Sunday, July 25, 2021

Meera bai Chonu: Manippur Olympic Champion: thanks BBC: Kavignar Thanigai.

 

மூங்கில் கொண்டு பளு தூக்குதல் பயிற்சி

ஆகஸ்ட் 8, 1994 இல் மணிப்பூரில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்த மீராபாய் குழந்தை பருவத்திலிருந்தே மிகவும் திறமையானவர். சிறப்பு வசதிகள் இல்லாத அவரது கிராமம் தலைநகர் இம்பாலிலிருந்து 200 கி.மீ தூரத்தில் உள்ளது.

மீராபாய்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அந்த நாட்களில், மணிப்பூரைச் சேர்ந்த பளுதூக்கும் வீரர் குஞ்சுராணி தேவி நட்சத்திரமாக இருந்து ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் விளையாடச் சென்றார்.

அதே காட்சி சிறிய மீராவின் மனதில் குடியேறியது மற்றும் ஆறு உடன்பிறப்புகளில் இளையவரான மீராபாய் ஒரு பளு தூக்கும் வீரராக மாற முடிவு செய்தார்.

2007 ஆம் ஆண்டில் அவர் பயிற்சி செய்யத் தொடங்கியபோது, முதலில் அவரிடம் இரும்பு பார் இல்லை, எனவே அவர் மூங்கில் கொண்டு பயிற்சி செய்தார்.


பட மூலாதாரம்,VINCENZO PINTO/AFP VIA GETTY IMAGES

படக்குறிப்பு,

வெள்ளிப் புன்னகை...

கிராமத்தில் பயிற்சி மையம் இல்லையென்பதால், அவர் பயிற்சிக்காக 50-60 கி.மீ தூரம் செல்வார். உணவில் தினமும் பால் மற்றும் கோழி தேவைப்பட்டது, ஆனால் சாதாரண குடும்பத்தின் பிறந்த மீராவுக்கு அது சாத்தியமில்லை.

11 வயதில் அவர் 15 வயதுக்குட்பட்ட சாம்பியனாகவும், 17 வயதில் ஜூனியர் சாம்பியனாகவும் ஆனார். குஞ்சுராணியைப் பார்த்த மீராவுக்கு சாம்பியன் ஆக வேண்டும் என்ற கனவு இருந்தது. 2016 ஆம் ஆண்டில் 192 கிலோ தூக்கி குஞ்சுராணியின் தேசிய சாதனையை முறியடித்தார்.

உலக சாம்பியன்ஷிப்பைத் தவிர, கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகளிலும் மீராபாய் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

பளுதூக்குதல் தவிர, மீராவுக்கு நடனமாடுவது பிடிக்கும். பிபிசிக்கு அளித்த பேட்டியில், "நான் சில நேரங்களில் பயிற்சிக்குப்பிறகு என் அறையை மூடிவிட்டு நடனமாடுவேன். எனக்கு ஹிந்தி நடிகர் சல்மான் கான் மிகவும் பிடிக்கும்," என்றார்.

Hellow We too start our Radio> Good Article thanks :Indu Tamil Disai: Kavignar Thanigai

 

நீங்களும் வானொலி தொடங்கலாம்!

podcasting

தங்க.ஜெய்சக்திவேல்

கரோனா காலகட்டம் எவ்வளவோ நெருக்கடிகளைக் கொண்டுவந்திருந்தாலும், இந்தக் காலகட்டத்தைப் பயன்படுத்தி இன்று பலரும் பல்வேறு முன்முயற்சிகளை எடுத்துவருகின்றனர். அதுவும் வீட்டில் இருக்கும் குழந்தைகள் புதிது புதிதாகப் பலவற்றையும் கற்றுவருகின்றனர். இந்த வரிசையில் சேர்ந்திருப்பதுதான் ‘பாட்காஸ்டிங்’ (Podcasting). இதன் மூலம், பல நாடுகளிலும் இன்று குழந்தைகளும் வானொலி அலைவரிசைகள் தொடங்கி நடத்திவருகிறார்கள். இளைஞர்கள் மத்தியிலும் இது நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி, இணையதளம் என்ற வரிசையில் புதிதாக இணைந்திருக்கும் ‘பாட்காஸ்டிங்’, உண்மையில் ஒரு நல்வாய்ப்பு. காரணம், யார் வேண்டுமானாலும் எளிதாகத் தொடங்கக்கூடிய ஊடகம் இது. ‘யூடியூப்’க்குத் தேவைப்படும் அளவுக்கு இன்டெர்நெட் டேட்டாவும் இங்கே விரயமாகாது.

‘பாட்காஸ்டிங்’ என்றால் என்ன?


ஆப்பிள் நிறுவனம் ‘ஐபாட்’ அறிமுகப்படுத்தியபோது அதில் ‘பாட்காஸ்டிங்’கையும் இணைத்து அறிமுகப்படுத்தியது. அதன் பிறகுதான் இந்த வார்த்தை பரவலாகத் தெரியவந்தது. டிரிஸ்டன் லூயிஸ் 2000-ல் இந்தத் தொழில்நுட்பத்தை எழுத்து வடிவத்தில் அறிமுகப்படுத்தினார். அதற்குச் செயல் வடிவம் கொடுத்தவர் டேவ் வின்னர். ‘பிபிசி’யின் செய்தியாளரும், ‘தி கார்டியன்’ இதழின் பத்தி எழுத்தாளருமான பென் ஹாமெர்சுலி இதைப் பற்றி 2004-ல் ஒரு கட்டுரை எழுதினார். அதில் ‘பாட்காஸ்டிங்’ எனும் வார்த்தையை முதன்முறையாகப் பயன்படுத்தினார். ‘ப்ராட்காஸ்டிங்’ என்பது அனைத்து வகை ஒலி/ஒளிபரப்புகளையும் குறிக்கும். ‘ஜபாட்’ இதை அறிமுகப்படுத்திய பின் இதற்கு ‘பாட்காஸ்டிங்’ என்ற பெயர் வந்தது.

வழக்கமான வானொலியிலிருந்து இது எப்படி வேறுபடுகிறது?

‘பாட்காஸ்டிங்’ ஒலிபரப்புக்கும் வானொலி ஒலிபரப்புக்கும் மிக முக்கிய வேறுபாடே, நமக்குத் தேவையான நேரத்தில் தேவையான நிகழ்ச்சிகளைக் கேட்க முடியும் என்பதுதான். வானொலி நிகழ்ச்சிகளை, ஒலிபரப்பும்போது மட்டுமே கேட்க முடியும். தவறும் பட்சத்தில் அந்த நிகழ்ச்சிகளைக் கேட்பதற்கு வாய்ப்பே இல்லை. ‘பாட்காஸ்டிங்’ அப்படியல்ல; தேவையான வானொலியைப் பின்தொடரும் பட்சத்தில், உங்கள் செல்பேசிக்கே அந்த ஒலிபரப்பின் தகவல்கள் வந்துவிடும். தேவையான நேரத்தில் அந்த ஒலிபரப்பைக் கேட்டுக்கொள்ளலாம்.

யாரெல்லாம் ‘பாட்காஸ்டிங்’ தொடங்கலாம்?

தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் மட்டுமே ‘பாட்காஸ்டிங்’கைத் தொடங்க முடியும் என்றில்லை. யாரெல்லாம் ஃபேஸ்புக், வலைப்பூ, வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்றவற்றைப் பயன்படுத்துகிறார்களோ அவர்களெல்லாம் மிக எளிதாக ‘பாட்காஸ்டிங்’ வானொலியைத் தொடங்க முடியும். வலைப்பூவை எப்படி இலவசமாகத் தொடங்க முடிகிறதோ, அதே போன்று ‘பாட்காஸ்டிங்’கையும் இலவசமாகவே தொடங்க முடியும். தனியாக நாமே ஒரு பக்கத்தை அமைப்பதற்குப் பெரிய சர்வர்கள் தேவைப்படும்; அதனால், முதலில் ஏதேனும் ஒரு ‘பாட்காஸ்டிங்’ வழங்குநர் பக்கத்தை நாடலாம். இதற்குப் பல்வேறு இணையதளங்கள் உதவுகின்றன. மேலும், செயலியை செல்பேசியிலும் பதிவிறக்கிக்கொள்ள முடியும். நம் செல்பேசியிலேயே நிகழ்ச்சிகளை ஒலிப்பதிவு செய்து, அதிலேயே எடிட்செய்யும் வசதியும் உள்ளதால், குழந்தைகள் உட்பட அனைத்துத் தரப்பினரும் இன்று ‘பாட்காஸ்டிங்’ தொடங்குவது மிகவும் எளிதாகியுள்ளது.

எதுவும் கட்டுப்பாடுகள் இருக்கின்றனவா?

இணைய வசதி கொண்ட, ஸ்மார்ட்போன் வைத்துள்ள யார் வேண்டுமானாலும் ‘பாட்காஸ்டிங்’ வானொலியைத் தொடங்க முடியும். இதற்கு யாரிடமும் அனுமதி வாங்கத் தேவையில்லை. இதற்காக ‘ஆங்கர்’ (anchor.fm), ‘ஸ்பாட்டிஃபை’ (open.spotify.com), ‘கூகுள் பாட்காஸ்ட்’ (google.com/podcasts), ‘ஆப்பிள் பாட்காஸ்ட்’ (podcast.apple.com), ‘பிரேக்கர்’ (breaker.audio), ‘காஸ்ட் பாக்ஸ்’ (castbox.fm), ‘ஓவர் காஸ்ட்’ (overcast.fm), ‘பாக்கெட் காஸ்ட்’ (pca.st), ‘ரேடியோ பப்ளிக்’ (radiopublic.com) போன்ற இணையதளங்கள் இலவசமாகவே இடம் தருகின்றன. ஆனால், திரைப்படப் பாடல்களை ஒலிபரப்ப வேண்டுமாயின் முறையான அனுமதி பெற வேண்டும். மேலும், ஒலிபரப்புக் கொள்கைகளுக்கு உட்பட்டே ‘பாட்காஸ்டிங்’ ஒலிபரப்பும் இருக்க வேண்டும். ஒலிபரப்புக் கொள்கைகளை ஒன்றிய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் இணையதளத்துக்குச் (mib.gov.in/broadcasting/air-broadcast-code) சென்று பார்த்துக்கொள்ளலாம்.

பணம் சம்பாதிக்க முடியுமா?

முடியும். உதாரணமாக, ஆங்கர் (Anchor) செயலியை எடுத்துக்கொள்வோம். இதன் உதவியுடன் உங்களின் ‘பாட்காஸ்டை’ இலவசமாக உருவாக்குவதோடு மட்டுமல்லாது, அதைப் பல்வேறு செயலிகளின் ஊடாக விநியோகிக்கவும் முடியும். இதன் மூலம், ‘யூடியூப்’பைப் போல ‘பாட்காஸ்டிங்’ வழியாகவும் பணம் சம்பாதிக்க ஏற்பாடு செய்யப்படுகிறது.

சில உதாரண வானொலிகள்

இந்த கரோனா காலத்தில் நான் தொடங்கிய வானொலி ‘தமிழ் சிறுகதைகள்’ (https://anchor.fm/tamilsirukathaikal). இந்த வானொலியில் இதுவரை தமிழின் மிக முக்கியமான 100-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்களின் கதைகள் பதிவேற்றப்பட்டுள்ளன. இந்த கரோனா காலத்தில் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக ஒலிபரப்பாகிவரும் மற்றுமிரு ‘பாட்காஸ்டிங்’ வானொலிகள் ‘பொன்னியின் செல்வன்’ (http://anchor.fm/uma-chari), ‘மழலையர் உலகம்’ (http://anchor.fm/aysha-thameem5). இந்த இரண்டு வானொலிகளும் தொழில்நுட்பம் தெரிந்த புலிகளால் தொடங்கப்பட்டதல்ல; ஆர்வம் கொண்டவர்களால் தொடங்கப்பட்டதாகும். ‘பொன்னியின் செல்வன்’ உமா சாரியால் திருச்சியிலிருந்தும், ‘மழலையர் உலகம்’ கோவையிலிருந்து தஸ்லீமா பர்வீனாலும் ஒலிபரப்பப்பட்டுவருகிறது. கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ என்றாலே பலர் அது பெரிய புத்தகம் என்று பயப்படுவார்கள். ஆனால், அதை மிக அழகாகவும் எளிமையான தொனியிலும் வாசித்துள்ளார் உமா சாரி. ‘மழலையர் உலகம்’ வானொலியை, கொஞ்சும் தமிழில் ஒலிபரப்பிவருகிறார் தஸ்லீமா. இவர்களைப் போல உங்கள் பகுதியில், உங்கள் மக்களுக்காக நீங்களும் ஒரு ‘பாட்காஸ்டிங்’ வானொலியைத் தொடங்கலாம்!

- தங்க.ஜெய்சக்திவேல், உதவிப் பேராசிரியர், இதழியல் மற்றும் தொடர்பியல் துறை, சென்னைப் பல்கலைக்கழகம். தொடர்புக்கு: bbcsakthi@gmail.com

Saturday, July 24, 2021

சார்பட்டா பரம்பரை: கவிஞர் தணிகை

 சார்பட்டா பரம்பரை: கவிஞர் தணிகை



இந்தியாவின் பணக்கார வர்க்கம், நடுத்தர‌ வர்க்கம், ஏழை வர்க்கம் உண்டு

கடற்கரை குப்பம் ஒன்றில் நடக்கும் அல்லது நடந்த கதை

எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் முகம்மது அலியை வரவழைத்தது, மீன் குழம்பு பரிமாறியதான செய்திகள் உண்டு.

19 ரோசமான ஜோடிகளின் குத்துச் சண்டை அரங்கேற்றம் போஸ்டர்கள் காண்பிக்கப் படுகின்றன.

புத்தர், அம்பேத்கர், பெரியார் கலைஞர் படங்கள் இருக்கின்றன...அறிஞர் அண்ணா படம் காணவில்லை

பா.இரஞ்சித் மிக அருமையாக எழுதி இயக்கி ஒரு நல்ல படத்தை கொடுத்திருக்கிறார்

எல்லாத் துறைகளுமே நன்கு ஒருங்கிணைக்கப்பட்டிருக்கிறது



முகமது அலி என்னும் காஷியஸ் க்ளே என்னும் கறுப்பு இனச் சிறுவன் வரலாறான கதை

அவருக்கு இந்தப் படம் நினைவு கூறப்பட்டுள்ளது


ஆர்யா என்னும் நடிகர் நல்ல இயக்கம் மூலம் மெருகேற்றப் பட்டிருக்கிறார்

நான் கடவுள் பாலாவின் படத்துக்கும் பின் இது ஒரு சொல்லிக் கொள்ளும் குறிப்பிடத் தக்க‌ படம்.


பசுபதி , ஜான் விஜய் போன்றோர் அசத்தியுள்ளார்கள் என்றால் ஜான் கொக்கன் வேம்புலியாகவும் டேன்ஸ் ரோஸ் சபீர் களரக்கல்..போன்றோர் நிறைவாக செய்திருக்கிறார்கள்.

இந்திராவின் ஆட்சியில் எமர்ஜென்ஸி காலம், எதிர்க்கட்சியினர் சிறைபிடிப்பு, தமிழக முதல்வர் ஸ்டாலின் சிறைபிடிப்பு போன்ற காட்சிகள் உண்டு



இது வரலாறை பதிவு செய்த படமாகவே இருக்கிறது.'

நல்ல ஏற்ற இறக்கங்கள், சமூகம்,உறவு, சுற்றம் எல்லாம் எதிரும் புதிருமாகவும் சினேகமாகவும் இருக்கும் போது தன்னை நம்பிய ஒரு தனி மனிதன் உதாசீனப்படுத்தப் பட்டு இருந்தவன் எப்படி குத்துச் சண்டையில்

தலை சிறந்த இடத்துக்கு போகிறான் தன்னொழுக்கத்தில் என்பதை விழுவது தவறல்ல விழுந்தவுடன் எழ வேண்டிய தேவை இருக்கிறது என்பதை படம் நன்கு விளக்குகிறது



தமிழில் குத்துச் சண்டை பற்றிய ஒரு அரிய படம், பார்த்து மகிழ்தல் மட்டுமல்ல உயர்வாகவும் சிந்திக்கலாம்.

65/100




மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை






Wednesday, July 21, 2021

Aloe vera ஆலுவேரா என்னும் சோத்துக் கற்றாழை: கவிஞர் தணிகை

 ஆலுவேரா என்னும் சோத்துக் கற்றாழை: கவிஞர் தணிகை



*அழகு சாதனப் பொருட்களின் மூலம்

*ஆரோக்கியத்தின் அடையாளம்

*மழை, நீர் அதிகம் தேவைப்படாத தாவரம்

*சரியான மலமிளக்கி

*சருமப் பிரச்சனைக்கு நல் மருந்து

*கண்களுக்கு குளிர்ச்சி தரும் விருந்து

*சொத்துக் கத்தாழை 3 வகை

* பாம்புக் கற்றாழை வேலிக்கு சாப்பிடாதீர்.

*இது நல்ல வணிகப் பயிர் கூட‌

*தேனில் கலந்து சர்க்கரை கலந்தும் உண்ணலாம்

*வெறும் வயிற்றில் உண்பது நல்ல நோய் நிவாரணி

*ஆயுர் வேதம், சித்த மருத்துவம், இயற்கை மருத்துவம்

* நோய் எதிர்ப்பு தன்மைக்கு நல்ல மருந்து

*தமிழர் மரபில், தமிழ் உணவில் கலந்த உயிர் பயிர்




மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை

Tuesday, July 20, 2021

தமிழர் ஆட்சி உத்திரமேரூர் குடவோலை முறை விதிகளை பின் பற்றலாமே: கவிஞர் தணிகை

 


தமிழ் நாடு அரசுப் பேருந்துப் போக்குவரத்துக் கழகத்தின் பெண்களுக்கான கட்டணமில்லா பயணச் சீட்டை வட நாட்டு ஆண் பயணியர்க்கு

காசு வாங்கிக் கொண்டு கொடுத்த நடத்துனர் ஆய்வாளரால் கண்டு பிடிக்கப் பட்டு பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சேலம் நகரப் பேருந்துப் போக்குவரத்தில் நடந்த கதை.


அரசுப் போக்குவரத்தில் இது போன்ற கதைகள் ஏராளம் என்கின்றனர். தனியார் பேருந்தை முன் விட்டு விடுவது, அந்த தனியார் பேருந்தினரிடம் கையூட்டு பெற்றுக் கொண்டு அதை பயணியர் அதிகம் ஏறவிட்டு விடுவது அதற்காக அரசுப் பேருந்தை வசதியாக பின் முன் அல்லது வேகம் பராமரித்து அந்த தனியார் வண்டிகளுக்கு வசதி வாய்ப்பு செய்து தருவது எல்லாம் சகஜமப்பா போக்குவரத்தில் என்கின்றனர்.


ஆவின் மேலாளர்கள் 34 பேர் ஊழல் காரணத்தால் இடமாற்றம் செய்யப் பட்டுள்ளார்கள்.


இது போல அரசியல், மற்றும் அரசுப் பதவிகளில் குற்றம் செய்தார் கையும் களவுமாக பிடிபட்டால் உத்திரமேரூர் சோழர் கால குடவோலை முறைப்படி அவரோ அவர் குடும்பம் சார்ந்தாரோ, வாரிசுகளோ இனி அரசுப் பதவி, பணிகளில் இடம் பெறவே கூடாது என்ற ஒரு ஏற்பாடு அமலுக்கு வந்தால் மட்டுமே இதை எல்லாம் தடுக்க தவிர்க்க முடியும்.


இராணுவத்தின் வாரிசுகளுக்கு முன்னுரிமை என்பது போல இதை எல்லாம் செய்யலாம்



மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.


Sunday, July 18, 2021

நெல்லஞ் சோறுதான் வேணும்: கவிஞர் தணிகை

 நெல்லஞ் சோறுதான் வேணும்: கவிஞர் தணிகை



மருத்துவர்களை விட செவிலியர்களும், சத்துணவுக்கான படிப்பு படித்த டையட்டீஷியன்களும் உணவு உட்கொள்ளல் பற்றி நல்ல நல்ல குறிப்புகள் தருகிறார்கள்.


வெண் சர்க்கரை, மைதா, பேக்கரி பொருட்கள், அரிசி உணவு, போன்ற வெள்ளை நிறப் பொருட்களை தவிர்த்து சிறு தானியப் பயிர்களுக்கு மாறுவது சிறந்தது.


நார்ச்சத்து உள்ள பொருட்களே நல்லது கோதுமை உட்பட‌


காய்கறிகளை அதிகம் சேர்த்து அரிசி உணவை குறைவாக உட்கொள்ளல் நல்லது

உடனே இல்லத்தரசி எதைச் சாப்பிட்டாலும் அதற்கேற்ற உடல் உழைப்பு இருந்தால் எல்லாம் நல்லதே...


 முறை சாராக் கல்வி வழியில் பயின்ற எனது தந்தை சுப்ரமணியன் அவர்களும்  பள்ளியிலேயே கால் வைக்காத படிக்காத தாய் தெய்வானை அவர்களும் மிக நன்றாகவே எங்களை வளர்த்து செம்மை செய்துள்ளனர். கல்வி என்பதற்கும் அறிவு என்பதற்கும் கூட இடைவெளி இருக்கிறது.


சிறுவர்களாக இருக்கும் போது நெல்லஞ்சோறுதான் வேணும் என நான் அடம் பிடித்து ஆரியக் களியை(ராகி, கேழ்வரகு ) கம்மஞ்சோற்றையும் நான் நிராகரித்தது உண்டு... உழவர்கள் தங்கள் உணவாக நெல்லஞ்சோற்றை விஷேச திருவிழா நாட்களில் மட்டுமே கொண்டிருந்தார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.


அதன் அருமையை இப்பொது உணர ஆரம்பித்து விட்டோம். அதன் விலை செயற்கை உரம் போடாத அதன் விலை இப்போது பருத்தி ஆடை போல, நாட்டுச்சர்க்கரை பனை வெல்லம் போல உயர்ந்துள்ள நிலையில்.


ஆரியக் களி உருண்டையில் குழி செய்து பனை வெல்லச் சீவலைப் பொடி செய்து போட்டு அதில் நெய், அல்லது நல்ல எண்ணெயை விட்டு கொடுப்பார்கள் பாருங்கள் ஆஹா அதன் அருமை எந்த உணவுக்கு வரும்? அதே போல அந்த  ஆரிய மாவில் பனை வெல்லம் போட்டு ஆட்டி இனிப்பு தோசை சுட்டுக் கொடுப்பார்கள், கோதுமை மாவில் கூட பனை வெல்லம் சேர்த்த போண்டா மிகவும் பிரமாதமாக சுவையுடன் இருக்கும்


நாட்டுக் கம்பு தவிட்டுக் கம்பு, மேட்டாங் காட்டுக் கம்பு அல்லது விவசாய முட்டைக் கம்பு என இருவகை, நாட்டுக்கம்பு எனப்ப்படும் தவிட்டுக்கம்பை  இடித்து கம்மஞ்சோறு செய்தால் அதன் வாசம் கம கம வென மூக்கை துளைக்கும்...அப்படி இடிக்கும் போது சிறிது எடுத்து பிரித்து அதிலும் பனை வெல்லம் போட்டு இடித்து அருகிருக்கும் சிறு பிள்ளைகளான எங்களுக்கு கொடுப்பார்கள் மாலை வேளை டிபன்... கொழிஞ்சிப் பழம் கூட மாலை வேளையில் ஆளுக்கு ஒன்றாக டிபனாக கிடைக்கும் மரத்தில் இருந்ததால்...


மிகவும் நைஸாக இடித்து கொழித்து அதைக் கொஞ்சம் எடுத்து கொடுப்பார்கள் அந்தக் கம்பு தானியமணியின் கடைசி மாவு வடிவம் தொண்டையில் பட்டு சிலு சிலு வென உள் இறங்கும் பாருங்கள் அதன் சுகமே அலாதி...எளிதில் கிடைக்கத இன்பம் நொங்கு சாப்பிடுவது போல... பதநீர் தெளிவு குடிப்பது போல‌


கொள் சட்டினி, மொச்சைக் கொட்டைக் குழம்பு என வைக்கும் போது அதை வேகவைத்து நீரை வடித்து இறுத்து மூட்டுக் கொடுப்பார்கள் சிறுவர்களுக்கு என அதற்காகவே குழம்புக்கு என போடும் அளவை அதிகமாகப் போடுவார்கள் அன்று மொச்சைக் கொட்டைக் குழம்பும் கத்தரிக்காய் என்றிருந்தால் அது அடுத்த நாள் வரை தாங்கும் மேலும் அன்று தனியாகப் பொறியல் தேவையில்லை...(கண்ணதாசன் உருளைக் கிழங்கையும் தட்டைப் பயிரையும் தவிர்க்க சொல்லியதும் நினைவில் கொள்க)


உளுத்தம் பருப்புக் கஞ்சி எங்கள் வீட்டில் ரொம்ப பேமஸ்...அதில் சிறு சிறு துண்டுகளாக தேங்காய் துண்டுகளும் இடம் பெறும்...சரியான சத்துணவு... அதிலும் பனை வெல்லம் தான் ...


நான் அந்த வாழ்க்கையை இழந்து விட்டேன் இருந்த போதிலும் எனது காலத்திலும் மலையில் பணி புரிந்த போது நரிப்பயறு எனது தம்பிகள் கொடுப்பார்கள் அதை இடித்து மாவாக்கி உருண்டையும், தினை அரிசியை முருகனுக்கு உகந்த நாட்களில் தேனும் தினை மாவும் என தினைப்புனத்து நாயகி வள்ளிக் குறத்தியை நினைவு கொள்ளும் வகையில் எங்கள் வீட்டிலும் தினை மாவு இடித்து படைத்த இனிய சம்பவங்கள் யாவும் எனது தாயோடு போயிற்று...எள்ளிடி என்ற எள் உருண்டை...கோதுமை அல்வா, தேங்காய் எண்ணெய் அதிரசம், இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்...


தேங்காய் நன்கு துருவி அதில் சர்க்கரையை சேர்த்து ஒரு தாம்பாளத்தில் இராமலிங்க வள்ளலார் பிறந்த நாளுக்கு என பொதுவுக்கு கொடுத்து விட்டு தட்டில் மீதம் வைத்து அவர்கள் விழாக்குழுவினர் கொடுக்காமல் எனது குழந்தைகளுக்கே அது கிடைக்கவில்லை என பொது  வாழ்க்கையை விட்டு, எங்கள் குடும்பத்தின் குழந்தைகளுக்கே தம் வாழ்வை அர்ப்பணித்த...எங்கள் வீட்டில் 5 பெண்கள், 3 ஆண்குழந்தைகள் பெற்றோருடன் சேர்த்து 10 பேர் அந்த பியர்ட்செல் என்ற இங்கிலாந்து சார்ந்த கம்பெனி வேலையால் உருப்பெற்றோம் அனைவரும் நன்றாகவே இருக்கிற நிலையை எனது பெற்றோர் உருவாக்கி விட்டனர் இதுவும் ஒரு உலகாதய சேவைதான்... ஒரு வேர் பல கிளைகள் பல மரங்கள் பூவும் பிஞ்சுமாக காய்த்து குலுங்கி வர...நல்லெண்ணம் உடையோர் வாழ்வு வாழையடி வாழையாக...அருகு போல் தழைத்துப் பரவி ஆல் போல் பரவித்  தழைத்து...


வாழ்த்துகள்  வணக்கங்கள் நண்பர்களே...


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.


























அணுகும் முறை: இரண்டாம் முறை கோவிட் தீ நுண் கிருமி எதிர்ப்பு ஊசி போட்டுக் கொண்டேன்: கவிஞர் தணிகை

 அணுகும் முறை: இரண்டாம் முறை கோவிட் தீ நுண் கிருமி எதிர்ப்பு ஊசி போட்டுக் கொண்டேன்: கவிஞர் தணிகை



கல்லூரி வாட்ஸ் ஆப் குழுவில் சேலம் மாவட்டம் முழுதும் 17.07.2021 அன்று போடப் பட இருக்கும் ஊசிகளின் மையம் மற்றும் எண்ணிக்கை குறித்த ஒரு பதிவைப் பார்த்தேன்

எனது இல்லத்தரசிக்கு இன்னும் முதல் ஊசி போடப் படாமலே இருந்த குறையை நிவர்த்திக்க திட்டமிட்டு காலை சுமார் 9 மணி அளவுக்கு மேச்சேரி ஆண்கள் மேல் நிலைப் பள்ளி நோக்கி பயணம்.

அங்கே 730 ஊசிகள் அதாவது கோவிஷீல்ட் 600 எண்ணிக்கை என்றும், 130 இரண்டாம் ஊசிக்கான கோவேக்சின் மருந்துகள் போடப்படுகின்றன என்ற செய்தி...

600 ஊசிகளில் நமக்கு ஒன்று கிடைக்காமலா போய்விடும் என்ற நம்பிக்கை வீண் போகவில்லை

பள்ளி நுழை வாயிலில் இருந்த நீண்ட வரிசையைப் பார்த்து சற்று மலைப்பு ஏற்பட்டது கோகுலம் தனியார் மருத்துவ மனைக்கு சென்று ரூ. 780 செலவு செய்து சேலத்தில் போட்டுக் கொள்ளலாமா என்ற ஒரு நினைவும் வந்தது


ஆனால் வரிசை மள மள வென செல்வதைப் பார்த்த எங்களுக்கு இன்ப அதிர்ச்சி...காவல் துறையும், சுகாதாரப் பணியாளரும் திறம்பட பணி புரிந்தனர். 10. 37 மணிக்கெல்லாம் ஊசி போட்டுக் கொண்டு வெளியே வந்து விட்டோம்.

மிகவும் நேர்மையாக முதலில் வருவோர்க்கு முதலில் என்ற விதி முறை கடைப்பிடிக்கப் பட்டிருந்தது.

பெண்கள் பக்கம் கூட்டம் குறைவு. எனவே எனது இல்லத்தரசி மிகவும் குறுகிய நேரத்திலேயே போட்டுக் கொண்டு வெளியே வந்து விட்டார். காவல் துறை பெண் நண்பர் கூட பெண்கள் எங்கே போவார்கள் அவர்களுக்கு போட்டு விடுங்கள் முதலில், ஆண்கள் கூட கிடைக்கும் இடம் தேடிப் போய் போட்டுக் கொள்ளலாம் என்றெல்லாம் பெண்கள் நலம் சார்ந்து பேசியதாக பகிர்ந்து கொண்டனர்.



நானும் இரண்டாம் ஊசியை போட்டுக் கொண்டேன். முதல் ஊசி போட்டது 17.06.2021 என்றிருந்த போதும், 84 நாள் கழித்தால் தான் போட வேண்டும் என்ற நிபந்தனையை எல்லாம் மீறத் தலைப்பட்டேன். 17.07.2021ல் போட்டுக் கொண்டேன். குறுஞ்செய்தி வராது என்றார்கள். பரவாயில்லை வந்தாலும் வராவிட்டாலும் வராமலே போனாலும் எனது வேலையை நான் முடித்துக் கொண்டேன். காரணம் வெளி நாட்டுக்கு செல்வாருக்கு இரண்டாம் முறை ஊசியை 25 நாளிலேயே போட்டுக் கொள்ளலாம் என்னும் அரசு, கோவேக்சின் என்றால் 20லிருந்து 30 நாளுக்குள்ளாகவே போட்டுக் கொள்ளலம் என்றும் இப்போது கோவிஷீல்ட் போட்டுக் கொண்டிருக்கும் எனது இல்லத்தரசி போன்றோர்க்கு 90 நாள் இடைவெளி என்றும் விதிகளை மாற்றிக் கொண்டிருக்கும் அரசுக்கு அனைத்து மக்களுக்கும் சமமான வாய்ப்பில் ஊசி போட வேண்டிய கடமை இருக்கிறது. 


தனியார் மருத்துவமனைகளில் ஊசிகள் தேங்கிக் கிடக்கின்றன என்ற செய்திகளும், தனியார் வியாபாரத்தை ஊக்குவிக்க விரும்பும் அரசை தனி மனித மறுப்பாக இதைச் செய்து இருக்கிறேன் ஏன் எனில் சுலபமாக கிடைப்பதை விட்டு விடத் தயாரில்லை. மேலும் எந்த தளத்திலும் ஊசிக்காக பதிவு செய்து கொண்டால் எங்கு எந்த மையத்தில், எப்போது ஊசி போட்டுக் கொள்ள வேண்டும் என்ற தகவல் இல்லை.


மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கும் நிலையில் தக்க ஊசிகளை வழங்க வேண்டிய பணியை மத்திய அரசே வைத்திருப்பதும் இப்போதுதான் செங்கல் பட்டு ஊசி தயாரிப்பு ஆலையை தனியாருடன் கரம் சேர்த்து ஆரம்பிக்க திட்டமிட்டிருப்பதாகவும் மிகவும் மெத்தனமான மிகவும் விரைவாக செயல்படாமல் அதற்கு மாநில உரிமை மத்திய உரிமை மாநிலத்துக்கு பேர் போய்விடும் என்று மக்களின் உயிர் காக்கும் பணியில் அலட்சியம் காட்டி வரும் அரசை பொது அதிகாரக் குவியலை எல்லாத் துறைகளையுமே தன்னிடமே தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஒன்றிய அரசை காந்திய மார்க்கத்துக்கு அதிகாரப் பரவல் என்ற போக்குக்கு மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளுடன், விவசாயப் போராட்டம் இன்னும் நீடிக்க முடிவு எட்டப் படாமலே ஒரு அரசால் எப்படி இருக்க முடிகிறது என்ற கேள்வியுடன் இந்த பதிவை நிறைவு செய்திருக்கிறேன்...கர்நாடகாவின் கர்நாடகமான மேக்கேதாது அணை ஆடு தாண்டும் கால்வாய் பிரச்சனையை தேர்தல் பிரச்சனையாக கையாளும் அரசியல் நிகழ்வுகளை கண்டிக்க வேண்டியது ஒவ்வொரு தனி மனித கடமையாக நினைக்கிறேன்.

(மேச்சேரி காளி அம்மன் கோவிலில் ஏகப் பட்ட கூட்டம் சமூக இடவெளி இன்றி அது கட்டியது முதல் நாங்கள் சென்று பார்க்க வில்லை என்ற எண்ணக் குறைபாடும் அன்று நிவர்த்தி ஆனது என்பதை சொல்லவும் வேண்டும்)


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை


Friday, July 2, 2021

நற்பொழுதாக்கம்: கவிஞர் தணிகை

 நற்பொழுதாக்கம்: கவிஞர் தணிகை



சிறு வயதில் தந்தை ஆண்டியப்பனின் தந்தையை அழைத்து வந்து வீட்டின் செடிப்பக்கம் முடி திருத்தச் செய்வார்

அந்தக் காலம் போன பின் ஆண்டியப்பனின் கடையில் சென்று செய்து வந்தோம். அங்குதான் குமுதம் கல்கண்டு படிக்க ஆரம்பித்து சாண்டில்யனின் யவனராணி, கடல்புறா ஆகிய சரித்திர நாவல்களில் மூழ்கினோம் அது வேறு கதை


எனது காலத்தில் மகன் சிறு வயது ஆக இருந்த போது பூப் போல வளர்த்து வந்தோம். கீழே விழுந்து அடி படக்கூடாது என முழங்கை வரை மேல் சட்டை, முழங்கால் வரை அரைக்கால் சட்டை எல்லாம் போடுவதுடன் அவருக்கு முடி திருத்தும் வேலை தந்தையான என்னுடையதுதான் ஏன் எனில் கடை எல்லாம் அவ்வளவு சுத்தம் பத்தமாக இல்லை என்பதாக கருதியதால்...அது அவன் இளைஞராக மாறும் வரை தொடர்ந்தது அதன் பின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் அவரும் அவரது தாயும் அவர் கடைக்கே சென்று செய்து கொள்ளட்டும் என மாற்றிக் கொண்ட போதும் ஏன் இன்றும் கூட எனக்கு நானே செய்து கொண்டுதான் வருகிறேன் தேவை ஏற்பட்டால் குடும்பத்தின் பிறர் உதவியுடன்...


மகாத்மா தென் ஆப்பிரிக்காவில் இங்கிலாந்தில் முடிதிருத்தம் செய்து கொள்ள செல்லும்போது ஆங்கில முடி திருத்தும் தொழில் செய்வோர் அவருக்கு செய்ய மறுக்கும் போது அவர் அதை தாமே செய்து கொண்டு நீதிமன்றத்தில் அதைப் பார்த்து அனைவரும் சிரிப்பார்களே அந்த செயல் ....


அவருக்கு அவரது ஆடையை சலவை செய்து தர மறுத்த நிலையில் அவரே அவர் வழக்கறிஞர் கோட் முதற்கொண்டு சலவை செய்து ஆரம்பத்தில் தீய்ந்து போய் கிழிந்து போய் எல்லாம் போட்டுச் செல்ல நீதிமன்றத்தில் அனைவரும் பார்த்து சிரிப்பார்களே அந்த செயல் ....இவை எல்லாம் எங்களுக்கு 11 ஆம் வகுப்பு பாடத்தில் இருந்தன...நானும் பயன்படுத்திக் கொண்டேன்.



முதலில் தமிழ் ஆசிரியர் இராசசேகரன் அவர்களின் வீட்டில் இருந்து நெருப்பு மூட்டி சலவை செய்யும் ஒரு சலவைப் பெட்டியை இரவலாக வாங்கி வந்து எனது மூத்த சகோதரனுக்கு சலவை செய்து கொடுப்பேன்; அவர்கள் எத்தனை முறை கேட்டாலும் சலவைப் பெட்டியை சலிக்காமல் கொடுப்பார்கள் மேலும் ஆசிரியரின் மறையாத சிரிப்பு என்னுள் இன்றும்....அது வேறு கதை 


தந்தை சலவை எல்லாம் செய்யச் சொல்ல மாட்டார், கையில் மட்டும் நீவி மடித்து வைக்கச் சொல்லி போட்டுக் கொள்வார் பெரும்பாலும்..


நானும் எனது காலத்தில் சலவை செய்து போடும் துணிகளை அணியாமல் டீ.சர்ட், ஜீன்ஸ் பேண்ட் என சேவை நிறுவனத்தில் பணி புரிந்ததால் ட்ரெஸ்ஸிங் கோட் எதுவும் தேவைப்படாததால் அணிந்து வந்தது, கல்லூரிக்கு பணிக்குச் செல்லும் போது அவசியம் ட்ரெஸ்ஸிங் கோட் தேவைப்பட...எப்போதோ கிடப்பில் போடப்பட்ட ஆட்டோமேட்டிக் அதிலேயே தண்ணீர் ஊற்றி தெளிக்கும் ( எதை வாங்கினாலும் சிறந்ததை வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் வாங்கிய சலவைப்பெட்டி) சலவைப் பெட்டி செயல்படாததால் அதை சரி செய்வதற்கு பதிலாக கணேஷ் சைக்கிள் மார்ட்காரர் அதெல்லாம் சரி வராது சார் ஒரு குறைந்த விலையில்  500 ரூபாய் இருக்கும் என நினைக்கிறேன்...சரியான விலை மறந்து விட்டது...இப்போது ஆண்டு ஆறான நிலையிலும் கை கொடுக்கிறது அதை வைத்துதான் எனது துணிகளை சலவை செய்து போட்டு வருகிறேன் கல்லூரிக்கு...


காந்தியம் படிக்கும் போது அவர் வேப்ப இலை சாப்பிடுகிறார் என நானும் ஒரு கைப்பிடி சாப்பிட்டது எல்லாம் நினைவில் வருகிறது.


வாழ்க்கை என்பது குறுகியது அதில் அதிக பட்சம் அல்ல அல்ல உச்ச பட்சம் எவ்வளவு அந்த வாழ்க்கையை பருக முடியுமோ அவ்வளவு பருகி தீர்ப்பது என்ற எண்ணத்தில் உங்களிடம் சில நேரம் அதிகம் பேசி விடுகிறேன்


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.






Thursday, July 1, 2021

காந்தி தேசம் காணவில்லையே: கவிஞர் தணிகை

 காந்தி தேசம் காணவில்லையே: கவிஞர் தணிகை



1. 73 ஆண்டுகள் மகாத்மாவைக் கொன்ற பின்னும் அவர் சத்தியம் அஹிம்சை மனித குலத்துக்கு அவசியம் என்ற பின்னும் இங்கு பொய்களே எல்லாக் குற்றங்களுக்கும் அடிப்படையாக இருக்கின்றன...அவர் மதுவே எல்லா பாவங்களுக்கும் அடிப்படை என்று சொன்னது போல‌

கொலை, கொள்ளை, இரகசிய விவரங்களை அவர்களுக்குத் தெரியாமலே வெளியிடுதல்,போதை, ஆவணக் குற்றங்கள் யாவற்றுக்கும் மேலாக‌ பொய் சொல்வதற்கு பெரிய சாட்சியமில்லாததால் நீதிமன்றத்தில் கூட சாட்சியமே பெரிய பங்கு வகிப்பதால் எந்தக் குற்றத்தையும் செய்ய வாய்ப்பாகிறது...உண்மை கண்டறியும் எந்திரம் காவல் துறைக்குத் தேவைப்படுகிறது.


நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் இரண்டு ஒன்று மனசாட்சி மற்றொன்று தெய்வத்தின் சாட்சியம்மா என்பார் கண்ணதாசன், தெய்வத்தின் சாட்சி, தெய்வம் நின்று கொல்லும் என்பதெல்லாம் இல்லை...கொரானாவுக்கு முன் ஏதுமே நிற்க முடியா நிலை...ஆக அவரவர்க்கு அவரவரே சாட்சி...இதற்கு என்று வேறு எவருமே பாதுகாப்புக்கென்று நிற்க வழியில்லை....ஒவ்வொரு நபருக்கும் ஒரு காவலர் நிற்க முடியாது....காவலர்களே பொருட் குற்றத்தில் ஈடுபடுவதை செயல் ஊடகங்கள் தெரிவிக்கின்றன....ஊடகத்திலும் மட்டுமல்ல எல்லாத் துறைகளிலுமே 100 % ஒழுங்கமைவு இந்தியாவில் கொண்டு வர வழி இல்லை...


2. அரியானாவில் ஒரு மலையடிக்கிராமத்தில் இருக்கும் பெரும்பாலும் இளைஞர்கள் கொள்ளைத் தொழில்..தீரன் அதிகாரம் ஒன்று...நினைவிற்கு...ஒரு வாரம் கொள்ளை அடித்த பொருட்கள் செலவில் ஏக விருந்து தடபுடலாக ஊரே களை கட்டுமாம் செய்தி ஊடகத்தில் வரும்போது மறைந்து கொள்வாராம் கொள்ளை அடித்தார்... ஒரே நேரத்தில் செய்தியும் தமிழக காவலரும் வந்ததால் மாட்டிக் கொண்டதாக கொள்ளையன் வாக்குமூலம்...மேலும் இதற்கு ஜப்பானின் ஏ.டி.எம் மெஷினுக்கு எப்படி குறைபாட்டை பயன்படுத்தி கொள்ளை செய்வது என்பதற்கான பயிற்சி எடுத்தார்களாம்...ஆக நடந்து முடிந்த பின்னேதான் நமது அரசுகள் பயன்படுகின்றன...நடக்கும் முன்பே தடுப்பு நடவடிக்கை இல்லை...ஏ.டி.எம்.காவலர் என்ன செய்தார்...போன்ற கேள்விகள் வேறு...இருந்திருந்தாலும் கொன்று விடுவர் அது வேறு...வரும் முன் காப்போம் என்பது வெறும் வார்த்தைகளாகின்றன‌


3.வரு முன்னர்க் காவாதான் வாழ்க்கை

  எரி முன்னர் வைத்தூறு போலக் கெடும்...


4. ஒரிஸ்ஸாவில் முதல்வர் நவீன் பட்நாயக் இந்தியாவின் மிகவும் பின் தங்கிய மாநிலத்தை கொரானா கோவிட் 19 தீ நுண்மித் தொற்றிலிருந்து பெரும்பாலும் காப்பாற்றி இருக்கிறார்.


5. வாடிக்கையாளரே எங்கள் சேவையில் அரசர் என்னும் வங்கியின் தாரக மந்திரம் உதிர்ந்து போய்  4 முறைக்கும் மேல் தங்களது பணத்தை எடுத்தால் ரூ. 15 கட்டணம், மேலும் ஜி.எஸ்.டி வரி உண்டாம்...ஆனால் நாட்டின் முதல் பெரும் பணக்காரர் வரி கட்டுவதிலிருந்து எப்படி விலக்கு பெறுகிறார் அதற்கு என்ன என்ன வசதி வாய்ப்புகள் இருக்கின்றன என்று நாடும் தணிக்கையாளர்களும் பணிச் சேவையில் இருப்பதும், எழைகள் பணத்தை பெரும் பணக்காரர்களுக்கு கொடுத்து அதிலிருந்து எப்படி அவர்களை தப்புவிப்பது என்பதையும் நாடு சொல்லித் தந்து கொண்டுள்ளது.


6. போக்குவரத்து பணியில் இருந்த ஒரு ஊழியர் பணமதிப்பீட்டு மாற்று/ இழப்பு நடந்த போது மாற்றப் பட்ட பெரும் பணக்கற்றைகள் மாட்டுத் தொழுவத்தில் இருந்த நாற்றம் எல்லாம் அடித்தது எனச் சொல்கிறார் மேலும், பணம் ஆளும் வர்க்கத்தினர்க்கு அந்த நடவடிக்கை முன் கூட்டியே தெரிந்து மற்ற நாட்டு மக்களுக்கும் எதிர் அணியினர்க்கும் வேண்டும் என்றே மறைக்கப் பட்டு ஆட்சியைத் தக்க வைக்க அவர்கள் தயாராகி இருக்கின்றனர்.


7. மத்திய பொருட்கள் மற்றும் சேவை வரி இங்கிருந்து டில்லி செல்வது மறுபடியும் உள்ளூர் நோக்கி பாயவே மறுக்கிறது...என்னிடம் கூட இணையத்துக்கு என்று மாதம் ஒன்றுக்கு ரூ.100 ரூ அளவில் வசூலிக்கப் படுகிறது


8. அதை விட செங்கல்பட்டு தடுப்பூசி மையம், குன்னூர் தடுப்பூசி மையம் அனுமதியே இல்லாது...மாநிலத்திற்கு நல்ல பேர் வந்து விடும் என செய்து வருகிறது... மக்கள் இரவு 12 மணி முதலே தடுப்பூசிக்கு காத்துக் கிடக்கிறார்கள் கிடைக்க வில்லை என்றவுடன் பேருந்தை மறியல் செய்கிறார்கள், போராட்டம் நடத்த ஆரம்பிக்கிறார்கள்.


8. எனது தமிழ் பெயரை ஆங்கிலத்தில் ஒவ்வொரு அடையாள அட்டையிலும் ஒவ்வொரு மாதிரியாக எழுத்தை பயன்ப‌டுத்தி எனக்கு ஆவணங்கள் அளிப்பதில் மறுத்து வரும் அதே அரசு...எப்படி எல்லாம் ஏமாற்றுவார்க்கு சலுகை செய்து கொடுக்கிறது என்பதற்கு அவரவர் பணத்தை முடக்கி விட்டு எடுக்க விடாமல் கொள்ளை அடிக்க வசதி செய்து கொடுப்பதிலிருந்தே தெரியவருகிறது. மேலும் தற்போதைய செய்தியின் படி தமிழகத்தில் சுமார் 50 ஆயிரம் பேரின் விவரம் திருட்டு போய் இருப்பதாகவும் செய்திகள் இருக்கின்றன அதன் விளைவு என்ன ஆகப் போகிறது என்பதை வரும் காலத்தில் தெரியவரும்.


9. 73 ஆண்டு ஆகிய பின்னும் காந்திய முறை நிலவாததால் கொசுவிலிருந்தும் தப்ப முடியவில்லை மின் விசிறி பயன் படுத்த ஏக தடை...இரவு 1 மணிக்கு மேல் தான் மின்சாரம் கிடைத்தது...எப்படி மனிதர் அடுத்த நாளில் பணி புரிய முடியும்... அதில் வேறு சமையல் எரிவாயுவுக்கு சத்தப்படாமல் ஏற்றுவது போல விலையை இனி ரீசார்ஜ் கூப்பன் வழியே மேலை நாடுகளில் செய்வது போல மின்சாரம் தரவிருப்பதாக மத்திய அரசின் அறிவிப்பு இனி, தண்ணீருக்கும் அதை அமல் படுத்த, இனி அத்தியாவசிய தேவை கிடைக்காமல் கீழ் மட்ட மக்கள் செத்துப் போக எளிய வழிகளை என்னவெல்லாம் செய்ய முடியுமோ எப்படி எல்லாம் செய்ய முடியுமோ அப்படி எல்லாம் செய்து கொண்டிருக்கிறார்கள்... வீட்டிலிருந்த படியே சொந்த வேலை பார்த்துக் கொண்டிருப்பார்க்கும் அரசு ஊதியம் மாதா மாதம் நிறைய கிடைக்கும் நிலை...மற்றவர்கள் என்ன ஆவது? 


10. கடைசியாக நமது முதல்வரே, கட்சி சார்பாக கொடுத்த 5 கி.கி சாப்பாட்டு அரிசி நன்றாக இருக்கிறது என்றும் நியாய விலைக் கடையில் கொடுத்த ரவை மிக மோசம் என்றும் செய்திகள்....


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.