Monday, February 27, 2017

எமன்: கவிஞர் தணிகை

எமன்: கவிஞர் தணிகை

Image result for yeman movieபொதுவாகவே விஜய் ஆண்டனி என்னும் சிரில் ராஜா அந்தோனி எதையாவது வித்தியாசமாக செய்ய முயற்சிக்கிறார் என்பதை யாவரும் அறிவர். அதில் இந்த எமன் நல்ல கதை அமைப்பு. ஆனால் கொஞ்சம் மெதுவாக ஆமை வேக நகர்த்தலால் ஸ்லோ மோஷன் பிக்சர் போல ஆகிவிடுகிறது . ஆனாலும் நிறைந்த முயற்சிக்காக பார்க்கலாம்.

இவரே இசை அமைத்துள்ளார். இவர் பாடகர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் , தமிழகத்தில் அரசியல் எவ்வாறு உள்ளது என்பதை திரைச் சித்திரமாக்க முயன்றுள்ளார்.

தந்தை அறிவுடை நம்பியை நயவஞ்சகமாக கொன்றதற்கு காரணமாக இருந்த அரசியல் பிரமுகர்களை இவர் வஞ்சம் தீர்க்கிறார். தியாகராஜன் ஒரு வில்லன்,ஆனால் இந்த அரசியல் கட்சிக்காரர்களிடை நண்பரும் இல்லை, பகைவரும் இல்லை என்ற கொள்கையின் அடிப்படையில் நகர்கிறது எதிரிக்கு எதிரி நண்பர் என்ற கோட்பாடும் இருக்கிறது.

எது எப்படி ஆனாலும் தமிழரசன் என்னும் இந்த படத்தின் எமன், யார் தம் முன் வந்து தம்மைக் கொல்ல முயன்றாலும் இராமாயணக் கதையில் வாலி பாத்திரம் போல பலம் எல்லாம் பெற்று அந்த எதிரிகள் துவம்சம் செய்யப் படுகிறார்கள். சண்டை எல்லாக் காட்சிகளுமே மெதுவாக நகர்கிறது. எதற்காக இப்படி காட்சிபடுத்தினார் என்று விளங்க வில்லை. நன்றாக புரிய வேண்டும் என்பதற்காக செய்திருந்தாலும் அதுவே இந்த படத்துக்கு ஒரு பின்னடைவாக ஆகிவிட்டது
Related image
மியா ஜார்ஜ் அழகாக இருக்கிறார்
சங்கிலி முருகன் நல்ல தாத்தாவாக வருகிறார். இறந்து தியாகமும் செய்கிறார், அரசியலில் உடன் இருப்பாரை நம்பாதே....இன்றைய அரசியல் என்றாலே அது கூலிப்படை, நம்பிக்கைத் துரோகம், கொலை, கொள்ளை, திருட்டு எவரையும் தம் சுயலாபத்துக்காக போட்டுத் தள்ளலாம் மேலும் அன்டர் கிரவுண்ட் டான் வாழ்க்கை இவைதான் எனச் சொல்லப்பட்டு சொல்லப்பட்டு தமிழ் படங்கள் யாவும் புளித்து போய்விட்டன. எனவே இந்தப் படம் கூட வித்தியாசமாக சொல்ல முயற்சி செய்யப்பட்டிருப்பினும் நம்மால் முழு நிறைவில் இரசிக்க முடியவில்லை.

நல்ல கதை அமைப்பு இதை மறுப்பதற்கில்லை. சைத்தான் அளவுக்கு மோசமில்லை. பார்க்கலாம்.
Related image


நூற்றுக்கு 35 மார்க் கொடுத்து பாஸ் போட்டு விடலாம்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Friday, February 24, 2017

கட உள் கடவுள்: கவிஞர் தணிகை

கட உள் கடவுள்: கவிஞர் தணிகை


Related imageரூபக் கடவுளும் பூசாரிகளும் இருக்கும் வரை இந்த நாட்டில்
ஒழுக்கம் தோன்றவே  வழியில்லை ‍ ______விவேகானந்தா

மூடத்தனமின்றி காசு செலவின்றி யாரும் எந்தக் கடவுளையும்
வணங்கலாம்  ___ பெரியார்.

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளல் பிரானார்க்கு வாயதுவே கோபுர வாசல்
தெள்ளத் தெளிந்தார்க்கு சீவனே சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளா மணி விளக்கே!
        ___ திருமூலர்
Image result for pass your body and find out god in your self


உன்னைக் காண‌
_________________

திருப்பதி சென்றேன்
திருவண்ணாமலை சென்றேன்
திருவரங்கம் சென்றேன்
பழநி சென்றேன்

சமயபுரம் சென்றேன்
சிருங்கேரி சென்றேன்
மூகாம்பிகை சென்றேன்
தர்மஸ்தலம் சென்றேன்

சுப்ரமண்யா சென்றேன்
காசி ராமேஸ்வரம் சென்றேன்
அமிர்தசரஸ் சென்றேன்
ஜெரூசலேம் சென்றேன்

பெத்லகேம் சென்றேன்
வாடிகன் சென்றேன்
மெக்கா, மதீனா சென்றேன்
__________________________
__________________________
______________________________


நீ

இங்கிருப்பது அறியாமலே...

        கவிஞர் தணிகை.

Image result for pass your body and find out god in your self
புறம் கட உள் பார்க்க‌
புறம் கட கடவுள் பார்க்க...


மனிதர் கையால் கட்டிய கோயிலில்
கடவுள் குடியிருப்பதில்லை    பைபிள்


அல்லா கொடுக்க நினைப்பதை எவராலும் தடுக்க முடியாது. குரான்

தெய்வம் ஒன்று தெய்வம் ஒன்று தெய்வம் ஒன்றுதான்....சிற்பி வேலாயுதம்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Wednesday, February 22, 2017

கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள்: கவிஞர் தணிகை

கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள்: கவிஞர் தணிகை


Image result for college students are ready to questioning


மெரினாவுக்கு ஜல்லிக்கட்டு அலை ஓய்ந்து விட்டது, எனினும் சில கல்லூரி இளைஞர்கள் மற்றும் இளைஞர்கள் என்னுடன் தொடர்பில் உள்ளார் அவசியம் நாட்டு நடப்பை உற்று கவனிப்பாராக கவலைப்படுவாராக மாற்ற வேண்டும் என்ற சிந்தனை உள்ளாராக இருப்பது ஒரு திருப்தியைத் தருகிறது

யார் இந்த தீபா இவருக்கு என்ன தகுதி இருக்கிறது? பன்னீர் மிகவும் ஒழுக்க சீலரா? இவர் ஜெவுக்க்கு அதாவது உச்ச நீதிமன்றத்தால் தற்போது தண்டிக்கப்பட்ட ஒரு குற்றவாளியின் நிழலைக் கூட விழுந்து வணங்கிய ஒரு அடி வருடி, அடிமைதானே? எடப்பாடி இன்றைய முதல்வர் அன்றைய முதல்வரின் கஜானாப் பொக்கிஷதாரராக இருந்தவர் என்றும் அந்தக் கட்சியின் பெரும்பணம் இவரிடம்தான் இருந்ததும் என்ற பேச்சுகள் இருக்கின்றனவே அவை உண்மையா பொய்யா? அப்படிப் பார்த்தால் இவரும் குற்றவாளிதானே? குற்றவாளிக்கு காவல் செய்தால் அதுவும் குற்றம்தானே?

குடும்பம் விட்டு கட்சியை வெளிவராமல் காக்கும் மு.க குடும்பம் பற்றி பேச ஒன்றும் இல்லை....மற்றபடி டில்லியிலிருந்து ஆட்டிப் படைக்கும் மோடிசார்ஜி பற்றியும் சொல்ல நிறைய உண்டு, விஜய் மல்லையா, ரிலையன்ஸ் அம்பானி, டி மானிட்டேஷன் இப்படியாக..

ஆக இவர்கள் எவருக்கும் தகுதி இல்லா அரசு, சட்டம், நீதி, நிர்வாகம், பத்திரைகையுடன் ஊடகம் என்ற நான்கு உளுத்துப் போன கால்களுடன் ஆட்டம் காணாமல் இருந்தும் மக்களுக்கு எதையும் செய்வதாகக் காணோமே?

இனி இந்திய மக்களுக்கு , தமிழக மக்களுக்கு யார் செய்வார்? எப்படிப் பட்ட தலைவர்கள் செய்ய வருவார், ? எப்படி நிலை மாறும், கார்ல் மார்க்ஸ் தத்துவமா? காந்தியமா? சுயநலமற்ற தியாக சிந்தையா? ஏன் இன்றைய நல்லவர்களுக்கு எந்த வித அங்கீகாரமும் இல்லை? எப்படி அரசியல் வியாதிகளுக்கும், சாதி மத சதிகார‌ மனிதர்களுக்கும் இவ்வளவு சொத்துகள் சேர்ந்தன?

உண்மையிலேயே இவர்கள் நாடாளத் தகுதி படைத்தவர்கள்தானா? இன்றைய கல்லூரி மாணவர்கள் சிந்திக்க ஆரம்பித்து கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள்...

Image result for college students are ready to questioning


மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Monday, February 20, 2017

விருதாசம்பட்டியில் பாலமுருகன் கலைக்கல்லூரியின் பெரியார் பல்கலைக் கழகத்தின் தேசிய சேவைத் திட்ட முகாமில் கவிஞர் தணிகை

விருதாசம்பட்டியில் பாலமுருகன் கலைக்கல்லூரியின் பெரியார் பல்கலைக் கழகத்தின் தேசிய சேவைத் திட்ட முகாமில் கவிஞர் தணிகை

Image result for balamurugan arts and science college


11.02.17 முதல் 16.02.17 வரை சேலம் மாவட்டம் மேச்சேரி ஒன்றியத்தில் விருதாசம்பட்டி கிராமத்தில் பாலமுருகன் கலைக்கல்லூரியின் தேசிய சேவைத் திட்ட முகாம் நடைபெற்றது அதில் 12.02.17 ஞாயிற்றுக் கிழமை சமுதாய மேம்பாட்டில் இளைஞர்களின் பங்கு என்ற தலைப்பில் நான் உரையாற்றினேன்.

55 மாணவர்களுக்காக சுமார் 90 நிமிட நேரம் உரை வீச்சு செய்தேன். அன்று உடல் நிலை சரியில்லாதபோதும் இளைஞர்களை சந்திப்பதில் பெரிதும் ஈடுபாடு கொண்டிருந்தேன்.

முனைவர் சரவணன் ஒருங்கிணைப்பாளராக இருந்து இந்த முகாமை நடத்திய காரணத்தால் அழைப்பிற்கிணங்க நானும் சம்மதித்து முகாமில் கலந்து கொள்ள வேஎண்டியதாயிற்று.

விருதாசம்பட்டி அரசினர் ஊராட்சி ஒன்றிய‌ நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்த முகாமில் சாத்தப்பாடியில் இருக்கும் பாலமுருகன் கலை அறிவியல் கல்லூரி சார்பாக நடைபெற்ற இந்த விழாவில் முக்கிய பணிகளாக:

மது ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்
இலவச கண் பரிசோதனை முகாம்
கோவில் வளாகம் தூய்மை செய்தல்
சாலை பராமரிப்பு, சாலை விதிகளைக் கடைப் பிடித்தல்
மரம் நடு விழா மற்றும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு
சீமைக் கருவேல மரங்கள் அழிப்பு
பெண் கல்வி, இளவயது திருமணத் தடுப்பின் அவசியம்

மின்னணு பணப் பரிவர்த்தனை(இது பற்றி நான் ஏதும் பேசுமளவு இன்னும் தெளிவுக்கு வரவில்லை எனச் சொல்லி விட்டேன்.

நிறைய முனைவர் பட்டம் பெற்றவர்களுக்கிடையே எனக்கு வசப்பட்ட அந்த ஞாயிறு அன்று நான் தனி ஆவர்த்தனம்.

பேச்சை 4 பகுதிகளாக்கிக் கொண்டேன். 1. முன் சொன்ன தலைப்புகளை ஒட்டி 2. எனது அறிமுகம், 3. சமூக மேம்பாட்டில் இளைஞர்களின் பங்கு. 4. பின்னோட்டம்.

ஓய்வு நேரத்தை மிகவும் பயனுள்ளதாக மாற்றிக் கொள்வோரே எதிர்காலத்தில் மிகச் சிறந்த வாழ்க்கையைப் பெறமுடியும், இந்த இளமை எவ்வளவு சீக்கிரம் ஓடி மறையப் போகிறது அதன் முக்கியத்துவம், சாதனை, குறிக்கோள், வீரிய சிந்தனை,விடாமுயற்சி என்ற நிறைய மேற்கோள்களுடன் சலிக்காமல் ஆர்வம் மிளிர இட்டு வழங்கினேன்.

நிறைய எடுத்துக்காட்டும் முன் மாதிரி மனிதர்களை வாழ்க்கையில் முன்னேற எடுத்துக் கொள்ளுங்கள் என்றும், நீங்கள் நினைத்தால் எதையும் செய்யலாம், அஸ்ஸாமில் அஸ்ஸாம் கான பரிஷத் 10 ஆண்டு ஆண்டது போல நீங்களும் அதை விட அதிகமாக ஆட்சி புரிந்து மக்களுக்கு நன்மை புரியலாம் என்றும்

இன்றைய மனிதர்கள் சாதி, மதம், இனம், மொழி ஆன்மீகம் என வெவேறு அடையாளங்களுடன் ஒருங்கிணையாமல் பிரித்து வாழ பிரிந்து வாழ வைக்கப்பட்டிருக்கிறோம்,

அதில் நமது பங்கு என்ன ? எப்படி நமது சேவையை மக்களுக்கானதாக ஆற்ற முடியும் அதில் முன் வரும் சவால்கள், எதிர்ப்புகள் எப்படி கையாள வேண்டும் என்பதற்கான எனது அனுபவங்களை எல்லாம் நல்ல வன்மையான பேச்சில் விதைத்தேன். சூட்டோடு சூடாக இதைப் பதியாமல் இப்போதுதா பதிவதால் சற்று ருசி எனக்கு குறைந்திருந்த போதிலும் பதிவதை விட்டு விட்டால் இதுவும் காணமல் போகும், எதுவும் காணாமல் போகும் என்பதற்காகவே இந்தப் பதிவு.

Image result for periyar university

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.


Saturday, February 18, 2017

எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வர்: கவிஞர் தணிகை

எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வர்: கவிஞர் தணிகைImage result for edappadi palanisamy caste

பன்னீர்செல்வம், செம்மலை, ஸ்டாலின், காங்கிரஸ், தமிழிசை எல்லாமே இதை எதிர்க்கிறார்கள், எரிகிற கொள்ளியில் எது நல்ல கொள்ளி, நல்ல குளிர், கெட்ட குளிர், நல்ல வெயில் ,கெட்ட வெயில், நல்ல அரசியல் கெட்ட அரசியல் என்றெல்லாம் இருக்கிறதா? எரிக்கிறதா? எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்...இராமன் ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்லை பாட்டுக்கு வாய‌சைத்த ரஜினிக்கு சந்திரமுகி படத்திலிருந்தே கட்டிய பல் செட்தான் .சூப்பர் ஸ்டார் யாருன்னு கேட்டா சூப்பற குழந்தையும் சொல்லும், கெட்டப்பை ஏத்துங்க, செட்டப்பை மாற்றுங்க....சினிமாப் போலிகளில் இருந்து விளைந்த முத்துகளும் சிப்பிகளும். எம்.ஜி.ஆரும், ஜெவும், கருணாநிதியும், பன்னீரும் இப்போது எடப்பாடியும்....

இரகசிய வாக்கெடுப்பு நடத்தச் சொல்லும் ஸ்டாலின் முதல்வராக வாய்ப்பே இல்லையோ...என்று தி.மு.க பொங்கி எழுந்துள்ளது,அப்பாதான் முதல் எதிரி, அண்ணன் அழகிரிதான் இரண்டாம் எதிரி இவருக்கு முதல்வாராகும் வாய்ப்பைக் கெடுக்க...குடும்பத்திடம் தி.முக கட்சியை வைத்துக் கொண்டு இவர்கள் ஜனநாயகம் பேசுவது வேடிக்கைதான்...

பன்னீர்செல்வம் இன்று ஞானோதயம் பெற்று ஜெவின் சமாதியில் புனிதமடைந்து இவரும் இரகசிய வாக்கெடுப்பு , எடப்பாடிக்கு எதிர்ப்பு, புத்தருக்கு போதிமரம், பன்னீருக்கு ஜெ சமாதி....

சசியை ஜெயிலுக்கு அனுப்பி விட்டு ஜெ இறந்து புனிதமாகிவிட்டார்.

ஜெவின் வாழ்க்கை முறையை திரும்பிப் பாருங்கள்,அந்த குற்றவாளிக்கும் 4 ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது, இறந்ததால் தப்பித்துக் கொண்டார், ஆனால் இருந்திருந்தால் மோடி இவரை அங்கே அனுப்பி இருப்பாரா அல்லது தீர்ப்பையே இன்னும் வரவிடாமலும் தடுத்திருக்கலாம்.

எல்லாமே அரசியல்ல நடக்குமய்யா, எதுதான் நடக்காது என்று வேண்டுமானாலும் கேட்டுப் பாருங்கள்...சந்திரமோகன் என்ற ஒரு நண்பர் எழுதுகிறார், எடப்பாடி கட்சியின் பணத்தை பத்தாயிரம் கோடி பணத்தை காப்பாத்தக் கொடுத்து வைக்கப்பட்டிருந்தார், இவரது உறவுகளுக்குத்தான் சேலம் ஸ்மார்ட் சிட்டி பாலம் அமைப்பு இன்பிரா ஒப்பந்தம் எல்லாம்

....ஆக இவர் தமது தொகுதியில் எம்.எல்.ஏ தேர்தலில் எப்படி வெல்ல மாட்டார் எனச் சொல்லிய காரணங்களை எல்லாம் தவிடு பொடியாக்கி 2 வாக்குக்கு அரை பவுன் தங்கம் எனக்  கொடுத்து வென்றாரோ அதே போல இந்த முதல்வர் நம்பிக்கை வாக்கெடுப்பிலும் வெற்றி பெற்று விடுவார் என வெற்றி பெறும் முன்பே கூறினேன் ஏன் எனில் இன்னும் மக்களுக்காக எம்.எல்.ஏ என நினைக்கும் கூட்டம் ஆங்காங்கே இருக்கிறது.அது முற்றிலும் தவறானது. செம்மலை மேட்டூர் தொகுதிக்கு ஏதும் நல்ல திட்டங்களை வர விடாமல் செய்து விடுவார் போலிருக்கிறது. பன்னீரோடு இருக்கிறார். சேலம் மாவட்டத்தில் 11 தொகுதிகளில் 10 பேர் அ.இ.அ.தி.மு.க எம்.எல்.ஏ என வெற்றி வாகை சூட வைத்த பெரும் அரசியல் சூதாட்டம் தெரிந்த இந்த மனிதர் முதல்வர் என்ற வரலாறு எல்லாரையும் ஆச்சரியப்பட வைக்கிறது.

ஆனால் எல்லா எம்.எல்.ஏக்களுமே கோடிகளுக்காக , தங்கத்துக்காக விலை போய் கேடிகளாகவே இருக்கிறார்கள் என்பதை நாடறியும். யார்தான் முதல்வராக தகுதியுடையோர், ஸ்டாலினா, பன்னீரா, தமிழிசையா , எல்லாமே அரசியலை முடித்து விட்டார்கள், சசிகலா பினாமி என அழைக்கப்படும் எடப்பாடி பழனிசாமி இந்த பந்தயத்தில் வென்றிருக்கிறார்.

எங்க பக்கத்து ஊருக்காரர். நான் கூட ஒரு கபாலீஸ்வரர் கோயில் குட முழுக்கு விழாவின் போது அவரை அழைக்க 2 முறை சந்தித்து பேசியிருக்கிறேன் அப்போது நெடுஞ்சாலைத் துறை அமைச்ச்ச்ச்ர், இப்போது
Image result for edappadi palanisamy caste

முதல்வர்

அட நம்ம பக்கத்து ஊர்க்கார(ர்) முதல்வரு...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Thursday, February 16, 2017

சசிகலா அல்ல இனி 9234: கவிஞர் தணிகை

சசிகலா அல்ல இனி 9234: கவிஞர் தணிகை


Image result for sasikala in parappana jail

விதியின் கைகள் மேலும் மேலும் எழுதிச் செல்லும். காலம் சில மணித்துளிகளுக்குள் எப்படி வாழ்க்கையை புரட்டிப் போடுகிறது என்பதற்கு அத்தாட்சி இந்த 21 ஆண்டு கால வழக்கின் முடிவு.

ஆனால் இந்த 9234 பற்றி மட்டுமே எல்லாமே  3 நீலச் சேலைஅல்ல‌ வெள்ளைச் சேலை, சாப்பிடத் தட்டு, குடிக்க டம்பளர் களி, சப்பாத்தி, 400 கிராம் சாப்பாடு என தினமும் வழங்கி இவற்றுடன் ஊதுபத்தி தயாரிப்புக்கேற்ற டோக்கனில் கூலி இப்படித்தான் பார்ப்பன அக்ரஹார சிறை இந்த கைதிக்கும் எல்லாம் வழங்கும் என்றாலும் கூட அவர் தியானம் செய்ய, வாரம் ஒரு முறை அசைவம், சிறப்பு வசதிகள், தமிழ் நாட்டுச் சிறைக்கே மாற்றம் எனக் காலப்போக்கில் பெறுவார் தமிழக அரசு அவர்கள் கைவசம் வரும் என்ற நிலையில்.

ஆனால் இந்த வழக்கின் நாயகி முதல் குற்றவாளி ஜெவின் கல்லறையில் பழைய முன்னால் முதல்வர் பன்னீர்செல்வம் பொன்னையன் அணியினர் கதறி கதறி அழைத்து அழுத் ஒப்பாரி வைத்த காட்சியை லைவாக ஒரு டிவி ஒளிபரப்பியது.
Image result for sasikala in parappana jail


இறந்ததால் செய்தது எல்லாம் மறைந்து விடுமா? என்ன? ஒரு முதல் குற்றவாளியை கடவுளாக வழிபடச் சென்ற பன்னீர் செல்வம் குழுவினர் பாரதிய ஜனதா கட்சியை தமிழகத்தில் விதைக்க உறுதுணைப் புரிய முனைகிறார்கள் அது எப்பேர்ப்பட்ட விளைவை எல்லாம் ஏற்படுத்தும் என எதிர்காலம் சுதாரித்துக் கொள்ளாவிட்டால் அனுபவிக்கும் இன்றைய மத்திய ஆட்சி போலவே.

சொல்ல வந்தது கைதி எண்: 9234 என்ன இருந்தாலும் இரண்டாம் குற்றவாளிதான் முதல் குற்றவாளி கும்பிட வேண்டிய கடவுளல்ல...அவர்களை வணங்கி சபதம் செய்த எவரும், கும்பிடச் செய்யும் செல்லும் எவரும் நாட்டு மக்கள் நலனின் துளியும் அக்கறை இல்லாரே.

எல்லாம் இறந்தால் மறந்து விட வேண்டும் என்ற சித்தாந்தமும், சிந்தனையும்  எந்த இரகத்தில் சேர்ந்தது என்றுதான் விளங்கவே இல்லை.தமிழ் நாட்டு மக்களில் ஒரு கட்சி சார்ந்த பிரிவினர்க்கு முதலில் அண்ணா, அடுத்து எம்.ஜி.ஆர், இப்போது ஜெயலலிதா எல்லாம் கடவுளே. இதில் ஒவ்வொருவரும் ஒரு இரகம். கடைசியில் இருப்பார் கடைத்தரமே.

இதை நீதிபதிகளும், இந்திய நீதியும், நீதிமன்றங்களும் சொல்லியபின்னும் ஏன் இந்த மக்களுக்கு விழிப்புணர்வே வராமல் இந்த பிச்சைக்காரத் தன ஓலமே இட்டுக் கொண்டிருக்கிறார்கள்? அரசியலை, ஆட்சியைல் நாட்டை முதல் தரத்துக்கு கொண்டு செல்லும் நோக்கமே இல்லையா வராதா?

எல்லா மக்களுக்கும் சம வாய்ப்பு வரும் நாளை நோக்கி அரசியல் வரவேண்டும் அதுதான் நல்ல அரசியல். எனவே கைதி எண் 9234 பற்றி மட்டுமே எண்ணாதீர்கள் அத்துடன் முதல் குற்றவாளி பற்றியும்  அவர் இருந்திருந்தால் அவருக்கும் இந்த தண்டனை இருந்திருக்கலாம், மோடி மாற்ற முனையாதிருந்திருந்தால், அல்லது அவர் இல்லாமல் போகாமல் இருந்திருந்தால்...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Thursday, February 9, 2017

சசிகலாவுக்கோ,ஓ.பி.எஸ்க்கோ எந்த தகுதியும் கிடையாது சட்டசபையைக் கலைத்து விட்டு வாக்கெடுப்பு நடத்தலாம் இந்திய அரசே: கவிஞர் தணிகை

சசிகலாவுக்கோ,ஓ.பி.எஸ்க்கோ எந்த தகுதியும் கிடையாது சட்டசபையைக் கலைத்து விட்டு வாக்கெடுப்பு நடத்தலாம் இந்திய அரசே: கவிஞர் தணிகை

Image result for service minded people must come forward to rule the countryRelated image


எல்லாம் முதல்வர் கனவு எந்த தகுதியுமே இல்லாமல்,மோடி பிரதமர் ஆகும்போது இவர்கள் எல்லாம் முதல்வர் ஆகக் கூடாதா என்ற கேள்விகளும் எழாமல் இல்லை.
Image result for tamilnadu empty assembly


நாட்டுக்கு சேவை புரிந்த மனிதர்களுக்கு மட்டுமே மக்களுக்கு ஆட்சி செய்ய அதிகாரம் கொடுக்கப் பட வேண்டும் அவர்கள் தன்னலம் இல்லாமல் உண்மையிலேயே எந்த ஊதியமும் பிரதிபலனும் எதிர்பார்க்காமல் நிர்வாகத்தை கையில் எடுத்து தம்மால் ஆனதை எல்லாம் செய்ய முனைய வேண்டும். அவர்கள் தீவிர வாதிகளாகவும் இருந்திடக் கூடாது சர்வாதிகாரிகளாகவும் அமைந்து விடக் கூடாது.

Related image

மகாத்மா காந்திக்கு உலகையே அப்படி ஆள தகுதி இருந்ததாக அன்றைய காலக் கட்டம் சொல்லியது, மதர் தெரஸாவை, அப்துல் கலாமை அந்த நிலையில் வைத்து சிந்திக்கலாம். ஆனால் அவர்கள் எல்லாம் இப்போது இல்லை. இப்போது இருப்பாரில் அப்படிப் பட்ட நல்லவர் எவராவது தட்டுப்பட்டால் அவரிடம் ஆட்சியை ஒப்படைக்க வேண்டும். அது போன்ற நாள் இந்தியாவில் தமிழகத்தில் வருமா? நல்லாட்சி மலருமா என்பதெல்லாம் கேள்விக் குறிகள்.கேலிக்கூத்தான பார்வையில் விழுந்தவை.
Image result for lesbian touches with J.Jayalalitha and sasikala\


Image result for lesbian touches with J.Jayalalitha and sasikala\எல்லாம் சாதி, மதம், கட்சி, ஆட்சி, பணக் கோபுரங்களில் முடங்கி,அதிலிருந்து மீண்டு வர முடியாமல் மக்களை மடையர்களாக்க மது அடிமைகளாக மாற்றி சிந்திக்க விடாமல் கொஞ்சமோ பிரிவினைகள் ஒரு கோடி என்றால் பெரிதாமோ? என்ற பாரதியின் வரிகளுக்கேற்ப பிரிந்து பட்டன. சாதாரண பள்ளிச் சிறுவர்கள் மத்தியில் கூட போலித்தனம், பொய்கள், பகட்டு மலிந்து விட்ட நிலையில் கற்பனைக்கெட்டா நிலை பற்றி நாம் எழுதிக் கொண்டிருப்பதாக உங்களுக்கும் படும். ஆனால் அவை மட்டுமே நல்லாட்சி தரும்.
Related image

கடைத்தட்டு மக்கள் பற்றி சிந்திக்கும். மக்களுக்கு எவை நல்லதோ அதை மட்டுமே செய்யத் தியாகம் செய்து துடிப்பார்கள். காவிரியில் 34 அடி மட்டுமே குடி நீர் இருப்பதைப் பற்றி கவலைப் பட வேண்டிய நேரத்தில் கோட்டை, கொத்தளக் கனவுகளுடன் நிலையாக இல்லாத ஆக்டிங் ஆளுனர் நோக்கி பதவி சுகத்துக்காக பதவி ஆளுமைக்காக பவருக்காக ஒரு கட்சிக்காரர்கள் இரு அணிகளாகி செய்தியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். நாடே உற்று நோக்கிக் கொண்டிருக்க...

 ஆனால் சேவையாளர்கள் மட்டுமே அந்த பதவிக்கு வந்தால் அவர்கள் எல்லாம் எல்லா மக்களுக்குமே பொதுவாக இருந்து அல்லவை தேய அறம் பெருகச் செய்திருப்பார்கள். செய்வார்கள்.

நதி நீரைக் கூட இணைக்கப் போராடி நாட்டை வல்லமை உள்ளதாக்கி இருப்பார்கள்

Image result for service minded people must come forward to rule the country


1981 வாக்கில் பல வெளி நூல்களை கதைகளுக்கு அப்பால் இருந்தும் வாசித்து வந்தேன் ஆங்கில மொழி மூலம் இருந்த டாஸ் கேபிடல் , தமிழில் இருந்த மூலதனமும் அதில் ஒன்று. தன்னை தயார்படுத்திக் கொள்ள அறிவார்ந்த சபைகளில் எல்லாம் சென்று எனது கருத்துகளைப் பதிவு செய்தேன் , விவாதம் செய்து வந்தேன்... அப்போது எனது வயது:19.
Related image


அப்படி அறிமுகம் நடந்தபோது நேரு இளையோர் மைய செயல்பாடுகளும் அதில் அடங்கும். இன்று அது மத்திய மனித வள மேம்பாட்டுத் துறையில் உள்ளது . அரசு சார்ந்த துறையில் என்ன பெரிதாக சாதித்து கிழித்திருக்க முடியும் என்ற கேள்விகள் சிலருக்கு எழக்கூடும். ஆனால் அன்றைய இளையோரை கொ. வேலாயுதம் என்னும் ஒருங்கிணைப்பாளர் நல்ல மார்க்கத்தில் வழி நடைப்படுத்தி வந்தார். உண்மையிலேயே இளையோருக்கு ஆட்சி அதிகாரம் நிர்வாகம் பற்றிய நல்ல சிந்தனையை விழிப்புணர்வை ஊட்ட ஒரு காரணமாக இருந்தார். எனவே அந்த அறிவார் சிந்தை உள்ள இளையோர் விவேகானந்தர் சொன்னபடி நல்ல நம்பிக்கை, துணிச்சல் , வீரியம்,முயற்சி உள்ள இளையோராய் நூற்றுக் கணக்கில் இருந்தனர், வந்தனர்

அப்படி இருந்தும் ஏன் ஒன்றுமே செய்ய முடியாமல் போயிற்று என்றுதானே கேட்டீர்கள், இல்லை நிறைய செய்தோம் ஆனால் எந்தவித விளம்பர ஒளியுமே அதன் பால் படவில்லை. சிறு சிறு செய்திகளாக வெளி வந்து அமிழ்ந்து போயின...


Image result for service minded people must come forward to rule the country

ஒரு செய்தி:குழந்தைத் தொழிலாளர் நலத்துக்காக பாடுபடும் கைலாஷ் சத்யார்த்தியின் நோபெல் பரிசு திருடு போய்விட்டது.


Image result for tamilnadu empty assembly

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Image result for lesbian touches with J.Jayalalitha and sasikala\

Related imageWednesday, February 8, 2017

1969க்கும் பின் தமிழகத்தை ஆண்டவர்கள் எவருமே முதல்வராக இருக்க அருகதை அற்றவர்கள்: கவிஞர் தணிகை

1969க்கும் பின் தமிழகத்தை ஆண்டவர்கள் எவருமே முதல்வராக இருக்க அருகதை அற்றவர்கள்: கவிஞர் தணிகை


Image result for classic rulers of the world

மன்னர் எவ்வழி மக்கள் அவ்வழி, மக்கள் எவ்வழி மன்னர் அவ்வழி என்பதற்கேற்ப மக்களின் தராதரம், தரா தாரம் எல்லாம் மாறிக் கொண்டிருக்க அதற்கேற்ப கடையத்தின் அபிராம பட்டர் சொன்ன கோணாத கோல் என்பதும் கோணியபடியே இருக்கிறது தமிழகத்தில் மிக நீண்ட காலமாக...

கலைஞர் கருணாநிதி,எம்.ஜி.ஆர், ஜெயலலிதா , ஓ.பி.எஸ், இனி வர யத்தனிக்கும் சசிகலா எல்லாமே எத்தர்கள்.ஏதோ ஒரு வழியில் இல்லையெனிலும் ஒரு வழியில் ஏமாற்றுப் பேர்வழிகள். நாணயம் நேர்மை எல்லாம் இல்லாதார்.ஆளத் தகுதியற்றோர். மக்கள் நலம், அவர் தம் சீரிய வாழ்வுக்கான நோக்கத்தை ஒரு துளியும் சிந்தித்துப் பார்த்து செயல்படாத வெளிப்பகட்டுப் பேர்வழிகள்தான்.

இந்த நாடு தமிழ் நாடு மது அடிமையாக மாறி விட்டதும், சாதி, மதம், வாக்கு வங்கி, ஓட்டுக்கான விலை இதன் பின்னால் போய் ஜனநாயகம் மக்களாட்சி நாறி விட்டது.

உண்மையிலேயே இதை மாற்றிக் கொடுக்க நிறைய தியாகமுறைகள் எல்லாம் இருந்தன வெளித் தெரியா எத்தனயோ தியாகங்களும், தியாகிகளும் மேல் எழும்பாமலே வெளித் தெரியாமலே துர்ந்து போயின.

அவற்றில் சில வற்றை சிலரை அடையாளம் கொடுக்க இந்த பதிவு இனி உதவும் என நம்புகிறேன்.

Related image


நாங்கள் எனச் சொல்வது முற்றிலும் சுய நலம் கலக்க விரும்பாமல் ஆட்சி புரிய நினைக்கும் அதிகாரத்தை முற்றிலும் பரவலாக்கி, சமத்துவ நெறிகளை அனைவர்க்கும் நல்ல சிந்தனையுடன் வழங்கி நல்ல ஆட்சி தர நினைத்த எம் போன்றோரின் முயற்சிகள் எல்லாம் முடங்கிப் போயின சிறு சிறு சேவையாக அதிலேயே திருப்தி, அமைதி, மகிழ்வு அடையும்படியாக காலம் கடந்து போய்விட்டது.

எல்லாவற்றிற்கும் காரணம், புகழ், போதை, பணம் பொருளாதாரம் இவற்றின் அடையாளங்கள் இல்லாததாலும், அடியாட்கள் இல்லாததாலும் எதையுமே எவருக்குமே இலவசமாக தர முடியாததாலே...

பி என் ஐ.ஏ  பில்டர்ஸ் ந்யூ இன்டியா அசோசியேசன்,  நவ இந்திய நிர்மாணிகள் இயக்கம்,

மகாத்மா காந்திய வழியில் ஊருக்கு பத்துப் பேர் இயக்கம்

தமிழக இலட்சியக் குடும்பங்கள்

என சில முயற்சிகள் செய்தோம் அதை எல்லாம் முழுதும் சொல்ல எனக்கு அவ்வளவு நினைவாற்றல் இல்லை எனிலும் சில நினைவோட்டத்தில் இடறுவதை மட்டும் சொல்ல அவாவுறுகிறேன்.

இனி தொடர்வேன்...அதில் சின்ன பையன், சசிபெருமாள், அடியேனாகிய நான், சிற்பி வேலாயுதம், இராஜாகிருஷ்ணன், செம்முனி, இராமமூர்த்தி நகர் இராமலிங்கம், விவேகானந்தன் என்ற பேரை சேக்ஸ்பியர் என மாற்றிக்  கொண்ட சேக்ஸ்பியர், செங்கிஸ்கான், எஞ்சினியர் மணி,  இப்படி இன்ன பிற நூற்றுக் கணக்கான இளைஞர்கள் இடம் பெற்றிருந்தார்கள். அவர்கள் அனைவரையும் முன்னெடுத்துச் சென்ற இயக்கப் பேச்சாளர் கவிஞர் தணிகை, ஒருங்கிணைத்த நிறுவனர் சிற்பி வேலாயுதம் ஆகியோர் உண்மையிலேயே எந்த விதமான நிர்வாகத்தையும் செய்யும் இயல்புடையவர்கள் தான் ஆனால் அவர்கள் எல்லாம் இன்று இந்த நாட்டில் அடையாளம் தெரியாமல் நாட்டுக்கு உரமாக விதையாகி விட்டார்கள், விடுவார்கள்....இனி நேரம் கிடைக்கும்போது அசை போடுவோம், பதிவிடுவோம்.

எத்தனை பேர் படிக்கிறீர் என்பதை விட பதிவு செய்த திருப்தி எனக்கு(ள்) வேண்டும்.

Related image

கார்ல் மார்க்ஸ் குழந்தைக்கு துணைவி பால் கொடுக்க முயல மார்பகத்திலிருந்து தாய்ப்பாலுக்குப் பதிலாக சரியான ஊட்டச்சத்து உண்ணாமையால் இரத்தங் கசிந்தது என்று உண்டு. அது போன்ற சரித்திர நாயகர்கள் வாழ்விலேயே கூட வறுமை உண்டு. சொல்ல முடியா வறுமை உண்டு. நாங்களும் எங்கள் கைக் காசை இட்டு உழைப்பின் மூலதனத்தை இட்டு முயற்சித்தோம். அதற்குண்டான அறுவடை செய்தோம் அது எம் உடற் பிணிகளாக....

Related image

நன்றி
வணக்கம்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Saturday, February 4, 2017

பிரவீன்குமார் D.P.C(Kuwait) 2017 02 06 பிரியதர்சினி B.E

               திருமண வாழ்த்து (ம்) மடல்

பிரவீன்குமார்                   2017 02 06         பிரியதர்சினி

Image result for very long flower gardensவார்த்தைகளில் வைத்தால் கூட நீர்த்துப் போய் விடும் (என்ற‌)
பெருமையுடைய உறவு இது.

எங்கிருந்தோ வந்தான் என் சாதி இவன் என்றான்
ஈங்கிவனை  நான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்?

பிரவீன்
 பிரியா
மணம் 
பரப்பிடும்                                  
எங்களுள் எப்போதும்
மகிழ் மலரினம்.

Related image


எதாவது செய்ய வேண்டும்
எதையாவது நிலைக்கச் செய்ய வேண்டும்
என்ற பேரன்புடன்
புறப்பட்டிருக்கும் இந்த வார்த்தைகள்

என்றும் இவர் தலைமுறைகளில் இருக்கட்டும்    
என்ற சிறு முயற்சியின் விளைவு இது!

இதில் கேள்விகளும் இல்லை பதில்களும் 
2017 பிப்ரவரி 06ல் நிகழும் 
இவர் வாழ்வின் மாற்றம்
என்றும் புதுப் பூ பூக்கட்டும்!                     

என்றும் புதுப்பிக்கட்டும்
மனித தொடர் சங்கிலிகளை

அதில் ஒரு கண்ணியாய்
நாங்களும் (தணிகை மணியம் வடிவு)
இருக்கிறோம் என்பதை கண்ணியமாய்
தொடுத்து வைக்கிறேன்

                      என்றும்                                   
                      அன்புடன்
                    கவிஞர் தணிகை.


Image result for very long flower gardens


கலாமின் சீடன்
நான்
என் சீடன் இவன்.

Image may contain: sky and outdoor
இவனுக்காக‌

எவ்வளவு பூக்களைத் தொடுத்தாலும்

அது போதவே இல்லை எனக்கு...Related image


Thursday, February 2, 2017

இந்தியாவின் இந்த மத்திய‌ பட்ஜெட் தனியார் மய ஆதரவு பட்ஜெட்: கவிஞர் தணிகை

இந்தியாவின் இந்த மத்திய‌ பட்ஜெட் தனியார் மய ஆதரவு பட்ஜெட்: கவிஞர் தணிகை


Image result for cheating budget of india

இது ஏழைங்க பட்ஜெட்டா? சமையல் எரிவாயு விலை ஏற்றமும், நியாய விலைக் கடை அஸ்கா சர்க்கரை மானியம் நிறுத்தப் பட்டதும், தொலைபேசிக் கட்டணம் உயர்வும், ஸ்வைப் மெஷின், பையோ மெட்ரிக் மெஷின்கள் விலை குறைப்பும்...

மோடியும் ஜேட்லியும் தனியாருக்கு ஆதரவு செய்த அருமையான பட்ஜெட்,ரெயில்வே இத்தோடு மூச் பேச்சு போச்சு...

மொபைல் போன் சர்க்யூட், எல்.இ.டி பல்பு உதிரி பாகங்கள் இவை எல்லாம் விலை உயருமாம், அந்தக் கம்பெனிகள் கவனிக்கவில்லையா? இல்லை அதெல்லாம் ரிலையன்ஸ் வசம் இல்லையா?

காந்தி வேஷம் போயாச்சு, மோடி விஷ(ம)ம் வந்தாச்சு... அளவில்லாமல் ஏமாத்தறா ஆட்சி.  ஆச்சி

எந்த வித பாதிப்புமில்லையாம் இந்த பட்ஜெட்டால் யார் சொல்வது ? பாருங்கள் தெரியும் கொஞ்ச நாட்களில்.

Image result for cheating budget of india


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை
Image result for cheating budget of indiaWednesday, February 1, 2017

கனவுப் பிரியனின் "சுமையா": நூல் மதிப்புரை: கவிஞர் தணிகை

கனவுப் பிரியனின் "சுமையா": நூல் மதிப்புரை: கவிஞர் தணிகை

Image result for kanavuppriyan

கனவுப் பிரியனின் முதல் முயற்சியான "கூழாங்கற்களை" படித்த போதே ஒரு சிறுகதை மன்னர் உருவாகிறார் என்ற அறிகுறி தெரிந்தது. ஆனாலும் அது கன்னி முயற்சியாகவே தெரிந்தது. அதன் தயாரிப்பு நேர்த்தியை விட இப்போது வந்திருக்கும் அவரின் "சுமையா" என்ற இரண்டாம் குழந்தை அருமையான சுகப் பிரசவமாக வெளிப்பட்டிருக்கிறது.

ஆண்டுக்கு ஒரு நூல் வெளியிட வேண்டும் என நானும் முயன்றதுண்டு. ஆனாலும் அது 2010க்கும் பின் முடியாமல் போயிற்று. இவருக்கு எல்லாம் வல்ல இயற்கை அருள் செய்யட்டும் ஆண்டுக்கொரு நூல் இவரது காலம் வரை வெளியிட...

இவரின் எழுத்துகளை முகநூலில் பகிர்ந்து கொண்டிருந்தோம், இப்போது நூல் வாயிலாக படிக்கிறோம். இந்த நூலைப் படித்தபின் உணர்வது என்ன எனில் இவர் நாவல் கூட எழுதலாம் அந்த வல்லமை இவரிடம் வந்து விட்டது.அந்தளவு இவரது எழுத்தில் ஒரு மேன்மை பக்குவம் மெச்சூரிட்டி வந்துள்ளது.

உறவுகள்,காதல், நகைச்சுவை,தொழில் நுட்பம், விழிப்புணர்வுக்கான புதிய செய்திகள், சமூக மேம்பாட்டுத் தா(க்)கம்,அறிவியல் ஆகியவை இவரது கதைகளில் உலகளாவிய பார்வையுடன், நிலம், நீர் , நெருப்பு, ஆகாயம்,காற்று ஆகிய பஞ்ச பூதங்களையும் மிகவும் அழகாக எந்தவித சிரமமும் எடுத்துக் கொள்ளாமலே தொட்டுச் செல்கிறது. எல்லைக் கோடற்ற மனித நேயத்தை கருவாக வைத்து.
Related image


அழகிய அட்டை, நல்ல தரமான தாளுடன் 21 சிறுகதைகளுடன் 214 பக்கங்களில் விலை160 ரூபாய்க்கு விற்பனை செய்ய நிர்ணயம் செய்துள்ளனர்.நூலை அனைவர்க்கும் பிடித்தமான திருவில்லிப் புத்தூர் மதிப்பிற்குரிய இரத்தினவேல் அய்யா முன்னெடுத்துச் செல்கிறார் என்பதே பெரிய பலம்.மற்றபடி பிரபலத்துக்கு ஒன்றும் குறையிராது என்றே நம்புகிறேன் நூல்வனத்தின் ஒரு நல்ல நூல்.

இனி நூலைப்பற்றி அதன் கதையைப் பற்றி சிறிது சொல்ல முற்படுகிறேன். கடைசியில் எழுத்தாளரின் மின்னஞ்சல் முகவரி மற்றும் நூல் கிடைக்கும் இரத்தின வேல் அய்யாவின் முகவரியையும் கொடுக்கிறேன்.

1. சுமையா: யுத்தம் என்பது இரு நாட்டின் மக்களுடையது அல்ல, அவர்களைக் காக்க அல்ல ஏன் போர்த்தளவாடங்களுக்கு போட்டியிட்டு தமது வளத்தை விரயம் செய்யவேண்டும் மாறாக அந்த அந்த நாட்டின் மக்களின் வாழ்வுத் தரத்தை முன்னேற்ற செலவிடலாமே என்று பிரச்சாரமாக இல்லாமல் நியாயமாக மௌனமாக தொனிக்க வைக்கிறது.

2. எனக்குப் இந்நூலில் மிகவும் பிடித்த கதை "ஆவுளியா"  அரசு என்பது அரசியல் வாதி அல்ல, அதிகாரிதான் அவர்கள் நினைத்தால் எல்லாம் செய்யலாம் என்னும், இந்தக் கதையும், மண்ணெண்ணெய் குடிச்சான் இவை இரண்டும் இவருக்கு மிக நன்றாக க்ரைம் கதையும் அதன் புலமும் சொல்ல வாய்த்திருக்கிறது என்று கட்டியம் கூறுகிறது.

நேற்றைய ஈரம் ‍ கதையில் மஜ்னு என்றால் பைத்தியக்காரன் என்று அரபியில் பொருள் எனக் கற்றுக் கொடுக்கிறார். உண்மையிலேயே லைலா மஜ்னு எனக் காதல் பற்றி பேசும்போதெல்லாம் பேசியிருக்கிறோம் ஆனால் மஜ்னு என்ற பெயர்க் காரணம் இப்போதுதான் தெரிந்து கொண்டேன்.

ஒவ்வொரு கதையையும் அட்டவணைப் படுத்தி உங்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கம் கடமைப்பாடு எனக்கு இருந்த போதிலும் புத்தகம் படித்த நெகிழ்வில் எங்கெல்லாம் தொடமுடியுமா  ஆங்காங்கு தொட்டுச் செல்லவே இந்தப் பதிவில் முயற்சிக்கிறேன்.

என்னிடம் குர் ஆன் தர்ஜமா அரபி மற்றும் தமிழ் மொழியாக்கத்துடன் இருப்பதால் ஒரு கதையில் இவர் மொழி பெயர்ப்பு பொருளை சொல்லிக் குறிப்பிட்டிருப்பது சுலபமான கற்பிதமாக எனக்கு இருந்தது. படிப்பவர் அனைவர்க்கும் அது உதவி செய்யும் விதமாக அமைந்திருப்பது நன்று.

3. நம்பி கோயில் பாறைகள், ஜெனியின் டைரி போன்ற கதைகள் எனக்கு லா.ச.இராமாமிர்தத்தின் மயக்கு வித்தை எழுத்து மோகத்தை உண்டு பண்ணுகிறது.

கதை எழுத நல்ல உழைப்புத் திறம் வேண்டும். அது கனவிடம் உள்ளது. நிறைய இடங்களில் பென்சில் எடுத்து அடிக்கோடிட்டு இரசித்துப் படிக்க வேண்டும் என வரிகள் செதுக்கப்பட்டுள்ளன அல்லது இயல்பாகவே அப்படி வரிகள் எழுத்தோட்டத்தில் வந்து உதித்தனவா எப்படி இருந்தாலும் கனவின் முயற்சி பாரட்டப் பட வேண்டியதாகவே மறுக்க முடியாமல் இருக்கிறது.

4. உணவுப் பழக்கம் பிரிக்கும் காதலை நாமும் ஏற்றுக் கொள்ளவும் முடியாமல் செரித்துக் கொள்ளவும் முடியாமல் ஆனால் நடப்பை, உண்மையை உள்வாங்கி ஏக்கப் பட்டுநிற்கிறோம்.அந்தக் காதலின் போலித்தனத்தை அவர்களது நண்பன் ஏற்றுக் கொள்ள முடியாதது போல நாமும் இருக்கிறோம். அந்த உணர்வை நமக்குள் ஊட்டி விடுகிறது எழுத்து.

5. பொதுவாகவே நேரிடையாக கதைசொல்லியாக இருக்கும் கனவுப் பிரியன் பலகதைகளை அப்படித்தான் சொல்லிச் செல்கிறார் ஆனால் அதையும் மீறி சில முடிவுகளில் சில இடங்களில் சில கதைகளில் காலத்தை கதை சொல்லியாக்கி நிற்கிறார் காலமாகி நின்று பதிவு செய்கிறார்.

 உளுத்தங்கஞ்சி வாங்கிக் கொடுத்த கூலிக்கு காதல் கடிதம் எழுதச் சொல்லியே தீர்த்து விட்டான், கேட்கவே வேண்டாம் இருந்தாலும் கேட்போமே பேச வேண்டுமே என அது போல எங்கே போகிறாய் மாவு அரைக்கவா என்றவனுக்கு இல்லை சுடுகாட்டுக்கு என்ற பதில் அந்த இடத்தில் நாமே இருந்து இரசிக்கும் நகைச்சுவை ததும்பி நிற்கிறது.

6. அது வேறு ஒரு மழைக்காலத்தில் தாத்தா பேரன் உறவு அற்புதமானதாக மாறி நிற்கிறது. பெர்முடா முக்கோணத்தின் புதிர் தற்போது விளங்கிவிட்டதான அறிவியல் செய்தியை அண்மையில் படித்தேன் இணையத்தில். ஆனால் அந்தக் கதை நேரும் நோக்கில் அவை ஒரு போதும் பிழையாக கருதப் படவே வழி இல்லாமல்  இருக்கிறது.

7. மார்கோ போலோ மர்கயா போலோ, ஷாஹிர்க்கா தட்டுக்கடை, வியாதிகளின் மிச்சம் , மரியா ப்ளோன்ஷா, அன்னக்காடி எல்லாமே மிச்சமில்லா உச்சம்தான்...முக நூலில் படித்த துணிக்கடைக்கார அண்ணாச்சி இன்னும் மறக்காததால் இந்நூலில் படிக்கும்போது இரண்டாவது முறை படிக்கும் உணர்வுடன் எனக்கு...ஆனால் முதல் முறை படிப்பார்க்கு அது சில இரசாயன மாற்றங்கள் விளைக்கும்

Related image

8. கடல் குதிரை இனத்தில் ஆண் இனம் கருத்தரிக்கும் ....அப்பா முக்கியத்துவம் குறிக்கும் பாடலை நினைவுக்கு கொண்டு வரும்.நல்ல வேளை மகன் காவல் துணை ஆய்வாளராக ஆனார் இல்லையெனில் நமக்கு அது மனக் கஷ்டத்தை ஏற்படுத்தி இருக்கும். ஜீன்கள் பொய்யாய் போவதில்லை.

9. சூது கவ்வும், தற்கொலைப்பறவைகள் பற்றி சொல்ல வில்லையெனில் அது பெரும் இழப்பு.அன்பு கொல்லப்படுவான் நீல் கொன்று விடுவான் என எதிர்ப்பார்க்கிறோம். ஆனால் நடப்பது வேறு. இந்தியாவின் இராஜதந்திரம் இலங்கைக்கு எட்டாத ஒன்று. ஈரப்பதம் பிசுபிசுப்பு நேரம் என்னும் நீரால் கழுவினாலும்  போகாமல் நன்றாக ஒட்டிக் கொள்வது கதையின் வெற்றி. கதாசிரியரின் யுக்திக்கு கிடைத்த அங்கீகாரம்.

10. தற்கொலைப் பறவைகளை மறக்க முடியவில்லை, ரசவாதம், அன்று சிந்திய இரத்தம், நீ வந்தது விதியானால் எல்லாமே இரசிக்கும்படியாக அந்த வலியை உணரும்படியாக அனுபவித்து ஜீவனுள்ளதாக எழுத்தை மாற்றி இருக்கின்றன.

வாழ்க கனவுப் பிரியன்
வளர்க இரத்தின வேல் அய்யாவின் தொண்டு.

மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.
Image result for seahorse and avuliya in ocean


to give your comments contact: usooff@gmail.com
to get book:
N.RATHNAVEL,
7,A, KOONANGULAM DEVANGAR NORTH STREET
SRIVILLIPUTTUR, 626 125
VIRUDHUNAGAR DT.
PH: 045463 262380
MOB: 9443427128
Rathnavel.natarajan@gmail.com