Sunday, December 4, 2016

விநாயகா மிஷன்ஸ் சங்கராச்சாரியார் பல் மருத்துவக் கல்லூரியின் பற் பரிசோதனை முகாம் கல்பாரப் பட்டி ஜீவா பப்ளிக் ஸ்கூலில்: கவிஞர் தணிகை.

விநாயகா மிஷன்ஸ் சங்கராச்சாரியார் பல் மருத்துவக் கல்லூரியின் பற் பரிசோதனை முகாம் கல்பாரப் பட்டி ஜீவா பப்ளிக் ஸ்கூலில்: கவிஞர் தணிகை.
Jeeva Public School, Salem  - Students Playing


மறக்க முடியா முகாம் அது. கல்பாரப்பட்டி சேவாம்பாளையம் என்ற இடத்தில் உள்ள ஜீவா பப்ளிக் ஸ்கூல் உள்ளது. இது ஒரு சிபிஎஸ் ஈ பள்ளியாகும். எல் கே.ஜி முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் 290 மாணவ மாணவியர்க்கு தற்போது இது ஒரு வசந்தத் தரு நிழலை வழங்கி வருகிறது. பள்ளி இராஜாஜி தொழில் நுட்பக் கல்லூரி வளைவிலிருந்து ஒவ்வொரு சாலை சந்திப்பிலும் அம்புக்குறியுடன் அடையாளப்படுத்தி வழி எல்லாம் எந்தவித சந்தேகமும் வழியில் ஏற்படாமல் பள்ளியை அடையும் வரை லேன்ட் மார்க் செய்திருந்ததிலிருந்தே அவர்களின் அக்கறையும் பொறுப்பும் நன்கு விளங்கும்.முதன்முறை இந்தப் பள்ளிக்கு செல்வாரும் கூட எந்தவித தடம் பற்றிய தடுமாற்றமும் இன்றி செல்ல முடியும்.

Displaying 20161202_120656.jpg


நாங்கள் எங்கள் குழந்தைகள் திருவிழாவிற்கு, குழந்தைகள் தினமன்று அருகாமையில் இருக்கும் பள்ளிகளை எல்லாம் கலந்து கொள்ளச் செய்ய நேரடியாக அழைப்பிதழ் கொடுக்கச் சென்றபோது ஒரு மின்னல் அடித்தது.நீங்கள் ஒரு முகாமை எங்கள் பள்ளியில் நடத்திக் கொடுங்கள் என இந்தப் பள்ளியின் முதலவர் மின்னல்கொடி வேண்டுகோள் வைத்தார்.இவர் குஜராத் என நினைக்கிறேன், சரியாக நினைவில்லை ராஜஸ்தானா, அஸ்ஸாமா என்று...அங்கு ஒரு கருத்தரங்கம், பணிமனையில் பங்கு கொண்டு நமது தமிழ் நாட்டின் புகழை பறை சாற்ற வாய்ப்பு பெற்றவர்.

Jeeva Public School, Salem  - School Bus

சிறந்த முதல்வர் என இவரின் எண்ணம் சொல் செயல் எல்லாம் நிரூபிக்கின்றன இல்லையெனில் பள்ளி ஆரம்பித்து 3 ஆண்டுகளில் இந்தளவு முன்னேறியிருக்க முடியாது.அதற்கு உறுதுணையாக கர்த்தாக்களாக இந்தப் பள்ளியின் தலைவர்: அங்கமுத்து முன்னால் காவல்துறையில் பணி புரிந்தவர் விநாயகா மிஷன்ஸ் நிறுவனர் மறைந்த சண்முகசுந்தரத்தை நன்கு அறிந்தவர், இவரின் மகன் பள்ளியின் தாளாளராய் உள்ளார். இவர்களின் கூட்டு முயற்சி பள்ளியை மேலும் உயரச் செய்யும்.தந்தையும் மகனும் முகாம் முடியும் வரை எங்களுடனே இருந்து முகாமை நிறைவு செய்ததில் எமக்கு மட்டற்ற மகிழ்வு. தலைவர் அங்கமுத்து ஒரு சில நிமிடம் வினாயகா மிஷன் நிறுவனர் சண்முக சுந்தரத்துடன் தமக்கிருந்த நெருக்கத்தை நினைவு கூர்ந்து தலைமையேற்று தலைமை உரை செய்து முகாமை சிறப்பு செய்தார்.


