Wednesday, August 23, 2023

சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்: கவிஞர் தணிகை

 சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்: கவிஞர் தணிகை



விக்கிரம் சாராபாய் உயிர் கொடுத்து உருவாக்கிய இஸ்ரோவில்,அப்துல் கலாம்,மயில்சாமி அண்ணாதுரை,சிவன்,இப்போது வீர முத்துவேல் ஆகியோர் தமிழர்கள். தமிழும் தமிழர்களும் எப்போதும் உலகை வழி நடத்துவார்கள்.


ரஷியா நட்பு நாடாக இருந்த போதும் போட்டி நாடாக சந்திரனில் தென் துருவத்தில் கால் பதிக்கும் முதல் நாடு என்ற பெருமையை ஈட்ட முடியவில்லை


இந்தியாவுக்கு அந்த வாய்ப்பு நிகழ்வதை மாலை 6.04 மணியளவில் நாம் காணப்போகிறோம். இல்லையேல் 27ஆம் தேதிக்கும் நாம் தயார்தான்.


அறிவியல் சாதனைகள் நிகழும் ஒவ்வொர் நொடியும் பிரமிப்பூட்டும் நிகழ்வுதான் அதிலும் இயற்கையின் இயற் கையின் விளையாட்டு அற்புதங்கள் உண்டு.கிரிக்கெட் போட்டியின் கடைசி பந்தின் நிகழ்வு போல.


மெய்ஞானத்திற்கும் விஞ்ஞானத்திற்கும் தொடர்பு உண்டு என்பதை நமது வாழ்வுத் தத்துவங்கள் சொல்லி நிற்பது வியப்புக்கு உரியது. சொல்லி சொல்லி மாளாதது. சந்திரன் பூமியை வெகுவாக பாதிக்கும் ஒரு துணைக் கோள். சொல்லத் தெரியாமல் அதன் பாதிப்புகளை வைத்து நமது முன்னோர் அதையும் ஒரு கிரகம் என நினைத்து நவகிரகங்களில் ஒன்றாக வைத்து வணங்கச் சொல்லி இருக்கின்றனர். பாலச்சந்திரன் என்பதும், சிவன் நிலவையும் கங்கையையும் தலையில் பிறைசூடியாக வைத்துள்ளான் என்பதும் கேள்விக்குரியதாக சிறுவர்கள் கேட்டு தெளிவு பெற வேண்டிய காலக் கட்டம்.


ஏதாவது ஒரு விடயத்தில் நமக்கு ஆர்வம் பற்று வேண்டும்... அப்படி இருந்தால் தற்கொலைகள் நிகழாது படிக்கச் சொன்ன காரணத்தால் பத்தாம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்யச் செல்வதும் அதைவிட கீழ் வகுப்பு 7 ஆம் வகுப்பு என நினைக்கிறேன், ரிமோட் கன்ட்ரோல் உடைந்து போனதால் அக்கா தங்கைக்கு பிடுங்கும் போது சண்டையில் கீழ் விழுந்து உடைந்ததால் பொறுக்க முடியாமல் தற்கொலை செய்தபடி வாழ்வை  முடித்துக் கொண்ட நிகழ்வுகளும், தந்தையும், மகனும் நீட் தேர்வுக்காக மாய்வதும் அதே தமிழகத்தில் இருந்துதான் வீர முத்துவேல் என்னும் அறிவுச் சுடரும் இன்று சந்திராயன் 3 இயக்கத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்து வீர நடை போட்டுக் கொண்டு இருக்கிறது.


பாரதி சொன்ன சேதுவை முன்னிறுத்தி பாலம் அமைப்போம் இன்னும் ஈடேறாக் கனவு

சிந்து கங்கை இணைப்பு நிகழ்ந்து காவிரி வரை தமிழ் நாடு வரை வராதாது இன்னும் கனவு


ஆனால் சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம் வெறும் 610 கோடி செலவில் ஈடேறிவிடும் உலகின் பெரும் நிகழ்வு... ஒரு சினிமாவை அதை விட அதிகம் செலவு செய்து தயாரித்து வரும் இந்த நாட்டில் இது மாபெரும் சாதனை...


எனக்கு மிகவும் மகிழ்வாக இருக்கிறது...எனவே தான் இந்த பதிவும் பகிர்வும்...சாதனையை நானும் பார்க்க அந்த நிமிடங்களுக்காக அந்த நொடிகளுக்காக இப்போதிருந்தே இல்லை இல்லை அந்த செய்தி கேள்விப்பட்ட அப்போதிருந்தே நான் தயாராக இருக்கிறேன்....நான் தயார் நீங்களும் தயார்தானே?


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை


பி.கு: இதை எல்லாம் கூட பார்க்க கொடுத்து வைக்காமல் 48 வயது இளைஞர் ஒருவர் இரு நாளுக்கு முன் மறைந்த செய்தி கேட்டேன்.அதிர்ச்சி அடைந்தேன் பெயர் : குரு நாதன். எனது தம்பி போன்றவர். அவருக்கு எனது நீங்கா அஞ்சலிகளையும் இந்த பதிவு உரித்தாக்குகிறது.

