பாரதியார் மேல் ஏன் இந்த துவேஷம்? கவிஞர் தணிகை
39 ஆண்டுகளுள் முடிந்து போன ஒரூ காவியம், அரிய மானிடம், அற்புத மனிதர், இவரைப் படிக்காமலே இவரது எழுத்து குப்பை எனச் சொன்னதால் எனக்கு அரிய நட்பில் 15 ஆண்டுகாலம் தொடர்ந்த ஒரு நண்பரை இழக்க நேரிட்டது.துச்சமாக நம்மை எண்ணித் தூறு செய்த போதினும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே....தினைத்துணையாம் நன்றி செயினும் பனைத்துணையாம் கொள்வர் பயன் தெரிவார் என்ற நன்றியறிதலை உடைய யாம் இன்று வலைதளத்திற்கு இணையத்திற்கு வந்தது அந்த நண்பரால் என்றபோதும் கூட நச்சை வாயிலே கொணர்ந்து நண்பரூட்டும் போதினும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே...
பாரதி தாசனை எவருமே குறைவாக மதிப்பிடுவது கிடையாது. ஆனால் கடவுள் மறுப்பு சிந்தனையாளர்களில் சிலர் பாரதி தாசனை உயர்த்தி பாரதியை கேவலப்படுத்திப் பேசுவது பாரதியை தெரிந்த எவராலும் ஏற்றுக் கொள்ளவே முடியாதது.
பாரதி தாசனே தமது பெயரை தமது குருவின் பெயருடன் இணைத்து சொந்தப் பெயரில் அழைப்பதை விட இதையே தேர்ந்ததும் நேர்ந்ததும், பாரதியின் கவிதா மண்டலத்தில் இருந்து உதித்த ஒரு விண்மீனாக கருதி அதை வெளிப்படுத்தி இருக்கும்போது இவர்கள் சொல்வதை எல்லாம் நாம் பொருட்படுத்தியிருக்க வேண்டாம்தான். ஆனாலும் நம்மையும், நாம் மதிக்கும் ஒருவரையும் நாம் யாரையுமே குறைத்து மதிப்பிடாதபோதும் துச்சமாக தூக்கி எறியும்போது அது எப்பேர்ப்பட்ட உறவாக இருந்தபோதும் அதுவும் பொது இடத்தில் வைத்து அவமானப்படுத்தும்போது அதை எவ்வாறு ஏற்க இயலும்?
இன்று மகாக் கவி பாரதியின் பிறந்த நாள் அனேகமாக இது 134 வது பிறந்த தினமாக இருக்கும். அவரின் அச்சமில்லை அச்சமில்லைப் பாடலை பலவேறான இசையில் கேட்டேன் ... ஒன்றா இரண்டா அவ்வளவு எழுச்சிப்பாடல்கள்...இசை ஞானம் கொண்டு பொழிந்தவை, மேலும் சமுதாய ஒருமைப்பாடு, ரஷ்யா உதித்ததை பாராட்டும் உலகளாவிய பார்வை,விடுதலை வேட்கையை தட்டி எழுப்பும் விழிப்புணர்வு பாடல்கள், கவிதைகள், முதல் வசன கவிதை,சாதி மறுப்பு சிந்தனை மற்றும் செயல்பாடு, இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். அவரை தமிழறிந்த யாவருமே அறிவர்.
நல்ல எழுத்தாளர், கவிஞர், பாடலாசிரியர், பத்திரிகையாளர், சுதந்திரப் போராட்ட வீரர், தமக்கடுத்து அடுத்த தலைமுறையை உருவாக்க நினைத்த நல்ல ஆசான், எவரின் தூண்டுதல் இன்றியே தாமே உண்டான உணர்ச்சிப் பிழம்பு.
இராமகிருஷ்ணர், விவேகானந்தர், நிவேதிதா, பாரதியார், பாரதிதாசன், சுரதா,இப்படி 6 தலைமுறை குரு சிஷ்ய பரம்பரை உண்டு. இதில் ஒருவரை மட்டும் பிரித்து தனியே பார்ப்பது என்பது இயலாதது.
வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு நூற்றாண்டுகளில் பிறந்த கலிலியோவும் ஐசக் ந்யூட்டனையும் குரு சிஷ்யனாக விளங்கும்போது நமது நாட்டில் உதித்த மனிதர்களில் இவர்கள் எல்லாம் பேசப்படவும், எழுதப்படவும் கொண்டாடப் படவும் வேண்டியவர்கள்.
மற்றபடி இவர்களைப் பற்றிய புள்ளி விவரம் சொல்ல இந்தப் பதிவை யாம் இணைக்கவில்லை
விண்மீன்கள் எல்லாமே சூரியன் எனவே எதுதாம் கிழக்கு. நமக்கு வசதிப்பட மனிதர்க்கு வசப்பட நமது சூரிய மண்டலத்தின் சூரியனை பூமி பார்க்கும்போது அதை நாம் பார்க்கும் போது கிழக்கு எனச் சொல்கிறோம். ஆனால் சூரியன் என்றும் நடுவில்தான் இருக்கிறது.
இயற்கையை பாரதி இரசித்த மாதிரி நமக்கெல்லாம் இரசிக்கவே தோன்றாது.
சுவாசிக்க காற்று, தேவைக்கு நீர், இரவு பகல், கால அளவு, பருவ காலங்கள்., உணவுப் பயிராக்க கனிமங்கள், எரிபொருள் உள்ளடங்கிய, உற்பத்தி உண்டாக்க நிலம்,பிரமிக்க ஆகாயம் இப்படி எல்லாம் இயற்கை சொல்லி வைத்த மாதிரி நமக்கு கிடைத்திருக்க காந்தி சொன்னபடி மனித தேவைகளுக்கு போதுமான அளவு எல்லாம் இங்கு இருக்க பேராசைக்கும் அதன் அளவுக்கும் ஏற்ப ஏதும் கிடைக்காதுதான்...
வாழ்க வாழ்க பாரத சமுதாயம் ....
அச்சமில்லை அச்சமில்லை
அக்கினிக் குஞ்சொன்று..
தேடிச் சோறு நிதந்தின்று...
நெஞ்சு பொறுக்குதிலையே...
நெட்டை மரங்களென நின்றார் ....பாஞ்சாலி சபதம்
சிந்து நதியின் மிசை ,..நதி நீர் இணைப்பு
நிலவுக்கு பாலம் அமைப்போம்....
இப்படி அவனின் சிந்தனைகள் எங்கும் எப்போதும் பரவியபடியே இருக்க தனிமனிதர் வீறு கொண்டு எழவும், பெண்ணடிமைத்தனம் மாயவும், சமுதாய நோக்கம் மலரவும் பாடிப்பாடி ஆடி ஆடி ஓய்ந்த போன உன்னதம் அந்த பாரதியை நாம் வணங்குகிறோம். அவரை நமது குருமார்களின் ஒன்றாகவே எண்ணுகிறோம்.
சோறில்லாமல் அவன் வறுமையில் பாடி, வாடி வதங்கிப் போன பிறகும் கூட எப்படி இவர்களால் இப்படி தூற்ற முடிகிறது என்பதுதாம் நமக்கு விளங்காத புதிராக இருக்கிறது.

No comments:
Post a Comment