Saturday, March 12, 2016

விஜய் மல்லைய்யா மண்ணின் மைந்தர் என்றால் நாங்கள் எல்லாம் யார் தேவகவுடா? - கவிஞர் தணிகை

விஜய் மல்லைய்யா மண்ணின் மைந்தர் என்றால் நாங்கள் எல்லாம் யார் தேவகவுடா? - கவிஞர் தணிகை




தேவகவுடா என்னும் ஒரு பழம் பெருச்சாளி விஜய் மல்லைய்யா என்னும் நாட்டில் தேடப்பட்டு 20 வருடங்களாக கடனைக் கட்டாமல் இன்று நாட்டை விட்டு ஓடிவிட்ட ஒரு குற்றவாளியை மண்ணின் மைந்தர் என்றும் பெரிய குடும்பத்தில் பிறந்தவர் என்றும் என்ன ஒன்றுமில்லை "பிஸ்னஸ்" ஸில் கொஞ்சம் கோளாறு ஆகிவிட்டது என்று குற்றவாளிக்கு சப்பைக்கட்டு கட்டியிருக்கிறது.அவன் நாட்டை விட்டு ஓடவில்லை என...வேலிக்கு ஓணான் சாட்சி...




குற்றவாளியை ஆதரிப்பவர் குற்றவாளிதான். இந்த தேவகவுடா என்னும் மாஜி பிரதம மந்திரியும் ஒரு குற்றவாளியாகி இருக்கிறார் இந்த அறிக்கை மூலம்.இப்படி பேசியதன் மூலம்.இவரையும் கைது செய்ய சட்டத்தில் இடம் இருக்கிறதா என சட்ட வல்லுனர்கள் தெரிவிக்க வேண்டும். மாஜி பிரதமராச்சே..அடச் சே..

இது போல் 60 பெருச்சாளிகள் வாங்கிய கடனை கட்டாமல் இருக்கும்போது இவர் மேல் மட்டும் என்ன அரசு நடவடிக்கை என்றால் இவர் ராஜ்ய சபா உறுப்பினர் என்பதால் தானே? என்கிறது இந்த பெருமண்டை.




எங்க முதலை வைத்து நகையை வைத்து கடன் வாங்கி வட்டி கட்டி வரும் என்னைப் போன்றோர் எல்லாம் முட்டாள்கள். இவர்கள் மாநிலத்து சாராய முதலாளி ஜட்டியுடன் நிற்கும் பெண்பிள்ளை பொறுக்கி இவன் தான் மண்ணின் மைந்தன். இவனுக்கு வக்காலத்து ஒரு மாஜி பிரதமர். எல்லாம் சாபக் கேடுடா இந்தியாவுக்கும் தமிழகத்திற்கும் வந்த சாபக்கேடு  குடிகாரன் எல்லாம் தலைவர் என்கிறான், கொள்ளைக்காரனுக்கு வக்காலத்து வாங்கறவன் எல்லாம் மாஜி பிரதமராயிருந்தவனாயிருக்கிறான். சாரி இருக்கிறார். இவனுக்கு சாரி இது போன்ற நபருக்கு  எல்லாம் அந்தக் குற்றவாளிக் குடும்பம் எந்த அளவு உதவியிருக்குமோ? எவ்வளவு கொடுத்திருக்குமோ? அது அவர்களுக்கே வெளிச்சம்.நன்றிக் கடன் பேசுகிறதோ?



2002, 2010ல் எல்லாம் ராஜ்ய சபா உறுப்பினர் ஆக இந்த தேவகவுடா ஜனதா தளம் உதவியதாம். இப்போது பா.ஜ.கவால் ராஜ்ய சபா உறுப்பினரானான் இந்த பெரும் கொள்ளைக்காரன்.

பாரதிய ஸ்டேட் வங்கி  அருந்ததி பட்டாச்சார்யா  பேட்டி பார்த்திருக்க வேண்டும். அந்த வங்கியின் சேர்மேன் அந்த அம்மா சொல்கிறார், கடந்த 20 ஆண்டுகளாக இந்த திருடன் தப்பித்துக் கொண்டே இருக்கிறான். இவனுடைய சொத்து மதிப்பு எவ்வளவு எனவும் சொல்ல மறுக்கிறான். டெபிட் ரெகவரி ட்ரிபுயூனல் படாத பாடு படுகிறது. அதாங்க கடனை வசூல் செய்யும் தீர்ப்பாயம். அட இவன் சொத்தை கையகப்படுத்த மாவட்ட ஆட்சியர் இடம் சென்றால் ஆறேழு முறை இழுத்தடித்து விட்டு காலம் கடத்தி விட்டு இந்த கலெக்டர் துரை மவராசன்கள் எல்லாம் நீண்ட விடுமுறையில் சென்றுவிடுகிறார்கள் என்கிறார் அந்த மூதாட்டி.



அந்தக் களவாணிப் பயலுக்கு இந்த மாஜி பிரதமர் மண்ணின் மைந்தர் என்ற பட்டம் கொடுக்கிறார். அனைவரும் ராஜ்ய சபா மெம்பெராக்குகிறார்கள். இவன் ஒரு கட்டத்தில் காந்தி உணவு உண்ட தட்டையும் சொம்பையும் சில பொருட்களையும் ஏலம் எடுக்கவும் முயன்றான் இந்தியா தமது கடமையில் உறங்கியபோது. இங்கிலாந்தில்.லவ்ஸ்பாட் என Tவீன் என்ற இடத்தில் 30 ஏக்கரில் நவீன வாழ்க்கை வாழ ஒரு பெண்குட்டியுடன் 7 இராட்சதப் பைகளுடன் பயணம் புறப்பட்டவன் இந்தியா திரும்பி வருவான் என நினைக்கிறீர்களா? இவன் கெட்ட கேட்டுக்கு இவனுக்கு ட்விட்டர் தளம் வேறு அதில் இவன் இன்னும் ஜபர்தஸ்தாய் பதில் தந்து கொண்டிருக்கிறான். இவன் ஒரு இன்டர் நேஷனல் பிசினஸ் கேடி என்று.




இவனுங்களுக்கு எல்லாம் மனசாட்சி என்பதே கிடையாது. கூட்டுக் களவாணிகள். இவனுங்கதான் இந்த நாட்டை ஆண்டவர்கள்..ஆள்பவர்கள்..ஆளப்போகிறவர்கள்.

மறுபடியும் பூக்கும்வரை
கவிஞர் தணிகை.
sources:Hindustan Times 1 hour ago

No comments:

Post a Comment