Tuesday, August 15, 2023

அடிக்காம விட்டா அப்பாவி( ஏமாளி,கோமாளி).:கவிஞர் தணிகை

 ஒன்னு கூட அடிக்காம விட்டா அப்பாவி( ஏமாளி,கோமாளி.)

10 கொசு அடிச்சா பாவி

20 கொசு அடிச்சா படு பாவி

30 கொசு அடிச்சா கொடும் பாவி


அதுக்கும் மேல அடிச்சா புண்ணியவான்



இதுக்கும் இந்திய சுதந்திர தினத்துக்கும்(76)77க்கும் எந்தவித தொடர்பும் இல்லை


செவ்வாய்க் கிழமையில் ஆகஸ்ட் 15 வந்ததால் திங்கள் கிழமையும் சேர்த்து விடுமுறை போட்டுக் கொண்டவர்கள் எல்லாம் வாழ்க...


அப்பாடா இந்திய ட்ரெயினில் இடம் கிடைத்ததே...

வடக்கு தெற்கில் வாழ்கிறது...


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை


Sunday, August 6, 2023

மூலிகை வைத்தியத்தில் பக்க விளைவு உண்டு:கவிஞர் தணிகை

 பச்சைக் கறிவேப்பிலை காலையில் உண்போரின் கவனத்திற்கு, ஒவ்வொரு உடலும் ஒரு தனி உலகம்: கவிஞர் தணிகை



தமிழருவி மணியன் அவர்களின் துணைவியார் இருதய அடைப்பு காரணமாக வெளியிட்டிருந்த காணொளியைக் கண்டுவிட்டு அதன் தொடர்பாக அடியேனும் இனி அதிகாலை வெறும் வயிற்றில் ஒரு கைப்பிடி கறிவேப்பிலை உண்பதாகக் குறிப்பிட்டு ஒரு பதிவு போட்டிருந்தேன். அதன் பின் விளைவாக தொப்பூள்...வயிற்றின் மையப்பகுதியில் சூடு தோன்றி பிரச்சனை ஆரம்பித்து விட்டது.உஷ்ண மின்னல் கீற்றுகள் அவ்வப்போது இறங்க ஆரம்பித்தன தொப்பூள் மையத்திலிருந்து ஆண் குறி வரை...எனவே முன்னதாக விழித்துக் கொண்டு அப்படி உண்பதைக்  கைவிட்டதால் இந்த சில நாட்களாக அந்த உடல் சூடு கோளாறு சொல்லாமல் கொள்ளாமல் மறைந்தது. நீர் போதாமை, இந்த நாட்களின் அதிக புவிச் சூடு போன்றவையும் காரணமாக இருப்பினும் அவற்றின் விளைவு எல்லாம் வேறு தினுசு, இது வேறு இரகம்.இதை எல்லாம் புரிந்து கொள்ள முனைவது அவசியம்.


பைபாஸ் சர்ஜரி, வால்வு, பெரும் செலவு பற்றியும், இரு சித்த மருத்துவர்கள் மூலம் துணைவியாரின் இருதயக் கோளாறு பிரச்சனையை செலவின்றி வென்று எடுத்த மகிழ்வையும் தமிழருவி மணியன் பகிர்ந்து கொண்டிருந்தார். அப்போது காலையில் கறிவேப்பிலையை ஒரு கைப்பிடி அளவு உண்பது புத்துணர்வூட்டி, நரம்புகளுக்கு புத்துணர்வு அளிக்கிறது என்று சொன்னதன் உந்துதல் பேரில் நல்லதென அடியேனும் முயன்றேன். 


ஆனால் ஒவ்வொரு உடலும்  ஒரு தனி உலகம் அதை நாம் கவனித்துக் கற்க வேண்டும்.பொதுவாக ஹோமியோ,சித்தா போன்றவற்றில் பக்க விளைவு இல்லை என்பார். ஆனால் மூலிகை வைத்தியத்தில் பக்க விளைவு உண்டு என்பதை இந்தக் கறிவேப்பிலை பரிசோனையில் இருந்து கூட நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.


மேலும் கொழுப்பு சார்ந்த தன்மை கொண்ட உடலுக்கு வேண்டுமானால் அந்த மருத்துவம் பயன்படலாம். ஆனால் அவை இல்லாத குடற் புண் போன்றவை உள்ள என் போன்றோர்க்கு எதையுமே சோதனை செய்து பார்த்து தான் பயன்படுத்த வேண்டும்.


மேலும் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை  எந்நிலையிலும் நாம் மறப்பதற்கில்லை. காந்தியம் கற்ற காலச் சூழலில் ஒரு கைப்பிடி வேப்பிலை தொடர்ந்து தினமும் சாப்பிட்டு குடற் புண் பெற்றதும் என் நினைவில் நிழலாட்டம்.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.


