Friday, March 18, 2016

தமிழக‌ வாக்காளப் பெருங்குடி மக்கள் மடையர்களல்ல: கவிஞர் தணிகை.

தமிழக‌ வாக்காளப் பெருங்குடி மக்கள் மடையர்களல்ல: கவிஞர் தணிகை.

இதே போல ஒரு கடுங் கோடைக்காலத்தில் 2014ல் இந்தியப் பாராளுமன்றத் தேர்தல். எல்லாருமே பிரதமராக ஆசைப்பட்டார்கள். தொங்கு பாராளுமன்றம் ஆகும் என நினைத்தார்கள். ஜெயலலிதா கூட பிரதமர் ஆகலாமென கனவில் இருந்தார்கள்.காங்கிரஸ் கட்சியை தூக்கி எறிந்து பி.ஜே.பிக்கு தவறோ சரியோ பெரும்பான்மை வாக்களித்து ஒரு நிலைத்தன்மை ஆட்சிக்கு இந்திய மக்கள் வழிகோலி விட்டார்கள். ஆட்சி எப்படி என இப்போது புரிந்து கொண்டு இருப்பார்கள்.விஜய் மல்லைய்யா போகும் வழியில் மோடியின் மெழுகுச் சிலைக் கனவு கலைந்து போக.

அதே போல இப்போது தமிழகம் கட்சிகள் எல்லாம் ஆறுமுகம் ஏழுமுகம் எனப் பிரிந்து தேர்தலுக்குப் பின் இலாபம் பார்க்கலாம் தொங்கு சட்டசபை  அமையும் அப்போது ஒவ்வொரு வெற்றியும் மாபெரும் சக்தி படைத்ததாக மாறும் என கனவில் இருக்கிறார்கள்.
எல்லாருமே முதல்வராகும் பேராசையில் இருக்கிறார்கள். ஏன் எனில் அம்மா என்னும் ஜெயலலிதா ஆட்சி இனி வருமா என அந்தக் கட்சிக்காரர்களே கலக்கத்தில் இருக்கிறார்கள். மந்திரிகள் வீட்டுக்காவல் அவர்களிடமிருந்து பல்லாயிரம் கோடிகள் பறிமுதல் மேலும் முதல்வரின் அறிவுக்கு இப்போதுதான் மந்திரிகளின் நடவடிக்கைகள் அடாவடித்தனங்கள் தெரிய வருதல்..இன்னும் 2 மாதங்களே இருக்கையில் நிறைய அவரதுக் கட்சியில் மாறுதல்கள்.அம்மாவிடம் தமிழகத்தின் பணக்கோடிகளின் பாதைகள் எல்லாம் வந்து ஒன்ரு சேர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு கால் மண்ணில் படாமலே நான் உங்களுக்காகவே வாழ்கிறேன் என்ற வெற்று கோஷம்...


உதிரிக்கட்சிகள் எல்லாம் சேர்ந்து பேச்சு வார்த்தை. ஜி.கே வாசன்போன்றோர் தமகா என்று சொல்லிக்கொண்டு அம்மா கூப்பிடுவாங்க எனக் காத்திருப்பு

எல்லாவற்றுக்கும் மேலாக பொதுமக்கள் இன்னும் மதுவிலக்கு, சென்னை வெள்ளம், ஸ்டிக்கர் கலாச்சாரம்,உச்சநீதிமன்ற வழக்கு,கர்நாடகா நீதிமன்றக் கேலிக்கூத்து சிறைவாசம், மாநிலத்தில் அப்போது நிகழ்ந்த கோரத் தாண்டவம் போன்றவை மறக்காமலிருக்கிறார்கள், என்னதான் இளையராஜா,சிம்பு பீப், ஈவிகேஎஸ் இளங்கோவன்,பழக்கருப்பையா, நாஞ்சில் சம்பத், நடராஜன் ஆள் மாறாட்டம் இப்படி பல கதைகளை இடைச்செருகல் செய்த போதும் சினிமா நடிகர்கள் விஜய், கமல் போன்றவர்க்குத் தொல்லை கொடுத்த போதும். ஒரு வாக்குக்கு 5000 ரூபாய் வரை கொடுக்கத் தயாராகிறது ஆளும் கட்சி என ஊடகம் தெரிவித்திருந்த போதும் இந்த ஆளும்கட்சி திரும்பி வராது. வரவும் கூடாது. வராது என்ற சந்தேகம் அவர்களுக்கே இருக்கிறது. எனவே நிறைய உட்கட்சி மந்திரி ஐவர் அணி நால்வர் அணி மந்திரி விவகாரங்கள் , மாவட்டம், எம்.எல்.ஏ இப்படி நீண்டு கொண்டே போகிறது.

