Thursday, March 10, 2016

ஏழை விவசாயி கட்டாத லோனுக்கு மல்லுக் கட்டற நீங்களும் ஒங்க அரசும் விஜய் மல்லைய்யாக் கிட்ட மல்லு கட்ட வேண்டியதுதானே?- கவிஞர் தணிகை

என்னடா நடக்குது நாட்டில? 17 வங்கிகளிடம் 9000 கோடிக்கும் மேல் வாங்கித் தின்ன நாய் விஜய் மல்லையா சி.பி.ஐக்கும் தெரிந்தே மார்ச் 2ல்  நாட்டை விட்டே ஓடிப் போன பின்னால் அவனை நீதிமன்றம் பிடித்து பாஸ்போர்ட்டை முடக்கச் சொல்லும் போதுதான் தெரிந்ததா அவன் நாட்டை விட்டு ஓடிப் போனது?

Please watch and Note this Thief  If you find him catch him and hand over to Indian courts.




இவன் எல்லாம் ஒரு ராஜ்ய சபா உறுப்பினர். நாட்டை ஆளுறவன்? இவனை மாதிரி 12 எம்.பிக்கள் வாங்கன கடனை கோடி கோடியா கட்டாம இருக்கும் போது ஒரு ஏழை விவசாயி, தஞ்சாவூர் சோழகரன் குடி என்ற ஓரத்த நாட்டுக்கு அருகாமையில் சுமார் வாங்கிய டிராக்டர் கடன் 4 இலட்சத்தில் கடைசி 2 தவணை சுமார் 64 ஆயிரம் கட்டமுடியாததற்கு அடித்து, மல்லுக்கட்டி, அவனை காவல் நிலையம் கொண்டு செல்லும் நாகரீகக் கூட்டமே உனது பேர்தானா அரசாங்கம்? 

இவனிடம் மல்லுக் கட்டுவதாகவும், நாலு பேரு சேர்ந்து தூக்குங்கடா என்னும் காவல்துறையும் எப்பய்யா எப்படிய்யா போய் 9000 கோடி கடன் வாங்கி விட்டு நாட்டை விட்டே ஓடிவிட்ட மல்லைய்யாவைப் போய் தூக்கப் போகிறீர்?

சி.பி.ஐக்கே தெரிந்துதான் அந்த நாய் ஓடியிருக்கிறதாம். சுமார் 7000 கோடி சொத்து இந்தியாவில் மட்டும் இருக்கிறதாம். இவனுடைய பெரும் சொத்தெல்லாம் உலகளாவிய நாடுகளில்தான் இருக்கிறதாம்,பெரும்பாலும் இங்கிலாந்தில் இலண்டனில். இப்போதும் கூட இவன் இலன்டனில் சென்றுதான் பதுங்கியிருப்பதாக செய்தியாளர்கள் கருதுகிறார்கள்.மேலும் இவனது மொத்த சொத்து மதிப்பில் இங்கு இருப்பது ஐந்தில் ஒரு பகுதிதானாம். மீன் கொத்தி கிங்க் பிசர் ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவு காத்திருந்து கொத்திக் கொண்டு ஓடிவிட்டது. ஓடும்போது இதனிடம் சுமார் 300 கோடி ரூபாய் இங்கிலாந்தின் டியகோ நிறுவனம் கொடுத்த தொகை இருக்கிறதாம்.

சாதாரண பிக் பாக்கெட்டுக்கு காவல் நிலையத்தில் படம் போடுவது போல, பொது இடங்களில் படம் போட்டு போட்டோ போட்டுக்காட்டுவது போலத்தான் நமது தளத்திலும் இவன் போட்டோ போடப்படுகிறது. மற்றபடி இவன் மூஞ்சை எல்லாம் இந்த சாராயம் வித்த மூஞ்செல்லாம் நமக்கு பார்க்கவே நமது தளத்தில் போடவே துளியும் விருப்பமில்லை.

 


13 வங்கிகள் கூட்டாக சேர்ந்து இவனை நீதிமன்றத்திற் சென்று கேட்கும்போதுதான் தெரிந்திருக்கிறது இவன் நாட்டை விட்டே ஓடி ஒரு வாரம் ஆகிவிட்டது. 17 தேசிய அளவிலான வங்கிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து இவனுக்கு படி அளந்து விட்டு பொதுப் பணத்தை, மக்கள் பணத்தை வாரி வழங்கி விட்டு இப்போது கன்சார்டியம் என்று வசூலிக்க முயன்று தோற்று வருகிறது.

எனக்கென்னவென்றால், லலித் மோடி போனான், அவனைப் பற்றி பேச்சே இல்லை, இப்போது இவன் ஒருவன், இந்த இலட்சணத்தில் பாரதிய ஜனதா கட்சி அரசு மேல் நாடுகளில் அந்நிய நாடுகளில், ஸ்விஸ் வங்கி போன்ற அயல் நாட்டு வங்கிகளில் இருக்கும் இந்தியர்களின் கணக்கில் வரா பணத்தை வாங்கிப் பிரித்துக் கொடுக்கிறோம் எனச்  சொல்லி காங்கிரஸ் அரசை குறை சொல்லி  ஓட்டு வாங்கி அரசைப் பிடித்ததை மறந்திருக்க முடியாது.

ஒரு சாதாரண நபர் வங்கிக் கணக்கு ஆரம்பிக்கவே ஆயிரம் முறை இழுத்தடிக்கும் இந்தவங்கிகள், ஒரு கடனுதவி, விவசாயிக்கும், படிக்கும் பிள்ளைகளுக்கும், சிறு வியாபாரிகளுக்கும், தொழில் விற்பன்னர்களுக்கும் எத்தனை மாய்மாலம் செய்கிறார்கள்? இவர்களுடைய சொந்த பணத்தை கொடுப்பது போல வெட்டி பந்தா.

அட நம்ம நகையை வைத்துக் கொண்டு கடன் பெற்றோம், தங்க நகை சற்று விலை குறைந்தால்  போதும் உடனே நோட்டீஸ், வட்டியுடன் அசல் சேர்த்துக் கட்டு என எப்படி எல்லாம் நெருக்கடி கொடுக்கிறார்கள், ? திருட்டு ஓணான்கள், அதே நேரம் தங்க விலை ஏறும்போது நம்மிடம் கடனுக்கு ஈடாக வட்டிக்கும் சேர்த்து பெற்ற நகையை அப்படியே மூச்சு விடாமல் வைத்துக் கொள்கிறார்கள்...


ஒரு நபர் சிறு தொழில் ஆரம்பிக்க அந்த நெம்பர், இந்த நெம்பர் என வாங்குவதற்குள்ளே படாத பாடு.மானியம் தருவதாக வேறு பசப்பல்கள், ஒரு வருடத்திற்குள் தவறாமல் கட்டுவார்க்கு மானியம் என்றார்கள். சீக்கிரம் வந்து கடனை வட்டியை கட்டி விடுங்கள் என அவசரப்படுத்தினார்கள். பணம் இல்லா நாளில் அதற்கும் சேர்த்து இருக்கும் நகை எல்லாம் கொடுத்து ஈடு கட்டினோம். பெரும் சுரண்டல். அதன் பின் ஏன் அந்த 3 % மானியம் இன்னும்கணக்கில் வரவேறவில்லை என்றால், அரசுக்கு அனுப்பி இருக்கிறோம், வந்தவுடன் வரவு வைப்போம் என்கிறார்கள். மார்ச் இறுதிக்குள் வைத்து விடுவோம் என மற்றொரு வங்கிப் பணியாளர் வரிசையாக வரவு வைக்கப் படும் என்கிறார்.

கஸ்டமர் ஈஸ் கிங் இன் அவர் சர்வீஸ் என்றார் நாட்டின் மகாத்மா, கிங் ஃபிஷர் போன்றோர்தான் கிங். அதைத்தான் சொன்னார் போலும். பணக்கார முதலைகள் எப்படி வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் இந்த வங்கி ஊழியர்களுக்கு நாட்டின் மக்களின் பொதுப் பணத்தை வாங்குவதற்கு  கையாள்வதற்கு, சுருட்டிக் கொண்டு போவதற்கு  லஞ்சமாக, எதை ஊழலாக எதை வேண்டுமானாலும் செய்யத்தயாராயிருக்கிறார்கள்.

யோவ் படுபாவிகளே, சி.பி.ஐ, காவல்துறை, அரசு, வங்கிகள், எல்லாம் எல்லாமே பணக்கார முதலைகளை காப்பதற்கும், ஏழைகளை சாய்ப்பதற்கும் தான் என்றால் இதெல்லாம் என்னய்யா நாடு, ஆட்சி, ஜனநாயகம்.? தெரிந்தே அவனை நாட்டிலிருந்து செல்ல அனுமதித்து விட்டு இதென்ன நாடகம்?  வங்கிகள் வேலை செய்வாருடையதோ, ஆள்வாருடயதோ அல்ல நாட்டுடையது மக்களுடையது.

எப்படி இனி அந்தப்பணத்தை வட்டியுடன் முதலை வாங்கப் போகிறார்கள் பார்ப்போம். என்போன்றோர் நகையை, முதலை வைத்துக் கொண்டே அதற்கு வட்டி வாங்கும் இந்த வங்கிகள் எந்த செக்யூரிட்டி வைத்து எப்படிடா அவனுக்கு 900 கோடி ஐ.டி.பி.ஐ( இன்டஸ்டரியல் டெவலப்மென்ட் பாங்க் ஆப் இன்டியாவை) கொடுத்தீர் என நீதிமன்றத்தின் கேள்விக்கு அப்போது கிங் பிசர் நிறுவனம் நல்ல நிலையில் இருந்தது , நல்ல நிலையில் இருக்கும் நிலையில் காணப்பட்டது என்கிறார்கள் இந்த கைக்கூலிகள். அவன் தந்த எச்சி காசுக்கு ஆசைப்பட்டு கேட்டு வாங்கித் தின்றுவிட்டு வங்கியை வங்கிகளை அவனுக்கு திறந்து விட்டு வங்கிகளை நஷ்டத்துள்ளாக்கி ஏழைகளை வயிற்றில் அடித்து ஒரு ஏ.டி.எம் சென்று பணம் எடுத்தாலும் அதற்கு சேவைக்கட்டணம் என்று சொல்லாமல் கொள்ளாமல் கொள்ளை அடித்து அந்த திருட்டுப் பட்டாளம் செய்யும் அநியாயத்தை நஷ்டத்தை ஏழை வயிற்றில் அடித்து ஈடு கட்டி வங்கிகளை இலாபம் ஈட்டுவதாக காட்டுகிறார்கள்.,இவனுங்க செய்யற வேலை எல்லாம் வாடிக்கையாளர் தலைமேலே இறக்கி விட்டு அதற்கும் சேவை கட்டணம் என எடுப்பது ஒரு பக்கம், பல்லாயிரம், இலட்சம் கோடிகளை மென்று விழுங்கி ஏப்பம் விடும் பஞ்சமா பாவிகளுக்கு கார் திறந்து விடவாடா உங்களுக்கு அரசாங்க சம்பளம்?
மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை


No comments:

Post a Comment