Sunday, July 22, 2018

மேட்டூர் அணைக்கு காவிரி அன்னையே: கவிஞர் தணிகை

மேட்டூர் அணைக்கு காவிரி அன்னையே: கவிஞர் தணிகை

Image may contain: mountain, sky, outdoor, nature and water


அப்பாடா ! இந்த நீர் நிரம்பிய காட்சியை பார்க்க எத்தனை நாட்கள், மாதங்கள், ஆண்டுகள் தவம்...இயற்கை மனிதர்களின் மகத்தான கோரிக்கைக்கு செவி சாய்த்திருக்கிறது. மழையாகப் பொழிந்து. குமாரசாமி இனி நம்மைக் கேட்க மாட்டார்களே காவிரி நீருக்காக என அழுததாகக் கேள்வி.

உடனே காலை சுமார் 7.50க்கு நில நடுக்கம், தர்மபுரி, பென்னாகரம்,மேட்டூர், அம்மாப்பேட்டை, தாரமங்களம், நங்கவள்ளி போன்ற பகுதிகளில். வழக்கம்போல சேலம் மாவட்ட தலைமையகத்தில் உள்ள நிலநடுக்க அளவை கருவி பணி செய்யவில்லை...

இயற்கை ஆர்வலர்களும் அறிவியலாளர்களும் சொல்வது போல அணையின் நீர்த்தேக்கத்திற்கும் நில நடுக்கத்திற்கும் தொடர்புள்ளதாகவே இச் செயல் தோன்றுகிறது. ஏன் எனில் பல ஆண்டுகளாக நீர் இல்லாமல் வறண்டு கிடந்த பூமி மேல்  93.47 டி எம் சி...அதாவது கன அடி..ஃக்யூபிக் மெட்ரிக் டன்...இரண்டு கிருஷ்ணராஜ சாகர் அணையின் கொள்ளளவுக்கு இந்த  மேட்டூர் அணை இடம் இருக்குமாம் நீரைத் தேக்கி வைக்க...
Image may contain: sky, mountain, outdoor, nature and water
நாட்டின் மிக முக்கியமான அணைகளில் பிரதானமானது.

இவ்வளவு நீரின் அழுத்தம் உருவானதால் நில நடுக்கம் தோன்றியிருக்கலாம்.

ஜெ நிரந்தரமாக கண்மூட, ஓ.பி.எஸ் பதவி விலக, சசிகலா கர்நாடகா சிறை புக, எடப்பாடி பழனிசாமி, இப்போது எடப்பாடியார் தினகரனின் மிரட்டலுக்கு சாயாமல் அவரை வெளியனுப்பி ஆட்சியை முதல்வர் பதவியைத் தக்கவைத்துக் கொண்டு, ஆண்டுக்கு மேல் ஓ.பி.எஸ் உருவத்தை சிறிதாக்கி போஸ்டரில் தாம் பெரிதாக வளர்ந்து ...1934ல் கட்டிய அணையை 84 ஆண்டுகளில் ஒரு முதல்வர் அணையை திறந்து வைத்தார் என்னும் ஒரு பெயரைப் பதித்துக்க் கொண்டார்....நீர் இப்போது தேவையில்லை என்று ஒரு குரலும், இல்லை இல்லை குறுவை சம்பா பயிற்களுக்குத் தேவைதான் என்றும் கல்லணையிலிருந்து பாசனத்துக்கு நீர் திறப்பு என்ற செய்திகளும் முரண்பட்டாலும் செய்திகளாகின்றன.
Image may contain: people standing, bridge, sky, ocean, outdoor, water and nature
மொத்தத்தில் குடி நீர்,  கால்நடைபருக நீர், பாசனத்திற்கான நீர் எல்லாப் பஞ்சமும் போக இயற்கை அன்னை வழி விட்டிருக்கிறாள். காவிரி கரை புரண்டு தாயின் மடி மேட்டூர் அணையில் சேர்ந்திருக்கிறாள். யோவ் இது தமிழ் நதி அய்யா, இப்போது நிறுத்துங்களேன் பார்ப்போம்...

அட இப்போதும் கூட எங்க பஞ்சாயத்து: வீரக்கல் புதூர் எனப்படும் ஊராட்சி ஒன்றியத்தில் ஆறு அளவு நீர் இருந்தாலும் நாயால் நக்கி நக்கியே குடிக்க முடியும் என்ற பழமொழிக்கேற்ப எங்கள் வீதியில் குடிநீரை மிகவும் அளவாக போதாமல் விட்டு வைத்திருக்கிறார்கள் பாவிகள்...ஒரு பெண் குடிநீர் வேண்டி எங்கள் வீடு வந்து பிடித்துச் செல்லுமளவு...

இவனுங்களை திருத்தவே முடியாதய்யா...

பாலாஜி, பழனி இன்று நில நடுக்கம் வந்ததாம் இல்ல தெரியுமா?

 அந்தப் பெண் சொல்கிறாள்: கேட் எல்லாம் ஆடியது என்று...

பவர் பழனி: சார் காத்து அடித்திருக்கும் ஆடியிருக்கும் சார்,

இல்ல பழனி அவங்க பக்கத்து வீட்டில் மேலே பரணில் வைத்திருந்த டம்ளர் எல்லாம் கீழே விழுந்ததாம்  என்று சொல்கிறாரே...

பாலாஜி: அது பூனை உருட்டி விழுந்திருக்கும் சார்...

பழனியும் பாலாஜியும்: நாங்க கூட ஆடலான்னுதான் பார்க்கிறோம் பசங்க இன்னும்  வரலை...கிரிக்கெட் பந்தை வைத்துக் கொண்டு..

கவலை இல்லாத மனிதர்கள்...எதற்கெடுத்தாலும் காமெடிதான்...

ஏன் எனில் சரியான படிப்பு கூட இன்று மின் வாரிய ஊழியராகிவிட்டார்கள் நிலம் அரசு கையகபடுத்தியதற்கு பதிலாக வாரிசு வேலை பெற்றதால்..

இப்போது மட்டுமல்ல...வேலைக்கு தேர்ந்தெடுக்கப் படும் முன்பே கூட இப்படித்தான் பேசுவார்கள்..நினைத்துக் கொண்டு மறுபடியும் உவந்து சிரிக்கலாம்.... அவ்வளவுதான் வாழ்க்கை...அடுத்த நொடியில் நில நடுக்கம் அதிகமாக கனமாக இருந்தால் நாம் இருக்கிறோமோ என்னவோ? எதற்கு சோகம்...
Image may contain: bridge, sky, outdoor and water
 117 feet at 6. 30 pm on 21.07. 2018.

காவிரியை, அணையை சிறையிட்டு வைத்திருக்கிறார்கள்...இம்முறை மக்கள் அருகே சென்று பார்க்க முடியாது சுவர், கம்பி வேலி...பதினாறு கண்மாய்  பாலம் பூட்டப்பட்டு மத்திய பாதுகாப்புப் படைக் காவலுடன்.எவரும் எப்படியும் காவிரி அருகே அணைப்பகுதியில் நீர் அருகே செல்ல முடியாத நிலை. எட்டி இருந்தே பார்க்குமளவுதான். அப்படி இருந்தபோதும் நீர் ஏற்று நிலையமருகே கடைசியில் பூட்டை தெரிந்தவர் என்றா திறந்து அந்த சிலரை மட்டும் அனுப்பினார் அந்த நபர்...தெரியவில்லை... சட்டம் இந்தையாவில் எப்போதும் அனைவர்க்கும் சமமாக இல்லை....தெரிந்தவர், சொந்தக்காரர், நணபர், அரசியல்வாதி, பணக்காரர் இவர்க்கெல்லாம் மாறுபாடும் ஆளுக்கு ஆள், நேரத்துக்கு நேரம்..

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Friday, July 20, 2018

ரஜினி காந்துக்கும் விஜய்காந்துக்கும் பெரிய வித்தியாசம் இல்லை: கவிஞர் தணிகை.

ரஜினி காந்துக்கும் விஜய்காந்துக்கும் பெரிய வித்தியாசம் இல்லை: கவிஞர் தணிகை.

Image result for rajinikanth and vijayakanth acted together

சினிமா உலகில் விஜய்காந்த் டூப்ளிகேட் ரஜினிகாந்த் என விமர்சிக்கப்பட்ட ஒரு காலம் போய் அவருக்கு என ஒரு தனிப்பாதையை அமைத்துக் கொண்டு சினிமாவில் முன்னேறிய விஜய்காந்த் ரஜினிகாந்துக்கும் முன்பாகவே அரசியலுக்கு வந்து தனிக்கட்சி ஆரம்பித்தார். எதிர்க்கட்சித் தலைவராகவும் ஆனார்.

அவரது கல்யாண மண்டபம் ஒன்றும் சர்ச்சைக்குள்ளானது. அப்போது ஆளும் கட்சியானவர்கள் அதன் பின் இவரிடமே கூட்டணிக்கெல்லாம் முயன்றது காலத்தின் பதிவு. இவ்வளவு செல்வாக்கு பெருகி வரும் சூழலில் தன்னை சிறுத்துப் போகச் செய்தது அவரின் பின் தொடர்ந்த செயல்பாடுகள். மிக வீரமான படங்களை எல்லாம் கொடுத்தும், ஜெ வை சட்டசபையிலேயே நேரடியாக எதிர்த்தவரும் மதுவின் பிடியாலும், உடல் நலம் குன்றியதாலும் பேசவே முடியாத காரணத்தால் ஊடகம், சமூக வலை தளங்கள் மூலம் எள்ளி நகையாடக் காரணமானார்.

