Saturday, April 30, 2016

மே தினம் உழைப்பவர் சீதனமா? கவிஞர் தணிகை

மே தினம் உழைப்பவர் சீதனமா? கவிஞர் தணிகை
அட மே தினம் ஞாயிற்றுக் கிழமையில் வந்து விட்டதே, ஒரு நாள் விடுமுறைப் போச்சே,

அட, டாஸ்மாக் கடை எல்லாம் லீவா?
நேற்றே ஸ்டாக் எல்லாம் வாங்கி வைச்சாச்சே!

மே தினம் ஞாயிற்றுக் கிழமை வந்ததால்
ஒரு லீவு போச்சே ஆனாலும்
டாஸ்மாக் கடை எல்லாம் லீவாச்சே...

இப்படி அவரவர் பார்வையில் பார்த்துக் கொண்டிருக்க மே தினத்துக்கு வருடா வருடம் அனைவரும் சேர்ந்து ஆடு வெட்டி கெடா விருந்து வைப்பார்களாம் சில நண்பர்கள் கூட்டம்

8 மணி நேர வேலையும் வேலைக்கேற்ற கூலி, சம்பளம், வருமானம் இதன் பேர் இப்படி எப்படி இருந்தாலும் சிகாகோ நகரில் இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் ஒன்று கூடி வரும் காலத்தில் தொழிலாள இனத்துக்கு நீதி செய்த தினம், அந்த நினவை போற்றும் தினம்

இப்போது இந்தியாவில் தமிழகத்தில் வெறும் விடுமுறைகான நாளாக ஒரு டாஸ்மாக் விடுமுறை நாளாக கேலிக் கூத்தாக..

ஒரு மதிப்பிற்குரிய நண்பர் என்னிடம் வந்து மேதின வாழ்த்து சொன்னார் நான் எதிர்பார்க்காமல். எனக்கு வியப்பு வந்தது. பொறுக்காமல் இயல்பை அடக்க முடியாமல் சிரித்து விட்டேன் அவர் வேறு ஏதாவது நினைத்துக் கொண்டால் என்ன செய்வது என ஏங்க ஏதாவது தப்பா சொல்லி விட்டேனா எனக் கேட்டதற்கு...சாரி சார், சரி சரி சார் உண்மைதான் சார்,நாளைக்கு சொல்வதற்கு இது அட்வான்ஸ் வாழ்த்துதான் சார் என்றெல்லாம் சொல்லி சமாளித்தேன்...

ஒரு சில வர்க்கம், கட்டடப் பணியாளர்கள், மரவேலை செய்வோர் பிலம்பர் என்னும் நீர்க்குழாய் சீர்செய்யும் பணியாளர்கள் மின் பணியாளர்கள் எல்லாம் கூட பரவாயில்லை ஒரளவு தமது வேலைக்கான கூலியைப் பெற்றுக் கொள்கிறார்கள்.அவசியமாக அந்தப் பணி தேவை ஆக இருப்பதால்.  ஆனால் அதுவும் மதுக்கடை, பீடிப் புகை,பான் பராக், புகையிலை என்று போய் விட..இந்தியாவில், தமிழகத்தில் தொழிற்சங்கங்களின் தாக்கம் மிகையாகப் போய் நிறைய நிறுவனங்கள் விலாசம் தெரியாமல் அழிந்து விட்டன.எனவே உலகத் தொழிலாளர்களே ஒன்று படுங்கள் என்னும் கோஷம் வெற்று கோஷமாகிவிட்டது. கேரளத் தொழில் நலிந்து போனதற்கு இது போன்ற கம்யூனிச சித்தாந்த தொழிற்சங்கங்கள் ஒரு காரணம் என்பர்.

எனவே இந்தியாவின் தொழில் நிறுவனங்களில் எல்லாம் தொழிலாளர் கூட்டுறவு யாவும் கலைந்து விட்டன கட்சி, சாதி. பிரிவினை எனப் பிரிந்து போய்...

இப்போது ஒரு பொறியியல் பட்டப் படிப்பு படித்த இளைஞர்க்கு சேலம் போன்ற இடங்களில் மாத ஊதியம் ரூபாய் 2500 என்றெல்லாம் வழங்கப் படுகிறது. அது அவருக்கு எப்படி போதும்?அவர் அலுவலகம் வந்து செல்லும் போக்குவரத்துச் செலவுக்காவது அது போதுமா?

இப்படி இந்தியாவில் தொழிலும் தொழிலாளர் நிலையும் மிகவும் கேலிக்குள்ளான நிலையில் மேதினம் கொண்டாட்டம் எல்லாம் மிகவும் தூரம் விலகிச் சென்று விட்டன. மாறக அதற்கு மாற்றாக செயல்கள் நடக்கவும் வழி இல்லை அவை முளையிலேயே கிள்ளி எறியப்படும் நிலைகள்.வேலையில்லாத் திண்டாட்டம் தலை விரித்து ஆடிக்கொண்டிருக்கிறது.

 பசி,பஞ்சம், பிணி, வறுமை, அத்தியாவசியத் தேவைகளுக்கும் யாசகம் பிச்சை கேட்கும் நிலை. குடிநீர், மருத்துவம், வீடு, உடை, உணவு யாவுக்கும் கை ஏந்தும் நிலை.... இந்தியா ஒரு புறம் விஜய்மல்லையாக்களாக, லலித் மோடிகளாக ஏமாற்றி ஊதிப் புடைத்து வேறு இடம் சென்றாலும் வேறு நாடு சென்றாலும் கொழுத்தபடி வாழ்ந்து கொண்டிருக்க...ஆனால் படித்த இளைஞர்கள்.... இன்றைய இளைஞர்கள் மேலை நாடுகள் நோக்கி படை எடுக்கிறார்கள் பணி வேண்டி,. எண்ணெய் வள நாடுகளும், ஐரோப்பிய , ஆஸ்திரேலிய, இங்கிலாந்து, அமெரிக்க, சிங்கப்பூர் மற்றும் கிழக்கிந்திய நாடுகள் நோக்கி பிழைக்க சென்று விடுகிறார்கள்.

இந்நிலையில் மே தின நாளும் ஒரு சடங்கு நாளாகவே விடுமுறைக்கான நாளகவே ஆகிவிட்டது.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.எங்க ஊரில் தீபாவளி இன்னைக்கு செம்மலை அ.இ.அ.தி.மு.க வேட்பாளர் வாக்கு சேகரிப்பால்: கவிஞர் தணீகை

எங்க ஊரில் தீபாவளி இன்னைக்கு செம்மலை அ.இ.அ.தி.மு.க வேட்பாளர் வாக்கு சேகரிப்பால்: கவிஞர் தணீகைஊரெங்கும் அம்மா படம் போட்ட கொடித் தோரணங்கள், ஆங்காங்கே மூங்கில் கழிகளில் கட்சிக் கொடிகள், செம்மலை வாக்கு சேகரிக்க வருகிறார் என்ற ஒலிபரப்பு,வேறு எந்த வேட்பாளரும் கட்சியும் செய்யாத அளவில் பட்டாசு வெடித்து வெற்றி வேட்பாளர் என்று முழக்கம். இப்போதே ஜெயித்து விட்டது போன்ற பிரமையை ஏற்படுத்தி விட்டார்கள்.

எந்தவித சாதனையும் செய்யாமலேயே மறுபடியும் ஆட்சிக் கட்டில் ஏறத் துடிக்கிற அரசின் பிரதிநிதிகளாய் இந்த வேட்பாளர்கள் செம்மலை உட்பட.

இந்த செம்மலைக்கு சீட்டே தராமல் தனக்குப் போட்டியாக வந்துவிடுவார் என எடப்பாடி பழனிச்சாமி ஓரங்கட்டியும், எப்படியோ அது அம்மாவுக்கு எட்டி எடப்பாடிக்கு ஒரு ஏட்டிக்குப் போட்டி வேண்டும் என இந்த செம்மலை.

ஒரு காலத்தில் தாரமங்கலம் தொகுதியில் எம்.ஜி.ஆர் காலத்தில் சீட் கிடைக்காததால் சுயேட்சையாக நின்று பொண்டாட்டி தாலியை எல்லாம் விற்று நிற்கிறேன் என ஜெயித்து அதன் பிறகு எம்.ஜி.ஆர் கட்சியில் சேர்ந்தவர் .

இப்போது இங்கு மேட்டூர் தொகுதியில். நபர் அமைதியானவர்தான் . நல்லவர்தான் தனிப்பட்ட முறையில் சொல்லப்போனால். ஆனால் இவருக்கும் பினாமி இருப்பதாக பேச்சு அடிபடுகிறது.

செம்மலையா, எஸ்.ஆர். பார்த்திபனா? ஜி.கே மணியா? இவர்கள் மூவருக்கும்தான் போட்டி. ஜி.கே.மணி நிற்பதால் எஸ். ஆர். பார்த்திபன் திறம்பட தொகுதி முழுதும் சுழன்றாடி பணி புரியத் தவறினால் செம்மலை ஜெயித்து விடக் கூடும். எப்படியோ ஜி.கே.மணி வெற்றி கொள்ள வழி இல்லை. ஆனால் இவர் வாக்குகளை பிரிப்பதால் செம்மலைக்கு வாய்ப்பு. ஆனாலும் தற்போதைய எம்.எல்.ஏ பார்த்திபனுக்கு ஒரு அரிய தகுதி உண்டு. அது செம்மலையை விட, ஜி.கே.மணியை விட இளைஞர். இந்த 5 ஆண்டுகளில் தொகுதியில் நன்கு பரிச்சயமானவர்.

எனவே தி.மு.க கடுமையாக போராட வேண்டிய சூழ்நிலை மேட்டூர் தொகுதியில் எஸ்.ஆர். பார்த்திபனைத் தக்க வைக்க வேண்டுமானால்.

ஒன்றுமே செய்யாமலே கூட்டட்தைக் கூட்டி, நிறைய செலவு செய்து வேடிக்கைக் காட்டி அ.இ.அ.தி.மு.க தமது முழுத் திறனையும் பயன்படுத்தி செம்மலை பிரமை ஏற்படுத்தி உள்ளது. அதைக் கலைக்க வேண்டிய கடமை வழக்கறிஞர் எஸ்.ஆர். பார்த்திபன் முன் உள்ளது.

எனவேதான் இத்தனை ஆர்ப்பாட்டம் வாக்கு சேகரிப்புக்கே, இடை விடாத பட்டாசு சத்தம். தீபாவளி கெட்டது போங்கள்...வேடிக்கை பார்க்கும் மக்கள், பின் தொடரும் மக்கள் அனைவரும் வாக்களிப்பாரா பொறுத்திருந்து பார்ப்போம்.
ஆயினும் மறுபடியும் சொல்கிறேன்,ஜி.கே.மணி வாக்குகளை சிறிது பிரிப்பதால் அது செம்மலைக்கு சாதகம். ஆனால் எஸ்.ஆர். பார்த்திபன் வெல்ல வேண்டிய தொகுதிதான் அதற்கு கடுமையாக பாடு பட வேண்டும்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Friday, April 29, 2016

பாரதி தாசன் : கவிஞர் தணிகை

பாரதி தாசன் : கவிஞர் தணிகை
பாரதியின் கவிதா மண்டலத்தின் தலைமை சீடர்,ஏன் பாரதிக்கே பாண்டிச்சேரியில் உதவி புரிந்தவர். ஒரே பிள்ளை மன்னர் மன்னனுக்கு வாழ்க்கைக்கு வழி செய்யாதிருந்தவர்,பாரதி தாசன் என்ற கனக சுப்புரத்தினத்துக்கு இன்று பிறந்த நாள் சிறு அசை போடல் அந்த அண்ணலுக்கு நாம் செய்யும் சமர்ப்பணமாய்.


இவரது நண்பர்தான் இவரது மகனுக்கு மன்னர் மன்னனுக்கு வானொலி நிலையத்தில் வேலை கிடைக்கச் செய்து பாரதி தாசனின் குடும்ப வாரிசு பொருளாதார சுழலில் சிக்காமல் காத்தவர்.

பாரதி தாசன் கடைசியில் சினிமா எடுக்கிறேன் பேர்வழி என ஸ்டுடியோக்களில் சிவாஜி கணேசன் போன்றோருக்காக காத்திருந்து நொந்து போனவர்.எம்.எல்.ஏ ஆக ஒரு முறை தேர்ந்தெடுக்கப்பட்டு சரியாக கவனம் செய்யாமல் மறுமுறை தோல்வி உற்றவர்.

பாரதியை விட நிறைய நூல்களை படைத்தவர். தமிழுக்கும் அமுதென்று பேர் என்றும் இவர் பேர் சொல்லும் கவிதைப் பாடல்.
இவரின் புத்தகத்தை வீட்டு நூலகத்தில் இடம் பெறச் செய்ததே ஒரு கதை.இவர்தான் பாரதியை பாண்டிச்சேரியில் மறைத்து வெள்ளையர்களிடமிருந்து பாரதிக்கு அடைக்கலம் கொடுத்தவர்.

திடீரென பள்ளியில் இருந்து வந்த மகன் ஒரு நாள்  கேட்டான், பாரதி தாசன் கவிதைப்போட்டி என ஆனால் பாரதி, நாமக்கல் கவிஞர் தொகுதி எல்லாம் இருக்க இவருடையது இல்லை. நான் எல்லாம் என்ன கவிஞர் சிக்கனத்துக்கும், கஞ்சத்தனத்துக்கும் வித்தியாசம் தெரியாமல் என உடனே செய்ய வேண்டியதாக தொகுதியை பாரதி போல நாமக்கல் கவிஞர் போல ஒரே தொகுதி என நினைத்து தேட..இவரது நூல்கள் பல பல பலப்பல என்று தெரிந்தது.

கொளத்தூர் மணி அவர்கள் தலைமையில் நடத்தி வரும் பெரியார் படிப்பகத்துக்கு படை எடுத்தேன. இருக்கும் நூலை எல்லாம் எடுத்து வந்தேன். அதன் பின்னர் ஒரு தொகுப்பு நூலை வாங்கி விட்டோம் என்பது வேறு.

பதினோராம் வகுப்பு படிக்கும்போது பில்கணீயம் என்ற வடமொழி நூலை புரட்சிக் கவி என்ற தலைப்பில் இந்த புரட்சிக்கவி இவரது மொழிபெயர்ப்பில் கவிதையாய் வார்த்திருந்தார்கள். அனலுக்கும் புனலுக்கும், கக்கும் விடப் பாம்பினுக்கும் போராடி அழகியதாய் வசதியதாய் செய்து தந்தார் அவரெல்லாம் இந்நேரம் எலியாக முயலாக இருக்கின்றார்கள், ஏமாந்த காலத்தில் ஏற்றம்கொண்டோன் புலி வேடம் போடுகின்றான்..என்றெல்லாம் ஒரு நெடுங்கவிதை ...ஒப்புவித்து முதல் பரிசு ஈட்டியது இன்றும் நிழலாட...ஓடப்பர் எல்லாம் உதையப்பர் ஆகிவிட்டால் ஒப்பப்பர் என்ற இவரது வாசகம் பிரபலம்.

பீரங்கி கொண்டு பிள்ளையாரை பிளப்போம் என பெரியாரின் பிரச்சார பீரங்கியாக இருந்தவர் கடைசிவரை. சாணிக்குப் பொட்டு இட்டு சாமி என்பார் ஞாணி நீ கண்ணுறங்கு  நகைத்து நீயும் கண்ணுறங்கு என்று தாலாட்டுப் பாடியவர் அழுது கொண்ட தூங்க மறுத்த பிள்ளைக்கு..

விவேகானந்தரின் சீடர், நிவேதிதா நிவேதிதாவின் சீடர் பாரதி, பாரதியின் சீடர் பாரதி தாசன், பாரதிதாசனின் சீடர் சுரதா, பட்டுக்கோட்டை இப்படி ஒரு தலைமுறை முடிய அடுத்த தலைறையை எழுகை செய்தது இந்த சமுதாய நல விரும்பி கவிக்கூட்டம்...

தற்போது வீரமணி அணியில் பெரும் பேச்சாளராய் இருக்கும் வழக்கறிஞர் அருள் மொழியும் நானும் சேலத்துப் பாசறையில் பாரதி பாரதிதாசன் இருவரைப்பற்றி விவாதம் புரிந்தோம் ஒரு இளம் வயதில்.அனுபவம் இருந்ததா என்று தெரியாது..அவர் பாரதி தாசனை உயர்த்தியே பேச, நான் பாரதியை தூக்கிப் பிடிக்க...ஆனால் இருவரும் அப்போதும் இப்போதும் அவரவர் வழியில் இருக்கிறோம். அந்த கூட்டம் முடிந்ததும் ஒன்றாக சேர்ந்து நடந்தது இன்னும் என் நினைவில் இருக்கிறது.

பாரதி ஸ்டைல் வேறு இவர் அவரது சீடராக இருந்தபோதும் இவரது ஸ்டைல் வேறு. தனித்தமிழ் விளையாடும். சீறும், வெட்டும் போராடும் இவரது எழுத்துகளில்.

பாரதி தாசனை எல்லாம் படித்தால் தன்மானம் இருக்கும், வீரம் பிறக்கும், தமிழின் தமிழன் என்ற செருக்கு மேலிடும்.புரட்சி செய்யத் தூண்டும்.

ஆனால் அந்த இன்பத்தை எல்லாம் நுகராமல் அனுபவிக்காமல் இந்த தமிழ் இளைஞர்கள் மாய்கிறார்களே என்று எண்ணினால் வருத்தமே மிஞ்சும்.

கொடுவாளை எடடா அந்தக் கொடியோர் செயல்  மிக அறவே  என மிரட்டுவார் விட்டெறிந்த வெள்ளித் தட்டோ என நிலவை உவமை சொல்வார்...

இன்னும் நிறைய சொல்லிக் கொண்டே போகலாம் அளவின்றி...பொருளாதாரச் சிக்கல் இல்லாமல் இருந்தால்...நாளைக்கு அதிகாலை 4 மணிக்கு எழுந்தால் மட்டுமே பணிக்கு செல்ல முடியும். அதென்னவோ இந்த மண்ணை நேசிக்கும் புலவர்களுக்கும் சேவையாளர்களுக்கும் அது பாரதி.பாரதி தாசன் அனைவருக்குமே வறுமைத் தொடர் வளர்ந்திருக்கிறது... அது நமக்கும் கூட எனவே இங்கு முடித்துக் கொண்டு இந்த பதிவை அந்த மாபெரும் கவிஞர்க்கு அஞ்சலியாக அஞ்சல் செய்து நினைவோட்டமாக ஆக்கி விடைபெறுகிறேன் நன்றி. வணக்கம்.

அவர் எழுதிய முதல் கவிதை பிரசுரிக்கப்பட்டது: எங்கெங்கு காணிணும் சக்தியடா....அதை இளமைத் திமிரில் எங்கெங்கு காணிணும் செக்ஸேயடா...என நான் எழுதி சாடிய நினவெல்லாம் தொடர்கிறது...இந்த பதிவை நான் விட்டு விலகிய போதும் என்னுள் அவரின் நினைவு தொடர்ந்தபடியே...மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Thursday, April 28, 2016

இந்தியன் பாஸ்போர்ட் 24 மணியில் டெலிவரி

நல்ல செய்தி இது ஒரு நல்ல செய்தி: கவிஞர் தணிகை

எனது பாஸ்போர்ட் காலாவதியாகி கலாவதியல்ல, ஆண்டுக் கணக்கில் கடந்து விட்டன. காலம் எல்லாவற்றையும் திருப்பிப் போட்டு விடுகின்றன.எனக்கு ஆகாயத்தில் பயணித்த அனுபவம் உண்டு எனிலும் அது இந்தியத் தலைநகர் புது டில்லி முதல் பெங்களூரு வரை.

எனது நண்பர் ஒருவர் ஏபி இண்டஸ்ட்ரீஸ் கோவையில் இருப்பவர் சீனாவுக்கு மாதத்தில் 15 நாள்...இப்படி எப்படி எல்லாமோ...வாழ்க்கை எளிதாகி விட்டது புவியை ஒரு சிறு வீடாக சுருக்கி விட்டது அறிவியல்

அது குறித்த ஒரு நல்ல செய்தி இந்த மண்ணில் இந்திய மண்ணில் எனவே அதை பங்கிட்டுக் கொள்கிறேன் இந்த கடும் கோடையில் வேட்பாளர் மனு தாக்கல் சூடு பறக்க தேர்தல் ஆணையத்தின் வழக்கபடியான நெறி ஆளுமை எல்லாம் மீறி...

அதை எல்லாம் விடுத்து இதை பதிவு செய்துள்ளேன்...

see this following news it might be very useful to you  and your familyபாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்த 24 மணி நேரத்தில் வீட்டில் டெலிவரி செய்யும் அளவுக்கு பாஸ்போர்ட் துறையின் சேவை பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகேயுள்ள கீழத் திருப்பாலக்குடி கிராமத்தைச் சேர்ந்த 6 வயது சிறுவன் கவின். இவனது பெற்றோருக்கு ஏற் கெனவே பாஸ்போர்ட் உள்ளது. மகனுக்கும் பாஸ்போர்ட் எடுக்க முடிவு செய்தனர். ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தனர். விண்ணப்பத் துடன் சிறுவனின் பிறப்புச் சான்றி தழ், பெற்றோரின் பாஸ்போர்ட் நகல் போன்ற ஆவணங்களை பதிவேற்றம் செய்தனர்.
தஞ்சாவூரில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையத்தில் கடந்த ஏப்ரல் 15-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு நேர்காணலுக்காக நேரம் கிடைத்தது. சிறுவனும், பெற்றோரும் 15-ம் தேதி காலை 10 மணிக்கு பாஸ்போர்ட் சேவை மையத்துக்குள் நுழைந்தனர். அசல் ஆவணங்கள் சரிபார்த்தல், சிறுவனின் கைரேகை பதிவு, புகைப்படம் எடுத்தல், அதிகாரிக ளுடன் நேர்காணல் என அடுத்தடுத்த 4 கவுன்ட்டர்களுக்குச் சென்றனர். எல்லா நடைமுறைகளும் 30 நிமிடங்களிலேயே முடிந்துவிட்டன.
காலை 10.30 மணிக்கு சேவை மையத்தை விட்டு வெளியே வந்தனர். ‘பாஸ்போர்ட் சேவை மையத்துக்கு வருகை தந்தமைக் காக நன்றி’ என்ற குறுந்தகவல் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டி ருந்த பெற்றோரின் செல்போன் எண்ணுக்கு காலை 10.31 மணிக்கு வந்தது. ‘காவல் துறை விசாரணை தேவையில்லை என்ற அடிப்படை யில் உங்கள் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டது’ என்ற குறுந் தகவல் காலை 10.35 மணிக்கு வந்தது.
‘பாஸ்போர்ட் அச்சிடுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன’ என்ற மற்றொரு குறுந்தகவல் காலை 11.02 மணிக்கு வந்தது. ‘பாஸ்போர்ட் அச்சிடும் பணி முடிந்துவிட்டது’ என்ற குறுந்தகவல் மதியம் 1.30 மணிக்கு கிடைத்தது. அதாவது பாஸ்போர்ட் சேவை மையத்துக்கு சென்று விண்ணப்பித்துவிட்டு, வீடு வந்து சேருவதற்குள் பாஸ்போர்ட் அச்சிடப்பட்டுவிட்டது.
‘அடுத்து விரைவு தபால் சேவை மூலம் உங்கள் பாஸ்போர்ட் அனுப்பப்பட்டு விட்டது’ என்ற குறுந்தகவல் மாலை 6.30 மணிக்கு கிடைத்தது. மறுநாள் காலை சுமார் 11 மணிக்கு வீட்டில் பாஸ்போர்ட் டெலிவரி செய்யப்பட்டுவிட்டது.
விண்ணப்பித்த 24 மணி நேரத் தில் வீட்டிலேயே பாஸ்போர்ட் டெலிவரி செய்யப்பட்ட இந்த நிகழ்வானது சிறுவன் கவின் குடும்பத்தாரை மட்டுமின்றி, இதனை அறிந்த அந்த கிராமத்தினர் அனைவரையும் பெரும் வியப்பில் ஆழ்த்தியது. பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து மாதக்கணக்கில் காத்திருந்த காலம் மாறி, 24 மணி நேரத்தில் வீட்டுக்கே பாஸ்போர்ட் கிடைக்கும் அளவுக்கு ஏற்பட்டுள்ள இந்த முன்னேற்றமே அவர்களது வியப்புக்கு காரணம்.
இந்த முன்னேற்றம் எவ்வாறு சாத்தியமானது என்பது குறித்து திருச்சி மண்டல பாஸ்போர்ட் அதிகாரி எஸ்.லிங்கசாமி கூறியதாவது:
கணினிமயம்
பாஸ்போர்ட் அலுவலக செயல் பாடுகள் அனைத்தும் 100 சதவீதம் கணினிமயமாக்கப்பட்டதுதான் விரைவான சேவைக்கான முதல் காரணம். இதன் காரணமாக நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் பெருமளவில் குறைக்கப்பட்டுவிட்டன. இதனால் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு, காவல் துறை விசாரணை அறிக்கையும் கிடைக்கப் பெற்றால் உடனே பாஸ்போர்ட் விநியோகம் செய்ய முடியும் என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
பிறப்புச் சான்று, முகவரிச் சான்று போன்ற அசல் ஆவணங்கள் எவ்வித வில்லங்கமும் இன்றி மிகச் சரியாக இருந்தால், பாஸ்போர்ட் சேவை மையத்துக்கு அழைக்கப்படும் அதே தினத்தில் அவர்கள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும். காவல் துறை விசாரணை தேவையில்லாத விண்ணப்பங்களுக்கு அன்றைய தினமே பாஸ்போர்ட் அச்சிடப்பட்டு, அடுத்த நாளோ அல்லது அதற்கு மறுநாளோ விண்ணப்பதாரருக்கு பாஸ்போர்ட் கிடைத்துவிடும். காவல் துறை விசாரணை தேவை எனில், பாஸ்போர்ட் விண்ணப்பம் ஏற்கப்படும் அதே வினாடியில் சம்பந்தப்பட்ட மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு விண்ணப்பதாரர் பற்றிய தகவல்கள் ஆன்லைன் மூலம் சென்றுவிடும். அங்கிருந்து காவல் நிலையத்துக்கு தகவல்கள் அனுப்பப்பட்டு, காவல் துறையினர் விண்ணப்பதாரரின் இருப்பிடத்துக்கு சென்று விசாரணை செய்து, அறிக்கை அனுப்புவார்கள்.
21 நாட்கள்
காவல் துறையினரின் இந்த நடைமுறைகள் முடிய அதிக பட்சம் 21 நாட்கள் ஆகும். காவல் துறை அறிக்கை எங்களுக்கு கிடைத் தவுடன், அடுத்த ஓரிரு நாட்களில் பாஸ்போர்ட் அச்சிடப்பட்டு, விண்ணப்பதாரருக்கு கிடைத்து விடும்.
ஆக, பாஸ்போர்ட் சேவை மையத்துக்கு செல்லும்போது தேவையான அனைத்து அசல் ஆவணங்களையும் மிகச் சரியாக விண்ணப்பதாரர்கள் சமர்ப்பித்தால், எங்களால் மிக விரைவில் பாஸ்போர்ட் விநியோகம் செய்ய முடியும். திருச்சி மண்டலத்தில் கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் 19 ஆயிரத்து 832 பேர் பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்தனர். அவர் களில் 18 ஆயிரத்து 256 பேருக்கு பாஸ்போர்ட் விநியோகம் செய்யப் பட்டுவிட்டது.
சாதாரண முறையிலேயே பாஸ் போர்ட் மிக விரைவாக கிடைத்து விடுவதால், தத்கால் திட்டத்தில் விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.

thanks: tamil Hindu
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

Monday, April 25, 2016

வைகோ தேர்தலில் நிற்காதது நாட்டின் மாபெரும் பிரச்சனையல்ல: கவிஞர் தணிகை

வைகோ தேர்தலில் நிற்காதது நாட்டின் மாபெரும் பிரச்சனையல்ல: கவிஞர் தணிகை
ஊடகமும், திருமாவும் சொல்லுமளவு வைகோ தேர்தலில் நிற்காதது மாபெரும் நிகழ்வல்ல...எப்போது தம் மகன் சிகரெட் விற்கலாம் அது மது போல கேடனதல்ல எனப் பேசினாரோ அப்போதே அவரது பொதுவாழ்வுக்கான தார்மீகக் கடமை முடிந்து போனது...

ஆட மாட்டாத தே....மத்தளம் சாக்கு என்றும் ஆட மாட்டாத தே.....மேடை கோணல் என்றும் ஒரு பழமொழி சொல்வார்கள்.
அது போல இவர் எதையுமே எப்போதுமே ஒரு பிடிமானமாக பற்றோடு ஒரு விடாமுயற்சியுடன் கடைசிவரை இறுதிப் பிடிப்போடு செய்தாரில்லை

சசி பெருமாள் மது விலக்கு மரணத்தின் போது  நாடெங்கும் ஒரு மாபெரும் அலை எழுப்புவது போன்று வேடிக்கை காட்டினார். அப்புறம் திசை திரும்பி மாறிப் போனார்.

கலிங்கத்துப் பட்டியில் தாயுடன் டாஸ்மாக்கை எதிர்த்தார் அதன் பின் விட்டு விட்டார்.

ஜெயலிலிதா சிறுதாவூரில் இரவு நேரத்தில் லாரிகள் உலவல்,நிலவறையில் பணம் பதுக்கல் என்றார் விட்டுவிட்டார்.

இப்போது சாதிய சதியை தி.மு.க பேரில் சார்த்தி  போட்டி இட வில்லை என்கிறார். இதில் ஏதோ உள் குத்து உள்ளது. மேலும் இவருக்கு இந்த தேர்தலில் இவர்களது இடம் என்ன எனத் தெளிவாகத்  தெரிந்து விட்டது போலும்...

மேலும் இவரின் போக்கு எப்போதும் ஒரு நிலைத்தன்மையுடன் இருப்பதில்லை.

இவர் ஏற்றுக் கொண்ட தலைமை நிற்கவே தடுமாற இவர் எடுக்கும் நிலைகளில்தான் தடுமாறுகிறார் பரவாயில்லை. இத்தனைக்கும் இவர் இவரது கூட்டணியை முன்னணிக்கு கொண்டு வர ஒரே மூச்சாக இரவு பகல் பாராமல் உணவு உறக்கம் இல்லாமல் உயிரைக் கொடுத்து பாடு படுவேன் என்கிறார்.

சாதிக் கலவரம் உண்டாக்க தி.மு.க பார்க்கிறது. எனவே விலகிக்கொண்டேன் தேர்தலில் நிற்கவில்லை என்பதை விட தோல்விபயம் துரத்துகிறது எனவே தோல்வி காணப் பயந்து விலகிக் கொண்டேன்..எனவும் சொல்லி விலகி இருக்கலாம்.

வை கோ வைக்கோ (ஆங்கிலத்தில் leave it here and Go)
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Wednesday, April 20, 2016

திமுக குண்டர்கள் நிறைந்த கட்சி அ.இ.அ.தி.மு.க தொண்டர்கள் நிறைந்த கட்சி:ஜெயலலிதா சேலத்தில்: கவிஞர் தணிகை

திமுக குண்டர்கள் நிறைந்த கட்சி அ.இ.அ.தி.மு.க தொண்டர்கள் நிறைந்த கட்சி:ஜெயலலிதா சேலத்தில்: கவிஞர் தணிகைமகுடஞ்சாவடியில் ஒரு 55 வயது முதியவரான பச்சியண்ணன் வெயில் தாங்காமல் ஜெயலலிதா கூட்டத்திற்கு சென்றவர் சாவடிக்கப்பட்டார்.வெயில் தாங்காமல். ஓட்டு சாவடிக்கு போவதற்குள் இன்னும் எத்தனை இது போன்ற மரணங்களோ? ஏற்கெனவே 3 பேர் இதே போல இறந்தனர் என்பதும் நினைவிற்கு.

இதெல்லாம் ஜெ ஆட்சிக்கு முடிவு என்று கட்டியங் கூறுகின்றன. அவரும் தி.மு.க குண்டர்கள் நிறைந்த கட்சி, தம் கட்சி மட்டுமே தொண்டர்கள் நிறைந்த கட்சி என ஓலம் பாட ஆரம்பித்து விட்டார்.இது அவரின் தோல்வி பயத்தை அப்பட்டமாக காண்பிக்கிறது.

தேர்தலுக்கு முன்பாகவே உச்ச நீதிமன்ற தீர்ப்பு வேறு வெளி வந்துவிடும் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எனக்கென்னவோ மகுடஞ்சாவடியில் நடைபெற்ற கூட்டத்திற்கு சேலம்,ஈரோடு, திருப்பூர், நாமக்கல்,நீலகிரி வேட்பாளர்களுடன் கேரளத்து வேட்பாளர்களையும் இவர் அறிமுகம் செய்தது பழையபடி ரிமோட் கன்ட்ரோல் நிகழ்வாகவே புலப்பட்டது.

இவரின் வருகையால் நிறைய நீர் வீணாக்கப்பட்டது. ‍ஹெலிகாப்டர் வந்து இறங்கும்போது ஏறும்போது மண் துகள் பறந்து விடக் கூடாதே என.

மக்கள் ஆடிக்கொண்டும் குடித்துக் கொண்டும் லாரிகளிலே ஏறிக் கொண்டும் சட்டத்துக்கு புறம்பாக திறந்த சரக்கு லாரிகளில் அந்த கடும் கொடும் வெயிலில் ஆடு மாடுகள் போல திரட்டிச் செல்லப்பட்டனர்

அவர்களைப் பார்த்தாலும் தொண்டர்கள், குண்டர்கள் என்றே சொல்லுமளவு இருந்தனர். ஒரு முதல்வர் இப்படி ஒரு குறிப்பிட்ட கட்சியை மட்டுமே தாக்கிப் பேசியுள்ளது அந்தக் கட்சிதான் இவர் கட்சிக்கு மாற்று என்று உணர்த்துவதாக உள்ளது.

இவர்கள் கட்சியில் இருப்போர் எல்லாம் தொண்டர்கள், பிற கட்சியில் இருப்போர் எல்லாம் குண்டர்கள் என்றால் அவர்கள் திருப்பி சொல்ல எவ்வளவு நேரம் ஆகும்? ஒரு முதல்வர் கண்ணியம் காக்க வேண்டியவரே இவ்வாறு பேசுவது தமிழக அரசியில் தாறுமாறாக ஆகிவிட்டதை காண்பிக்கிறது.தடுமாற்றத்தைக் காண்பிக்கிறது.இந்த வண்டி வாகனப் போக்குவரத்தால் அந்தப் பகுதியில் இருந்த கல்லூரிகளுக்கு பெரும் இடைஞ்சல். மற்ற சராசரி அன்றாட வாகனங்களுக்கும் பெரும் இடைஞ்சல்.

தேர்தல் ஆணையம் என்ன செய்கிறது இவ்வளவு சரக்கு வண்டி லாரி ட்ரக் வண்டிகளில் பாதுகாப்பற்ற முறைகளில் ஆடு மாடுகளாக மக்களை  ஏற்றிச் செல்வது பற்றி?

எமக்கு ஒரு 2 மணி நேரம் இந்த போக்குவரத்து இடைஞ்சலால் பலன் கிடைத்தது வழக்கமாக 3.30 மணிக்கு விடும் கல்லூரி 1.30 மணிக்கே விடப்பட்டது. மாணவர்களுக்கு இடைஞ்சல் போக்குவரத்து இடைஞ்சல் ஏற்பட்டு பாதிப்புகள் நிகழ்ந்து விடக் கூடாதே என....உடனே 3.40 வாக்கில் வீடு வந்து சேர்ந்தோம். ஆபத்திலிருந்து தப்பி. ஒன்று கோடை வெயில் இரண்டு ஜனத் திரளின் வம்பு.

அமர்ந்து கொண்டே இருப்பவர் தரும் விண்ணப்பத்தை நின்று கொண்டே பெறும் நிதிஷ் குமாரும் முதல்வர்தான், சாதாரண வண்டி வாகனம், நடையில் செல்லும் உம்மன் சாண்டியும் முதல்வர்தான், கம்யூனிஸ்ட் தலைவர் அச்சுதானந்தன் ரெயில் நிலையத்தில் சாதாரண‌ பயணியாக வீற்றிருக்கிறார் ஒருவரோடு ஒருவராக பிளாட்பாரத்தில் ரெயிலுக்காக அவரும் முதல்வராயிருந்தவர்தான்.ஏன் மமதா கூட எளிமைதான்.ஆனால் இவர்....

.

இவரும் முதல்வர்தான். ஆனால் இந்த வெயிலில் இவ்வளவு இறங்கி வருவார் எனவும் நான் எதிர்பார்க்கவில்லை. தேர்தல் தலைவர்களை ஒரு கலக்கு கலக்கி வருகிறது.

வழக்கம் போல் விஜய்காந்தின் அடி,இடி கதை தொடர்கிறது. இந்த முறை இடி வாங்கியவர் அவரது பாதுகாவலரே.

மறுபடியும் பூக்கும்வரை:
கவிஞர் தணிகை.

Monday, April 18, 2016

கவிஞர் தணிகையும் கூட சே குவேரா மாதிரிதான்:கவிஞர் தணிகை

கவிஞர் தணிகையும் கூட சே குவேரா மாதிரிதான்:கவிஞர் தணிகைஇவருடைய வேலை கூட மகாத்மா காந்தி , மதர் தெரஸா போன்றதுதான் என ஒரு காலத்தில் இவரது சேவைப்பணி பற்றி ஒரு மருத்துவர் முகாமுக்கு வந்திருந்தவர் குறிப்பிட்டார். சசிபெருமாள்,சின்ன பையன், தம்பி சிவராம சுப்ரமணியம் ஆகியோரை தமிழக இலட்சியக் குடும்பங்கள் அமைப்பு இழந்து விட்டது.

நாமும் போய் சேர்வதற்குள் நமைப் பற்றிய செய்திகளை சுருக்கமாக பதிவு செய்ய வேண்டுமே என்ற நோக்கத்தில் இந்தப் பதிவு.சேகுவேரா பெரிய ஆள் அவரோடு இவர் தம்மை ஒப்பிட்டுக் கொள்வது சரியா என சிலர் கேட்கலாம். ஆனால் இன்று மஸ்கட்டில் இருக்கும் நண்பர் ஒருவர் இவர் மேட்டூரின் சேகுவேரா என்று அழைத்தார். சில விஷயங்களில் இருவருக்கும் ஒற்றுமை உள்ளது. அதைப் பார்ப்போமே.எல்லாருமே எப்பவுமே இருக்கும் வரை எவரையுமே ஏற்க விரும்புவதில்லை. இல்லாத போது மறைந்த போது ஏகமாக ஆஹா ஓஹோ என்று உலகத்தில் புகழ்வது ஒன்றுதால் உலகோடு ஒட்ட ஒழுகல். ஆனால் இருக்கும்போதே சிலவற்றை சொல்லி செல்லுகிறோம்.

இருவருமே களப்பணியாளர்கள், தலைக்கு தொப்பி அணிபவர்கள்,ஒரு பணி முடிந்ததும் அடுத்த பணிக்கு சென்றுவிடுபவர்கள், இருவரும் மிக நீண்ட பயணங்கள் மேற்கொண்டவர்கள், இருவருமே பதவியையோ, பேரையோ விரும்பாதவர்கள்,சொல்லிக் கொள்ள ஆசைப்படாதவர்கள் நிறைய விதைகளை விதைக்க ஆசைப்பட்ட  சமத்துவ சமுதாயத்தின் வித்துகள் இன்னும் பல.

கல்லூரிப் பருவம் முடித்த அந்த மருத்துவர் உலகப் பயணம் புறப்பட்டார். மறுபடியும் வீடு திரும்பவில்லை.அது போல இல்லாமல் போனாலும் கூட எமது கல்லூரிப் பருவத்தில் முதலாம் ஆண்டில் சீனியர் மாணவர்களால் அரைக்கால் சட்டை போட்டுக் கொள்வதற்கு கேலி செய்யப்பட்டவர், உணவகத்தில் சாப்பிடாமல் ஸ்ட்ரைக் செய்ததற்கும் எதிராக முதலாண்டிலேயே மற்ற சீனியர் மாணவர்களை பகைத்துக்கொண்டு தம் கருத்தை வலியுறுத்தியவர்.முதலாம் ஆண்டில் அப்பாவியாகவே இருந்தவர்.

இரண்டாம் ஆண்டில் காமன் ரூம் இன்சார்ஜ் விளையாட்டு அறைக்கு பொறுப்பாளர் மாத பகுதி நேர ஊழியத்தில் ஊதியம் 100 ரூபாய். ஆனால் தனியார் கல்லூரி நிர்வாகத்துக்கு ஆதரவாக மாணவர்களைப் பற்றி கோல் மூட்டுவார், ஆயில் அடிப்பார் என அவர்கள் எதிர்பார்க்க‌
அதெல்லாம் செய்யாமல் அவர்களின் எதிர்பார்ப்பை ஏமாற்றியவர்.

மூன்றாம் ஆண்டில் முறையாக நிர்வாகம் மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டி நடத்தி இனிப்பு ,காரம், காபி (எஸ்கேசி ‍ ஸ்வீட், காரம், காபி)அவர்களது பணத்தில் கூட  வழங்க மறுத்ததால் மறு நாள் காலைக்குள் நிறுவனத்தின் தாளாளர் வருவதற்குள் மேடையை காலி செய்ததில் பெரும் பங்கு வகிக்க, கல்லூரிக்கும்,விடுதிக்கும் வராமல் மிச்சமுள்ள நாட்களில் வீட்டில் இருந்தே படித்து தேர்வு எழுதலாம் என அனுமதிக்கப்பட்டு மிக அதிகமான கெட்டவர் (மோஸ்ட் நொட்டோரியஸ்) என்ற பேர் பெற்றவ‌ர்

தகுதிக் குறைவான பணி கூட செய்யத் தயாராய் இருந்தபோதும், மேட்டூர் இரசாயனத் தொழிற்சாலை மற்றும் ஓசூரில் ஒரு ஆலையிலும் பணி வாய்ப்பு கிடைக்கப் பெறாமல் அலைந்தவர்.

திருச்செங்கோடு ஓ.பி ஏஜன்ஸிஸ் என்ற நிறுவனத்தில் அக்கவுண்ட்ஸ் பிரிவுக்கு கணக்கியல் பிரிவுக்கு பணிக்கு அழைக்கப்பட்டு அங்கே கணக்கு ஒரு துளியும் பயிற்சி அளிக்கவோ, பணி செய்யவோ விடாமல் 8 நாளிலேயே பெட்ரோல் பங்குக்கு பணி செய்ய இடம் மாற்றம் செய்யப் பட, அறை நண்பர் கை ஜோதிடம் கேட்டு அந்த நிறுவனத்திலிருந்து விலகி வீட்டுக்கே திரும்பியவர். அப்போதே காதல் வாழையடி வாழை என தன்னை நேசித்த பெண் வீட்டுக்கே பதிவுத் தபால் அனுப்பி சகோதரரும் தாயும் வந்து இது போன்று இனி செய்ய வேண்டாம் என கேட்டுக்கொள்ளப் பட்டவர்.

1983 வாக்கில் நேரு யுவக் கேந்திராவில் தேசிய சேவைத் தொண்டராக பணியும் பயிற்சியும் பிடல் காஸ்ட்ரோவாக கே.வேலாயுதம்... நிறைய பயிற்சிகள், நிறைய முகாம்கள் சொல்லில் அடங்காமல். அப்போதுதான் காந்தி கிராமத்தில் கிராமிய பல்கலைக்கழகத்தில் பயிற்சி காந்தி வழி நூல்கள் எல்லாம் படித்தது, தில்லையாடி வள்ளியம்மை கல்வி நிறுவனத்தில் முதல் பரிசு ஈட்டியது...

கன்னியாகுமரி விவேகானந்தர் இளையவர் மையத்தில் சேர அழைப்பு வந்திருந்ததை வீட்டார் அனுமதி மறுக்க, அதன் பின் தான் இந்த நேரு யுவக் கேந்திரா பணி. நிறைய பட்டி மன்ற நடுவர் பணிகள், நிறைய கவிதைகள், மக்கள் கலை பண்பாட்டுக்கழக துணைத் தலைவர் பதவியும் பொறுப்பும், இன்குலாப் சந்திப்புடன் கவியரங்க பங்கீடு, பிரிபடாமல் இருந்த சேலம் மாவட்டத்தில் பல பயிற்சிமுகாம்கள் கீழ் சாத்தம்பூர் , கன்னங்குறிச்சி, அமரக்குந்தி என எல்லா இடங்களிலும் வொர்க் கேம்ப், லீடர் சிப் ,இளையவர் முகாம், இராமமூர்த்தி நகர் இப்படி....

சேவை நிறுவனத்தில் பணி புரிய அழைப்பை ஏற்று நாடெங்கும் ஈராண்டுகள் ஒரிஸ்ஸா, ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா,பிரிபடாத மத்தியப் பிரதேசம் மற்றும் டில்லி வரை பயணங்கள் பணிச் சிறப்புகள் சொல்லி மாளாதவை..இடையே மலேரியா, டைபாய்ட், தொழு நோய்,குடற்புண், மூலம் என பல நோய் சம்பாதிப்பு, தொழு நோய் மருத்துவமனையில் கூட பணியாற்றியது..

.ஆந்திராவில் பயிற்சியின் போது கோழி எச்சங்கள் அருகே படுக்க இடம் கிடைத்ததும், கல்ராயன் மலையில் மாட்டுக் கொட்டகைகளில் படுக்க இடம் கிடைத்ததும், பாறைகளில் கொண்டு சென்ற உணவை பகிர்ந்து கொடுத்து உண்டதும் ‍ஹோசிமின் பாறையின் மேல் படுத்துறங்கியதை நினைவு படுத்த‌

சுமார் 10 ஆண்டுகள் நாட்டின் பின் தங்கிய ஆதி வாசிகள், பழங்குடியினர், மலை வாழ் மக்களுடன் உண்டு உறங்கி அவர்களுக்கு மேம்பட்ட பணிகள், விழிப்புணர்வு மற்றும் பொருளாதாரப் பணிகள் என எண்ணிறந்த மக்களுக்கு நூற்றுக்கணகான கிராமங்களுக்கு இரவு பகல் பாராமல்,ஈடு இணையற்ற உழைப்பு.வீரப்பன் கூட தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா வனப்பகுதியில் நடந்தவன் தான், ஆனால் இந்திய வனப்பகுதி முழுதும் வலம் வந்த வாய்ப்பு பெற்றவன் இந்த கவிஞர் தணிகை.

 அப்போதுதான் ஊடகம் எல்லாம் பாராட்ட ஒரு மருத்துவர் இவரது பணியும் மதர் தெரஸா,மகாத்மா பணி போன்றது தான் என்றது. தமிழகத்தில் சேலம் மாவட்டத்தில் கல்ராயன் மலை, சேர்வராயன் மலை, பால மலைகளில் நிறைய சேவைப்பணிகள். இந்தக் காலக் கட்டத்தில்தான் தமிழ்நாட்டுக்கு பிரதிநிதியாக சென்று ஹைதராபாத்தில் அப்போது நாட்டின் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியான மேதகு பி.என்.பகவதி அவர்களுடன் ஒரே மேடையில் பேசி, அவருடன் கலந்தளாவி அரை நாள் உண்டு, உலாவி மகிழ்ந்தது..எத்தனை மனிதர்கள்,எத்தனை இடங்கள்,எத்தனை வேறுபாடுகள், எத்தனை இடர்பாடுகள்...ஓ சொல்லில் மாளாமால்...

காந்தி முதலில் காங்கிரஸ் மாநாடு கூடிய இடத்தில் மலம் வாரியது போல பாலமலையில் கிராம சர்வே செய்ததுடன் இராமன் பட்டியில் பள்ளி அருகே, ஊர் அருகே இருந்த அரசு கட்டிய 8 கழிப்பகம் சரியான பயன்பாடு இன்றி நாறி வியாதி பரப்பும் சூழலிலிருந்த போது தமது கரம் கொண்டு சுத்தப்படுத்தி, அந்த மக்களுக்கு நம்பிக்கை ஊட்டியது. அது முதல் சிறு கிராம மக்கள் இவருக்கு மனக்கோயில் கட்ட ஆரம்பித்த போது எதிர் ஊடுருவல் சக்திகள் இவருக்கு சமாதி கட்ட முயன்று தப்பி கல்ராயன் மலையில் சென்று பணிகள் ஆரம்பித்தது. உடலில் ஏற்பட்ட தொழு நோய் தொற்றுக்கு மருத்துவம் செய்துகொண்டது...

1992 வாக்கில் இவருக்கும் நிறுவனத்தின் முக்கியஸ்தருக்கும் ஈகோ பிரச்சனை தலையிட பணி துறந்து தன்னிச்சையாக பணி ஆரம்பித்து பின் அதையும் விட்டு தாயின் தாளாமைக்கு ஆறுதல் தரும் பொருட்டு தமது 36 ஆம் வயதில் 1997ல் இந்தியாவின் சுதந்திரப் பொன்விழா ஆண்டில் மணம் புரிந்தது. 1998ல் மகன் மணியத்தை பெற்றுக் கொண்டது.11 புத்தகம் எழுதி வெளியிட்டது அப்துல் கலாம் கடிதம் பெற்றது எல்லாம் 2004ல் அப்போதே அந்த தானைத் தலைவர் இந்தியாவின் குடியரசுத் தலைவர். நிறைய தொலைக்காட்சி வாய்ப்புகள், வானொலி வாய்ப்புகள், பத்திரிகைத் தொடர்புகள் எல்லாமே இருந்தன...

அதன் பின் தெய்வா ஆலோசனைமையம், தெய்வா பதிப்பகம், தெய்வா தியானப் பயிற்சி மையம் என்று காலம் கடத்தியது. வலைதளங்களில் 2010 முதல் 3 வலைதளங்கள் நடத்தி வருவது, 153 நாடுகளுக்கு தமது குரலை,எழுத்தை பரப்பியது.அதில் ஒன்றை அரசும் அந்த அமெரிக்க நிறுவனமும் 1350 பதிவுகளுடன் முடக்கியது. பதிலாக மறுபடியும் பூத்தது...இடையே 3 கோவில்களில் ஆன்மீகப்பணி அதிலும் மனிதர்களுடன் முரண்பட விலகியது...முக்கியமாக சாம்பள்ளி சுடுகாட்டில் கோம்பூராங்காட்டில் கட்டப்பட்டுள்ள‌ கபாலீஸ்வரர் கோவிலுக்கு தமது 18 மாத உழைப்பை பொருளாளராக ஒருங்கிணைப்பாளராக இருந்து அதில் ஈடுபட்ட நபர்களின்  சிறுமை கண்டும் தளராமல், சலிக்காமல் செய்து முடித்தது...கோவில் நெறிகள் தமக்கு எதிரானதாக இருந்தபோதும்....

அப்துல் கலாம் மறைந்த சில மாதங்களில் வந்த அவரது பிறந்த நாளின் போது 15 பள்ளிகளுக்கு அவரது படங்கள் வழங்கி இனிப்பு கொடுத்து அரசு மின் பணி கிடைக்க உதவிய இரண்டு மூத்த குடிமகன்களுக்கு கலாம் நினைவுப் பரிசு வழங்கி... 30 ஆண்டுகளுக்கும் மேல் தியானப் பயிற்சி செய்தும் நாடி வருவோர்க்கு பயிற்சி அளித்தும்...

காலம் போன கடைசியில் மறுபடியும் பூத்து  மகனுக்காகவும், மக்களுக்காகவும், நேரமையான நட்புக்காவும் வினாயகா மிஷன் சங்க‌ராச்சாரியார் பல் மருத்துவக் கல்லூரியில் முகாம் அலுவலராக (கேம்ப் ஆபிசர்) இணைந்து மக்களுக்காக பணி ஏற்றுள்ளது...அதிலும் நற்சேவை ஆரம்பித்துள்ளது...2016 ஏப்ரல் வரை சொல்லியது சுருங்கச் சொல்லியது இது...

இது ஒரு கவிஞர் தணிகையின் வாழ்க்கைச் சரிதம் அல்ல வாழ்க்கைச் சருக்கம் சுருக்கம்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

சசி பெருமாளை விட "சின்ன பையன்"வெளித் தெரியாத பெரியத் தியாகிதான்: கவிஞர் தணிகை.

சசி பெருமாளை விட "சின்ன பையன்"வெளித் தெரியாத பெரியத் தியாகிதான்: கவிஞர் தணிகை.
 5 மாநிலத் தேர்தலில் நாடே அல்லோகலப்பட்டுக் கொண்டிருக்க இவன் என்னடா எழுதுகிறான் என நினைக்கலாம், இந்த நாட்டின் அடிப்படையில் பணி செய்த தியாகசீலர்களுக்கு நேர்ந்த கதி பற்றி பதிக்கிறேன்.

அன்பு மணி பென்னாகரம், ஜி.கே.மணி மேட்டூர் ( நான் ஏற்கெனவே எழுதியபடி)விஜய்காந்த் உளுந்தூர்ப் பேட்டை இப்படி நாளொரு மேனியும் தேர்தலின் பொழுது விடியாக் காட்சிகளாக தெரிந்து கொண்டிருக்க உண்மையான உழைப்பைப் பற்றி எழுதுகிறேன். அதற்கு நேர்ந்த கதி பற்றி எழுதுகிறேன். இந்த நாடு எப்படி விளங்கும்? நீங்கள் பார்த்துக் கொள்ளலாம்.

இந்த ஆட்டம் கட்டிக் கொண்டிருக்கும் பேர்வழிகளுக்கு எல்லாம் எந்த தகுதியுமே இல்லை. ஆனால் எல்லாத் தகுதிகளும் இருந்த கன்னங்குறிச்சி காமராசர் சுமார் 74 வயதில் சில மாதங்கள் முன் இறந்து போன " சின்ன பையன்" சேலம் வடக்குத் தொகுதியில் மது விலக்கு வேட்பாளராக தமிழக இலட்சியக் குடும்பங்கள் சார்பாக நிறுத்தப் பட்டு 800க்கும் சற்று அதிகமான வாக்குகள்  சொற்பமாக பெற்று படு தோல்வி அடைந்தார். இல்லை நாங்கள் படுதோல்வி அடைந்தோம்.அவருக்காக சில நாட்கள் அடியேனாகிய நானும் சென்று பிரச்சாரம் செய்தேன்.

சசி பெருமாளை விட வயதில், சேவையில், பழகும் முறைகளில் எல்லாவகையிலுமே இந்த " சின்ன பையன்" என்னும் பெரியவர் சிறந்தவர். எனது வீட்டிற்கும் சில முறை வந்திருக்கிறார். இனி வரமுடியாது.

எமது இயக்கம் சார்பாக இவரையே மக்களை சந்திக்கும் முதல் வேட்பாளராக களம் இறக்கினோம். முடிவு முன்பு சொன்னதுதான். ஆனால் இவரை விட எந்த வகையிலும் உயர்ந்திடாத‌ எமது இயக்க நண்பர் ஒருவரே ஒரு சாதிய பிடிப்பு மிக்க கட்சியில் நின்று எம்.எல்.ஏ வாக ஒரு முறை இருந்து விட்டார். அவரும் எமது பாசறையில் வளர்ந்து திசை மாறிய வெள்ளாடுதான்.
சசி பெருமாளை விட இவர் எப்படி உயர்ந்த தியாகி என்னும் கேள்விக்கு வரும் பதில்கள்: இவர் திருமணமாகா என்றும் இளையவராகவே இருந்தவர். சின்ன பையன் என்னும் பேருக்கேற்றபடி சிட்டு மாதிரி பறந்து திரிந்தவர், காலில் செருப்பணியாமலே வாழ்ந்தவர். இவரை மதுவிலக்கு வேட்பாளராக சேலம் வடக்குத்தொகுதியில் நிறுத்தியபோது கடந்த தேர்தலில் எல்லா இடங்களுக்கும் காலில் செருப்பு கூட அணியாமல் வலம்வந்த‌ தியாகி.

கடைசியில் எல்லாம் ஈடு கொடுத்து நடக்கவே முடியவில்லை அவ்வளவு உடல் தளர்ந்த போதும் சிரித்த முகம் மாறாமல் மக்களுக்கு சேவை என்றால் எங்கிருந்தாலும் ஓடி வருபவர்.

இவரின் நடவடிக்கைகளும் சிரிப்பும் ஓட்டமும், ஆடை அணியும் முறைகளும் குட்டையான கட்டையான உருவமும், சுருள் முடியும் பெரு நெற்றியும் கை மடிப்பு வரை போடும் சட்டையும் எப்போதும் வெள்ளை வேட்டி சட்டையும், குரலும் எல்லாமே என்னுள் அப்படியே இருக்கிறது. ஆனால் அவர் இல்லை.இதைத்தான் இதனால்தான் வாழ்வே மாயம் என்கிறார்களோ!


பூர்வீகத்தில் காங்கிரஸ்/என்றும் காங்கிரஸ் கட்சிதான் எமது கட்சி என்பார். கதர் அல்லது வெண்ணிற வேட்டிசட்டைதான். இத்தனைக்கும் இவர் பெரிய கைப்பந்து கற்றுக் கொடுப்பாளராக விளங்கியவர்  கன்னங்குறிச்சி ஊரில் நிறைய இளைஞர்களுக்கு கைப்பந்து கற்றுக்கொடுத்து நாடெங்கும் அனுப்பி விளையாடி போட்டிகளில் பரிசு ஈட்ட உறுதுணையாக இருந்தவர்.

மேட்டூருக்கும் கூட சில முறை அப்படி வந்தவர் எனை வீட்டில் வந்து சந்தித்திருக்கிறார். இவர்கள் ஊரில் கன்னங்குறிச்சியில் 7 நாட்களும் வார முழுதும் ஒரு நாடகக் கலை விழா நடத்தினோம். அதன் ஒருங்கிணைப்புப் பணியில் ஈடுபட்டிருந்தேன் அப்போது ஆண்டு 1983 என நினைக்கிறேன்.அதிலிருந்து எனது மிக நெருங்கிய நண்பராகவே இருந்தவர். முகம் கோணாதவர். எதற்குமே கலங்காதவர்.

வயதில் என்னை விட 20 வயதுக்கும் மேல் மூத்தவராக இருந்த போதும் என்னை சார் சார் என அன்பொழுக அழைப்பார். மரியாதை கொடுப்பார். ஏன் அனைவரையுமே தோளில் தட்டி, கரம் கொடுத்து குலுக்கி சிரித்து சிரித்து பேசி இந்த மனிதர் இன்னும் கொஞ்சம் நேரம் நம்மோடு இருக்க மாட்டானா என நேசிக்கும் வண்ணம் இருந்தவர் இன்று இல்லை. இந்த மனிதன் இன்னும் நம்மோடு பல ஆண்டுகள் இணைந்து வாழ்ந்திருக்கக் கூடாதா இயற்கையே இறையே உனக்கும் நல்லவர்கள் என்றால் அதிகம் பிடிக்குமா? எடுத்துக்கொண்டாயே சுமார் 74 வயதுக்குள் அவரை...

சொன்னால் சொன்ன படி கேட்பார். சசி பெருமாள் மாதிரி தன்னை பிரமாதப்படுத்திக் கொண்டு இயக்கத்துக்கு கட்டுப்படாமல் நடக்கவே மாட்டார்.குடிகாரர் காலில் விழுந்ததும், சேலம் ரெயில் நிலையத்தில் பிச்சை எடுத்ததும், செல்பேசி மின் அலைக் கோபுரங்க‌ளில் ஏறியதும் எங்களை மீறிய செயலாகவே நாங்கள் அறிவுறுத்தினோம் சசி பெருமாளுக்கு.இயக்கத்தை மீறி வழி நடந்தார் எங்கோ அந்த வழி கூட்டிச் சென்று விட்டது. இந்த வைகோவும் திருமாவும் இந்த தேர்தல் நேரத்தில் சசியை நினைக்கவும் முடியுமா? அன்று அவர்கள் தான் சவத்துக்கு தோள் கொடுத்து தூக்கிச் சென்றவர்கள். நாங்கள் எல்லாம் யார் என்றே உலகுக்குத் தெரியாது. எப்போதும் வேர்கள் வெளித் தெரிவதில்லை. தெரியாதிருப்பதும் நல்லதும் கூட.

எனது பேச்சென்றால்சின்ன பையனுக்கு  அவ்வளவு இஷ்டம். சசியும் கூட அப்படித்தான் விரும்புவார் என்ன இருந்தாலும் தணிகை யிடம் ஈடு கொடுக்க முடியுமா என்ற சசியின் சொல் இன்னும் என் காதில் ஒலித்த வண்ணம் இருக்கிறது அந்த நபர்கள் இருவருமே இன்று இல்லை. சின்ன பையன்  பல்வேறுபட்ட நிகழ்வுகளிலும் அவரது ஊரான கன்னங்குறிச்சியில் என்னை அழைத்து பேச வைப்பார். கன்னங்குறிச்சி பேருந்து நிலையம் அந்த மாரியம்மன் கோவில் அருகே எல்லாம் அவர் மூலமாக எனது உரை வீச்சு மக்களுக்காக நிகழ்த்தப் பட்டது இன்றும் பசுமரத்தாணி போல நினைவுள்ளது.

உண்மையான பெரிய தியாகத்துக்கு மதிப்பே இல்லை. இந்த ஏழைத் தியாகி வாழ்ந்த முறைக்கு எதுவுமே கிடைக்கவில்லை. அதுதான் தியாகமே. ஏழையாகப் பிறந்து ஏழையாக வாழ்ந்து ஏழையாக அனைவர்க்கும் சேவை செய்து ஏழையாகவே போய்விட்டார். இவருடைய உடல் தெருவில் கிடத்தப்பட்டிருந்தது. இயக்க நண்பர்கள்  இறுதி நிகழ்வில் கலந்து கொண்டனர்.நேரு யுவக் கேந்திரா பணிகளை கையில் எடுத்துக்கொண்டு ஓடி ஆடி அவ்வளவு அழகாக செய்வார். அதற்காக நிறைய பயணம் செய்தும் இருக்கிறார். இளைஞர் அமைப்பும் கைப்பந்துக் கழகமும் இவரது மூச்சு. ஆனால் இப்போது இவரது மூச்சடங்கி விட்டது.

சசிபெருமாள் அலை பரப்பி இறந்தார். நாடே செய்தி கேட்டது. ஆனால் இவர் எல்லாம் பற்றி எனைப்போன்றவர்தான் நினைக்கிறோமே தவிர வேறு யார்? அப்புறம் எப்படி இந்த நாடு விளங்கும்?

முதலில் சசிபெருமாள்
அடுத்து சின்ன பையன்
தம்பி சிவ ராம சுப்ரமணியம் ‍ இவரும் நமது இயக்க நண்பரே ஆனால் இவர் இவர் வீட்டருகே சாலையில் வாகனப் போக்குவரத்து விபத்தில் இறந்திருக்கிறார். நெடிதுயர்ந்த உருவம் எப்போதும் சிரிப்பு,இந்த  நண்பரையும் நான் பார்த்து பல்லாண்டு ஆகிவிட்டது.

சின்ன பையனைக் கூட எப்போது கடைசியாக பார்த்தேன் என எனக்கு இப்போது நினைவில்லை.ஆண்டுகள் சில இருக்கலாம்.

சசி மதுவிலக்குப் பிரச்சாரத்தில் வீட்டுக்கு வந்து  2 நாள் இருந்தார்.

எங்கள் இயக்கத்தின் நண்பர்கள் ஒவ்வொருவராக இழந்து வருகிறோம். கடைசியில் நாங்களும், வேலாயுதம், சேக்ஸ்பியர் என்னும் விவேகானந்தன், அடியேன் அனைவருமே அப்படித்தான் உலகின் அலைபரப்பில் இருந்து கூட விடைபெறுவோமோ?

முதன் முதலில் மதுவிலக்குக்காக 5 இலட்சம் கையெழுத்து பெற்று முதல்வர் செயலலிதாவிடம் அளித்தது எமது தமிழக இலட்சியக் குடும்பங்கள் என்ற அமைப்புதான். பா.ம.க மதுவிலக்கு பற்றி அனைவருக்கும் தெரியும். ஆனால் அதுவும் எங்கள் இயக்கத்துக்கு பின் வந்து சொல்லியதுதான். அதே போல ஒஹேனக்கல் கூட்டு குடி நீர் திட்டத்துக்கு முதலில் போராடி சிறை சென்றது எங்கள் பெண்கள் அணிதான். அதன் பின் தான் தி.மு.க, அ.இ.அ.தி.மு.க எல்லாம் திட்ட நடவடிக்கை மேற்கொண்டது. கர்நாடகாவிட காவிரி நீர் கேட்டு நடத்திய ஒவ்வொரு போராட்டமும் சேலம் மாவட்டத்தில் எங்களிடம் இருந்தே முதலில் துவங்கியது. அனைத்துக் கட்சியினரையுமே வைத்து எல்லாம் தலைவர்கள் பயிற்சி முகாம்கள் நடத்தினோம் வெட்டப்பட்ட ரமேஷ் ஆடிட்டர், பீட்டர் அல்போன்ஸ் போன்றோர் எல்லாம் அதில் கலந்து கொண்டிருந்தனர்.

இன்னும் எங்களிடம் என்ன இருக்கிறது இத்துப் போன இந்த உடலும் அதில் ஓடிக் கொண்டிருக்கும் அந்த உடலை இயக்கிக்கொண்டிருக்கும் இந்த  உயிரும்தானே? அதையும் குறிக்கோளை  நோக்கி, இலட்சியம் நோக்கி கொடுக்கத்தானே போகிறோம்? அதற்கும் மேல் என்ன இருக்கிறது?
மல்லையாக்களும்,மோடிகளும் செயலலிதாக்களும், கலைஞர்களும், இன்னும் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களும்
 உங்கள் மனதில் செய்தியில் இடம் பெற ஊடகம் உதவுகிறது.

அந்த ஊடகத்தில் ஒரு நல்ல போராளிக்கு எவ்வளவு இடம் எனக் கேட்டுத்தான் சசி பெருமாள் தனக்குத் தானே உருவத்தை போட்டுக்கொண்டு என்றும் செய்தியில் இடம் பெறவேண்டி மாறுபட்ட கோணங்களில் நல்லதுக்காக எவ்வளவோ கோணங்களில் யுத்திகளில் கொள்கை மீறி செயல் பட்டு உயிரைப் போக்கிக்கொண்டார்

ஆனால் "சின்ன பையன்" மிக உயர்ந்த மனிதராகவே ஏழ்மையும் எமனும் அரவணைக்க வெளித்தெரியாமலே சென்று விட்டார். அவருக்கு இந்தப் பதிவின் மூலம் என்றும் அழியாத அஞ்சலிகளை மறுபடியும் பூக்கும் தளம் உரித்தாக்கிக் கொள்கிறது.

தேர்தல் நேரம் இதெல்லாம் உங்களில் எத்தனை பேருக்கு பிடிக்கும்? படிக்க, கேட்க பிடிக்கும் காதுகளில் ஏறும் எனத் தோன்றவில்லை. எனினும் இந்த நாட்டின் ஆணிவேராக விளங்கிய சேவையாளர்களுக்கு எல்லாம் இது போன்ற இழிந்த நிலைதான் பரிசாக கிடைக்கும் என்னும்போது இந்த நாடு எப்படி உய்யப் போகிறது? இன்னும் மக்கள் எல்லாம் கூடிக்கொண்டு அந்த ஏமாற்றுப்பேர் வழிகள் பின்னெதான் போவோம் என்னும் போது எவர்தான் இப்படி சேவைக்கு தியாகத்துக்கு முன் வருவர்?

இந்த நாட்டுக்காக என் உடலுக்கு ஏற்படும் எந்த வித துன்பத்தையும் தாங்கிக் கொள்வேன் என வலது கரம் நீட்டி உறுதி மொழி எடுத்தபடியே சசியும் சின்னபையனும் தங்களைக் கொடுத்து விட்டனர் அடுத்து எவரது சுற்றோ? சுதந்திரப் போராட்டத் தியாக வாழ்வை விட இந்த வாழ்வு மிகவும் கடினமானது. இந்த தியாகிகளுக்கு எந்த மதிப்பும் இல்லை அங்கீகாரமும் இல்லை என்பதுதான் இதன் சாபம்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Sunday, April 17, 2016

மறுபடியும் அமரக் குந்தியில் பூத்த அரிய மலர்கள்: கவிஞர் தணிகை

மறுபடியும் அமரக் குந்தியில் பூத்த அரிய மலர்கள்: கவிஞர் தணிகை
அமரக் குந்தி வாசகர் வட்டம் வழங்கிய சிறப்பு சொற்பொழிவு நிகழ்வில் சென்று சிறப்புரை செய்து வந்தேன். நிகழ்வு காந்தி இளைஞர் நற்பணி மன்றத்துடன் இணைந்த அமர குந்தி வாசகர் வட்டம் வழங்கியது.
தமிழ் புத்தாண்டில் துன்முகி முதல் நாளில் அழைத்தார்கள். நல்ல வேளை அன்று நடப்பதாக இருந்த நிகழ்வு நேற்றைய தேதிக்கு ஒத்திப் போடப் பட்டதால் கொஞ்சம் தப்பினேன் ஏன் எனில் இரவு 10 மணிக்கும் மேல் பேருந்து இணைப்பு இல்லாக் கிராமத்தில் இருந்து எப்படிப் புறப்பட்டு எப்படி மறுநாள் அதிகாலை 4 மணிக்கு எழுந்து அலுவலகம் கிளம்புவது என்ற தடுமாற்றத்தை இயற்கை தடுத்து வசதியாக செய்து தந்தது.

16 04 2016 அன்று சனிக்கிழமை நேரம் மிகச் சரியாக 6.55 மணிக்கு மீனாட்சி சொக்கநாதர் ஆலயம் அமரக் குந்தியில் திரு எஸ். செல்வம் அவ்ர்கள் கே.எஸ்பேட்டை அமரக் குந்தி வரவேற்புரை நல்க‌

திரு.எம்.பாலமுருகன், நிவேதிதா எம்.ஏ, பி.எட் ஆசிரிய‌ர், அரசினர் உயர்நிலைப்பள்ளி ,தொப்பூர் தலைமையேற்று நடத்த சிறப்புரை செய்தேன் "விழிப்புணர்வற்ற சமுதாயத்தில் விழிப்படைந்தோரின் பணி" என்ற தலைப்பில். திரு முருகன் கடவுள் துணை ஆட்டோ அமரக் குந்தி வாசகர் வட்டம் நன்றி பாராட்டினார்.


நிகழ்வை எமது அன்பு சகோதரர் சேக்ஸ்பியர் என்கிற விவேகானந்தன் முன் நின்று ஏற்பாடு செய்தார். நல்ல தோழர்கள் குழு அங்கு இன்னும் இருக்கிறது சுமார் 100 பேர் திரள்கிறார்கள்.

இதெல்லாம் இந்தக் காலத்தில் அரிதுதானே. காந்திய நற்பணி மன்றத்தார் அப்படியே இருக்கிறார்கள். அமரக்குந்தி எனக்கொன்றும் புதிதல்ல, நிறைய நிகழ்வுகளில் நான் சிறப்பு செய்திருக்கிறேன். ஏன் தியான வகுப்புப் பயிற்சி கூட கொடுத்துள்ளேன். முகாம்களும் நடத்தியிருக்கிறேன்.

படிப்பது குறைந்து விட்டது என்னும் இந்தக் காலத்தில் இவர்களின் பணி பாரட்டத் தக்கதாயிருந்தது. சிறப்புரை செய்த எமக்கு ஒரு நூலை பரிசாக அளித்தார்கள். மற்றபடி எந்த வித பொருளாதார ஈடுபாடும் இல்லாமல் இந்த நிகழ்வில் கலந்து கொண்டேன்.

அன்புத் தம்பிகள் கனலரசு, மற்றும் மணி வண்ணன் நிகழ்வு 10 மணி வரைத் தொடர்ந்து விட்டதால் பேருந்து இல்லாததால் வீடு வரை இரு சக்கர வாகனத்திலேயே கொண்டு வந்து விட்டுசென்றார்கள் எனது நன்றியை கொண்டு சென்றார்கள்

வந்திருந்த அனைவருக்கும் பயனாகும் வண்ணம் விநாயகா மிஷன்ஸ் சங்கராச்சாரியார் பல் மருத்துவக் கல்லூரியின் விடுமுறைச் சிறப்பு முகாம் பற்றி குறிப்பிட்டதுடன் ஆசிரியர்களுக்கும் வந்திருந்த அனைவருக்கும் சிறப்புக் கட்டணச் சலுகை மற்றும் முன்னுரிமைகளுக்கான அனுமதி அட்டையை வழங்கினேன்.

வாய் சுத்தம், ஆசன வாய் சுத்தம், பற் பாதுகாப்பு,உடல் சுத்தம் பற்றி, விளக்கினேன்.
லோடிங் டோஸ் பற்றி அறிமுகப் படுத்தினேன்.
கோ இல் என்பது ஊரில் தலைமை வீடு என்றும் அங்கு அரசனும் ஆண்டியும் ஒன்றுதான் ஆனால் இப்போது எப்படி இருக்கிறது என கேள்வி எழுப்பினேன்

உள்ளம் பெருங்கோவில் ஊனுடம்பு ஆலயம்....கலையாத கல்வியும் ...பாடல்களின் பெருமை பற்றி எடுத்து சொல்லப்பட்டு அன்றே கோணாத கோல்  வளையாத அரசு பற்றி சொல்லிச் சென்றதைக் குறிப்பிட்டேன்.
அமரர் குந்தி தியானம் செய்த ஊரில் எனக்கும் அதற்கும் உள்ள தொடர்பை விளக்கினேன்புல்லா,புகையிலை, மதுபோதை புறம் அகம் தூய்மை பற்றியும் ஆக் சன் ஸ்பீக்ஸ் மோர் (தேன்) வேர்ட்ஸ் பற்றி எடுத்தியம்பினேன்.
கலாம் சொன்ன தங்க முக்கோணம் பற்றி பறை சாற்றினேன்.

இது வரை அவதரித்த அத்தனை தலைவர்களுமே பணி செய்தும் விழிப்படையாத சமுதாயமாகவே தமிழ் சமுதாயம், மற்றும் இந்தியா நடந்து கொண்டிருப்பதை குறித்து வெதும்பினேன்.

உலகை திருத்திய உத்தமர்கள் பேரை எல்லாம் உச்சரித்தேன். அடுத்து எல்லா மொழி நூல்களையும் வாசிக்கச் சொன்னேன். வட்டத்தை பெரிது படுத்த சிறகை விரிக்கச் சொன்னேன்.

இதன் பின்னூட்டமாக சுமார் 10 பேர் தமது கருத்துகளுடன் தங்களது கேள்விகளையும் முன் வைத்தார்கள். விளக்கம் சொன்னேன். முன்பு ஆரம்பிக்கும் முன் தமிழ்ப்பண் முடிவில் தேசிய கீதம் இசைத்து விழா இனிது நிறைவு பெற்றது. விழா முடிந்ததும் கூட கலந்து  கொண்ட அன்பர்கள் எனது வலைதள முகவரி மற்றும் எனது புத்தகங்கள் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டினார்கள்.

அனைவரும் மனமகிழ்ந்து கை குலக்கி தமது மகிழ்வை என்னுடன் பகிர்ந்து கொண்டனர். மதியம் அலுவலகத்திலிருந்து 3.15க்கு திரும்பியவன் எண்ணெய்க் குளியல் முடித்து சரியாக 5.15 மணிக்கு
பேருந்து என்று சொன்னதன் பேரில் பேருந்து நிறுத்தத்தில் நின்றால் சரியாக 5.45க்கு பேருந்தில் ஏறும்படியாக இருந்தது.

எந்த வித முன் தயாரிப்புமே இல்லாமல் நாம் அன்றாடம் பேசுவதையே கைக்கொண்டிருந்தேன்.உரை வீச வரவில்லை எமது பழைய குடும்ப நண்பர்களுடன் ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசி மகிழவே வந்தேன் எனக் குறிப்பிட்டேன்.

மது விலக்கு வேட்பாளர் சேலம் வடக்குத் தொகுதியில் கடந்த முறை நின்ற சின்னபையன், கோவன், சசிபெருமாள் இன்னும் தற்கால கட்சி நிலை,தலைவர்கள் நிலை பற்றியும் நல்ல தலைமை இந்தியாவில் இன்னும் ஏற்படாதது பற்றியும் அப்படி இருந்தவர்க்கு அங்கீகாரம் மக்களிடையே இல்லை என்பதும் இந்த நாட்டின் சாபமாக இருக்கிறது. அதை மாற்றும் தலைவர் இந்த நாட்டின் நதி நீர் இணைப்பு செய்து அழியாப் புகழ் அடைவார் என்றும் கட்டியம் கூறினேன்.


 பழனிவேல் நல்லாசிரியர் விருது பெற்றவர், இலட்சுமாயூர் பள்ளித் தலைமை ஆசிரியரும் கூட. அவரும் அவரது நண்பரான மற்ற ஒரு தலைமை ஆசிரியரும் வந்து சிறப்பு செய்தனர். பழனி வேல் ஏற்கெனவே உதவி தொடக்கக்கல்வி அலுவலராக இருந்து அந்தப் பணி வேண்டாம் என தலைமை ஆசிரியாரகவே மறுபடியும் இருந்து  ப‌ணி புரிபவர். இவர்கள் எல்லாம் ஒரு குழுவாக சென்று நமது கலாமை ராஜ் பவனில் சந்திக்கச் சென்றார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Thursday, April 14, 2016

தமிழகத் தேர்தல் 2016. மேட்டூர் தொகுதி நிலவரம்: கவிஞர் தணிகை

தமிழகத் தேர்தல் 2016. மேட்டூர் தொகுதி நிலவரம்: கவிஞர் தணிகைஅர்த்தானரி ஈஸ்வர கவுண்டர், கே.பி.நாச்சிமுத்து,சுரேந்திரன், சுந்தராம்பாள் மாரப்பன், ஜி.கே மணி, ஸ்ரீரங்கன், கோபால் இப்போது எஸ்.ஆர். பார்த்திபன் என கட்சிகள் மாறி மாறி எம்.எல்.ஏ ஆன தொகுதி மேட்டூர் தொகுதி.

தொகுதியை சீர்திருத்தம் என்ற பேரில் சூறையாடி ஓமலூர் ரெயில்வே கிராஸ் வரை அரசு கொண்டு சென்றுள்ளது, சாதி மத சார்பாகவா என்பது எமக்குத் தெரியாது. தாரமங்களம் என்ற தொகுதியே இல்லை என்பதற்கு இது தேவலாம்.இப்போது போட்டியே தற்போதைய எம்.எல்.ஏ மக்கள் தி.மு.க வேட்பாளர் அல்லது தி.மு.க கூட்டணி வேட்பாளர் உதய சூரியன் சின்னத்தில் நிற்கும் எஸ்.ஆர் பார்த்திபனுக்கும் செம்மலைக்கும் தான். எந்தக் கழுதையை, குதிரையை, ஜீவனை அம்மா கை காட்டி நிறுத்தினாலும் அந்தக் கட்சிக்காரர்கள் வாக்களிப்பார்கள். வேட்பாளரைப் பார்த்துத்தான் வாக்களிப்பது என்பது அவர்கள் கட்சியில் இல்லையே.அம்மாவின் கன்றுகுட்டியாக மறுபடியும் செம்மலை மேட்டூரில் எடப்பாடி பழனிசாமியின் தடையை மீறி அம்மாவின் கருணை மனம் கொண்டு...

செம்மலை, பார்த்திபன் இருவருமே சேலத்து வாசிகள்தான். ஆனால் எஸ். ஆர். பார்த்திபனுடைய தோட்டம் சாத்தப்பாடியில் உள்ளது இவர் சேலம் கேம்ப் வீட்டு நில பங்கீட்டு மக்கள் பிரச்சனை, மேட்டூர்  காவிரி ஆற்றுப் பாலம், பாலமலை மேல் சாலை வசதி போன்றவற்றில் மண்ணின் மைந்தராக பார்க்கப்படுகிறார்.

செம்மலைக்கு கட்சியை விட்டு வெளியே செல்வாக்கு பொதுமக்களிடம் இல்லைதான். ஆனால் அவர்கள் கட்சிக்காரர்கள் கண்ணை மூடிக்கொண்டு போடுவார்கள் எதுவாக இருந்தாலும்.... அது செம்மலைக்கு கூட்டலா கழித்தலா தேர்தல் சொல்லும்.

ஜி.கே.மணி பாமக வில் நின்றிருந்தால் மும்முனைப்போட்டி ஜோராக இந்த சுட்டெரிக்கும் வையிலை விட அதிகமிருந்திருக்கும். ஆனால் அவர்  நிலை அறிந்து ஒதுங்கிக் கொண்டுள்ளார்.

இவர்கள் இன்னும் நாங்கள் தான் பார்க் கொண்டு வந்தோம், நாங்கள் தான் ரயில் விட்டோம் மறுபடியும், அரசுக்கல்லூரி கொண்டு வந்தோம் என்றெல்லாம் சொல்லிக் கேட்கலாம்.. ஆனால் எல்லாம் மறந்து விட்டார்கள்.

கடந்த முறையே பார்த்திபன் தே.மு.தி.கவில் நின்று அ.இ.அ.தி.முக கூட்டணி சார்பாக சுமார் 2600 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக கூட்டணி வேட்பாளரான பா.ம.க வேட்பாளர் ஜி.கே மணியை வென்றார்.

கேநகூ, மநகூ , பி.ஜே.பி பற்றி எல்லாம் எழுதி உங்கள் நேர விரயம் வேண்டாம்.

காஞ்சனா பழனி சாமி ஈரோட்டில் ரூபாய் 100,500 எனக் கொடுத்து அ.இ.அ.தி.மு.க மேல் மநகூ சாட்சியத்தோடு தேர்தல் ஆணையத்தில் புகாரளிக்க அவர்கள் அதை உறுதி செய்து வழக்கு தொடர்ந்தும் இருக்கிறார்கள்.எனவே அ.இ.அ.தி.மு.க தேர்தலில் இருந்து நிற்பதற்கு தடை விதிக்கப்பட வேண்டும். அப்படிப்பட்ட மாற்றங்களை தேர்தல் ஆணையம் கொண்டுவர வேண்டும்.


1967 அல்லது 1971 என நினைக்கிறேன் நான் 5 வயதுக்குள் இருக்கும் சிறுவன். சுரேந்திரன் என்னும் பிரஜா சோஷலிஸ்ட் மற்றும் சுயேட்சையாக நின்றும் வெற்றி பெற்ற தோழர் சுரேந்திரன் சார்பாக எங்கள் வீட்டில் கருக்கழியா புதுக்கட்டிலிருந்து 1 ரூ, 2 ரு என வாக்களிக்க கொடுக்கப்பட்டது.

அவர் மேட்டூர் தொழிலாளிகள்  ஆதரித்த மலையாளித் தந்தை நிலையில் எவர் வீட்டில் வேண்டுமானாலும் உண்ணும் வழக்கம் உள்ளவர் தொழிலாளிகளுக்காக நிறைய போராட்டங்கள், சாகும் வரை உண்ணாநோன்பு இருந்தவர், நல்ல பேர் பெற்றவர். கடைசியில் மகனுக்காக பணி ஒப்பந்தங்கள் சுயநலமாக பெற்றார் என்றும் கேள்வி.

அது முதல் இன்று வரை தேர்தல் ஒரு விழாதான். ஆனால் எவருமே என் போன்றோருக்கு கொடுப்பதாக வருவதுமில்லை.  தருவதுமில்லை. பக்கம் கூட எட்டிப் பார்ப்பதில்லை.

தேர்தல்  வாக்குக்கு காசு வாங்குவதும் கொடுப்பதும் குற்றம். இலஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் குற்றம் என்பது போல ஆனால் இரண்டுமே இந்திய ஜனநாயகத்தில் குற்றம் ஆனால் குற்றமில்லை. வரும் ஆனால் வராது , கிடைக்கும் ஆனா கிடைக்காது, இருக்கும் ஆனால் இருக்காது என்பது போல...

தேர்தல் ஆணையம் இன்னும் போக வேண்டிய தூரம் மிகத் தொலைவிருக்கிறது.

எப்போதும் போல் 49 ஓ  போடச் செல்வதா நிலவும் பொருளற்ற பொருள் ஒன்றையே கூட்டிக் குவித்த ஆட்சிக்கு எதிரான வேட்பாளருக்கு எமது வாக்கை அளிப்பதா என சிந்தித்து வருகிறேன்.

கருத்துக் கணிப்பல்ல இது, ஒரு யூகம் இம்முறையும் எஸ்.ஆர் பார்த்திபனுக்கு ஒரு யோகம் இருக்கிறதோ என்று எண்ணுகிறேன். மநகூ, கேநகூ, கம்யூனிஸ்ட் கட்சிகள் சொற்ப வாக்கை பிரித்தாலும்,பிஜேபி அற்ப வாக்குகளை வாங்கி டெபாசிட் இழந்தாலும் வாக்கு பிரிவதால் செம்மலைக்கு வாய்ப்பு என்று கணிக்கலாம். ஆனால் ஓதம் எஸ்.ஆர். பார்த்திபனை ஓடத்தை கரை சேர்க்கும் என்றே நம்புகிறேன் தரையில் இழுத்து விடும் ஓடமாக அல்ல சுவாசித்து காவிரிக்கரையில் சென்று வரும் ஓடமாக..

மேட்டூர் நகர தேமுதிக இளைஞர்கள் பார்த்திபனுடன் இருக்கிறார்களா? அல்லது விஜய்காந்த் கேநகூவில் இருந்து இடம்பெற்று தேர்தல் பணி புரிகிறார்களா என்பதுதான் தெரியவில்லை..

ஏழையின் கண்ணீர்த்துளிகள்
அரசின் நாடியை அறுத்தெறியும் கூர் வேல்கள்

ஏழையின் கண்ணீரைத் துடைக்க‌
இன்னும் நிறைய கைகள் தேவை....

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Tuesday, April 12, 2016

புழுக்கம் : கவிஞர் தணிகை

புழுக்கம் : கவிஞர் தணிகைஊர்பேர்காட்டி பலகை நினைவஞ்சலி போஸ்டர் ஒட்ட பயன்படுத்தும்
மக்கள்

அரசியல் தலைவர்கள் சிலைகளை தேர்தல் ஆணையம் மறைக்கச் சொன்னால் திருவள்ளுவர், அம்பேத்கர், அறிஞர் அண்ணா சிலைகளையும் சேர்த்து மறைத்த அரசுப் பணி அறிவாளிகள்

அதி காலை முதலே சினிமாப் பாட்டு காதை அடைக்கும் தனியார் பேருந்துகள் அதில் தினமும் சென்று வந்தும் அதன் மேல் வழக்கு தொடர முடியா ஆதங்கம்

தன் பிரச்சனையை மனோதைரியத்துடன் சந்திப்பதை விட்டு விட்டு அடுத்தவர் வாய்ப்புகள், வாழ்வின் முறைகளை பொறாமையுடன் போட்டுக் கொடுத்து முன்னேற விரும்பும் நிறுவனங்களில் பணி புரிவோரின் சிறுபிள்ளைத்தனம்

அரசியல் என்ற பேரில் பெயர் தெரியாக் கட்சிகள் எல்லாம் தனித்து நிற்கும் இந்தத் தேர்தலில் உத்தி முறைகள்...

மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கூட டாஸ்மாக் வியாபாரிகளாகவும் ஆளும் கட்சியின் மாவட்ட செயலாளர்களாகவும் செயல்படும் செயல்பட்ட‌ கொடுமைகள்

இந்தியக் குடிமகன்கள் போதையின் பிடியில் சாலையில், சாக்கடையில் ,தெருக்களில் விழுந்து கிடக்கும் நிலை கண்டு ஏதும் செய்ய முடியா நிலை....

இந்த நாட்டில் இருந்து கொண்டு எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு ஒன்றுமே செய்யாமல் இருந்து கொண்டு இதை எல்லாம் ஏதாவது செய்து மாற்றியாக வேண்டும் என்ற புழுக்கத்தை இந்த விரல் எழுத்துகளில் விரட்ட முயற்சிக்கும்...
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.Sunday, April 10, 2016

தமிழகத்திற்கு ஜெ போட்ட பட்டை 111 நாமம்.: கவிஞர் தணிகை

தமிழகத்திற்கு ஜெ போட்ட  பட்டை 111 நாமம்.: கவிஞர் தணிகை

இந்த தேர்தலில் வென்றால் மதுவிலக்கு படிப்படியாக என்னும் ஜெ இராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் மிகவும் துணிச்சலாக நிற்கிறார். அது எந்த துணிச்சல் என்றுதான் தெரியவில்லை. இவர் கொடுக்கப்பட்ட வாய்ப்பில் முதல்வராக இருந்து எதையுமே மக்களுக்காக செய்யவில்லை. இவர் அளித்த இலவசங்கள் எல்லாமே குப்பையாக கிடக்க‌
டான்ஸி வழக்கின் போது போட்ட கையெழுத்தை தன்னுடையது இல்லை என்றவர். இப்படி ஏமாற்றுவாரை பொதுவாக 420 என்று சொல்வார்கள்.

பார்ப்பன அக்ர‍ஹார சிறையில் தண்டிக்கப்பட்ட குற்றவாளி தற்போது உச்ச நீதிமன்ற வழக்கில் தீர்ப்புக்காக காத்திருக்கும் நிலையில் இன்று தேர்தல் அறிவிப்பாக அடுத்து தேர்தலில் வென்று முதல்வராகும் கனவில் ஏதேதோ பிதற்றுகிறார்.

படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவதாக இந்த நேரத்தில் முக்கியமாக செய்ய வேண்டிய பதிவு இது. உலகறியாத செய்தி இது:எங்கள் இணைப்பில் உருவான சசிபெருமாள் மரணத்துக்கு ஒரு வார்த்தை கூட பேசாத முதல்வர் இன்று திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார்.

நேற்று கூட தமிழக இலட்சியக் குடும்பம், காந்திய வழியில் ஊருக்குப் பத்துப் பேர் இயக்கம், நவ இந்திய நிர்மாணிகள் இயக்கம் ஆகிய இயக்கங்களை நிறுவிய சிற்பி. கொ.வேலாயுதம் அவர்களும் நானும் பேசிக் கொண்டிருந்தோம் நிலை பற்றி.

சசி பெருமாள் எங்கள் பயிற்சியில் வளர்ந்தவர். 1983லிருந்தே எம்மோடு இயைந்து இயக்கப் பணியில் இருந்தவர். அந்த இயக்கங்களில் நிறுவனருக்கு அடுத்த நிலையில் இருந்து பல்வேறுபட்ட பொறுப்புகளுடன் பயணம் செய்தவன் என்கிற முறையில் சொல்கிறேன். எம்மோடு இணைந்தவர்கள் பலர் பல்வேறு திசைகளில் பிரிந்தார்கள்.

என்றாலும் சசிபெருமாள் போன்றோர் கடைசியில் இயக்கப் பணியை விட தன்னை பிரதானமாக காட்டிக் கொண்டது ஒரு வகையில் உண்மை ஆனாலும் அதன்முடிவு தியாகத்துக்காக மதுவிலக்குக்காக முடிந்து போனது.

கடந்த சட்ட மன்றத் தேர்தலில் சேலம் வடக்குத் தொகுதியில் மதுவிலக்கு வேட்பாளராக சின்ன பையன் என்பவரையும் நிறுத்திப் போராடினோம். சொற்ப வாக்குகளே கிடைத்தன.

பா.ம. க நிறுவனர் கூட 30 ஆண்டுக்கும் மேலாக நாங்கள் மதுவுக்காக போராடிய கட்சி என்கிறார். ஆனால் அவர்களுக்கும் முன்பிருந்தே எமது இயக்கம் பல்வேறுபட்ட தியாகங்களை போராட்ட உத்திகளை செய்தது. கலைஞர் வீட்டு முன் கூட உண்ணாநோன்பு அறப்போராட்டம் நடத்தியது குழுவாக.மதுவிலக்குக் கோரி.

5 இலட்சம் கையொப்பங்கள் பெற்று மதுவிற்கு எதிராக இன்றைய முதல்வர் அன்றைய முதல்வராக இருந்த இதே ஜெ விடம் மகஜர் சமர்ப்பித்தது. அடியேன் காவல் துறை நண்பர்களிடம் கூட கையெழுத்து கேட்டேன் நினைவிருக்கிறது. பொன் மாணிக்கவேல் ஐ.பி.எஸ் கூட நாங்கள் அரசு ஊழியர் , அரசின் கொள்கை முடிவுக்கு மாறாக நாங்கள் எப்படி கை ஒப்பம் இட முடியும் என்றார்?ஆனால் மூச்சும் இல்லை பேச்சும் இல்லை.

இப்போது அரசின் கொள்கை முடிவு மாறுகிறது. அடுத்து தேர்தலில் வென்றால் முதல்வர் ஆனால் படிப்படியாக மதுவிலக்கு கொண்டு வருவேன் என... ஜெவின் தகிடுதத்தம் எதுவுமே செய்யாமல் அராஜகம் செய்தபடி சென்னை வெள்ளத்தின் போது கால் எடுத்தும் வைத்து நிவாரணப் பணி செய்யாமல் இப்போது வாக்கு பொறுக்க கொள்கையை மாற்றுகிறது.

சட்டசபை வளாகத்துக்குள் புக மாட்டேன் என புதுக் கட்டடத்தை உதாசீனப்படுத்தியது, அண்ணா அறிவுப் பூங்கா நூலகத்தை மருத்துவ மனையாக மாற்றுவேன் என்றது இப்படி சிறு சிறு குரோத, பழி வாங்கிய செயல்பாடுகள் தவிர ஜெ ஒன்றுமே மக்களுக்காக செய்யவில்லை என்பது உண்மை.

அம்மா குடிநீரும், அம்மா உணவகமும் மிகப் பெரிய சாதனையாக சொல்லக் கூடாது சொல்ல முடியாது ஒரு மாபெரும் அரசுக்கு. அதை பேருக்காக செய்ததே.

இவர் செய்த ஆட்சிமுறையை விமர்சனம் செய்யப் புகுந்தால் நாமும் ஸ்டிக்கர் கலாச்சாரம், பீப், என்று போய் விட வேண்டியதுதான்...ஆனால் அதற்கெல்லாம் இப்போது நேரமில்லை. நமக்கு நேரமில்லை.

இவர் ஆண்டது ஆட்சியே அல்ல. எனவே இந்த அரசை மக்கள் எடுத்து எறிந்து விடுவது ஒன்றுதான் தமிழகத்துக்கு நல்ல தீர்வு. பாடகர் கோவனின் மனசாட்சி, சசிபெருமாள், மற்றும் கலாம் ஆன்மாக்கள் தற்போதைய ஆட்சியின் அசூயையை பார்த்தபடிதான் இருக்கின்றன.

வெறும் 110 விதியின் கீழ் நிறைய சொல்லி இருக்கிறார். சட்டசபையில் ஆனால் உண்மையில் என்றும் இவர் தமிழகத்துக்கும் தமிழ் மக்களுக்கும் போட்டது 111 என்னும் பட்டை நாமம்தான்.
ஒரு நல்ல முடிவு ஏற்படும் என நம்புவோமாக. ஏற்படுத்துவீராக.

வணக்கம்.
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Saturday, April 9, 2016

தோழா: சினிமா விமர்சனம்: கவிஞர் தணிகை.

தோழா: சினிமா விமர்சனம்: கவிஞர் தணிகை.
தனுஷுக்கு ஆடுகளம் வாய்த்தாற் போல இந்த் கார்த்திக்கு தோழா. கமல் சீக்கடி ராஜ்யம் தூங்காவனம் செய்தாற்போல தோழா என்றும் ஊப்ரி தெலுங்கில்( ஊப்ரி என்றால் மூச்சு உயிர் மூச்சு என்று சொல்லலாம்) இரு மொழியில் இரு மொழி கலந்த நடிகர்கள்  நாகார்ஜுனா கார்த்தி தமன்னா என சுலபமான அதிகம் முடிச்சி விழாத அற்புதமான படைப்பு. போட்ட 55 கோடி பணத்தை முதல் 10 நாளில் மார்ச் 25ல் வெளியிட்டு எடுத்து விட்ட படம்.

சும்மா சொல்லக் கூடாது, குடும்பத்தோடு ஒட்டிய கதை, குடும்பத்தோடு பார்க்க முடியும் . மது அருந்தும் சில காட்சிகளைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால்.

சீனு ஒரு  திருடன். ஜெயில் கைதி, பிணையில் 4 மாதம் வெளி வந்து விக்ரமாதித்யா விக்ரம் ஆதித்தியா என்னும் பெரும் கோடீஸ்வரரிடம் ஒன்றிப் போகிறார். விக்ரமாதித்யாவுக்கு கைகள் கால்கள் செயல் இழந்தவருக்கு கை கால்களாய் இருக்கிறார்.

கன கச்சிதமாக கார்த்தி என்ற சீனுவுக்கு இல்லை சீனு என்ற கார்த்திக்குக்கு அட ரெண்டுமே ஒன்று போல பொருந்தி இருக்கிறது. இது போல தேர்வு செய்து படம்செய்தால் கார்த்திக் எங்கேயோ போய்விடலாம் தமிழ், இப்போது தெலுங்கு நாளை இந்தி என...

ஒரு சண்டை இல்லை, அடி தடி தகராறு இல்லாமல் ஒரு படமாய் அதிலும் இந்தக் காலத்தில் ...ஒரு அனாதை சிறுவன் சித்தியிடம் வளர்ந்து தனது துடுக்குத்தனத்தால் அனைவரையும் கவர்ந்து அனைவரின் நம்பிக்கையும் பெற்று அட அந்த பெயிண்டிங் சீன் ஒன்று ஓதுமே. அதுவே இரண்டு மூன்று இடங்களில் வந்தலும் கொஞ்சம் கூட போரடிக்காமல்...கதை வெண்ணெயில் வழுக்கிக் கொண்டு போகிறது சீனு தள்ளி விடும் ஆதித்யாவின் சக்கர நாற்காலி போல. கதைதான். ஆம் கதைதான் நிஜமாக இருக்க வழியில்லை...

ஆனாலும் சினிமாவாக மட்டும் பார்த்தால் நல்ல படம்தான். தமன்னா வேறு மெழுகு பொம்மையாக கழுக் மொழுக் என நல்ல செக்ரட்டரி ஆதித்யாவுக்கு. சிவகுமார் அனுமதித்திருக்கலாம் கார்த்திக்கு தமன்னாவையே கல்யாணம் செய்து கொள்ள....வீட்டில் சினிமா தொடர்பான மருமகள் ஒரு ஜோவே போதும் என்று முடிவு கட்டி விட்டாரோ.... நமக்கெதுக்கு பர்சனல். அதுவும் மார்கண்டேயன்  நம் மண்ணின் மைந்தர் அழகிய குடும்பம் பற்றி...

பைக்கில் ,விமானத்தில்,கிளைடரில், காரில் இப்படி கைகள் கால்கள் விளங்காத நபர் ஏங்கும் ஆசை எல்லாம் இந்த ஏழை கார்த்தியால் நிறைவேற மூச்சு இழைப்பு அதிகம் வாங்கும் நோய் உள்ள விக்ரம் தேறி விடுகிறார்.

காதல் வேறு நடுவே பட்டுத் துகில் போல பின்னப்பட்டிருக்க...ஹன்சிகா ஸ்ரேயா, தமன்னா என...ஒரு முறை பார்த்து அனுபவிக்கலாம்.

மறுபடியும் கொஞ்ச காலம் தள்ளிப் பார்த்தாலும் இரசிக்கலாம். காலம் சென்ற பின்னாலும் எப்போது பார்த்தாலும் சலிக்காமல் பார்க்கலாம். உங்கள் சினிமாக் களஞ்சியத்துக்கான ஒரு நல்ல வரவு இந்த ஊப்ரி தோழா....குறை ஒன்றுமில்லை மறை மூர்த்தி கண்ணா என்பது போல...எல்லாத்துக்குமே மனசுதாங்க காரணம். ஏன் மனசு என்பதே இல்லை என்கிறாரே இரமண மகரிஷிகள்.

உண்மையிலேயே காதல் என்றால் வார்த்தை தடுமாறுவதும், நாக்கு பேச விடாமல் மேலண்ணத்தில் ஒட்டிக்கொள்வதும், பயம் ஏற்படுவதையும் நாகார்ஜுனாவும், கார்த்திக்கும் நன்றாகவே படக் குழுவினரோடு சேர்ந்து விளக்கி இருக்கிறார்கள்.

இதில் நடித்த கல்பனா ஊர்வசியின் அக்கா சமீபமாக‌ மறைந்தது சினிமாவுக்கு ஒரு இழப்புதான்.என்ன ரோல் கிடைத்தாலும் அள்ளி அள்ளி விழுங்கி விடுகிறார் பிரகாஷ்ராஜ்.எங்கேயாவது குறை தெரியுமா என்று பார்த்தாலும் தெரியவில்லை ஆனால் இப்படி எல்லாம் நிஜத்தில் நடக்க வழி இல்லை என்றே தோன்றுகிறது. நமது வலைதளம் நூற்றுக்கு 50க்கும் மேல் தருகிறது விர்சமில்லாத ஒரு கதைக்கு, கற்பனை பலம் அதிகம் என்றாலும் நிஜத்தில் இப்படி எல்லாம் இன்றைய காலக்க ட்டத்தில் இல்லை என்ற போதிலும்...

பிச்சைக்காரன்:
விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் உண்மையில் நடந்த கதை என்கிறார்கள். 5 வருட காலம் ஆண்டில் 6 மாதம் பிச்சை எடுத்தும், 6 மாதம் தமது நிறுவனங்களை கவனித்த ஒரு மனிதர் தம் தாய் வாழ இதை எல்லாம் செய்தார் என சொல்கிற கதை.விஜய் ஆண்டனி, நன்றாக செய்திருக்கிறார். மேலும் தனிப்பட்ட காட்சிகளாக சில பகுதிகளை ஏற்கெனவே முகநூல் வழி பார்த்து விட்டதால் இந்த படங்கள் யாவுமே ஒன்றுக்கொன்று வித்தியாசமான கதையுடன் இருப்பதால் வெற்றி இருக்கிறது. ஆனால் படங்களை எல்லாம் பார்க்க பொறுமையும் நேரமும் தேவை
ம‌
று
ப‌
டி
யு
ம்
பூக்கும்
வரை

கவிஞர் தணிகை

தூங்கா வனம்: சினிமா விமர்சனம்: கவிஞர் தணிகைகடந்த ஒரு வருட காலமாக மகன் மணியத்துக்காக அவரது மேனிலைப் பள்ளித் தேர்வு முடியும் வரை சினிமா பார்ப்பதில்லை என்ற விரதம் முடித்து மறுபடியும் வாய்ப்பு அமையும்போது நல்ல சினிமா பார்க்கலாம் என்றும் அது பற்றி பகிர்ந்து கொள்ளலாம் என்றும் இருந்த காலம் முடிந்து மறுபடியும் ஒரு புதுக்
காலத்தின் பயணம் ஆரம்பம்.

புதுப் படம் தான் பார்த்து எழுத வேண்டும் என்ற நிபந்தனை இல்லை. பார்த்த படத்தை நாம் எழுதலாம் அதில் தவறு ஒன்றும் இல்லை. இந்தப் படம் ஸ்லீப்லஸ் நைட் என்ற பிரெஞ்ச் படத்தின் தழுவலாம் 2011ல் வந்த அதை 2916ல் கமல் செய்துள்ளது நமக்கு விருந்து.

எனக்கும் இந்த சினிமா நாயகனுக்கும் அவரது கதா மகனுக்கும், எனது மகனுக்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறது. திஸ் டைம் ஹி ஈஸ் ஃபைட்டிங் பார் ஹிஸ் டாட்டர், சன் என்பது போல ஆர்னால்ட் படம் செய்தபோதும், கமல் சினிமாவை வாழ்வாக சித்தரித்த போதும், எனது வாழ்க்கையோடு அவை ஒன்றும் ஈடாகா என்ற போதும் எனது வாழ்வில் 3 ஆம் பகுதி மகனுக்காக ஆரம்பித்து விட்டது. அவரது நடிப்பு. எனது வாழ்க்கை.

அது போல போதை மருந்து ஒழிப்புப்  பிரிவில் காவல் துறை அதிகாரியாக (அதிகாரி என்ற வார்த்தைக்குப் பதிலாக அலுவலர் என்ற வார்த்தை சரியானதுதான் ஆனால் அதிகாரி ஒரு பழைய வார்த்தை ஆனாலும் அது சொல்லிப் பழகி ஒரு மிடுக்குடன் இருக்கிறது ஒரு அதிகாரத் தோரணையை காண்பிக்கிறது. ஆனால் பொதுவுடமை மக்கட் சமுதாயத்துக்கு அது பொருந்தாத வார்த்தை அலுவல் என்றால் ஊழியம்)வருபவரை போதை மருந்து கடத்தல் கும்பல் முடித்து விட நினைக்கிறது நய வஞ்சகமாக.

ஆங்கிலப்படம் போல் இருக்கிறது,  தழுவல் , காப்பி என்றெல்லாம் சொல்வார்கள். ஆனால் கமல் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் செய்துள்ளார்.ஒரு திரைப்படமாகத் தெரியவில்லை.காட்சி ஓட்டமும் கொஞ்சம் கூட தொய்வில்லாமல் ஓடி நம்மை சித்ரவதைக்குள்ளாக்கி விடுகிறது அடுத்த அடுத்த காட்சிகளாக. ஆனால் அந்த பிரகாஷ் ராஜ் கிளப்பில்தான் எந்நேரமும் ஒரு கூட்டம் பெரும் கூட்டம் குடித்துக்கொண்டு ஆடிக்கொண்டே இருக்கிறது.பார்க்க தெவிட்ட.ஒரே இரவில் நடக்கும் கதை என்று தோன்றினாலும் இந்த 168 மணித்துளிகளும்(128 நிமிடங்களும்) படம் நகர்வதாகத் தோன்றவில்லை. த்ரிஷாவுக்கு காவல் அதிகாரியாக ஒரு நல்ல ரோல்.பிரகாஷ் ராஜ் எப்போதும் போல அவரது பாணியில் வில்லனாக இருந்து இடைத்தர கடத்தல் கும்பல், கூலிக்கார மாபியா வாக இருந்து கடைசியில்  நெற்றியில் குண்டடிபட்டு இறக்கிறார்.

புரிந்து கொள்ளாத பிரிந்து வாழும் மனைவி, மகன் இருவரிடமும் தவணை முறையில் வளர, இந்த போலீஸ்காரர் கதை குடும்பத்துடன் பின்னிப் பிணைந்து கதை.
 பணயக் கைதியாக மகனைக் கடத்துகிறார்கள். கடத்தல் போதை மருந்தை திருடியதற்காக பிரகாஷ் ராஜ் கும்பல்.. யூகி சேது, கிஷோர் போன்றவர்கள் உளவாளிகள் போல இருபக்கமும் ஊடுருவி விளையாடி இருக்கிறார்கள். யூகி சேது இறக்கும்போது தெரிந்து கொள்கிறார் யார் தோழன், யார் எதிரி என....

அடிப்படையில் அந்த கொக்கையின் போதை மருந்து கை மாறி சென்றாலும் பணம் குவிப்பது என்பது எல்லாரிடமும் குறிக்கோளாக இருக்கிறது எந்த சமுதாயம் எப்படி ஆனாலும், யார் எக்கேடு கெட்டாலும் எமக்கென்ன என்ற போக்கில்.

டாய்லெட்டில் கூரையில் மறைக்கப்படும், கொக்கெய்ன் சரக்கை த்ரிசா எடுத்து ஆண்கள் கழிப்பகத்திலிருந்து எடுத்து பெண்கள் கழிப்பகத்துக்கு மாற்றுவது கடைசிவரை தெரியாமல் போலி(ஸ்) ஆக வேடமிட்ட கிஷோரிடம் அது சென்று மாட்டிக் கொள்வது, திவாகரின் மகன்(கமல் திவாகராகவும், அவரது மகன் வாசுவாக அமன் அப்துல்லாவும்) கடத்தப்படுவது அந்தக் கடத்தல் பேர்வழிகளிடமிருந்து மகனை நாயகன் எப்படிக் காப்பாற்றுகிறார் என்பதே படம். அதற்குள்தான் எத்தனை திருப்பங்கள்.

படம் பார்க்க முடியும் நேரம், படம் பார்க்க‌ வேண்டும் என்ற அவா இப்படி ஏதுமில்லா சூழலில் இந்த படம் ஓடிக் கொண்டிருக்க பார்த்தேன் ஆனாலும் இந்தப் படம் பற்றி சொல்ல வேண்டும் என்றே சொல்லி இருக்கிறேன். அதில் இருந்த மகனுக்கும் அப்பாவுக்குமான ஒரு பந்தம் எனது மகன் கடைசித் தேர்வு எழுதி முடித்து இந்த படத்தை எங்கு எப்படி எப்போது தேடிப் பிடித்து வைத்திருந்து பார்த்தாரோ அப்படிப் பார்த்து விட்டு என்னையும் பார்க்க சொன்னார்.

இரண்டு மகன்களும், இரண்டு அப்பாக்களும் ஒன்று போலவே இருந்தது. அது சினிமா, இது வாழ்வு. அது போதை மருந்து கடத்தல் மகன் கடத்தல் கதை. எங்களுடையது இனி எப்படி வாழப்போகிறோம் இந்த சமூக அமைப்பில் எப்படி போராடப் போகிறோம் எனச் சொல்லாமல் சொன்னது....

பல்லாண்டு கழித்து பணிக்கு போக ஆரம்பித்த உணர்வு என்னுள் எனது மகனுக்கு என்னால் ஆனதை செய்யும் பொருட்டு...

இந்தப் படம் எமது வாழ்வை ஒட்டி இருக்கிறது...யாம் அதிகம் இரவுகளில் தூக்கமின்றி தவிப்பது போல இந்தப் படத்திலும் தான் எத்தனை வித தவிப்புகள்...கமல் வரிசையில் மற்றொரு நல்ல படம்.

இதற்கு  மதிப்பெண் நாம் கொடுக்க அவசியமில்லை நவம்பர் 10ல் 2015ல் வெளிவந்திருக்கிறது. கமலின் உதவியாளர் ராஜேஸ் இயக்க திரைக்கதை கமலால் செதுக்கப் பட்டிருக்கிறது. தயாரிப்பு கமல் உட்பட ஒரு குழுவாக இருக்கிறது.
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Friday, April 8, 2016

கோடை விடுமுறைக் காலச் சிறப்பு பல் மருத்துவ முகாம் :கவிஞர் தணிகை.

வரும் முன் காப்போம்:‍ கவிஞர் தணிகை
மருத்துவம். விநாயகா மிஷன்ஸ் சங்கராச்சாரியார் பல் மருத்துவக் கல்லூரி அரியானூர், சேலம்.636308. கோடை விடுமுறைக் காலச் சிறப்பு பல் மருத்துவ முகாம் நடத்துகிறது. உங்கள் அனைவரின் கவனத்திற்கும்~~ அது பற்றிய ஒரு அறிவிப்பை கல்லூரி வெளியிட்டுள்ளது. அனைவர்க்கும் மிகவும் பயன்படுமே என அதை இங்கு பதிவாக்குகிறோம்.கோடை விடுமுறைக் காலச் சிறப்பு பல் மருத்துவ  முகாம்.

வாய் நமது உடலின் வாசல்.... ‍ வாய் சுகாதாரத்தை பேணிக் காத்து நமது உடல் நலத்தைக் காப்பாற்றுவோம்.

வரும் கோடை விடுமுறைக் காலத்தில் எங்களது பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பள்ளிக் குழந்தைகள் அவர்களது பெற்றோர்,இளையவர்கள் அனைவர்க்கும் பல் பராமரிப்பு முறையை இலவசமாகக் கற்றுத் .தருகிறது.

மேலும் அவர்களுக்கு பற்கள், ஈறு மற்றும் வாய் தொடர்பான நோய்களுக்கு இலவச ஆலோசனை மற்றும் சிறப்புக் கட்டணச் சலுகையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அனைவரும் இவ்வரிய வாய்ப்பை பயன்படுத்தி வாய் , பற்கள்,மற்றும் ஈறு சுகாதாரத்தைப் பேணி காக்குமாறு வேண்டிக் கொள்கிறோம்.

குறிப்பு: இந்த அட்டையை கொண்டு வருபவர்களுக்கு மருத்துவரை சந்திக்க முன்னுரிமையும் சிறப்புக் கட்டணச் சலுகையும் உண்டு.

(என ஒரு பதிவுக்கான அட்டையை வெளியிட்டிருக்கிறார்கள்)

அதில் மிகவும் முக்கியமாக 6 மாதத்துக்கு ஒரு முறையாவது பல் மருத்துவ ஆலோசனை அவசியம் என்று பற் சுகாதாரம் பற்றி வலியுறுத்தப்பட்டுள்ளது.

காலை 9 மணி முதல் மதியம் 1மணி வரை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு வந்து சிகிச்சை பெற பதிவு செய்து கொள்க  என்றும், 0427~2477318,0427~2477723 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளவும்  அந்தக் கையேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாய் வழி நோய் இயல், நுண்ணியிரியல், ஈறு நோய் சிகிச்சைத் துறை, பல் சீரமைப்புத் துறை,குழந்தைகள் பல் மருத்துவம், பல் கட்டும் பிரிவு, பல் தாடை மற்றும் முக அறுவை சிகிச்சைத் துறை, சமுதாயப் பல் மருத்துவத் துறை ஆகிய பல்வேறுபட்ட சீரிய துறைகளின் கை கோர்ப்புடன இந்த முகாம் சிறப்பாகநடைபெற உள்ளது.

  இந்த முகாம் கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் மருத்துவர். J.பேபிஜான் M.D.S அவர்களின் சீரிய‌ தலைமையில்

 சமுதாயப் பல் மருத்துவத் துறைத் தலைவர் பேராசிரியர் மருத்துவர் N.சரவணன் M.D.S அவர்களின் வழிகாட்டுதலுடன்

 மருத்துவர் .துர்கா B.D.S, மருத்துவர் கார்த்திகேயன் B.D.S., ஆகியோர் முன்னெடுத்துச் செல்ல முகாம் அலுவலராக சு.தணிகாசலம் இருந்து முகாம் பணிகளை கவனமுடன் ஏற்பாடு செய்து வருவது குறிப்பிடத் தகுந்தது.
முகாமின் இலக்கு யாவும் மக்கள் நலனுக்காகவே.எதிர்கால இளைய இந்தியா பல் வலிமை பெறுவதற்கே.

.பல் வைத்தியம் மிகவும் பொருட்செலவை ஏற்படுத்தும் இந்தக் காலக் கட்டத்தில் இது போன்ற நிகழ்வுகள் வரலாற்று நிகழ்வாக்கப் பட வேண்டியது அவசியம்.

எனவே இதைப் படிக்கும் அன்பர்கள் அனைவரும் தக்க முறையில் பயன்படுத்திக் கொள்ளவும், அனைவர்க்கும் இதை எடுத்துச் செல்லவும் எடுத்துச் சொல்லவும்,சிகிச்சை மற்றும் பல் தொடர்பான விழிப்புணர்வை பெறவும் அன்புடன் அழைக்கப் படுகிறார்கள். தேவையானவர்களுக்கு செய்தியை தெரியப்படுத்தவும் கோரப்படுகிறார்கள்.

வெண் முத்தை விட உன் பல்  பெரும் சொத்து.
பற்களை வைரக் கற்களாய்க் காத்திடுவீர்.

மறுபடியும் பூக்கும் வரை:
கவிஞர் தணிகை.

பி.கு: விநாயகா மிஷன்ஸ் சங்கராச்சாரியார் பல் மருத்துவக் கல்லூரி சேலத்திலிருந்து 8.கி.மீ தொலைவில் சேலம் கோவை   தேசிய நெடுஞ்சாலையில் அரியானூரில் உள்ளது. 

இணைப்பு:
 தணிகை எழிலன் ட்விட்டர் .காம்
 தணிகை எழிலன் மணியம் முகநூல். காம்
 தணிகை ப்ளஸ்.காம்(கூகுள் ப்ளஸ்.)

 தமிழ் மணம் டாட் நெட்.லோடிங் டோஸ்: கவிஞர் தணிகை.

லோடிங் டோஸ்: கவிஞர் தணிகை.
ரொம்ப நன்றிங்க ,தக்க சமயத்தில் நீங்கள் செய்த உதவி என் உயிரையே காப்பாற்றி விட்டது என்றார் அந்த அரசுப் பேருந்து ஓட்டுனர், அவர் பேர் கூடத் தெரியாது...
கோவை கே.ஜி ஹாஸ்பிடல் தலைவர் பக்தவத்சலம் பேசியதை ஒரு நாள் கேட்க நேர்ந்து நானும் லோடிங்க் டோஸ் நிறைய ஆர்வமுடையவர்க்கு சுமார் 50 பேராவது இருக்கும் வாங்கிக் கொடுத்தேன் விலை 40க்கும் குறைவில்தான்.

ஆனால் அந்த மருந்துகளை எந்தக் காரணம் கொண்டும் எவரும் பயன்படுத்தி விடக்கூடாது என நினைத்தோம். ஆனால் பாருங்கள்: அன்று சேலம் பேருந்து நிலையத்தில் இறங்கி பணிக்கு மறு வண்டிக்கு செல்லும் முன் நாலைந்து காக்கி சட்டை பேண்ட்டுடன் அரசுப் பேருந்துகளின் ஓட்டுனர், நடத்துனர்கள்,சொன்னாலும் கேட்க மாட்டேன் என்கிறார், இவருக்கெல்லாம் எதற்கு லாங், லோக்கல் ஓட்ட வேண்டியதுதானே? என ஒரு ஓட்டுனரை ஆட்டோவில் வைத்து அனுப்ப , அந்த நேரம்தான் நாம் சொல்லும் நேரம்...

உடனே நமது பாக்கெட்டில் இருந்த ஒரு 4 மாத்திரைகள எடுத்து கொடுத்து குடிக்க நீரும் அளித்தோம், அந்த மாத்திரைகளை விழுங்கச் சொன்னோம் இன்னும் 2 மணி நேரத்துக்கு ஒன்றும் கவலை இல்லை இது முதலுதவி மாத்திரை, மருத்துவ மனைக்கு செல்லும் வரை தாங்கும், எனச் சொல்லி அனுப்பினோம்.

செல்பி, போட்டோ எல்லாம் எடுத்துக்கொள்ள வில்லை,பேரும் ஊரும் கேட்கவில்லை. அவராகவே உடல் நலம் தேறி என்னை அடையாளம் கண்டு வந்து நன்றி கூறியது பற்றி நான் கேட்க அப்போதுதான் அவர்  அந்த சம்பவம் நினைவு எல்லாமே. இப்போதும்  ஊர் பேர் கேட்கவில்லை.

நாம் தான் பயோமெட்ரிக் விரல் பதிக்க அட்டன்டன்ஸ் போடும் அவசரத்தில் பஸ் மாறி மாறி ஓடிக் கொண்டே இருக்கிறோமே....

டாக்டர். பக்தவத்சலம்  சொல்லியது போல உயிர் காத்தது. உடனே நீங்களும் ஒரு 4 மாத்திரை அடங்கிய பை ஒன்றை பாக்கெட்டை வைத்துக்கொள்ளலாமே அது உங்களுக்கு உதவாமலே போகட்டும் சக மனிதர்க்கு உறுதுணையாய் உதவட்டுமே...உயிர் காக்கட்டுமே.

நமக்கு அவர் சொன்ன அளவில் மில்லிகிராம் கிடைக்கவில்லை எனவே 4 எண்ணிக்கைக்கும் பதிலாக 6 ஆகிவிட்ட மாத்திரைகள்.
யாருக்கும் உதவட்டுமே.

Life Saving ‘Loading Dose’ in Acute Myocardial Infarction – Heart Attack
God is whispering through your ears!
Listen, assimilate & spread the good message.
It may be a ‘Life Saving’ message for yourself, your family and your friends
01. ‘Loading Dose’ consists of the following combination:-
a) Disprin 325 mg - 1 tablet
b) Atorvastatin 80 mg - 1 tablet
c) Clopitab 150 mg x 2 - 2 tablets
The above mentioned 3 tablets should be kept in a small envelope and kept in the
pocket always.
02. Who should keep the ‘loading dose’ in their shirt pocket?
The following susceptible (vulnerable) people who may develop a heart attack any time while at home, office or while travelling:-
a) Diabetes
b) High blood pressure
c) Smokers
d) People above 40 years of age
e) Obese individuals (80 kgs & above)
f) Who have high ‘bad’ blood cholesterol
g) Those with family history of heart attack
h) Those who have stressful job and lot of mental stress
03. ‘Heart attack’ can affect you any time of the day or week.
04. “Self-diagnosis on possibility of a heart attack –
(‘Warning Signals of a Heart Attack’):-
a) Discomfort in the chest (so called gas trouble)
b) Heart burn
c) Indigestion
d) Pain in the chest, lightening pain or heavy pain or pressing pain, pain radiating to the left arm, neck, back or jaw
e) Sweating or perspiration even in cold atmosphere
f) Unusual difficulty in climbing up stairs or difficulty, discomfort while walking
g) Pain radiating to the left arm, neck, back or jaw
h) Feeling of giddiness
05. Any of the above signals indicate that a person may have an impending ‘heart attack’. You need urgent medical attention; don’t postpone; call a doctor or an ambulance to your office or residence.
06. Do not drive a vehicle or walk (quietly lie down).
07. During the above situations, please swallow with a tumbler of water yourself the ‘loading dose’, which is in your pocket.
08. These ‘loading dose’ first aid tablets reduce the viscosity of the blood, decrease the severity of heart attack and ‘save your life’.
09. The above said combination of medicine, i.e. ‘LOADING DOSE’, is available in KG Pharmacy, Coimbatore, in a separate envelope, which may be kept in your pocket always.
Dr. G. Bakthavathsalam
Chairman
KG Hospital & Post Graduate Medical Institute
Coimbatore
Telephone: 0422-2212121
Email: drgb@kggroup.com
Website: www.kghospital.org

மறுபடியும் பூக்கும்வரை

கவிஞர் தணிகை.