Sunday, October 30, 2016

கொடி : கவிஞர் தணிகை

கொடி : கவிஞர் தணிகை

Image result for kodi


அரசியல் படம் என்றாலே அலர்ஜி ஆகிடும் நிலையில் துணிந்து இந்தப்படம் அரசியல் களங்களை மட்டுமே மையமாக வைத்து எடுக்கப் பட்டிருக்கிறது.சிறுவராக இருக்கும்போதே எதிர் எதிர் மேடைகளில் ருத்ராவும் கொடியும் பேச்சாளர்களாகிவிடுகிறார்கள். கொடி மற்றும் அன்பின் ஊமையான அப்பா கர்ணாஸ் தீக்குளித்து விடுகிறார் கட்சிக்காகவும் கட்சித் தலைமைக்காகவும்...

எனவே அடிப்படையில் வெறுப்புடனே பார்க்க ஆரம்பிக்கிறோம். அதில் பாதி நேரம் இடைவேளை வரை கற்பனையில் விளையாட்டுத்தனமாகவே கதை நகர்கிறது. பிடிப்பில்லாமல்.

ருத்ரா எனப்படும் நயவஞ்சகத் தனமான மேடைப் பேச்சாளராய் இருக்கும் பெண், சொந்தக் காதலை, காதலனை கத்தியில் குத்தி கொலை செய்து விட்டு கட்சித் தலைமை, பதவிச் சுவையை அனுபவிக்கத் துடிக்கும் கதாபாத்திரம் (ருத்ரா என்னும்) த்ரிஷா ஏற்றிருக்கும் பாத்திரம். அவர் உண்மையாகவே காதலித்து பதவியை அதன் போதையை.புகழை என்பது கதை சொல்ல முனைகிறது.


வெள்ளைக்கோழி முட்டைக்கு சாயம் ஏற்றி அதை நாட்டுக்கோழி முட்டையாக விற்கும் அனுபமா என்னும் நடிகை மாலதி முட்டைகளை கொடி தள்ளி விட்டுப் போனதால் அதன் விளைவுகளுடன் அவர்கள் குடும்பத்தோடு ஒன்ற நினைக்கிறார். ஆனால் கொடிக்குப் பதிலாக அன்பு எம்.எல்.ஏ வாக மாறிய பிறகு அவனுடன் சேர ஏங்குகிறார் அது என்னவாயிற்று என கதை சொல்லவில்லை.

ருத்ராவின் துரோகத்தை அன்புவின் உண்மை வீழ்த்தி விடுவதாகவும், கொடி தனது காதலியே தன்னை குத்தி விட்டதால் வெதும்பி வாழ விரும்பாமல் இறந்து விடுவதாகவும் கொடி,அன்பின் தாய் விளக்கி முடிக்கிறார்கள் . அதிகம் ஒட்டியும் ஒட்டாமலும் இந்தப் படம் நகர்ந்து கொண்டிருக்கிறது.

எஸ்.ஏ .சந்திரசேகருக்கு கட்சித் தலைவர் பாத்திரம். சரண்யாவுக்கு கொடி, அன்பு ஆகியோரின் தாயாக,இப்படி நிறைய பாத்திரங்கள் இருந்தாலும் படம் நிறைவாக இல்லை.

இரு வேடங்களில் தனுஷ் தோன்றி இருக்கிற போதிலும் இரண்டிலுமே பெரிதாக கொடி நாட்டவில்லை.திரிஷாவுக்கு வில்லி ரோல். எல்லா கதாநாயகிகளுமே தமது நடிப்புலக வாழ்வு முடிந்து போகும் நேரத்தில் வில்லியாக, ஜோதிகா, ரம்யா கிருஷ்ணன், இப்படி நடித்திருப்பது போல திரிஷாவும். இதன் பிறகு குணச் சித்திர நடிகையாக எதிர்பார்க்கலாம். என்ன இருந்தாலும் நடிகைகளுக்கு வயது கூடினாலே மதிப்பு குறைந்து விடுவது என்பது புதிதல்லவே.

இன்றைய அரசியல் களத்தைப் பற்றி விளக்கினாலும் ஒன்றும் லயிக்கும்படி இல்லை. ஏன் எனில் அரசியல் களமே அப்படித்தான். வெளியில் கட்சிகள் நாட்டை ஆள்வதாக முக்கிய முடிவுகள் எடுப்பதாகத் தோன்றினாலும் அதில் ஈடுபடும் தனி நபர்களின் ஆசா பாசங்களையும் தனி மனித வேட்கைகளையும் பொறுத்தே ஒரு நாட்டின் அரசியல் தீர்மானிக்கப்படுகிறது என்று சொல்ல முனைந்துள்ளார்கள். ஆனால் அது எத்தனை பேருக்கு சென்றடைந்திருக்குமோ? சென்று சேருமோ?

மிகவும் ரஸமல்லாத வறட்சியான தயாரிப்பு. ஆனால் இது போன்ற தயாரிப்புகள் செய்ய துணிச்சல் வேண்டும். நூற்றுக்கு 40 மதிப்பெண் கூட எட்ட முடியாது ஏன் எனில் படம் நிதர்சனமான உண்மைகளை அப்படியே தருவதால் அதிக மதிப்பெண் தரத் தோன்றவில்லை. எந்த வித கவர்ச்சியும் இல்லை.

காற்றில்லாததால் கொடி பட்டொளி வீசி பறக்கவில்லை. தொங்கிக் கிடக்கிறது. பார்ப்பதும் பார்க்காததும் உங்கள் விருப்பம். பார்க்காததால் நஷ்டமில்லை. பார்த்தால் கஷ்டம் இருக்கிறது. இப்படித்தான் நாட்டின் நடப்பும், கட்சிக்காரர்களும் இருக்கிறார்கள் என்ற  வேதனை தொற்றிக் கொள்கிறது.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Saturday, October 29, 2016

காஷ்மோரா தீபாவளிக்கு பம்பர் பரிசு: கவிஞர் தணிகை

காஷ்மோரா தீபாவளிக்கு பம்பர் பரிசு: கவிஞர் தணிகை

Image result for kashmora

காசு இருப்போர் அவசியம் சினிமாத் தியேட்டரில் சென்று பார்க்க வேண்டிய பார்த்து அனுபவித்து மகிழ வேண்டிய  பிரும்மாண்டமான படம்..இதைப் பற்றி நிறைய பேச வேண்டி உள்ளது. டெட்லி ஸ்பிரிட் என்ற ஆங்கிலப் படத்தை தமிழில் எடுத்து தெலுங்கிலும் வெளியிட்டு வெற்றிக் கொடி நாட்டியிருக்கிறார்கள், தீபாவளியன்று காலை எழுந்தவுடன் முதல் விருந்தாக பார்த்து முடித்து விட்டேன். இந்த இணையதளங்கள் தான் எவ்வளவு வசதி ஏற்படுத்தி தருகின்றன எங்கும் நகராமல் வீட்டுக்குள்ளேயே இருந்து கொண்டுவிரும்பிய படங்களை பார்க்க‌. .

தெலுங்குப் படங்களில் விட்டலாச்சாரியார் என்ற ஒரு மறைந்த இயக்குனர் ஆவி சம்பந்தமான படங்களை எடுத்து புகழ் பெற்றவர். ஜகன்மோகினி போன்ற படங்கள் தமிழிலும் பேர் பெற்றவை. ஆனால் அவை எல்லாம் மிகவும் கீழ்த் தரமான சிந்தனையுடன் இருக்கும்.இந்தப் படம் ஆங்கிலப் படத்துக்கு இணையாக ரிச்சாக வந்திருக்கிறது. கொஞ்சம் மம்மியை நினைவு படுத்துகிறது உருவம் கலைந்து போவதெல்லாம்... எனவே தமிழ், தெலுங்கு இரசிகர்களை கவர்ந்திழுக்க நல்ல கதையை கற்பனையை உலவ விட்டிருக்கிறார்கள்.
Image result for kashmora


இன்றைய காலக் கட்டத்தில் ஆவி தொடர்பான நிறைய படங்கள் தமிழில் வந்த நிலையில் அதன் தொடர்ச்சியாக‌ சிகரம் தொட்டிருக்கிறது இந்தப் படம் இரு மொழிகளில் இறங்கி இருக்கிறது ஆவி உலக ஆராய்ச்சி ‍ விச் கிராப்டிஷம் எனப்படும் துறையில் பொய் சொல்லி பிழைப்பு நடத்தும் ஒரு குடும்பம் எப்படி ஆவி உலகத்துள் போய் அனுபவிக்கிறது என்று மிகவும் இரசிக்கத் தக்க வகையில் கொடுத்திருக்கிறார்கள். அதில் வழக்கப்படியான ராஜா கதை, பழி வாங்கல் கதை சுருக்கமாக ஆனால் தெளிவாக, கம்பீரமாக செய்திருக்கிறார் கார்த்தி. கொஞ்சம் சந்திரமுகி வேட்டையன், பாஹூபலியை நினைவு படுத்தினாலும் படம் சூப்பர்ப்.

Image result for kashmora


ஆனால் 164 நிமிடங்கள் ஓடக்கூடிய 60 கோடி ரூபாய் செலவு செய்து எடுத்த‌ தமிழ் படத்தை இயக்குனர் கோகுல் நயம்பட ஒரு துளி நேரம் கூட நேரம் போவது தெரியாமல் தீபாவளி விருந்தாக்கியுள்ளார். very very interesting and time passing thriller.

கார்த்திக்கு இந்தப் படம் ஒரு மைல் கல். காமெடி, வில்லன், கதாநாயகன் என முப்பரிமான ரோல். பின்னி எடுத்து விட்டார். அதனால்தான் தெலுங்கு இரசிகர்கள் தமிழ் இரசிகர்களை விட ஒரு படி அதிகம் என்று ஒரு பேட்டியில் சொன்னார் போலும் தெலுங்கு சினிமா விசுவாசிகள் இந்தப் படத்தை லேசில் விடமாட்டார்கள்.

கலவையான வியாபார நோக்கில் எடுக்கப்பட்ட படம். பட்டிமண்டபத்தில் பெரும்பாலும் முன்பெல்லாம் இருபக்கமும் வாதங்களைக் கேட்டு முடித்து விட்டு எந்தப் பக்கமும் ஒருமித்த தீர்ப்பை தராமல் பொதுவாக சொல்லி முடிப்பது போல... ஆவி உலக ஆராய்ச்சி செய்யும் ஸ்ரீதிவ்யா ஆவி இருக்கிறதா இல்லையா என தடுமாறுவது போல எந்த தீர்வும் தராமல் இருக்கிற இந்த படத்தில் சினிமாத்தனமான நிறைய இருந்தாலும் என் ஜாய் பண்ண நிறைய இருக்கிறது.

https://youtu.be/rQUj5Mf6iiA
http://deccanreport.com/karthi-kashmora-trailer/

பிலாக் மேஜிக் என்று சொல்லப்படும் பில்லி சூனியம், மந்திரம் மாந்திரீகம், ஆவி உலக ஆராய்ச்சி, ஆவி உலகம், ராஜ் நாயக் மன்னர் ஆட்சிக் காலம் ரத்னா தேவி, பலஹீனம் பெண்கள் இப்படி சொல்லப்படுவது ஒரு புறம், விவேக் அப்பாவாக‌, சந்தானத்தோடு நகைச்சுவையில் ஈடு கொடுத்த ஜாங்ரி மதுமிதா தங்கையாக நடிக்க  கார்த்தி படு அமர்க்களப் படுத்துகிறார். பல நடிகர்களை பின்னுக்குத் தள்ளுகிறார் நல்ல மாடுலேஷன் டையலாக் டெலிவரி. முற்றிலும் வித்தியாசமான 3 வேடம், பாஹுபலி நிறைய சிரமப்பட்டு எடுக்க ஆனால் காஷ்மோராவாக‌ சுலபமாக  கார்த்தி ஊதித் தள்ளி இருக்கிறார்.

நயன் தாரா கொஞ்ச நேரமே வந்தாலும் அவரது ரோலை அவர் சரியாகவே செய்திருப்பதாகச் சொல்லலாம். கிராபிக்ஸ், விசூவல் கம்யூனிகேஷனில் பின்னி இருக்கிறார்கள் முண்டமாக தலை தனியாக ஆவியாக வரும் ராஜ் நாயக், வாழும்போது மொட்டைத் தலை ராஜ் நாயக் எல்லாமே குறை காண முடியாமல் கார்த்தி அசத்தி இதில் நடித்த எல்லாரையுமே ஓவர் டேக் செய்து சினிமாப் பட‌ உலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து தக்க வைத்துக் கொண்டுள்ளார்
Image result for kashmora


கொஞ்சம் அசந்தால் நம்மையும் கார்த்தி இரசிகராக மாற்றி விடுவது போன்ற அசத்தலான நடிப்பு. சும்மா புகுந்து விளையாடி இருக்கிறார் பயத்தை போலியை வெளிப்படுத்தும் காஷ்மோராவாக உள்ளீடற்ற வெறும் ஏமாற்றுப் பேர்வழியாய் இருந்தபடியே எப்படி மக்களை கவர்ந்து அவஸ்தைப் பட்டு பேரும் புகழும் அடைகிறார்.

ஒரு பக்கம் பார்த்தால் நகைச்சுவையாய் அந்த பில்லி சூனிய தந்திரங்களை போலி என கேலி செய்கிறார்கள். மறுபக்கம் ஆவி உலக கதை செய்து படத்தை நன்கு நகர்த்துகிறார்கள்.

மொத்தத்தில் தீபாவளிக்கு வந்த படங்களில் இது முதலிடம் பெறுகிறது நல்ல பொழுது போக்குப் படம். தாரளமாக நூற்றுக்கு 55 கொடுக்கலாம். பார்க்கும் மக்களை மகிழ்வித்து இருக்கிறார்கள். எல்லாம் மறந்து சிரிக்கலாம். சிந்திக்க நினைப்பவர்களும் ஆவி உலக வாழ்வு பற்றி சிந்தித்து கேள்வி கேட்டுக் கொள்ளலாம்.


Image result for kashmora

எழுதிக் கொண்டே இருக்க வேண்டும் என்ற அளவில் படம் நன்றாக உள்ளே சென்று ஊறி விடுகிறது. கதை நல்ல நிலை. சிறந்த ஒப்பனை.நிறைய பொருட் செலவு அருமையான வசனம் சிரிக்குமளவு. நல்ல தயாரிப்பு, நல்ல பிசிறில்லாத இயக்கம், நல்ல எடிட்டிங், மேலும் விசூவல் எபக்ட்ஸ், கிராபிக்ஸ் எல்லாமே பாராட்டும்படியாக இருக்கிறது. பாடல்கள் தேவையில்லாத படம். இசை நன்றாகவே இருக்கிறது. கேலிக்கு அளவே இல்லை மெல்லிய நகைச்சுவை படமெங்குமே இழையோடியபடியே இருக்கிறது பெரும் சிறப்பு.சண்டைக் காட்சிகள் எல்லாம் இரசிக்கும்படியாகவே இருக்கிறது

சினிமாவில் நாயகன் வில்லன் என்பதெல்லாம் எம்.ஜி.ஆர், நம்பியார், சிவாஜி என்ற காலத்தில் இருந்ததோடு சரி. சத்யராஜ், கமல், ரஜினி, கார்த்தி, இன்றைய நடிகர்கள் எல்லாமே அந்த உண்மை என்ற நிழலாடும் நிலையை மாயையை கிழித்து எல்லாம் நடிப்புதான் என்பதை வெளிப்படுத்தி சிறப்புப் பெறுகிறார்கள். அந்த வகையில் இந்தப் படத்தில் கார்த்தி வில்லனாக, நாயகனாக, ஆவியாக பிசிறில்லாத கதையில் அசத்தி உள்ளார். எடிட்டிங் குழப்பமில்லாமல் 3 கதையை ஒரே கதையில் பிணைத்துள்ளது. நன்றாக புரிகிறது.

பாஹூபலிக்கு கிடைத்த அளவு நிதி இவர்களிடம் கொடுத்தால் அதை விட ஒரு நல்ல கதையில் அதை விட இந்த அணி சிறந்த சினிமாவைத் தர முடியும் என்று சவால் விட்டிருக்கிறது. முகமது அலி சொல்லி அடிப்பாராம் ஜெயித்துக் கொண்டே இருப்பேன் என குத்துச் சண்டையில் இத்தனாவது ரவுண்டில் எதிரியை வீழ்த்துவேன் என்பது போல கார்த்திக்கு இந்தப் படம் ஒரு பேர் சொல்லும் ஒரு ஹிட் படம்.

Image result for kashmora

காலை 9 மணிக்கே பார்த்து முடித்தாலும் இப்போதுதான் உங்களிடம் எடுத்து பதிவு செய்ய முடிந்திருக்கிறது. நன்றி வணக்கம்.

மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.

Friday, October 28, 2016

பாலகுமாரனின் புத்தி மாறாட்டம்/ஜீன்ஸ்: கவிஞர் தணிகை

பாலகுமாரனின் புத்தி மாறாட்டம்/ஜீன்ஸ்: கவிஞர் தணிகை


Image result for balakumaran

150 நாவல்,100 சிறுகதைகள், 14 படங்கள் 2 மனைவி வயது 70 தாடி மீசை முனிவர் போன்ற தோற்றம் தினமலர் தீபாவளி மலரில் ஒரு மனந்திறந்த வக்கிரம். எதையாவது எழுத வேண்டுமே என்ன எழுத என உள் சென்று கடைசியில் தன்மேல் தானே போட்டுக் கொண்ட பிணமாலை. புத்தி தடுமாற்றம் இந்த எழுத்தாளருக்கு போதாத காலம் அல்லது இறுதிக் காலம் ஏற்பட்டு விட்டதன் அறிகுறியும் அடையாளமும்.

காவிரி மைந்தனின் ஒரு பதிவு இந்த பதிவுக்கு ஒரு அடித்தளமாகிறது.எனது நண்பர் ஒருவர் கேட்டார், பாலகுமாரனைப் படித்திருக்கிறீர்களா என படித்திருக்கிறேன் என ஆரம்பித்த அந்த பதில் எல்லா இலக்கிய‌ உலகையும் சுற்றி வந்தது அப்போது. இப்போது இவரை சுற்றிவருகிறது.

 இவரது எழுத்துகளை கல்கி, ஆனந்த விகடன். குமுதம் போன்றவற்றில் தொடராகவும், புத்தகமாகவும் நிறைய படித்தேன். சில புத்தகங்கள் எனது தனி நூலகத்திலும் உண்டு.படங்களும் பார்த்துள்ளேன். ஆனால் தினமலரில் இவர் இப்போது எழுதியுள்ள அவரது சொந்த வாழ்வு இலக்கியத்தில் சேர்க்கப் படக்கூடாதது.Image result for balakumaranஇவரது எழுத்துகளில் ஒரு மீறல் இருக்கும் ஆனால் அது ஜெயகாந்தனின் சமூக அக்கறையுடனான எழுத்து போன்றது அல்ல பாலுறவு மீறல் அதிகம் தொனிக்கும் நெடி. அதையே பெண் விடுதலை எனச் சொல்லி கருதி எழுதி இருப்பார் போலும். காவிரி மைந்தன் தொடாத பகுதியை நான் தொடுகிறேன். தி.ஜ.ரா கூட கள்ள உறவுகள் பற்றி எல்லாம் எழுதி இருக்கிறார் ஆனாலும் அதில் அவருக்குண்டான ஒரு மென்மையான ஸ்டைல் முத்திரை இருக்கும். ஆனால் பாலகுமாரனில் ஒரு கர்வம், ஒரு ஆணவம், ஒரு திமிர் இருந்து கொண்டே அந்த கள்ள உறவுகள் செய்வது சரி எனச் சொல்லும். இது போன்ற உறவுகள் சில தற்கொலைகளில் முடிந்து போயிருக்கின்றன என்பதை நான் நடைமுறையில் பார்த்திருக்கிறேன். ஆனால் இவருடைய எழுத்துகள் அது போன்றவற்றிற்கு ஊக்கப்படுத்துவதாக சில கதைகள் அமைந்துள்ளன. 

கிடைக்கும் காசு என்ற ஆசை இன்னும் இவரை எல்லாம் எழுதும் தேவையை உண்டு பண்ண வைத்திருப்பதை இவரின் எழுத்துப் பஞ்சத்தைப் போக்க இவர் தன்னையே தான் சொறிந்து கொண்டு இவரது உண்மை வாழ்வை தாயுடன் தந்தை நடந்து கொண்ட விதத்தை எழுதி கொச்சைப் படுத்திக் கொண்டு விட்டார்.

தினமலர் நாளேடு சர்ச்சைக்குரியது அதிலும் இந்த தீபாவளிமலரின் பாலகுமாரனின் பதிவு மிகுந்த கேள்விக்குரியது. இவரது எழுத்துகளில் ஏன் அவ்வளவு பாலியல் கலப்பு ஏன் வந்தது என்ற கேள்விக்கு இவரின் தாய் தந்தையரின் வேரைக் காண்பித்து இவர் பதில் அளித்து விட்டார்.

அவரே அவர் தந்தையைப் பற்றி சொல்கிறார்: குடி இல்லை சீட்டாடுவதில்லை, வெற்றிலை போடுவதில்லை, பொம்மனாட்டி சகவாசம் இல்லை என்று அவரின் தந்தையை அவரின் தாய் கொண்டாடுவாராம், ஆனால் அதில் ஏதாவது ஒன்று இருந்திருந்தாலும் பரவாயில்லை இவரின் வக்ரம் குறைந்திருக்கும் என இவர் சொல்கிறார். தந்தையின் கோபம், அவர் வன்முறை,அவரின் பயம், அவரின் கோழைத்தனம் பற்றி தந்தையை சாடுகிறார். மனிதரே அல்ல மனிதனே அல்ல என்றும் வெறும் உண்டு, கழித்து, உயிர் வாழ்ந்த மிருகம் என்கிறார்.

தந்தையை அடிக்க முனைந்ததை பறை சாற்றுகிறார். மேலும் தாயை அவமானப்படுத்தி மற்றவரை இழிவு படுத்த எப்போதும் தயாராய் துடித்துக் கொண்டிருக்கும் ஒரு பைத்தியக்காரன் என்கிறார்.மேலும்  அதை விட அதிகமாய்: அடுத்த வீட்டுப் போர்ஷன் பெண்மணியை நாணி, திகைக்க வைக்க, அவமானப்படுத்த நள்ளிரவில்  பாலகுமாரனின் அம்மாவை எழுப்பி, பிள்ளைகள் பார்க்கிறார்கள் என்பதையும் கூட கவனத்தில் கொள்ளாது இவரது தந்தை தாயை கட்டி அணைத்து,முத்தமிட்டு, கண்ட இடங்களில்  கை வைத்து , காம சரசங்களை, கெட்ட வார்த்தைகளை உரக்க நடத்தியவன், பிள்ளைகள் எழுந்து உட்கார்ந்து கவனிக்கின்றனர் என்று தெரிந்தும் தொடர்ந்து நடத்தியவன் மொத்தத்தில் அந்த இழிமகனிடம் எப்படி நீ குடும்பம் நடத்தி மீண்டாயோ? என்று தமது இறந்து போய் பல வருடங்கள் ஆன தாய்க்கு கடிதம் எழுதுகிறாராம் அது எதற்கு என்றால் தற்கால பெண்கள் அப்படிப்பட்ட கணவரோடு வாழ்ந்தால் மீட்டுக் கொள்ளத் தானாம், மீண்டு வரத்தானாம்...என்னே ஒரு இலக்கியம்,,,புல்லரிக்குது பாலகுமாரன்.இவரது தந்தை செய்தது இழி செயல் என்றால் இவர் செய்வதும் செய்ததும் இழி செயல்தான். அந்த விந்தில் இருந்து முளைத்ததுதானே? விதை ஒன்னு போட்டா சுரை ஒன்னா முளைக்கும்?

எந்தவிதத்திலும் கம்பீரம் இல்லாத மனிதனாம், மொழியறிவோ , சந்தியாவந்தனமோ, பூஜையோ புனஸ்காரங்களோ செய்யாதவனாம், காய்கறி, துணிமணி ஏதும் வாங்கத்தெரியாதவனாம்..இப்படி எவ்வளவோ தாயை தந்தையைப் பற்றி எழுதும்போது தந்தையை சாடி எழுதி தமது புத்தி மாறாட்டத்தை எழுதி தனது எழுத்து வறட்சியை புலபடுத்திக் கொண்டுள்ளார். இந்த அரைவேக்காடு.

இப்போது தான் புரிகிறது இவரது ஜீன் அப்படி. எனவேதான் அப்படி எல்லாம் இவரால் எழுத முடிந்திருக்கிற்து என்று.எழுத்தாளர் சுஜாதா ரங்கராஜனின் மனைவி சுஜாதா அவர்கள் ஒரு முறை சுஜாதா எழுத்தாளரைப்பற்றி தமது கணவரைப்பற்றி தமது எழுத்து அத்தனைக்கும், தம் பேரை விட தமது மனைவியின் பேரே இருக்கட்டும் என தாம் உயர்ந்து வெளித் தெரிந்த பிறகும் கூட கடைப்பிடித்த அறிவியலாளர் பற்றி குறைவு பட எழுதி அசிங்கப்பட்டுப் போனார். அதற்கும் நாம் மறுப்புப் பதிவு இட்டோம். அது போல இந்த பாலகுமாரனும் தாய் தந்தை பற்றி எழுதி தாயை உயர்த்துவதாக எழுதி தந்தையை தோலுரித்துக் காண்பித்து தாம் அந்த வழி வந்தவர்தான் என தம்மை அடையாளப்படுத்தி வெளிப்படுத்திக் கொண்டு விட்டார்.

பொதுவாகவே அடியேனாகிய நான் எந்த சாதி ஆச்சாரம் பற்றியும் உள் புகுந்து எழுதுபவனல்ல என்றாலும் இந்த பார்ப்பனர்கள் எதைப்பற்றியுமே வெட்கம் இல்லாதவர்கள். எதற்கும் தயாரானவர்கள் தாம் என்பது இது போன்ற பாலகுமாரனின் பதிவு மூலம் நன்கு தெரிந்து கொள்ளலாம். மற்றொரு நண்பர் ஒருவர் மற்றொரு பார்ப்பனர் வீட்டில் நிகழ்ந்ததாக சொன்ன வக்கிரமான சம்பவங்களும் இப்போது எனக்குள் நிழலாடுகிறது. அது வேண்டாம் விடுங்கள்\\\

2000 ஆண்டில் தாரமங்கலத்தில் எனக்கு ஒரு அரட்டை அரங்கத்தில் பேச வாய்ப்பு வந்தது அதில் பேசும்போது எனக்கு எனது குடும்பத்தின் ஏழ்மை குறித்து பேச பேச்சுகள் கருவுற்றன..ஆனால் அந்த ஆற்றோட்டப் பேச்சை  flow   அப்படியே முழுக்கி விட்டேன் ஏன் எனில் எமது குடும்பத்தின் நிலையை பிறருக்கு ஏன் வெளிப்படுத்த வேண்டும் . ஆனால் அப்படி வெளிப்படுத்தி இருந்தால் அது சபைக்கு நல்ல சுவையாய் இருந்திருக்கும் என விசு கருதினார். ஆனால் நமது வேர்களை நாமே காயப்படுத்தி அப்படி என்ன புகழ் வேண்டிக் கிடக்கிறது நமக்கு?

இந்த பாலகுமாரன் ஒரு யோகி போலவும் தவவாசி போலவும் வேடம் அணிந்து வருகிறார் என்பதற்கு இவரது உண்மைப் பேச்சு அதுவும் பிரசுரமான எழுத்துகள் சான்றாகிவிட்டன.

நதி மூலம், ரிஷி மூலம் காண்பது கூடாது என்பதெல்லாம் இதற்குத்தான். இதைத்தான் பைபிளில் ஏசு சொந்த ஊரிலும் வீட்டிலும் தவிர வேறெங்கும் இறைவாக்கினர் மதிப்பு பெறுவர் என்று.

பொதுவாகவே இறுதிக் காலத்தில் மனிதர்க்கு ஒரு புத்தி மாறாட்டம் என்று ஒன்று நிகழ்வதுண்டு. இந்த தினமலரின் தீபாவளி மலரின் ப்ரியமுடன் பாலகுமாரன் எழுதிய பதிவு இவருக்கு அந்தக் காலக் கட்டம் நெருங்கி விட்டது என்று சொல்லத் தோன்றுகிறது. வேறென்ன சொல்ல....புகழடைந்த மனிதர்கள் கூட மேலும் மேலும் புகழுகும் பொருளுக்கும் ஆசைப்படுகிறார்கள். ஆசையை யாரால் அறுக்க முடிகிறது? அது ஒவ்வொருவருக்கும் ஒரு வகையில் .பெரியார் தாசனுக்கு ஒரு வழியில், சசிபெருமாளுக்கு ஒரு வகையில், பாலகுமாரனுக்கு இவ்வழியில்.

இவர் எழுதிய வசனத்தில் உருவான ஜீன்ஸ் என்னும் சங்கரின் படம் மிகவும் ஆர்ப்பாட்டமாக வாயைத் திறந்து கொண்டு பார்ப்பது போல அமெரிக்காவிலிருது உலக நாடுகள், உலக அதிசயங்கள் யாவற்றுக்கும் நம்மை அழைத்துச் செல்லும் கடைசியில் ராதிகாவும், நாசரும் ஊத்தையாக புலை நாற்றமெடுக்கும் கதையை கட்டவிழ்ப்பார்கள் தரம் தாழ...அது போல இந்த பாலகுமாரனின் கம்பீரமும் இங்கு குடை சாய்ந்து மண்ணில் வீழ்ந்து நாசப்பட்டு விட்டது.


எல்லாவற்றுக்கும் மேலாக விறகுக் கட்டையால் கையைக் காலை உடைத்து, மண்டையைப் பிளந்து இருக்க வேண்டும். , சுத்தியல் வைத்து பற்களைத் தட்டியிருக்க வேண்டும்,முதுகெலும்பை முறித்திருக்க வேண்டும், கால்கள் நடக்க இயலாதபடி வெட்டுக்காயங்கள் ஏற்படுத்தி இருக்க வேண்டும்,,,அப்படீன்னா இன்னும் எவ்வளவு வன்மம் இருக்கிறது பாருங்கள் அம்மா இறந்து 16 ஆண்டு ஆன பின், அவரின் 40 ஆண்டுகால மணவாழ்வில் ஒரு மனநோயாளியான தந்தையுடன் வாழ்ந்ததாக சொல்கிறார். தந்தை இறந்த பின் 12 ஆண்டுகள் இந்த அம்மா புருஷன் இல்லாத காலம் பொற்காலம் என்று வாழ்ந்ததாக சொல்கிறார். அவரைக் கேட்டால் தெரியும் அவர்தான் போய் 16 ஆண்டு ஆகிவிட்டதே...ஆக இவர் தந்தை இறந்து 28 ஆண்டுகள் ஆன பின்னும் இவரிடம் இவ்வளவு வெறி, வன்மம் புதைந்து கிடக்கிறது எனில் இவரின் தாடி மீசை எல்லாம் வெறும் ஆஷாடபூதித்தனம் தானே? ஜீன் சரியாக வேலை செய்திருக்கிறது....

Image result for balakumaran


மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

பட்டாசு வெடிக்காத தீபாவளித் திருநாளில் வாழ்வில் வழி காட்ட ஒளி கூட்ட வாழ்த்துகள்: கவிஞர் தணிகை.

பட்டாசு வெடிக்காத தீபாவளித் திருநாளில் வாழ்வில் வழி காட்ட ஒளி கூட்ட வாழ்த்துகள்: கவிஞர் தணிகை.
Image result for deepavali


சிவகாசி குட்டி ஜப்பான், பட்டாசு தொழிலை மட்டுமே நம்பி வாழவில்லை, அங்கே அச்சு,காலண்டர்,தீப்பெட்டித் தொழில், மெஷின் மேக்கிங்,இப்படி பல தொழில்கள் உண்டு. இந்த பட்டாசுத் தொழில் தம்மையும் அழித்து பிறரையும் அழிக்கும் இரசாயனப் பொருள் வேடிக்கையால் விளைகிறது.பொருள் அவாவினால் நடப்பது. அதிலும் பல நூறு சதம் இலாபமாக இடைத் தரகர்களுக்குத்தான் போய்ச் சேர்கிறது. அரசு, மற்றும் அறிவார்ந்தார் கடன் இதை மடைமாற்றம் செய்து இதில் உடல் நலத்தை இழந்து சொற்ப வருவாய் ஈட்டிவரும் மனித குலத்தை காக்க வேண்டும் என்பதே.

சீனத்துப் பட்டாசும், சீனப் பொருள்களும் கூட பயன்படுத்துவதிலிருந்து விலக்கப் பட வேண்டியதே. சீனத்து தொழில்நுட்பம் நமது ஏ.டி.எம்.கார்டுகளின் இரகசியக் காப்பில் எப்படி ஊடுருவல்கள் நடத்துகின்றன என ஊடகங்கள் வழி காண முடிந்தது.

 தீபாவளி என்ற திருநாள் கிருஷ்ணன் நரகாசுரன் (சூரன்) வதம் என்ற அடிப்படை இல்லாத கதையின் மூலம் படிக்காத படிக்கத் தெரியாத படிப்பதைப் புரிந்து கொண்டு ஏன் எதற்கு எப்படி என்று பார்க்கத் தெரியாத முட்டாள்களை ஏமாற்றி மூடர்களால்  காலம் தொட்டு வியாபாரிகளுக்கு ஆதரவாக கட்டி புனையப்பட்டிருப்பது என்பதால் அதைப் பற்றி முற்றிலும் அக்கறை கொள்ளத் தேவையில்லை.

நமது முகநூல் தோழர்கள் வேடிக்கையாகச் சொன்னார்கள், மற்றவர்கள் வென்றால் அவர்கள் எதிரிகள் சூது செய்தால் அவர்கள் சகுனிகள், அதுவே நமக்கு ஆதரவானால் அவர் கிருஷ்ணர். கடவுள்

உள் கட உள் கட உள் கட என்ற சொற் பிரயோகமே கடவுள் என்றும் தமிழ் மொழியில் மட்டுமே இந்த உயர்ந்த சொல்வடை இருக்கிறது என்பதை அறியலாம். நாம் கூட 1983 வாக்கில் திண்டுக்கல் இளம் வர்த்தகர்களின் ஒரு கூடலில் : புறம் கட உள் பார்க்க, புறம் கட ; கடவுள் பார்க்க என்று faith in God   என்ற தலைப்பில் ஒரு கவிதை சமர்ப்பித்தோம். அது என்றும் நிலையாக நிற்கிறது காலத்தை விஞ்சி அல்லது காலத்தைக் கடந்து என்றும் சொல்லலாம்.

இப்போது ஐப்பசி அடைமழைக்காலம் எல்லாம் காணாமல் ஓடி மறைந்தது. இன்னும் குளிரவே ஆரம்பிக்கவில்லை நவம்பர் மாதத்துள் நாம் நுழைவில் இருந்தும் .அமெரிக்காவின் விண்வெளியின் அதிக காலம் இருந்த பெருமையுடைய விண்வெளி வீரர் ஒருவர் சொல்கிறார்  இந்தியாவும் சீனாவும் பெரும் காற்று மாசடைவில் இருக்கிறது. இதை விண்வெளியில் இருந்து நன்கு காண முடிகிறது எனச் சொல்லி இருக்கிறார். மக்கள் தொகையும் அதிகம் மாசடைதலும் அதிகம் என்கிறார் மணியம் பொறியாளர் படிப்பை படிக்க ஆரம்பித்திருப்பவர்.

ஐக்கிய நாடுகள் சபை சொல்கிறது இன்றைய உலகு 90 சதவீதம் மாசடைந்து விட்டது. மனிதர்கள் வாழ்வதே பெரும் சோதனையாய் இருக்கும் இந்தக் காலக் கட்டத்தில் மேலும் மேலும் நமது இயற்கைக்கு ஒவ்வாத செயல்பாடுகள் செய்யாமல் நாம் இருப்பதே இந்த பூமிப் பந்துக்கு நாம் செய்யும் நம்மால் முடிந்த புண்ணியம். பறவைக்கு, விலங்குகளுக்கு, நோயாளிக்கு, முடியாதவர்க்கு, முதியவர்களுக்கு எல்லாம் வேண்டாம் முதலில் உங்களுக்கு நீங்களே நன்மை செய்து கொள்ள முயற்சி செய்வது இதிலிருந்தே இப்படிப்பட்ட சிறிய காரியங்களில் இருந்தே ஆரம்பிக்கிறது. பட்டாசை தவிர்ப்போம் தீபாவளித் திருநாளில் வாழ்விற்கு ஒளி கூட்டுவோம், மாசைக் குறைப்போம் என உறுதி எடுப்போம்.

ஆண்டுக்கு ஆண்டு இந்த பட்டாசு வெடிக்கும் அவா குறைந்து வருவது ஆரோக்யமான செயல்பாடு.நாளை தீபாவளியானாலும் இன்று இந்த 3 மணி மதியம் வரை கூட பட்டாசு வேட்டு சத்தம் அங்கொன்றும் இங்கொன்றுமாகவே கேட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் ஒரு காலத்தில் இந்த சத்தம் கார்த்திகைத் தீபத்திலிருந்தே கேட்க ஆரம்பித்து விடும் என்பதையும் மறந்து விட முடியாது.காரணம் பட்டாசு விலை என்பதும் ஒன்றாக இருக்கலாம்.மக்களிடம் உள்ள பொருளாதார நிலைகளும், மதுபானமும், காசை இப்படி விரயம் செய்யக் கூடாது என்பதாகவும் பல காரணங்கள்.


தீபாவளித் திருநாள்: என்பது தீபங்களின் அணிவரிசையில் அழகு ஒளி பெறும் ஒரு நாள் என்பதே. எனவே காசை விரயம் செய்யாமல் ,நோய்வாய்களை உருவாக்கும் இரசாயன பொட்டாஷ், கந்தகம், நைட்ரேட் போன்ற பொருள்களின் காற்றுக் கலப்பினால் உருவாகும் மாசிலிருந்தும்  சுவாசக் கெடுதல்களிலிருந்தும் தப்பியுங்கள். மேலும் இனிப்பு, உடலுக்கு அதிகம் நன்மை பயப்பதல்ல என்பதால் அதையும் அளவுடன் சுவையுங்கள். மற்றவை எல்லாம் திருநாளுக்கு ஏற்றவைதான். உறவின் கலத்தல், நட்பின் இருத்தல், குடும்பம் சுவைத்தல், மகிழ்தல் யாவுமே நமது கால பாரம்பரியத்தாலும் எந்தக் காலத்திலும் ஏற்றுக் கொள்ளப் பட வேண்டியவையே என்று கூறி இந்த தீபாவளித் திருநாளில் அனைவருடைய வாழ்விலும் இயற்கை நல் ஒளிக் கீற்றுகள் சிந்தட்டும் ....என வாழ்த்தி மகிழும்

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

ஒரே இடத்தில் இரு வேறு நேரில் கண்ட சாலை விபத்தும் பால் குட விளைவுகளும்: கவிஞர் தணிகை

 ஒரே இடத்தில் இரு வேறு நேரில் கண்ட சாலை விபத்தும் பால் குட விளைவுகளும்: கவிஞர் தணிகை

Image result for yesterday accident in front of vinayaka bike and car on highway


வேம்படிதாளம் மருத்துவ மனை முகாம் பணி முடித்து சுமார் 12 மணிக்கு எங்களது வாகனம் கல்லூரி வளாகத்துள் நுழைய முனைகையில் இடி இடித்தது போன்ற ஒரு பெரும் சத்தம்.வண்டியை அப்படியே நிறுத்தி விட்டு பின் சென்று பார்த்தோம்.ஒரு ஆடி கார் சாலையில் முன்புறம் சேதமாகி கண்ணாடி எல்லாம் உடைந்து, இரு சக்கர வாகனம் முன்னால் பறக்க, பின்னால் அந்த வண்டியில் வந்த இருவரும் பின்னால் சாலை செடிகளிடை வீழ்ந்து கிடக்க...

விநாயகா மிஷன்ஸ் சங்கராச்சாரியார் பல் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த இந்த 7 மாதத்தில் பல விபத்துகளை கல்லூரியின் எதிரே வீரபாண்டி நெடுஞ்சாலையில் கண்டு விட்டேன். விநாயகா தலைமை அலுவலகத்தின் எதிரே என்றும் சொல்லலாம். ஆனால் இன்று பார்த்தது மிகவும் சினிமா பாணியில் வண்டியும் விபத்தில் சிக்கிய பைக்கின் 2 நபர்களும் சுமார் 10 அடி உயரே எழும்பி சாலையின் வலப்புறம் உள்ள செடிகள் நிரம்பியிருக்கும் குழிப்பகுதியில் விழுந்துள்ளனர். இவர்களின் பைக் முன்னால் சென்று விழுந்து கிடந்தது.இருவருக்குமே மண்டையில் நல்ல அடி காயம், இரத்தம் வழிந்து ஓட... வேகம் , வேகம் , ஒரே வேகம். தடையில்லா வேகம். பெரும் சோகம்.

Image result for ariyanoor highway at vinayaga dental college

ஒருவர் காலமாகிவிட்டார் மற்றொருவர் நிலையோ கவலைக்கிடம்.கேரளாவிலிருந்து மாண்ட் போர்ட் ஏற்காடு பள்ளிக்கு வந்து தமது பிள்ளைகளை தீபாவளி விடுமுறைக்கு அழைத்து செல்ல வந்த ஆடி கார் வெகு வேகமாக வர, குறுக்கே பாய்ந்த இந்த பைக் தூக்கி விசிறி எறியப்பட்டது.

காரில் இருந்தவர்களுக்கு ஒரு சேதமும் இல்லை. ஆனால் அந்த பைக்கில் வந்தவர்கள் இனி வாழ்வதே கூட அரிதுதான். முன்பே சொன்னபடி ஒருவர் அங்கேயே...மற்றொருவர் மிகவும் மோசமான நிலையில்..

108ஐ அழைத்தோம். முதல் உதவி இல்லாத வண்டி வந்து சேர்ந்து , அதில் இரு நபரையும் தூக்கி சென்று போட்டோம்.

அதை வேடிக்கை பார்த்த கூட்டம் சேரச் சேர ஒரு கார் திடீரென்று பிரேக் போட ஒரு இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த கர்ப்பிணிப் பெண் அந்த வண்டியில் மோதி கீழ் விழுந்து இரத்தக் கசிவு...
Image result for yesterday accident in front of vinayaka bike and car on highway


நிலை இப்படி எல்லாம் இருக்க நெய்காரப்பட்டியில் உள்ள ஒரு கோயிலில் இதன் முதல் நாளில் அம்மாவுக்காக பால்குடம் ஏந்திய கூட்டத்தில் ஒரு 55 வயது மதிக்கத் தக்க மனிதர் ஒருவர் கீழே விழுந்து இறந்து விட்டார்.

அந்த இடத்திலும் நாங்கள் அன்று சென்றபடியும் வந்தபடியும் இருந்தோம். நவம்பர் 14 குழந்தைகள் தினவிழாவிற்கு பள்ளிகளுக்கு அழைப்பிதசழ் கொடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது.கேள்விப்பட்டது வேறு. . ஒரு குடம், சேலை,ஒரு மதிய உணவு, 200 ரூபாய் என கூட்டம் சேர்த்தி டெம்போவில் பிற பகுதிகளில் இருந்தும் ஆள் அழைத்து வரப்பட்டனர் அப்படி வந்தவருள் ஒருவரே அப்போது இறந்தவர்.ஒரு நாளைக்கு ஆசைப்பட்டு இறப்பை அடைந்தவர் இது போல் எத்தனையோ?

இந்த 2 சம்பவங்களுமே தேசிய நெடுஞ்சாலைப் பகுதிகளில் விளைந்த விபத்துகள். ஆபத்து தவிர்க்க எச்சரிக்கை அவசியம், ஒரு மயிரிழையில், ஒரு சிறுக் கீற்றுப் பொழுதில் மரணத்தை தழுவிடும் ஆபத்துகள் இருப்பதால் தேசிய நெடுஞ்சாலையில் மட்டுமல்ல சாலையில் சென்றாலே நல்ல கவனத்துடன் சென்று செல்ல வேண்டிய ஊருக்கு சென்றடைவீராக.

சில நாளுக்கும் முன் எமது ஊர் இளைஞர் ஒருவர் கூட இரு சக்கர வாகனத்தில் சென்றவர் புளிய மரத்தில் அடித்து கண்கள் வெளித் தெறித்து ஓட மாண்டது...மற்றொரு விபத்தில் பாதை இருளில் புலப்படாமல் வண்டி மரத்தில் அடித்து வண்டி ஒரு புறமும், ஓட்டிச் சென்ற இளைஞர் மறுபக்கமும் விழுந்து கிடந்து அப்பாவுக்கு விபத்தாகிவிட்டது என செல்பேசியில் சொல்லி விட்டு யாருமற்ற ஆளரவமற்ற புதரில் அரை மணிக்கும் மேல் கிடந்து உயிர் இழந்த மனிதர் இப்படி நிறைய விபத்தாய் கேள்விப்படுகிறோம். பார்க்கிறோம்.

சாலையை கவனத்துடன் கையாளவும். நமது உயிர் நமது கையில். காலனின் பையில் அல்ல.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Thursday, October 27, 2016

வேள்வித் தவம்.

துளித் துளியாய்

வாசனைத் திரவியம்

தீர்ந்து கொண்டிருக்கிறது

தணிகை வாழ்வு(ம்)Image result for life shortens day by day

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

Image result for life shortens day by day


Image result for life shortens day by day


Wednesday, October 26, 2016

பள்ளிக் குழந்தைகளுக்கு ஒரு அரிய வாய்ப்பு குழந்தைகள் தினம் நவம்பர் 14ல்: கவிஞர் தணிகை

பள்ளிக் குழந்தைகளுக்கு ஒரு அரிய வாய்ப்பு குழந்தைகள் தினம் நவம்பர் 14ல்: கவிஞர் தணிகை


Image result for november 14 childrens day

விநாயகா மிஷன் சங்கராச்சாரியார் பல் மருத்துவக் கல்லூரி வரும் நவம்பர் 14 அன்று அன்றைய தினம் பல்மருத்துவ சிறார் தினமாகவும் இருக்கிறபடியால் மிகவும் அரியதொரு விழாவை ஏற்பாடு செய்திருக்கிறது.

அது சமயம்:பல போட்டிகளை பள்ளிப் பிள்ளைகளுக்கு முதலாம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை நடத்துகிறது.

சேலம் மாவட்டம் சேலம் அருகே உள்ள அரியானூரில் உள்ள விநாயாகா மிஷன்ஸ் சங்கராச்சாரியார் பல் மருத்துவக் கல்லூரியில் இந்த விழா நடைபெறுகிறது.

ஆர்வமுள்ள பள்ளிகளின் பிள்ளைகள் , பள்ளிகள் வழியாகவும், தாமாகவும், தமது பெற்றோர் உடனும் வந்து கலந்து கொள்ளலாம்.

1. சிறந்த சிரிப்புக்கான பரிசு

2. பேச்சுப் போட்டி

3. வினாடி வினா

4. ஓவியம் வரைதல்

5. பொருத்தமான விடையைத் தேர்வு செய்தல்

போன்ற அறிவு சார் மற்றும் உடல் திறன் சார் போட்டிகளும் நடத்த உள்ளது. அது சமயம் அனைத்துப் பள்ளிகளையும் பள்ளிப் பிள்ளைகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம். போட்டிகளில் வெற்றி பெறுவோர்க்கு சிறப்பான பரிசுகளும், கலந்து கொண்டவர்களுக்கும் பரிசுகளும் வழங்கப்படும். மேலும் மதிய உணவும் அங்கேயே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் கலந்து கொள்வோர் அனைவர்க்கும் பல் பரிசோதனை, பராமரிப்பு, பாதுகாப்பு ஆலோசனைகள் இலவசமாகவே வழங்கப்படும் என்பதை கல்லூரி நிர்வாகம் மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறது.

Image result for father of dental science

நிகழ்ச்சி கல்லூரியின் சிறார் பல் மருத்துவத் துறை சார்பாக கல்லூரி முதல்வர் பேபி ஜான் அவர்களின் சீரிய அனுமதியுடன் துறைத்தலைவர் டாக்டர் சுரேஷ்குமார் அவர்களின் வழிகாட்டுதலுடன்
நடைபெறுகிறது. நிகழ்ச்சியை மருத்துவப் பேராசிரியர் ரமேஷ் அவர்கள் ஒருங்கிணைத்து நடத்த மருத்துவ ஆசிரியர் ஸ்டீபன், மற்றும் பேராசிரியர் வினோலா, ஆகியோருடன் டாக்டர்: ராஜ்குமார்,டாக்டர்கள் பிரதீப் டேனியல், சூரஜ், மல்லிகா, மற்றுமுள்ள மருத்துவர்கள் குழு போட்டிகளை நடத்துகிறது.

நீங்கள் அந்தப் போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் மாணவ மாணவியருடன் கல்லூரியின் தொடர்பு எண்: 04298‍ ~ 247773 என்ற எண்ணிலும் ராஜ்குமார் : 9894855919 என்ற எண்ணிலும் 8015584566  என்ற எனது எண்ணிலும் கூட தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம். மேலும் மின்னஞ்சல் மூலமும் தொடர்பு கொள்ளலாம்:


மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Tuesday, October 25, 2016

இளம்பிள்ளை,பெருமாக் கவுண்டம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகளில் பல் மருத்துவ முகாம்: கவிஞர் தணிகை.

இளம்பிள்ளை,பெருமாக் கவுண்டம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகளில் பல் மருத்துவ முகாம்: கவிஞர் தணிகை.

Displaying IMG_20161025_103831.jpg

விநாயகா மிஷன்ஸ் சங்கராச்சாரியார் பல் மருத்துவக் கல்லூரியின் பல் பரிசோதனை முகாம் அக்டோபர் 20,25 ஆகிய நாட்களில் இளம்பிள்ளை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியிலும், பெருமாக்கவுண்டம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியிலும் சிறப்பாக நடைபெற்றது.766 சிறுவர் சிறுமியரும் மற்றும் பல ஆசிரியர்களும் பலனடைந்தனர்.
Displaying IMG_20161025_111740.jpg


தமிழக அரசின் அரசுப்பள்ளிகளில் அதுவும் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகளில் 455,311 பிள்ளைகள் ஒன்றாம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை இடம் பெற்று காணப் படுவதென்பது மிகவும் அரிது இக்காலத்தில்.

அப்படிப்பட்ட பெருமையை உடையதாக இளம்பிள்ளை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியும், பெருமாக்கவுண்டம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியும் விளங்குகிறது.

ஏற்கெனவே நாங்கள் ஒரு முறை இந்தப் பள்ளிப் பிள்ளைகளுக்காக பற்களின் பரிசோதனை முகாம் நடத்த திட்டமிட்டோம். ஆனால் சில காரணங்களால் அது ஒத்தி வைக்கப் பட்டது. ஒத்தி வைக்கப் படுகிறது என்றாலே நமது அகராதியில் அது மேலும் சிறப்பாக, செம்மையாக, ஆழமாக ஊடுருவி செய்யப் படும் என்பதே.

Displaying IMG-20161021-WA0002.jpg

இளம்பிள்ளை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மாதேஸ்வரி , பெருமாக்கவுண்டம்பட்டி தலைமை ஆசிரியர் கலாராணி மற்றும் அங்கிருந்த கணினி ஆசிரியர் முதற்கொண்டு அனைத்து ஆசிரியப் பெருமக்களும் நன்கு ஒத்துழைத்தனர்

எமது விநாயகா பல் மருத்துவக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் பேபிஜான் அவர்கள் அனுமதித்ததன் பேரில், சமுதாயத் துறைத் தலைவர் டாக்டர்.என்.சரவணன் அவர்களின் வழிகாட்டுதலுடன் நாங்கள் சிறந்த 15 மருத்துவர்கள் கொண்ட குழுவினருடன்  அந்தப் பள்ளிகளுக்கு 2 நாள் சென்று இந்த முகாமை நிறைவு செய்தோம்.


Displaying IMG_20161025_103902.jpg

பள்ளிப் பிள்ளைகளுக்கு பற்கள் பரிசோதனை செய்யப்பட்டதுடன், பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. முகாமில் சிறுவர் சிறுமியர்க்கு:டாக்டர் துர்கா, டாக்டர் துளசிமணி மற்றும் டாக்டர்கள் அஜின்ஸ், வீரமணிகண்டன்,விநீஸ்,கீர்த்தனா,அனுபமா,அபிதா, அனிதா, அஞ்சலி,மற்றும் சிறுவர் பிரிவை சார்ந்த 2 மருத்துவர்கள் ஆகியோர் அக்கறையுடன் சேவைப்பணி செய்தனர்.

Displaying IMG_20161025_103843.jpg

டாக்டர் அபிதா, டாக்டர் துளஸிமணி ஆகியோர் பிள்ளைகளுக்கு பற் பாதுகாப்பு பராமரிப்பு ஆலோசனைகளும் வழங்கினர்.மேலும் சுமார் 125 குழந்தைகளை தேர்வு செய்து உடனடி மருத்துவம் செய்து கொள்ள தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் வழியாகவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் பெருமாக்கவுண்டம்பட்டி பள்ளியில் வரும் குழந்தைகள் தினத்தன்று கல்லூரி, அழகான சிரிப்பு, வினாடிவினா, பேச்சுப்போட்டி, ஓவியம் வரைதல்,பொருத்தமான விடை தேர்வு செய்தல் இன்னபிற போட்டிகளை நடத்துகிறது அதில் தவறாமல் கலந்து கொள்ள அழைப்பும் விடுக்கப்பட்டது முகாம் அலுவலர் மூலம்.
Displaying IMG_20161025_103851.jpgமேலும் இது போன்ற சேவைப் பணி தொடர ஆக்கமும் ஊக்கமும் கொடுத்து வரும் முதல்வரைப் பற்றியும் , துறைத்தலைவர் பற்றியும் மற்றும் கலந்து கொண்ட அத்தனை மருத்துவர்களின் சேவைப்பணி பற்றியும் பாராட்டி நிகழ்வை ஒருங்கிணைத்தேன் வாய்ப்பளித்த ஆசிரியர்களுக்கு சில சொற்களில் நன்றி செய்தும்...


Displaying IMG-20161021-WA0001.jpg

முகாம் அறிக்கையாக இந்தப் பதிவு இருக்கிறது

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

எப்போதோ எழுதியதன் மீட்சி

ஒரு ஆசை:
‍‍‍‍____________
மருத்துவ மனைகள்

மதுபானக் கடைகள்

சினிமாக் கொட்டகைகள்

காவல் நிலையங்கள்

காலி செய்யப்பட வேண்டுமென்று!


Image result for want

ஒரு கனா:
___________

செலவின்றி
தாமதமின்றி
நீதிமன்றங்களில்
ஏழைக்கு
நீதி நியாயம்
கிடைக்குமென்று!

Image result for dream


ஒரு வினா:
_______________

இந்தியாவில்
எப்போது
ஊழலற்ற‌
மக்களாட்சி மலருமென!
Image result for dream

ஒரே பதில்
___________

வீண் கற்பனை
போதும் நிறுத்து.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

எப்போதோ எழுதியதன் மீட்சி


Image result for dream
Sunday, October 23, 2016

மைக்கேல் டி ஜோசப் குன்ஹாவிற்கு இழைக்கப் பட்ட அநீதி: கவிஞர் தணிகை

மைக்கேல் டி ஜோசப் குன்ஹாவிற்கு இழைக்கப் பட்ட அநீதி: கவிஞர் தணிகை

Image result for kunha

மிகவும் அரிதான உழைப்புடன் ஒரு தீர்ப்பை முன் வைத்தார். அது சில வாரங்களில் முறிந்து போனது ஒரு 2 நிமிட தீர்ப்பால். குமாரசாமி என்ற நீதிபதி எனச் சொல்லிக் கொண்ட நபரால் , அவருக்கும் அன்றைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் நட்பூ இருந்தது என அன்று ஊடகங்கள் எழுதின.

இந்த தீர்ப்பு முரண்கள் உச்ச நீதிமன்றத்திடம் இறுதிக்காக வைக்கப் பட்டன. இதோ இதோ என்றார்கள், என்கிறார்கள். ஆனால் 20 ஆண்டுகளுக்கும் மேலான பின்னும் இன்னும் உச்ச நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கவில்லை. பன்னாட்டு நீதிமன்றம் தி ஹேக் இடம் விடப்பட்டிருந்தாலும் கூட ஒரு முடிவு எட்டப்பட்டிருக்கும் எனத் தோன்றுகிறது.

இந்நிலையில் தமிழக முதல்வர் மாண்பு மிகு இதய தெய்வம் அம்மா அவர்கள் ஒரு மாதத்துக்கும் மேல் அப்பல்லோவில் இருக்கிறார் உடல்நிலை 95 சதவீதம் தேறிய நிலையில். என செய்திகள்.இந்தப் பதிவு அம்மாவின் உடல் நிலைக்கு எந்த வகையிலும் தொடர்புடையதாக கருதி விடாதீர். இது முற்றிலும் இந்திய நீதி பரிபாலனம் பற்றியதே.

இந்நிலையில் பாரதீய ஜனதா கட்சியின் தமிழகத் தலீவர் அம்மையாரின் ஒரு வானொலிப் பேட்டி காதில் விழுந்தது. இந்த நாட்டின் தீண்டாமை இன்னும் நிலவ காங்கிரஸ் அரசே காரணம் , அது சுதந்திரம் அடைந்த பின் 70 ஆண்டுகளில் பெரும்பாலும் அதுவே ஆட்சியில் இருந்தது என்றும், ஸ்டாலின் தி.மு.க கூட்டும் காவிரி நீர் பிரச்சனை தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என்றும் உறுதி பட அறிவித்திருக்கிறார்.

கர்நாடகாவின் ஒற்றுமையும், தமிழ் நாட்டின் வேற்றுமையும் இதிலிருந்து தெரிந்து கொள்க.

இவர்களின் தற்கால  மத்திய அரசின் ஆட்சியில் எப்போது எப்படி இந்த தீர்ப்பு வரும் என எவரும் கேட்கப் போவதில்லை. இந்த கருத்துக்குள் புகவே போவதில்லை. ஏழைக்கும் பாளைக்கும் சட்டம் , நீதி எல்லாம் கயிற்று சுருக்காகும். ஆண்டவர்களுக்கும்,ஆள்பவர்களுக்கும் இவை கழட்டிய செருப்பாகும்.

Image result for kunha

எல்லாவற்றையும் ஆம் எல்லாவற்றையுமே நிதியால் வாங்கிட முடியும் நிரந்தர முதல்வர்களால்...காலத்தை வாங்கிட முடியுமோ? எல்லாம் மனித உயிர்கள்தானே? உயிருள்ள எல்லாவற்றுக்குமே முடிவு ஒன்று என்பது உண்டுதானே? இந்திய சரித நீதியை விட இயற்கை நீதியும், நியதியும் சீற்றமுடையவை.எப்போதும் போல் இருக்க முடியுமா? திரும்பவும் நாம் சராசரி நாட்களுக்கு திரும்ப முடியுமா? திரும்பவும் சிறுவர் சிறுமியாக ஓடி ஆடத்தான் முடியுமா? அல்லது பாடத்தான் முடியுமா? எனவேதான் சித்தர் சொல்லியபடி நாடாறுமாதமாய் குயவனை வேண்டிக் கொண்டு வந்த தோண்டியை கவனமாக கையாண்டு சற்று இந்த பூவுலகில் உடல் நலச் சிறப்புடன் புன்னகை விரிப்புடன் சற்றே நீட்சி பெற்று சென்று சேர வேண்டுமாய், பதினாறும் பெற்று பெரு வாழ்வு பெரு வியாதி வாழ்வல்ல, வாழ வேண்டுமாய் இந்தப் பதிவு அனைவரிடமும் பிரார்த்திக்கிறது.

நல்ல மனிதர் செய்யும் உழைப்பை சிறப்பிக்காவிட்டாலும், சிறுமைப்படுத்த வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறது. அந்த மனிதர் செய்த உழைப்பை இந்த நாடு அவமானப்படுத்தி இருக்கிறது. உழைப்பை நேசிப்பவர்க்குத்தான் தெரியும் அந்த அவமானத்தின் வலி எத்தகையதென்று. சகாயத்தைக் கேட்டுப்பார்த்தாலும் அவருக்கும் அந்த வலி தெரியும். ஆயிரம் வழிகள் அனைவர்க்கும் தெரியும் அழிந்து போக.., உழைப்பு என்ற ஒரே வழிதான் உண்டு உயர்ந்து போக...

Image result for kunha

what about the apex court's verdict? regarding with all political related cases dealt with all political parties in India....?

Image result for kunha

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Saturday, October 22, 2016

பெர்முடா முக்கோணப்புதிர் கூட தெரிந்து விட்டது எங்க அம்மா உடல் நிலை புதிர் புதிராகவே: கவிஞர் தணிகை.

தமிழக முதல்வர் உடல்நிலை குறித்த செய்திகளில் ஏன் இத்தனை முரண்கள்: கவிஞர் தணிகை
Image result for bermuda triangle


டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளேட்டில் கவர்னர் வித்யாசாகர் ராவ் முதல்வர் இருக்கும் வார்டுக்கே சென்று பார்த்ததாகவும் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாக தெரிவித்துள்ளதாகவும் அதன் பின் வழக்கப்படி மந்திரி பிரதானிகளை சந்தித்ததாகவும் செய்தி வெளியிட்டிருக்கிறது

Image result for bermuda triangle


சமயம் என்ற ஒரு கேள்விப்படாத நாளேட்டில் : வார்டுக்கே சென்று பார்த்தேன் நன்றாக பேசி வருகிறார்,அவரது உடல்நலனில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பது மகிழ்ச்சி தெரிவித்திருப்பதாக செய்தி வந்திருக்கிறது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒருமாதத்துக்கும் மேலான நிலையில் தினமணி என்ன சொல்லி இருக்கிறது எனில்: சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்களிடம் சுமார் 25 நிமிடம் சந்தித்துப் பேசியதாகவும், உடல் நிலை பற்றி கேட்டறிந்ததாகவும் ஆனால் செய்தியாளர்களை சந்திக்கவில்லை இது அவரின் 2 ஆம் வருகை என்று மட்டுமே குறிப்பிடுகிறது

தினத்தந்தி: ஒய்.எஸ். சவுத்ரி என்ற மத்திய மந்திரி சந்திர பாபு நாயுடு சார்பில் முதல்வரின் உடல் நிலை குறித்து விசாரிக்க வந்ததாகவும் அப்பல்லோகாருவையும், தம்பிதுரையுடன் பேசியதாகவும் 95 சதம் உடல் நிலை தேறிவிட்டதாகவும் சொல்லி உள்ளார்.

இப்படியாக...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

செய்திகள் வழியே ஊடகத்தின் வழியே ஒன்றும் புரிந்து கொள்ளவோ விளங்கவோ இல்லையே...தானைத் தமிழகமே...
Image result for bermuda triangle

பெர்முடா முக்கோணப்புதிர் கூட தெரிந்து விட்டது எங்க அம்மா உடல் நிலை புதிர் புதிராகவே: கவிஞர் தணிகை.

Friday, October 21, 2016

ஒன்னுமே புரியலைன்ன புதிர் பெர்முடா மர்மம் 170கி.மீ வேக காற்று வெடிப்பினாலாம்: கவிஞர் தணிகை

மேகமே மேகமே  பெர்முடா மர்மம் விலகியதாம்...மேகமாய் மேகமாய் அறிவொளி வீசுதாம்,
 நன்றி : தினத் தந்திபெர்முடா பகுதி அட்லாண்டிக் கடலில் உள்ள பெர்முடா பகுதி  உள்ள ஒரு மர்ம பகுதியாக இருந்து வருகிறது. இதுவரை  பல  கப்பல்களும் ஆகாய மார்க்கமாக பறக்கும் விமானங்களும் அப்பகுதியில் தடம் தெரியாமல் மறைந்துள்ளன. சுமார் 5 50 லட்சம் கிலோமீட்டர் சதுரடி  பரப்பளவு கொண்டது ஆகும் 

இதற்கெல்லாம் என்ன காரணம் என்ற ஆராய்ச்சி பல காலமாகவே நடந்து வருகிறது. ஆராய்ந்த விஞ்ஞானிகள் பெர்முடா முக்கோணப் பகுதியில் கடலின் ஆழத்தில் புதிரான ஒரு அமைப்பு உள்ளது என, 2012 ல் கண்டுபிடித்தனர். அது நவீன அறிவியல் சாதனங்களின் ஆய்வில் பிடிபடாத ஒரு தன்மையுடையதாக இருக்கிறது என்பதையும் விளக்கினர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கடலின் அடியில் இருப்பது உயிரோட்டமான எரிமலைதான் அதுதான் கப்பல்களை சிதைத்து மூழ்கடிக்கிறது என்ற கருத்தும் வெளியானது. எரிமலையாக மட்டும் இருக்கும் நிலையில், ஆகாயத்தில் செல்லும் விமானங்களும் மறைவது எப்படி? என்ற சந்தேகங்கள் எழுகின்றன.

மேலும், 2012 ல் அமெரிக்க மற்றும் பிரஞ்சு அறிவியலாளர்கள் குழு சென்றபோது, கடல் படுகையிலிருந்து உயர்ந்த ஒரு நிலத்தடி அமைப்பு உலுக்கி தடுமாறச் செய்துள்ளது.

ஆனால், அதற்கு எந்தவிதமான வீடியோ புகைப்பட ஆதரமும் இல்லை ஜோடிக்கப்பட்ட ஆவணப்படங்கள் மூலம் மட்டுமே அவர்களால் விளக்க முடிந்துள்ளது. இந்த சம்பவம் உலக விஞ்ஞானிகளையே உலுக்கி இருக்கிறது.

இந்நிலையில், பஹாமாவில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் மாநாட்டில் டாக்டர் வெர்லேக்  கூறியதாவது, பெர்முடா பகுதியில் பிரமிட் வடிவிலான புதிரான படிகம் உள்ளது. அதன் அகலம் 300 மீட்டர். அதன் உயரம் 200 மீட்டர்.

அது ஏற்படுத்தும் நீர்சுழற்சி மற்றும் ஈர்ப்பினால்தான் கப்பல் மற்றும் விமானங்கள் அழிகின்றன. அதிலிருந்து வெளிப்படும் சக்தி எத்தன்மையுடையது என்பது ஆராயப்பட வேண்டியது என்கிறார்.

ஆனால், அது இருப்பதற்கான சாட்சியோ ஆதாரமோ இல்லை. இது வேற்றுக்கிரகவாசிகளின் வேலையாகவும் இருக்கலாம் என்றும் பேசப்படுகிறது.

இந்த நிலையில் இது குறித்து ஆய்வு நடத்தி வந்த  இங்கிலாந்து விஞ்ஞானிகள் நீண்ட நாட்களாக இருந்து வந்த மர்ம முடிச்சை அவிழ்த்து உள்ளனர். இந்த் பெர்முடா பகுதியில் அறுங்கோண மேகங்கள் காணப்படுவதாகவும் அதனால் அந்த பகுதியில்  நீர் சுழற்சி ஏற்படுவதாகவும் கூறி உள்ளனர். 

கொலராடோ மாநிலம் பல்கலைக்கழகத்தில் வானியல் செயற்கைக்கோள் ஆய்வாளர் டாக்டர் ஸ்டீவ் மில்லர் கூறியதாவது:-

பொதுவாக நேரான விளிம்புகள் கொண்ட  மேகங்களை நீங்கள் பார்த்திருக்க முடியாது.பெரும்பாலான நேரம் மேகங்கள் தங்கள் பங்கீட்டு முறையில்  சீரற்ற நிலையில் உள்ளன.ரேடார் செயற்கை  கோளை பயன்படுத்தி மேகங்கலூக்கு கீழ் என்ன நடக்கிரது என ஆய்வு செய்யபட்டது. அப்போது  கடல் மட்டத்தில் உள்ள காற்று 170 கிலோமீட்டர் வேகத்தில் இருப்பது கண்டறியபட்டது.

இதனால் சக்திவாய்ந்த  45 அடி அலைகள் உருவாகி மேல் எழும்பி விமானத்தில் இருந்து எறியப்படும் வெடி  வெடிகுண்டுகள் போல் மீண்டும் கடலில் விழுகிறது. 
இத்தகைய பெரிய மேகங்கள் மேற்கு முனையில்  20 முதல் 55 மைல் தூரங்களுக்கு காணப்பட்டதாக கூறி உள்ளார்.

வானியல் ஆய்வாளர் ராண்டு செர்வனி கூறியதாவது:-

இந்த அறுங்கோண  வடிவங்கள்  கடல் மட்டத்தில் இந்த சராமாறியாக இந்த விமான குண்டுகளாக செய்ல்பட வைக்கின்றன.கப்பல்களை  கவிழ்க்கவும் விமானங்களை கீழே தள்ளவும்   இந்த காற்று வெடிப்பு 170 மைல் வேகத்தில் வெளிப்புறமாக பரவுகிறது.

மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.

Thursday, October 20, 2016

சேலம் நகராட்சி சேலம் நரகாட்சி அழுக்கு மூட்டை உலக முட்டையில் நான்: கவிஞர் தணிகை

 சேலம் நகராட்சி சேலம் நரகாட்சி அழுக்கு மூட்டை உலக முட்டையில் நான்: கவிஞர் தணிகை

சட்டத்தில் வரும் பாதி மக்களிடம் வரவேண்டும் மீதி

Image result for salem city dust and dirty in tamil nadu

இந்தியாவில் தூய்மையாக  இருப்பதில் 9 ஆம் இடத்தில் சேலம் ரெயில்வே நிலையம் என செய்தி.எனக்கு பொறுக்க மாட்டாமல் வயிற்றைப் புரட்டுகிறது. ஒரு பெண் பரத்திக் கொண்டு நடைமேடைக்கு ஏறும் படியிலும், நடைமேடையிலும் அழுக்கு மூட்டை விரிந்தது போல படுத்துக் கிடக்கிறாள் அருகே 2 வயதுக்குள்ளான ஒரு கீழாடை அணியாத பெண்குழந்தை அமர்ந்தபடி இருக்க... இந்தப் பெண் பேசும் பேச்சும், செய்யும் செய்கையும் மாநரகம்...பொது இடத்தில் பரத்தி படுத்திக் கொண்டு பிறப்புறுப்பில் கை வைத்து ....

ஏன் இப்படி என என்னன்னவோ நாம் எண்ணுகிறோம்.ஒரு சிறுவர் பாதுகாப்புப் பணி செய்யும் நிறுவன இளைஞர் ஒருவர் பேச்சு கொடுத்துப் பார்க்கிறார் .தொடர்வண்டியை சுத்தம் செய்யும் பணியாளர் அவளை எழுப்ப முயல்கின்றனர். அதன் பின் ஒரு பெண்  காவலரும் அவர் பங்குக்கு தம் கடமையை செய்கிறார். ஆனால் இந்தப் பெண்ணை அடிக்கடி நாம் பார்க்க வேண்டியதாகிறது சேலத்து ரெயில் நிலையத்தில்.

ஒருநாள் வாயில் சுவற்றிலேயே ஒரு அநாகரீகமான பெண் சிறு நீர் கழித்தபடி இருக்கிறாள். எவருமே சொல்லுமளவு அங்கில்லை.அது வழிந்தோடிக் கொண்டிருக்கிறது நடை மேடையில் அனைவரும் நடந்து செல்லும் பயன்படுத்தும் பொது இடத்தில். அவளை முதிய வயதினள் என்றுதான் சொல்ல முடியும்.

Image result for salem city dust and dirty in tamil nadu

நின்று கொண்டிருக்கும் தொடர் வண்டியில் கழிப்பறையில் அசுத்தம் செய்ய வேண்டாம், அதாவது சிறு நீர் கழிப்பது, மலம் கழிப்பது வேண்டாம் எனச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் அது நடந்தபடிதான் இருக்கிறது.

ரெயில்வே என்றாலே முடம், கூன், குருடு, நொண்டி, அழுக்கு மூட்டை, பிச்சை, ஊன்றுகோல் என்ற நெடி அதிகமாகவே நிலவுகிறது சில சமயம் தாக்குப் பிடிக்க முடியாமல். ஒரு டிக்கட் வாங்காப் பயணி கடைசிப் பெட்டியில் நடுவில் ஏறி அமர்ந்து கொண்டார் . அவரைப் பார்க்க முடியவில்லை. அவ்வளவு அழுக்கிலிருந்து அவர் வாழ்ந்து கொண்டிருந்தார். கால் கைகள் எல்லாம் நகம் வளர்ந்து கிடக்க, ஆடையெல்லாம் , உடல் எல்லாம், முடி எல்லாம் ...முடை நாற்றம் எடுக்க...இவர்களுக்கு எல்லாம் உறவு, நட்பு, குடும்பம், என மனித உறவுகள் எல்லாம் இருக்கிறதா?
புத்தர் ஆக சிந்திக்க வேண்டியுள்ளது.

சேலத்தில் இது போன்றோர்க்கு உணவு தருவதாக ஒரு செய்தி படித்தேன். ஆனால் 5 ரோட்டில் ரத்னா காம்ப்லக்ஸ் முன் உள்ள பெரும் சாக்கடை இன்னும் பிளாஸ்டிக் மலையால் நிரம்பியே கிடக்க...மாநகராட்சி மாநரகாட்சி சேலத்தில் முதலில் பிளாஸ்டிக் பைகளும், பொருட்களும் தடை செய்யப் பட வேண்டும். செய்வார்களா நகராட்சியனர். இல்லை என்றால் அந்த பெரும் சாக்கடையருகே அவர்கள் சில நிமிடங்கள் வந்து நின்று செல்லட்டும்.

திருப்பதி போன 2000க்கும் முன் ஆண்டுகளில் அறையில் தங்க முன் பணம் வாங்கி  அதை திரும்பி வரும்போது திருப்பி கொடுப்பதாக சொல்லி நிறைய ஏமாற்றி ஊழல் புரிவோருக்கு எதிராக சண்டையிடுவது என் வழக்கம் என் வீட்டாரிடம் வாங்கிக் கட்டிக் கொண்டபோதும்...ஆனால் நேற்று ஒரு செய்தி: இனி அறைகளில் தங்கிச் செல்வோருக்கு முன் பணம் வாங்குவது நிறுத்தப்பட்டு விட்டது அந்த 17 அறைகளும் மூடப்பட்டு அதில் பணி செய்த அத்தனை பணியாளரையும் வேறு பணியில் அமர்த்தி விட்டதாம் தேவஸ்தானம். நல்ல முடிவு. வருவாய் இரண்டு மாநிலமும் பிரித்துக் கொள்வது ஒரு பக்கம் தொடர... இந்த ஊழல் பெருச்சாளிகள் கோவிலுக்கும், அரசுக்கும் தேவஸ்தானத்துக்கும் பொதுவுக்கும் சேராமல் இவர்கள் பாக்கெட்டுக்கு இத்தனை நாள் திருப்பதிக்கு வரும் பயணிகளின் பணத்தை உண்டு பெருத்தபடி இருந்திருக்கின்றனர்.

Image result for salem city dust and dirty in tamil nadu

இதுவும் ஒரு நீக்கப் பட வேண்டிய அழுக்கே. இது போல எத்தனை விதமான அழுக்குகள். பாரதிக்கு சாப்பிடவே குடும்பத்துக்கு உதவா இந்த தேசம் அவரை மகாக் கவி எனக் கொண்டாடுவது போல எல்லாம் காலம். சிலபேர் முன் பிறந்து விடுகின்றனர். காலம் அவர்களை விழுங்கிய பல காலத்துக்கும் பிறகு அவர்கள் சொன்னபடி நடக்கிறது.

Image result for salem city dust and dirty in tamil nadu

ஆமாம் இந்த நதி நீர் இணைப்பை இந்தியாவில் செய்யப் போவது யார்? எப்போது? உடனே சாத்தியமில்லை என்பார் தமது வாதம் செய வருவார் சாத்தியம் இல்லை என்பது ஏதுமே இல்லை என்பதை அவர் உணரார்.

 .பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடாதே. மத்தாப்பு போதும்.


மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Sunday, October 16, 2016

டாக்டர்.ஏ.பி.ஜெ.அப்துல் கலாம்.அந்த நாள் நேற்று போல...கவிஞர் தணிகை.

கலாம் போல் யாமறிந்த மனிதரிலே இனிதாவது ஒருவர் எங்கும் காணோம்: கவிஞர் தணிகை

Image result for apj abdul kalam


விரும்பியவாறே நீ இறந்தாய் தலைவா!
யமனையும் உன் செயல் அழகால்
மயங்கச் செய்தாய்!

1931 அக்.15 முதல் 2015 ஜூலை 27 வரை
ஏகப்பட்ட சம்பவங்கள்
உன் வாழ்வில் விதம் விதமாய்
விதை விதையாய்...
வகைப்படுத்த...

என்றாலும் ஒன்று சொல்லலாம்...

நீ மறுபடியும்
நிற்க மாட்டேன்
என தமிழ்க் கலைஞரால்,
இந்தியக் கட்சிகளால்
இடறி விழுந்ததை சொல்லலாம்.

மேடையிலேயே கைத்தடி
தடுக்கி கீழே விழுந்தாற்போல...

உழைப்பில் அந்த உடல்
ஓய்ந்தது அய்யா!
பிற பிரபலங்கள் போல
நீ பிழைக்க அது ஓயவில்லை

நீ மண்ணில் நிலைக்க
அது உனை ஊன்றி சாய்த்து
என்றும் நீ இருக்க உதவியது...

நீ பள்ளி கல்லூரிகளை நேசித்தாய்.
நீ செய்ததை
சட்டத்துக்கு மீறிய புரட்சி அல்ல
 என்பார் எல்லாம்
உனை புரிந்து கொள்ளாமல்...

எங்கிருந்து அது ஆரம்பிக்க வேண்டும்
தெள்ளத் தெளிவாக தெரிந்ததால்;-அது
அங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும் -என
புதிய விதைகளை  அங்கே விதைத்தாய்
எண்ணத்தை அள்ளி அங்கே தெளித்தாய்,
புரட்சிக்காரர் பற்றி கவலைப்படாமல்..

நீ வாசித்த வீணை
படித்த நூல்கள்
பிடித்த குறள்கள்
பேசிய சொற்கள்
எழுதிய எழுத்துகள்
எல்லாம் ஒளி பெற...

85th birth day 
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.


Thursday, October 13, 2016

முதல்வர்கள் அச்சுதானந்தன், உம்மன் சாண்டி எல்லாமே அங்கு அப்படித்தான்: கவிஞர் தணிகை

முதல்வர்கள் அச்சுதானந்தன், உம்மன் சாண்டி எல்லாமே அங்கு அப்படித்தான்: கவிஞர் தணிகை

சாதாரணமாக எளிமையான‌ முதல்வராக இருந்தவர் வரிசையில் காமராசர், அறிஞர் அண்ணா,ஜோதிபாசு,இப்படி நிறைய பேர் இந்தியாவில். அதில் அச்சுதானந்தன், உம்மன் சாண்டி போன்றோர் கேரளாவில் பெயர் பெறுகிறார்கள். அதைப் பற்றிய செய்தி அடிக்கடி வருகிறது. அச்சுதானந்தன் ரெயில்நிலையத்தில் சாதரணமாக காத்திருந்தது, உம்மன் சாண்டி பேருந்திலும் , ரயிலிலும் போவது என...

சாதாரண பயணியைப் போல் ரெயில் பயணம் செய்த கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி


கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி ரெயிலில் எந்தவித பாதுகாப்பும் இன்றி 160 கி.மீ தூரம் சாதாரண பயணியைப் போல் ரெயிலில் பயணம் செய்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமை கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி ரெயிலில் எந்தவித பாதுகாப்பும் இன்றி 160 கி.மீ தூரம் சாதாரண பயணியைப் போல் ரெயிலில் பயணம் செய்துள்ளார்.

அப்போது பயணி ஒருவரால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஏற்கனவே உம்மன் சாண்டி தான் ரெயில் பயணத்தையே அதிகம் விரும்புவதாகவும், இது போன்ற பயணங்களின் போது தான் மக்களிடையே நெருக்கமாக பழக முடியும் என்றும் கூறியிருந்தார்.

இதற்கு முன் கடந்த மே மாதம் ரெயில் டிக்கெட் கிடைக்கவில்லை என்று பஸ்ஸில் பயணம் செய்து ஒரு முக்கியமான அரசியல் கூட்டத்தில் கலந்து கொண்டவர் சாண்டி.இவர்கள் முதல்வர்கள்:முதல்வராக இருக்கத் தகுதி படைத்தவர்கள். நமது முதல்வரைப் பற்றி நான் ஏதும் சொல்லவில்லை.அவர் நிரந்தரமுதல்வராகவே இருக்கட்டும். வாழ்த்துகள்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

நன்றி : மாலை மலர்

Wednesday, October 12, 2016

தேவி ரெமோ றெக்க: கவிஞர் தணிகை

தேவி ரெமோ றெக்க: கவிஞர் தணிகை

7 ஆம் தேதி வெளியான இந்த 3 படங்களையும் 8 அல்லது 9 ஆம் தேதிக்குள் பார்த்து முடித்து விட்டேன் உங்களுக்காக. ஆனால் அதை எழுதி பதிவிடத் தான் இன்று தான் நேரம் கிடைத்தது. இந்த 3 படங்களிலுமே முன் வரிசையில் சொன்னபடி தேவி முதலாம் இடம், ரெமோ இரண்டாம் இடம் றெக்க மூன்றாம் இடம் எனத் தெளிவாகச் சொல்லலாம்.

தேவி:
ஜென்டில்மேன் சிக்கு புக்கு ரயிலே பாடல் நினைவூட்ட அதே போல் ரயில் காடி, சல்மார் எனப் பாடல்கள் இன்றைய கல்லூரி மாணவர்கள் பாடித்திரிகிறார்கள்.

Image result for devi film prabhu deva


நல்ல மாடர்னான மனைவி வேண்டும் என்னும் மும்பையில் பணிபுரியும் கிருஷ்ணாவுக்கு தந்தை சொல்லை மீற தைரியம் எப்போதும் இல்லாததுடன் நிரம்ப‌ மரியாதை வேறு . விளைவு. கிராமத்துப் பெண்ணை தேவியை மணந்து ஆவிப் பெண்ணான ரூபியுடன் இணைந்து நன்றாக ஆடுகிறார். இரு ரோலும் தமன்னாவுக்கு நன்றாகவே இருக்கிறது.

படம் படு லைட்டாக இருப்பதாலும் இப்படி ஆவி அறைகளில் , வீடுகளில்,விடுதிகளில் இருப்பதை எல்லாம் மறுக்க முடியாத கருத்துகள் உள்ளதாலும் எதையும் போலி,பொய் என்று சொல்ல முடியாமல் சினிமாடிக்காக விளையாடி இருக்கிறார்கள். நடிகர்கள் நமக்கு இயல்பான பாத்திரங்களாக மாறாமலே.ஆமாம் ஆனாலும் இரசிக்க முடிகிறது.

நகைச்சுவையுடன் தமன்னாவும் பிரபுதேவாவும் நன்றாக செய்துள்ளார்கள் தமிழ், தெலுங்கு, இந்தி என மும்மொழித் தயாரிப்பு.ஆவிகள் நல்லதும் செய்யும் அதைப் பேய், பிசாசு என ஒதுக்கத் தேவையில்லை. பிரபு தேவா கிருஷ்ணா ரூபி ஆவியுடன் செய்து கொள்ளும் ஒப்பந்தம், உறுதி மொழி நன்றாக உள்ளது. ஆனால் பொதுவாகவே ஆவிகள் நிறைய ஏமாற்றம் இயல்பு கொண்டவை. நல்ல ஆத்மாக்கள் சிலவே நன்மை செய்து மனிதர்க்கு வழிகாட்டுபவை. அப்படிப் பார்த்தால் ரூபி தனது இச்சையை தேவியை வைத்து நிறைவேற்றியும் கொள்கிறார் யாருக்கும் பெரிதான தீமை செய்யாமலே.

ஜாலியாக என்டர்டெய்ன்மென்டுக்காக பார்க்கலாம் வேறு சில பழைய படங்களை நினைவூட்டினாலும். பழைய கள் புதிய மொந்தையில்.

ரெமோ: ரெஜினா மோத்வானி:

Image result for remo

அடிப்படையில் எந்த வாழ்க்கை ஏணிகளையும் எட்டாத ஒரு இளைஞராக இருக்கும் எஸ்கே, ரெமோவாக , முதியவராக எல்லாம் செய்து டாக்டர் காவ்யாவை மணமுடிக்கத் தீர்மானிக்கும் கதை. காதல் அஸ்திரம் பயன்படுத்தி. இந்த டாக்டர் காவ்யாவுக்கு ஏற்கெனவே மணம் செய்ய நிச்சயம் செய்யப்பட்ட நிலையில் இல்லாத தகிடுதத்தம் எல்லாம் செய்து கடைசியில் குறிக்கோளை எட்டுவதாக கதை. நன்றாக வசூல் செய்வதாகவும் செய்தி. ஆனால் போலித்தனமான நம்பிக்கை ஏற்படுத்தும் சினிமா.

இது போன்ற சினிமாக்கள் இன்றைய இளைஞர்களை தவறான பாதைக்கே வழிகாட்டும். எதுவுமே இல்லாமலே எதுவுமே செய்யாமலே எந்தப் பெண்ணை வேண்டுமானாலும் அடைந்து விடலாம் வேஷம் போட்டு என்பதான கதை. அதற்கு குரல் மாற்றிப் பேசுவதை வேண்டுமானால் உழைப்பு என்று சொல்லிக் கொள்ளலாமா? பொருளாதார பலத்தில் படு வீக்காக இருக்கும் இந்த ரெமோவுக்கு காதலிக்கு பிறந்த நாளுக்கு மட்டும் செலவு செய்து ஊரே வியப்படைய வைக்குமளவு வாண வேடிக்கை வான வேடிக்கையாக செய்ய முடிவதும் , குழந்தைகளுக்கு பெரிய மருத்துவ ஆறுதலாக இருப்பதும், நர்ஸ் பயிற்சி இல்லாமலே பிரதாப் போத்தன் என்னும் மருத்துவ மனையின் நிர்வாகியை ஏமாற்றி வேலைக்கு சேர்வதும் எல்லாமே அபத்தமாக இந்தக் கால இளைஞர்களை தவறான வழிக்கு இட்டுச் செல்வதான தவறான நம்பிக்கை ஏமாற்றம் கொடுக்கும் என்ற சிற்றறிவுக்கு கூட எட்டாமல் பொழுது போக்கு என்ற பேரில் அவ்வை சண்முகி, (அதுவே ஆங்கில படத்தின் தழுவல் அது போல இது ஒன்று)

டாக்டர் காவ்யா எப்படி இந்த ரெமோ நர்ஸின் பேச்சைக் கேட்டு தமது வாழ்க்கையில் தடுமாறுகிறார். பேசி முடிக்கப் பட்ட திருமணத்திலிருந்து வெளியே வந்து காதல் என்ற ஒரே பிடிப்பல்லாத மரக்கலம் ஏறுகிறார் என்பதை நகைச்சுவையாக பொழுது போக்காக சொல்லி இருக்கின்றனர். சினிமாவாக பார்க்கலாம். துளியும் வாழ்க்கைக்கு அருகே வர முடியாத படம்.

பெண் வேடம் ரெமோவாக சிவகார்த்திகேயனுக்கு பொருத்தப்பட்டுள்ளது. இதே போல எல்லா நடிகர்களும் பெண்ணாக நடிப்பதும், எல்லா நடிகைகளும் ஆணாக நடிப்பதும், பேய்க்கதைகள் தொடர்ந்து வருவதும் தமிழ் சினிமாவின் சுழற்சி முறையை காட்டுகிறது.

றெக்க:
விஜய் சேதுபதியை மக்கள் நாயகனாக ரஜினிகாந்தாக‌ பார்க்க மக்கள் ஆவலாக இருப்பதாக எண்ணி எடுக்கப் பட்ட சண்டைப்படம். காதலன் காதலியை சேர்த்து வைக்க திருமணத்தை நிறுத்தி கூட எதிர்ப்பை ஏற்றுக் கொள்ளும் பாத்திரம் சிவா என்னும் விஜய் சேதுபதிக்கு. அது அவருக்கு பெரும் எதிரிகளையும் பெரும் எதிர்ப்பையும் ஏற்படுத்தி கடைசியில் மந்திரி மகள் பாரதி என்னும் லெட்சுமி மேனனையும் தூக்கி வரச் செய்து விடுகிறது. வழக்கம் போல நிறைய உள் கதைகள் தனித் தனிக் கதைகளாக பல படங்கள் எடுக்குமளவு.


Image result for rekka movie

செல்வமாக கிஷோர், சிஜா ரோஸ் என்னும் சினேகாவாக ஒரு நடிகை,சிவாவின் இளம்பருவ பள்ளிப் பருவத்தின் கதை,கண்ணம்மா என்னும் பாடல் 2 இடங்களில் இமான் இசையில் நெஞ்சுருக வைக்கிறது.நன்றாக இருக்கிறது.

கடைசியில் ஒரு கிரிக்கெட் பேட்டுடன் நூற்றுக்கணக்கானவர்களை இந்த சிவா அடித்து வீழ்த்த வருவதுடன் படம் நிறைகிறது. அதற்கும் முன்பே....எவ்வளவோ சொல்ல முடியாத சண்டைக்காட்சிகள். இதில் இருந்து நடிகர்களும் தமிழ் சினிமாவும் என்று வெளிவருவார்களோ என்று தர்ம சங்கடத்தை ஏற்படுத்துமளவு.

இலட்சுமி மேனன் அதாங்க நம்ம கும்கி நாயகி உடல் எடையில் கவனிக்க வில்லை. நன்றாக புசு புசு வென ஊதி இருக்கிறார். அதில் வேறு இவருக்கு நவீன உடை எல்லாம் பொருத்தமே இல்லாமல் ஏற்கெனவே நமது சினிமா உலகு இவரை நாட்டுப்புற அழகியாகவே வெளிக்காட்டி விட்டதால் எடுபடவில்லை.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.In our tamil Cinema industry Diwali films releases are waiting for that moment on 28th.Oct.

Tuesday, October 4, 2016

ஊடகங்களின் கேடு கெட்ட ஊமைத்தனமும் ட்ராபிக் இராமசாமியின் துணிச்சலும்: கவிஞர் தணிகை

ஊடகங்களின் கேடு கெட்ட ஊமைத்தனமும் ட்ராபிக் இராமசாமியின் துணிச்சலும்: கவிஞர் தணிகை

Image result for media fails


இந்த பி.பி.சி, என்.டி.டி.வி, போன்ற சிறந்த ஊடகங்கள் கூட வாய் மூடி ஊமையாக தமிழக முதல்வரின் உடல் நிலையை தெளிவு படுத்தாமல் இருப்பது ஊடகங்களின் பெரும் வெட்கக் கேடு.இந்த அப்பல்லோ மருத்துவமனையை ஊடுருவி செய்தி தராத ஊடகங்களான சன் டிவி, புதிய தலைமுறை, இன்ன பிற தொலைக்காட்சி நிறுவனங்கள் எல்லாம் முதுகெலும்பற்றவை.

Image result for traffic ramaswamy


ஆட்சி என்றால் மக்களாட்சி என்றால், ஜனநாயக நாடு என்றால் ஊடகங்கள் சுதந்திரமாக செயல்படவேண்டும். செயல்பட விட வேண்டும்.இங்கு உடல் நிலை கெட்ட தமிழக முதல்வரின் ஒரு படமோ காட்சிப் பேழையோ 13 நாட்களாகியும் ஒன்றுமே வெளிவரவில்லை.

எம்.ஜி.ஆரை விட பெரும் புகழ் படைத்தவரல்ல இந்த அம்மா. ஆனால் எதற்காக இப்படி இவரது உடல் நலம் கெட்ட‌ செய்தியை வராமல் தடைப்படுத்த வேண்டும் என மக்கள் ஐயப்பட்டுக் கொண்டு வெளியில் நடமாடவே யோசித்து வருகிறார்கள்.

உயர் நீதிமன்றம் உள்ளாட்சி தேர்தலை டிசம்பருக்கு ஒத்தி வைத்திருப்பது ஒரு நல்ல செய்தி. தமிழக ஆளும் கட்சிக்கும், தமிழக ஆட்சிக்கும் ஒரு பின்னடைவு.

Image result for media fails


இந்நிலையில் உச்ச நீதிமன்ற சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு அருகாமைக்கு வந்து விட்டது ( அது வரும் 7 ஆம் தேதியாக இருக்கலாம் என்றும் பேச்சு இருக்கிறது .இந்தியாவில் தமிழகத்தில் எதுவும் நடக்கலாம், எதுவும் நடக்காமலும் இருக்கலாம், எதுவும் நடந்தால்தான் நிஜம்.) போலியாக செய்தி பரப்பியே உண்மை பிரச்சனையை சென்னை கடலூர் வெள்ளப் பிரச்சனைகளை மறக்கடித்தார்களே அப்படி  இப்படி என அந்த தீர்ப்புக்காகத்தான், அதற்காகத் தான் நாடகம் என அவர்கள் கட்சிக்காரர்களே பேசிக் கொள்கிறார்கள். இது மத்திய உள் துறை அமைச்சரின் இரகசிய பேச்சு வார்த்தையால் விளைந்தது என்றும் வதந்திகள் நிலவுகின்ற நிலையில் பெரும்பாலானோர் இவர் வென்டிலேட்டர் ‍ செயற்கை சுவாசம் பொருத்தப்பட்ட நிலையில் இருப்பதாக மருத்துவ மனை தெரிவித்த நிலையில், கோமா நிலைக்கு சென்று விட்டதாகவும், மூளைச்சாவு அடைந்துவிட்டதாகவும் செய்திகள் நிலவுகின்றன.
Image result for traffic ramaswamy


எப்படி இருந்தாலும் டாக்டர் பிரதாப் சி.ரெட்டியின் அப்பல்லோ சென்னை மருத்துவமனைக்கு ஒர் கண்டம் இருக்கிறது. இவர்களின் பாதுகாப்பை உடைத்து சென்று செய்தி கொடுக்காத, சசிகலாவின் காப்பு வளையத்தை உடைத்து உள் புகாத தொலைக்காட்சிகளும், செய்தி ஊடகங்களும் வேஸ்ட்.

மேலை நாடாக இருந்திருந்தால் இந்த வேலையை விடாமல் செய்திருப்பார்கள் தனிமனிதராக அல்லாமல் அமைப்பு ரீதியாகவும்.

இந்நிலையில் ட்ராபிக் இராமசாமி ஒருவர்தான் முதல்வர் நிலை என்ன? முதல்வருக்கு பணி செய்ய மாற்று ஏற்பாடு செய்து வேறு ஒருவரை நியமியுங்கள் என நீதிமன்றம் வரை சென்றுள்ளார். இவர்தான் ஒரு ஜனநாயக நாட்டின் உண்மையான துணிச்சலான மனிதராகத் தெரிகிறார். வேறு அனைவரும் என்னையும் சேர்த்துத்தான் செய்ய வேண்டியதை செய்யாதவர்கள் பட்டியலில்தாம் இருக்கிறோம்

Image result for traffic ramaswamyமுதல்வர் அம்மா, அறிஞர் அண்ணா, காமராசர், கக்கன் போல அரசு மருத்துவ மனையில் அல்லவா இருக்க வேண்டும் எதற்கு இந்த அப்பல்லோ அப்பாலோ என...எல்லாமே இந்த அம்மாவின் வாழ்வில்  மர்ம முடிச்சுகளே. ஸ்டேட் பேங்க் பணம் பிடிபட்டதும், இந்த அம்மா இருப்பிடத்துக்கு கன்டெய்னர் லாரிகள் இரவில் இருந்து பகலில் போன இடம் தெரியாமல் மறைந்து விட்டதும்...சசிகலாவின் வீடியோக் கடை விவகாரங்கள் முற்றி தமிழ்நாட்டிற்கே ஒரு முக்கிய கரும்புள்ளியாக மாறியதுமாக...

இப்படியாக நிலை இருக்கும்போது முதல்வருக்கு அடுத்த முதல்வர் யார் என மக்கள் பேசி விவாதித்து வருகிறார்கள். தற்போது ஷீலா பாலகிருஷ்ணன் வயது 62 ஐ.ஏ.எஸ் ஓய்வு பெற்றவர்தான் நாட்டை ஆண்டு வருகிறார் அங்கே மத்திய அரசே திடீர் பல்டி அடித்து கர்நாடகாவுக்கு சாதகமாக மேலாண்மை வாரியம் அமைக்கும் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் காவிரி வழக்கில் ஓடிக் கொண்டிருக்க‌


Image result for media fails


கவர்னருக்கு இல்லாத சக்தி இந்த தமிழ்நாட்டில் சசிகலா என்ற எந்தவகையிலும் அரசுக்கு அரசு பதவிக்கு சாராத ஒரு பெண்ணுக்கு இருக்கிறது என்பதுதான் பெரும் வேடிக்கையான வெட்கக் கேடு.

இந்நிலையில் உயர் நீதிமன்றமே வியழனுக்கும் முதல்வர் பற்றி அறிக்கை தரவேண்டும் என தமிழக அரசைக் கோரியிருக்கிறது. நிலை எப்படி எனப் பார்க்கலாம்...

Image result for traffic ramaswamy

வழக்கு தீர்ப்புக்காக ஒளிந்து கொண்டதா இந்த நண்டு அல்லது இது போய் பல நாள் ஆகிவிட்டதா என பொறுத்திருந்து பார்ப்போம்...தமிழச்சி சொல்லியபடி மத்திய ஆளும் கட்சியின் பிடிக்குள் முடங்கி விட்டதா இந்த வாழ்வு, அல்லது பதுங்கி பாயுமா என்பது எல்லாம் சில நாளில் வெளிச்சம். பூஜா ‍ஹாலிடேஸ் நல்ல முறையில் தமிழகத்தில் இருக்க வேண்டும் என பிரார்த்திக்கிறேன்.


Image result for traffic ramaswamy

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.