மனைவியும், மைத்துனரும் துணையாகி கட்சியை வழி நடத்த, சிங்கப்பூர் எல்லாம் சென்று தேர்தல் காலத்தில் பெரும் தொகை பேரம் பேசியதாக செய்திகள் உலவின. வைகோவால் திமுக கூட்டணிக்கு செல்லாமல் படு தோல்வி அடைந்து கட்சி நிலை நலிவடையும் காலத்துக்கு சென்று கொண்டிருக்க அவர் கட்சியிலிருந்து முக்கியமான உறுப்பினர்கள் எல்லாம் வேறு கட்சிக்குத் தாவி தப்பிப் பிழைத்துக் கொள்ள ஆரம்பித்துள்ளனர்.

அதே போல ரஜினிகாந்தும் எப்போதும் அரசியல் செய்து கொண்டுதான் இருக்கிறார். இவர் மூப்பனாரை நேரடியாகவே ஆதரித்தும், அப்போடைய ஒரு தேர்தலில் இனி மாறுதல் நிகழ வில்லை எனில் ஆண்டவரால் கூட தமிழகத்தைக் காப்பாற்ற முடியாது எனச் சொல்லியும், தேர்தலில் எந்தப் பக்கம் வாக்கு அளிக்க வேண்டும் என்று அறிவித்தும் கலைஞரின் அன்புக்கு பாத்திரமானார்.

இவரின் வீடும், ஜெ வின் வீடும் அதாவது என்றும் முதல்வரான ஜெவின் இருப்பிடமும் ஒரே இடத்தில் இருப்பதால் அதில் முரண்கள் தோன்றி ஆர்ப்பரிக்க வழியின்றி அடங்கியே இருந்தார். மன்னன் போன்ற படங்கள் அதன் பிரதிபலிப்பு எனச் சொல்வாரும் உண்டு.

இங்கும் இவரது மனைவி சொல்லே மந்திரம் என்பது போல அங்கே பிரேமலதா விஜய்காந்த் போலவே இங்கே லதா ரஜினிகாந்தின் வழிமுறைகள் இவரையும் வழி நடத்துவதாகவே சம்பவங்கள் சாட்சிகள்.

இப்போது அமித் ஷா விடம் ஆயிரம் கோடி ரூபாய் கேட்டு அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி  அப்படிக் கொடுத்தால் பாரதிய ஜனதாவுடன் ஒத்துழைப்பு செய்வதாகவும் இல்லையேல் விட்டு விடுங்கள் எனப் பேசியதாகவும் செய்திகள் உலவுகின்றன.

ஆக என்னதான் நடக்கிறது என்று பார்த்தால் விஜய்காந்த் போன அதே வழித்தடத்தில் தாம் ரஜினிகாந்தும் சென்று வருகிறார் என்பதை ஒப்பீடு செய்வார்க்குப் புரியும். இவருக்கும் ராகவேந்திரா திருமண மண்டபம் உண்டு. அதே போல கட்சி, அரசியல், அப்படி இப்படி என எட்டு வழிச்சாலை பரவாயில்லை, போலீஸ் தரப்புக்கு சாதகமாக பேசுவது என்றெல்லாம் குளறுபடிகள் இவரிடமும் உண்டு. அவர் மேடையில் உளறுவார். இவர் மேடை இல்லாமலே உளறுகிறார் . எனவே இருவருமே ஒரே வழிப்பயணத்தில் இருப்பதை அனைவரும் காணலாம்.

சிலவற்றுக்கு கருத்தே தெரிவிக்க மாட்டார். கருத்து தெரிவித்தார் என்றால் அது மிகவும் சமுதாய நெருடல்களை , முரண்பாடுகளுடன் இருப்பது அவரின் நிலைப்பாடே தவிர சமுதாயமேம்பாட்டுக்கான, அல்லது மக்கள் நலம் சார்ந்ததாக ஊன்றிப் பார்த்தால் இருக்காது.

ஓடாத படங்களை  ஓடவைக்க நிறைய பட்ஜெட்டில் படம் எடுக்க, தமிழ் சினிமாவின் அதிகம் பணம் வாங்கும் நடிகராக இன்னும் இருக்கிறார் என்றாலும் முதல்வராகவோ ஒரு கட்சிக்கு ஏற்ற தலைமைப் பண்புகள் கொண்டாராகவோ சினிமாப் பின்னணி அல்லாமல் ஆன்மீகப் பயண அனுபவங்கள் வேறு அவரிடம் சிறப்பு இயல்புகள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.

கமல் ஹாசனாவது கருத்துகளைத் தெரிவிக்கிறார். மக்களின் பக்கம் நிற்கிறார் ஆனால் அவரின் பக்கம் ரஜினிகாந்த் இடம் சேரும் கூட்டம் அளவு இல்லை என்கிறார்கள்...இவர் தனக்கில்லாத தகுதி கமல்ஹாசனிடம் இருப்பதை தெரிந்து கொண்ட பின்னும் அவரையாவது ஆதரிக்க தமது கூட்டத்தாரிடம் சொல்லலாம்...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Tuesday, July 17, 2018

புலை நாற்றம்: கவிஞர் தணிகை

புலை நாற்றம்: கவிஞர் தணிகை

Image result for bad smell and traveller

இப்போதெல்லாம் எதையாவது பார்த்து அதில் ஆழ்ந்து விடுகிறேன்...உடனே இராமலிங்க வள்ளலாராக மனம் உருகி விடுகிறது. தலை வலிக்க ஆரம்பிக்கிறது..பேருந்து நிலையங்கள், புகை வண்டி நிலையங்கள்: எல்லாவற்றிலும் சகித்துக் கொள்ள முடியாத மானிடங்கள். உடனே அன்னை தெரஸா நினைவிறங்கி இவர்க்கெல்லாம் என்ன, எப்படி உதவப் போகிறோம் என்ற எண்ணங்கள் ஆலோலம் போடுகிறது.

இன்று மேட்டூர் ரயிலில் ஏறிய உடன் புலை நாற்றமெடுக்க ஒரு மனிதன் கடைசிப் பெட்டியில் வழக்கமாக நான் இறங்குவதற்கு வசதியாக ஏறும் பெட்டியில் ஒரு பெரிய சீட் முழுதும் படுத்துக் கிடந்தான்.

ஒரு பக்கம் தாள முடியவில்லை. எங்கே போக வேண்டும் எனக் கேட்டேன். சரியாக சொல்லவில்லை. நானே மேட்டூரா எனக் கேட்டுவிட்டு எனது  பையை மற்றொரு இருக்கையில் வைத்துவிட்டு கீழ் இறங்கி நின்று கொண்டேன்.

கண்ணில் பார்த்ததால் உருவாகும் வேதனை, பார்க்காதிருந்திருந்தால் இருந்திருக்காதே...அதே இன்னும் கொஞ்சம் காலம் தாழ்ந்து வந்திருந்தால் இந்த அலைக்கழிப்பு எண்ணம் எல்லாம் தோன்றியே இருக்காதே...மேலும் அந்த இருக்கையை பயன்படுத்தினாலும் கண்ணுக்குத் தெரியா கிருமிகள், வைரஸ்கள் அதைப் பயன்படுத்துவாரையும் ஒட்டிக் கொள்ள வாய்ப்பிருக்கலாமே... என்றெல்லாம் நினைவோட்டம்...

காலம் நகர ஆரம்பித்தது. மறுபடியும் அந்த மனிதன் மணி எத்தனை , ரயில் எத்தனை மணிக்கு கிளம்பும் என கேட்டான். சொன்னேன். சிறிது நேரத்தில் மாணவர்கள் வர ஆரம்பித்தனர்.

அந்த மனிதன் மெதுவாக எழுந்து ஒரு காகித பெப்ஸி டப்பாவுடன் குடி நீர்க் குழாயருகே சென்று விட்டு மறைந்து போனான்.
அவன் மேட்டூர் ரயில் பயணியாக காட்டிக் கொண்டது பொய் என்பது புரிந்து போனாலும் இது போன்ற முகங்களும், மனிதர்களும் நிறைய நிறைய இப்போதெல்லாம் பொது இடங்களில் திரிவதை, உழல்வதை பார்க்கத் தாளமுடியவில்லையே என்றாலும் நாமும் இந்த உருப்படி இல்லா சமூகத்தில் மகனை உருப்படி ஆக்குவதற்காக ஒரு கல்வி நிறுவனத்தில் பணி செய்து உடலை உயிரை உருக்கி வாழ்பவன் தானே என்று பார்க்க நினைக்க ஆரம்பிக்கும்போதே ஹோசிமின்னாக நாமும் விளங்கி  நாட்டுக்கெல்லாம் ஒரு நல்ல தலைமையைத் தர மாட்டோமா என்று ஒரு கேள்வியும் உதி(ர்)த்தபடியே நாட்கள் போய்க் கொண்டிருக்கிறது.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Saturday, July 14, 2018

நன்றி கலையகம் அன்பரசன்: கவிஞர் தணிகை

NGO Sector, The Trojan horse of capitalism - ஒரு துண்டுப்பிரசுரம்

Image result for ngo

------------------

"அரசு சாரா நிறுவனங்கள்" (NGO) என்றால் என்ன? எதற்காக மேற்கத்திய நாடுகளின் அரசுகளும், முதலாளிகளும் அந்த அமைப்புகளுக்கு நிதி கொடுத்து வளர்க்கிறார்கள்?

நூலில் உள்ள விபரங்கள் சுருக்கமாக:

தேர்தல்களால் மாற்றம் வரும் என்றால் தேர்தல் நடத்துவதை தடை செய்து விடுவார்கள் என்று சொல்லப் படுவதுண்டு. அந்தக் கூற்று NGO க்களுக்கும் பொருந்தும். உலக நாடுகள் ஒவ்வொன்றிலும், இந்த "அரசு சாரா" நிறுவனங்களை, நடைமுறையில் உள்ள அரசுகள் சகித்துக் கொள்வதன் காரணம் என்ன?

NGO என்பது, அரசு, நீதித்துறைக்கு அடுத்ததாக, ஜனநாயகத்தின் மூன்றாவது அமைப்பாக கருதப் படுகின்றது. அதிகாரம், அடக்குமுறை, வறுமை போன்றவற்றுக்கு எதிராக NGO க்கள் போராடுவதாக காட்டப் படுகின்றது. உண்மையில், இது முதலாளித்துவத்தின் இன்னொரு ஏமாற்று வேலை. தேர்தல்கள் மூலம் மக்களுக்கு தெரிவு செய்யும் சுதந்திரம் இருப்பது போன்ற மாயை உருவாக்கப் பட்டுள்ளது. அதே மாதிரி, NGO க்கள் சமூகத்தை ஜனநாயக மயப் படுத்துவது போன்ற மாயை உண்டாக்கப் படுகின்றது.

NGO என்ன செய்கிறது? அரசுக்கும் மக்களுக்கும் நடுவில் மத்தியஸ்தம் வகிப்பதாக காட்டிக் கொள்கிறது. இதன் மூலம் அரசுக்கு எதிரான மக்களின் கோபங்களை தணிக்க உதவுகிறது. அரச எதிர்ப்பு சக்திகளை சட்டபூர்வமான, அமைதியான, கட்டுக்கோப்பான அமைப்பாக மாற்றுகின்றது. 

இதன் மூலம், மக்களை முதலாளித்துவ ஆதரவாளர்களாக மாற்றுவதுடன், ஆளும் வர்க்க கருத்தியல்களை ஏற்றுக் கொள்ளவும் வைக்கிறது. மேற்கத்திய நாடுகளில் NGO க்களின் தாக்கம் மிகக் குறைவாக இருந்த போதிலும், பிற உலக நாடுகளில் அவற்றின் ஆதிக்கம் அளவிட முடியாதது.

அரசு சாரா நிறுவனங்கள் என்று சொல்லிக் கொண்டாலும், அவற்றிற்கு கிடைக்கும் நிதியில் ஒரு பகுதி அரசிடம் இருந்து வருகின்றது. பல வகையான NGO க்கள் உள்ளன. தொண்டு நிறுவனங்கள் மட்டுமல்லாது, அதிகாரத்தை கட்டமைப்பவை, உள்நாட்டு, சர்வதேச NGO க்கள் என்று பல வகையானவை. 

NGO என்றால் என்ன என்ற கேள்விக்கு, "ஒரு தனியார் தொண்டு நிறுவனம்" என USAID கூறும் வரைவிலக்கணம் சர்ச்சைக்குரியது. அதை ஏற்றுக்கொள்ள முடியாத காரணம், அரசுகளும், கார்ப்பரேட் நிறுவனங்களும் அவற்றிற்கு உதவுவதால் மட்டும் அல்ல. ஒரு NGO அமைப்பு, மனேஜர்கள் போன்ற சம்பளத்திற்கு வேலை செய்யும் ஊழியர்களையும், இலவச தொண்டு வேலை செய்யும் களப் பணியாளர்களையும் கொண்டுள்ளது.

1945 ஆம் ஆண்டு எழுதப் பட்ட ஐ.நா. சாசனத்தில் தான் NGO பற்றிய குறிப்புகள் வருகின்றன. இருப்பினும், உலகில் மிகப் பழமையான NGO, 19 ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் உருவாக்கப் பட்ட சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஆகும்.

இந்த NGO க்களுக்கான நிதி எங்கிருந்து வருகின்றது? உலகளவில் கார்ப்பரேட் நிறுவனங்களும், அரசுகளும் நிதி கொடுக்கின்றன. அதே நேரம், கிறிஸ்தவ, இஸ்லாமிய, யூத மத அமைப்புகளும் சிறியளவில் நிதி வழங்குகின்றன. முதலாளிகளையும், அரசையும் பின்பற்றி, மத நிறுவனங்களும் தமது செல்வாக்கை பயன்படுத்த விரும்புகின்றன.

சர்வதேச மட்டத்தில், அநேகமாக நீங்கள் கேள்விப் பட்ட எல்லா பெரிய நிறுவனங்களும், NGO க்களுக்கு நிதி வழங்கும் அமைப்புகளை கொண்டுள்ளன. Microsoft, Monsanto, Nike, Ford, Starbucks... இது போன்ற பெரும் முதலாளிய நிறுவனங்கள் மட்டுமல்லாது, தனிப்பட்ட செல்வந்தர்களும் நிதி வழங்குகின்றனர். பில் கேட்ஸ், ஜோர்ஜ் சோரோஸ், ரொக்கபெல்லர் என்று பலரைக் குறிப்பிடலாம்.

கார்ப்பரேட் நிறுவனங்கள் ஏழைகள், சிறுவர்கள், நோயாளிகள் போன்றோருக்கு உதவும் திட்டங்களை செயற்படுத்துவதன் நோக்கம் என்ன?  சமூகத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு உதவும் பொறுப்புள்ள நிறுவனங்கள் என்று காட்டிக் கொள்கின்றன. இந்த நற்பெயர், மக்கள் அவர்களது உற்பத்திப் பொருட்களை பெருமளவில் வாங்க வைக்கும். அதனால் அதிக இலாபம் கிடைக்கும்.

ஆப்பிள் நிறுவனம் ஆசிய நாடுகளில் இலட்சக் கணக்கான தொழிலாளர்களை சுரண்டுகின்றது. அவர்களை நாளொன்றுக்கு பதினான்கு மணித்தியாலம் வேலை செய்ய வைத்து கசக்கிப் பிழிகிறது. ஒரு ஐபோனின் விலை தான், அதைச் செய்யும் தொழிலாளியின் ஒரு வருடச் சம்பளமாக இருக்கும். ஆப்பிள் நிறுவனம் மலேரியா தடுப்பு மருந்துக்கு கொஞ்சப் பணத்தை நன்கொடை வழங்குவதால், இந்தக் கொடுமைகள் மறைக்கப் படுகின்றன.

வளர்ந்து வரும் நாடுகளுக்கு, கார்ப்பரேட் நிறுவனங்கள் வழங்கும் குறுகிய கால உதவிகள் மூலம், அந்தப் பிரதேசங்களை அபிவிருத்தி அடைய விடாமல் பார்த்துக் கொள்கின்றன. இதனால் அவை என்றென்றும் மேற்கத்திய நாடுகளில் தங்கியிருக்கும். கார்ப்பரேட் நிறுவனங்கள், அந்த நாடுகளின் வளங்களை இரக்கமற்று சுரண்டிக் கொண்டிருக்கின்றன. இதனால் அபிவிருத்தி தடைப் படுவதுடன், NGO நிறுவனங்களின் கருணையில் தங்கியிருக்க நிர்ப்பந்திக்கப் படுகின்றன. இதனால்,வறுமை, பட்டினி, நோய்கள், எழுத்தறிவின்மை போன்றவற்றை ஒழிப்பதற்கான மக்களின் போராட்டத்தை தகர்க்கின்றன.

எதற்காக முதலாளிகள் NGO நிறுவனங்களுக்கு நிதி வழங்குகிறார்கள்? முதலாளித்துவ பொருளாதார விதியின் படி பார்த்தால் இது ஒரு "மீளப் பெறப் படாத செலவு". அதாவது, ஒரு வணிக நிறுவனத்தின் ஒரு பகுதி உற்பத்தி செலவுக்கும், இன்னொரு பகுதி மீள் முதலீட்டுக்கும் செலவாகிறது. இதில் இலாபம் தனியாக ஒதுக்கப் படுகின்றது. அப்படியானால், எதற்காக முதலாளிகள் தமது இலாபத்தின் ஒரு பகுதியை தொண்டு நிறுவனங்களுக்கு செலவிடுகிறார்கள்?

தொண்டு நிறுவனங்களுக்கு அள்ளிக் கொடுக்கும் முதலாளிகள் கொடை வள்ளல்கள் என்று சமூகத்தில் படம் காட்டப் படுகின்றது. ஆனால், இது ஒரு கொடை அல்ல. அவர்களது வர்த்தகத்தை உறுதிப் படுத்தவும், எதிர்கால இலாபத்தை நிச்சயப் படுத்துவதற்குமான முதலீடாக அந்தப் பணம் செலவிடப் படுகின்றது. இதனால் கிடைக்கும் இலாபம் நீண்ட கால நோக்கிலானது.

NGO நிறுவனங்கள், முதலாளித்துவ சமுதாயத்தின் மீதான நன்மதிப்பை உருவாக்கி, முதலாளித்துவத்தை நிலைநிறுத்துகின்றன. ஜனநாயகமயப் படுத்தலுக்காக, பொருளாதார சுதந்திரத்திற்காக பாடுபடும் NGO க்களுக்கு கார்பரேட் முதலாளிகள் அள்ளிக் கொடுப்பதும் காரணத்தோடு தான். பொருளாதாரத்தை மறு கட்டமைப்பு செய்வதன் அர்த்தம், உற்பத்தி, தொழிலாளர் உரிமைகள், ஏகபோகம் போன்ற விடயங்களில் மிகக் குறைந்தளவு கட்டுப்பாடுகளை கொண்டு வருவது தான். இதனால், பெரும் முதலாளிகளுக்கு மிகப் பெரும் செல்வம் செல்வம் சேர்வதுடன், உழைக்கும் வர்க்கத்திற்கு அவலங்களும் உண்டாகும்.

அரசு எதற்காக NGO க்களுக்கு உதவுகின்றது? நடைமுறையில் உள்ள அரசு, பணக்காரர்களை பாதுகாப்பதையும் அவர்களது நலன்களை உறுதிப் படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. அரசானது, வன்முறை மீது ஏகபோக உரிமை பாராட்டுவதுடன் அடக்குமுறையையும் ஏவி விடுகின்றது. இன்றுள்ள முதலாளித்துவ சமூக அமைப்பை பாதுகாக்கும் நோக்கில் அரசு NGO க்களுக்கு நிதி வழங்குகின்றது. அரசு உறுதியாக இருந்தால் தான், அது பணக்காரர்களுக்கு சேவை செய்ய முடியும்.

NGO க்கள் முன்னெடுக்கும் "போராட்டம்" என்றைக்குமே அரசுக்கு அச்சுறுத்தலாக இருக்கப் போவதில்லை. அவர்கள் வீதியில் இறங்கிப் போராடுவதில்லை. வன்முறை பிரயோகிப்பதில்லை. அத்துடன், மையப் பிரச்சினைகள் பற்றிப் பேசுவதில்லை. பாராளுமன்றத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசும் அளவிற்கு கோபத்துடன் இருப்பவர்களை, NGO க்கள் தம்முடன் சேர்த்துக் கொண்டு அஹிம்சா வழியில் போராடுமாறு சொல்லிக் கொடுக்கின்றன. அவர்களை கோட்டு சூட்டு போட்ட அலுவலகப் பணியாளர்களாக, அறிக்கைகள் எழுத வைக்கின்றன.

எந்த NGO வும் புரட்சிகரமாக செயற்பட முடியாது. அது தனது கணக்கு அறிக்கைகளை தயாரிப்பதிலும், அடுத்த வருடத்திற்கான நிதியை பெற்றுக் கொள்வதிலும் அதிக கவனம் செலுத்துகின்றது. நிதியின்றி எந்த NGO வும் இயங்க முடியாது. அரசும், கார்பரேட் முதலாளிகளும் புரட்சிகர NGO வுக்கு நிதி வழங்க மாட்டார்கள். சுருக்கமாக, ஒரு NGO வின் செயற்பாடுகளும், போராட்டங்களும், அந்த நாட்டின் சட்டங்களுக்கு உட்பட்டதாக அமைய வேண்டும்.

சட்டங்களுக்குள் அனுமதிக்கப் பட்ட போராட்டம் வெற்றி காண முடியாது. அது எப்போதும் அதிகார வர்க்கத்துடனான சமரசப் பேச்சுவார்த்தைகளில் தான் முடியும். அரசாங்கத்தையும், அதன் சட்டங்களையும் எதிர்க்கும் NGO போராட்டம் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மட்டுமே அனுமதிக்கப்படும். ஆனால், அது அதிகாரத்தை முழுமையாக கேள்விக்குட்படுத்த மாட்டாது. அரசைக் கவிழ்க்க நினைக்கும் NGO சட்டப் படி பதிவு செய்ய முடியாது. சமூகத்தில் NGO எந்த மாற்றத்தையும் கொண்டு வர முடியாது என்ற நம்பிக்கையில் அரசாங்கம் அமைதியாக ஆட்சி செய்கின்றது.

பிற்குறிப்பு: 
துண்டுப்பிரசுரம் போன்ற இந்த சிறு நூல், (முன்னாள் யூகோஸ்லேவிய குடியரசான) மசிடோனியாவில் உள்ள Crn Blok என்ற இடதுசாரி (Anarchist) அமைப்பால் வெளியிடப் பட்டுள்ளது.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Sunday, July 8, 2018

...நல்லதுதான் திரும்ப அழைக்கும் உரிமையும் வரட்டுமே: கவிஞர் தணிகை

 ...நல்லதுதான் திரும்ப அழைக்கும் உரிமையும் வரட்டுமே: கவிஞர் தணிகை


Image result for indian parliament election 2019


நாடு தேர்தலை நோக்கி மறுபடியும் அடி எடுத்து வைக்கிறது...வீட்டு வாசலுக்கு வாக்கை சரி பார்க்கும் ஆசிரியர்  காலை வந்து சென்றார்.பிரதமர் மோடி சுமார் 800 ஐ.ஏ.எஸ்களை நாடு தழுவிய அளவில் சுமார் 117 மாவட்டங்களில் உள்ள மிகவும் பின் தங்கிய பகுதிகளுக்கு அனுப்பி அதுவும் ஆகஸ்ட்  15க்குள் அனுப்பி அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்ய இருப்பதாக செய்திகள் வந்திறங்கியுள்ளன. எப்படி ஒரு மாதத்தில் இது போன்ற ஒரு பெரிய குறிக்கோளை நிறைவேற்றப்போகிறார்கள் என்பது பெரிய கேள்விக்குறி...தேர்தல் நோக்கிய அறிகுறி...கேலிக்குறியும் கூட.


மேலும் மத்திய மாநிலத் தேர்தலை ஒரு சேர நடத்துவது பற்றியும் கருத்துகள் மாநிலம் வாரியாக முதல்வர்களிடமும், கட்சிகளிடமும் கேட்கப்படுகின்றன. இச்சூழலில் அவரவர்களும் அவர்களுக்கு சாதகமான பதிலை வேண்டும் வேண்டாம் எனத் தெரிவித்து வருவதாக நிலை .

சுமார் 70 வயதுக்கும் மேலான எனது நண்பர் இது போல மாநில மத்தியத் தேர்தல்கள் ஒரு சேர நடத்தப்பட்ட காலம் இருந்ததுதான் என்கிறார். மக்கள் தொகையை கணக்கில் கொண்டு இது நடத்த முடியாதது என்றெல்லாம் சொல்வதில் பொருள் இல்லை. அறிவியல் முன்னேற்றம் எல்லாவற்றையும் கடந்த நிலையில் இன்னும் வளர்ந்தபடியே உள்ளது.

தேர்தல் ஆணையம் ஒரே நேரத்தில் ஒரு சேர அப்படி மாநில மத்தியத் தேர்தல்களை நடத்த சாத்தியமில்லை, அதற்கான சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தால் நடத்தலாம் என்கிறது. அந்த சட்டத்தை மத்திய அரசு கொண்டு வரட்டும். தேர்தலை அப்படியே நடத்தவும் செய்யட்டும் அதில் எல்லாம் எந்தத் தவறும் இல்லை. ஆனால் மோடி அரசு வாக்கு எந்திரங்களைத் தவறாக பயன்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டின் கறைகளை எல்லாம் கழுவி தூய்மையாக துடைத்து இந்த தேர்தலை நடத்த வேண்டும்

நாடு முழுதும் ஔரஙக சீப் ஆட்சி புரிந்தது போல ஒரே ஆட்சி மோடி ஆட்சியாக இருக்க வேண்டும் என்ற பேரவா இருக்கிறது இந்த ஆளும் கட்சி அரசுக்கு என்ற குற்றச் சாட்டுகளும் இல்லாமல் இல்லை அவற்றிடமிருந்து எல்லாம் வெளி வந்து இந்தத் தேர்தல் நடத்தப்பட வேண்டியதுவே ஒரு ஜன‌ நாயக ஆட்சிக்கு  ஒர் ஜனநாயக நாட்டுக்கு அழகு.

ஆனால் கட்சிகள், வேட்பாளர்கள் செலவு செய்யக் கூடாது. அரசே வேட்பாளர்களின் செலவை ஏற்றுக் கொள்ள வேண்டும், தவறும் வேட்பாளர்களை கட்சிகளை தேர்தல் களத்தில் இருந்தே தூக்கி விசிறி எறிந்து விட உறுதியான நடவடிக்கை வேண்டும்.

அடுத்து ஊழல், இலஞ்சம், வருவாய்க்கு மீறிய சொத்து என்பது ஒவ்வொரு ஆண்டும் பதவியிலிருப்பார், அவர்கள் உறவுகள், அவர்கள் பினாமிகள் என்னும் பார்வையில் போர்வையில் எவராவது இருந்தாலும் நிரூபிக்கப்பட்டால் அவர்களை 'திரும்ப அழைக்கும் உரிமையும்" மக்களின் வாக்குகளுக்கு வழங்கப்பட வேண்டும்.

இதெல்லாம் செய்ய முடியாததல்ல. செய்யும் அக்கறை உடையார் மட்டுமே நாடாளும் அருகதையுள்ள பதவிக்கே வர வேண்டும். இராதா கிருஷ்ணன் நகர் நடந்த தேர்தல், மற்றும் இடைத்தேர்தல்  , பொதுத் தேர்தல்கள் போன்றவற்றில் செலவிடும் சட்டத்துக்கு புறம்பான தொகையை மக்களிடம் திருப்பி விடும் தொகையை தடுத்து நிறுத்துமளவு தேர்தல் ஆணையத்துக்கு  வசதி வாய்ப்புகளோ சட்ட அங்கீகாரமோ இல்லை என்கிறார்கள் தேர்தல் முன்னால், இந்நாள் ஆணையர்கள் அவை அவர்களுக்கு இருக்க சட்ட வரைவுகள் கொண்டு வரப்படல் அவசியம்

ஆக  ஒரு சேர தேர்தல் நடக்கட்டும், அது சாதி மதமாச்சர்யங்கள் கடந்து மக்களுக்கு சேவை செய்த செய்யும் ஆட்சியாக  நல்ல வேட்பாளர்களைக் கொண்டு மலரட்டும்....


Related image

ஆனால் இதெல்லாம் நடக்கும் என்கிறீர்கள்?

பார்ப்போம் இனி வரும் எதிர்காலத்தை மேல் மேலான சுவையான செய்திகளுடன்...

                                      மறுபடியும் பூக்கும் வரை
                                            கவிஞர் தணிகை.

Saturday, June 30, 2018

வாழ்க வாழ்க மணப்பெண்ணே நீ காலமெல்லாம்... கவிஞர் தணிகை

  உஷார்
Image result for beautiful trees in the world

 நீ ஒரு சிறுமியாக‌
என் வீட்டுள் புகுந்தாய்!

அன்று முதல் என்னுள்
நான் உன்னுள்

பசுமையாக நினைவிருக்கிறது
அந்த நாள் நேற்று நீ வந்தது போல‌
ஆனால் 20 ஆண்டுக்கும் மேலா ஓடிவிட்டது?

இன்று அவர்கள்
உன்னுடன் இருக்கிறார்கள்

நான் இல்லை ஏன் எனில்
உள்ளிருப்பது
வெளியே தெரியாதென்பதால்
Image result for beautiful trees in the world
 நீ இன்று புது வாயில் முன் நிற்கிறாய்

அது நாங்கள் ஏற்கெனவே கண்டதுதான்
ஆனாலும் உனக்கிது புதிதே எனவே...
உடன் நாங்களும் இருந்து வழி அனுப்ப வேண்டிய
கடமை உள்ளதுதான்...

ஆனால் அதற்கு எனக்கு வழி இல்லை

"மனமிருந்தால் மார்க்கமுண்டு" என்பார்
இங்கு மனமிருக்கிறது
மார்க்கம் தான் இல்லை"
Image result for beautiful trees in the world
இன்று மணப்பெண்ணாய்
நாளை முதல் அவர்கள் குடும்ப விளக்காய்!

என்றாலும்
நீ
எங்கள்
"சுடராக"
குடும்ப விளக்காக குலம் விளங்க‌
வாழ்வின் தொடரில் வண்ண மிகு
காலப் பெட்டகம்
ஏந்த‌

பவன்குமார்
கரம் பற்றி
புவனமெங்கும் வாழ்த்த வாழும்

உன்னை என்றும் வாழ்த்தும்

எங்கள் வாழ்த்துகள்
Related image
அன்புடன்
கவிஞர் தணிகை
த.சண்முகவடிவு
த.க.ரா.சு. மணியம்.

02 07 18 ஜே.எஸ்.ஆர் கல்யாண மண்டபம்
ஜம்பகாதமா  சுவாமி கோயில் பேன்னர் கட்டா பெங்களூர்.

Thursday, June 28, 2018

நாகாவின் நூலிலிருந்து: கவிஞர் தணிகை

Image may contain: 3 people, people smiling

 நாகாவின் நூலிலிருந்து: கவிஞர் தணிகை

விடியல் நண்பர்கள் குழு கடந்த 24 ஜூன் 2018ல் என்னை அழைத்து நட்புச்சூரியன், வாழ்வியல் வழிகாட்டி என்ற நினைவுப்பரிசை வழங்கிய அதே நாளில்  "புறம் கட உள் பார்க்க, புறம் கட கடவுள் பார்க்க" என்ற தலைப்பில் நான் ஆற்றிய உரை வீச்சுக்காக ஒரு நினைவுப்பரிசை வழங்கினார்கள் . அது எங்களது கல்லூரி நண்பர் மட்டுமல்ல எங்களது ஊர்க்கார நண்பர் நாகா எழுதி வெளியிட்டுள்ள "நூலிலிருந்து"  கை ராட்டை காந்தி, பாரதி, பகத் சிங் புத்தக அடுக்கு அட்டைப்படத்துடன் 288 பக்க நூலை பரிசாக அளித்தார்கள். இது கோவை பி.எஸ்.ஜி கல்லூரி வளாகத்தில் எமது நண்பர்கள் முன்னிலையில் நாஞ்சில் நாடன் அவர்களை வைத்து வெளியிடும்போது இதன் விலை ரூ.150 என 20 நூல்களை வாங்கிய எனதருமை நண்பர் விடியல் குகன் என்னிடமும் கொண்டு வந்து ஒரு பிரதியை சேர்த்தி இருக்கிறார். இதன்  விலை ரூ.200 ஆகும். முதல் பதிப்பு ஜூன் 2018.

இதை பாலமலை முகாமில் கிடைத்த நேர இடைவேளையில் படித்து முடித்துவிட்டேன்.

1992 என நினைக்கிறேன். எனது முதல் புத்தகம் "மறுபடியும் பூக்கும் " என்ற கவிதை நூலை முறைப்படி மேட்டூர் தமிழ் சங்கம்  கோ.பெ.நாராயணசாமி, தமிழருவி மணியன், கோனூர் பெருமாள், சிந்தனையாளர் அர்த்தனாரி (இதில் பின் சொன்ன இருவரும் இப்போது இந்த மண்ணில் இல்லை.) ஆகியோர் முன்னிலையில் வெளியிடும்போது, எனக்கும் சொந்த மண்ணுக்கும் நிறைய பிடி விட்டுப் போயிருந்தது, இந்தியா எங்கும் சுற்றி மலை மலையாக காடு காடாக நாடு நாடாக சுற்றித் திரிந்து ஏராளமான அனுபவம் கற்று ஆனால் எல்லாத் தொடர்பையும் அற்று இருந்ததால், இதே நாகா அதாவது நாகச் சந்திரன் இந்த நண்பர், ஓ. தணிகை என்பது நீங்கள்தானா? என வியப்பெய்தினார். என்னுடன் தன் மேலுணர்வற்று வந்து பேசி மகிழ்ந்தார்.

அதன் பின் மறுபடியும் பல்லாண்டு ஓடிய பின் இவர் பெரிய மனிதராக மாறிய பின் தமது குடும்பத்தாருடன் கரூரில் விடியல் நண்பர்கள்  முதல் சந்திப்பில் அதாவது கடந்த ஆண்டில் 11.06.2017ல் எனது உரை அப்போது: "நெட்டை மரங்களென நின்றார்" ...அன்று மற்றும் எனது 3 நூல்களை தமது பெண் ஸ்ருதி மூலம் வாங்கிக் கொண்டார்.

ஸ்ருதி அப்போதே மிகவும் பண்பட்ட நிலையில் இருந்தார். மிக அரிய பெண்களுள் அவர் ஒருவராக இருப்பார். அவர் பேரில் இப்போது ஒரு பதிப்பகத்தை கோவை 641 014ல்  துவங்கி தமது முதல் நூலான "நூலிலிருந்து" என்ற ஒரு அனுபவச் செறிவான நூலை  நூலிழை அறுந்து போகாமல் அழகான ஆடையாக‌ வழங்கியிருக்கிறார்.இவருடைய அலைபேசி: 91 98422 06002 மற்றும் 91 98422 04002. இவருக்கும் எம் குடும்பத்தாருக்கும் இடையே உள்ள இன்னொரு ஒற்றுமை இரு சாரருமே நெசவு அல்லது நெசவாளிக் குடும்பம் சார்ந்தாரே. நான் சொல்வது ஒரே குலம் சாதி என்ற பொருளில் சொல்லப்படுவதல்ல என்பதை எனது ப‌

ஒவ்வொருவரும் வாழ்நாளில் ஒரு புத்தகத்தையாவது இந்த சமூகத்தை நோக்கி வழங்கிச் செல்ல வேண்டும் எனச் சொல்வார் ஆன்றோர். இவர் இப்போது ஆரம்பித்திருக்கிறார்.இனிமேல் இவரிடமிருந்து நிறைய எதிர்பார்க்கலாம் என்று நினைக்கிறேன்.

ஒரு புத்தகம் படிக்கும்போதும்,ஒரு  திரைப்படம் பார்க்கும்போதும் நாமும் நாயக நாயகி பாவத்திலிருந்தே துய்ப்பதால் நமக்கு அது ஒரு இலயிப்பை ஏற்படுத்தி விடுகிறது என்பது அனைவரும் ஏற்றுக் கொள்ளும் நிலை.

அப்படி இந்த நூலை நான் எந்த இடையூறும் இன்றி முழுதாக வீட்டில் இருந்தாலும் கூட படித்திருக்க மாட்டேன்.  அதற்கேற்ற சூழல் கால அளவு பாலமலை முகாமில் எனக்கு கிடைத்ததால் அனேகமாக ஒரே நாளில் படித்து முடித்து விட்டேன். மேலும் அதில் எனதுருவமும் அதிகமாகத் தெரிந்தது பகத் சிங், பாரதி, , காந்தி ஆகியோரைத் தொட்டுச் செல்லும்போது.

48 கட்டுரை அல்லது சிறு சிறு கட்டுகளாக இந்த நூலைக் கட்டி இருக்கிறார். அச்சுப்பிழையை கண்டுபிடிக்க இன்னொரு முறை படிக்கலாமா என யோசித்திருக்கிறேன்...அவ்வளவு நேர்த்தியாக அச்சிடப்பட்டிருக்கிறது.

அடியேனும், விடியல் குகனும், கல்லூரிப் பருவத்தில் விடியல் என்ற கையெழுத்துப் பிரதி எழுத ஆரம்பித்த போது இவரும் ஒரு பிரதியை ஆரம்பித்து நடத்தினார். மேலும் எமது கல்லூரியும் எங்களை எல்லாம் இணைத்து ஒரு அச்சுப்பத்திரிகை கொண்டு வந்ததாக நினைவு. அதற்காக ஒரு போட்டி வைத்து அதில் எனது "உழைப்பு" என்ற கவிதை முதல் பரிசுக்குரிய கவிதையாக தேர்ந்தெடுக்கப்பட்டதும் அந்தக் கவிதையை கல்லூரி நிர்வாக பத்திரிகை குழுவினர்க்கு விடியல் குகன் அவர்களே கொண்டு சேர்த்தார் என்பதையும் என்னால் இப்போதும் நினைவு கூர முடிகிறது.

தொழில் சார்ந்தும், இலக்கிய ஆர்வம், பொதுவெளிக்காகவும் நிறைய மனிதர்களுடன் சேர்ந்து பழகியிருப்பதும் அதில் ஒர் நாகரீகம் மிளிர்வதையும் நிறைய அதற்காக பயணங்கள் மேற்கொண்டிருப்பதையும் இவர் தமது எழுத்துகள் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார்.

வாட்ஸ் ஆப்...கட்செவித் திரட்சி ....மூலம் நூல்களைப் பற்றி இவர் நிறைய ஆய்வு செய்து அனைவரிடமும் அந்த நூல்களின் அழகை கொண்டு சேர்ப்பதாக நண்பர்கள் கூறினர். படித்தேன் சில பலவற்றை. நன்றாகவே இருந்தது.

இது பற்றி, இவர் பற்றி தமிழ் இந்து நாளேடும், ஆனந்த விகடன் நூலும் சிறப்பு வெளியீடுகள் செய்திருக்கின்றன.

நிறைய நல்ல நடப்புகள், நல்ல நட்புகள், நல்ல குறிப்புகள், நல்ல மனிதர்கள் இந்த நூலில் இடம்பெற்றிருக்கிறார்கள்... நிறைய புத்தகம் பற்றியும் பிரபலங்கள் அவர் தம் உழைப்பு பற்றியும் பேசுகிறார்.

இந்த நூலை இவரின் துணைவிக்கு, மகளுக்கு, தாய்க்கு, பெற்றவர்க்கு இப்படி எல்லாம் சமர்ப்பணம் செய்வதன்றி இவருடன் படித்த அந்த மூன்றாண்டு  கல்லூரியின் அனைத்து தோழர்களுக்கும் சமர்ப்பித்ததிலிருந்து இவரின் நட்பு பாராட்டுதல் எவ்வளவு என விளங்குகிறது . எனவே அதில் நானும் ஒருவனாகி இருக்கிறேன்.

நூல் நல்ல அடையாளப் பதிவாக விளங்க நண்பர் மேலும் மேலும் வெற்றிக் கனிகளை ஈட்ட மேலும் அரிய கவன ஈர்ப்பு கருத்துகளை மக்கள் மேன்மைக்காக பகிர்ந்து கொள்ள மனமுவந்து பாராட்டி வாழ்த்துகிறேன்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Saturday, June 23, 2018

பாலமலையில் பல் மருத்துவர்களும் நானும்: கவிஞர் தணிகை

பாலமலையில் பல் மருத்துவர்களும் நானும்: கவிஞர் தணிகைRelated image
Prof.Dr.J.Baby John M.D.S
Principal
Vinayaka missions
Sankarachariyar Dental college.
SALEM. TAMIL NADU.


Image may contain: 1 person, standing, outdoor and nature

தூய்மை பாரதத் திட்டத்தின் கீழ் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை, குடிநீர் மற்றும் சுகாதாரத் துறையின் கல்லூரி மாணவர்களுக்கான‌ கோடை உறைவிடப் பயிற்சியின் கீழ் ஜூன் 11 முதல் ஜுலை 11 வரை விநாயகா மிஷன்ஸ் சங்கராச்சாரியார் பல்மருத்துவக் கல்லூரியின் 20 பல் மருத்துவர்களை 5 பிரிவுகளாக அதாவது ஒரு முறைக்கு 4 மருத்துவர்களை  அழைத்து சென்று பாலமலை மேல் உள்ள‌ கிராமங்களுக்கான முகாமை நடத்தி வருகிறோம்.
https://www.facebook.com/tanigaiezhilan/videos/1925722917479072/
Image may contain: 3 people, outdoor

மிகவும் எளிதில் அடைய முடியாத பகுதி சேலம் மாவட்டத்திலேயே மிகவும் பின் தங்கிய பகுதி. செய்தி தொடர்பு ஊடகங்கள் பெரும்பாலான கிராமங்களை எட்டாத பகுதி. பெரிய குளம் , திம்மம்பொதி போன்ற மலையின் அந்தப்பக்க கிராமங்களில் இன்னும் மின் வசதியே சென்றடையவே இல்லை

நிலை இப்படி இருக்கும்போது...கண்ணாமூச்சி, செட்டியூர், குருவரெட்டியூர், அம்மாபேட்டை போன்ற பகுதிகளில் இருந்து இந்த மலையை எட்ட முடியும்.
Image may contain: 1 person
கண்ணாமூச்சி, குருவரெட்டியூர் பகுதிகளில் இருந்து இந்த மலைக்கிராமங்களுக்குச் செல்ல சிறப்பு ஏற்பாட்டுடன் உள்ள மலை மேல் ஏறும் ஜீப்கள் நமக்கு போக்குவரத்து உதவிகளை செய்து வருகின்றன. செல்லும்  தூரத்தைப் பொறுத்து கிராம மக்களுக்கு ரூபாய் 30 முதல் 50 ரூபாய் தலைக்கு வாங்கிக் கொண்டு இளம் வயதுடைய ஓட்டுனர்கள் இந்த ஜீப் பயணச் சேவையை செய்து வருகின்றனர் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வாகனத்தின் ஸ்டேரிங் வீலுடன்.

Image may contain: 5 people, people standing and outdoor

ஏன் எனில் சாலை அவ்வளவு மோசம். கரணம் தப்பினால் மரணம் நிகழுமோ என்னவோ ஆனால் ஜீப் கரணம் போடாவிட்டாலும் , சாய்ந்து படுத்துக் கொள்வதென்னவோ நிச்சயம் நடக்கும்.ஆனால் அத்தனை வளைவு, சறுக்கல் குண்டும் குழியிலும் இந்த இளைஞர்கள் அநாயசமாக நம்மை கொண்டு சேர்க்கின்றனர், கொண்டு வந்து கீழ் இறக்கியும் விடுகின்றனர்

இந்த சாலை வசதியும் கூட நூறு நாள் வேலை வாய்ப்பு செய்யும் நபர்கள் மூலமே செய்யப்பட்டதாக செய்திகள் உள்ளன. இன்னும் ஆங்காங்கே அந்த மண் சாலைகளில் குறுக்கே பெயர்க்க முடியாத பெயர்த்து எடுக்கப்படாத மரங்களும் பாறைகளும் கூட இருக்கின்றன.

கடந்த பார்த்திபன் எம்.எல்.ஏஆக இருந்த காலக் கட்டத்தில் இந்த சாலை போடப்பட்டதாகவும் சொல்கிறார்கள்.... மாவட்ட வன அலுவலர்  சுகிர்தராஜ் கோயில் பிச்சை  என்பார் அப்போது  சிறப்பு கவனம் எடுத்து இந்த சாலை வசதியில் நாட்டம் கொண்டு செய்ய வைத்ததாகவும் செய்திகள் உலவுகின்றன.

Image may contain: one or more people, people standing, tree, sky, mountain, outdoor and nature

ஆனால் உங்களுக்கு எல்லாம் ஒரு செய்தி சொல்கிறேன்: நான் 1986ல் இந்த மலைக்கு ஒரு தன்னார்வலராக சென்று அரசு அனுமதியுடன் மக்கள் தொகை கணக்கெடுக்கும்போதெல்லாம் செட்டியூர் என்ற இடத்தில் இருந்து கால்நடையாகவே ஏறித்தான் சென்றேன். அப்போதெல்லாம் எந்த சாலை வசதியுமே கிடையாது...வெறும் காட்டுத்தடம், கொடித்தடம் தான்.
Image may contain: one or more people, people standing, sky, tree, grass, mountain, outdoor and nature
அதிலேயே நான் எல்லா கிராமங்களுக்கும் திம்மம்பொதி, நாகம்பொதி, பெரியகுளம் வரை கூட சென்று திரும்பியது உண்மைதான் .அங்கு மலை மேல் ஒரு குடிசையை வாடகைக்கு எடுத்துக் கொண்டு தங்கினேன். அப்போதிருந்த மாவட்ட ஆட்சித்தலைவர் தங்கதுரை, கோட்டாட்சியர் மலையாளம் ஆகியோரின் அறிவுரையாக கீழே வருவாய் அலுவலர்க்காக இருக்கும் அரசுக் குடியிருப்பில் தங்கிக் கொள்க என்பதையும் மீறி.

அப்போதெல்லாம் முதல் கிராமம் கெம்மம்பட்டி, அதன் பின் இராமன்பட்டி. வரும். இப்போது ஜீப் சென்றடையும் முதல் சந்திப்பாக சுண்டைக்காடு, புல்லாம்பட்டி கிராமம் வந்து நிற்கிறது. ஆனால் இப்போதும் இராமன்பட்டிதான் அரசு உயர்நிலைப்பள்ளி அதுவும் மலைவாசிகளுக்கான உறைவிடப்பள்ளி...இதில் படித்த 9 பத்தாம் வகுப்பு படித்த பிள்ளைகள் அனைவருமே தேறிவிட்டனர் இந்த கல்வி ஆண்டில் என்பது எனது எண்ணத்திற்கிடையே முந்திரிக் கொட்டையாக முந்தி வரும் செய்தி.
Image may contain: 1 person, standing and outdoor
அந்த இராமன்பட்டி மட்டுமே பெரிய ஊர். அதாவது சுமார் 100 வீடுகள் இருக்கலாம் எனத் தோராயமாகச் சொல்லலாம். அங்குதான் அரசின் சுகாதார துணை மையமும் உள்ளது. அந்த மையத்தில் பணி செய்த ரூபி என்ற செவிலியர் தொடர்ந்து 5 ஆண்டுகளாக அங்கு தங்கி பணி புரிந்து இரு முறை மாவட்ட ஆட்சியர் விருது பெற்றிருக்கிறார். நாங்கள் எங்கள் மருத்துவக் குழுவினர் இரு முறை அவருடன் சந்திக்க நேர்ந்தது.
Image may contain: 3 people, people smiling
அவர் அளித்த அனுமதி பேரில் சாலையோரம் இருந்த அந்த துணை சுகாதாரமையச்  சுவரில் எமது மருத்துவர்கள் முதல் குழு குப்பைக் கூள நிர்வாகம் பற்றி சித்திரங்களை ஓவியமாக வரைந்து சொல்லாமல் தமது கருத்துகளை பதிவு செய்தனர்.

அந்த மலை மேல் சுமார் 30 கிராமங்கள் இருக்கின்றன. ஆனால் பெரும்பாலும் எல்லாமே விரவிக் கிடக்கும் மிகவும் குறைவான எண்ணிக்கையில் வீடுகள் உள்ளன. மொத்தம் மக்கள் தொகை 4347 என்ற புள்ளி விவரம் கிடைத்தது.
Image may contain: 1 person, smiling, sitting
பெரும்பாலும் இன்னும் எவருமே படித்தவர்களாக இல்லை. இராமன் பட்டியின் துணைத் தலைமை ஆசிரியரை வைத்தே முதல் குழுவினர் பேஸ்ட் பிரஸ் எல்லாம் கொடுத்து பல் துலக்கல் பற்றிய விழிப்புணர்வை ஊட்டினர் துவக்கப்பள்ளி மற்றும் உயர் நிலைப்பள்ளி மாணவர்கள் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

மறு நாளில் குப்புசாமி தலைமை ஆசிரியரும் சேர்ந்து கொள்ள பள்ளி மாணவர்கள் அனைவரும் இணைந்து இராமன்பட்டி முதல் கெம்மம்பட்டி வரை அணிவகுத்து சுத்தம் சுகாதாரம், குப்பையை கண்ட இடங்களில் போடக்கூடது, கழிக்காதே திறந்த இடத்தில் மலம் கழிக்காதே, பெண்களை படிக்கவை, சிறுவர் சிறுமியரை வேலைக்கனுப்பாதே போன்ற முழக்கமிட்டு அனைவரும் ஊர் மக்கள் எல்லாம் வியந்து பார்க்க ஊர்வலம் சென்றனர்.
Image may contain: one or more people, outdoor and water
முதல் குழுவை விட இரண்டாம் மருத்துவக் குழுவினர் ஒரு படி மேல் சென்று இவர்கள் செய்த பணிகளையும் செய்தும் அதற்கும் மேல் புல்லாம்பட்டி. நமங்காடு ஆகிய ஊர்களிலும், மற்றும் இரண்டு பெரிய பள்ளிகளான இராமன்பட்டி, கடுக்கா மரத்துக்காடு ஆகிய ஊர்களிலும்  வெட்ட வெளியில் எச்சில் துப்பல், மலம் கழித்தல், சிறு நீர் கழித்தல் எவ்வளவு சுகாதாரக் கேடானது என்பதை விளக்கும் திரைப்படத்தை ஒவ்வொரு ஊரிலும் சுமார் அரை மணி நேரம் ஒலி ஒளிபரப்பி விளக்கிப் பேசினர்

Image may contain: one or more people, people standing, tree, outdoor and nature

மேலும் கடுக்கா மரத்துக் காடு தலைமை ஆசிரியர் மாதேசன், ஆசிரியர் பவளக்கொடி ஆகியோரின் ஒத்துழைப்புடன் பள்ளிச் சுவரில் படம் வரைந்தும், பள்ளியில் திரைப்படம் காண்பித்தும், பற்பசை, பல் துலக்கி ஆகியவ்ற்றைக் கொடுத்து சிறப்பாக நிகழ்ச்சிகளை நடத்தினர்.
Image may contain: 2 people, people standing
அது மட்டுமல்லாமல் இவர்களின் பேச்சைக் கேட்ட 3 பேர் தங்களது பற்களின் பிரச்சனையை புல்லாம்பட்டியில் அமைந்துள்ள விநாயகா மிஷன்ஸ் சங்கராச்சாரியார் பல் மருத்துவக் கல்லூரியின் தொலைதூரத் திட்டத்தின் கீழ் இயங்கிவரும் பல் மருத்துவ மையத்தில் மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டனர்.நமது மருத்துவர்கள் மருத்துவ சிகிச்சையும் அளித்தனர்.

அது மட்டுமின்றி காடு கழனி, வீடு வாசல் ஆகியவற்றில் இருந்த அத்தனை மனிதர்க்கும் சுத்தம் சுகாதாரம், வெட்ட வெளியில் மலம் கழித்தலின் தீமை, சிறுநீர், உமிழ் நீர் கண்ட இடங்களில் துப்புவதால் நேரும் கேடு பற்றி விளக்கிக் கூறப்பட்டது. மேலும் பெண்களின்  மாதவிடாய், சேனிட்டர் நாப்கின்கள்,எய்ட்ஸ், பாலியல் நோய் பற்றிய அறிவுரைகளும் வழங்கப்பட்டன.

Image may contain: 2 people, people on stage, people standing and indoor

நிறைய உபசரிப்புகள் வேறு..மா, பலா, வாழை , விளாம்பழம், சிறு நெல்லி இப்படி ஏகப்பட்ட கனி வர்க்கங்களை நமது மருத்துவர்கள்  உண்டு மகிழ்ந்த அனுபவத்தை அந்த பாலமலை மண் அளித்தது.

Image may contain: one or more people and crowd

இத்தனைக்கும் எங்களுக்கு படுக்க படுக்கை, தங்க இடம், உணவு தயாரித்தளிக்கும் பாங்கு ஆகியவற்றை  புள்ளாம்பட்டியில் ஆசீர்வாத இயக்கம் என்ற நிறுவனம் நடத்தும் தேவாலய இடம் சேர்ந்த குடியிருப்பே எமக்கு அளிக்க மனங்கோணாமல் அதில் ஊழியம் செய்து வரும் யுவராஜ் மற்றும் அவரின் துணைவி ஜெயலலிதாவும்  செய்து வருகின்றனர். நல்ல வசதி. அந்த மலைப்பாங்கான இடத்தில் அப்படி தூய்மையான சுத்தம் சுகாதாரமான ஓய்வறைகளும் எங்களுக்கு கிடைத்தது இயற்கையின் கொடையே.  Mr..சாமிதாஸ், Mr.ஆல்பர்ட் and Pushparaj, Blessing Youth Mission ஆகியோர் இதன் நிர்வாகிகளாக விளங்குகின்றனர்.அவர்க்கும் எமது நன்றிகள் உரித்தாகும்.
Image may contain: outdoor
மேலும் இந்த முகாம்களை பாலமலையில் நடத்துவது என்றும், என்னையே அதற்கான பொறுப்பான அலுவலராக நோடல் ஆபிசராகவும் நியமித்து அந்த மருத்துவக் குழுவினரை வழி நடத்துவதென்றும் என்னைப் பணித்த விநாயகா மிஷன்ஸ் சங்கராச்சாரியார் பல் மருத்துவக் கல்லூரியின் முதல்வர்: பேராசிரியர் மருத்துவர். ஜா.பேபிஜான் எம்.டி.எஸ்  அவர்களுக்கே நன்றிகள் உரித்தாகும்.
Image may contain: 2 people, people smiling, people standing and people dancing

மேலும் கல்லூரியின் பல் மருத்துவ சமுதாயத்துறையின் தலைவர்  மருத்துவர் என்.சரவணன் எம்.டி எஸ் அவர்களும் இந்த முகாம் நடைபெற தமது வழிகாட்டுதல்களையும், தமது துறையின் அத்தனை ஒத்துழைப்பையும் நல்கி வருவது பாராட்டத்தக்கது.

மேலும் இந்த 20 மருத்துவர்களை அவரவர் துறைகளிலிருந்தும் இந்த முகாம் நாட்களில் பணி விடுவிப்பு செய்து முகாமில் ஆர்வத்துடன் ஈடுபட வைத்தமைக்கும் எல்லா துறைத் தலைவர்களுக்கும் சிறப்பாக மாணவர்களின் பொறுப்பு சார்ந்த துணை முதல்வர் பேராசிரியர் மருத்துவர் சுரேஷ்குமார் ஆகியோருக்கும் நன்றி உரித்தாகிறது.

Image may contain: one or more people, people standing and indoor

 மதிப்பிற்குரிய கவின் கோகுல் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு உதவியாக இருக்கும் மத்திய அரசின் மாவட்ட ஊக்குனராக     என்னோடு வாட்ஸ் அப்பில் இணைந்து நடக்கும் செயல்களை பகிர்ந்து கொண்டு வாழ்த்தி மகிழ்கிறார் மேலும் இந்த பாலமலையில் அரசுத் திட்டத்தின் கீழ் கொடுக்கப்பட்ட குப்பைத் தொட்டிகள் அந்த அந்த ஊர்களுக்கு சென்றடையாமல் இராமன்பட்டியில் ஒரு வெட்ட வெளியிலேயே வைக்கப்பட்டு கை கழுவி விடப்பட்டுள்ளன.

இந்த செய்தியை, இந்த புகைப்படங்களை அவர்க்கும் பகிர்ந்து கொண்டுள்ளோம்.

மேலும் அரசின் திட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட பெரும்பாலான கழிவறைகள், ஓய்வறைகள் திட்டத்தின் இலக்கான கழிவறையாக பயன்பாட்டில் இல்லை என்பதுதான் வருத்தத்துக்குரிய செய்தி. முடிந்தவரை அவற்றை பயன்பாட்டிற்கானதாக செய்ய நாமும் முயன்று வருகிறோம்.
Image may contain: one or more people, hat, sunglasses, tree, selfie, sky, outdoor and closeup
S. Thanikachalam
Nodal Officer: Summer Internship Training Program 2018:
Camp and Public Relations Officer.
VINAYAKA MISSIONS SANKARACHARIYAR DENTAL COLLEGE
SALEM.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

விடியல் நண்பர்கள் குழுவின் 3 ஆம் சந்திப்பு: கவிஞர் தணிகை.

விடியல் நண்பர்கள் குழுவின் 3 ஆம் சந்திப்பு: கவிஞர் தணிகை.

Related image


கடந்த ஆண்டிலிருந்து இந்த குழுவை ஒருங்கிணைத்து நடத்தி வருபவரும் எனது நண்பருமான விடியல் குகன் நாளை மூன்றாம் சந்திப்புக்கு திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள வி.ஜி.எஸ் மீட்டிங் ஹாலில் ஏற்பாடு செய்துள்ளார். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த சந்திப்பில் நமது நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ள வருகை தரும்படி கேட்டுக் கொள்கிறார். இந்த சந்திப்பில் எனது உரை:" புறம் கட உள் பார்க்க, புறம் கட கடவுள் பார்க்க" என்ற தலைப்பில் இடம் பெற உள்ளது.

1978 ஆம் ஆண்டில் இருந்தே விடியல் என்ற கை எழுத்துப் பிரதியுடன் ஆரம்பமானது இதன் விதை. அதன் பின் அச்சுப் பிரதியுடன் சிறிது காலம் நடைபெற்றது.

அதன் விழுதாய் முதல் சந்திப்பு கரூரில் 11/06.2017ல்  மிகச் சிறப்பாக நடைபெற்றது. அப்போது : "நெட்டை மரங்களென நின்றார்" என்ற தலைப்பில் எனது உரை வீச்சு இடம்பெற்றது அத்துடன் ஆடல் பாடல் என நிறைய நிகழ்வுகள் ஏன் ஒரு படிக்க பொருளாதாரச் சிக்கலில் இருந்த ஒரு ஏழை மாணவருக்கும் கல்லூரியில் மேல் படிப்பு படிக்க உடனடியாக‌ நிதி திரட்டி கொடுக்கப்பட்டது.

Related image

19 05. 2018ல் பழனி ராயல் பார்க் ஹோட்டலில் முதலாண்டை விட மிகவும் சிறப்பாகவே சுமார் 70  தேர்வு செய்யப்பட்ட நண்பர்களுடன் இந்த சந்திப்பு நடந்தது....பல்வேறுபட்ட பல்சுவை கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சென்னையிலிருந்தும் கூட நண்பர்கள் வந்து கலந்து கொண்டிருந்தனர். தங்குமிடம் ஏற்பாடுகளும், மாலை பழனி முருகன் கோவிலுக்கு கம்பி வட ஊர்தியில் அழைத்துச் செல்லப்பட்டு முருகனின் இராஜ தரிசனம்  தங்க ரதம் இழுத்தல் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கு கொண்ட நிகழ்வுகள் நிகழ்த்தப்பட்டு அனைவர்க்கும் பழனி பிரசாதம் வேறு வழங்கப்பட்டன எல்லாம் ஒரு பைசா எங்களது செலவின்றி. மறு நாள் அனைவரும் கொடைக்கானல் சென்றனர் நண்பர்கள் அனைவரும். என்னைத்தவிர சென்னை போன்ற வெகு தூரம் செல்ல வேண்டிய நண்பர்கள் தவிர... இந்த சந்திப்பின் போது ஆத்மாலயா என்ற ஆதரவற்ற மலை வாழ் மக்கள் பிரிவைச் சார்ந்த பெண்களுக்கும் அந்த தயானந்த சரஸ்வதி ஆரம்பித்து வைத்து நடந்து வரும் உறைவிடத்துக்கும் பத்தாயிரம் நிதி உதவி அளிக்கப்பட்டது. இது அந்தப் பெண்களின் எதிர்காலத்துக்கும் மேற்படிப்புக்கும்  உதவி வரும் அமைப்பாகும்.

இந்த நிகழ்வில் எனது உரை வீச்சு:" உடல் வளர்ப்போம், உயிர் வளர்ப்போம்" என்ற தலைப்பில் நிகழ்ந்தது.

மேலும் பட்டிமன்றம், விழிப்புணர்வு பாடல்கள், இப்படி பல பிரிவுகளிலும் பங்கு பெற்ற அனைவர்க்கும் நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன. வினாடி வினா நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது...
மிகச் சிறப்பான ஏற்பாடுகள்...உணவு பற்றிய கவலை எல்லாம் இல்லாமல். பத்தியச் சாப்பாட்டுக்காரன் இந்த ஒரு நிகழ்வில் எனது பிடிவாதத்தை விட்டு விட்டு பெயக்கண்டும் நஞ்சுண்டமைவர் நயத்தக்க நாகரீகம் வேண்டுபவர் என்ற குறளுக்குகேற்ப கலந்து கொண்டு உண்டு வருகிறேன் எனது உடல் நலத்தையும் புறக்கணித்து இந்த நிகழ்வில் எனது பெரு நட்புக்காக பல மணிகள் கடந்து செல்கிறேன்.
Related image


வாழ்வு இயல் வழிகாட்டி என என்னை முதலில் இந்த அவையில் அழைத்திருக்கிறார்கள்...இந்த நிகழ்வுகளில் எனது புத்தகங்களும் விற்பனை செய்யப்பட்டு எனக்கு உதவியாய் அமைகின்றன. மேலும் கடந்த பழனி சந்திப்பில் இதுவரை வெளிச்சம் படாதிருந்த கால்நடை மருத்துவர் மறைந்த வாசவய்யா அவர்கள் எழுதி வெளியிடப்படாமல் இருந்த "வாய் இல்லா மாக்களும் வாய் இருந்தும் இல்லா மக்களும்" என்ற நூலும் வெளியிடப்பட்டது. அந்த நூலை விடியல் குகன் வெளியிட நீதிமன்ற நடுவர் முதல் பிரதியை பெற்றுக் கொண்டார்....


,

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.
Saturday, June 16, 2018

BEST WISHES YOU DOCTOR RAJESH B.D.S. FROM KAVIGNAR THANIGAI.

                       17 ஜூன் 2018.

 டாக்டர் ராஜேஸ் பி.டி.எஸ்             டாக்டர் ஸ்ரீநிதி பி.டி.எஸ்

ஒரு நினைவு கூரத்தக்க நிகழ்வு
இரு காதல் இதயங்கள்
மூன்று முடிச்சு...
Related image

அங்கீகாரத்துடன் இணைக்கும் இனிய திருவிழாவில் நானும் இருக்கிறேன்

ஏ.பி.கல்யாண மண்டபம் கோல்ட்வின்ஸ், அவினாசி ரோடு கோவை.

டாக்டர் ராஜேஸ் எங்க ஊர்க்கார நல்ல இளைஞர்
இவரை ஈராண்டாக அறிந்தேன் நல்ல விளையாட்டு வீரர்
முகாம்களில் சளைக்காமல் பணி புரிபவர்
இந்த மணத்துக்கு நேரடியாக செல்ல முடியாமை
எனது இயலாமை பற்றிய சாட்சியம்
Related image
இவரின் அழைப்பிதழே இந்த மணத்தின் நேச விளக்கம்
தேர்ந்து பார்த்து பார்த்து வியந்து சேர்ந்து பார்த்த‌
அழகோவியமாய் வித விதமான இதழ்கள்...
திருமண அழைப்பிதழ்கள்

ஒன்று பிரித்துப் பார்க்கும் இதயமாக‌
மற்றொன்று நட்புக்கென்ற தங்க இதழ்களாக
மற்றொன்று குடும்பத்தின் அருவியாக‌
எப்படிக் கொண்டாட வேண்டுமென்றுத் தெரிந்திருக்கிறது
ஒரு மணத்தை திருமணத்தை இருமன இணைப்பை....

சிறப்பு நிகழ்வுகள் எப்போதாவதுதான் வருகின்றன‌
அதனால் வரமுடியாமையை ஏற்கமுடியாதது என்கிறார்
கவித்துவமாய் அழைப்பிதழிலேயே விளையாடி இருக்கிறார்
எண்ணமனைத்தையும் குழைத்து வண்ணமிழைத்திருக்கிறார்.

பல் மருத்துவர்கள் ராஜேஸ் மற்றும் ஸ்ரீ நிதி வாழ்வில்
என்றும் இணைபிரியா வாழ்வும் கை கோர்த்துக் கொள்கிறது
என்றும் இனி பல தலைமுறை வாழ வாழ்த்த‌
வாரிசுகளை வருக வருக என வரவேற்கும்

கவிஞர் தணிகை....


Image result for flower trees

HAPPY WEDDING GREETINGS TO P.LAVANYA....FROM KAVIGNAR THANIGAI.

                                 மண விழா
P. இலாவண்யா                            R.ஜெயப்பிரகாஷ்.

ஊனத்தூர் ஸ்ரீ பாலசுப்ரமணியர் திருக்கோயில்  ஆத்தூர் வட்டம்.

                                17 06 2018


Related image


என்னால் போக முடியாத தூரமல்ல இருந்தாலும் எப்படி
ஒரே நேரத்தில் பல இடங்களில் நான் காட்சி கொடுக்க முடியும்
நான் கடவுள் அல்லவே...

என்றாலும் ஆங்காங்கே இருக்க நான் ஆசைப்படுகிறேன் ஓர்
கடவுளைப்போல...

இலாவண்யாவை நான் சந்தித்தேன் ஈராண்டுக்கும் முன்
அது ஓர் வெண்ணிற ஆடை அணிந்த சிட்டு
முதலில் என்னிடம் அதிகம் பேசாத நைட்டிங்கேல்
வேம்படிதாள அரசு மருத்துவமனையின் நாடி நரம்புகளாக

ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் நோயாளிகள்
குவியும் முக்கிய மையம் அது...சேலம்
மாவட்டத்தின் வட்டார மருத்துவமனை
வாரமிருமுறை அங்கு சென்று பார்த்திருக்கிறேன்
Related image
 செவிலியர் என்பார், தாதியர் என்பார்
 சிஸ்டர் என்பார், பேர் என்னவோ இருக்கட்டும்
 பணி செய்யும்போது பார்த்திருக்கிறேன்
 பாராட்டியும் பேசியிருக்கிறேன்...ஏன் தேன்.

அவருக்கும் பொறியாளர் ஆர்.ஜெயப்பிர்காஷ்
அவருக்கும் திருமணவிழா ஒருமிப்புத் திருவிழா
இவ்வினிய நாளில் எனது எண்ண அலைகளை
அவர்கள் பின்னால் அனுப்பவே இந்தப் பதிவு...

வாழட்டும் வாழ்வாங்கு பேர் சொல்லி
மனிதகுலத்துக்கு செய்த சேவையின்
புனித பணியின் பேறு அவர்களை
என்றும் காக்கும்...வாழ்த்தும்
Image result for flower trees

என்றும்

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.