Wednesday, July 31, 2019

அத்தி வரதரும் ஆகாத பொழுதுகளுகம்: கவிஞர் தணிகை

அத்தி வரதரும் ஆகாத பொழுதுகளுகம்: கவிஞர் தணிகை

Image result for athivarathar


சகோதரி கேட்டாள் அத்தி வரதரைப் பார்க்க போகலாமா அப்படியே டென்மார்க் போகும் மருமகனது வீட்டுக்கு துணையாகப் போய் ஒரு வாரம் தங்கி வர வேண்டிய வேலையும் இருக்கிறது என்றார்

புலனத்தில் அதாங்க வாட்ஸ் ஆப்புக்கு சரியான மொழிபெயர்ப்பு என மலேசிய தமிழ் சங்கத்தில் தற்போது நடைபெற்ற உலக தமிழாரய்ச்சிக் கழகத்தில் ஒரு பட்டியல் தந்தார்கள் அதிலுள்ள மொழிபெயர்ப்பின் படி வாட்ஸ் ஆப்பில் புலனம்.

அதில் நண்பர்கள் இரு பதிவிட்டிருந்தார்கள் என அதை தங்கைக்கு அனுப்பி வைத்து அது காஞ்சி இப்போது போகக் கூடாத வரிசையில் உள்ள ஊராகிவிட்டதே எனச் சொன்னேன்

அதைப்பற்றி சுமார் ஒரு மணி நேரம் தொலைபேசியில் பேசினேன் முடிவாக
உள்ளம் பெரும் கோவில்
ஊனுடம்பு ஆலயம்
வள்ளல் பிரானார்க்கு வாயதுவே கோபுர வாசல்
தெள்ளத் தெளிந்தார்க்கு சீவனே சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே

என்று முடித்தேன்....அத்தி மரத்தில் செய்த சிலையை வைத்தே பெரும் வியாபாரமாக்கிவிட பெரும் மக்கள் கூட்டம்

எங்கு பார்த்தாலும் பெரும் மக்கள் அலை பக்தி என்ற பேரில்
என்ன செய்தாலும் எப்படி மாறினாலும் மாறாத ஒன்றாகிவிட்டது இந்தி யா வில்.

செத்தாலும் பிழைத்தாலும் சாமி சாமிதான் கடவுள் கடவுள்தாம் மனித குலத்திற்கு மட்டும்

மற்ற உயிர்களுக்கு ஏதுமில்லை. ஏதும் தெரியாது.

மோடி சாமி இன்று வந்து படுத்திருக்கும் அத்தி வரதரைப் பார்த்துவிட்டு நாளை எடுத்து நிறுத்தியதும் பார்த்துவிட்டுப் போகிறார்

மோடி சாமி  நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் குடிக்க தண்ணீர்  வேணும் சாமி

அதைச் சொன்னால் பாராளுமன்றத்தில் நதி நீரை இணைக்க வேண்டாம் என ஒரு அணியும் தோன்றி இருப்பதாக செய்தி.

முத்தலாக்க்கும் மசோதாவுக்கும் மட்டும் 84 எதிர்ப்பு 94 அல்லது அது போல தொண்ணூருக்கும் மேலான ஒரு எண் ஆதரவாகவும் நிற்க ராஜ்யசபாவிலும் சத்தமில்லாமில்லாமல் நிறைவேறியதாம்.

காங்கிரஸ் மகளிர் ஒருவர் அய்யோ கணவரை அதுவும் முத்தலாக் சொன்ன கணவரை சிறையில் 5 ஆண்டு அல்லது 3 ஆண்டு போட்டு விட்டால் மனைவியும் குடும்பமும் எப்படி பிழைப்பது என அங்கலாய்க்கிறாராம்...

உழைப்பவர் உழைத்தபடியே சாக வேண்டுமென்பதும்

மதுக்குடியர்கள் மதுவைக் குடித்தே சாக வேண்டும் என்பதும்

யாரும் எதையும் சிந்திக்கவும் கூடாது என்பதும் நாட்டின் நடப்புகள்

எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்
மெய்ப்பொருள் காணபதறிவு

ஜெயாவின் சொந்தக்காரப் பெண் கட்சியக் கலைத்து விட்டாரேமே அனைவரையும் அ.இ.அ.தி.மு.கவில் சேரச் சொல்கிறாரே...அவரது கட்சியில் இருக்கிறார்களா என்ன?


Image result for nature

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Sunday, July 28, 2019

இரு கை கூப்பி வணங்கியவர்க்கு இறுதி வணக்கம்.கவிஞர் தணிகை

இரு கை கூப்பி வணங்கியவர்க்கு இறுதி வணக்கம்.

வியப்பான மாறுதல்கள்: கவிஞர் தணிகை
Image result for surprise and suspense
வழக்கம் போல்தான் அன்றும் நடைப்பயிற்சிக்குப் புறப்பட்டேன். நடைப்பயிற்சி முடிந்ததும் வழக்கமாக அமரும் முனியப்பன் கோவிலில் சற்று நேரம் தியானம் அமரத் திட்டம் அடுத்த நாள் விடுமுறை எடுத்துக் கொண்டதால். .ஆனால் ஒரு ரூபாய் எடுத்துக் கொள்ளுங்கள் போதும் என்ற வார்த்தை. என்ன இது புரியவில்லையே என்று புறப்பட்டேன்.

கருப்பு ரெட்டியூர் போகும் வளைவான பாதை எங்கும் சாலையில் கசங்கிய மலர்கள் இரு புறமும் . என்ன யார் என விசாரித்தேன். அதாங்க ஒங்களை கை எடுத்துக் கும்பிடுவாரே அந்தப் பெரியவர்தான்  என்றார் ஒரு நண்பர்.
Image result for surprise and suspense
ஆமாம் அவருக்கும் எனக்கும் என்ன தொடர்பு, நான் அந்த வழியாக முடிந்தவரை தினமும் அல்லது முடியும்போதெல்லாம் நடைப்பயிற்சிக்கு செல்வது வழக்கம். அந்டக் கூன் விழுந்த முதியவர், காந்திக் கண்ணாடி அணிந்தவர் எழுந்து நடக்கக் கூட முடியாதவர் எனப் பார்த்து தினமும் இரு கை கூப்பி வணங்குவார். நானும் வணங்குவேன். அவருக்கும் எனக்கும் அதுதான் உறவு. சில நாட்களில் ஏன் நேரமாக வந்திருக்கலாமே என்பார் தாமதமாகும்போது.

அவர் மகனும் வணங்குவார், அவர்கள் வீட்டு மருமகள் ஆரியம் அல்லது கேழ்வரகு என்பார்களே அதில் களி செய்து விற்பார்கள் அடுத்து நிறுத்தி விட்டு, காய் கறி வியாபாரம் செய்து பார்த்தார்கள் நாலுசக்கர வண்டி வைத்து சாலையோரம் அதையும் செய்ய முடியாமல் விட்டு விட்டார்கள்.

சிரித்த வெற்றிலை பாக்கு போட்ட முகம், பேத்திகளை டாட்டா சொல்ல வைப்பார்கள்.

எனக்கு அங்கு சென்று துக்கம் விசாரிக்கப் போராட்டம், கோவிலுக்கும் செல்ல முடியாதே தியானமும் செய்ய முடியாதே... போகலாமா வேண்டாமா என்று இலாப நட்டக் கணக்கெல்லாம் பார்த்துவிட்டு அவருக்கும் நமக்க்கும் என்ன உறவு அவர் ஏன் என்னை அந்தளவு மதிக்க வேண்டும், போனால் என்ன, போகாமலிருந்தால் என்ன என்றெல்லாம் யோசித்தபடி போகும்போது வேறு புறம் வளைந்து சென்று நடைப்பயிற்சியை முடித்துவிட்டு வரும்போது

அங்கு சென்று அவரது மகனைத் தேடி கைகளைப் பிடித்து வணங்கி அமர்ந்து துக்கம்விசாரித்தேன். 90 வயதுக்கும் மேல் ஆன முதிய தந்தை எப்படி இறந்தார் எனக் கேட்டேன் கட்டிலில் இருந்து கீழே விழுந்து தொடயில் இடுப்பு எலும்பு 3 பகுதிகளாக உடைந்துநொறுங்கி விட்டதாகவும், அருகே உள்ள ஆஸ்தான மருத்துவமனை மருத்துவர்  நாலுடன் ஐந்து இவரையும் அறுவை சிகிச்சை செய்து கொள்ள சேலம் ஒரு சூப்பர் ஹாஸ்பிடல் கொண்டு சேர்த்ததாகவும்  முதல்வர் காப்புறுதித் திட்டம் வழியே அறுவை சிகிச்சை செலவு இன்றி முடிந்ததாகவும் அதிலிருந்து ஒரு நாள் நன்றாக இருந்தவர் வார்டு மாற்றப்பட்டு ஐ.சி.கேர் கொண்டு சென்று வைத்திருந்ததாகவும் அதன் பின் ஒரு விடியல் காலத்தில் உயிர் பிரிந்து செய்ய வேண்டிய முறைகளை எல்லாம் முடித்து வீடு திரும்பியதாகவும் செய்திகள்....நான் அந்தக் காலக்கட்டத்தில் அந்த அறுவை சிகிச்சை தேவையா செய்ய வில்லை எனில் இன்னும் இருந்திருப்பார் ஆனால் அவருக்கு பணி விடை செய்து கொண்டிருக்க வேண்டும் நாளெல்லாம். அப்படி இருந்திருந்தால் இன்னும் சற்று நாட்களை நீட்டி வைத்திருக்கலாம் என்று சொல்லிவிட்டு

அவர் மகனிடம்  குடும்பம் பற்றி விசாரித்தேன். எல்லாம் கூறினார். இரு மகன்கள், ஒரு மகள் என்றும் மூத்த மகன் தூய தமிழ் பேர், இரண்டாம் மகன் வடநாட்டுப் பேர்.
Image result for surprise and suspense
அங்கிருந்துதான் நமது கதை ஆரம்பம். அந்த கிராமத்தில் : டிப்ளமோ படித்து 4 மாதம் சேலம் பகுதியில் இரவு நேர ப்ரவுசிங் சென்டரில் பணி புரிந்து, அதன் பின் ஊர் அருகேயே அதே பணி செய்து ஊதியம் ஏதும் உயர்வில்லாமல் இருந்த காரணத்தால் அவரே வீட்டில் இரண்டு கணினி வாங்கி யு.பி.எஸ் வாங்கி வைத்து முக நூல் வழியாக ஆஸ்திரேலியா, ஐரோப்பிய நாட்டு வியாபார, மற்றும் சொந்தக்காரர்களின் வீடு டிசைன் வாங்கி அதற்கு இன்டீரியர் பெயிண்டிங் டிசைன் செய்து அனுப்பி வைத்து அதிலிருந்து சுமர் இப்போது 50 ஆயிரம் வரை ஊதியம் பெறுவதாகவும் அதற்கு பே பால் வழி சரியாக  துல்லியமாக ஏமாற்றாமல் பணத்தை அவர்களின் பணி கொடுப்பார் அனுப்பி வைப்பதாகவும் சரியான அவர்கள் சொன்ன நேரத்துக்கு பணியை முடித்து அனுப்பி வைப்பதாகவும் அத்துடன் பணிக்கும் சென்று வருவதாகவும் அந்த இளைஞர் கூறினார்.

அவர் தந்தை அவரை தூங்குவதே இல்லை. இதே பணிதான்... என்றார். அந்த 24 வயதில் அந்த  இளைஞர்க்கு எப்படி வந்தது அந்த பொறுப்பு என்றால், சரியாக எனக்கு ஆங்கில மொழியறிவு கூட இல்லைதான். நானும் என்னுடன் சேர்ந்து இன்னொரு நண்பரும் பணி செய்கிறோம். பெரும்பாலும் இரவில் தாம் பணி.  இதுவே பெரிய அளவில் இலட்சக்கணக்காக ஊதியம் பெறும்போது கம்பெனி ஆக்கி விடலாம் , கணக்கு வழக்குகளை கொடுக்கலாம். எல்லாம் பே பாலில் இப்போது கூட சரியாகவே கணக்கு எல்லாம் இருக்கிறது என்றார்.

நான் பெருமைப்பட்டு பாராட்டி விட்டு இந்த இளைஞர் செய்ய முடிவதை என்னால் செய்ய முடியாததற்காக இயலாமையில் இருப்பதற்காக என்னை  நானே பாராட்டிக் கொள்ள முடியவில்லை.

இப்படி ஒரு நல்ல பணி எனக்குக் கிடைத்தால் கிடைத்திருந்தால் நானும் கூட செய்ய ஆசைப்பட்டேனே அப்போதெல்லாம் அதற்கு அவர்கள் பணம் கட்டவல்லவா சொன்னார்கள் அதனால் தானே நான் கட்ட மறுத்து பணியின் முதல் ஊதியத்தில் எடுத்த்க் கொள்ளுஙக்ள் என்றெல்லாம் கேட்டேனே... என அசைபோட்டபடி வந்து தலைக்கு  குளித்தேன். லிப்ட் வீடு வரை தருவதாகச் சொன்ன நண்பரிடம் பெரியவரின் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டு வந்திருப்பதைச் சொன்னேன் அவருடன் செல்ல மறுத்தேன்.

சில நாட்களுக்கும் முன் நாங்கள் இறுதி வணக்கத்தைப் பரிமாறிக் கொண்டோம் போலும்.
Image result for surprise and suspense
ஆனால் அதற்கு முன் நாட்களிலேயே அவரை மரணம் பிடித்துச் செல்லும் முடித்து விடும் என உணர ஆரம்பித்திருந்தேன். அவருக்கு கண் பார்வை மிகவும் கூர்மையுடன் இருந்தது எனை இருளில் பார்த்தாலும் இரு கை கூப்பி வணங்குமளவு...

இரு கை கூப்பி வணங்கியவர்க்கு இறுதி வணக்கம்.


மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

Saturday, July 27, 2019

மேற்கத்திய நாடுகளின் குப்பைத்தொட்டியாகும் ஆசியா

தெரிந்தோ தெரியாமலோ உலகில் நடக்கும் பல சம்பவங்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் சீனா சம்பந்தப்பட்டு விடுகிறது. அப்படி ஒரு சம்பவம் தற்போது நிகழ்ந்துள்ளது.






மேலை நாடுகளில் கழிவு மேலாண்மை மிகவும் சவாலான விஷயம். இங்கு இருப்பது போன்று கழிவுகளை தரம்பிரிக்கவோ, மறுசுழற்சிக்கு அனுப்பவுதற்கோ அவர்களுக்கு நேரமும் இல்லை, மனதும் இல்லை. எனவே அவற்றை கப்பலில் வைத்து ஆசிய நாடுகளுக்கு அனுப்பி விடுகின்றனர்.இதுவரை அந்த கழிவுகளை சீனா இறக்குமதி செய்து வந்தது. அதை மறுசுழற்சிசெய்து பொருட்கள் தயாரித்து ஏற்றுமதி செய்தது. ஆனால் வரும் கழிவுகளுடன், சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் நச்சுக் கழிவுகளும் அதிகம் வரத்துவங்கின. இவற்றை மறுசுழற்சி செய்ய முடியாதது மட்டுமின்றி அழிப்பதிலும் பிரச்னைகள் எழுந்தன. இதையடுத்து 2018 ம் ஆண்டு முதல் பிற நாட்டு கழிவுகளை இறக்குமதி செய்ய சீனா தடை விதித்தது. இந்த தொழிலில் கோடிகளை சம்பாதித்துக்கொண்டிருந்த மேலை நாட்டு ஏற்றுமதி நிறுவனங்கள் விழி பிதுங்கிப்போயின. இதையடுத்து வளரும் நாடுகளை வளைத்துப்போட்டு வருகின்றன. துறைமுக அதிகாரிகள், சுங்கத்துறையினர் உள்ளிட்டோரை கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்து வேறு பெயரில் அனுப்பி வருகின்றனர். தற்போது அதற்கும் சிக்கல் ஏற்பட்டுவிட்டது.





காகிதக்கழிவு பெயரில் ஏற்றுமதி


இந்தோனேஷியாவின் சுரபயா துறைமுகத்துக்கு அண்மையில் ஆஸ்திரேலியாவிலிருந்து எட்டு கண்டெய்னர்கள் வந்தன. அவற்றில் 218 டன் கழிவு காகிதங்களை அனுப்பியுள்ளதாக 'ஓஷியானிக் மல்ட்டி டிரேடிங்' என்கிற ஆஸ்திரேலிய நிறுவனம் குறிப்பிட்டிருந்தது. ஆனால் சில சுங்க அதிகாரிகளுக்கு அதன் மீது சந்தேகம் ஏற்பட்டது. கண்டெய்னர்களை திறந்து பார்த்தனர். அவற்றில் பாலிதீன் பைகள், எலக்ட்ரானிக் -கழிவு பொருட்கள், சானிட்டரி நாப்கின்கள், டயபர்கள் என மாசுபடுத்தும் கழிவுகளே இருந்தன. இதையடுத்து அந்த எட்டு கண்டெய்னர்களையும் மீண்டும் ஆஸ்திரேலியாவுக்கே திருப்பி அனுப்பினர். கம்போடியாவின் தென்மேற்குத் துறைமுகமான சிஹானோக்வில்லேவில் கடந்த வாரம் 83 கன்டெய்னர்கள் வந்திறங்கின. மறுசுழற்சி செய்யப்பட்ட பொருள்கள் என்ற பெயரில் வந்த அந்த கன்டெய்னர்களில் பாலிதீன் கழிவுகள் 1,600 டன் இருந்தன.





திருப்பி அனுப்பிய கம்போடியா

இவற்றில் 70 கன்டெய்னர்கள் அமெரிக்காவிலிருந்தும், 13 கன்டெய்னர்கள் கனடாவிலிருந்தும் அனுப்பப்பட்டிருந்தன. அவற்றை அந்தந்த நாடுகளுக்கே திருப்பி அனுப்பியுள்ளனர். கம்போடியா, இந்தோனேசியாவில் மட்டுமல்ல, மலேசியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளிலும் காகிதம் என்ற பெயரில் அனுப்பப்பட்ட கழிவுகள் பிடிபட்டுள்ளன. ஏற்கனவே பிரான்சிலிருந்து அனுப்பப்பட்ட 49 பெட்டகங்களை இந்தோனேசியா சில வாரங்களுக்கு முன்பு திருப்பி அனுப்பியது. மே மாதம் 450 டன் பிளாஸ்டிக் கழிவுகளை மலேசியாவும், கடந்த மாதம் கனடாவிலிருந்து வந்த குப்பைக் கழிவுகளை பிலிப்பைன்சும் திருப்பி அனுப்பியுள்ளன.முன்பு கழிவுகளின் கிடங்காக ஆப்பிரிக்க நாடுகள் இருந்தன. தற்போது ஆசிய நாடுகள் மீது மேலை நாடுகளின் கவனம் திரும்பியுள்ளது. குறிப்பாக இந்தியா, இந்தோனேஷியா, மலேசியா, வியட்நாம், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகள் தான் கழிவுகளின் குப்பைத் தொட்டிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.





இங்கு நடந்தது என்ன

இதுவரை இந்தியாவில் துாத்துக்குடி துறைமுகத்துக்கு 2005-ஆம் ஆண்டு வந்து இறங்கிய 25,000 டன் பழைய கழிவுகள் பிடிபட்டது தான் அதிக அளவாக கருதப்படுகிறது. அதன் பின் பெரிய அளவில் எதுவும் பிடிபடவில்லை. ஆனால் குப்பைகள் வந்து இறங்குவது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஏற்கனவே இங்குள்ள நீர்நிலைகள், கால்வாய்கள் உள்ளிட்ட அனைத்தும் குப்பைகளால் நிரம்பி நிலத்தடி நீரை அதலபாதாளத்திற்கு கொண்டு சென்றுவிட்டன. இந்நிலையில் கழிவுகளை இறக்குமதியும் செய்து மேலும் சூழலை கெடுத்துக்கொண்டிருக்கிறோம்.கண்காணிக்க வேண்டிய அதிகாரிகள் கவனிக்கப்படுவதும், அதில் கிடைக்கும் வருமானத்தால் அரசும் கண்டுகொள்ளாமல் இருப்பதுமே இதற்கு முக்கிய காரணம். இதே நிலை நீடித்தால் மேலை நாடுகளில் குப்பைத்தொட்டியாக ஆசியா மாறுவதை தடுக்கவே முடியாது.





கட்டுப்படுத்த சட்டம் இல்லை


அண்மையில் நார்வேயில் கழிவு மேலாண்மை குறித்து கூட்டம் நடந்தது. 185 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அதில் கழிவுகளைக் கையாள்வதில் பல கோடி ரூபாய் புரள்வதும், அந்த நிறுவனங்கள் எந்தவித சட்டங்களுக்கும் உட்படவில்லை என்ற அதிர்ச்சியான செய்தியும் வெளியிடப்பட்டது. கழிவு மேலாண்மைக்கென எந்த சர்வதேச சட்டமும் இல்லை. எனவே அதை மேலை நாடுகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கின்றன என கண்டனம் தெரிவிக்கப்பட்டது.ஆனால் இதற்கான சட்டம் உருவாக்குதல் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. எனவே மேலைநாடுகளின் குப்பை தொட்டியாக ஏழை நாடுகள் மாறுவது தொடர்கிறது.

நன்றி: தினமலர்

Friday, July 26, 2019

பாம்புகளின் சிநேகம்: கவிஞர் தணிகை

பாம்புகளின் சிநேகம்: கவிஞர் தணிகை
Image result for varieties of snakes


சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பாம்புகள் அருகே அவ்வப்போது எனது அருகாமை நிகழ்ந்ததுண்டு. ஆனால் தேவையில்லாமல் அதை அடித்துக் கொன்றதே இல்லை. ஏன் இப்படி சொல்ல வேண்டியது இருக்கிறது எனில் ஒரு முறை ஒரு பெரிய சாரைப் பாம்பு எங்கள் வீட்டில் அப்போது நிறைய இருந்த எலிகளைப் பிடிக்க சுவரின் மேல் ஏறி வீட்டுக் கோம்பை வரை வந்து படுத்திருந்தது.

