பிடித்த பணத்தை எல்லாம் மக்களுக்கு திருப்பி விடலாமே?: கவிஞர் தணிகை
இந்தியாவில் குடியரசுத் தலைவர் தவிர பிரதமர், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி,படைத்தளபதிகள், மாநில முதல்வர்கள், தலைமைச் செயலர்கள் தொடங்கி ஊராட்சி உறுப்பினர் வரை ஏன் வாக்குக்கு மதுப்புட்டி,பிரியாணி,200ரூபாய் இலஞ்சம் வாங்கும் குடிமக்கள் வரை யாவுமே ஊழல் மயமான நிலையில் அரசு என்ற ஒன்று அவசியமா?
ஏன் குடியரசுத் தலைவரில் கூட கண்ணாடி போட்ட பிரதீபா பட்டேல் என்னும் பாட்டியம்மா சினிமா பார்ப்பதற்கே மக்கள் பணத்தை எண்ணிலடங்காமல் வாரிவிட்டு செலவு செய்து தியேட்டரை இராஜ்பவனில் அமைத்திருந்ததும் உண்டு என்று செய்திகள் உண்டு.ஆக அடி முதல் நுனி வரை அத்தனையும் இங்கு ஊழல் மயமே...இதில் மோடி மிகவும் யோக்கியசாலி என ராகுல் காந்தி போன்றோர் சஹாரா,பிர்லா, அம்பானி மார் கதை எல்லாம் வெட்டி வெளிச்சமாக்கி விடப்படுகிறது. இவர் மக்களுக்கு நல்லது செய்கிறாராம். முதலில் இவரது கட்சியின் அத்வானி போன்ற முதியவருக்கு நன்மை செய்திருக்கிறாரா என்று பாருங்கள்...
பழைய நோட்டைப் பிடிக்கிறேன் கள்ளப்பணத்தை கறுப்புப் பணத்தை என ஒருத் திட்டம் ஆனால் அச்சடித்த பணத்தில் முக்கால் வாசி இந்த ஆண்டைகளுக்கே ரிசர்வ் பாங்கிலிருந்து நேரடியாக சப்ளை ஆகிவிட்டது. வங்கி முன் வரிசையில் நிறபவர்கள் நின்று கொண்டே இருக்கிறார்கள் 50 நாளாக.. இதில் டிஜிட்டல் இண்டியா, கோடிக்கணக்கில் ஏப்ரல் பரிசு ஏப்ரல் ஃபூல்...
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக அங்கே இவ்வளவும், இங்கே அவ்வளவும், அவரிடம் ,இவரிடம் என செய்திகள் வந்த வண்ணமே உள்ளன, இது இப்படி இருக்குமானால் அதில் வங்கி மேலான்மையும், அரசியல் பிரபலங்களும், ஆட்சி அதிகாரிகளும் (இவர்களை அலுவலர்கள் என்று சொன்னால் நிறைய பேருக்குப் பிடிக்காது)சிவில் சர்வன்ட்களும் மந்திரிமார்களும் எல்லாமே உடந்தைதான். இதைபற்றிய செய்திகளே தினமும் பாதிக்கும் மேல் மாதக் கணக்கில்...
ரெயில்வே நிலையம், மின்வாரியம், பி.எஸ்.என்.எல் எந்த மத்திய மாநில அரசு அலுவலகங்களிலுமே ஸ்வைப் இல்லை இது வரை. தனியார் கேக் கடைக்காரர் வைத்துள்ளார். இதில் எல்லா மக்களும் மாறுக மாறுக மாற்றுக என மறுபடியும் ஒரு மங்கி பாத். எல்லா வியாபாரமும் படுத்துவிட்டன. மக்கள் வாங்கும் சக்தி இற்றுப் போய் விட்டனர்.
பணம் பிடிப்பதில் வேறு பாலிடிக்ஸ், இவர் ஆளும் கட்சியா அவர் வேண்டாம், இங்கு தமிழகத்தில் பிஜேபி எப்படி கால் பதிப்பது அதைப்பார்த்து காய் நகர்த்து என மோடி பிலான்...
அம்பானிகளுக்கு ஆதரவாக ஒரு நாடே ஒரு இந்திய அரசே இயங்குகிறது என்பது கண்கூடு.
இங்கே இருக்கும் சிறு வியாபாரிகளும், குறு வியாபாரிகளும், பாதிக்கப் பட,நமது கோயம்பேடு சென்னை காய்கறி மார்க்கட் வியாபாரம் 7ல் 1 பங்காக சுருங்கி விட்டதாம். அதாவது தினமும் சுமார் 7 கோடி அளவுக்கு வியாபாரம் ஆவது 1 கோடி கூட ஆவதில்லை எனச் செய்திகள். நடுத்தர மக்களும், சிறிய தொழில் முனைவோரும், கணக்கில் வராத அனைவரும் கணக்கில் வரவேண்டும் , தணிக்கையில் வரவேண்டும், வருமானவரிக் கோட்டுக்குள் கோட்டைக்குள் வரவேண்டும் ஆனால் இந்த உச்சியில் உள்ள பிணந்தின்னிக் கழுகுகள் மட்டும் அப்படியே வாழ வேண்டும். என்னே மோடியின் திட்டம்...
கடைசியாக: இந்த பிடிக்கும் பணத்தை எல்லாம் கீழ் தட்டுக்கு வந்து சேரும் வண்ணம் எல்லா வங்கிகளுக்கும் அனுப்பி எல்லா மக்களுக்கும் சமமாக பங்கிட்டுக் கொடுக்க மடை மாற்றி திருப்பி விட்டாவது குறை தீர்க்கலாமே..செய்யுமா இந்த மாடி அரசு மோடி ஆட்சி...
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

வேதனை வேதனை நண்பரே
ReplyDeleteyes true. thanks for your feedback on this post vanakkam.
ReplyDelete