக்குறிச்சியின் இடைத்தேர்தல்கள் இது போன்ற காரணங்களுக்காக நிறுத்தப்பட்டிருப்பதாகவும் செய்திகள். தி.மு.கவும் ரூபாய் இரண்டாயிரம் கொடுத்து வருவதாகவும் செய்திகள்.

மொத்தத்தில் உலகின் மாபெரும் இந்திய ஜனநாயகம் ஒரு வாக்கின் மார்க்கெட் ரேட்டை ரூ.10000 பத்தாயிரம் வரை உயர்த்தி விட்டது. இந்த ரூபாய் கிடைக்கும் நகர் என்னும் இராதா கிருஷ்ணன் நகரில்.

இந்த இடைத்தேர்தல் மிக முக்கியமாக ஏன் விளங்குகிறது:
1. தி.மு.கவுக்கு ஒரு திருப்பு முனையாகலாம்
2. இருக்கும் எடப்பாடி முதல்வருக்கு கல்தா கிடைக்கலாம்
3. சில எம்.எல்.ஏக்கள் எடப்பாடி அணியிலிருந்து தினகரன் தோற்றால் அணி மாறலாம் அதனாலும் ஆட்சி கலையலாம்.

4. அல்லது மத்திய அரசே தேர்தல் ஆணையத்திடம் அணை போட்டு தேர்தலை நிறுத்தலாம்
5.ஆட்சியைக் கலைக்கலாம்
6. ஆட்சியைக் கலைத்து விட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியும் பிரகடனப்படுத்தலாம் இப்படி பல் வேறு சவால்களுடன் எதிர்காலத்தில் தமிழக நிலை.

Image result for rk nagar by election 2017



இத்தனையிலும் ஏக கொடுமையான கோடை , குடி நீரின்றி காவிரி எல்லாம் வறண்டு போக, கர்நாடகா உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்காமல் துணிந்து நிற்க அதெல்லாம் சட்ட ஒழுங்கை மீறுவதாகாது...ஆனால் எனக்குத் தெரிந்த நாள்முதல் எல்லாத் தேர்தலிலுமே பணம் வாக்குக்கு அளிக்கப்படாத தேர்தல் என்று எதுவுமே நடந்ததாக சரித்திரம் இல்லை.

என்ன அன்று ஒரு ரூபாய் தாள், இரண்டு ரூபாய் தாள்கள் கருக்கழியாமல் கைமாறும் இன்று மோடியின் கேடித் திட்டத்தால் அச்சடிக்கப்பட்ட பல இரண்டயிரம் ரூபாய் தாள்கள் ஒரு வாக்குக்கு கைமாற்றப் படுகின்றன அவ்வளவுதான் வேறுபாடும். காலம் மாற மாற அதற்கும் விலை ஏறத்தானே வேண்டும், பால் விலை இந்த மாதம் முதல் தனியாரில் எங்கள் வீடுகளில் 4 ரூ ஏறி இருக்க, காய்கறி விலை சொல்லவே வேண்டாம், வெங்காயம் கிலோ 60 என்கிறார்கள் என சேலம் சந்திப்பில் உள்ள கடையில் 55க்கு வாங்கி 45 கி.மீ பயணம் செய்து எடுத்து வந்தேன் கடந்த வெள்ளியில். எந்த காய்கறியும் விலை குறைவாக இல்லை. வாரம் 200க்கு காய்கறி வாங்கியது இப்போது இரண்டு மடங்கு கூடியுள்ளது.இடைத்தேர்தல் வாக்கின் விலையும் கூடி உள்ளது இதில் என்ன என்கிறீரா>?இறந்த நிரந்தர முதல்வர் அம்மா ஜெவின் தொகுதியாயிற்றே....பேய் பிசாசுகள் சும்மாவா இருக்கும் நான் பணப்பேயை தேர்தல் பிசாசுகளைச் சொன்னேங்க...இரவு பகலாய் பகல் இரவாய், வெயிலா அதற்கு இருந்தால் தான் என்ன....

இப்போதுதான் விஜய்பாஸ்கர் மந்திரி, மற்றும் அவர் உறவினர், சகோதரர், சரத்குமார் இருப்பிடங்களில் வருவாய்த்துறை சோதனை நடந்தது இது மேலும் பல மந்திரி வீடுகளில் தொடரும் என்ற செய்திகள்.

ஆக 12 ஆம் தேதி தேர்தல் ஆர்.கே நகரில் நடத்துவதற்குள் மத்திய பி.ஜே.பி ஆட்சி தமிழக ஆட்சிக்கு கொடுக்கும் இனிமா இவ்வளவு அவ்வளவு இல்லை...எப்படியோ தமிழிசை,நிர்மலா சீதாராமன், பொன் இராதாகிருஷ்ணன், எச்.உச்.இராஜா, போன்ற மாபெரும் மக்கள் செல்வாக்கு பெற்ற இந்த  மக்கள் தலைவர்கள் இன்னும் துணிச்சலாக பேசுமளவு தமிழக அரசியல் நிலை இருக்கிறது. இல கணேசன் கூட ஜென்டிலான அரசியல்வாதி என்று பேர் எடுத்தவர் ஆட்சி அவர்கள் தலைமைக்கு போனதால் தலைக்கனத்தோடு பேச ஆரம்பித்திருப்பதாகவும் செய்திகள் உலவ..

இப்போதுதான் எல்லாமே இவர்களுக்குத் தெரிவதாக நமக்கும் தெரிவதாக ஊடகத்துக்கும் தெரிவதாக..

ஒருபக்கம் அம்மா டிவி, அம்மா நாளிதழ்  அம்மா சவப்பெட்டி என பன்னீர் நாடகம் அரங்கேற்றி ஸ்டாலினின் கனவுத் திட்டமான எதிர்கால முதலவர் பதவிக்கு வேட்டு வைக்கப் பார்க்க...தமிழக விவசாயிகளை எடப்பாடி முதல்வர் பிரதமரிடம் அழைத்துப் போக வேண்டும் எனச் சொல்லும் ஸ்டாலின் எடப்பாடி அரசு தாங்காது 6 மாதத்துள் தேர்தல் என மறுபக்கம் ஓத‌

எல்லாம் வேடிக்கையாக அரங்கேறிடும் தமிழக அரசியல் நாடக காட்சிகள். இதில் மத்திய மோடி அரசு வேறு என்னவெல்லாமோ கணக்குகள்...உமா
பாரதி தூக்கில் தொங்கவும் தயார் என்கிறார் இராமர் கோயில் கட்ட,யோகி ஆதித்ய நாத் வந்தே மாதரம் பாடாதார் எல்லாம் இந்தியரா எனக் கேட்காமல் கேட்கிறார்.

Image result for rk nagar by election 2017

ஆக பி.ஜேபி நாடகம் இப்படி, தேர்தல் நாடகம் அப்படி, தேர்தல் ஆணையம், வருவாய் வரித் துறை எல்லாம் எப்படி  நாளை மாலைக்குள்...

தவறு ருசிப்பிக்கப்பட்டால் வேட்பாளரையும் அந்தக் கட்சியையும் தேர்தலிலிருந்து நீக்குவது, தேர்தலை ஜூன் வரை தேதி இருப்பதால் ஒத்தி வைப்பது தேர்தலை நடத்த விடாமல் நிறுத்தி வைப்பது , ஆட்சியைக் கலைப்பது இப்படி பல வழிகள் இருக்கின்றன. ஏன் எனில் முதல்வரிலிருந்தே பல  மந்திரிகள் இந்த புகாரில் சிக்கி உள்ளனர்.

இந்தியாவின் இந்த ஜனநாயக முறைத் தேர்தல் மேல் மக்களின் கவனம் திருப்பப் பட்டு தேர்தல் சீர்திருத்த முறைகள் கொண்டு வர நல்ல தருணம் அரசுக்கும் ஆணையத்துக்கும், ஊடகங்களுக்கும், பாராளுமன்றத்துக்கும், நீதிமன்றங்களுக்கும் ஆனால் புகார் கொடுத்தாலும் எ.ஐ.ஆர் போட மாட்டோம் என்று பணி செய்யும் காவல் துறை போன்ற அமைப்புகளாயிற்றே இவை எல்லாம் ஆம் இவை எல்லாம் இவை எல்லாம் செய்யுமா என்ன?

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

2 comments: