Friday, August 30, 2019

ஒரு இடம்:கவிஞர் தணிகை.

 ஒரு இடம்
Post image
ஏன் மலையின் பின் ஒளிகிறாய் மேகமாய்?
ஏன் சிலையின் பின் ஒளிகிறாய் சாமியாய்?
ஏன் இரவெலாம் ஒளிர்கிறாய் ஒரே நினைவாய்...

புவி இயல் பாதி
பூ இதழ் மீதி
நிலையாமை சொன்ன சித்தர் மனசுடன்
நீரெலாம்
நிலமெலாம்
காற்றெலாம்
நெருப்பெலாம்
வாயுக் கோளப்பந்தாய் உருள்கிறேன்
கருவிடம்

வாசல் வழியே செல்கிறேன்
தெருவிடம்

உணர்வுகளோடு போகிறேன்
உடலிடம் உருவிடம்
ஒன்றுமில்லாததாய் ஆகிறேன்
குருவிடம்...
திருவிடம்...

   கவிஞர் தணிகை.

Wednesday, August 28, 2019

அது ஒரு காளான் காலம்: கவிஞர் தணிகை

அது ஒரு காளான் காலம்: கவிஞர் தணிகை

Mushrooms the Size of Dinner Plates -- Kyoto, Japan -- Copyright 2007 Jeffrey Eric Francis Friedl, http://regex.info/blog/


எனது வயது 38 இருக்கும். நடைப்பயிற்சி அப்போதும் உண்டு. அரை கி.மீ கூட போயிருக்கமாட்டேன். மாபெரும் காளன்களை பனை மர வேலியோரம் பார்த்தேன் உடனே அள்ள முடியாமல் இரு கைகளையும் இணைத்து மார்புடன் சேர்த்து எடுத்து வந்து வீடு சேர்த்தேன். எனது தங்கை வீட்டுக்கும், ஒரு அக்கா வீட்டுக்கும் கூட கொண்டு போய்க் கொடுத்து வந்தேன்.

அவ்வளவு பெரிய பெரிய‌ காளான்களையும் அதுவும் அத்தனை காளான்களையும் எனது வாழ்நாளில் அதற்கு முன்பும் அதற்கு பின்பும் நான் காணவேயில்லை மிகவும் விரிந்திருந்தன புதிதாகவும் இருந்தன எனக்காகவே முளைத்தமாதிரி வேறு எவர் கண்களும் படும் முன்பு எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்திருந்தது. அதை எந்நாளுமே மறக்க முடியாது.

பொதுவாக இடி இடித்தால்தான் மழைக்காலத்தில் இந்த நல்லக் காளான்கள் வரும் பூமியிலிருந்து வெளிக்கிளம்பி என்பர். இது இறந்து போன பனை போன்ற மரங்களின் எச்சமான மூலக்கூறுகளில் இருந்து செல்களில் இருந்து புறப்படும் விரியும் என்றும் அரை குறையாக கேள்விப்பட்டிருக்கிறேன்.

அன்று அத சிறு தொலைவுக்குள்ளேயே என்னைப் பார்த்தவர்கள் அட என்ன இப்போதுதான் போனார் இவ்வளவு காளானோடு வருகிறாரே என பார்த்தவர்கள் எல்லாம் ஆச்சரியப்பட்டுப் பேசினார்கள். அவையெல்லாம் என்னுள் இன்னும் மறவாத சித்திரங்களாக அழியாமல் இருக்கின்றன.
100 Pcs Green Healthy Super Big Mushroom Seeds, Delicious Vegetables Rare Gaint Mushrooms Funny Succlent Plant High-Nutrition 10
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

P.S:  அதை உணவாக சமைத்துச் சாப்பிட்டாலே அதன் அலாதி ருசிக்கு ஈடு இணையே சொல்ல முடியாது அத்தனைக்கும் அது புதிதாக இருக்க வேண்டியதவசியம். பொறியல் செய்யலாம், குழம்பும் வைக்கலாம். அந்த வகைக் காளன்கள் பிரியாணி செய்ய உதவாது கரைந்து விடும். எனக்கு மிகவும் பிடித்த உணவு வகைகளில் அது ஒன்று...நாவில் உமிழ் நீர் சுரக்கிறது செய்யும்போதே அந்த ருசியின் மணம் நாசியில் தெரிகிறது... நான் கடையில் வாங்கிய ஊட்டி பட்டன் காளான் போன்ற நெகிழிப்பையில் வைத்தடைத்த குளிர்பதனப்பெட்டியில் வைத்த காளான்களைச் சொல்லவில்லை. இயற்கையாக கிடைப்பதைப் பற்றியே இங்கு அனுபவித்ததை பகிர்ந்துள்ளேன்.

Good Evening ...Kavignar Thanigai.

வண்ணங்கள் காட்டுகிறாய்
வரி வரியாய் தீட்டுகிறாய்
பஞ்சு மிட்டாய்க் கலர் என்பான்
அவள் மாமன்

பாஸ்கரராஜ் ரோஸ்கலர் போடென்பான்
காணாமல் போன காலத்தின்
காண்கிற காட்சிப் பொருளாய்
ஒரு சாட்சி

Image result for dusk evening with rose color sky


ரோஸ்கலருடன்
ஒரு நினைவு...

    கவிஞர் தணிகை

குட் ஈவ்னிங்

Sunday, August 25, 2019

எங்கள் வீட்டின் மரங்களின் கதை: கவிஞர் தணிகை

எங்கள் வீட்டின் மரங்களின் கதை: கவிஞர் தணிகை
Image result for fruit trees in our homes back yards


அந்த மரத்துக்கு வயது 70 எஙகள் வீட்டில் இருந்த மிகவும் இளைய மரமே அதுதான். ஆனால் அது இன்று மிகவும் மூத்த மரமாகிவிட்டது நரை விழுந்துவிட்டது, வேர் எல்லாம் பெரிதாக இல்லை. மூத்த மரம் ஒன்று இன்று என்னால் முற்றிலும் காய்ந்து போய் உயிரற்று நின்று கொண்டிருந்த காரணத்தால் அப்புறப்படுத்தப்பட்டது. நமது சென்டிமென்ட் ராஜாக்கள் பட்டுப் போன மரத்தை காலையில் தூங்கி விழிக்கிற போது பார்க்கக் கூடாது என பாடம்  போட்டு அல்லவா வளர்த்துவிட்டனர்.

நானும் அது மறுபடியும் துளிர்க்குமோ, பூக்குமோ காய்க்குமோ என்று கொஞ்ச காலம் பார்த்தபடியே இருந்தேன். இருக்கட்டும் இருக்கட்டும் அப்பா பார்க்கலாம் என்றான் எனது 20 வயது மகனும்.

அது எப்போது வைத்த மரம் என்று எனக்கும் தெரியாது. ஆனால் அப்போது நிறைய மரங்கள் எங்கள் வீட்டில் இருந்தன. இப்போது ஒரே ஒரு சப்போட்டா, எப்படி வெட்டினாலும் துளிர்த்தபடியே இருக்கும் ஒரே ஒரு முருங்கை மரம் இவை மட்டுமே.
Image result for fruit trees in our homes back yards
கறிவேப்பிலை மரம் சாயந்தபடி எதற்கும் பயனாகாமல் இருந்ததை வெட்டி வீழ்த்தி கொஞ்ச காலம் தான் ஆகிறது. இப்போது இந்தக் கொய்யா மரம்.

அந்தக் காலத்தில் பள்ளத்தோரம் ஒரு பூவரச மரம், ஒரு கொடுக்காப்புளி மரம் , ஒரு கொய்யா மரம் உள்ளே அப்படியே ஒரு பலா மரம், ஒரு மாமரம், ஒரு புளியமரம்,ஒரு கொழிஞ்சிமரம், அதன் பிறகு ஒரு பார்க் கொய்யா மரம் இது குண்டு குண்டு  பழங்கள் தரும் அந்த பள்ளத்து ஓரம் இருந்த  கொய்யாமரம் பெரிய முந்திரிப்பழம் வடிவில் பழங்கள் தரும்
இப்போது இறந்திருந்து என்னால் இன்று வீழ்த்தப்பட்ட மரமும் நல்ல முதிர்கனியில் மிக்க  இனிப்பான சுவை உடைய சிவந்த பழங்கள் தரும். இப்படி வகைக்கொன்றாக மூன்று கொய்யாமரங்கள் இருந்தன. அதன் பின் சொல்ல வேண்டுமெனில் ஒரு சில அரப்பு மரங்களும் கல்கட்டில் வலது பக்கம் வளர்ந்து வந்திருந்தன.அவ்வப்போது தானாக முளைக்கும் பப்பாளி மரங்கள்,அதன் கனிகள்

Image result for fruit trees in our homes back yards
புளிய மரம் கூட இரண்டு இருந்ததாக நினைவு. அவை வீட்டில் இருக்கக்க் கூடாது என வெட்டுப் பட்டன. வெட்டுப்பட்டன. அங்கே அதன் அருகே இருந்த கறிவேப்பிலை மரத்தில் இருந்து சந்தை நாட்களுக்கு கறிவேப்பிலை வேண்டுமென்று துணிச்சலுடைய பெண்டிர் ஏறி பறித்து விலைபேசி எடுத்துச் சென்றதை நான் கண்டதுண்டு. நான் எங்கள் வீட்டின் பையன்களில் கடைக்குட்டி. பெண்களில் எனது தங்கைதான் எல்லோருக்கும் கடைக்குட்டி எனவே நான் கடைக்குட்டிக்கு மூத்த கடைக்குட்டி என்பதால் மற்றவர் யாவரையும் விட இந்த மரங்களில் எல்லாம் ஏறி விளையாடிய அனுபவம், பழம் பறித்த அனுபவம் ஏன் எவரும் அறியாமல் மரத்தின் மேல் ஏறி அமர்ந்துபுத்தகம் வைத்து கதை படித்த அனுபவம்.

கீழே சுதந்திரமாக கதை எல்லாம் படிக்க முடியாது. படிக்கற பையன் படிக்கற புத்தகத்தை விட்டு விட்டு கதைப் புத்தகம் படிக்கிறான் பார் எனக் கெடுத்து விட நிறைய மூத்த நபர்கள் எண்ணிக்கையில் என்னை விட 6 பேர் உண்டு .பெற்றோர் சும்மா இருந்தாலும் இவர்கள் அக்கப்போருக்கு ஒரு போதும் குறை இருந்ததில்லை.

மாலை வேளையில் பள்ளிக்கூடம் விட்டு முடிந்து வந்தவுடன் டிபன் கொடுப்பது போல சிவந்து மஞ்சளாக பழுத்திருக்கும் கொழிஞ்சிப் பழங்களை சுவையாக தினமும் ஒன்று சாப்பிட்டு மகிழ்ந்ததுண்டு. ஆனால் அந்த மரமும் ஒரு நாள் அப்படியே காய்ந்து பட்டுப் போய் நின்றதைப் பார்த்த சோகம் உண்டு.

அப்பப்பா எத்தனை விதமான அனுபவங்கள்;  கோணபுளியங்காய் மரத்தில் ஏறி கிளை ஒடிந்து பள்ளத்து நீர் ஓரம் வேலிக்காக போட்டிருந்த கோணபுளியங்காய் முள் மேல் விழுந்த கதை

மரத்தடியில் சகோதர சகோதரிகளுடன் கட்டில் போட்டு படுத்தபடி வெயில் காலத்தில் வேர்க்குருவை கணக்குப் போட்டு கீறிக் கொண்டு கிள்ளிக் கொண்டும் உடைத்து அதன் நீர் பட மேலும் வேர்க்குரு அதிகமாக நுங்கு வாங்கி தேய்த்த கதைகள், வேர்க்குருவுக்கென நைசில் பவுடர் என ஒன்று உண்டு என அதிகமாக அது இருக்கும்போது போட்டுக் கொண்ட அனுபவம்

பள்ளத்தோரம் இருந்த முள் மரத்தில் எதிர்வீட்டு சிறுவர்களுடன் தோழர்களுடன் தூரி ஆடி அதாவது ஒரு கயிறு அதில் ஒரு போர்வை வைத்து அதில் அமர்ந்தபடி தூரி  எண்ணிக் கொண்டு ஆட்டி விடுவதும், பள்ளத்துக்கும் மேல் அது போய் வந்தாலும் அதை அந்தக் கயிற்றை கெட்டியாகப் பிடித்தபடி துணிச்சல் காட்டிய அனுபவம்...

பச்சைப் பாம்புகள் தலைகீழாக தொங்கியபடி தேன்சிட்டை, ஊர்க்குருவியை வாயில் போட்டு கொஞ்சம் கொஞ்சமாக பிடித்து விழுங்க அதற்கு அந்த குருவி போடும் ஓலம் சில வேளைகளில் அதை தப்பித்து விட்ட அனுபவம்...

எல்லாம் போய்விட்டது.

மரங்கள் அதன் அடியில் எண்ணிறந்த பூச்செடிகள். அந்தி மந்தாரை, மைசூர் மல்லி, இருவாட்சி, கனகாம்பரம், குண்டு மல்லி இப்படி எத்தனை பூக்கள் வகைக்கொன்றாக....நான் எனப்ப்படும் இந்த ஜீவன் அந்த மல்லிப் பூத்திருந்த அருமையான ஒரு அதிகாலையில் தான் அந்த வீட்டில் தாயிடமிருந்து தனி உயிராக பிரிந்தது இன்றும் அந்த வீட்டில் ஒவ்வொரு மூலை முடுக்கும் ஒவ்வொரு மரத்தின் உயிரும் நினைவுப் பால் கொடுக்க..
Image result for fruit trees in our homes back yards
 மரங்கள் தாயின் பால் சுரக்கும் சுரந்த முலை மார்கள் , தாய் மடிகள்...எல்லாம் ஒவ்வொன்றாக நான் இழந்துதான் வருகிறேன். இன்று இறந்த இருப்பை தாள முடியாமல் 70 வயதுக்கும் மேலான ஒரு மரம் இருந்த இடத்தின் அடையாளமே தெரியாமல் அதை எடுத்து விட்ட பிறகும் இந்த நினைவை எடுத்து விட முடியாமல்....

நான் அதற்கு அடுத்த அடிப்படை ஒன்றை சொல்லவில்லையே....கெம்ப்ளாஸ்ட் கழிவு நீர் ஓடி எங்களது நன்னீர் ஓடை கழிவு நீர் ஓடையான கதையும், அதனால் வீட்டுக்கு ஒன்றாக இருந்த நன்னீர்க்கிணறுகள் பப்பாளித்தண்டு வாசம் போல அடிக்கிறது வழவழப்பாய் நீர் மாறி உதவாமல் போய்விட்டது. நிலமும் நிலத்தடி நீரும் கெட்டுப் போய்விட்டது என வீட்டின் ஒவ்வொரு கிணறும் மூடப்படும் காலத்தில் நான் சிறுவனாய் இருந்து சாட்சியாக பார்த்திருக்கிறேன். நான் சிறுவனாக இருக்கும்போதே எங்களது வீட்டுக்குப் பின் புறம் இருந்த ஓடை கழிவு நீர் ஓடையாகவே இருந்தது. பாழும் அரசியல் பிரமுகர்கள் கழிவு நீரை சிமெண்ட் குழாய் வைத்துக் கொண்டு செல்வதை கையூட்டு பெற்றுக் கொண்டு நன்னீர் ஓடையையே அதற்கு தாரை வார்த்து விட்ட்தன் விளைவு தலைமுறை தலைமுறையாய் மக்கள் இனம் தவித்து வருகிறது தண்ணீர்க்காக. அணை முழுதும் தண்ணீர் நிரம்பிய போதும். அதைச் செய்த தலைமுறையினர்க்குதான் அடுத்த தலைமுறைக்கென பிள்ளைகளே இல்லையே...

அதற்கும் பின் நான் நிறைய மரங்கள் வைத்துப் பார்த்தேன் மாமரம். பலா மரம் என்றெல்லாம் பயனில்லை. எல்லாவற்றையும் விட வாழை வைத்தோம் கொஞ்ச நாட்களில் அவை பிசு பிசுத்தபடி கொச கொசவென நச நசவென இலை சிறுத்துப் போய் வெட்டி வேலையானது என அதையும் விட்டொழித்தோம்.

தென்னை வைத்தால் அந்த வீட்டில் நிரந்தரமாக வாழமுடியாது என வைக்காமல் இருந்தோம் தந்தையின் சொல்படி. ஆனால் மாறாக அப்படித்தான் வைத்தவர்கள் இருக்கிறார்கள்...டெம்போவில் வந்து தேங்காய்கள் பறித்துச் சென்றபோதும், இளநீரை வாயில் வைக்க முடியாது என்றபோதும். அவர்கள் குடி இல்லைதான் ஆனாலும் ...
Image result for drumstick trees
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை




Wednesday, August 21, 2019

இலஞ்ச ஊழலை இன்னும் 2 ஆண்டுகளில் ஒழிக்க முடியுமா? கவிஞர் தணிகை

இலஞ்ச ஊழலை இன்னும் 2 ஆண்டுகளில் ஒழிக்க முடியுமா? கவிஞர் தணிகை

தொடர்புடைய படம்


நடுவண் அரசு இன்னும் 2 ஆண்டுகளில் இலஞ்ச ஊழலை ஒழிப்பதாக ஒரு அறிக்கையைக் காண நேர்ந்தது. அது சாத்தியமா என்றால் ஒர் எழுத்தறிவிலாதார்க்கும் தெரியும் அது வெறும் சொல்லாடல் என்று

ஏன் எனில் நமது தமிழகத்தில் எல்லா சான்றிதழ்களுமே ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம் என்கிறார்கள் ஆனால் எந்த வேலையுமே அப்படி ஆன்லைனில் பதிவு செய்த சான்று பெற்றதாக இல்லை.  அதை ஒப்பம் இட்டு கொடுக்க வேண்டியவர்கள் அதை இலவசமாக அல்ல அல்ல அதை தனது வேலையாக செய்யத் தயாராக இல்லை. எப்போதும் இலஞ்சம் பெற்றுக் கொண்டுதான் செய்யும் கைகளாயிற்றே.

தெலுங்கானாவில் முதல் நாளில் சிறந்த காவலர் என்று சுதந்திர தினத்தில் விருது பெற்றவர் அடுத்த நாளில் ரூ. 17000 இலஞ்சம் பெற்றதாக பணி இடைநீக்கம் செய்யப்படுகிறார்

ஒரு சின்ன வேலைக்கும் கூட எதையும் பெறாமல் அரசின் செயல்பாடுகள் இல்லாதபோது எப்படி மத்திய அரசு இப்படி சொல்கிறது என்றுதான் விளங்கவில்லை.

கண்ணதாசன் சொல்லியபடி மனிதகுலம் இருக்கும் வரை அது இருக்கும் என்பது போல ஒவ்வொரு பணி சார்ந்த அதாவது மின்பணியானாலும், குடி நீர் வழங்கல் ஆனாலும், பஞ்சாயத்து பணிகள் ஆனாலும், ஒரு தெருவிளக்கு எரிய வேண்டுவதானாலும் ஒரு சாக்கடையை தேங்கிக் கிடப்பதை தள்ளி விட வேண்டுமானாலும்,  இந்தியாவில் எந்தப் பணியை செய்வதானாலும் போக்குவரத்து, காவல்துறை இப்படி எந்தத் துறை ஆனாலும் குறுக்குவழிகளே காய் நகர்த்த பயன்படுகின்றன.

மோட்டார் வாகன ஆய்வாளர்கள், பத்திரப் பதிவாளர்கள், காவல்துறை வழியே நிகழும் பாஸ்போர்ட் வெரிவிகேஷன்...வாகன கட்டுப்பாடு பற்றிய கவனம்...சில உதாரணங்களாகச் சொல்லலாம்.

அடிமட்டத்தில் பணி புரியும் ஊழியர்கள் அனைவருமே பொது உறவு வழியே மக்களிடம் ஒரு தொகையை வசூலித்தபடிதான் சேவையை ஆற்றுவதாக கூறிக்கொண்டு பலர்நலத்தை புறக்கணித்து சுயநலத்துக்கு துணை போய்க் கொண்டிருக்கிறார்கள்.

இதில் 2 ஆண்டுகளில் இலஞ்ச ஊழல் இல்லாததாக ஆக்குவதென்பது இயலாத காரியமே. மேலும் அரசியல், அரசு அதிகாரிகள்,தனியார் முதலாளிகளிடம் சிக்கிக் கிடக்கும் நாட்டில் வங்கி ஊழியர்கள் மற்றும் மேலாளர்களின் இந்த  வகையான செயல்பாட்டினால் பொதுமக்களின் கீழ்த்தட்டில் உள்ளாரின் பணம் மேல் தட்டு மனிதர்க்கு எப்படி கொண்டு செல்லப்பட்டது என்பதை அம்பானிகள் குடும்ப நலச் செயல்பாட்டில் புரிந்து கொள்ள முடியும்

தம்பியின் கட்ட முடியாக் கடனை எப்படி அவரது கம்பெனியை ஏலம் விடுவதை இவரே எப்படி குறைந்த விலைக்கே எடுத்து அந்தக் கம்பெனியையும் மீட்டு மேலும் மேலும் இந்தியாவின் முதல் பணக்காரார் ஆன கதையை உலகே அறியும்.

இலஞ்சமில்லாமலா லலித் மோடிகளும், விஜய்மல்லையாக்களும், நீரவ் மோடிகளும், தோன்றி இருக்கிறார்கள்...மேலும் காஷ்மீர் உண்மையிலேயே படேல் வழியில் தான் செல்கிறதா...

மேடையிலேயே தனியார் தான் சேவை செய்கிறார்கள் அவர்களுடன் இருப்பதும் பெருமிதத்துக்குரியது எனச் சொல்லும் ஒரு பிரதமர் நமக்கு உலகெலாம் புகழ் பரப்பி வருகிறார். தனியார்மயத்தை காங்கிரஸ் ஆதரித்தது இந்த ஆளும் கட்சி தனியாரிடமே நாட்டைக் கொடுத்துவிட்டது.

தனியார் கை அரசின் பையுள்
அரசின் கை தனியார் பையில்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Image result for bribe and corruption அரசுப் பணிக்கு
வேலை வாய்ப்புக்கே உரிய தரம் இருந்தபோதிலும் பெரும் தொகை கை மாறாமல் எவருக்குமே பணி வாய்ப்பும் கிடைக்காது என்ற நிலை உள்ள போது, இடமாறுதலுக்காக கன்னியாகுமரியில் இருப்பார்க்கு சென்னையிலும் சென்னையில் இருப்பார்க்கு ராமநாதபுரத்திலும் வேலைக்கான இட உத்தரவை வழங்கிவிட்டு மாறுதல் கேட்கும்போது பெரும் தொகையை பெற்றுக் கொண்டு அந்த மாறுதலை தருகின்ற அரசுகள் உள்ள போது இலஞ்ச ஊழலை எப்படித்தான் ஒழிக்கப்போகிறதோ இந்த நடுவண் அரசு என்ற கேள்வி ஒரு சமுதாய சேவகனாக எனது உள்ளத்தில் எழுந்துள்ளதை பதிவிட்டிருக்கிறேன்.

Monday, August 19, 2019

கால நதியின் பிரவாகத்தில்: கவிஞர் தணிகை

ரயில் நிலையத்தில் எவருக்கும் பயன்படாமல் நின்று கொண்டிருந்த 8 பெட்டி பயணிகள் ரயிலை ஒரு எத்து எத்தி உதைத்தான் அது தூரப் போய் விழுந்தது. அதை ஓடி எடுத்து அணை மேல் வீசினான். அணையின் நடுப்பகுதி உடைந்தபடி நீர் பொங்கி பிரவாகமாக வெளியேறிக் கொண்டிருந்தது.

*****************
Image result for person with infinite energy

கையில் கைக்குழந்தையுடன் நின்று நிரம்பிக் கொண்டிருக்கும் காவிரி நீரை வேடிக்கைப் பார்த்தபடியே கைபேசியிலும் பேசிக் கொண்டே புகைத்துக் கொண்டிருந்தான் அவன்

அவன் பின்னால் போய் அந்தக் குழந்தையை நெருங்கிப் பார்த்தேன் சிரித்தது.. அதன் கைவிரல்களை நீட்டியது. பிடித்துக் கொண்டேன்.

குழந்தையின் தந்தை திரும்பிப் பார்த்தான்.

வழக்கம் போல எனது வாயைக் கட்டுப் படுத்தாமல் இந்தப் பிஞ்சுக் குழந்தையை கையில் வைத்தபடியே எப்படி உன்னால் இப்படி புகைக்க முடிகிறது எனக் கேட்டேன்

உனக்கென்னடா அதைப்பற்றி, நான் குடித்தால் என்ன புகைத்தால் என்ன என்று  கேட்ட அவன்  வேண்டுமானால் குழந்தையை நீயே வைத்து நன்றாக வளர்த்துக் கொள் எனச் சொல்லி விட்டு  போயே போய்விட்டான்.

அது முதல் அந்தக் குழந்தையை தன்னந்த் தனியாய் நானே வளர்த்தேன். அதற்கு இப்போது வயது 12 பெண் குழந்தை வேறு.

எனக்கும் வயது முதுமை தள்ளாமை வந்து விட்டது

இனி அந்தக் குழந்தையை பராமரிப்பவர் , வளர்த்துபவர் யாரோ....
Image result for who is going to sacrifice
............

காலம் வெகுவாக மாறி இருந்தது.

அப்போதெல்லாம் ஆற்று நீரை ஓடி வரும்போதே எவர் வேண்டுமானாலும் எங்கே வேண்டுமானாலும் எடுத்து துணி துவைப்பர், குளிப்பர், என்ன வேண்டுமானாலும் செய்து கொள்வர், வீட்டுக்கும் எடுத்துச் செல்வர். நீர்த்தேக்கத்திலும் நீந்திச் செல்வர், குளிப்பர், துவைப்பர். நீர் ஏழைகளின் பயன்பாட்டுக்கு தடை இல்லாமல் கிடைத்தது.

ஆனால் இப்போது நீரை எல்லாம் நீர் தேக்கத்தில் காவல் காத்து பூட்டு பூட்டு வேலியிட்டு மத்திய போலீஸ் மாநில போலீஸ் துணை இராணுவப் படை என்றெல்லாம் போட்டு காவல் காத்து ஒருவர் கூட ஒரு குஞ்சைக் கூட நீர் அருகே விடுவதில்லை. தனியார் கம்பெனிகளுக்கு மட்டும் நீர் எடுக்க எந்த தடையும் இல்லை. எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ள.

மக்களுக்கு அவர்கள் நிலத்தடி நீரையும் கெடுத்து இரசாயன விஷமாய் ஆக்கிவிட்டு இவர்களிடம் மாதமொன்றுக்கு ஒரு குடத்துக்கு ஒரு ரூபாய்க்கு மேல் கொடுக்கும் கட்டணத்தொகையை தீர்மானித்துவிட்டு வசூல் செய்தபடி மாதத்தில் 10லிருந்து 12 நாட்களுக்கு மட்டுமே நீர் விநியோகம் செய்யும் இந்த அரசுகள் ஒரு குடும்பத்துக்கு ஒரு நாளுக்கு 7 குடம் தண்ணீர்க்கு மாதம் 200 ரூபாய் கேட்டு கெடுபிடி செய்து வசூலிக்க அதை விட கொடுமையாக காலமும் விநியோகமும் இருக்கிறது என்ற உபரிச் சேதி சொல்லுன் ஊழியர்களுடன் ஒரு தலைமுறை முடிந்த அடுத்த தலைமுறையின் பயணம்.
Image result for water scarcity even in floods

Image result for water scarcity even in floods
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை



Monday, August 12, 2019

அல்லா கொடுக்க நினைப்பதை எவராலும் தடுக்க முடியாது: கவிஞர் தணிகை

அல்லா கொடுக்க நினைப்பதை எவராலும் தடுக்க முடியாது: கவிஞர் தணிகை

Image result for water flow to mettur dam


ரஜினிகாந்த் என்னும் 68 வயது சிவாஜிராவ் கெய்க்வாட் மோடிஜி, அமித்ஜி, வெங்கைய்யா நாயுடுஜி ( age 70) என கலந்து கொண்ட சென்னைப் புத்தக வெளியீட்டுவிழாவில் தம்மை பா.ஜ.க நோக்கி நகர்ந்து நகர்ந்து நகர்த்தி நகர்த்தி சென்று கொண்டிருப்பதை பேச்சாக வெளிப்படுத்தி இருக்கிறார். அது அப்படியே மேலும் நகர்ந்து நகர்ந்து வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா முதல்வர் வேட்பாளராக ரஜினி ஆகலாம் அல்லது ரஜினியின் கட்சி பாரதிய ஜனதா கட்சியுடன் சேர்ந்து கூட்டணி அமைத்து முதல்வராக ரஜினி எனப் பின்னிருந்து கிருஷ்ணார்ப்பணமாக தேர்தல் நடத்த சிறந்த ஒத்திசைவான ஒத்தாசைகள் செய்யலாம் வியூகம் அமைக்கத்தான் கிருஷ்ணர் என்னும் அமித்ஷா இருக்கிறாரே போதாதா...

உள்ளிருக்கும் எண்ணம்தானே பேச்சாகவும் முளைக்கும். விதை ஒன்னு போட்டா சுரை வேறா முளைக்கும்.

காஷ்மீர் பிரச்சனையை கிருஷ்ணர், அர்ஜுனன் நல்லபடியாக வெற்றிகரமாக லீலை செய்து முடித்தமைக்காக அமித்ஷாவை மோடியை வெகுவாகப் புகழ்ந்து தள்ளி தன்னிருப்பிடத்தை வெளிக்காட்டிக் கொண்டிருக்கிறார்.

இது பாம்புக்கு தவளை செய்யும் செயலா அல்லது இனம் இனத்தோடு சேரலா என்பதை காலம் சொல்லும். ஆனால்

அதை மீடியாக்கள் எல்லாம் முன் பக்க தலைப்பு செய்தியாக்கி இருக்கின்றன.

சாருஹாசன் சொல்லியது போல இந்த ராசியான ஆளுக்கு எதுவும் நடக்கலாம்.
Image result for water flow to mettur dam
மற்றபடி முத்தலாக் சொன்ன முகமதிய கணவர் ஒருவர் முத்தலாக் சட்டமானபிறகு முதல் சட்டபூர்வமான நடவடிக்கைக்காக கைது செய்யப்பட்டிருக்கிறார்.

முகமதிய பெண்கள் முத்தலாக் சட்ட வடிவத்திற்கு நன்றி செலுத்தி மோடிஜிக்கு ராக்கி கட்ட தயாராகி இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

68வயதான மோடி, 54 வயதான அமித்ஷா....ஒருவர் கிருஷ்ணன் இன்னொருவர் அர்ஜுனன் என்கிறார் அதில் அமித்ஷாவை கிருஷ்ணர் என்றால் மோடியை அர்ஜுனர் என்பார்கள்...ஏன் எனில் முன்னிருந்து தாக்குவார் அர்ஜுனனே அவனே மஹாபாரதத்தில் வீரன் சிறந்த வில்லாளி.

கிருஷ்ணனும் அர்ஜுனனும் சமவயது நண்பர்கள் என்கிறது மஹாபாரதம். சரி விடுங்கள் அவர்கள் அர்ஜுனன் கிருஷ்ணராகவே இருக்கட்டும்...இவர் தர்மர் ஆகப் போகிறாரா என்ன?

கவிரியில் தண்ணீர் திறக்க மாட்டேன் மாட்டவே மாட்டேன் என்னும் எடியூரப்பா ஆட்சியில் கர்நாடகம் 220000 கன அடி நீரை நொடிக்கு திறந்து விட்டுக் கொண்டிருக்கிறது
தமிழகத்தில் ஒரே நாளில் 15 அடி தண்ணீர் மேட்டூர் அணையில் உயர்ந்து நாளை முதல் பாசனத்துக்கும் நீர் திறந்து விடப்போவதாகவும்  இன்று மாலைக்குள் அது 240000 கன அடியாக நொடிக்கு இருக்கும் என தகவல்கள் உள்ளன.
Related image
பக்ரீத் தின வாழ்த்துகள்: அல்லா கொடுக்க நினைப்பதை எவராலும் தடுக்க முடியாது.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.
Image result for water flow to mettur dam
வேலூர் பாரளுமன்றத்தொகுதி இடைத்தேர்தலில் தமது கூட்டணி கட்சியான பாஜக முகமே வெளிகாண்பிக்காமல் அ.இ.அ.தி.மு.க எட்டாயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.கவிடம் தோற்று உள்ளது குறிப்பிடத்தக்கது.

Saturday, August 10, 2019

புத்தாக்கப் பயிற்சியில் எனது உரை வீச்சு: கவிஞர் தணிகை


விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவனத்தின் சங்கராச்சாரியார் பல் மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை துவக்க விழாவும் 8 நாள் புத்தாக்கப் பயிற்சியின் ஆரம்பமும்  கடந்த 07.08.19ல் நடைபெற்றதன் தொடர்ச்சியாக 09.08.19 வெள்ளிக்கிழமை காலை  8.45 மணி முதல் 10.30 மணி வரை அடியேன் அவர்களுடன் அவர்களுக்காக எனது எண்ணக் கீற்றுகளை சிந்தனையின் மின்னல் கூறுகள்

சிந்தையில் பதியும்வண்ணம் இளம் தளிர்களுடன் ஒரு தனி ஆட்சி
நடத்தினேன். அதை இப்படி ஆரம்பித்தேன்: தெய்வம் போற்றுதும், செம்மழை போற்றுதும், ஞாயிறு போற்றுதும் நானிலம் போற்றுதும்..

பள்ளி முடித்து கல்லூரியில் அடி எடுத்து வைத்திருக்கும்
பிள்ளைகள் உங்களுக்கு இந்த வெள்ளியின் காலையில்
சொற்களை மாலையாக்கித் தந்து
வருக சரித்திரம் எழுத என வரவேற்று
உரையில் புகலாம் என நினைக்கிறேன்.

முன் வாய்ப்பளித்த
கல்லூரியின் முதல்வர்: பேராசிரியர் மருத்துவர். ஜா. பேபிஜான், பேராசிரியை மருத்துவர் மாயா மற்றும் கல்லூரி நிர்வாகத்துக்கு என் முதற்கண் வணக்கத்தையும் நன்றியையும் உரித்தாக்கிவிட்டு

என்னே ஒரு ஒற்றுமை பாருங்கள் சொல்லாமல் கொள்ளாமல்
இன்று என்  தாயின் 13 ஆம் நினைவு நாள்
சிக்குன் குனிய என்றொரு உயிர்க்கொல்லி நோயால்
அவர் உயிர் பிரிந்தது 2006ல்

மருத்துவமும் மருத்துவர்களும் மகத்துவம் செய்ய
இன்னும் மனித வாழ்விலும் உயிர்கள் வாழ்விலும்
எண்ணிலடங்கா விண்மீன்களாய்
சாதனைக் களங்கள் நிறைய நிறைய வீற்றிருக்கின்றன
எவரும் அறியாமல்....

நீங்கள் அறிந்திடுவீர் உலகெலாம் வியக்க
சாதனை புரிந்திடுவீர்....மனித குலம் தழைக்க
உயிர்கள் எலாம் பிழைக்க யாவரும் உமை வணங்க

 ஒரு நல்ல கவிதையின் படிக வரிகள்
மனதை விட்டகலாது
ஒரு  சிறந்த விதை  மண்ணுக்குள்ளேயே மக்காது
நீங்கள் எல்லாம் சிறந்த விதைகளாக
வாழ்த்துகளுடன்...

பௌதீக அறிவியல் அறிஞர் நோபெல் பரிசு பெற்ற இந்தியாவில் பிறந்த சந்திரசேகர் தினமும் in USA... 70.கி.மீ பயணம் செய்து தனது இரு ஆய்வு மாணவர்களுக்கு பாடம் நடத்தச் சென்ற சம்பவத்தையும் அவர் மாணவர்கள் நோபெல் பெற்ற பின்னே இந்த நல்லாசிரியர் நோபெல் பெற்ற வரலாற்றையும் கூறினேன்....ஆசிரியர் மாணவர் பந்தம் விளக்க..

அத்துடன்  இந்தியாவின் ஒப்பற்ற நோபெல் பரிசு பெற்ற விஞ்ஞானி சர்.சி.வி ராமன் பாரத ரத்னா பரிசு கொடுப்பதாக சொன்ன , குடியரசுத் தலைவரே அழைத்துக் கூறியபோதும்  தேதி இடிக்கிறது அன்று எமது ஆராய்ச்சி மாணவர்களின் நேரடி கேள்வி பதில் பரிசோதனை நேரம் எனவே நான் ஆசிரியர் என்ற முறையில் அவர்களுடன் இருக்க விரும்புகிறேன் தேதியை மாற்ற முடிந்தால் மாற்றி விடுங்கள் இல்லையேல் உங்களது பாரத ரத்னா கூட வேண்டாம் என்றதையும்

 மேலும் வழக்கம்போல எனது பாணியில் அப்துல்கலாம் அவர்களின் ஆசிரியர் சுப்ரமணிய அய்யர் என்பார் ஒரு நல்ல மாணவர் கெட்ட ஆசிரியரிடமிருந்தும் கற்றுக் கொள்ளலாம் என்றும், ஒரு கெட்ட மாணவர் ஒரு நல்ல ஆசிரியரிடமிருந்தும் கூட எதையும் கற்க முடியாது என்ற கருத்தையும் கூறி

ஆசிரியர் மாணவர் நல்லுறவை வளர்க்க அவர்களுக்கு விழிப்புணர்வை ஊட்டி விட்டு தலைப்பிற்கு சென்றேன். அதை முதல்வர் பேபிஜான் முன் மொழிந்திருந்தார்: வாழ்வின் நெறிமுறைகள்:" என்ற தலைப்பில் ஆங்கிலம் கலந்த தமிழில் பேசுங்கள் என ...அப்படியே செய்தேன்

நெறி, முறை, நெறி +முறைகள் என்றால் என்ன என்று விளக்கினேன். அவர்களிடம் கேட்கும்போது அவர்களால் ஏதும் சொல்ல முடியாத மௌனத்தினால்.நான் நண்பராகவே வ்ந்திருக்கிறேன் ஆசிரியராக அல்ல என்பதையும் தெளிவுபடுத்தி எனைப்பற்றி அறிமுகத்தில் கொடுத்த தகவல்களில் ஒன்றிரண்டை வலியுறுத்தி.

வேகமாக வாகனம் ஓட்டி விபத்துக்குண்டாகி தன் இன்னுயிரை இழந்த மாணவர் பற்றி, ஆறு காட்டாறாக, கடல் சுனாமி அலை எழ இப்படி கட்டற்று விளங்குவதை ஒரு கட்டுக்குக் கொண்டு வந்தால் அது நெறிமுறைப்படுத்துவதே...சாலை என்பதே வாகனம் செல்ல , கரைகள் வேண்டும் நதிகள் செல்ல, அணைகள் வேண்டும் நீர் தேக்க  இப்படி மாணவராகிய் உங்களை எல்ல்லாம் எவரெல்லாம் நெறி முறைப்படுத்தி கட்டுப்படுத்துவார் எனில் பெற்றோர், குடும்பத்தார், ஆசிரியர், நாடு, தலைமை , நட்பு ஆகியவை என்றும்,

கடைசியில் 10 நிமிடம் நீங்கள் என்னுடன் கலந்துரையாட ஒதுக்கப்படும் நேரம் அதில் உங்கள் கருத்துகளை மனந்திறந்து தெரிவிக்க வரலாம் என்றும் அதுவரை ஏதாவது கேள்வி இருந்தால் குறித்து ஒதுக்கி வைத்துக் கொள்ளுங்கள் என்றும் குறிப்பிட்டேன்.

சிசிடிவி என்பது எதற்கு வந்தது நேர்மை என்றால் என்ன பைபிளில் மனிதரின் நேர்மையின்மையைக் கண்ட இறைவன் 900 ஆண்டுகளாக இருந்த மனிதரின் ஆயுளை 120 ஆகக் குறைத்தான்  என வாசகம் இருப்பதைக் குறிப்பிட்டேன்

காந்தி கூட 120 வரை வாழ்வேன் எனச் சொல்லி 78ல் சுடப்பட்டு முடிந்து போனார் என்றும்

இராமானுஜர் 120 ஆண்டு வாழ்ந்ததையும் மறு ஜென்மத்தில் அவர் தாமே மணவாள மாமுனிவர் அப்போது தனது ஆயுள் 80 என்றதையும் ஆக மொத்தம் தாம் 200 ஆண்டுகள் இந்த  மண்ணில் வாழ்ந்ததாக சொன்னதையும் சொன்னேன். அவரது மேனி இன்னும் திருவரங்கத்தில் காப்பாற்றப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டேன்...

கல்லூரியில் படித்த மலேசிய மாணவர் ஒருவர் காலையில் சாப்பிடாத வழக்கத்திலிருந்த்வரை எப்படி எனது அனுபவ அறிவுரை மூலம் மாற்றி அதிலிருந்து காலையில் உண்ணும் பழக்கத்தை அவர் கைக்கொள்ள வைத்தேன் என்பதையும், மலேசிய மாணவர்களின் சுத்தம் , குப்பையை பொது இடங்களில் போடாத பாங்கு தனது தவறாக இல்லாதபோதும் ஒரு காகிதமானாலும் கீழே கிடந்தால் எவர் இருக்கிறார் இல்லை என்பதை எல்லாம் பொருட்படுத்தாது அதை எடுத்து குப்பைத் தொட்டியில் போட்டு செல்லும் பாங்கு அவரும் நாமும் மனிதர் தாமே என்றுக் குறிப்பிட்டேன்...


 உடல் ஓம்பும் முறைகள் என வாய் சுத்தம், ஆசன வாய் சுத்தம், காலையில் காலை உணவை எக்காரணம் கொண்டும் தவிர்க்காமல் வரவேண்டுமென்பது பற்றியும் தினம் இரு முறை மலம் கழித்தல் அவசியம் என தமிழ் சித்த வைத்திய நூல்கள் சொல்வது பற்றியும் எப்படி ஒரு தனியார் பள்ளி மாணவர் இதில் எல்லாவற்றையுமே தவிர்த்துவிட்டு பள்ளிக்கு நேரம் ஆகிறது  பள்ளி முதல்வர் அடிப்பார் ஆசிரியர் திட்டுவார் வருகைப் பதிவு இல்லாமல் போய்விட்டது என பள்ளிக்கு வந்திருந்தார் என்பதையும் அவரை நான் அவர்களது பள்ளிக்கு பல் பரிசோதனை முகாமுக்கு சென்றபோது கலந்துரையாடியது பற்றிக் குறிப்பிட்டேன்.

மனம் தியானம், தீயஒழுக்கம், தீய சேர்க்கை ஐம்பூதங்களின் சீர்கேடு குடிநீர் விற்பனை மேலும் பி.டி.எஸ் படிப்பு முக்கியத்துவம், எம்பிபிஎஸ் கிடைக்காமல் நீட் மதிப்பெண் குறைவால் தற்கொலை செய்த அறிவு கெட்ட பெண்,என பேச்சு உலக அரங்கில் சுற்றித் திரிந்தது.

மருத்துவரின் சமுதாயப் பொறுப்பு, வெட்டுக்கிளி, மான், தேனீ பூங்காவனம் அப்துல்கலாம்  மயில்சாமி அண்ணாதுரை போன்றோரின் மகத்தான பணியும் வாரம் 5 நாள் கடுமையான உழைப்பு, ஒரு நாள் சேவை , ஒரு நாள் தயாரிப்பு என அவர்கள் பம்பரமாக சுழன்றாடிய கதை சொன்னேன்.

தியாகமும் சோதனைகளும் வேதனைகளும் உழைப்பும் இல்லாமல் வெற்றியே இல்லை சாதனைகளே இல்லை என்பதையும் சொன்னேன்.

மருத்துவமனை தினமாகிய மருத்துவர் முத்துலட்சுமி பிறந்த நாள் பற்றி
அருணிமா சின் ஹா பற்றி தெரியுமா என்றால் தெரியாது என்றார்கள்...அவரின் தனிமனிதப்போராட்டம் கால்களை இழந்தது கைப்பந்து, உதைப்பந்து வீரராக இருந்தது ஊனமுற்ற முதல் எவரெஸ்ட் ஏறிய வரலாற்றைக் குறிப்பிட்டேன் உடன் முனிபர் மஜாரா என்னும் இரும்புப் பெண் எனக் குறிப்பிடப்படும் முகமதிய பெண்ணின் வாழ்க்கை போராட்டம் பற்றி எல்லாம் சொன்னேன். அவர்கள் எல்லாம் இதுபோன்ற  எண்ணற்ற பெண்கள் எல்லாம் எப்படி சமுதாய சேவைக்குள் வந்து அதுவே பிறரை மகிழ்விப்பதே சிறந்த வாழ்வு தான் தன் சுகம் தனது பொருளாதார முயற்சிகள் வாழ்வாகாது என்று சொன்னதையும் குறிப்பிட்டேன்.

கஷ்டப்பட்டுத்தான் எல்லாம் முன்னேறி இருப்பர், கஷ்டப்பட்டு என்ற ஒரு வார்த்தைக்குள் ஒவ்வொரு வாழ்வுமே அடங்கி இருக்கிறது என்றுக் குறிப்பிட்டேன்

வசந்தம் சென்று விடும் ஆனால் பூக்கள் திரும்பவும் மலரும்
வாலிபம் சென்று விடும் அந்த நாட்கள் திரும்பி வரா

என்பதையும் வாழ்வு என்பதன் துவக்கம் பிறப்பு முடிவு இறப்பு இவை இரண்டும் தவிர்க்க  முடியாதவை ஆனால் நாம் அதனுள் பயணம் செய்யும்போது நமது இல்லாமைக்கு பின்னும் உலகும் நாமிருந்த இடமும் நமைப்பற்றி உயர்வாகப் பேசவேண்டும்

தாழ்வான இலக்கு என்பதே குற்றம்.

தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று என்ற குறளையும்
வெள்ளத்தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்தனையது உயர்வு

என்றும் பி.டி.எஸ் முதல் பி ஹெச் டி வரை உள்ள கல்லூரி எமது கல்லூரி என்றும், மேலும் முதல்வரே இந்திய சிறுவர் பிரிவு பல் மருத்துவத் துறைக்கு தலைவர் என்பதையும் அவரும் கூட பிடி எஸ் ...என்றுதான் ஆரம்பித்திருக்கிறார் தன் வாழ்வை என்பதையும் நினைவு கொள்ளுங்கள்....(அதெல்லாம் அவர்களுக்கு எவருமே ஏற்கெனவே சொல்ல வில்லை என்பது எனக்குத் தெரிந்தது அப்போது)

இப்படி பல்வேறுபட்ட களங்களில் சுழன்றாடிய எனது உரைவீச்சை கால வரையறைக்குள் முடித்து சரியாக 10 மணி முதல் 10.30 வரை உற்சாகமாக எனது பேச்சை இரசித்துக் கேட்ட சிரித்த முகங்களை மேலும் உருவாக்க அவர்களில் இருந்து மறக்க முடியாத சாதனை நினைவலைகளைப் பகிர்ந்து கொள்ளச் செய்தேன்.

ஒரு பெண் மாநில அளவில் சிலம்ப சாம்பியன் என்பதையும் ஜோனல் அளவில் வெற்றி இல்லாமல் இருந்தும் ஒரு ஆண்டு கடுமையான பயிற்சி அவரை மாநில அளவில் வெற்றி பெற வைத்ததைக் குறிப்பிட்டார்.

மற்றொருவர் எப்படி ஆஸ்த்மா, சிறுநீரகக் கல் போன்றவற்றிடமிருந்து மீண்டு படித்து வந்தார் என்றார்

இன்னொருவர் பள்ளியில் செய்த ப்ராஜக்ட் எப்படி சிறந்திருந்தது என்றார்

மாணவர் ஒருவர் 30 பேர் அடங்கிய கூட்டுக் குடும்பமாக இருந்தபோது எப்படி எல்லாம் இருந்ந்தோம் நிறைய வீட்டில் செய்த பலகாரங்கள் தின்பண்டங்கள் கிடைத்தான் இப்போது தனிக் குடும்பமாகி , கடையில் வாங்கிய இனிப்புகளைத்தான் தீபாவளி போன்ற  திருவிழாவுக்கெல்லாம் கூட தின்ன முடிகிறது என சமுதாயத்தை படம் பிடித்துக் காட்டினார்.

மற்றொரு மாணவி எப்படி சிபிஎஸ்சி கோர்ஸ் பள்ளியில் ஒரே நாள் தனது சகோதரியின் தேடலில் சேர்ந்து இப்போது இந்த கல்லூரியில் இடம் பிடித்தாள் என்பதையும் குறிப்பிட்டார் இல்லை எனில் நீட்டில் தலை நீட்டி இருக்க வே முடியாது என்றார்.

ஆக ஒரே அமர்க்களமாக இருந்தது அந்த  115 பொன்னான நிமிடங்கள்...தங்க விலை பவுன் ரூபாய் 30000 நெருங்குவதை விட எங்களது நேரம் மிகவும் மதிப்பு மிக்கதாக உயர உயர சிறப்பாக  விளங்க அந்த நாள் உதவியது...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Thursday, August 8, 2019

வல்லபாய் படேலின் வாரிசுகள்: கவிஞர் தணிகை

வல்லபாய் படேலின் வாரிசுகள்: கவிஞர் தணிகை

Image result for vallabhai patel statue

இரும்பு மனிதர் என புகழப்பட்ட வல்லபாய் படேலின் வாரிசுகள் என ஆளும் நடுவண் அரசு காஷ்மீரில் கை வைத்திருக்கிறது.

76 ஆண்டுகள் சுதந்திரம் அடைந்து ஆனவரை காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தில் இருந்தது அனைவரும் அறிந்ததே.

இப்போது மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டு நடுவண் அரசின் தலைமைக்கும் கீழ் கொண்டு செயல் பட்டாக வேண்டும் என்ற நிலைக்கு கொண்டு வந்ததில் சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் ஏக கடுமையான கோபம் சரி அதை விடுங்கள் அது அகில உலக அரசியல். அதை இவன் எழுதுகிறான் என்று எனைப் பிடிக்காதார் சொல்லக் கூடும்.

1. இவர்கள் செய்தது சரிதான். எதற்கும் ஒரு முடிவு உண்டு. ஆனால் நோக்கம் சரியா இல்லையா என்பதை காலம் முடிவு செய்யும். அதை வைத்துதான் இவர்கள் செய்தது சரியா என்பதும் அறிய முடியும்.

2. அம்பானி, அதானி, போன்ற தனியார் குடும்பம் அங்கு குடியேறி அழகை, சொத்தை அள்ளி அந்த இயற்கை பிரதேசத்தை சூறையாடுமா என்பதைப் பொறுத்துத்தான் இதன் வெற்றி தோல்வி எல்லாமே..



Image result for kashmir
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Monday, August 5, 2019

சினிமாவை சினிமாவாப் பாருங்கடா: கவிஞர் தணிகை

சினிமாவை சினிமாவாப் பாருங்கடா: கவிஞர் தணிகை




கோமாளி பட ட்ரெய்லர் ஒரு அலை எழுப்பி கமல் அதற்கு வருத்தம் தெரிவித்ததகவும் படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அந்தக் காட்சி நீக்கம் செய்யப்படும் என்றும் செய்திகள்

அப்படி என்ன அதில் பெரிய சேர்க்கக் கூடாது என்றால் 16 ஆண்டுகளாக கோமாவில் இருந்த படத்தின் நாயகன் அது 1996 என ரஜினி அரசியல் சேர்வதாக சொன்னது என்பதுதானாம்.

சினிமாவை சினிமாவாகவும் கலைப் படைப்புகளாகவும் பார்க்க சக்தியற்ற மனிதர்கள் நிரம்பிய நாடு என்பதற்கு இது ஒரு எடுத்துக் காட்டு. இதற்கு கமலும் விதிவிலக்கல்ல.

ஹாலிவுட் படங்கள் மற்றும் மேலை நாட்டு படங்களில் எல்லாம் ஆள்வோருக்கு எதிராகவும், நேரடியாகவும், மறைமுகமாகவும், சட்டையர் எனப்படும் சவுக்கடிகளாகவும் நிறைய தயாரிப்புகள் இருக்கும் உண்மையான நாகரீகம் உடையவர் அதை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொண்டதே இல்லை. இந்த நாட்டில்தாம் எதற்கு எடுத்தாலும் அதற்கு ஒரு ஆட்சேபணை போராட்டம் எல்லாம் ஜெவால் சினிமாத் துறையில் கலைஞர்க்கு ஆதரவாக தி.மு.க மேடையேறிய காரணத்தால் வடிவேலுவின் வாழ்க்கை வரலாறு மாறிப் போனது.

ஆனால் ஜெவின் வாழ்வு வாழ்வாங்கு வாழ்ந்ததாக சரித்திரத்தில் இல்லை.

இருவர் என்ற படம் கலைஞர் வாழ்ந்த காலத்திலேயே எம்.ஜி.ஆர், கலைஞர் காலத்தை திரைப்படத்தில் நாகரீகமாக நாசூக்காக சொல்ல முயன்றது. ஆதலால அந்தப் படம் மணிரத்தினத்திற்கு தோல்விப் படமானது.

ஜெயம் ரவியின் கோமாளி படம் நல்லாவே இருக்கு என்பது ட்ரெய்லரில் தெரிந்துவிட்டது

விருமாண்டி, தேவர்மகன், பல்ராம் நாய்டு விஸ்வரூபம் எல்லாம் கமலுக்கு மறந்து விட்டது போலும்...

சார்லி சாப்ளின் டிக்டேட்டரில் ஹிட்லரைக் கேலி செய்து படம் எடுத்திருக்கக் கூடாது என்பதுதான் இவர்களின் கருத்தா?

எல்லாமே பச்சோந்தித்தனமா இருக்கே...

கமல் ஒரு மாற்று குறைந்து விட்டார் கலைஞானி என்ற தரத்தில் இருந்து...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.
Image result for comali
கலைஞர்களும் கலைப்படைப்புகளும் தாம் இரசிகர் தரத்தை உயர்த்த முடியும் பாலூத்தி கட் அவுட்டுக்கு பூப்போடும் ரசிகராகவே வைத்திருக்கத்தான் இவர்களுக்கு எல்லாம் ஆசையா...சிந்திக்க வைக்க சினிமா எடுத்தால் அதில் ஒரு கீறலாய் அறிவுத் தீற்றல் இருந்தாலும் அதை விடமாட்டார்களா அது எப்படி  இருந்தாலும் அது பொல்லாப்பா...

காஷ்மீர் பிரச்சனயை விடவா இவை எல்லாம் மாபெரும் பிரச்சனை...ரஜினிகாந்தை பெரிய மனிதராக்கும் கூட்டம் அவரை முதல்வராகவும் ஆக்கிவிடுமோ என்ற எதிர்கால சமூக பயம் ஏற்படுவதற்கு இதெல்லாம் அடையாளம்....




Sunday, August 4, 2019

நடப்பவை சில பாதித்தவை பல‌ நண்பர்கள் தினத்தில்: கவிஞர் தணிகை

நடப்பவை சில பாதித்தவை பல‌ நண்பர்கள் தினத்தில்: கவிஞர் தணிகை


Image result for friendship day 2019

அத்தி வரதர் என்னும் காஞ்சிபுர அலட்டல்

ஜம்மு, லடாக் தனியாக யூனியன் பிரதேசமாக, காஷ்மீர் மாநிலமாக பிரிக்கப்பட்டதாக வாட்ஸ் ஆப்பில் செய்திகள் வேறு ஊடகங்களில் வரும் முன்பே...
Image result for friendship day 2019
அமெரிக்க படுகொலைகள் 24 மணிகளில் 30 பேருக்கும் மேலான உயிர் நீக்கம்

காவிரி நீர் இல்லாமல் ஆடி 18 வெறிச்சோட்டம்

சந்திராயன் இரண்டின் முதல் பூமியின் படம்

வேலூர் தேர்தல்

மும்பையில் கனமழை

அஸ்ஸாமில் வெள்ளம்

இந்தியாவில்தான் உலகிலேயே விபத்துகள் அதிகம்...ஆண்டுக்கு 5 இலட்சம் விபத்துகள் சுமார் ஒன்னரை இலட்சம் பேர் மரணம்...நிதின் கட்காரி

எனவே சாலை விதிகள் மீறுவோர்க்கு அபராதம் பலமடங்கு ஏற்றம்.
ஆகஸ்ட் 10 முதல் அமலுக்கு வரும்.

கள்ளக் காதல் ஏற்கத்தக்கது என சட்டமும் நீதியும் சொன்னாலும் நாட்டில் கொலை கொள்ளை அதனாலும் மதுவாலும் அதிகமாக  ஏடிஎம் கொலை கொள்ளைகளும், வழிப்பறிகளும் நூதன கொலை கொள்ளைகளும், நகைக்காக வழிப்பறியும், பெற்ற தாயை பிள்ளை கொல்வதும், தந்தையை மகன் கொல்வதும்,மகனை தந்தை கொல்வதும்,  தாத்தா பேத்தியைக் கொல்வதும் பிறந்த குழந்தையை கள்ளக் காதலுக்காக தாயே கொல்வதும் இப்படி கற்பனைக்கும் எட்டாத உயிர்ப்பலிகள் ஊடக வாயிலாக அன்றாடம்

அங்கு துப்பாக்கிச் சூடு, இங்கு கத்தி, அரிவாள் , சுத்தியல், கல் போன்ற ஆய்தங்கள்...மனிதம் எங்கு சென்று கொண்டிருக்கிறது...

மது மாது நாகரீகம்

ஆனாலும் மனிதம் நல் உறவு மலர ஏங்கியபடியே பயணம் சென்று கொண்டே இருக்கிறது நல்லவர்க்காக நல் வாழ்வுக்காக நல் உறவுக்காக நல் நட்புக்காக நல் நடப்புக்காக‌
Image result for friendship day 2019
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

50அடி நீருடன் மேட்டூர் அணையின் ஆடி 18 : கவிஞர் தணிகை

50அடி நீருடன் மேட்டூர் அணையின் ஆடி 18 : கவிஞர் தணிகை


Image result for 50 feet water stored metturdam adi 18 2019

வரலாறு காணாத அளவில் சென்ற ஆண்டு பொங்கி வந்த இலட்சக்கணக்கான கன அடி நீரை எல்லாம் கடலோட வழிந்து ஓட விட்டு விட்டு இன்று பரிதாபமாய்க் காட்சி அளிக்கிறது 50 அடி நீருடன் மேட்டூர் அணை.

சுமார் 50 ஆண்டுக்கும் மேலாக ஆடி 18 ஆம் பெருக்கில் அமைதியாக ஒரு நடைப்பயிற்சி மேற்கொண்டு மக்களின் உற்சாகத்தை மேம்போக்காக பார்வையிட்டு வருபவன் என்ற முறையில் சொல்ல வேண்டியது என்ன வென்றால்...

எந்த ஆண்டிலும் இல்லாத அளவு இந்த ஆண்டு மக்களின் கூட்டம் வெகுவாக குறைந்திருந்தது. மேலும் கார்களை, இரு சக்கர வாகனங்களை 16 கண் பாலத்திற்கு செல்லும் வழியில் நிறுத்தவும் இடம் அளித்திருந்தனர்.

நாங்கள் போன நேரம் மாலை சுமார் 6 மணி இருக்கும். கூட்டம் சாதரணமாக இருப்பதில் 10 மடங்கில் ஒரு மடங்கு மட்டுமே இருந்ததாகக் கொள்ளலாம்.

நீர் இருந்தால் அணைக்கு அழகு
பேர் வந்தால் மனிதர்க்கு அழகு

 கடந்த ஆண்டில் நீர் பொங்கும் பிரவாகமாய் சென்று ஓடுகையில் பாலமெங்கும் ஏகப்பட்ட வியாபாரிகள் அங்கு தினமும் திரண்ட கூட்டத்தால் பலனடைந்தார்கள்.

50 அடி நீரே இருந்த போதிலும் ஆடி 18 ஆடி 18 தான் என்ற பிடிவாத எண்ணத்தில் கொஞ்சம் கூட்டம் பொரித்த மீன் வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தது
Image result for 50 feet water stored metturdam adi 18 2019
பெரிதான நெருக்கித் தள்ளல் ஏதும் இல்லை.

பழைய ஆண்டுகளில் வாகனம் செல்ல வழி இருக்காது, மக்கள் நடக்க இடம் இருக்காது சாலையின் இருமருங்கும் மக்கள் வெள்ளமாய் சென்று கொண்டிருப்பர்.

இப்போது பேருந்துகளில் கூட அப்படி ஒன்றும் நெருக்குதல் இல்லை.

எல்லாம் பெரும்பாலும் இரு சக்கர வாகனத்திலும் சொந்த கார் வாகனங்களிலும் வந்து சென்றதும் ஒரு காரணமாக இருக்கும்.


மொத்தத்தில் பரிதாபத்துக்குரிய, வருத்தப்படும்படியாக அனுதாபத்துடன் இருந்தது இந்த ஆடி பதினெட்டாம் பெருக்கு. பெருக்கு இல்லாமல்.

இந்த நிலையில் நீர் வரத்தும் பெரிதும் குறைந்துவிட்டதாக ஹொகேனக்கல் நீர் வீழ்ச்சிக்கு வரும் நீரின் அளவை தெரிவிக்கிறது.

இந்த ஆண்டு  இதே நிலை நீடித்தால், பெருமழை மைசூர் பகுதிகளில் இல்லை எனில் குடிநீருக்கேஎ அரோகராதான்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.


ஒரு காலத்தில் இரவெல்லாம் உறக்கம் வராது, மாட்டு வண்டிகளில் எல்லாம் மக்களும் கறுப்பு சட்டிகள் மாட்டிய பயணமுமாக மக்கள் சாரி சாரியாக சென்ற வண்ணமாகவே இருப்பர்

கிராமங்களில் இருந்து எல்லா தெய்வங்களும் கத்தி கழுவ வந்து சேர்ந்திணைந்து கொள்வர்
Image result for 50 feet water stored metturdam adi 18 2019
இப்போது எவரும் நீர் அருகே செல்ல முடியா அளவில் பாதுகாப்பு.

பேரிகாய்களும் விதவிதமான தின்பண்டங்களும் விதவிதமான குழைந்தைகளுக்கான விளையாட்டுச் சாமான்களும் குவிந்து கிடக்கும் தண்ணீர்ப்பந்து, புல்லாங்குழல், சிறு சிறு வண்ண மயமான உண்டிகள், பொம்மைகள்,  ஊது குழல்கள், ராக்கெட், விமான நில ஊர்தி வாகனங்கள் இப்படி சொல்ல சொல்ல இனிக்கும் ஆடி 18ல் இந்த முறை சில கரும்புச்சாறு பிழியும் எந்திரஙகளும், சில கடைகளுமே இருந்தனர் அணையின் அடிப்பகுதியில் நீர் இருந்தது...128 அடி உயர அணையில் 50 அடி நீர் சுரங்கத்தை சுழியைத் தொட்டபடி...

இயற்கையை மனிதர் வஞ்சித்தால் இயற்கை மனிதரை வஞ்சிக்கும் என்ற சொல் எவ்வளவு பொருள் பொதிந்தது...

எனக்கு நான் சிறு வயதில் இருந்தபோது அக்கா தங்கைகளின் கைப்பிடித்துக் கொண்டு குடும்பத்தோடு மேட்டூர் அணையின் மேல் ஏறி இக்கரையிலிருந்து அக்கரை வரை சென்றதும் அக்கரையிலிருந்து இக்கரை வந்து வீடு வந்ததும் அப்படியே நினைவிருக்கையில் எப்படி இப்படி காலம் மாறிப் போயிருக்கிறது. அப்படி அணை மேல் செல்கையில் நொறுக்குத் தீனியாய் தின்ற வெறும் கடலை பொறி கூட அவ்வளவு சுவையாய் இருந்ததே இன்று அவை ஏதும் இல்லை அவற்றில் அப்படிப்பட்ட சுவையும் இல்லை.