இந்தியாவில் என்ன நடக்கிறது? மாய பிம்பங்கள் எப்போதும் கவர்ச்சியானவை கண்ணாடியில் தெரியும் அழகு போல... கவிஞர் தணிகை
இரண்டு இராணுவ பிராந்திய முதிய தளபதிகளை ஒதுக்கி ராவத் என்பவரை இராணுவ தளபதி ஆக்கி இருப்பதும், ரிசர்வ் வங்கியின் மேலாளர்களே பணப் பரிவர்த்தனையில் குற்றம் சாட்டப்பட்டு பிடிபட்டிருப்பதும், முன்னால் விமானப்படைத் தளபதி ஹெலிகாப்டர் வாங்கிய ஊழலில் கைது செய்யப்பட்டிருப்பதும்,500 ரூ 1000 ரூ பழைய நோட்டுகள் செல்லாது என ஆழம் தெரியாமல் காலை விட்டு மோடி காலை வெளி எடுக்கத் தெரியாமல் விழிப்பதும்...இந்தியாதான் உலகிலேயே அதிக சாலை விபத்துகளை சந்தித்து ஆண்டுக்கு சுமார் 85,500 உயிரிழப்பை 2.50 இலட்ச காயமுடையவர்களை உருவாக்கி உலக அளவில் முதல் நாடாக விளங்கி வருவதுமாக இப்படி பல செய்திகள் யாவுமே இந்தியாவை நற்பேருக்கு இட்டுச் செல்வதாக இல்லை. இந்தியாவின் உச்ச இடங்களில் உள்ளவை எல்லாம் கீழிருந்து மேல் வரை என்ன நிலை என உள்ளங்கை நெல்லிகனி போல படம் பிடித்துக் காட்டுகிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை அம்மா கலாச்சாரத்துள்தான் என சசிகலா நடராசனிடம் அனைத்து ஆட்சியாளர்களும் மண்டியிட்டிருப்பதும், குழந்தை தவழ்ந்து பேருந்திலிருந்து கீழே விழுவது கூடத் தெரியாமல் பெற்றோர் அசந்து தூங்கி வழிந்ததும்...இப்படியாக செய்திகளைப் படித்த பிறகு வெறெதிலும் எண்ணம் இலயிக்கவில்லை..இந்தியா எங்கே போய்க் கொண்டிருக்கிறது? இந்தியாவில் என்ன நடந்து கொண்டிருக்கிறது?
நெட் டவுன் எனவே பணப்பரிவர்த்தனை செய்ய முடியாது என நடைமுறை சொல்ல ஆட்சியாளர்களோ டிஜிட்டல் ட்ரான்சாக்சன் எனக் கூவி வருவதும் மத்திய நிதி மந்திரி இனி நோட்டுகளை பழைய நோட்டுகளுக்கு இணையாக அடிக்க மாட்டோம், இப்படி ஸ்வைப், கார்ட், ட்ரான்சர்களை செய்து கொள்ள வேண்டியதுதான் எனச் சொல்ல....ரெயில்வே நிலையமும், மின் அலுவலகமும், அனைத்து அலுவலகங்களும் இன்னும் அதெல்லாம் இல்லை சார் ரொக்கம் கொடுங்க சார் என்று கேட்க..என் 10 ரூபாயை கொடுக்க நான் இன்டர் நேஷனல் பே பால்,பேடைம் போன்ற வற்றில் எல்லாம் கணக்கு ஆரம்பிக்க வேண்டும் என்பதும்...யோவ் கடன் கட்ட வழி சொல்லுங்கய்யா என்றால், இருக்கிற பணத்தை இறுக்குகிற வழி மட்டும் சொல்லும் அரசு...எல்லாம் மெஷின் எல்லாம் நெட் வொர்க், சர்வர்,யோவ் மனிதருக்கு மனிதர் பழகும் முறை யாவுமே மண்ணோடு குழி தோண்டி புதைக்கப் பட்டு விட்டது. எமது இளந்தலைமுறை நரம்புகளும் கண்களும் சேதமுற எப்போதும் இரத்தமும் சதையும், அனுபவமுமாய் மனிதர் கண் முன் உலவினாலும் அவரை கண்ணெடுத்து பார்க்க மறுத்து எப்போதும் அந்த மின்பொருள்களிலிருந்து அந்த மாயத் தோற்றம், பொய் பிம்பங்களிலிருந்து அதன் அரக்கத் தொடர்பிலிருந்து வெளிவரவே மாட்டேன் என்கிறது தானும் கெட்டு தம் தலைமுறையும் கெட்டு நாடும் கெட்டு வீடும் கெட்டு...
வியாபார வர்க்கமோ காசை ரொக்கமாகத் தாருங்கள் அதை கணக்கில் கட்ட வேண்டாம் கணக்கெல்லாம் காட்ட முடியாது என தங்கள் தொடர்பில் உள்ள வாடிக்கையாளர்களை முடுக்கி விட மேல் சொல்வது ஒன்றும், கீழ் நடப்பது வேறொன்றுமாய் நடந்து கொன்டிருக்கிறது.
பெரிய மேன்சன் உடைய வாடகை வசூல் செய்வார் கூட ரொக்கமாகக் கேட்கிறார்கள், மளிகை வியாபாரத்தினர் எல்லாம் கூட ரொக்கமாகவே விரும்புகிறார்கள் என்கின்றன உண்மைச் செய்திகள். கணக்கில் கட்ட வேண்டாம் என்கின்றார்கள்.
கணக்கில் கட்டச் சென்றால், சர்வர் பால்ட், கணக்கு ஏறவில்லை, நெட் ஒர்க் ஆக்வில்லை சர்வீஸ் ரொம்ப வீக் இப்படியாக எந்த வகையிலும் வங்கிப் பரிவர்த்தனை செய்யும் உபகரணங்கள் எங்கும் முறையாக பணி செய்யாத போது இந்த டிஜிட்டல் ட்ரான்சக்சன் என்ன ஆகப் போகிறதோ?
ஒரு ஸ்வைப் வழியாக 10,000 கொடுத்த ஒரு நண்பர் அந்த கம்பெனிக்கு 10,000 ஏறவேயில்லை அவர் தினமும் கேட்டு வருகிறார் என்றார். இவர் கணக்கில் குறைந்து விட்டது ஆனால் கடைக்காரர் கணக்கில் ஏறவில்லை.அதுதான் அப்படி என்றால் ஒரு வங்கியில் நெட் ஒர்க் வெரி ஸ்லோ, ஒன்னும் கவலைப்படாதீங்க சார், பணம் அந்தக் கணக்கில் ஏறி விடும் என என் கண் முன்னே வங்கிப் பணியாளர் ஒருவர் வாடிக்கையாளருக்கு ஆறுதல் கூறிக் கொண்டிருந்தார். இதெல்லாம் இப்படி இருக்க வாங்குவாருக்கும் விற்பாருக்கும் இடையே இந்த பணப் பரிவர்த்தனை செய்ய முகவர்கள், இடைத்தரகர்கள் என இன்டர் நேஷனல் கம்பெனிகள், அவற்றிற்கு சேவை வரி பிடித்தங்கள் வேறு நம் கணக்கில் இருந்து தர வேண்டுமாம். அது நூற்றுக்கு சமயத்தில் 2.75% கூட இருக்குமாம்.என் காசை அவருக்கு கொடுப்பதற்குள் ஒரு இடைத்தரகு கமிஷன்.வாங்குவாருக்கு விற்பாருக்கும் இடையே எவரும் தேவையில்லை என்றார்கள் உழவர் சந்தையில்...ஆனால் இனி இந்திய சந்தையில் இவை எல்லாம் இல்லாமல் இல்லை. நாம் சம்பாதிக்கும் ஊதியம் இனி குறிப்பிட்ட அளவு இந்த இடைத்தரகு கமிஷனுக்காக போகும். இதுதான் உண்மையான மோடியின் திட்டத்துக்கு கிடைத்த பலன்.
பே பால் கம்பெனி தமது 45 கஸ்டமர்கள் சுமார் 6.50 இலட்சம் ரூபாயை ஏமாற்றி விட்டனர் என குய்யோ முறையோ என வழக்கு தொடர வழி இல்லை என வேறு வழிகளில் எல்லாம் கேட்கிறதாம். ஆன்லைன் வர்த்தகத்தில் பெற்ற பொருள்கள் சரி இல்லை என திருப்பி அனுப்பி அதன் பிறகு மறுபடியும் உரிய பொருள்களை திருப்பிக் கொடுத்ததன் கணக்கு வழக்காம்...என்ன மண்டையை சுற்றுகிறதா...நாம் தேங்காய் தக்காளி வாங்குவதற்கு தேங்காய் சரியில்லை, தக்காளி அழுகி விட்டது என நெட் ஒர்க்கில் சர்வர் பால்ட் இல்லாதபோது மின்சாரம் தடை இல்லாத போது , ஆங்கிலம் நன்றாக அறிந்த போது, தொழில் நுட்பம் எல்லாம் 130 கோடி மக்களுக்கும் சென்றடைந்தது எனச் சொல்லி கேட்டு மாற்றிக் கொள்ளலாம்.
வாழ்க மோடி, ஏழையை மண் மூடி அது வெளித் தெரியதவரை இருள் மூடி அதன் பிறகு இந்தியா டிஜிட்டலில் ஒளிரும்...
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.
பி.கு: கொசு கடிக்குதய்யா, முதலில் அதை ஒழிக்க என்ன திட்டம்?
கழிப்பறையே இல்லாமல், ஒரிஸ்ஸாவில் இன்னும் ஆடையே அணியாத
பழங்குடிகள் வாழ்கின்றனரே அவர்க்கு மேல் வர என்னத் திட்டம்...அதெல்லாம் வேண்டாம் டிஜிட்டல் இண்டியா ஒளிரட்டும் மலரட்டும்,வாழட்டும் அம்பானிகள்...

வேதனைதான் நண்பரே
ReplyDeleteகாலம் தக்க பதில் கூறும்