Friday, August 4, 2023

வியப்பென ஒருவன் காண்கிறான்,வியப்பென ஒருவன் சொல்கிறான்,வியப்பென ஒருவன் கேட்கிறான்:கவிஞர் தணிகை.

 வியப்பென ஒருவன் காண்கிறான்,வியப்பென ஒருவன் சொல்கிறான்,வியப்பென ஒருவன் கேட்கிறான்:கவிஞர் தணிகை.



செவி வழிச் செய்தியாக நேற்று காலை இரு வேறு அதிர்ச்சிகளை ஒரு நண்பர் வழியாகப் பெற்றேன்.


1. ரூ.10,500 செலவில் வீடு தேடி பிணம் எரிக்கும் எந்திரம் வந்து சேர்கிறது என்றும் இது வரை அந்த சிறு கிராமத்தில் அப்படி 3 பேரின் சவங்கள் எரிக்கப் பட்டதாகவும். அதை வாகனத்தில் கொணர்ந்து 2 மணி நேரத்தில் 2 எரிவாயு உருளைகள் எரியும் செலவில் பணி முடித்து சாம்பலை கொடுத்து விட்டுச் செல்கிறார்கள் என்றும் இது நகர்ப்புற வாழ்வில் மிகவும் சுலபமாகவும் எளிதாகவும் நடந்து முடிந்து விடுகிறது என்றும் மேற்படி செய்திகள். அதை வேண்டுமெனும் இடத்தில் வைத்து செய்து கொள்வதாகவும் பெரிதாக துர்நாற்றமோ புகையோக் கூட வருவதில்லை எனவே அக்கம் பக்கத்தார் ஆட்சேபணைகளும் இல்லை என்பதும் கொசுறுச் செய்தி... மனிதம் மனித உடலை எரிக்கும் விடயத்தில் மிக முன்னேறி விட்டது...


2. அந்த மனிதர் சமூகத்தில் மிகவும் கம்பீரமான தோற்றத்தில் வாழ்ந்தவர், நிறைய சொத்து சுகம் உண்டு. ஊரில் ஆட்சி முறைகளில் கட்சியில் கூட சொல்லத் தக்க இடம்.சொன்ன சொல்லில் உறுதியாக நிற்பார், உதவி என்று தஞ்சம் அடைவார்க்கு பெரிதும் நம்பிக்கையுடன் உதவுவார் என்றெல்லாம் கேள்வி.ஒரு நாள் பேருந்தில் செல்கையில் அவர் இறப்புச் செய்தியை சொல்லியது கட்டப்பட்டிருந்த பதாகை. ஆனால் அத்துடன் மறந்திருந்தேன்

நண்பர் கூறினார்: அது எப்படி நிகழ்ந்தது தெரியுமா? அவர் அவர் வீட்டில் வண்டி செட்டில் ட்ராக்டருடன் யுத்தம் நிகழ்த்தியிருக்கிறார். மெக்கானிக்கை வரச் சொல்லாமல் இவரே,வண்டியை ஸ்டார்ட் செய்ய அந்த வண்டி இவரது உடலை இடுப்புக்கும் கீழே பாதிக்கும் மேல் எதுவும் இல்லாமல் அரைத்து தள்ளி விட்டதாம். ஒரே முறை அவரது வீட்டிற்கு சென்றிருக்கிறேன் ஒரு கோவில் நிர்மாண குட முழுக்கு விழாவுக்கு அழைக்க நண்பர்களுடன்.


3. முகலாயப் பேரரசர் ஹுமாயூன் மரணம் பற்றி செய்தியில்1. அவரது அணிந்திருந்த அங்கியில் அவரே கால் வைத்து படிகளில் உருண்டு விழுந்து இறந்ததாகவும் சுற்றிலும் உதவியாளர்கள் இருந்தும் பிடிக்க முடியாமல் காப்பாற்ற முடியாமல் போனது என்றும்,2. ஒரு நூலகத்தில் இருந்து நிறைய புத்தகங்களை கையில் பிடித்தபடி இறாங்கிக் கொண்டிருக்கையில் தொழுகை அறிவிப்பு சத்தம் கேட்கவே அப்படியே மண்டியிட்டு அமர முயற்சி செய்து படிகளில் உருண்டு விழுந்து அடிபட்டதால் இறந்தார் என்றும் செய்திகள் உள்ளன...ஆச்சரியப்பட வைக்கும் மரணங்கள்...


வியப்பென ஒருவன் காண்கிறான், வியப்பென ஒருவன் சொல்கிறான், வியப்பென ஒருவன் கேட்கிறான்...ஆன்மா உடல் விட்டுப் பிரிதலில்தான் எத்தனை இரகம்...ஆனால் பிறப்பதென்னவோ ஒரு சிறு கண்ணுக்கும் புலப்படா அணுவிலிருந்து விந்தணுவிலிருந்து...ஒரே வழியாக...



மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை