Tuesday, June 27, 2023

புதிய மின்சார கொள்கை: மத்திய அரசின் அறிவிப்பால் மின்சார கட்டணம் உயருமா?

 தெளிவில்லா திட்ட அமலாக்கங்கள் எங்கு கொண்டு செல்கின்றன?

நன்றி: பிபிசி தமிழ் 27.06.2023

புதிய மின்சார கொள்கை: மத்திய அரசின் அறிவிப்பால் மின்சார கட்டணம் உயருமா?நன்றி: பிபிசி தமிழ் 27.06.2023


1

"புதிய மின்சார கொள்கையால் எங்களுக்கு எந்த லாபமும் இல்லை

2.

"புதிய கட்டண முறை தேவையில்லாத ஒன்று"

3.

"தற்போதுள்ள மீட்டரே போதும், ஸ்மார்ட் மீட்டர் தேவையில்லை"

4.

"99% பேர் மின் கட்டணத்தை சரியாக செலுத்துகின்றனர்"

5.

ஸ்மார்ட் மீட்டருக்கான செலவை யார் சுமப்பது?

6.

"மின் கட்டணம் யூனிட்டுக்கு 15 ரூபாயாகும்"

  • சிவகுமார் இராஜகுலம்
  • பதவி,பிபிசி தமிழுக்காக

நேர அடிப்படையில் மின் கட்டண நிர்ணயம் என்ற மத்திய அரசின் அறிவிப்பு, மின் கட்டணம் மீண்டும் உயருமோ என்ற அச்சத்தை மக்களிடையே விதைத்துள்ளது.

ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தியதும் புதிய மின்சார கட்டண கணக்கீடு அமலுக்கு வரும் என்கிறது மத்திய அரசு. இதன் மூலம் மின்சார கட்டணத்தை குறைத்துக் கொள்ளும் வகையில் மக்கள் தங்களது மின்சார பயன்பாட்டை மக்கள் திட்டமிட்டுக் கொள்ள முடியும் என்று மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங் கூறுகிறார்.

ஆனால், மத்திய அரசின் அறிவிப்பு மின் கட்டணம் உயர வழிவகுக்கும் என்று எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன. அத்துடன், நாடு முழுவதும் அனைத்து வீடுகளுக்கும் ஸ்மார்ட் மீட்டர் கட்டாயம் என்ற அறிவிப்பும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

மின்சார (நுகர்வோர் உரிமை) கொள்கை-2020இல் சில திருத்தங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த 23-ம் தேதியிட்ட அறிவிப்பு, 'நேர அடிப்படையில் மின்சார கட்டணம் கணக்கிடப்படும், ஸ்மார்ட் மீட்டர் விதிகள் எளிமையாக்கப்படும்' என்று கூறுஅதன்படி, "பகலில் மின் கட்டணம் 20 சதவீதம் குறைவாக இருக்கும். மின் கட்டணம் உச்சமாக இருக்கும் நேரத்தில் 10 முதல் 20 சதவீதம் வரை கட்டணம் கூடுதலாக இருக்கும். நேர அடிப்படையில் மின் கட்டணத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ளும் நுகர்வோர் பலன் பெறுவார்கள்" என்று அந்த அறிவிப்பு கூறுகிறது.

அதன்படி, 10 கிலோவாட்டிற்கும் அதிகமான மின் தேவை இருக்கும் வணிக மற்றும் தொழில்துறை நுகர்வோருக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் நேர அடிப்படையில் மின் கட்டணம் அமலுக்கு வரும்.

விவசாயம் அல்லாத மற்ற வீடு, அலுவலகம் உள்ளிட்ட அனைத்து நுகர்வோருக்கும் 2025-ம் ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் புதிய மின் கட்டண முறை அமலுக்கு வருகிறது. ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டதுமே, அந்த மின் இணைப்பில் புதிய கட்டண முறை செயல்பாட்டுக்கு வந்துவிடும் என்று அந்த அறிவிப்பில் தெநுகர்வோர் மின் கட்டணத்தை குறைத்துக் கொள்வது சாத்தியமாகும் அதேநேரத்தில், பவர் கிரிட் போன்ற ஆதார வளங்களை திறம்பட பயன்படுத்திக் கொள்ளவும் முடியும் என்று மத்திய மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை அமைச்சர் ஆர்.கே.சிங் கூறியுள்ளார்.

கட்சிகள் சந்தேகமும், மின்சார வாரிய விளக்கமும்

புதிய மின்சார கொள்கையால் மின் கட்டணம் குறையும் என்று மத்திய அரசு தரப்பில் சொல்லப்பட்டாலும், அதனை எதிர்க்கட்சிகள் சந்தேகத்துடனேயே பார்க்கின்றன.

புதிய அறிவிப்பு மின் கட்டணத்தை உயர்த்தவே வழிவகை செய்யும் என்று அக்கட்சிகள் வாதிடுகின்றன. தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரான ஓ.பன்னீர்செல்வமும் அதே கருத்தை முன்வைத்துள்ளார். பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, மின்சார – நுகர்வோர் விதிமுறைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென்று மத்திய அரசை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகமும் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளது. "தமிழகத்தில் மின் கட்டணம் நிர்ணயம் செய்யும் அதிகாரம் தமிழக ஒழுங்குமுறை ஆணையத்திற்கே உள்ளது. தற்போதுள்ள மின் கட்டண ஆணைப்படி உச்ச நேர கால அளவு கட்டணம் வீட்டு நுகர்வோருக்கு நிர்ணயம் செய்யப்படவில்லை என்பதால் இந்தத் திருத்தத்தால் தமிழகத்தில் வீட்டு நுகர்வோர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள்" என்று அது உறுதியளித்துள்ளது.

"புதிய மின்சார கொள்கையால் எங்களுக்கு எந்த லாபமும் இல்லை"

ஆனாலும், பொதுமக்களிடையே நிலவும் சந்தேகம் முழுமையாக தீரவில்லை. தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டு 8 மாதங்களே ஆகியுள்ள நிலையில், மத்திய அரசின் அறிவிப்பால் மீண்டும் கட்டண உயர்வு இருக்குமோ என்ற அச்சம் இருக்கவே செய்கிறது. அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் வணிக மற்றும் தொழில் பயன்பாட்டிற்கு புதிய கட்டண முறை அமலுக்கு வருவது குறித்து தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர்கள் சங்க(டேக்ட்) தலைவர் ஜேம்ஸிடம் பேசினோம்.

அவர் கூறுகையில், "நேர அடிப்படையில் கட்டணம், பகலில் குறைவு, இரவில் அதிகம் என்று கூறுகிறார்கள். தமிழ்நாடு அரசு அண்மையில்தான் மின் கட்டணத்தை கூட்டியுள்ளது. தற்போது நேர அடிப்படையில் மாற்றம் என்றால், பகலின் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு கட்டணத்தை குறைக்கவா போகிறார்கள்? அந்த விஷயத்தில் தெளிவு கிடைக்கும் வரை இந்த புதிய மின்சார கொள்கையால் எந்த லாபமும் எங்களுக்குக் கிடைக்கப் போவதில்லை."

"மின்சார பயன்பாட்டை அளவிட ஸ்மார்ட் மீட்டர் ஏதும் பொருத்தப்படாத நிலையிலேயே, சரியான கணக்கீடு ஏதுமின்றி சமீபமாக எங்களைப் போன்ற சிறு தொழில்முனைவோரிடம் காலையில் 4 மணி நேரம், மாலையில் 4 மணி நேரம் உச்சக்கட்ட பயன்பாட்டு நேரம் என்று கூறி 15 சதவீதம் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இப்போது ஸ்மார்ட் மீட்டர், நேர அடிப்படையில் மின் கட்டணம் என்று கூறுகிறார்கள். மத்திய, மாநில அரசுகள் அடுத்து என்ன செய்யப் போகின்றன என்று தெரியவில்லை." என்றார்.

மேலும் தொடர்ந்த அவர், "சந்தைப் பொருளாதாரத்தில் அடியெடுத்து வைத்த பிறகு, மத்திய, மாநில அரசுகள் எங்களைப் போன்ற சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மீதே சுமைகளை ஏற்றி வைக்கின்றன. முன்பெல்லாம் எங்களது செலவினத்தில் பத்தில் ஒரு பகுதி மட்டுமே மின் கட்டணத்திற்காக ஒதுக்க வேண்டியிருந்தது. தற்போது, அதுவே பெரும் பகுதியாக மாறி, பத்தில் 3 சதவீத இடத்தைப் பிடித்துள்ளது.

ஏற்கனவே பல சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன. எஞ்சியுள்ள நிறுவனங்கள் பலவற்றிலும் சிக்கல் இருக்கிறது. சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான முதலீட்டு உச்சவரம்பை 20 லட்சம் ரூபாயில் இருந்து 5 கோடி ரூபாயாக மத்திய அரசு உயர்த்திய பிறகு எங்களுக்கு கிடைத்து வந்த கொஞ்ச, நஞ்ச மானியங்களும், சலுகைகளும் கிடைக்காமல் போய்விட்டன. ஏனெனில், இந்த வரம்புக்குள் வந்த எங்களை விட பெரிய நிறுவனங்களே அவற்றைப் பெற்றுவிடுகின்றன. எங்களால் அவர்களுடன் போட்டியிட முடியவில்லை." என்று வேதனை தெரிவித்தார்.

"புதிய கட்டண முறை தேவையில்லாத ஒன்று"

அதேநேரத்தில், மத்திய அரசு குறிப்பிட்டுள்ள காலக்கெடுவுக்குள் புதிய கட்டண முறை அமலுக்கு வருவது சாத்தியமில்லை என்று தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர் சங்கத்தின் தலைவர் எஸ். காந்தி கூறுகிறார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "மத்திய அரசு கூறும் காலக்கெடுவுக்குள் நாடு முழுவதும் ஸ்மார்ட் மீட்டரை பொருத்திவிட முடியாது. தமிழ்நாட்டில் மொத்தமுள்ள மின் இணைப்புகளில் ஒரு பகுதி மட்டுமே ஸ்மார்ட் மீட்டருக்கு மாறியுள்ளது. அனைத்து இணைப்புகளிலும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட இன்னும் காலம் பிடிக்கும். அதேபோல் நாடு முழுவதும் பல கோடி இணைப்புகளில் பொருத்துவதற்குத் தேவையான ஸ்மார்ட் மீட்டர்களுக்கு எங்கே போவது?

ஸ்மார்ட் மீட்டர் ஏதும் பொருத்தப்படாமலேயே தமிழ்நாட்டில் வர்த்தகம் மற்றும் தொழில்துறை பயன்பாட்டிற்கான மின் கட்டணம் கடந்த ஆண்டு முதலே நேர அடிப்படையில்தான் வசூலிக்கப்படுகிறது. ஆனால், இதுபோன்று வீடுகளில் செய்வது சாத்தியமில்லை. தற்போதுள்ள எலக்ட்ரானிக் மீட்டர்களில் சுமார் 7 லட்சம் மீட்டர்களில் மட்டுமே அதற்கான வசதி உள்ளது" என்றார்.

அதேநேரத்தில், மத்திய அரசின் இந்த திட்டம் தேவையில்லாதது என்கிறார் அவர். "மக்களின் அத்தியாவசியத் தேவையான மின்சாரத்திற்கான கட்டணத்தை ஒழுங்குபடுத்தும் இடத்தில்தான் மத்திய, மாநில அரசுகள் இருக்கின்றன. மின்சாரத்தை உற்பத்தி செய்யும் தனியார் நிறுவனங்களின் கோரிக்கைகளுக்கு உடன்படுவது அரசின் வேலை இல்லை. அரசு தான் மின் கட்டணத்திற்கு உச்சவரம்பை நிர்ணயிக்க வேண்டும். அதுதான் உங்கள் வேலை. அதனை செய்வதை விடுத்து, இதுபோன்ற செயல்களில் இறங்கக் கூடாது" என்று காந்தி கூறினார்.

மின்சார கட்டணம் உயருமா?

பட மூலாதாரம்,TWITTER/TANGEDCO OFFICIAL

"தற்போதுள்ள மீட்டரே போதும், ஸ்மார்ட் மீட்டர் தேவையில்லை"

நேர அடிப்படையில் மின் கட்டணம் அமலுக்கு வந்தால் என்ன மாற்றம் நிகழும் என்பது குறித்து அறிய தமிழ்நாடு மின்சார வாரியத்தின் முன்னாள் செயற்பொறியாளர் அக்ஷய் குமாரை பிபிசி தமிழ் சார்பில் தொடர்பு கொண்டோம். மின் கட்டணம் உயர வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, "நேர அடிப்படையில் மின் கட்டணம் நிர்ணயம் அமலுக்கு வருவதால் மின்சார கட்டணம் கூடுமா, குறையுமா என்பது மத்திய, மாநில அரசுகளின் முடிவைப் பொருத்தது. அதுகுறித்து இப்போது ஏதும் கூற முடியாது." என்று கூறினார்.

அதே நேரத்தில் ஸ்மார்ட் மீட்டர் குறித்து முன்வைத்த கேள்விக்குப் பதிலளித்த அவர், "ஆனால், ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டதும் புதிய மின்சார கட்டண கணக்கீடு அமலுக்கு வரும் என்பது தான் ஏன் என்று தெரியவில்லை. ஏனெனில், தற்போதுள்ள எலக்ட்ரானிக் மீட்டரைக் கொண்டே நேர அடிப்படையில் மின்சார பயன்பாட்டின் அளவை துல்லியமாக கணக்கிட்டு விடலாம். அதற்கான வசதி தற்போதுள்ள எலக்ட்ரானிக் மீட்டரிலேயே இருக்கும் போது ஸ்மார்ட் மீட்டர் எதற்கு?

எலக்ட்ரானிக் மீட்டரில் சிம் கார்டை பொருத்தி புரோகிராம் செய்வதன் மூலம் குறிப்பிட்ட அந்த இணைப்பில் மின்சாரம் எந்த நேரத்தில் பயன்படுத்தப்படுகிறது? மின்சாரம் திருடப்படுகிறதா? என்பதை மின்சார வாரியம் இருந்த இடத்திலேயே தெரிந்து கொள்ள முடியும். அங்கே 3 முனை மின் இணைப்பில் ஏதேனும் ஒன்று துண்டிக்கப்பட்டாலும் கூட மின்வாரியத்திற்கு உடனே தெரிந்துவிடும். இத்தனை வசதிகள் இருக்கும் போது அவசர, அவசரமாக ஸ்மார்ட் மீட்டருக்கு ஏன் மாற வேண்டும்?" என்று கேள்வி எழுப்பினார்.

மின்சார கட்டணம் உயருமா?

பட மூலாதாரம்,TWITTER/TANGEDCO OFFICIAL

"99% பேர் மின் கட்டணத்தை சரியாக செலுத்துகின்றனர்"

எலக்ட்ரானிக் மீட்டர் - ஸ்மார்ட் மீட்டர் ஆகிய இரண்டையும் ஒப்பிட்டுப் பேசிய அவர், "எலக்ட்ரானிக் மீட்டரில் இல்லாத ஒன்று ஸ்மார்ட் மீட்டரில் உள்ளதென்றால், அது தொலைவில் இருந்தபடியே குறிப்பிட்ட ஒரு மின் இணைப்பைத் துண்டிப்பது மட்டும்தான். ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டிருந்தால், மின் கட்டணம் செலுத்தாத பட்சத்தில் தொலைவில் இருந்தபடியே அங்கே மின் இணைப்பை துண்டிக்கவும், கட்டணம் செலுத்திய பிறகு மீண்டும் கொடுக்கவும் முடியும்."

"தமிழ்நாட்டைப் பொருத்தவரை அந்த வசதி தேவையே இல்லை. ஏனெனில், இங்குள்ள 99 சதவீத மின் இணைப்புகளுக்கு குறிப்பிட்ட நேரத்தில் சரியாக கட்டணம் செலுத்தப்பட்டு விடுகிறது. ஆன்லைன் வழியாகவும், மின் வாரிய அலுவலகங்களில் நீண்ட வரிசையில் நின்றும் மக்கள் மின்சார கட்டணத்தை செலுத்துகின்றனர். எஞ்சிய ஒரு சதவீதம் என்பது, குறிப்பிட்ட அந்த கால அவகாசத்தில் கட்டணத்தை கட்ட முடியாமல் தவிப்பர்கள்தான். தமிழ்நாட்டில் வேண்டுமென்றே மின் கட்டணத்தை செலுத்தாமல் தவிர்ப்பவர்கள் வெகு சொற்பம்தான். அந்த ஒரு சிலரின் மின்சார இணைப்புகளை நேரில் சென்று துண்டிப்பதில் என்ன சிரமம் வந்துவிடப் போகிறது?" என்று கேட்டார்.

ஸ்மார்ட் மீட்டருக்கான செலவை யார் சுமப்பது?

மேலும் தொடர்ந்த அவர், "தமிழ்நாட்டில் அனைத்து மின்சார இணைப்புகளிலும் எலக்ட்ரானிக் மீட்டர்கள் பொருத்தப்பட்டு வெகுநாட்கள் ஆகிவிடவில்லை. அதற்குள் ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவது என்றால், அதற்கான பல ஆயிரம் கோடி ரூபாய் செலவு யார் தலையில் வந்து விழும்? தமிழ்நாடு மின்சார வாரியம் ஏற்கனவே சுமார் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்குகிறது. இப்போது மேலும் 50 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் சுமையை ஏற்றினால் அந்த சுமையை யார் சுமப்பது?

தமிழ்நாட்டில் சுமார் 1.5 கோடி மின் இணைப்புகளில் மின் கட்டணமே செலுத்துவதில்லை. அதாவது, அரசு வழங்கும் 100 யூனிட் இலவச மின்சாரத்திற்குள்ளேயே அவர்கள் தங்களது மின்சார பயன்பாட்டை சுருக்கிக் கொள்கிறார்கள். எஞ்சிய சுமார் ஒன்றரை கோடி இணைப்புகளுக்குத் தான் மின் கட்டணம் வருகிறது." என்றார்.

"மின் கட்டணம் யூனிட்டுக்கு 15 ரூபாயாகும்"

"புதிய கட்டண முறையால் ஏற்படும் மாற்றங்கள் குறித்த தனது கணிப்பையும் அக்ஷய்குமார் முன்வைத்தார். "வரும் காலத்தில் வசதி படைத்தவர்கள் சூரிய மின்சக்திக்கு மாறி விடுவார்கள். ஏழைகள் 100 யூனிட் இலவச மின்சாரத்திற்குள்ளேயே காலத்தை கடத்தி விடுவார்கள். இரண்டிற்கும் இடைப்பட்ட நடுத்தர மக்கள்தான் இந்த ஒட்டுமொத்த சுமையையும் தாங்க வேண்டியிருக்கும். ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கான செலவுகளை ஈடுகட்ட மின்சார கட்டண உயர்வு தவிர்க்க இயலாததாகி விடும். அப்போது யூனிட் ஒன்றுக்கு மின் கட்டணம் 15 ரூபாய் வரையிலும் உயர்ந்துவிடும். நிலைமையைநிலைமையை சமாளிக்க வேறு வழியே இல்லாமல் போய்விடும்."

"நேர அடிப்படையில் மின் கட்டணம் என்பதை தற்போதுள்ள எலக்ட்ரானிக் மீட்டர்களைக் கொண்டே செயல்படுத்திவிட முடியும் எனும் போது ஸ்மார்ட் மீட்டர் கட்டாயம் என்பது மிகப்பெரிய ஊழல். 140 கோடி மக்கள் தொகையைக் கடந்து விட்ட இந்தியாவில் அனைத்து வீடுகளுக்கும் ஸ்மார்ட் மீட்டர் கட்டாயம் எனும் போது எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் விரயமாகிறது? அதற்கான அவசியம் என்ன? மக்கள் தலையில் தேவையற்ற சுமையை ஏற்றுவது யார்? அதற்கு யார் காரணம்?" என்று அவர் ஆவேசமாகக் கேட்டார்.   

"நேர அடிப்படையில் மின் கட்டணம் என்பதை தற்போதுள்ள எலக்ட்ரானிக் மீட்டர்களைக் கொண்டே செயல்படுத்திவிட முடியும் எனும் போது ஸ்மார்ட் மீட்டர் கட்டாயம் என்பது மிகப்பெரிய ஊழல். 140 கோடி மக்கள் தொகையைக் கடந்து விட்ட இந்தியாவில் அனைத்து வீடுகளுக்கும் ஸ்மார்ட் மீட்டர் கட்டாயம் எனும் போது எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் விரயமாகிறது? அதற்கான அவசியம் என்ன? மக்கள் தலையில் தேவையற்ற சுமையை ஏற்றுவது யார்? அதற்கு யார் காரணம்?" என்று அவர் ஆவேசமாகக் கேட்டார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.




Wednesday, June 21, 2023

ஹைக்கூ இரண்டு சொல் இரண்டு திசை: கவிஞர் தணிகை.

 பட்டாம் பூச்சியல்ல...



புவியின் மேற்பரப்பில் தவழ்ந்திடும் 

எனை கீழே தள்ளி மிதித்தோடும் காற்று


...உதிர்ந்த இலை

மண்ணுக்கா? நெருப்புக்கா? ஆய்வுக்கா?


பொம்மை சிலைகள் குறியீடுகள்

அம்மை அப்பனும் குறி காட்டிகள்


ஊதலும் ஊசலும்


தவிக்கும் மனிதம்: கவிஞர் தணிகை


1. இரத்தம் தயாரிக்க முடியாத நிலையிலும்

2. நீரைத் தயாரிக்க முடியா நிலையிலும்

3. மூளையை மாற்ற முடியாமலும்

4. யுத்த முளைக்கு இறுதி அஞ்சலி செலுத்தாமலும்

5. பசிக்கு ஜீவகாருண்ய மொழி விடை தராமலும்


இப்படி மனிதம் இன்னும் நிறைய இனம் காணா நிலையில் இருந்தபடியே பிரபஞ்ச வெளிக்குச் செல்ல கோடிகளையும் டைட்டானிக் மூழ்கிய கப்பலைப் பார்க்க கோடிகளையும் விரயம் செய்தபடியே காணாமல் சென்றுகொண்டிருக்கிறது...


இதில் ஒரு வியாபார மூளை இரசிகன் காற்றாடி என நூல் விட்டுக் கொண்டிருக்கிறது


 ஹைக்கூ இரண்டு சொல் இரண்டு திசை: கவிஞர் தணிகை.

மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை




Sunday, June 18, 2023

அயோத்தி : தமிழ் திரைப்படம்: கவிஞர் தணிகை

 அயோத்தி : தமிழ் திரைப்படம்: கவிஞர் தணிகை



அயோத்தி என்றாலே பிரச்சனைக்குரிய எல்லைகளைத் தொடுவது என்பதெல்லாம் உங்களுக்குத் தெரியும். எனவேதான் அயோத்தி என்ற தமிழ் திரைப்படம் பார்த்த பாதிப்பு இன்னும் அடங்காததை உங்கள் முன் எடுத்து வைக்கிறேன் நமது மொழியும் சாத்வீகம் தான்  என்பதற்காக தமிழ் திரைப்படம் என்பதையும் சேர்த்தே தலைப்பில் இணைத்து விட்டேன்.


கொண்டவளைக் கஷ்டப்படுத்திய கதை அயோத்தியில் நடந்ததை இராமாயணம் சொல்வது

அயோத்தி இராமர் கோயில் பிரச்சனை எந்தளவு நாட்டை நாட்டு மாந்தரை பிரிவினைக்குள்ளாக்கியது என்பதெல்லாம் காலச் செய்திகளை பார்த்து வருவார்க்கு தெரிந்ததே.


மந்திர மூர்த்தி என்னும் புதிய இயக்குனர் இசை ரகுநாதன் தயாரிப்பாளர் ரவீந்தரன் ட்ரைடன்ட் ஆர்ட்ஸ், மாதேஸ் மாணிக்கம் ஒளிப்பதிவு என்றும் சன் லோகேஷ் என்பவர் எடிட்டிங் என்றும் இந்தப் படம் மார்ச் 8.2023ல் வெளிவந்தது என்றும் குறிப்புகள் இருக்கின்றன.ஜனவரி பொங்கல் வெளியீடாக வரவிருந்த படம் தாமதமாக வெளிவந்ததாம்.


எத்தனை பேர் பார்த்திருப்பீர் எனத் தெரியவில்லை.

பார்க்க வேண்டும் என்று(ம்) மத நல்லிணக்கம் வேண்டுவோர்.


சினிமாவை அழவைப்பதற்கென்று எடுப்பார் சிலர் உண்டு. அப்படி எடுக்கப் பட்ட படம். இதைப் பற்றி திரை உலகம் மறந்து போயிருக்கலாம்.


அழாமல் பார்க்க இயலவில்லை.


மிகவும் கடினமான பொருளை கையாண்டிருக்கிறார் இயக்குனர். எந்த துணிச்சலுடன் எடுத்தார் என்றே தெரியவில்லை. சொல்லாமல் விட்டால் நீங்கள் பார்க்காமல் விட்டு விடுவீர், சொன்னாலும் பார்க்காமல் விட்டு விட்டால் என்ன செய்வது என சொல்லியும் சொல்லாமால் விடுகிறேன். ஆனாலும் சொல்லித் தான் ஆகவேண்டும்  இல்லையேல் எனக்கு நானே துரோகம் செய்தவனாவேன். எனவே சொல்லி விடுகிறேன்.


படத்தின் நாயகன் அப்துல் மாலிக் தனது பேரை  பல்ராம் என்னும் சமய வேள்விகளில் மூழ்கிப் போய் எதுமறியாமல் வெறும் மதப் பற்றில் மூழ்கி குடும்பத்தை வருத்தி வாழ்ந்து கெட்ட மனிதர்க்கு அவர் அன்பால் நெகிழ்ந்து திருந்தி கடைசியாக கேட்டறியும் நிலையில் இருப்பதால் தன் பேரை சொல்கிறார்.


அடடா! அதற்குள் தான் எத்தனை வேதனை?


அயோத்தி என்ற இடத்தில் இருந்து ஒரு தமிழ் மொழி தெரியாத ஒரு குடும்பம் தரிசனத்துக்காக அல்லது ஒரு புனித பயணத்திற்காக‌ இராமேஸ்வரம் வருகிறது. அயோத்தி டு ராமேஸ்வரம் என்றும் சொல்லி இருக்கலாம். அல்லது ராமேஸ்வரம் என்று கூட பேர் சொல்லி இருக்கலாம். அயோத்தி என்று பேர் வைத்து அந்த பேருடன் ஒரு நடந்த கதையை எள்ளி நகையாடி இருக்கிறார் இயக்குனர் துணிச்சலுடன்.அயோத்தீ எனையும் பற்றிக் கொண்டது


அப்துல் மாலிக் சசிகுமார், பல்ராம் என்பாராக யஷ்பால் ஷர்மா , ப்ரீத்தி அஸ்ரானி என்னும் நடிகை ஷிவானியாக வாழ்ந்து நம்மை எல்லாம் உருக வைத்திருக்கிறார் படத்தை நகர்த்தும் அச்சாணியாக இருக்கிறார் என்னதான் நமது சசிக்குமார் ஹீரோவாக இருந்த போதும். ஆனால் சசிக்குமாருக்கு இது ஒரு மைல் கல்லான படம். பசங்க எப்படி சமுத்திரக்கனிக்கு ஒரு உயர்வைக் கொடுத்ததோ அப்படி இதுவும் இருக்கும்.ஆனால் இந்தப் படம் திரை உலகில் எப்படி வரவேற்கப்பட்டது? வசூல் வெற்றியா என்பதெல்லாம் தெரியவில்லை.


அஞ்சு அஸ்ராணி என்பவர் ஜானகியாக சிறிது நேரமே வந்து ஷிவானிக்கும் அவள் தம்பி சோனு(அத்வைத் வினோத்) ஆகியோரின் தாயாகி உயிருடன் இருந்து நமையும்  ஒரு நல்ல தாயாக வசீகரித்து இறந்து அதன் பின் கதைக்களத்தின் நாயகியாகி நிற்கிறார்.


ஜானகி என்ற பேரில் ஆங்கிலத்தில் எழுதும் போது வரும் எழுத்து மாற்றங்கள் ஒவ்வொரு சான்றிதழிலும் வேறு ஆக இருக்கும் போது நமது நாட்டு சீரிய தன்மை பற்றி பேசும் போது அது பார்ப்போரிடம் பெரும் தொடர்பை ஏற்படுத்தி விடுகிறது அது சினிமாக் கதை அல்ல நிஜமான நடைமுறையில் உள்ள போக்கு  என்று...(இறந்தவர்க்கு பேரில் எந்த எழுத்து மாறினால் என்று ஒரு நியாயம் ஆனால் அரசு ஏற்றுக் கொள்ளாதே...ஆனால் அரசுதானே அந்த சான்றுகளைக் கொடுக்கிறது அப்போது அவை யார் தவறுகள்?இப்படிப் பட்ட விவாதப் போக்கு நீண்டு கொண்டே போகும்...வேண்டாம் விட்டு விடுவோம்...)

இது போன்ற கதையை எடுத்து பொதுவாக சினிமாவாக்க நிறைய இயக்குனர்கள் பெரிதும் விரும்பாத களம். ஆனால் இதுவே நாட்டின் யதார்த்தமாக நடைபெறும் செயல்பாடு என்பதை நிதர்சனமாக அப்பட்டமாக காட்டி இருக்கிறார்கள்.


யாரும் அறிமுகமற்ற ஒரு இடத்தில் விபத்தாகவோ அல்லது வேறு இயல்பாகவே கூட ஒரு உயிர் போய்விட்டால் அந்த உடலை இறுதிச் சடங்கு செய்வதற்குள் எத்தனை எத்தனை துயரத்தை சந்திக்க வேண்டி இருக்கிறது என்று சொல்லி இருக்கின்றனர்.


அதையும் ஏற்று இப்படியும் சிலர் இருக்கிறார்கள் என்னும் சொல்லும்படியான உண்மை மனிதர்கள் இருக்கிறார்கள் அவர்களுக்குள் எந்த பிரிவினையும் இல்லை, அவர்களை எந்த மதமும் பிரிப்பதில்லை, தடுக்கவும் முடியாது, மதமல்ல, மனிதமே நமை என்றும் இணைக்கிறது மனித நேயம் இருக்கும் இடத்தில் மதபிரிவினைக்கும் துவேஷத்துக்கும் இடம் இல்லை என அழவைத்து பாடமாக இருக்கிறது இந்தப் படம். பழைய கருதான் ஆனால் எடுத்துச் சொன்ன விதம் நெஞ்சைப் பிழிவதாக இருக்கிறது...


இதை எத்தனை பேர் பார்த்திருப்பார்? பார்த்து பல்ராம் போன்ற மனிதர்கள் தங்களை மாற்றிக் கொண்டிருப்பார்களா அப்படி மாற்றிக் கொண்டால் எங்காவது சிலரோ அல்லது ஒருவரோ இருந்தாலோ இந்தப் படத்துக்கு கிடைத்த வெற்றிதான்


எந்தவித பிரதிபயனும் கருதாது அப்துல் மாலிக்கும் அவர்கள் நண்பர்களும் எப்படி எல்லாம் உதவுகிறார்கள் என்பதைப் பார்க்கும் போது நம்மால் இதைப் பற்றி இது போன்ற மனிதர் பற்றி பாராட்டாமல் இருக்க முடியாது.


அப்படிப்பட்ட நோக்கத்தில் மட்டுமே இந்தப் படம் துணிச்சலுடன் வெளிப்பட்டு இருக்கிறது. மிகவும் தாமதமாக பார்த்து இருக்கிறேன். ஆனாலும் இது போன்ற படங்கள் ஊக்குவிக்கப் பட வேண்டும் இந்த தேசத்தாலும், உலகத்தாலும் தேச மக்களாலும், உலக மாந்தராலும்...அப்படி நேசம் யாவற்றையும் ஒழுங்கு செய்து மாந்தர் தம் துயர் தீர்க்கும்...


அழத் தயாரகிக் கொண்டு  ஒர் முறையாவது இந்தப் படத்தைப் பார்த்து விடுங்கள் விடியல் குகன், லகர் இன்னும் எனது அன்பர்களே ( பார்க்க வில்லை என்றால் கட்டாயம் பார்த்து விடுங்கள் மற்றவர்க்கும் சொல்லுங்கள், மலையாளப் படம், ஆங்கிலப் படம் என்றெல்லாம் தான் நல்ல படம் வருமா? தமிழ் படத்தில் கூட இப்படி ஒருவர் முயற்சி செய்திருப்பதை அனைவர்க்கும் தெரியப்படுத்தி விடுங்கள். நன்றி...வணக்கம்.)

 வாழ்த்துகள் மற்றும் வணக்கங்கள் மந்திர மூர்த்திக்கு.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.




Tuesday, June 13, 2023

பி.எஸ்.நடராஜன் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்: கவிஞர் தணிகை

 

நேர்மைக்கு கிடைத்த பரிசு... நிம்மதி! - ஓய்வுபெற்ற 94 வயது வட்டாட்சியர் பெருமிதம்"இப்படியும் சில பேர்"



மதுரை: நேர்மையுடன் வாழ்வதே லட்சியம் என்ற கொள்கையுடன் வாழ்ந்து வருகிறார் 94 வயதான ஓய்வுபெற்ற வட்டாட்சியர் பி.எஸ்.நடராஜன். இவர் முன்னாள் தலைமைத் தேர்தல் அதிகாரி டி.என்.சேஷனிடம் பாராட்டு பெற்றுள்ளார்.

ஊழல் நாட்டின் வளர்ச்சியை பாதிக்கும் புற்றுநோய். ஆட்சி, அதிகாரத்தில் இருப்பவர்கள் நேர்மையுடன் செயல்பட்டால், நலத்திட்டங்கள் சாமானிய மக்களை எளிதில் சென்றடையும். ஊழல்வாதிகளுக்கு மத்தியில் நேர்மையான அலுவலராக இருப்பது சிரமம்தான்.

ஆனால், பி.எஸ்.நடராஜன், தனது 24 வயதில் வருவாய்த் துறையில் இள நிலை உதவியாளராக அரசு பணியில் சேர்ந்து, வட்டாட்சியராக ஓய்வு பெறும் வரையிலும் நேர்மையை முழு மூச்சாகக் கடைப்பிடித்தவர். இது குறித்து மதுரை அண்ணா நகர் கிழக்கு, நியூ குறிஞ்சி ரெசிடென்சியில் வசித்து வரும் 94 வயது ‘இளைஞர்’ பி.எஸ்.நட ராஜன் ‘இந்து தமிழ் திசை'யிடம் கூறியதாவது:

எனது தந்தை சுப்பிரமணியன் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், அவர்களது கம்பெனியில் பணியாற்றியவர். சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்பதற்காக பணியைத் துறந்தவர். எங்களது பூர்வீகம் தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகிலுள்ள பழமார்நேரி. அப்பா சென்னையில் வேலை பார்த்ததால் அங்குதான் பிறந்து வளர்ந்தேன்.

எங்களது பெயருக்கு முன்னால் ஊரின் பெயரையும் குறிப்பிடுவதால், பழமார்நேரி சுப்பிரமணியன் மகன் நடராஜன் என்பதை பி.எஸ்.நடராஜன் என எழுதுவது வழக்கம். மெட்ராஸ் சர்வீஸ் கமிஷன் நடத்திய தேர்வில், சென்னை மாகாணத்தில் 2-வது மாணவனாக தேர்வானேன். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 26.5.1955-ல் இளநிலை உதவியாளராக பணியில் சேர்ந்தேன். படிப்படியாக பதவி உயர்வு பெற்று, 28.2.1989-ல் வட்டாட்சியர் நிலையில் ஓய்வு பெற்றேன்.

தந்தையைப்போல் பணியில் கடைசிவரை நேர்மையைக் கடைப்பிடித்தேன். அப்போது எனது மேலதிகாரி, ‘தவறு செய்யத் தெரியாதவர்’ என குறிப்பு எழுதிவைத்து கவுரவப்படுத்தினார். அதேபோல், நேர்மை, கண்டிப்புடன் இருந்த முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி டி.என்.சேஷன், மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த போது,எனது நேர்மையை வெகுவாக பாராட்டினார்.

சில அதிகாரிகள் என்னை தவறு செய்ய நிர்பந்தப்படுத்தியபோதும் மறுத்துவிட்டேன். அரசு உதவியை நாடிவரும் ஏழைகளுக்கு நலத்திட்டங்கள் கிடைக்கச் செய்துள்ளேன். தர்மம் தலைகாக்கும் என்பர். அதற்கேற்ப 94 வயதிலும் ஆரோக்கியத்துடனும், மன நிம்மதியுடனும் வாழ் கிறேன் எனக்கு உறுதுணையாக மகன், மருமகள் உள்ளனர். நான் ‘தி இந்து' நாளிதழின் தீவிர வாசகன். எனது நேர்மையில் ‘தி இந்து’வுக்கும் பங்குண்டு.இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து அவரது மகனும், ஓய்வுபெற்ற காப்பீட்டுக்கழக அதிகாரியுமான பி.என்.சுந்தரேசன் கூறியதாவது: அதிகாலையில் ‘தி இந்து' ஆங்கிலம் ‘இந்து தமிழ் திசை' நாளிதழை லென்ஸ் மூலம் வாசித்து விடுவார். மரம், செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவது, பறவைகளுக்கு இரை அளிப்பது என பரபரப்பாக இயங்குவார். 94 வயதிலும் கை நடுக்கமின்றி முத்து முத்தாக கவிதைகள் எழுதுவது, சங்கீதம் பாடுவது என அவரது செயல்கள் எங்களை உற்சாகப்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி: இந்து தமிழ் திசை

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

Sunday, June 11, 2023

LIFE IS BEAUTIFUL(ITALIAN ) லைஃப் ஈஸ் பியூட்டிபுல்: : கவிஞர் தணிகை

 லைஃப் ஈஸ் பியூட்டிபுல்: : கவிஞர் தணிகை




மாமன்னர் படம் இயக்கிய மாரி செல்வராஜின் பேட்டியைப் பார்க்கும் போது அதில் வடிவேலு லைஃப் ஈஸ் பியூட்டிபுல் படத்தை நான் பண்ண வேண்டும் நீ இயக்க வேண்டும் என்று சொல்லியதாக கேட்டேன். உடனே அப்படி என்ன அந்த படத்தில் எனத் தேடல்


அந்த தலைப்பிலேயே இன்னும் சில படங்கள் இருக்கின்றன ஆங்கிலத்திலும் ஏன் தெலுகிலும் கூட.


முதலில் ஒரு படத்தைப் பார்த்தேன் அது ஒரு வாடகைக் கார் ஓட்டுனர் பற்றியும் ஒரு அடக்குமுறை சாம்ராஜ்ஜியம் பற்றிய கதை அதிலிருந்து தனது காதலியுடன் எப்படி மீண்டு தனி விமானத்தில் ஏறி கடைசிக் காட்சியில் தப்பிக்கிறார். என்பது பற்றியது.


பொதுவாக இந்த தலைப்பில் உள்ள படங்களில் எல்லாம் மையக் கருவாக மிகவும் கஷ்டப்பட்டு இறுதியில் இன்பம் தொடல் என்பது பற்றிய நிலை சொல்லப் படுகின்றன.


இந்த இத்தாலிய மொழித் திரைப்படம் 3 ஆஸ்கார் விருதுகளை வென்றது, சிறந்த நடிப்பு, சிறந்த இசை, சிறந்த பிற மொழிப் படம் என்றெல்லாம் 1997ல் வெளிவந்த படம்


வழக்கம் போல நாஜிகள் யூதர்களை கொடுமைப்படுத்தி துன்புறுத்தும் காலக் கட்டப் படம் தான்... இரண்டாம் உலகப் போரின் இறுதிக் கட்டத்தில் நிகழ்ந்ததாக சொல்லப் பட்டுள்ள கதைதான்.


இந்தப் படத்தைப் பற்றி ஏன் சொல்ல வேண்டும் எனில் இதைப் பார்த்தது முதல் பல்வேறு எண்ண அலைகள் அடங்காமல் ஆர்ப்பரித்தபடியே இருப்பதுதான்.


ஒரு கிராமத்து யூத இளைஞர் நகருக்குள் நுழைந்து தனது விளையாட்டான ஜாலியான நடவடிக்கைகளால் ஒரு ஜெர்மானியப் பெண் மனம் கவர்ந்து இவரும் அவரும் மணம் கொண்டு அதன் வழி ஒரு ஆண் குழந்தையை பெற்றுக் கொள்வதும்... 


அதன் பின் நிலை சிக்கலாக மாறி சொல்லொணாத் துன்பம் நேர்வதை எப்படி இருவரும் தமது மகனுக்கு தெரிவிக்காமல் கொண்டு செல்கிறார்கள் அது ஒரு சவாலான போட்டி அதி வெல்வாருக்கு பெரும்பரிசு கிடைக்கும் என்றெல்லாம் சொல்லி அந்தச் சிறுவனை பெரும் துன்பத்திலான நேரத்தில் கூட ஒரு விளையாட்டுப் போட்டியில் ஈடுபடுவதாக வெல்வதற்கான சவாலை வென்றெடுக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லி வாழ்வில் உடன் அழைத்துச்  செல்கிறார்கள்.


அதிலும் அவரது தந்தையின் செயல் யாவும் மிகவும் வேடிக்கையாகவே இருக்கின்றன. "துன்பம் வரும் வேளையில் எல்லாம் சிரிங்க" இடும்பைக்கு இடும்பை படுப்ப  என்ற தமிழ் மரபு வார்த்தைகளுக்கு ஏற்ப‌


உண்மையிலேயே தலைப்பைப் பார்த்து ஒரு நகைச்சுவைப் படத்தைப் பார்க்கும் ஆர்வத்துடன் நாம் இருந்தால் அந்தப் படம் வாழ்வின் பேருண்மையை நமக்கு புகட்டுவதாய் அமைந்து விடுகிறது.


சகிப்புத் தன்மையுடன் வாழ்வை எதிர்கொள்ளல், அதிலும் ஒரு விளையாட்டுத் தனம் கலந்த ஜாலியாக எதிர்கொள்ளல் எப்பேர்ப்பட்ட துன்பம் வரினும் அதை அழுது கொண்டு சந்திக்காமல் சிரித்துக் கொண்டே சந்தித்தல் அவற்றிற்கு மேல் நமது குழந்தைகளுக்கு அவை பற்றி ஏதும் தெரிவிக்காமலே  புரிய வைக்காமலே புரியவிடாமலே அந்த வாழ்வை எப்படி நகர்த்திச் செல்லல் போன்ற நடை பார்க்கும் நமை எல்லாம் சிந்திக்க வைக்கிறது


இறுதியாக அந்த தந்தை செய்யும் தியாகம் அந்தச் சிறுவனை ஒரு நல்ல வாழ்க்கைக்கு எப்படி இட்டுச் செல்கிறது அவரது தாயுடன் சேர்த்து வைக்கிறது....என்ற முடிவு...அந்தச் சிறுவனுக்கு தனது தந்தை இனி இல்லை என்ற நினைவைக் கூட வர விடாமல் இனி எலாம் சுகமே...என்ற வாறு முடித்து வைக்கிறது...


ஆக இது ஒரு பாடம். படம் அல்ல...மணமாகி குழந்தை என்று வந்து விட்டாலே நமது நோக்கம் யாவும் அவர்களை மலர்விப்பதானதாகவே இருக்க வேண்டும் அவர்தாம் நல்ல பெற்றோராக இருக்க முடியும் என எப்போதே சொல்லப் பட்ட படம், இப்போது இந்தக் காலக்கட்டத்தில் புணர்ச்சி சுகம் அனுபவிக்கும் போது தொந்தரவாக இருக்கிறது என பெற்ற பிள்ளைகளையே அடித்து பல்வேறுபட்ட துன்புறுத்திக் கொன்று வரும் இந்தக் காலக் கட்டத்தில் எனக்கு பொருத்திப் பார்த்து அவசியம் சொல்லத் தோன்றுகிறது...ஓ! மனிதா உன் வாழ்வென்ன எளிதா? உன் வாரிசுகளுக்கு எளிதாக்கு அதுவே உனது மொழிதான்...


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.


Tuesday, June 6, 2023

எவரெஸ்ட் சிகரத்தில் சிக்கிய மலையேற்ற வீரரை காப்பாற்றிய நேபாள இளைஞர் -

 எவரெஸ்ட் சிகரத்தில் சிக்கிய மலையேற்ற வீரரை காப்பாற்றிய நேபாள இளைஞர் - நெகிழ்ச்சியான காட்சிகள்



நெகிழ்ச்சியான காட்சிகள்

எவரெஸ்ட் சிகர மலையேற்றத்தின்போது, ஆபத்தில் மாட்டிக்கொண்ட ஒரு மலையேற்ற வீரரை, நேபாளத்தைச் சேர்ந்த வழிகாட்டி ஒருவர் காப்பாற்றியிருக்கிறார் .அவருடைய பெயர் கெல்ஜி ஷெர்பா

இந்த மீட்புப் பணியில் ஈடுபடுவதற்காக, எவரெஸ்ட் சிகரத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்த தன்னுடைய பயணத்தை கெல்ஜி கைவிட்டிருக்கிறார்.ஆபத்தில் இருந்த மலையேற்ற வீரரை, கெல்ஜி ஷெர்பா தன்னுடைய தோளில் சுமந்துகொண்டு, கீழே பத்திரமாக மீட்டுக்கொண்டு வந்துள்ளார்.

இந்த மீட்புப் பணியில் ஈடுபடுவதற்காக, எவரெஸ்ட் சிகரத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்த தன்னுடைய பயணத்தை கெல்ஜி கைவிட்டிருக்கிறார்.ஆபத்தில் இருந்த மலையேற்ற வீரரை, கெல்ஜி ஷெர்பா தன்னுடைய தோளில் சுமந்துகொண்டு, கீழே பத்திரமாக மீட்டுக்கொண்டு வந்துள்ளார்.

எவரெஸ்ட்டின் மிக ஆபத்தான பகுதி ஒன்றில், இந்த மலேசிய மலையேற்ற வீரர் கயிற்றைப் பற்றிக்கொண்டு தொங்கிக்கொண்டிருப்பதை கெல்ஜி பார்த்தார். அப்போது அங்கு வெப்பநிலை -30டிகிரிக்கும் கீழே இருந்தது.அத்தனை பெரிய உயரத்தில், அங்கிருக்கும் நிலைமையைப் பார்க்கும்போது மீட்புப்பணியில் ஈடுபடுவது சாத்தியமில்லை என நேபாள அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் கெல்ஜி அவரைக் காப்பாற்றிவிட்டார்.

மலேசிய வீரரைப் பார்த்தபோது, கெல்ஜி தன்னுடைய வாடிக்கையாளரான சீன மலையேற்ற வீரர் ஒருவருடன் மலையேறிக் கொண்டிருந்தார். ஆனால் மலேசிய வீரரின் நிலையை உணர்ந்த கெல்ஜி, அவரைக் காப்பாற்றுவதற்காக, தன்னுடைய வாடிக்கையாளரிடம் எவரெஸ்ட்டின் உயரமான பகுதியை எட்டும் முயற்சியை தற்போது கைவிடுமாறு கோரினார்.

”நான் அவருடைய உடல்நலம் குறித்து மிகக் கவனமாக இருந்தேன். அவருடைய உடல்நிலை மோசமாக இருந்தது, அவர் இறக்கும் தறுவாயில் இருந்தார். அதனால் அவருக்கு மேற்கொண்டு எதுவும் ஆகிவிடாமல், பத்திரமாகக் கீழே அழைத்து வந்தோம்.

அவரை கீழே அழைத்துவரும்போது, அவருக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை இருப்பது தெரிந்தது. எனவே என்னிடமிருந்த நான்கு பாட்டில் ஆக்ஸிஜனை நான் அவருக்கு அளித்தேன்.

அவருடைய நிலையில் நான் இருந்திருந்தால் எப்படியிருக்கும் என நினைத்துப் பார்த்தேன். இப்படியொரு மோசமான நிலையில் என்னை யாராவது காப்பாற்றி இருந்தால் நிச்சயம் மகிழ்ச்சியடைந்திருப்பேன்.” என்று இந்த நெகிழ்ச்சியான சம்பவம் குறித்து குறிப்பிடுகிறார் கெல்ஜி.
thanks BBC Tamil
05.june.2023 



Saturday, June 3, 2023

அதி வேக ஆபத்துகள்: ஒடிசா ரயில்வே தண்டவாளத்தில் சாய்ந்த‌ 3 ரயில்களின் பெட்டிகள்:கவிஞர் தணிகை

 


அதி வேக ஆபத்துகள்: ஒடிசா ரயில்வே தண்டவாளத்தில் சாய்ந்த‌ 3 ரயில்களின் பெட்டிகள்:கவிஞர் தணிகை


அறிவியல் முறைகளில் இளம் விஞ்ஞானிகள் வேகம், கட்டுப்பாடு, விபத்து தடுப்பு கருவிகள் இப்படி நிறைய கண்டறிந்ததாக அவ்வப்போது நாம் படித்து விட்டு கடந்து சென்று விடுகிறோம்.


ஜி.டி.நாயுடுவே இந்த நாட்டின் அறிவியல் அங்கீகாரம் இல்லை என்ற காரணத்தால் தமது கண்டுபிடிப்புகளை ஜெர்மன் போன்ற நாடுகளுக்கு இலவசமாக கொடுத்ததான செய்திகள் உள்ளன‌


என்று இது போன்ற மாபெரும் விபத்துகளை எல்லாம் மனித குலம் தடுக்கப் போகிறது?



3 ரயில்கள், 280பேருக்கு மேலான இறப்புகள், 900 பேருக்கும் மேலானோர் படுகாயம்...இது தற்போதைய நிலவரம் இன்னுமிவை அதிக எண்ணிக்கையாகலாம் சில நாட்கள் ஆகும்போது தெரியவரும். சொல்லத் தரமில்லா சோகம்...இந்த பாரதத் திருநாட்டில் நிகழ்ந்த அவலம்...ஒடிசா, மே.வங்கம், மட்டுமல்ல தமிழ்நாடு, கர்நாடகம் இப்படி அனைத்து மாநிலங்களுக்குமே இது ஒரு அதிர்ச்சி கலந்த பெரும் சோகம்.


இதை எல்லாம் எப்படி இந்த நாடு ஈடு செய்யப் போகிறது? மக்கள் தொகைப் பெருக்கத்தால் மட்டுமேவா?

உயிருக்கு ஈடு என்ன செய்ய முடியும்?

அடுத்து நடக்காத முறையில் இனி மேலுமாவது நல்ல நடவடிக்கைகளில் இறங்குமா? இல்லை இதுவேதான் திரும்புமா? ரயில்வேயில் இது போன்ற மா பெரும் விபத்துகள் ஏற்கெனவே 5 முறை நிகழ்ந்ததாக புள்ளிவிவரங்கள்  சொல்கின்றன....இது 6 ஆம் நிகழ்வு...என்கின்றன செய்திகள்.


என்று தான் திருத்தம் நேருமோ?

எப்படித்தான் இந்த வருத்தம் ஆறுமோ?


மறுபடியும் பூக்கும் வரை


கவிஞர் தணிகை.



பி.கு: பாதிக்கப் பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்ல வழி இல்லை ஆழ்ந்த இரங்கல்களும் இந்த பேரிடரிலிருந்து மீண்டு வர எல்லாம் வல்ல இயற்கையிடம் பிரார்த்தனைகளும்...

, சென்னையில் இருந்து தொடர்புகொள்வோருக்கு ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக 044-25330952, 25330953, 25354771 ஆகிய எண்களையும் 94458 69848 என்ற வாட்ஸ் அப் எண்ணையும் தொடர்புகொள்ளலாம் என தெற்கு ரயில்வே ட்விட்டரில் அறிவித்துள்ளது.

கொல்கத்தா சென்னை கோரமண்டல் ரயில் விபத்து அவசர கால உதவி எண்கள்: 06782-262286 ( ஒடிசா அரசு உதவி எண் ) ரயில்வே உதவி எண்கள்: 033-26382217 (ஹவுரா), 8972073925 (காரக்பூர்), 8249591559 (பாலசோர்) மற்றும் 044- 25330952 (சென்னை)

ஹவுரா-புரி விரைவு ரயில், ஹவுரா-யஷ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ், ஹவுரா சென்னை மெயில், ஹவுரா-புரி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.