வீட்டில் துணைவியார் பார்த்து விட்டு பயந்து விட்டார்கள். அதை துரத்தி விட்டு அது வந்து புகுந்த இடத்தில் எல்லாம் கற்களை வைத்து அடைத்துப் பார்த்துவிட்டோம். அங்கே வரவழி விடவில்லை. . எங்களது வீடு ஓட்டு வீடுதான். வில்லை வீடு என்றும் சொல்வார்கள்.

அந்த நிகழ்வுக்கும் பிறகு கொஞ்ச நாள் கழித்து எங்களது வீட்டின் பெரும் தைரியசாலியான நபர்...பயந்தாங் கோழி என்பதையே பயந்தாங்க் கொள்ளி என்றும் தமிழில் ஆக்கி விட்டார்கள்...துணைவியார்தான் இரண்டு பெரிய பாம்புகள் வந்து விட்டன என்று பயத்தில் ஆடு ஆடு என்று என்னிடம் ஆடினார்கள். பாம்பு தான் படம் எடுத்து ஆடும் என்பார்கள். ஆனால் அவர்கள் ஆடிய ஆட்டமே எனக்குப் பெரியதாக இருக்கப் போய், நான் பார்க்கும்போது எனது கண்களுக்கு அகப்படவில்லை.

இனி அது அல்லது அவை இங்கே வந்தால் அவை உயிரோடு போகாது என தைரியம் அளித்து வேறு இடம் எல்லாம்  குடி போகவேண்டிய தேவையில்லை என ஆறுதல் படுத்தி வைத்திருந்தேன்

பொதுவாகவே எனக்கு பாம்பைக் கண்டால் எல்லாம் பயம் இல்லாமல் இருக்கக் காரணம். சிறு வயது முதல் பல பாம்புகளை பல்வேறுபட்ட சூழல்களில் கண்டிருந்ததுதான்.

எனது அக்காவும் தந்தையும் அடிக்கடி கோதுமை நாகம் பாம்பை அடித்து அதற்கு மஞ்சள் துணியும் நாலணாவும் முடிந்து நெருப்பு வைப்பார்கள்.

எங்கள் வீட்டுப் புழக்கடையில் நிறைய பூஞ்செடிகள், நிறைய மரவகைகள், புல் பூண்டு புதர்கள் உண்டு. எனவே பாம்புகளுக்கு பஞ்சமில்லை.

புளிய மரங்களில் பச்சைப் பாம்புகள் தொங்கியபடி சிட்டுக் குருவிகளை அப்படியே முழுங்க முடியாமல் முழுங்கியபடி இருக்கும் காட்சிகள் பல முறை எங்களுக்கு கிடைத்தபடி இருக்கும் அதில் உணவுக்காக குருவியைப் பிடித்த பாம்பு பாவமா உயிருக்காக போராடும் அந்தக் குருவி பாவமா ....அது மரணப் போராட்டத்தில் கீச் கீச் என்று கத்தியபடியே இருக்கும் வாயுள் போய்க் கொண்டே... சில நேரம் விதிவிலக்காக காப்பாற்றி விடுவோம் குருவியை பாம்புக்கு கிடைத்த இரையை ஏமாற்றிப் பிடுங்கி விடுவோம் அது/குருவி பறந்துவிடும் சில நேரம் பறக்கவும் முடியாது நீர் குடிக்க கொடுத்து ஆசுவாசப்படுத்திவிடுவோம். சில நேரம் இரையை வைத்து முற‌த்தைக் கட்டி கயிற்றின் மூலம் குருவி வந்து இரை பொறுக்க அதைப் பிடித்து வறுத்துத் தின்ற கதை எல்லாம் உண்டு. உண்மைதான். ஆனால் இப்போது வெறும் மரக்கறி உணவாளர்தாம்..

Image result for varieties of snakes



சில நேரம் காகத்தின் கால்களில் வைத்திருக்கும் கொடுக்காப் புளி என்னும் கோணப் புளியங்காயை காக்கையை துரத்தி விட்டு கீழ் விழுவதை நாங்கள் எடுத்து உண்பது போல...  அந்த பாம்பின் உணவை அதனிடமிருந்து பிடுங்கியதும் உண்டு இரை அது பிழைக்க.

இதன் தொடர்ச்சியாக: மூலிகை பறிக்கப் போய் கையை புற்களில் வைத்தால் அங்கிருந்து விருண்டெழுந்து ஓடிய பாம்பு, மலைவாழ் பணி செய்கையில் மாடு ஆடு போகாதிருக்க கட்டிய தட்டிப் படல் மேல் நள்ளிரவில் கால் எடுத்து வைக்க நேர்கையில் அதன் மேல் படுத்திருந்த பாம்பை கொல்லாமல் இருந்ததுண்டு.

கேம்ப் காட் எனப்படும் கட்டிலை விரித்தால் அதன் மடிப்பில்  உள்ளிருந்த பெரும் பாம்பை அடிக்காமல் அனுப்பியதுண்டு.

ஆனால் என்ன இருந்தாலும் பாம்பு வீட்டுள் புகுந்து விட்டால் அது ஒரு கவலைக்குரிய எதிர்காலத்தை உருவாக்கும் என்பது நமக்கு ஏற்பட்ட அனுபவமும் அறிகுறியும் என்பது உண்மைதான்.

ஒரு முறை எங்கள் வீட்டில் ஒரு குட்டிப் பாம்பு புகுந்து திண்ணை வரை வந்திருந்தது. அதை அடித்தோமா அடிக்காமல் விட்டோமா மறந்துவிட்டது. ஆனால் பெரும் கலகம் ஒன்று  வெடித்து வாழ்வெலாம் ஒரு குடும்பப் பகை வந்திருந்தது.

அதே போல் பிறர் வாழ்வில் நடந்த கதையல்ல உண்மைச் சம்பவங்களும் உண்டு. எனவே பாம்பு புகுந்த வீட்டில் குடி இருக்காமல் காலி செய்து வேறு வீட்டுக்கு குடி புகுவாரும் உண்டு.

எத்தனையோ பாம்புகளை சாலைகளில், நடைப்பயிற்சி செல்கையில் ஒதுக்குப் புறமான நான் தியானம் செய்யும் கோவில் படிகளில் ஏராளமான முறை கண்டதுண்டு கடந்ததுண்டு. பிறர் அதை அடித்துப் போட்டதையும் கண்டிருக்கிறேன். நம்மைப் போல் வேளாண் தொழில் செய்வார் அதை அவ்வளவு எளிதாக விட்டு விட மாட்டார்கள். அப்படி ஒரு முதிய பெண்ணே கூட  அவர்கள் காட்டில் வந்த பாம்பைஅடித்துக் கொன்றதை கண்டிருக்கிறேன் விறகு வெட்டி பழனிசாமி, தொழில் அதிபர் மாரிமுத்து இப்படி நிறைய பேர் அடிக்க அதைக் காட்டிக் கொடுத்த பாவமும் எனக்குண்டு, ஏன் எங்களது ஒரு நாயை முகத்தில் கடித்திட நாய் அதைக் கடித்த காரணம்...நாய் இறந்த நிலை எல்லாம் உண்டு..

எந்தப் பாம்புமே நம்மைக் கடிக்க வேண்டிய கட்டாயத்தில் சினிமாவைப் போல, கதையைப் போல, காத்திருப்பதில்லை என்பது உண்மைதான்.

சொல்ல மறந்து விட்டேனே...எனது வீட்டில் அந்த சாரைப் பாம்பு மறுபடியும் வந்திருந்தது. அதை விரட்ட வழியில்லை அங்கே இங்கே என்று சென்று சுருண்டு கொண்டு படுத்தபடி ஆட்டம் கட்டியது. எனவே அதை போட்டுத்தள்ள ஒர் உலக்கையைப் பயன்படுத்தினேன். அடி வாங்கிக் கொண்டு தப்பித்தோம் பிழைத்தோம் என ஓடியதை...சில நாட்கள் கழித்து பக்கத்து வீட்டுக் கொல்லைப் புறத்தில் எறும்பு அரிக்க இறந்த  காட்சியை பக்கத்து வீட்டார் எல்லாம் ஒரே குடும்ப உறவு முறைதான்...காட்டினார்கள். அது எப்படி நிகழ்ந்ததோ என நாங்கள் தாம் அதை அடித்தது என காண்பிக்காமல் விட்டு விட்டோம்.

இதை எல்லாம் செய்யாவிட்டால் குடும்பமே கூட சிதைந்து போய் இருக்கலாம். சில நேரங்களில் இராமலிங்கராகவும், சில நேரங்களில் காந்தியக் கொள்கையான அஹிம்சையுடனும் சில நேரம் வேளாண் தொழில் செய்வாரைப் போலவும் களை எடுப்பதைப் போலவும் எல்லாம் செய்ய வேண்டி இருக்கிறது. இல்லை என்றால் குடும்பம் நடத்தவும் வழி இருக்காது போலிருக்கிறது

நீரில் நெளியும் புழுக்கள், காற்றில் நம்மை பதம் பார்க்கும் கொசுக்கள் தெரியாமல் மிதிக்கும் எறும்புகள் போல் அன்றாடம் உயிர்களை நாம் அழித்தபடியே இருக்கிறோம் இதில் கொசுக்கள் நம்மை பாதிப்பது, புழுக்களும் ....

அடிபட்ட பாம்பு எறும்பு ஏறி விட்டால் அதோகதிதான். எல்லா பாம்புகட்கும் விஷம் இல்லை. ஆனால் காற்றிலேயே விஷத்தை வீசி எதிரியைக் கொல்லும் பாம்புகளும் உண்டு என்பதெல்லாம்  சொல்கிறது பாம்பு சார்ந்த படிப்பு. ஆனால் பொதுவாக சுமார் 600 வகையான பாம்பு இனத்தில் 30 அல்லது 40 இனத்திற்கே விஷ நச்சு உண்டு என்பதும் அதில் ஒரு சில இனத்திற்கு மட்டுமே மனிதர்களைக் கொல்லும் விஷ அளவு உண்டு என்பதும் அதே அறிவியல்
Image result for friendly with snake
பாம்புகள் கடித்து கொத்தி இறப்பாரை விட பயத்தில் அந்த விஷம் கலந்து போன நச்சு உடனான இரத்தம் மூளைக்குச் சென்று விட இறப்பாரே அதிகம் என்பதும் செய்திகள்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Thursday, July 25, 2019

புதிய கல்விக் கொள்கையுடன் : கவிஞர் தணிகை

புதிய கல்விக் கொள்கையுடன் : கவிஞர் தணிகை

Related image


51 பக்கம் தமிழில் இருந்ததை நான் படிக்க எடுத்துக் கொண்ட நாட்கள் 3. ஏன் எனில் எனது கல்லூரிப் பணி முடித்து, நடைப்பயிற்சி முடித்து உண்டு உறங்கும் தருவாயில் படித்தே ஆக வேண்டும் என நிர்பந்தப்படுத்தி படித்துப் பார்த்தேன்.

இதை எல்லா தரப்பிலும் படித்துப் பார்த்து இதற்கு ஒப்புதல் அல்லது ஆட்சேபணை தெரிவிப்பார்கள் என்றெல்லாம் எதிர்பார்ப்பது அரசு மக்களுக்கு வைக்கும் ஆப்பில் ஒரு வெளிப் பூச்சு. பெயரளவில் செய்துள்ளதுதான்.

ஏன் எனில் தந்தை பெரியார் திராவிடர் கழக இராமகிருஷ்ணன் மற்றும் அவருடைய நண்பர்கள் கோவையில் மக்கள் சந்திப்புக்கு ஏற்பாடான புதிய கல்விக் கொள்கை கூட்டத்திற்கு சென்று ஆட்சேபணை செய்வதை செய்த்தை அப்படியே வாட்ஸ் ஆப்பில் வெளியிட்டதையும் கவனித்துப் பார்த்தேன்.
Image result for new education policy of india
மக்கள் பங்கெடுப்பாளராக எவருமே இருக்கைகளில் இல்லை. இருக்கை எல்லாமே காலியாகவே இருந்தன. மக்கள் எவருக்குமே அது பற்றித் தெரியவேயில்லை என்பது திரு ராமகிருஷ்ணன் அதில் விவாதிக்கிறார். கூட்டத்தைக் கலைத்து விட்டு அதாவது நன்றாக விளம்பரம் செய்துவிட்டு அதன் பிறகு இவ்வளவு பாதுகாப்பு முறைகளை எல்லாம் இல்லாமல் அனைவரும் கலந்து கொள்ளும்படி ஒரு அரசு கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்யுங்களேன் என்று கேட்டார் அது மிகச் சரியாகவே இருந்தது.

அதன் பின் என்ன நடந்தது என்பதை அறிய முடியவில்லை ஔரங்க சீப் இந்தியா முழுதும் ஆள நினைத்தது போல் மத்திய ஆளும் கட்சி ஆள்கிற மனப்பாங்கில் இருக்கிறதோ என்ற கருத்து கொள்ளும்படி உள்ளன நிகழ்வுகள்.
Image result for new education policy of india
அகரம் சூரியா என்ன இது மயிருக் கொள்கை புதிய கல்விக் கொள்கை என்றதை ஆதரித்து கமல், வைகோ, திருமா, சீமான் இப்படி பலரும் ஆதரித்த பின் ரஜினிகாந்தும் திருவாய் மலர்ந்தருளி மதன் கார்கி சொன்ன கருத்துக்கு பதிலாக சூரியா சொன்னதும் மோடி வரை சென்றிருக்கிறது என்று சொல்லியதாக அறிந்தோம்.

மும்மொழிக்கொள்கை தேவையில்லை. இரு மொழிக் கொள்கையே போதும் என்ற கருத்து இவர்களுக்கு.

சூரியா சொன்னது போல இந்த நீட் தேர்வில் அரசுப் பள்ளியில் பயின்ற ஒரு மாணவர்க்கும் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை என்பது அவரது வருத்தம்.

மேலும் எல்லா நிலைகளிலும் பொருளாதார நிலையில் பின் தங்கியவர். என்றும் வடக்கத்தியார்க்கு தென்னகத்தில் நிறைய வாய்ப்புகளை இந்த நடுவண் அரசு ஏற்படுத்தி வருவது உண்மையே.

3 வயது முதலே பள்ளிக்கு செல்லவேண்டும் என ஒரு பக்கம்,
மும்மொழிக் கொள்கை என ஒரு பக்கம்
இனி எம்.பில் எல்லாம் இல்லை எனவும் பி.ஹெச்.டி மட்டுமே என்றும்

தரமான தனியார் பள்ளிகளைத்தவிர மற்ற அனைத்து தனியார் பள்ளிகளையும் மூடிவிடுவோம் என்றும்

அதே போல ஆசிரியர்களுக்கு ஒரே பொதுவான தகுதி என்றும்

ஐந்தாண்டு மேற்படிப்பு படித்தார் மட்டுமே ஆசிரியராக வேண்டும் என்றும்

5+3+3+ 4  என்பது போன்ற ஒரு கணக்கு ஆண்டுகள் படிப்பதற்கு என்றும்...

இப்படி எல்லாம் நிறைய அந்த கல்விக் குழுவினர் சொல்லி இருந்தனர் எனது நினைவிலும் சரியாக பெரிதாக பதியவில்லை

என்றாலும் எனக்கு ஒன்று மட்டும் சொல்லத் தோன்றுகிறது
ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் ஒரே மொழி மட்டுமே பயிற்றுவிக்கப்படுகிறது அது தாய் மொழியில்

அவர்கள் எப்படி இந்தியாவை விட முன்னணியில் இருக்கிறார் என இந்தியா கற்றுக் கொள்ள வேண்டியது அவசியம்

தொடர்பு மொழி என இங்கு ஆங்கிலமா இந்தியா என்பது ஒரு கேள்வி வடக்கே இந்தி இருப்பது உண்மைதான். ஆனால் அதை அவரவர் விருப்பப் படி விட்டு விடுவதுதான்  சுதந்திர நாட்டுக்கு அழகும்.
Image result for new education policy of india
உணவு அதை அடுத்து மருத்துவம் கல்வி இருப்பிடம் உடை என எதற்குமே உத்திரவாதம் தரமுடியா அரசு வேலைவாய்ப்பு, குடிநீர் போன்றவற்றிற்கு எதையும் செய்ய முடியா அரசு சிகெரட்டை தூக்கிப் போட்டு வாயிலே கவ்விப் பிடித்த ரஜினிகாந்த் பாடத்தை படிக்கச் சொல்லி பாட நூலில் வைக்கிறது.

அத்தி வரதரை பார்க்காவிட்டால் இன்னும் 40 ஆண்டு ஆகிவிடும் என மக்களை ஏமாற்றி வருகிறது.  அருணிமா சின்ஹா என்பவர் யார் என ஒரு பாடம் வைக்கச் சொல்லி இருந்தால் பாராட்டலாம்.

சரித்திரத்தை மாற்றி எழுதி விட்டால் அது நிலைக்கும் என கணக்கு போடுகிற மத்திய அரசு...நமது மக்களைப் பற்றி தெரிந்து கொள்ள வில்லை போலும். அவர்கள் பக்திக்கு மடிவார்கள் ஆனால் அவர்களது மூன்றாம் தலைமுறையை பற்றியும் அறியார்கள். அறியும் முயற்சியும் செய்யார்கள்.

குடிநீர், மருத்துவம், போன்றவற்றிற்கு உத்தரவாதம் செய்துவிட்டு அதன் பிறகு கல்வியை தகுதி வாய்ந்த பிரதிநிதிகளை ஆலோசித்து நல்ல கல்வியைக் கொண்டு வரலாம். தரலாம். மெக்காலே கல்வியை மோசம் என்பார்களுக்கு இது எப்படியும் ஒரு மாற்று ஆகாது.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Wednesday, July 24, 2019

இன்று மற்றொரு உயிரின் வித்தியாசமான பயணம்: கவிஞர் தணிகை

இன்று மற்றொரு உயிரின் வித்தியாசமான பயணம்: கவிஞர் தணிகை


Image result for death comes in different and any form and any time

இது ஒரு உண்மைச் சம்பவம். எங்கள் குடும்பம் அறிந்த ஒரு குடும்பத்தில் நிகழ்ந்த நிகழ்வு. பெயர் குறிப்பிடாமல் சொல்கிறேன்.

வழக்கம்போல் நடைப்பயிற்சிக்கு சென்றேன் ஒரு சில இடங்களில் சிறிய போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. ஒட்டுப்பள்ளத்தில் ப்ளக்ஸ் இருந்தது. அந்த முகம் நானறிந்த முகமாகவும் இருந்தது.

விசாரித்தேன் மேட்டூரில் இருந்து 13 கி.மீ தொலைவில் உள்ள கொளத்தூரில் மின்சார உபகரண கடை வைத்து நடத்தி வந்தவர். இன்று மின்சார ஒயர் வெட்டித் தரும்போது தனது கையின் பெருவிரலையும் வெட்டிக் கொண்டதாகவும் அதனால் நரம்பு வெட்டப்பட்டு இரத்தம் நிற்காமல் சென்றதற்கு அங்கேயே ஒரு மருத்துவரிடம் முதல் உதவி பெற்று அதன் பின் மேட்டூர் அரசு மருத்துவமனையை நாடியதாகவும் அங்கேயும் முடியாமல் சேலம் அரசு மருத்துவமனைக்குத்தான் கொண்டு செல்ல வேண்டும் என்ற நிலையில் அங்கேயே அதாவது மேட்டூரிலேயே உயிர் பிர்ந்ததாகவும் செய்திகள்.

அவருக்கு 50க்குள் வயது இருக்கலாம். 15 வயதுக்குள் தான் குழந்தைகள் இருக்க முடியும்...

அவரை இழந்த அந்த குடும்பம் பெரும் துயரை அனுபவித்து வர ஒரு சிறு எச்சரிக்கையின்மையான செயல்பாடு காரணமாக அமைந்து விட்டது.

அவரது தந்தையை ஏற்கெனவே இழந்த அவரும் இப்போது காலமாகி இயற்கை அடைந்ததால் தாய் தனியாகி இப்போது மருமகள் மற்றும் பேரன் பேத்திகள் துணையுடன் மட்டுமே வாழ வழி ஆகிவிட்டது.

நேற்று சேலத்தில் இரண்டு வள்ளம்  அல்லது இரண்டு உழவு அளவு மழை. சேலத்தின் தாழ்வான பகுதிகளில் எல்லாம் சேற்று நீர் புகுந்து சேலம் ஐந்து வழிச் சாலை ரத்னா காம்ப்ளக்ஸ் இப்போது இடிக்கப்படும் நிலையில் இருப்பது....அதில் உள் எல்லாம் நீர் புகுந்து மோட்டார் வைத்து நீரை பம்ப் செய்து வெளியேற்றிக் கொண்டிருந்தார்கள்...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Saturday, July 20, 2019

பாம்பு கடித்ததா பயத்தில் இதயம் நின்றதா? கவிஞர் தணிகை

பாம்பு கடித்ததா பயத்தில் இதயம் நின்றதா? கவிஞர் தணிகை

Related image

கடந்த சில நாட்களுக்கும் முன் எங்கள் ஊரில் எனது நண்பர் ஒருவர் குடும்பத்தில் நேர்ந்த உண்மைச் சம்பவம் இது. ஆனால் அவர் பெயரை நான் குறிப்பிட வில்லை. குறிப்பிட்டாலும் அவர் அதை தவறாக எடுத்துக் கொண்டு கோபப் படமாட்டார் என்பதையும் நானறிவேன்.

சாந்தி ( பெயர் மாற்றப்பட்டுள்ளது) இறந்தவர்களுக்கும் பெயர் உள்ளதா என்ன...இருப்பார் நமக்கு ஒரு அடையாளத்துக்கு நமக்கு அடையாளப்படுத்திக் கொள்ளத்தானே பேர் சுருக்கமாக எல்லாம்.

மிகவும் பக்தி உடையவர். தவறாமல் கோவில்களில் பூஜை புனஸ்காரஙகள் உண்டு. மேலும் இவர்  ஒரு பள்ளி ஆசிரியை. ஓய்வு பெறும் நாட்கள் இன்னும் இருக்கிற நிலையில்.... பௌர்ணமி பூஜை என்று ஒருவர் நடத்தும் விநாயகர் கோவில் விழாவுக்கு நன்கொடை தருவதற்காக இருள் பொழுதின் ஆரம்பத்தில் சென்றிருக்கிறார். இப்போதெல்லாம் எங்கள் ஊரில் ஒரே கொள்கைதான். தெருவிளக்குகள் ஆளும் கட்சி சார்புடையவர்கள் வீட்டருகேதான் எரியும் மற்ற தெரு விளக்குகள் எரியாமல் இருளே ஊரெங்கும் நிறைந்திருக்கும்.  அதற்கு ஊராட்சியும் தநாமிவா வும் பொறுப்பு அதன் பின்னணியில் நிறைய அரசியல் அது சொல்ல நேரமிது அல்ல.

அம்மணி சென்றிருக்கிறார் அங்கு  இருள். படியருகே படுத்திருந்த ஒரு சிறு பாம்புக் குட்டி. அம்மணி பயம் கொண்டிருக்கிறார்.  அவரின் வாக்கு சற்று கடித்த மாதிரி இருந்தது என்பதே. அங்கே பணம் கொடுக்க சென்ற இடத்தில் பெண்மணிகள் உதவ நினைத்தும் அதன் பின் அவர் வீட்டருகே வந்து பெண்கள் சுற்றி வளைத்தும் பேசியபடி நேரம் சென்று விட ஓட்டுனரை அழைத்துக் கொண்டு சுமார் 8 கி.மீ. தள்ளி உள்ள அரசு மருத்துவமனைக்கு அவர்கள் செல்வதற்குள் காட்டு மலைப்பாதை ரோட்டிலேயே அம்மணி உயிர் பிரிந்தது.

இரு வேறு கூறுகள் ...அவரை பாம்பு கட்டு விரியன் குட்டி கடித்து விட்டது என்றும் உரிய நேரத்தில் அதற்கு சிகிச்சை எடுக்காமல் செய்த காலதாமதமே உயிர் பிரிவுக்கு காரணமே என எனது நண்பர் முதற்கொண்டு கருதி வருத்தம் கவலை சொல்லொணாத் துயரம் கொள்ள

அவரது கார் டிரைவரோ ஒரு கிராமத்து நபர்: இல்லை இல்லவே இல்லை எந்த பாம்பும் அவரைத் தீண்டவே இல்லை அவருடைய பயமும் மாரடைப்புமே மரணம் சம்பவிக்க காரணமானது என்றும் சொல்ல...

மொத்தத்தில் : அந்த அம்மணியே சென்று பீரோ எல்லாம் திறந்து சிகிச்சைக்கு என உள்ளூரில் முடியவில்லை எனில் சேலம் செல்ல வேண்டிய பணம் எல்லாம் எடுத்துக் கொடுத்தும், கணவரின் காலில் விழுந்து ஆசி வாங்கியும், குடி நீர் இரண்டு பாட்டில் எடுத்துக் கொண்டும் அவரது பெண்ணிடம் வரச் சொல்லிப் பேசியபடியும் காலம் தாழ்த்தி விட்டதாகவும் செய்திகள்.

இல்லை இல்லை சிறிய முள் மாதிரி இருந்ததாகவும்  கைகளில் கூட கரு நீல அடையாளம் இருந்ததாகவும் வெட்டியான் இடுகாட்டில் பார்த்ததாகவும் நண்பர் சொல்ல இல்லை இல்லை ப்ரீசரில் வைத்திருந்து அதன் பின் எடுத்து வைத்து குளிப்பாட்டியதால் அந்த நிறமாறுதல் நரம்பு போன்றவற்றில் ஏற்பட்டன அவர் நல்ல கலர் என்பதால் என ஓட்டுனர் சொல்வதும் இதில் எது சரி என அந்த அம்மாவே வந்து சொன்னால் தான் நாமறிய முடியும்.


ஒரு ஆசிரியையே இப்படி நடந்து கொள்ளும்போது எப்படி இவர் இத்தனை ஆண்டுகள் பொறுப்பான முக்கிய  பணியாற்றி வந்திருப்பார் என்பதும்,இவரிடம் படித்த மாணவர்களுக்கு எப்படி தைரியம் சொல்லி இருப்பார் என்பதும்தான் தெரியவில்லை. மேலும் பாம்பு கடி என்பதை விட அதன் பயமே அவரது உயிரைக் குடித்திருக்கிறது. பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பதும் பாம்புகள் மனிதர்களைக் கடிக்க கொத்த தீண்டவே காத்திருப்பதில்லை என்பதும் உண்மைகளே...

இதன் முக்கிய காரணம்: இருள், ஊராட்சி, தநாமிவ...என்றெல்லாம் சொல்வதா இல்லை அவரது பயமா...

அது மிகச் சிறிய பாம்பு என்றும் அதில் அத்தனை விஷம் எல்லாம் இருக்கவே வாய்ப்பில்லை என்பதெல்லாம் எனக்கு கிடைத்த  செய்திகள்

ஏ.சி யில் பாம்பு இருந்தது என்பதும், பேருந்தில் பாம்பு இருந்தது என்பதும் எங்கள் வீடுகளில் அந்தக் காலத்து வாழ்க்கையில் பாம்புகள் எல்லாம் சகஜமானது என்பதும் எனது களப்பயிற்சிப் பணிகள் போது மலைகளில் பணி புரிந்த காலக்கட்டத்தில் பாம்புகளுடன் மிக அருகாமையில் எல்லாம் எனது உடலும் வாழ்வின் பயணமும் இருந்தது என்பதெல்லாம் மறக்க முடியா செய்திகளாக இன்றும் எனது நினைவோட்டத்தில்.


மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

முரணும் அரணுமாய் சில வார்த்தைகள்: கவிஞர் தணிகை

முரணும் அரணுமாய் சில வார்த்தைகள்: கவிஞர் தணிகை

Related image

அப்துல் கலாம் மொழிகளில்  ஒன்று: வாய்ப்புக்காக காத்திருக்காதே , வாய்ப்புகளை நீயே உனக்காக உருவாக்கிக் கொள் என்பதாகவும் மற்றொன்றில் வெள்ளம் வரும்போது மீன்கள் எறும்பை உண்ணும், வெள்ளம் வடியும்போது எறும்புகள் மீனைத் தின்னும் எனவே உங்களுக்கும் காலம் வாய்ப்பு வரும் அதுவரை காத்திருங்கள் என்பதாகவும் படிக்க நேர்ந்தது/

இரண்டுமே மிக நல்ல வாசகங்கள்தான். இரண்டுமே அவசியமானவைதான். ஆனால் சொல்லப்பட்ட காலத்தில் அவை அவசியமாகவே இருக்கும். ஆனால் அவற்றை ஒரு சேர பார்க்கும்போது முரணாகவே தோன்றுகிறது. வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டுமா இல்லை வாய்ப்புகளை நாமே உருவாக்கிக் கொள்ள வேண்டுமா என்பது.

மிக வளர்ந்த நிலைக்கு மாந்தர் போகும்போது இப்படி அவர்கள் சொல்வது யாவும் பெருமை பெறும்.
Image result for sankaralinganar
இப்படித்தான் குறளில்  ஒன்று: யாக்கைக்கு மருந்தென வேண்டாவாம் அருந்தியது அற்றது போற்றி உணின் என்ற ஒரு குறள் இருக்கிறது. ஆனால் இது இன்றைய காலத்துக்குப் பொருந்துமா என ஒரு சிறு நூலில் கேட்டிருப்பேன். காரணம்: இன்றைய உணவு என்பதே இரசாயன உரத்தால் வளர்க்கப்பட்டு நோய்க்கூறுகளைக் கொண்டிருப்பது என்பதும்  பசித்தபின் உண்டால் மட்டும் மாந்தர்க்கு  எந்த வியாதியும் வராது என்பது இக்காலத்துக்கு எப்படி பொருந்தும் எனக் கேட்டிருப்பேன். ஏன் எனில் குறள் காலத்தையும் விஞ்சியது என்றாலும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டது அல்ல என்பதே எனது தாழ்மையான கருத்தும்.
Image result for kalam
கலாம் தமது வாழ்வில் நிறைய நேரங்களில் சமரசப்போக்கையே கொண்டிருந்திருக்கிறார் எனவே எல்லோரிடமும் அனுசரித்தேப் போய் இருக்கிறார். கால்சட்டையை மேற்சட்டையை கழட்டி சோதனையிட்ட அமெரிக்க அரசு அலுவலர்களிடமும் மற்ற மதகுருமார்களிடமும், மற்ற கோவில்கள் , மடங்கள் செல்லும்போதும் ஒரு நண்பர் சொல்வார் அவர் சாப்பிடும் உணவு விலை அவ்வளவு என்று காமராசர் மாதிரி ரேசன் கடையில் வாங்கிய அரிசியை உண்டாலும் அவரும் தமிழ்நாடு என்று பேர்வைக்க போராடிய சங்கரலிங்கனார் சாவுக்கு காரணமாக இருந்தார் என்று பேசுவார்கள்....எவரைத்தான் பேசாமல் விடப்போகிறார்கள்...ஒரு மனிதர் பொது வாழ்வுக்கு என்று வந்து விட்டால் அவர் விருப்பப் படி உணவைக்கூட உண்ணக் கூடாது என்று சொல்வார் அவர் விரும்பும் தலைவர்களே வயதான பின்னும் துணை வேண்டுமென மிகவும் இளைய வயதில் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டாரே பொது வாழ்வில் சேர்த்த சொத்து எல்லாம் அந்த பெண் சார்ந்தவரையே சென்று சேர்ந்து விட்டதே அது பரவாயில்லயா என்றால் அது சரிதான் அவர் அவர் விருப்பப் படி செய்து கொள்ள அகவாழ்வு பற்றி எல்லாம் இயக்க முறைமைகளில் இல்லை பேச வேண்டாம் என்பார்கள்.
Image result for kamarajar
கலாம், காமராசர் போன்ற மனிதர்கள் எளிமையக் கடைப்பிடித்த மனிதர்கள் கடைசிவரை ஒரு கொள்கையை விடாது பிடித்து இருந்தார்கள். கலாம் கால் மேல் கூட கால் போட்டு அமரும் ,மனிதர் இல்லை. எனக்கெல்லாமொரு வருத்தம் அவர் இந்த நாட்டின் ஒர் ஹிட்லர் போன்ற அதிபராகி  இந்த நாட்டின் நதி நீர் இணைப்பையாவது நிறைவேற்றி சென்று சேர்ந்திருக்கலாம் என்பதுதான்.
Image result for sankaralinganar
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை. 

Thursday, July 18, 2019

மறுபடியும் பூக்கும் முதல் புத்தகத்தின் முன்னுரை: கவிஞர் தணிகை

மறுபடியும் பூக்கும் முதல் புத்தகத்தின் முன்னுரை: கவிஞர் தணிகை





முதல் பக்கம்:

Image result for marubadiyumpookkum.blogspot.com
 ஒரு நல்ல கவிதையின்
படிக வரிகள்
மனதை விட்டகலாது

ஒரு சிறந்த விதை
மண்ணுக்குள்ளேயே
மக்காது

இரண்டாம் பக்கம்:

என்னைத் தந்தவளுக்கும்
எனக்காக‌

தன்னைத் தந்தவளுக்கும்

இதழ்களைப் பற்றி:

நானே கருவாகி தானே உருவாகி உங்கள் உள்ளத்தில் ஒரு சிறு பகுதியை தொட்டுச் செல்ல நான் எடுத்துக் கொண்ட காலமும் சிரமமும் மிக அதிகம்.
Image result for marubadiyumpookkum.blogspot.com
நான் பாரதி, தாகூர் போன்ற மகாக் கவியில்லை
Image result for marubadiyumpookkum.blogspot.com
என்னால் உலகு உய்யப் போகிறது என்று சொல்லுமளவு நான் முட்டாளுமில்லை
Image result for marubadiyumpookkum.blogspot.com
என்னால் இந்த நாடு சுபிட்சம் அடையப் போகிறது என எண்ணிக் கொள்ளுமளவு நான் பெரிய தியாகியுமில்லை.
Image result for marubadiyumpookkum.blogspot.com
என் பின்னோடு எந்த மதமும் தொடர்ந்து வரப் போவதில்லை என்பதையும் நானறிவேன், என்றாலும்

நான்: கால எல்லையை குறுகிய சாதி, மதக் கோடுகளை வாழ்வின் நடைமுறை யதார்த்தத்திலும் பிடிவாதத்துடன் கடக்க ஆசைப்படும் ஓர் சாதாரண மனிதன்.

சக மனிதரின் துன்பம் கண்டு துயரம் கொள்பவன்
Image result for marubadiyumpookkum.blogspot.com
நிறைய ஏமாற்றங்கள் என்னிடமும் உண்டு

ஆனாலும் என்னால் எவருமே என்றுமே ஏமாற்றப்பட்டு விடக் கூடாது என்று பிரார்த்திப்பவன்.
Image result for marubadiyumpookkum.blogspot.com
எனது இளமை விடைபெறும் முன்பே என்னால் முடிந்த அளவு எனது வீட்டுக்கும், எனது நாட்டுக்கும், நான் செய்ய வேண்டிய கடமையை செய்து முடித்து விட்டதாய் உணர்கிறேன். அந்த திருப்தியின் அடையாளமாய்த்தான் இப்போது நான் உங்கள் கைகளில் இருக்கிறேன். நான் இனி எப்போது இறந்தாலும் எனக்கு சந்தோஷமே.
Image result for marubadiyumpookkum.blogspot.com
நான் என் குடும்ப உறுப்பினர்களைக் கூட உலகின் அங்கமாகவே எடுத்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு முகம் தெரிந்த தெரியாத இவ்வுலகின் எல்லா மனிதர்களையுமே என் குடும்ப உறுப்பினர்களாகவே நினைத்துக் கொண்டிருக்கிறேன். அதன் எதிரொலிதான் இந்தப் புத்தகம்.
Image result for marubadiyumpookkum.blogspot.com
அன்புப் பிரவாகத்தின் சுழலில் அகப்பட்டு மீளத் தெரியாத எனது அவ்வப்போதைய மீறிய துக்கமும் பீறிய சந்தோஷமுமே இந்தக் கவிதைகள்

Image result for marubadiyumpookkum.blogspot.com
பல கோணங்களின் ஒரு பரிமாணம் மட்டுமே இப்போது உங்களுக்காக!
Image result for marubadiyumpookkum.blogspot.com
                          மறுபடியும் பூக்கும் வரை

                               சு. தணிகை.
                                1991.
Image result for marubadiyumpookkum.blogspot.com

Monday, July 15, 2019

கிரிக்கெட் விளையாட்டில் இயற்கைதான் வெற்றியை நிர்ணயிக்கிறது: கவிஞர் தணிகை

கிரிக்கெட் விளையாட்டு வீரர்களை விட இயற்கையின் விளையாட்டே பெரிதாக இருக்கிறது: கவிஞர் தணிகை


Image result for wind rain cricket play effects

மழை என்கிறார்கள், மேக மூட்டம் பந்து வீச்சை பாதிக்கிறது என்கிறார்கள், ஈரப்பதம் பெரிதும் போட்டியின் விளைவை பாதிக்கிறது என்கிறார்கள். அப்படித்தான் அன்று இந்தியாவுக்கும் நியூஸ்லான்டிற்கும் ஆடாமலேயே இரண்டு வெற்றிப் புள்ளிகளை ஒவ்வொன்றாக மழை வந்து ஆட்டத்தை தடுத்து விட்டது என்று பிரித்துக் கொடுத்து இருந்தார்கள்.

ஆக உலகக் கோப்பையின் இறுதி நாளில் ஆட்டம் நடைபெற்ற நாளில் ரன்களைத் தடுக்க விக்கெட்டை எடுக்க விக்கெட்டை நோக்கி வீசப்பட்ட பந்து ரன் எடுத்த வீரரின் பேட்டில் பட்டு எவரிடமும் பிடிபடாமல் பவுண்டரி கோட்டை தொட்டுவிட அதற்கு 6 ஓட்டங்கள் கொடுக்கப்பட்டு விட்டன. அது சரியா தவறா என்ற சர்ச்சை ஏற்பட்டிருப்பது வேறு


ஆக நியதிகள், விதிகள், சட்டங்கள், திட்டங்கள் யாவுமே மனிதர்களுக்காக ஏற்படுத்திக் கொள்ளப்படுவதுதான். அதில் விளையாட்டு விதிகளும் அடங்கும்

இந்த இறுதி ஆட்டத்தில் வென்றவர்கள் மறுபடியும் லீக் ஆட்டத்தின் முதலில் வென்று புள்ளிகள் பட்டியலில் முதலில் இருப்பவரோடு மோதி வென்றாக வேண்டும் என்ற விதி இருந்தால் இந்தியாவோடு இந்த வென்ற அணி மோத வேண்டும். தோற்ற அணி ஆஸ்திரேலியாவோடு மோதலாம்.

ஏன் சொல்லப்போனால் இறுதி ஆட்டம் இரு முறை சமன் செய்யப்பட்டு விட்ட நிலையில் இரு அணிகளுக்கும் முதல் பரிசை பிரித்துக் கொடுத்திருக்க வேண்டும் இரண்டாம் இடத்துக்கு ஆஸ்திரேலியா இந்தியா ஆடும் ஆட்டத்தின்படி முடிவு செய்து பரிசைக் கொடுத்திருக்கலாம்.

எல்லாமே ஐ.சி.சி கொண்டு வரும் விதிதானே...

மழை அடிக்கடி வரும் கிரவுண்டில் முதலில் போட்டிகளை நடத்தியதே முதல் தவறு. மேலும் ஆடாமலே புள்ளிகளைப் பிரித்துக் கொடுப்பதும், டக் ஒர்த் லூயிஸ் என்பதும் பவுண்டரிகளில் அதிகம் எனவே அவர்களுக்கு வெற்றி என்பதும் வொர்த்லஸ் விதிகள்.

போட்டி என்றால் போட்டிதான் முடிவு என்றால் முடிவுதான். அதை விடுத்து விருப்பம் போல ஏற்கெனவே ஆடியதற்கு எல்லாம் விதியை விதித்துக் கொண்டு விருப்பம் போல செயல்படுவதற்கு விதிகள் எதற்கு மேலும் இந்த விளையாட்டுதான் எதற்கு. எல்லாம் வியாபாரம். இலாபம், நட்டம் என்ற கண‌க்குதான்
Image result for wind rain cricket play effects
எப்படி சூப்பர் ஓவர் என்று வெறும் 6 பந்துகளை வைத்து வெற்றி தோல்வியை  நிர்ணயிக்கும் முடிவுக்கு வரமுடிகிறதோ அப்படி 10 ஓவரில் போட்டியை முடித்துக் கொள்ளும் முறையாக கிரிக்கெட் விளையாட்டு காலப்போக்கில் மாற்றிக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டே தீரும். ஏற்பட்டேயாக வேண்டும். ஏற்படுத்தவும் வேண்டும். லலித் மோடி வேண்டாம் அவர் ஆரம்பித்த ஐ.பி.எல் வேண்டும், சென்னை சூப்பர் கிங்க்ஸ் வேண்டாம் அதுவே மறுபடியும் வேண்டும் என்பது போல எது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானலும் மாறலாம். அது மாறும். அதில் இயற்கை செய்யும் ஊடுருவல்களைத் தான் நாம் இரசிக்காமல் இருக்க முடியவில்லை. அது விளையாட்டின் வெற்றி தோல்வியை பெரிதும் தீர்மானிக்க உதவிடுகிறது.
Image result for wind rain cricket play effects
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

Sunday, July 14, 2019

50 ஆண்டுகளாகவே இந்திய கிரிக்கெட் இப்படித்தான்: கவிஞர் தணிகை

50 ஆண்டுகளாகவே இந்திய கிரிக்கெட் இப்படித்தான்: கவிஞர் தணிகை
Image result for kapil dev 175

Image result for kapil dev 175


கிரிக்கெட் விளையாட்டு அல்ல வியாபாரம். என்பார் கிரிக்கெட் முட்டாள்களின் ஆட்டம் என்பார் கிரிக்கெட் என்பது சூதாட்டமாகிவிட்டது என்பார் இது ஒரு உலக அளவிலான விளையாட்டே அல்ல ஆனால் இதற்கு ஒரு உலகக் கோப்பை என்பார், மேலும் சொல்லப்போனால் இதை மழை வந்தால் ஆட முடியாது என்னும்போது சட்ட திட்டங்கள் என்ற பேர் சொல்லி ஏமாற்றி உலகக் கிரிக்கெட் வாரியம் தமது சிறு குழு மனப்பான்மையில் தாம் விரும்பியதை நிறைவேற்றிக் கொள்ளும் அதற்கு காலனி ஆதிக்கத்திலிருந்து விடுபட்ட அடிமை நாடுகளை பயன்படுத்திக் கொள்ளும்.

ஆட்சி முறை அவர்களைப் பார்த்தும், ஆட்டமும் அவர்களைப் பார்த்தும் ஆடி வரும் இந்த அடிமை நாடுகளின் ஆட்டக்காரர்களும் ஒரு வகையில் வியாபார விளம்பரம் மற்றும் சுய இலாப முதலாளித்துவத்துக்காக இந்த ஆட்டத்தை ஆடியே ஏமாற்றி வரும். ஐபிஎல் இன்டியன் பிரிமியர் கிரிக்கெட் லீக் என்பதை தோற்றுவித்த லலித் மோடி குற்றவாளியை இவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆனால் அவரால் ஆரம்பித்த ஆட்டம் வெகு ஜோராக இந்தியாவில் என்றும் ஆடப்பட்டு வருகிறது.

கபில்தேவ், மகேந்திர சிங் தோனி இரண்டு விளையாட்டு வீரர்கள் மட்டுமே இந்தியாவுக்கு பெருமை சேர்த்த ஆட்டக்காரர்கள். கவாஸ்கர்,ச்ச்சின் டென்டுல்கர்  போன்றோர் கூட சுய இலாபத்துக்காகவே ஆடி பெருமை சேர்த்து சம்பாதித்துக் கொண்டு சென்றவர் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்தவர்கள்

இவர்கள் இந்த விளையாட்டில் இருந்து விடைபெற்றாலும் வர்ணனையாளராக வருவாய், பயிற்சியாளராக வருவாய், இவர்களே தனியாக பயிற்சி கொடுக்கிறோம் என்று விளையாட்டு மையங்களை ஏற்படுத்திக் கொள்வது, விளம்பரப் படங்களில் சம்பாதித்த பணத்தை ஏதாவதொரு தொழிலில் இட்டு பெரு உற்பத்தி செய்து கொள்வது, இப்படி ஏதாவது ஒரு வாழ்க்கை மார்க்கம் கிடைத்து விடுகிறது என்பதற்காகவே இந்தத் துறையில் நுழைந்து வருகிறார்கள். இந்த நாட்டில் மற்ற விளையாட்டு வீரர்கள் என்ன சாதனை செய்தபோதும் அவர்களுக்கு போக்குவரத்துக்கும் உணவுக்கும் உடைக்கும் இருப்பிடத்துக்கும் மருத்துவத்துக்குமே பணப்பற்றாக்குறை இருக்கும்போது இந்தக் காட்டில் எப்போதும் அடைமழைதான்.

இதைக் காரணமாகக் கொண்டு இந்திய தேசிய விளையாட்டாகவே ஹாக்கி விளையாட்டுக்கு மாறாக இதை விளையாடி வருகிற இளைஞர் படை அதிகம். பள்ளிகள் கல்லூரிகள், ஊர்கள் அதிகம். இதை விளையாடி முடித்துவிட்டு இந்தக் காரணத்தை வைத்துக் கொண்டு சேர்ந்து புகைப்பதும், மது அருந்துவதும், ஒரு மோசமான கலாச்சாரம் ஏற்பட இந்த விளையாட்டு பயன்படுகிறது. இது குளிர் பிரதேச நாடுகளில் முக்கியமாக இங்கிலாந்தில் பிரபு வர்க்கத்தார் நேரம் போக்க உடற்பயிற்சிக்காக விளையாடிய இந்த விளையாட்டு பணக்காரத்தனம் மட்டுமே அனைவர்க்கும் பிடிக்கிறது என்ற நியதியில் இருந்து மாறாமல் அனைவருமே இந்த நாட்டில் விளையாடி வருகின்றனர்.

இந்த உலகக் கோப்பையை இங்கிலாந்து போன்ற நாடு முதலில் நடத்தியது தவறு. அடுத்து அதன் சட்ட திட்டங்கள், மழை, வெற்றியில்லாமலே வெற்றிப் புள்ளிகளை பிரித்து தருவது, முதலில் ஆடியவர்க்கு ஒரு சட்ட திட்டம், மழை வந்த பின் பின்னால் ஆடுவோர்க்கு வேறு ஒரு சட்ட திட்டம், லெக் பிfoவோர், ஸ்டம்பிங், கேட்சிங்க், பௌலிங் power play என நிறைய மாறுதலுக்குட்பட்ட விலைபோன விளையாட்டு விதி முறைகள்...

ஆடி முடித்து வெற்றி பெற்றவர் அங்கேயே பீர் பாட்டிலை திறக்கும் பழக்க வழக்கங்கள்...இந்தியா 41 சதவீதம் இருக்கைகளை இந்த உலகக் கோப்பையின் இறுதி ஆட்டத்தைப் பார்க்க இந்தியா இறுதி ஆட்டத்தில் ஆடும் வெல்லும் என்ற எதிர்பார்ப்பில் இந்திய ஆதரவாளர்கள் முன் அனுமதியுடன் கட்டணச் சீட்டு பெற்றிருந்ததாக புள்ளி விவரம் சொல்ல நியூசிலாந்து காப்டன் அதை இலாபம் பெற்றுக் கொண்டு பிறர்க்கு விட்டுத்தாருங்கள் வராமல் விட்டு காலியாக விட்டு விரயம் செய்து விடாதீர் என்றும் கோரிக்கை செய்திருக்கும் செய்திகள்.

இதை ஒரு 10 ஓவர் மேட்சாக மாற்றி வெற்றி தோல்வியாக நிர்ணயிக்க முடியும். மேலும் மழை வந்தால் வேறு நாளில் போட்டியை நடத்தியே ஆக வேண்டும், மேலும் மழை வரும் இடத்திலிருந்து வேறு இடத்திற்கும் கொண்டு சென்று ஆடவும் முடியும், மேலும் மழை வராமல் ஒரு இன்டோர் கேம் போல வானாளவிய கூடாரத்தை அல்லது மேற்கூரையை அமைத்தும் ஆடமுடியும்... இது போல மாற்றங்களைக் கொண்டு வரவேண்டும்.

உலக கிரிக்கெட் வாரியத்துக்கு இந்திய இரசிகர்கள் மற்றும் பாகிஸ்தான் இரசிகர்களாலுமே பெரும்பணம் புரள்கிறது என்றும்,  அந்த ஒரு மேட்ச் இல்லையெனில் மொத்த வசூல் 1150 கோடியில் சுமார் 200 கோடி அதாவது மொத்த வருவாயில் 20 சதத்துக்கும் மேல் இழப்பு ஏற்படும் என்றெல்லாம் வியாபாரப் புள்ளிகள் விவரம் தருகின்றன.

இதை எல்லாம் மீறி மேட்ச் பிக்சிங் என்பதும். நன்றாகவே விளையாடி வருவதும் நாம் எல்லாம் அதை உற்சாகமாக பார்த்து வரும்  காலக் கட்டத்தில் இப்படி படு தோல்வி அடைவார்கள் என்பதும் இன்று நேற்று நடப்பதல்ல...கடந்த ஐம்பது ஆண்டுகளாகவே நான் கண்டு வரும் சொந்த அனுபவம். நிறைய பேர் இதற்காக உயிரையே கூட விட்டிருக்கிறார்கள்.

சுமார் இருபது ஆண்டுகளுக்கும் முன் எனது உறவினர் பையன் ஒருவன் ப்ளஸ் டூ பரீட்ட்சையின் போது நடந்த கிரிக்கெட் விளையாட்டுகளில் கவனம் செலுத்தி விட்டு பள்ளி மேனிலைத் தேர்வில் தவறியதை வெளியில் சொல்லக் கூச்சப்பட்ட்டுக் கொண்டே எவரிடமும் சொல்லாமல் தற்கொலை செய்து கொண்டதை எல்லாம் நாங்கள் கண்டதுண்டு. அப்போது எல்லாம் இப்படி விரைவாக எழுதி தேறி அந்த ஆண்டே மேற்படிப்புக்கு செல்லும் வாய்ப்புகள் எல்லாம் குறைவே. மேலும் இப்போது நீட் எழுதவே ஆண்டுகளை விரயம் செய்கிறது பெரிய இடத்துப் பிள்ளைகள் என்பதெல்லாம் நடுத்தர வர்க்கத்துக்கு கிடைக்க முடியா வாய்ப்புகள்.

சுமார் ஏழெட்டு வருடம் முதல் நான் கிரிக்கெட் தெரிந்தவன். கொஞ்சம் விளையாடியும் இருக்கிறேன். வலது கையின் நடுவிரலில் பேட்டுக்கும் பாலுக்கும் இடையே சிக்கிய நசுங்கிய காயம் கூட நேற்று நடந்தது போல இருக்கிறது.
Image result for dhoni retirement
மதுர நாயகம் என்ற வெளியூரிலிருந்து ஒரு மாணவன் எங்கள் வகுப்பில் வந்து சேர்ந்தார் அவரது தந்தை ஒரு நிர்வாக அலுவலராக மாறுதல் பெற்று எங்கள் ஊருக்கு வந்தபோது இவர் வந்து எங்கள் பள்ளியில் சேர்ந்தார். அவர் கிரிக்கெட் ஆடுபவர், மேலும் வர்ணனை வானொலியில் கேட்பார் அங்கிருந்து ஓதம்....அவர் அவரிடம் இருந்த கிரிக்கெட்டை என்னிடம் கசியவிட்டார் என்னிடம் இருந்து கதைப்புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை கற்றுக் கொண்டார்.

அங்கிருந்து ஆரம்பித்த நாட்களில் இருந்து சுமார் ஐம்பது  ஆண்டுகளாகவே நான் கிரிக்கெட்டை அருகிருந்தும் விலகி இருந்தும் பார்த்து வருகிறேன் நான் ஒரு கபடி விளையாட்டுக்காரன் என்ற போதும்... இவர்கள் இந்த  இந்தியர்கள் நன்றாக விளையாடுவது போலவே ஆடுவார்கள் முக்கியமான நேரங்களில் எல்லாம் கோட்டை விட்டுவிடுவார்கள்.... பாண்டிங் போன்ற வெள்ளைய விளையாட்டின் காப்டன் எங்களது நாட்டின் மத்திய மந்திரியாக இருந்த சரத் பவார் போன்ற தலைவரை எல்லாம் சும்மா சாதாரணமாக கையைப் பிடித்து நகர்த்தி விட்டு முன் வரிசைக்கு வந்து விடுவார். ஆனால் அதையே எங்களது இந்தியக் குடிமகன் எவராவது செய்திருந்தால் அதை எங்கள் அரசும்  பாதுகாவலரும் சும்ம்மா விட்டிருக்க மாட்டார்கள்... அதே போல அணுகுண்டுக்கு சோதனைக்கு காரணமாக இருந்த அப்துல் கலாம் என்ற  மாமனிதரை ஒரு நாட்டின் மக்கள் குடியரசுத் தலைவராக இருந்தவரை இரு முறை ஆடையை காலணியை எல்லாம் கழட்டி சோதனை செய்வார்கள் அவரும் சிரித்துக் கொண்டே அவர்களது கடமையைத்தானே அவர்கள் செய்கிறார்கள் என்பார்.

ஆனால் அமெரிக்க ஐக்கிய நாட்டின் குடியரசுத் தலைவர் இந்தியா வருகிறார் எனில் அவர்களது பாதுகாப்புப்படையும் வளையம் வளையமான ஏற்பாடுகளும் படையும் வந்து சேரும்...

யார் நன்றாக விளையாடுகிறார்களோ அவர்கள் வெல்லட்டும், மேலும் விதிகள் யாவர்க்கும் ஒன்றாக இருக்கட்டும் அதெல்லாம் வேறு. இந்த விளையாட்டு ஒர் ஒழுங்கமைய வேண்டுமெனில் உலகக் கிரிக்கெட் வாரியத்துக்கு எந்த நாடுகள் எல்லாம் விளையாடுகின்றனவோ அந்த நாடுகளில் இருந்து பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும். அதெல்லாம் இல்லை என்னும்போது ஒரே சொல்: இது இன்னும் வெள்ளையர் விளையாட்டுதான் அடிமைகள் எப்போதாவதுதான் வெல்ல முடியும். எப்போதுமே வெல்ல முடியாது என்னதான் திறமை இருந்தபோதும். ஏன் எனில் அடிமை நாட்டின் சட்ட திட்டங்களும் விதிகளும் எப்போதும் பணக்காரக் கூட்டத்தாலும், அரசியல் வட்டத்தாலும், அரசு நிர்வாக அலுவலர்களாலும் மட்டுமே எழுதப்படுகின்றன. கடைப்பிடிக்கப்படுகின்றன.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

என்ன ஒரு வருத்தம் என்றால் முதலில் இந்தியாவுக்கு உலகக் கோப்பையை வென்று தந்த  கபில் தேவுக்கும் பின் சச்சின் டென்டுல்கரை பெருமைப்படுத்த ஒரு தோனி இருந்ந்தார், வென்று உலகக் கோப்பையை கையில்  ஓய்வுப் பரிசாக கையில் தந்தார், தோனிக்கு அது போல ஒரு வாய்ப்பு இல்லை வீரரும் இல்லை என்பதுவே...



Friday, July 12, 2019

வந்த நாள் முதல் இந்த நாள் வரை: கவிஞர் தணிகை

வந்த நாள் முதல் இந்த நாள் வரை: கவிஞர் தணிகை

start and end joining and parting away க்கான பட முடிவு

இன்று இப்போது அமர்ந்து இந்தப் பதிவை தட்டச்சு செய்து கொண்டிருக்கிற நிலைமைக்கும் 2016 ஏப்ரல் ஒன்னாம் தேதிக்கும் முன்னால் இருந்த காலத்தை இன்று பின்னோக்கி பார்க்கும்போது பெரு வியப்படைவதைத் தவிர வேறு வழி இல்லை.

இந்தக் கல்லூரியில் பல்சிகிச்சை குறைவான செலவில் கிடைக்கும் என்ற எனதொரு நண்பரின் வார்த்தையும்,எனது உள்ளூரில் இருந்த ஒரு பல் மருத்துவர் அனேகமாக எனது நினைவு சரியாக இருக்கும் எனில் ரூபாய் 200 பெற்றுக் கொண்டு உதிர்ந்துவிட்ட பல் உறை ஒன்றை பசை வைத்து ஒட்டியது இரண்டு முறையுமே உடனே ஒட்டாமல் உதிர்ந்த காரணமும். அப்போது எனது பொருளாதார நிலை இருந்த கட்டாயமும் இந்தக் கல்லூரிக்கு எனை வரத் தூண்டியது.

வந்தவனுக்கு இந்த சூழலும் சுற்றுப் புறமும் இந்தக் கல்லூரியில் மருத்துவ சிகிச்சை செய்த மாணவர்களின் நெருக்கமான மரியாதையான பேச்சு வார்த்தைகளும் வெகுவாக கவர்ந்தன.

இந்த பல் மருத்துவ சிகிச்சைக்காக ஒரு முறை செய்தித்தாளைப் பார்த்துவிட்டு அதன் விளம்பரத்தை நம்பி சென்னை எம்.ஜி.ஆர். மருத்துவக் கல்லூரிக்கு சென்ற நினைவு எல்லாம் கூட மறந்துவிட்டது... அங்கே சென்றும் கூட திருப்திகரமாக எனக்கு சிகிச்சை ஏதும் கிடைக்கவில்லை மேலும் மறுபடியும் வரச் சொல்லி விட்டார்கள் என்னால் மறுமுறையும் 352 கி.மீ தள்ளி செல்ல முடியாது என்று விட்டு விட்டேன்.

ஆனால் அப்போது திரைப்பட ஒளிப்பதிவு இயக்குனர் தில்ராஜா என்னும் செந்தில் வீட்டில் தங்கியது மட்டும் நினைவிருக்கிறது. அப்போது அவரின் தாய் உயிருடன் இருந்ததும் நினைவில் இருக்கிறது.

start and end joining and parting away க்கான பட முடிவு


இது போன்ற காரணங்கள் துரத்த  சுமார் 4 ஆண்டுகளுக்கும் முன் விசாரித்து தெரிந்து கொண்டு இங்கு வந்து சேர்ந்தேன். மருத்துவ சிகிச்சை அப்போதும் மெதுவாகத்தான் கிடைத்தது என்ற போதிலும் மிகவும் குறைவான செலவில் கிடைத்தது என்பது மறுக்க முடியாத உண்மை.

அதைப்பற்றி ஒரு பதிவை மறுபடியும் பூக்கும் வேர்ட்பிரஸ் வலைப்பூவில் பதிவேற்றியதை நகல் ஒன்றை எடுத்துக் கொண்டு சென்று காட்டினேன். அனைவரும் மகிழ்ந்தார்கள். அப்போது மேற்பார்வையாளராக இருந்த பத்ரிநாராயணன் சார் இப்போது பணி ஓய்வில் இருக்கிறார்.ஒரு மகன் வெளிநாட்டில் இருக்க மற்றொருவர் சென்னையில் வீடுகட்டுவதை மேற்பார்வை பார்த்தபடி இருக்க...அவர் என்ன சொன்னார் எனில் இவ்வளவு நீளமாக இந்தப் பதிவு இருக்க வேண்டுமா என்றார்...ஆனால் அப்போதும் இப்போதும் நிர்வாக அலுவலர் ஒன்று என இருக்கும் பாபு முரளி சார் முதல்வர் உங்கள் ஊர்க்காரர் தான் தெரியுமா என்று கேட்க அவரைச் சந்தித்தேன் அவர் அந்தப் பதிவைப் பார்த்து மகிழ்ந்தார்.

அதன் பின் தான் தெரிந்தது அவரது மகனும் எனது மகனும் 9 ஆம் வகுப்பு வரை ஒரே பள்ளியில் படித்திருக்கிறார்கள் என்பதும், மேலும் இருவருக்கும் பொதுவான நண்பர்கள் இருக்கிறார்கள் என்பதும்.

நான் எனது நிலையை விளக்கி, வேலை கிடைக்குமா எனக் கேட்டேன். அவர் என்னை முற்றிலும் புரிந்து கொண்டு கல்லூரிக்கு வாருங்கள் என என்னைப் பணியமர்த்தும் பொருட்டு ஒரு விசனையே vision ஏற்படுத்திக் கொண்டிருந்தார் என்பதை பின்னர் தெரிந்து கொண்டேன்.

எனது மகன் ப்ளஸ் டூ படித்த கடைசி நாள் தேர்வு எழுதிவிட்ட  அதே நாளில் நான் இங்கு பணியமரச் சேர்த்துக் கொண்டார்கள். மகனும் நீங்கள் கல்லூரிக்கு சென்றால் நான் படிப்பதும் சுலபமாக சிரமமில்லாமல் இருக்கும் என வாய்விட்டே சொன்னான். எனவே இனியும் இதற்கும் மேலும் தாமதிக்கக் கூடாது என நானும் முடிவெடுத்து விட்டேன்.

அப்போது அரவிந்த் சேலம் கண் மருத்துவ மனையில் எனது நண்பர்கள் குடும்பத்தின் முத்துசாமி அறக்கட்டளை வழியாக கண்புரை நீக்கும் அறுவை சிகிச்சை செய்து கொண்டும், லென்ஸ் வைத்துக் கொண்டும் வலது கண் பராமரிப்பை செய்தபடி இருந்ததால் கல்லூரியில் இருந்து பணியில் சேரச் சொல்லி அழைத்தும் ஒரு மாதம் கழித்த பின் தான் வந்து சேர்ந்து கொண்டேன்.

இப்போதும் இடது கண்ணுக்கு புரை நீக்கும் அறுவை சிகிச்சை செய்து தான் இருக்கிறேன். சொட்டு மருந்து இடும் பணி நிறைவடைய இருக்கிறது..என்றாலும் அந்த கண் புரை நீக்கும் சிகிச்சை செய்ததற்கும், இந்தக் கண் புரை நீக்கும் சிகிச்சை செய்ததற்கும், இந்த லென்ஸ்க்கும் அந்த லென்ஸ்க்கும் எத்தனை வித்தியாசம்...

  கடந்து வந்த அந்த பாதையைப் பற்றிச் சொன்னால் உங்கள் காலம் அதை அனுமதிக்குமா என்று தெரியவில்லை.

ஒரே வரி: நான் இந்தக் கல்லூரிக்கு நோயாளியாக வந்த அதே கல்லூரியில் நோயாளிகளின் குறை தீர்க்கும் பிரிவின் பொறுப்புடனும், பொது உறவு அலுவலராகவும், முகாம் போன்றவற்றை நடத்தும் பொறுப்புடனும், மேலும் இந்தக் கல்லூரியின் முன்னேற்றப் பணிகளில் பங்கு பெறுபவனாகவும் மாறி இருக்கும் இந்த நிலை....

ஒரே வரி: இந்தக் கல்லூரியில் சேர்ந்த பின் தான் ஒவ்வொரு நிமிடத்திலும் 60 விநாடிகள் இருக்கின்றன அதையும் துல்லியமாக பயன்படுத்தலாம் என்பதை காலத்தின் மேன்மையை புரிந்து கொண்டேன். உண்மையின் சக்தி என்ன என்பதையும் புரிந்து கொண்டேன்.

மகனது மேற்படிப்புக்காக சேர்ந்த எனக்கு இதனால் கிடைத்த வாய்ப்புகள் எண்ணிறந்தன... ஏன் சமுதாயத்துக்கும், கல்லூரிக்கும் கூட என்பதை என்னால் சொல்லாமல் இருக்கவே முடியாது.

அத்தனைக்கும் அடிப்படையாக எனைத் துல்லியமாக முற்றிலும் புரிந்து கொண்ட தோழமை காட்டி நட்பு பாராட்டி எனக்கு என ஒரு தனி இடத்தை ஏற்படுத்திக் கொடுத்த எனது கல்லூரியின் முதல்வர் ஜெ.பேபிஜான் அவர்களையும் இந்தக் கல்லூரி நிர்வாகத்தையும் நன்றியுடன் நெஞ்சார்ந்த நெகிழ்வுடன் பாராட்டக் கடமைப்பட்டுள்ளேன். குறிக்கோளை இலக்கை எட்டிவிட வாழ்வில் எனக்கு கிடைத்த அரிய வாய்ப்பு இது. இது வரமான கதையும் ... இயற்கை கை காட்டிய நிகழ்வும் இதில் ஏராளம்.

start and end joining and parting away க்கான பட முடிவு


கபாலீஸ்வரர் கோவில் பணிச் சேவை முடிந்ததும் இந்த இடத்தைக் கை காட்டிய இயற்கையின் இறைக்கும் எனது மௌனமான சமர்ப்பித்தல்கள்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.