Displaying 20161202_112129.jpg

இதில் படிக்கும் பிள்ளைகள் பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்வார்கள்.
கஞ்ச மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இயற்கை சூழலும் எழில் கொஞ்சும் அழகுமுடைய பள்ளியில்
Displaying 20161202_104620.jpg


பற்பரிசோதனை முகாமை நடத்த கல்லூரி முதல்வர் பேராசிரியர் ஜா.பேபிஜான் அவர்கள் அனுமதித்ததன் பேரில் சமுதாய மேம்பாட்டுத் தலைவர் என்.சரவணன் வழிகாட்டுதலின் பேரில் முகாம் அற்புதமாக நடைபெற்றது
Jeeva Public School, Salem  - Eden Garden


எனது ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த முகாமில் மரு. பரத் எம்.டி.எஸ்
கோபால் நாயர், மூகாம்பிகை, அபிதா, அபிநயா, சத்யராணி, நர்ஸ்: ஜமுனா  ஆகியோர் கலந்து கொண்டு சிறந்த சேவையாற்றினர்.

Displaying 20161202_120134.jpg


எமது சிற்றுரையில் பல்லின் முக்கியத்துவம் பற்றியும், எமது முதல்வர், துறைத்தலைவர் பற்றியும் குறிப்பிட்டேன். மரு.பரத் பல் பராமரிப்பு பற்றி அறிவுரை வழங்க, மூகாம்பிகை பள்ளிப் பிள்ளைகளுடன் கலந்தளாவ, அபிதா அவசியம் சிகிச்சை தேவைப்படும் குழந்தைகளின் பட்டியலை படித்தார்.முகாம் முக்கியத்துவம் அதில் பரிசோதிக்கப் பட்ட அனைவர்க்கும் கல்லூரி மருத்துவ மனை எப்போதும் தம்மால் ஆன சேவையை வழங்கத் தயாராய் உள்ளது பற்றியும் குறிப்பிட்டேன்.

Displaying 20161202_115315.jpg


இந்த முகாமை உற்சாகமான விழாவாக மாற்றி இருந்தனர் நல்ல ஆசிரியப் பெருமக்களும், அங்கு பணியில் உள்ள நிர்வாக அதிகாரி மற்றும் பள்ளி அலுவலர்களும், ஒரு தடையுமில்லை, இது போன்ற முகாம் நடத்துவதாக இருந்தால் நாள் எல்லாம் ஒரு பள்ளிக்கு நம்மால் சென்று நல்ல ஒரு முகாமை நடத்திக் கொடுக்க முடியும் அவ்வளவு ஒத்திசைவுத் தன்மை. நாங்கள் செல்லும் முன்பே முகாம் நடக்கும் அறை அதற்கான ஏற்பாடுகள் ஆசிரியர்களும் முதல்வரும் காட்டிய உற்சாகமும் பாரட்டதகுந்ததாய் இருந்தது.
Jeeva Public School, Salem  - Students in Fancy Dress


பள்ளிப் பிள்ளைகளும் அப்படித்தான். அவ்வளவு சீராக இருந்தனர். எனக்கொரு பள்ளிப் பயிலும் நிலையில் ஒரு மகவிருந்தால் தற்போது அந்தப் பள்ளியில் சேர்த்து விடலாம் என நினைக்குமளவு மிக நன்றாக இருந்தது அந்த அனுபவம். நாங்கள் முகாம் முடித்து வந்த போதும் எங்களின் மனம் அங்கேயே ரீங்காரித்தபடியே இருக்கின்றன.
Displaying 20161202_124616.jpg


முதல்வர் மின்னல் கொடி பள்ளி ஆண்டுவிழாவிற்கு அழைப்போம் தவறாமல் கலந்து கொள்க என பந்தம் விட்டுப் போகாமல் இருக்க இப்போதே ஒரு அழைப்பை கொடுத்து மேலும் ஆர்வமூட்டினார் மறுபடியும் அங்கு செல்லும் வாய்ப்பை ஏற்படுத்தி...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

பி.கு: புகைப்படம் பின்னர் இணைக்கப்படும்.



2 comments: