மதக் கதைகள் அரசின் விதைகள் : கவிஞர் தணிகை
தேவ லோகத்தில் கற்பகத் தரு, வசிஸ்ட மகரிஷியின் காமதேனு,மணிமேகலையின் அமுதசுரபி என்னும் அட்சய பாத்திரம்,கிருஷ்ணனின் ஒரு பருக்கை விருந்து பெருக்கு திரௌபதி வேண்டல், யேசுபிரானின் 7 கூடை மீன்களும் அப்பமும் பெருகி ஆயிரக்கணகானவர்களுக்கான விருந்து...அம்மா உணவகம்...
இன்று நல்ல வெள்ளி அல்லது பெரிய வெள்ளி. யேசுவை சிலுவையில் அறைந்து வரும் ஞாயிறு உயிர்த்தெழும் நாள். ஆவி வாழ்க்கை உண்டு என்று எல்லா மதங்களிலும் ஏற்றுக் கொள்ளப் பட்டு நம்பப் படுகிறது. யேசுவின் ஆவி அலைந்ததை நம்பினால் அவர் வாழ்ந்ததும் நம்பப் பட வேண்டியதே...
ஆனால் நம்ப முடியாத கதைகள். அப்படி நடந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் எனத் தோன்றும் கதைகள் எல்லா நாடுகளிலும் உண்டு. ஹாரிபாட்டர் வெளக்கமாறில் ஏறி பயணம் செய்வதை நாம் இரசிக்கிற போது இதற்கெல்லாம் என்ன விமர்சனம் என சிலர் கேட்பது காதில் விழுகிறது.
கதை சினிமா என்றும் கற்பனை என்றும் சொல்லி விட்டால் எல்லாவற்றையும் யாருமே இரசிக்கலாம். ஆனால் கடவுள், மதம் என்ற நம்பிக்கை வெறியாக பற்றாக மனப்பிறழ்ச்சியாக மார்க்ஸ் சொல்லியபடி மதம் என்பது அபின் என்ற போதை வஸ்துவாக இல்லாமல் இருந்தால் நல்லதே. ஆனால் இந்தக் கதைகளை கவனியுங்கள்.கையில் குழந்தையை ஏந்தியபடி இன்னும் சில சாதியில் தீ மிதித்து ஓடிக்கொண்டிருக்கிறார்கள் சில சாதியர் வேடிக்கை பார்க்க, தூண்டிக்கொண்டிருக்க, இயக்கம் ஒரு புறம் இயக்குதல் ஒரு புறம் என....
நாம் ஒரு முறை கற்பனை செய்தோம்: ஒரே பருக்கை அரிசிச் சோறு மலையளவாய் இருந்து அதில் ஏழைகள் வேண்டுமளவு வெட்டித் தின்று கொள்ள வேண்டும் பசியாற...
கடல் நீரை எழுது மையாக்கி காடுகளின் மரங்களில் எல்லாம் எழுது கோல் செய்து பிரபஞ்சத்தின் எல்லாக் கோள்களின் மேனியில் எல்லாம் தமிழால் எழுதிச் செல்ல வேண்டுமென்று...
கதை கதை கதைக்கு வருவோம்:
தேவ லோகத்தில் கற்பகத் தரு என்ற மரம் இருக்கிறதாம். அதனடியில் சென்று கேட்டால் கேட்டதெல்லாம் கொடுக்குமாம்.முதலில் மழை கேட்போம் தமிழகத்துக்கு குறைந்த பட்சம்.
வசிஷ்ட முனிவரிடம் காமதேனு பசு இருந்ததாம். அது சிவபெருமான் வரத்தால் இவர் பெற்றதாம்.அதனிடம் கேட்டால் உண்ண யாவும் கிடைக்குமாம். ஒரு முறை விசுவாமித்திரன் கௌசிக மகாராஜாவாக இருந்த போது வேட்டையாடிக் களைத்து தமக்கும் தமது படை பரிவாரங்களுக்கும் உணவு வேண்டுமே என வஷிஷ்ட முனிவரிடம் கேட்க அவரும், நீங்கள் குளித்து முடித்து வருவதற்குள் தயாராகிவிடும் என தயார் செய்து வைத்திருந்தாராம்.
ஒரு சக்கரவர்த்தியால் கூட முடியாத அமுதைப் போன்ற அன்ன பதார்த்தங்களை எப்படி இந்த முனிவனால் அதற்குள் செய்துப் பரிமாற முடிந்தது என வியந்து கேட்க, முனிவனும், எம்மிடம் ஒரு காமதேனு என்ற பசு உண்டு அது கேட்பதை எல்லாம் கொடுக்கும் என்றராம் அதைப் பார்க்க விரும்புகிறேன் எனப் பார்த்தாராம் மன்னன் முனிவன் காட்ட..
அப்போதே நினைத்தேன் இது மனித கைப்பாகத்தால் விளைந்த உணவாக இல்லையே, அமுதச் சுவையுடன் இருக்கிறதே என சொல்லி நாடு சென்று தமது வீரர்களை அனுப்பி அந்த முனிவனிடம் கேளுங்கள் , கொடுக்கவில்லையெனில் அவனைப் போரில் வென்று அந்த காமதேனுவைக் கவர்ந்து வாருங்கள் எனக் கட்டளை இட...போர் மூள, காமதேனுவின் தோல் வயிற்றுப் புறங்கள் எல்லாம் ஈட்டி வீச அரம்பித்து இடைவிடாது...மன்னனின் போர்வீரர்கள் தோற்றோடி நிகழ்ந்ததை சொல்ல,ஒரு முனிவனை வேல்ல முடியவில்லையே என முடி துறந்து தவம் இயற்ற சென்றதாக ஒரு கதை...
மணிமேகலை ஆபுத்திரனிடமிருந்து பெற்ற அமுதசுரபி என்னும் அட்சய பாத்திரத்தை எடுத்து சென்று ஏழைகள் பசியாற்றியதாக அதாவது அந்த பாத்திரம் எதைக்கேட்டாலும் எப்படிப்பட்ட உணவானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்குமென ஒரு கதை..
சூரியனின் சூல் கொண்ட குந்தி தேவி திருமணத்திற்கும் முன்பே கர்ணனை பெறுவதும், அர்ஜுனன் போட்டியில் விற்வித்தையில் வென்று வந்த திரௌபதியை வனவாசத்தின் போது வழக்கம்போன்ற பிச்சைதானே சரியாக என்ன சொன்னான் மகன் எனக் காதில் வாங்காமல் குடிசையில் இருந்து வெளி வந்து பாராமலே ஐவரும் சரி சமமாக பங்கிட்டுக்கொள்ளுங்கள் என்ற தாயின் வாக்கை மகன்களும், மருமகளும் அப்படியே தலைமேல் தாங்கியதாக பாஞ்சாலிக் காதை பாஞ்ச்: பஞ்சம் ஐந்து...பேரை ஆள்பவள்...
அந்த திரௌபதிக்கு அம்மன் என்றும் திரௌபதி அம்மன் பண்டிகையும் உண்டு. அவள் வனவாசத்தில் இருந்தபோது நிறைய எண்ணிக்கையில் முனிவர்களும், அவர்கள் சீடர்களும் பசிக்கு உணவு கேட்டு வர, குளித்து விட்டு வருவதற்குள் தமது கணவன்மார்களும் அருகே இல்லாதிருக்க கிருஷ்ணனை வணங்க அவன் வந்து நேற்று இரவு சமைத்து விட்டுகழுவி வைத்த பாத்திரத்திலிருந்து ஒரு பருக்கை ஒற்றிக்கிடக்க அதை அத்தனை முனிபுங்கர்களுக்கும் இலை விரித்து உணவு தந்து அவர்களை திருப்தி செய்ததாகவும் அவர்கள் சாபம்,கோபம் ஆகியவை நேராமல் காத்துக் கொண்டதாகவும்...கதை எல்லாம் கதை...(given food to 10,000 sages)
அது போல: யேசு பிரான் மலைப் பிரசங்கம், கடல் பிரசங்கம் எல்லாம் கேட்க நீதியாய் மனித குலத்துக்கு வேண்டியதாய் இருக்கும் ஆனால் அவர்களும் பைத்தியம் பிடித்த மாதிரி யேசுவின் பேர் சொல்லி ஆடுகிற ஆட்டம் கேட்க பார்க்க இதெல்லாம் கேள்வி கேட்க மெய்யா பொய்யா எனத் தோன்றுவது இயல்புதானே?
வந்திருந்த மக்களுக்கு எல்லாம் கூடையில் இருந்த 7 மீன்கள், 7 அப்பத்தை தொட்டு அளிக்க அது மலை மலையாய் பெருகி அனைவர்க்கும் அளித்தது போக பல கூடைகள் மீதமிருந்ததாம். கதை கதை.....
இதெல்லாம் நல்லா நடந்திருந்தால் இப்போதும் இது போல ஏதாவதும் நடந்திருந்தால் குடிக்க தண்ணீர் உண்ண உணவு எல்லாம் கிடைக்கும் அல்லவா?உலகு செழிக்குமல்லவா? இவ்வளவு வெப்பத்தையும் தணிக்க மழை பெருக்க தெய்வத்தை எல்லாம் வணங்கினால் உடனடியாக தெய்வம் செவி சாய்க்க வேண்டாமா? தெய்வம் நின்றுதான் கொடுக்குமாம் கொல்லுமாம்.
அம்மா உணவகம் தேர்தல் முடியும் வரை அனைவர்க்கும் தமிழக மக்கள் அனைவர்க்கும் ஏன் தேர்தல்முடியும்வரை எப்போதுமே இலவச உணவளிக்கவேண்டுமல்லவா? அளிக்க முடியுமல்லவா?
மதமும் அரசியலும் எப்போதும் பிணைந்தே இருக்கின்றன. கடவுள் என்ற தத்துவம் தவறாக பொருள் கொள்ளப் படுகிறது பெரும்பாலும்.
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:
Post a Comment