Friday, March 11, 2016

மாற்று கட்சிக்கும், எதிர் கட்சிக்கும் பழி வாங்க ஆட்சிக்கு வருகிறார்களா? மக்களுக்கு நன்மை செய்ய வருகிறார்களா? - கவிஞர் தணிகை

மாற்று கட்சிக்கும், எதிர் கட்சிக்கும் பழி வாங்க ஆட்சிக்கு வருகிறார்களா? மக்களுக்கு நன்மை செய்ய வருகிறார்களா? - கவிஞர் தணிகை

1. சுயநலம்  கொண்டு பிழைப்பு நடத்த அரசியலுக்கு வருகிறார்கள்.2.தமது கட்சியை நிலை நிறுத்திக் கொள்ள செயல்படுகிறார்கள்,3.மாற்றுக் கட்சிக்கும், எதிர்கட்சிக்கும் சவால் விடுத்து பழி வாங்க வருகிறார்கள். ஆனால் மக்களுக்கு சேவை செய்ய நன்மை செய்ய வருவதேயில்லை. இவர்களுக்கு எல்லாம் வாக்களிப்பது பாவம்.ஒரு தலைவர் மாபெரும் மக்கள் அலையை சந்திக்க வருகிறார் தடுமாறிக் கொண்டு, அவர் தான் தமிழ் நாட்டின் அடுத்து வரும் ஆட்சியை நிர்ணயிப்பவர் என்றார்கள்.அவர் உடல் நலம் சரியில்லை எனவேதான் அவர் பேசுவது புரியாது, புரிவதில்லை என்கிறார் துணைவி மாறாக எம்.ஜி.ஆர், காமராஜர் பேசுவது பேசியது கூட புரியாமல்தானே இருந்தது. என தமது மணாளனை மாபெரும் புருஷனாக பார்க்க ஆசைப்படுகிறார். தவறில்லை. அவ்வளவு  உடல் நலமின்மைஉடன் ஏன் அம்மா அவருக்கு மக்களைக் காக்கும் பணி? ஓய்வெடுத்து உடலை கவனிக்க வேண்டியதுதானே? முதல் வேலையாய்....

இன்னொரு தலைவர் கர்ஜிக்கிறார் தமது மகன் படித்த தகுதி உள்ளவர்தான் சிகரெட் முகவராக 200 பேரில் ஒருவரானால் என்ன தவறு? இவருக்கு இந்த முகமை இல்லை என்றால் வேறு ஒருவருக்கு அது கிடைக்கப்  போகிறது? போங்கடா போய் இதை அந்த தலைவியிடம் கேட்டுப் பாருங்கடா உங்களால் இப்படி கேள்வி எல்லாம் அந்த தலைவி முன் வைக்க முடியுமா? என்கிறார்

ஒரு தலைவர் காதலித்து திட்டமிட்டு உயர் ரகப் பெண்களை திருமணம் செய்யச் சொல்கிறார் தமது இளைஞர்களிடம்

ஒரு தலைவர் அல்ல சில தலைவர்கள் தமது குடும்பத்தை விட்டு கட்சியும், சொத்தும், செல்வாக்கும், பதவிகளும் வேறு யாருக்கும் போய் விடக் கூடாது என சாகும் வரை தாமே முதல்வராக இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறார்
ஒரு தலைவி தம்மை அன்றி தமிழகம் வாழவே முடியாது வேறு யாரும் ஆளவே முடியாது என்கிறார்.வெள்ள அபாயத்தில் மக்கள் உயிரும் உடமைகளும் இழந்த போதும் காலை கீழே தரையில் வைக்காத கடவுளான தலைவி, பிரச்சாரத்திற்கே நாடு முழுதும் போக முடியாத ஆகாய விமானம் தவிர வேறு வாகனத்தில் பயணம் செய்ய விரும்பாத , பயணம் செய்ய முடியாத தலைவி மை கவர்னமென்ட் இப்போது மட்டும் மக்கள் கவர்ன்மென்ட் என சொல்லத் தயங்கும் தலைவி...

மத வாத கட்சிகள் பற்றியும் அதன் தலைவர்கள் பற்றி பேசி உங்கள் எம் நேரமும் ஏன் நேரமும் வீணடிக்கப் பட வேண்டும்?

இப்படிப்பட்ட தலைவர்களிடம் சிக்கிக் கொண்டு தமிழகத்தின் இந்த 2016 மே தேர்தல் மே மே என்று கழுத்தறு பட விருக்கும் பலி ஆடாக இருக்கிறது.
எல்லாருக்குமே ஒரு கூட்டம்,  அல்லது மாபெரும் கூட்டம் இருக்கிறது.ஆனால் மனித உடலில் 2 சதவீதம் மூளை இருப்பது போல அது உடற் சக்தியின் 20 கலோரிச் சக்தியை செலவளிப்பது போல. இவர்கள் எல்லாமே முன் நிற்பது தமது சுய நலத்திற்கே என வெட்ட வெளிச்சமாக தெரிந்த போதிலும் மக்கள் பலி ஆடாக மந்தையாக சந்தையாக வாக்கு என்னும் மந்திரத்தால் வெட்டுப் படப் போகிறார்கள் அதற்கு நவீன எந்திரங்களும், நவீன மேம்படுத்தும் தேர்தல் முறைகளும்.

மின்சாரம், குடிநீர் , போக்குவரத்து  கல்வி, மருத்துவம் மேம்படலாமே என யாராவது கேட்டால், அல்லது அதற்குரிய கட்டணம் அதிகமாக்கும்போது குரல் கொடுத்தால் அண்டை மாநிலங்களில் இந்தியாவின் பிற மாநிலங்களில் இருப்பதை விட இது குறைவுதான் என பதில் சொல்ல மந்திரிகள் இந்த மந்திரிகளை எந்திரிக்க வைப்பீர் இம்முறையாவது...மது எதற்கு அரசின் மடியில் என்றால் நீங்கள் ஆரம்பித்ததுதானே, எல்லா மாநிலங்களும் எரிவளையமாக இருக்க கற்பூரமாய் இந்த மாநிலம் மட்டும் எப்படி இருக்க முடியும் என சட்டசபையில் பதில் சொல்வார்கள் எதிர்கட்சியினர்க்கு ஆனால் அந்த பதில்கள் எல்லாம் கேள்விகள் எல்லாம் மக்களிடம் உள்ளது மக்களுக்கானது என  ஒரு துளியும் மனதில் கொள்ளாது இறுமாந்த பதவி.

ராகுல் காந்தி பேசா ஊமைப் பிள்ளை அதிசயமாக கேட்கிறது எப்படி ஏன் அய்யா சாராய வியாபாரி மல்லையாவை மார்ச்- 2ல்  நாட்டிலிருந்து போக அனுமதித்தீர் என்றால்  அருண் ஜெட்லி பதிலைப் பாருங்கள்: நீங்கள் எப்படி குவட்ரோச்சியை அனுப்பி வைத்தீர்களோ அப்படித்தான் என்றும் மேலும் நீங்கள் உங்கள் ஆட்சியில்தான் இவரை வளரவைத்தீர் என்கிறார்..இந்த கேள்விகளை மக்கள் கேட்கிறார்கள் இருவரையும் ராகுல் காந்தி, அருண் ஜெட்லி எப்படி இது போன்ற மாபெரும் திருட்டு கொள்ளைக்காரர்களை தப்பிக்க விடுகிறீர்கள்? கொள்ளையில் கூட்டுதானே?  அதற்கென்ன பதில் உங்களிடம் உள்ளது?

ஆட்சி மக்களுக்கு  எதிர்கட்சிகளுக்கு மற்ற கட்சிகளுக்கு அல்ல.

மக்கள் சக்தி என எவராவது குரல் கொடுக்க ஆரம்பித்தால் திட்டமிட்டு, ஒருங்கிணைந்து ஒருங்கிணைத்து அரசு எந்திரத்தை பயன்படுத்தி இந்த மக்கள் பிரதிநிதிகளே அந்த நபரை ஒடுக்க ஆரம்பித்து விடுவது கட்சி பேதமின்றி கால பேதமின்றி நடக்கிறது. அவர் கேட்கும் கேள்வியின் நியாயத்தை உணர்ந்து அந்த கோரிக்கையை பொறுப்புணர்வுடன் பரிசீலித்து நிறைவேற்றித் தருவதற்கு மாறாக அந்த நபரின் தனிப்பட்ட பலஹீனம், குறைபாடு, அவர் எங்கே அடித்தால் வீழ்வார், அவர் வரி கட்டி இருக்கிறாரா இல்லையா? கடன் வாங்கி இருக்கிறார் என்றால் எப்படி நெருக்கடி தரலாம், அல்லது கடன் கொடுத்திருந்தால் அவர் முதலை எப்படி அடியோடு முழுங்கலாம் என தீர்  சிந்தித்து செயல்பட்டு அந்த எதிர்வினைக் குரலை குரல் வளையை அறுக்கிறார்கள்.

வெள்ள எதிர்வினையை  ஸ்டிக்கர் கலாச்சாரத்தை கண்டோமல்லவா? எத்தனை எத்தனை செய்தி முரண்கள் அதை மறக்கடிக்க...பீப், இளையராஜா, ஈ.வி.கே.எஸ் இப்படி எல்லாம்...ஏதும் செய்யாமலே கடவுளாக காலம் எல்லாம் போற்றப்பட வேண்டும்....எதிர்ப்பே இருக்கக் கூடாது .தாம் எது வேண்டுமானாலும் செய்யலாம் எதிர் கேள்வியே இருக்கக் கூடாது....இதெல்லாம் ஒரு ஜனநாயகமா? இதெல்லாம் ஒரு நாடா? இதெல்லாம் ஒரு தேர்தலா? இது தருவது மாறுதலா?

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகைதிரும்ப அழைக்கும் உரிமை, விகிதாரச்  ஓட்டுரிமை பதவி ஏற்பு இரு கட்சி ஆட்சி முறை பற்றி எல்லாம் தேர்தல் ஆணையம் உடனே பரிசீலித்து பரிந்துரை செய்து மக்களுக்கான நலத்துடன் தேர்தலை நடத்திட வேண்டும். இந்த தேர்தல் சிறு படி முன் ஏறி வருகிறது: யாருக்கு வாக்களித்தார் என 17 இடங்களில் தெரியும் வண்ணம், இ.மெயில், எஸ்.எம்.எஸ் என தேர்தல் விதி மீறல் புகார் செய்ய என்றெல்லாம்..இன்னும் போக வேண்டிய தூரம் எவ்வளவோ...முதலில் சட்டசபை, பாராளுமன்ற,உள்ளாட்சித் தேர்தல் எல்லாம் ஒரே காலப் பருவத்தில் நடத்தப்பட்டு தேர்தல் என்பது திருவிழா அல்ல நாட்டின் மேலாணமை செய்ய ஆட்சி செய்ய, நிர்வாகம் செய்ய நிர்வாகம் செப்பனிட ஒரு பொறுப்பான நாட்டு சேவைப்பணி என்பது அறிவுறுத்தப்படல் வேண்டும்.No comments:

Post a Comment