தேர்தல் ஆணையம் 50,000 ரூபாய் முதல் பிடிக்காமல் பொதுமக்கள் உரிய காரணங்களோடு எடுத்துச் செல்லலாம் என்றுநேற்று முதல் ராஜேஸ் லக்கானி தமிழக தேர்தல் ஆணையர் வழி வழிகாட்டியிருப்பதை ஒரு இலட்சமாக அதிகமாக்கலாமா என பரிசீலித்து வருவதாகவும் செய்திகள் .யாருக்கு எப்படி நல்லதாக அல்லதாக முடியுமோ கவனத்தில்கொள்க. இன்னும் 2 முழுதான மாதங்களிருக்கிறது.

வீணான விஷயத்தை முடித்து விட்டு சொல்ல வேண்டியதிற்கு வருவோம். தேர்தல் தி.மு.கவுக்கு சாதகமாக அமையுமா? பாதகமாக அமையுமா என்பதுதான் முக்கியக் கேள்வி. சாதகமாக அமைய வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். பாதகமாகவும் போகலாம்.என்னதான் மூப்பனாரை பிரதமராக விடாமல்,கலாமை மறுபடியும் குடியரசுத் தலைவராக விடாமல், தம் குடும்பம் தவிர கழகத்தை வேறு யாருக்கும் விட்டு விடாமல் வைத்திருந்தாலும் இங்கு ஆட்சியின் தமிழக மாட்சிமையின் நிலை நிர்வாகநிலை கட்சிகளின் நிலை அப்படித்தான் இருக்கிறது.காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக பி.ஜே.பி கொண்டு வந்தது போல.என்னதான் இருந்தாலும் அ.இ.அ.தி.மு.க ஆட்சிக்கு தி.மு.க ஆட்சி அப்படி ஒன்றும் குறைந்ததல்ல. நல்லது இனி செய்வோம் மதுவிலக்குக்கு முதல் கையெழுத்து எல்லாமே நடக்கும். ஆனால் வாக்கு வங்கிக்கணக்கு அ.இ.அ.தி.முகவுக்கே சாதகமாக காட்டினாலும் நிலை மாறும் அதற்குத்தான் தேர்தல்.வாக்கு வங்கிகளின் நிலை வாக்கு சதவீத நிலை இவைதான் யாருக்கும் பெரும்பான்மை இல்லாத காட்சி கொடுக்கிறது. ஆனால் முடிவுகள் இதுவரை தமிழகத்தில்தெளிவாக இருந்திருக்கிறது. இனியும் இருக்கும்,இருக்க வேண்டும் என நம்புவோம்.

விஜய்காந்த் கட்சி நம்புவது போல எவருக்கும் பெரும்பான்மை இன்றி போகும்போது இரட்டை இலக்க வாக்கு சதவீதம்  இல்லாமலேயே நாம் முதல்வராகிவிடலாம் அல்லது முக்கிய பங்கு நம்மைக்கேட்டுத்தான் நமக்குக் கொடுக்க வேண்டியதைக் கொடுத்துத்தான் நடக்கும் என எதிர்பார்ப்பு நிறைவேறுமளவு தமிழகத்தின் மக்கள் தமது வாக்குகளை சிதறடிக்க அவர்கள் மடையர்கள் அல்ல.

இதை எல்லாம் மீறி ஆளும் கட்சி, எல்லாக்கட்சிகளும், எல்லாரும் பிரிந்து கிடக்கிறார்கள். வாக்கு நமக்கு மட்டுமே தனிப்பெரும் கட்சியாய் கிடைக்கும் என நினைப்பதும் நடக்கக் கூடாததாய், நம்ப முடியாததாய் இருக்கிறது . அரசியலில் எதுவும் நடக்கும். ஒருக்கால் அப்படிநடந்து விட்டால் தமிழகத்திற்கு இனி எப்போதும் விடிவே இல்லை.

அதற்கு முன்பே உச்ச நீதிமன்றம் வேட்பு மனுத் தாக்குதலுக்குள்ளேயே சரியான தீர்ப்பளித்து உள்ளே போகச் சொல்லி விட்டாலும் சுப்ரீம் லீடர் இல்லாமல் அ.இ.அ.தி.மு.க என்ன செய்யும் என நினைத்துப் பார்க்கவும் வழி இல்லை. சசி கட்சிக்குத் தலைமை ஏற்று மெஜாரிட்டி பெற்று முதல்வராவாரா? இல்லை பிரேமலதா தேர்தல் முடியட்டும் கணவரை டம்மி ஆக்கி விட்டுத் தலைமையை கையில் எடுத்துக்கொள்ளலாம் என்று ஊடகங்கள் சொல்வது  போல..மொத்தத்தில் இந்தத் தேர்தல் எலலாக்கட்சியினரையுமே ஒரு கலக்கு கலக்கி வருகிறது.

பெருங்குடி மக்கள் அமைதியாக கடும்கோடையில் காத்துக் கிடக்கிறார்கள் தமிழகத்தின் ஆட்சி விதியை பிசிறில்லாமல் எழுத...

இது போன்ற ஒரு மாறுபட்டத் தேர்தல் யூகிக்க முடியாத் தேர்தல் தமிழகத்து மண்ணுக்கே புதிது.ஆனால் தொங்கு சட்டசபை குதிரை பேரம்நடக்குமளவு வாக்குகளை சிதறடித்துப் போட தமிழக மக்கள் ஒன்றும் மடையர்களல்ல. அது மட்டும் என்னால் இப்போது உறுதியாக சொல்ல முடிவது...

வரும் ஆட்சிக்கு நிறைய சவால்கள் இருக்கின்றன.மதுவிலக்கு, கடன் சுமை, நிறைய கோரிக்கைகள்...இப்போதைக்கு தேர்தல் வரவை முன்னிட்டு குடிநீர் ,மின்சாரம் கிடைக்கிறது தடையின்றி. இது மக்களுக்கு மே 25க்கும் மேல் கிடைக்குமா? இல்லையெனில் வரும் ஆட்சிக்கு ஆளும் கட்சிக்கு உடனே கெட்ட பெயர்தான் மோடி ஆட்சிக்கு கிடைத்து வருவது போல...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

பி.கு: 92 வயதுக்கும் மேல் அனாலும் இன்னும் முதல்வர் பதவியை வேறு யாருக்கும் தர மாட்டேன் என்று சொல்லும் முதியவருக்கு இம்முறை மறுபடியும் பதவி ஏற்று முதல்வராக இருக்கும்போதே உயிர் பிரியும் வாய்ப்பு இருக்கிறதோ இராசி இருக்கிறதோ யார் அறிவார்.
உண்மையிலேயே மமதா பானர்ஜியும் ஜெயலலிதாவும் சந்த்க்கின்றனர் நகைச்சுவை கற்பனையில் என ஒரு பதிவு போடலாம்  என எண்ணியிருந்தேன் அதன் பின் விளைவையும், நாட்டின் கருத்து சுதந்திர நிலையும் அதிலிருந்து இந்த பதிவுக்கு என்னை மாற்றியுள்ளது.5 comments:

 1. எதிர் பார்ப்போம் மாற்றம் ஒன்று மட்டுமேமாறாதது

  ReplyDelete
 2. எதிர் பார்ப்போம் மாற்றம் ஒன்று மட்டுமேமாறாதது

  ReplyDelete
 3. நமது சிந்தனை ஏன் திமுக மற்றும் அதிமுக இவைகளைச்சுற்றியே அலைகின்றது? இவர்கள் தவிர்த்து ஏன் ஒரு முன்றாம் சக்தி வரக்கூடாது?

  ReplyDelete
  Replies
  1. Sir, I understand your views. But Tamil Nadu is not Delhi.You can find it out with in 2 months.But I respect your thinking even I also having that dynamism . But People's attitude is moving that path only. anyhow thanks for your feedback on this post sir. vanakkam.please keep contact

   Delete
 4. thanks for your feedback on this post Kathaikkalam Rajasekaran.please keep contact. vanakkam

  ReplyDelete