Tuesday, February 27, 2018

எனது தொண்டு பள்ளியிலும் கல்லூரியிலும்: கவிஞர் தணிகை

எனது தொண்டு பள்ளியிலும் கல்லூரியிலும்: கவிஞர் தணிகை
உங்களுடன் என்னை சரியாக இப்போதெல்லாம் பகிர்ந்து கொள்வதேயில்லை.காரணம். வேலைப் பளு.காலம் அப்படிப்பட்டதாக ஓடிக் கொண்டிருக்கிறது. உலகெலாம் ஒரு மதுப்பிரியாவுக்காக ஊடக ஒப்பாரி ஒலிக்கப்பட்டுக் கொண்டிருக்கும்போது இது எனது பூபாளம்.

கடந்த வாரத்தில் ஒரு நாள் விருதாசம்பட்டியில் உள்ள நடுநிலைப்பள்ளிக்கு சென்று அங்கு நடைபெற்ற பாலமுருகன் கலை அறிவியல் கல்லூரியின் தேசிய சேவை மாணவர் திட்டப் பணிகளில் உரையாற்றினேன். கல்லூரி மாணவர்களும், பள்ளி மாணவர்களும், ஆசிரியப் பெருமக்களும் பெரிதும் பாராட்டினார்கள் பெரிதும் பயனுள்ள பேச்சாக அது அமைந்திருந்தது என்று மேலும் நேரம் கொடுத்துப் பேசச் சொன்னார்கள்.

இன்று கல்லூரி நிறுவனர் ஹாலில் நடைபெற்ற பல் மருத்துவர்களுக்கான சிறப்பு யோகப் பயிற்சி என்ற நிகழ்வில்  சித்த மருத்துவம் மற்றும் யோகா மாஸ்டரான டாக்டர் வெற்றி வேந்தனை கல்லூரிக்கு அழைத்து வந்து அறிமுகப்படுத்தி நிகழ்வை ஒருங்கிணைத்தேன்.

அந்த நிகழ்வில் கல்லூரியின் கலந்து கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட‌ மருத்துவர்கள் பெரிதும் பயன்பெற்றனர். துறைத்தலைவர்கள் சுரேஷ்குமார், ரீனா ரேச்சல் ஜான், மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் நிகழ்வை கல்லூரி முதல்வர் பேபிஜான் தலைமையேற்று நடத்திக் கொடுத்தார்.

டாக்டர் வெற்றி வேந்தன் மிகவும் பயனுடைய யோகப்பயிற்சியை கலந்து கொண்டிருந்த அனைத்து மருத்துவர்களுக்கும் வழங்க நிகழ்வு மிகவும் திருப்தியுடன் அமைந்திருந்தது.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.Monday, February 26, 2018

Saturday, February 24, 2018

கமல்ஹாசன் ஒன்றும் எம்.ஜி.ஆர் அல்லவே: கவிஞர் தணிகை

கமல்ஹாசன் ஒன்றும் எம்.ஜி.ஆர் அல்லவே: கவிஞர் தணிகை


Image result for jayalalitha birthday

கலாம் படித்த பள்ளிக்குள் செல்வதை மாவட்ட கல்வி நிர்வாகம் தடுத்ததும், மதுரையில் நடைபெற்ற முதல் மக்கள் நீதி மய்யம் கட்சி அறிவுப்புக் கூட்டத்திற்கு தகுந்த பாதுகாப்பளிக்கத் தவறியதும் அவர் மேல் எல்லாக் கட்சிகளுமே ஒரே குரலில் பாய்ந்து அவரைத் தாக்கிப் பிடுங்கி வருவதுமான பேச்சுகள் எனக்கு ஒரு காலத்தில் கலைஞர் கருணாநிதியின் அக்கப்போரைப் பொறுக்க மாட்டாது எம்.ஜி.ஆர் தி.மு.கவிலிருந்து வெளி வந்து அ.தி.மு.க என்ற புதுக் கட்சியை ஆரம்பித்தபோது அப்போது ஆட்சிக் கட்டில் இருந்த கருணாநிதி கொடுத்த தொல்லைகள் அளப்பரியன...ஆனால் அதை எல்லாம் தாங்கிய கட்சி வளர்ந்தது... அப்படி எல்லாம் கமல்ஹாசன் வளர வழி இல்லை போலிருக்கிறதே...நமது ஜனநாயகம் இந்தியாவில் தமிழகத்தில் அவ்வளவு வலுவிழந்து கிடக்கிறதே...

அன்று...

ஏன் பூலாவரி என்ற இடத்தில் சுகுமாறன் என்ற எம்.ஜி.ஆர் கட்சிக்காரரை கொலை செய்தார்கள்...அந்த வழக்கு நெடுநாளாக நடைபெற்று ஒன்றுமில்லாமல் போயிற்று...

இப்படி எல்லா இடங்களில் இருந்தும் வேதனைப்படுத்த வேதனைப்படுத்த வேதனைப்பட வேதனைப்பட அந்தக் கட்சி மேலும் மேலும் வளர்ந்தது...ஆனால் இன்று அதே போல.. எதிர்ப்பைத் தெரிவிக்கிறார் என்ற ஒரே காரணத்துக்காக அவரை கமலஹாசனை முடக்கிப் போடலாம் என்று அரசு ஒரு முனைப்புடன் முயல்வதாகத் தெரிவதை மேற்சொன்ன கலாம் படித்த பள்ளியில் அவர் நுழையக் கூடாது என்று தடுத்ததிலிருந்தும் அவரை கடுமையாக எதிர்த்து வசனக்கணைகளை வீசுவதும், அவரது கூட்டத்திற்கும் அவரது மேடையேற்றத்திற்கும் சரியான பாதுகாப்பளிக்காமல் வேடிக்கை பார்ப்பதுமான செயல்பாடுகளிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

எரிவாயு மானியத்தை விட்டு விடுங்களேன் எனக் கேட்கும் மோடி ஒரு இலட்சத்துக்கும் மேலான மானிய விலை ஸ்கூட்டி கொடுக்கும் ஆரம்ப விழாவை ஆரம்பிக்க சென்னை வருகிறாராம்...கலைவாணர் அரங்கத்தில் நடக்கும் அரசு விழாவில் கலந்து கொள்ளப் போகிறாராம்.

நல்லது...இன்று கட்சித் தலைவி நிரந்தர முதல்வர ஜெவுக்கு கட்சித் தலைமையலுவலகத்தில் சிலை வைத்ததும், சட்டசபையில் படம் வைத்ததும் இவர்கள் அவருக்கு செய்த நன்றிக் கடனைக் காட்டுகிறது..

ஆனால் சட்டமு, நீதியும் அவருக்கு வேறு பேர் அல்லவா சொல்கிறது...
இவை எல்லாம் எல்லாருக்கும் தெரிந்தது தானே...நீங்கள் வேறு சொல்ல வேண்டுமா என ஒரு நண்பரின் குரல் கேட்கிறது...
எனவே இத்துடன் முடித்துக் கொள்கிறேன்..

Image result for jayalalitha birthday


மேலை மேற்கத்திய ஏன் கிழக்கில் இருக்கும் தாய்லாந்து போன்ற நாடுகளில் எல்லாம் கூட வரலாற்றை, சாதனைகளை என்றும் தொடரும் வண்ணம் போற்றிப் பாதுகாப்பதை தமது தலையாய கடமையாக மக்களும் அரசும் கொண்டிருக்கிறார்கள்....பழங்கால புகழ் வாய்ந்த சிற்பங்களை , கோவில்களை, ஏன் நாட்டுக்கு நல்லது செய்த தலைவர்களின் நினைவிடங்களை எல்லாம் போற்றிப் பாதுகாக்கிறார்கள்..கலாம் படித்த பள்ளி அனைவர்க்கும் பொதுவான அரசுடைமைச் சொத்தாக மாற்றப்பட வேண்டும்..அது எவர் வந்தாலும் எப்போது வந்தாலும் பார்க்க அனுமதி அளிக்கப் பட வேண்டும்...இது போன்ற சிறு பிள்ளைத் தனமான குறுகிய நோக்குடன் தனது கட்சி தனது கருத்து எது எப்படி இருக்கிறதோ அதற்காகவே ஆள நினைக்கும் இந்தக் கட்சிகளை அப்புறப் படுத்த வேண்டியது அவசியம்....ஆனால் இன்னும் 3 வருடம் இந்தக் கட்சியும் விடாது போலிருக்கிறதே...மோடிக்கு 25 எடப்பாடிக்கு 13 என பாராளுமன்றத் தொகுதிகளைப் பிரித்துக் கொண்டு தேர்தலை சந்திப்பார்கள் போலிருக்கிறதே இவர்கள் போக்கு...ஸ்கூட்டிக்கு மான்யம் தரும் அரசு வாட்ஸ் அப்பில் வடிவேல் கேட்பது போல குவார்ட்டருக்கு என்று மானியம் தரப்  போகிறார் என்று குடி மக்கள் கேட்பது வரை விட மாட்டார்கள் போலிருக்கிறதே....

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Sunday, February 18, 2018

நாச்சியார் படை வீரன் இலை வீரா: கவிஞர் தணிகை.

நாச்சியார் படை வீரன் இலை வீரா: கவிஞர் தணிகை.

பாலாவின் நாச்சியார்:
___________________‍__‍


Related image


அறம் நயன் தாராவை விட நாச்சியார் ஜோதிகா மிகவும் நன்றாகவே நாச்சியாராக காவல் துறை ஐ.பி.எஸ் ரோலில் பொருத்தமாக பொருந்தி உள்ளார்.

இவானா என்ற பெண்ணை மையப்படுத்திய கதை. அந்த நடிகையும் நடிகை நடித்திருக்கிறார் என்று காட்டாமால் இயல்பாக அந்த கேரக்டரில் பாலா சொல்ல விரும்பிய கதாபாத்திரமாகவே நம்மிடம் நடிப்பை எக்ஸ்போஸ் செய்திருக்கிறார்.

ஜி.வி பிரகாஷ்குமார் ஒட்டவில்லை எனிலும் முயற்சி செய்திருக்கிறார் பாரட்ட வேண்டிய அளவு.

தைரியமாக குடும்பத்தோடு பார்க்கலாம் என்று சொல்லுமளவு நன்றாக வந்திருக்கிறது. தாரை தப்பட்டை என்றெல்லாம் அழுது ஊத்தி விட்டு இப்போது இந்தப் படத்தின் மூலம் மறுபடியும் பாலா எழுந்துள்ளார்.

ஒரு நல்ல போலீஸ் ஆபிசர் நினைத்தால் நல்ல காரியங்களை செய்ய முடியும் என்னும் நம்பிக்கை ஊட்டுகிறார்கள் இந்த சினிமா மூலம்...

அரசிக்கு காத்தவராயன் கணவனாக இருந்த போதும், வேறு யாரோ இந்த வயதுக்கு வராத பெண்ணை கெடுத்திருக்கிறார்கள் அது யாராக இருக்கும் எனத் தேடலை நம்மையும் சேர்த்து செய்ய வைத்து விட்டு கடைசியில் ஒரு சாமியார் வேடதாரி சாமியாரும், அதற்கு ஒரு டாக்டர் உடந்தை என்று சொல்லி குற்றப் பின்னணியைச் சொல்லி அதற்குரிய தீர்வையும் தந்துவிட்ட பாலா ஒரு நிறைவான படத்தை தந்திருப்பதாகவே சொல்லலாம்

அறம், தீரன் அந்த வரிசைக்குப் பிறகு இது ஒரு நல்ல பார்க்கும்படியான படமாக இருக்கிறது அதற்கு ஜோதிகா, ஜி.வி. பிரகாஷ் இவானா என்ற மூவர் கூட்டணி காரணமாயிருக்கிறது. பாலாவின் முடுக்கத்தில். நூற்றுக்கு 50க்கும் மேல் தாரளமாக கொடுக்கலாம். 16 பிப்ரவரியில் வெளிவந்த இந்தப் படத்தை உடனே பார்க்க வேண்டிய வாய்ப்பு கிடைத்தமைக்காக திருப்தியும் மகிழ்வும்.

படை வீரன்:
_____________


Image result for padaiveeran

இந்தப் படம் பிப்ரவரி 2ல் வெளி வந்த படம். என்ன தான் சாதிய வேறுபாடு, பகை, புகை, தீ , கொலை, அடிதடி, இருதரப்பு மோதல் என்பது பழங்காலத்தில் இருந்து வரும் கருப்பொருளாக இருந்தாலும் அது இன்னும் தொடர்வதால் இந்தப் படமும் காலத்துக்குகந்த படமாகவே இருக்கிறது என்பதை எவராலும் மறுத்து விட முடியாது.

மிக நேர்த்தியான கிராமியப் பின் புலம், எல்லாம் தேனியை அதன் சுற்று வட்டாரப் பகுதிகளுமே. காமிரா நன்றாக கதை சொல்லி இருக்கிறது. வேறு யாருமே கிடைக்காமல் கதாநாயகனாக விஜய் யேசுதாஸ் தேர்வு செய்யப்பட்டு நன்றாகவே கதைக்கு பொருத்தமான படைவீரனாகவே காட்சி அளித்து கதைக்கு வலுவூட்டியிருக்கிறார். அமிர்தா இணை சொல்லிக் கொள்ளுமளவு தமக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி இருக்கிறார்.

பாரதி ராஜா  அவருடைய பழைய கால கிழக்கே போகும் ரயில் படத்தின் மிலிட்டரி விஜயனை நினைவு படுத்துகிறார். அல்லது மண் வாசனை என்று நினைக்கிறேன்...

மற்றபடி தாழ்ந்த சாதி, உயர்ந்த சாதியாய் தம்மை நினைத்திருக்கும் கூட்டத்திற்கும் இடையே நிகழும் சாதி வெறிப் போராட்டம், அதனிடையே சொல்லப்படும் முனீஸ்வரன் மலர் காதல் மோதல், கவிதா பாரதியின் சலிக்காத வில்லத்தனம்...கடைசியில் படைவீரன் பிற அலுவல் செய்ய மாட்டான் என்ற பைபிளின் வார்த்தையின் படி தன்னை அழிக்கும் சக்திக்கு இரையாகும் அதே நேரத்தில்  அந்த ஊர்களிடையே மோதல் உருவாக அடி வேராய் இருக்கும் ஊர்த்தலைவன் உயிரையும் எடுத்துக் கொள்கிறான். காதலர் சேர்ந்தபாடில்லை வழக்கப்படியான படத்தில் இருப்பது போல. எல்லா துணைக்கேரக்டர்களும் நன்றாக இரசிக்கும்படியாக இருக்கின்றன. தனா மணி ரத்தினத்தின் உதவி இயக்குனராக இருந்தவர் தனியாக செய்திருக்கிறாராம். பாராட்டலாம்.

பாடல்களும் கேட்கும்படியாக பார்க்கும்படியாகவே இருக்கின்றன.

நூற்றுக்கு 50 வரை தாரளமாகவே கொடுக்கும்படியான பார்க்கும்படியான இந்த காலத்தின் தேவைக்கு ஏற்ற படம்.

Image result for padaiveeran


இலை:

எடுத்திருக்கிறார்கள். கவித்வமாக. ஒரு உயரமான மரத்திலிருந்து தவறி விழும் இலை காற்றில் பயணம் செய்து அதன் நிலம் அல்லது இருப்பிடம் நோக்கி வந்து சேரும் வரை என்ன என்ன நிகழ்தலுக்கு வளைவு சுளிவுகளுக்கு ஆளாகிறது என்ற கற்பனையை மனதில் வைத்து படம் பார்த்தால் இது ஒரு அருமையான அரிய படம். மிகவும் குறைவான நேரத்தில் முடிந்து விடும் படம்.

ஆந்திரத்தின் ஒரு கிராமத்திலிருந்து தெலுங்கு மட்டுமே தெரிந்த சுமார் 12 வயது 13 வயதுப் பெண் வழி தவறி சென்னையின் நகர்ப்புறத்தில் நுழைந்து  அனைவரையும் குமரகுண்டா எக்கட குமரகுண்டா எக்கட? என அனைவரையும் கேட்டு பசியுடன், பிரமிப்புடன் எல்லா கட்டடங்கள், சாலைகள் போக்குவரத்து குப்பை மேடு,  எனப் பிச்சைஎடுத்து, இடையே ஹெச் ஐ வி பாஸிடிவ் தொற்றிய ஒர் பெண் தாயாக கிடைக்க , மேலும் சில சிறுவர்களின் நட்புடன்,  இலை காற்றில் அசைந்தாடிக் கொண்டே பறந்து பயணம் செய்கிறது.


Image result for ilai movie

இடையில் ஒரு கடைக்கார நண்பன் தினமும் ஒரு பன் கொடுக்கிறார், இரவு தூங்க முற்படுகையில் போர்வை எல்லாம் போர்த்தி மனிதாபிமானம் செத்துவிடவில்லை எனக் காட்டுகிறார்கள், மற்ற 2 இடங்களில் பிச்சைக்காரராக இருந்தாலும் பெண்ணுக்கு நேரும் அவலத்திலிருந்து சமூகம் காத்து தடுக்க முடியாது, அவரவரே அவர்வரைக் காத்துக் கொள்ள வேண்டும் என்ற நிலையில் அந்த இலை வயதுக்கு வந்து விடுகிறது, துணையாக இருந்த அம்மாப் பிச்சைக்காரி அதான் ஹெச் ஐ வி பாஸிடிவ் உள்ள தாயும் இறந்து விட தனியாகவே உழல்கிறாள்...கடைசியில் அவரது கிராமத்துக்கு சென்று விடுகிறாள் எந்த சேதமும் நிகழாமல்.

மிகச் சிறிய குறும்படம் போன்ற அடர்த்தியான படம். எனக்கு தெலுங்கும் தமிழும் நன்றாகத் தெரிந்ததால் மிகவும் நன்றாக இரசிக்க முடிந்தது. மகனுக்கு கொஞ்சம் தெளிவு படுத்திட வேண்டிய அவசியம் இருந்தது. குமரகுண்டாவிலிருந்து பள்ளிப்பட்டு, புத்தூர் திருப்பதி எல்லாம் பக்கத்து ஊர்கள் தெரியும்  சென்றிருக்கிறேன் என்று அவள் சொல்கிறார்....இந்த போக்கில் ஏன் காவல்துறை எல்லாம் ரெயில்வே காவல்துறை எல்லாம் தொட்டுச் சென்ற போதும் விடை காணவில்லை காணமுடியவில்லை எனக் கதைக்களத்தை தயாரித்தாரைத்தான் சொல்ல வேண்டும். நல்ல படம் அதன் போக்கிலேயே பார்க்க வேண்டும். ஆனால் 90 சதவீதம் பேர் இதை இரசிக்க மாட்டார்கள். பொறுமை இருக்காது. ஆனால் இந்தப் படத்துக்கு ஒரு விருதை ஈட்டும், வெளி நாட்டுப் பட விழாக்களில் கலந்து பொருளும், விருதும், புகழும் ஈட்டும் எல்லாம் தகுதிகளும் உண்டு. இது வழக்கத்துக்கு மாறான வியாபார நோக்கில்லாத படம். இது போன்ற படங்களை சத்யஜித்ரே, ஷியாம் பெனகல் போன்றோர் இந்தியாவில் தயாரித்துள்ள தரத்தில் ...இது ஓவியம் போன்ற ஒரு சினிமாப் படம். இதைப் பார்க்க வேண்டும் இரசிக்கிறீர்களா இல்லையா என்பது வேறு...நூற்றுக்கு 60.

வீரா:
____

எதற்கிந்த படம் எடுத்தார்கள் என எடுத்தவரைக் கேட்க வேண்டும். கிருஷ்ணா இதே போன்ற படத்தில் நடித்து விரயமாகிக் கொண்டிருக்கிறார். ஆனால் கருணாகரனும், ஐஸ்வர்யா மோகனும் மிகவும் சிறிய அளவில் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள். அதே போல இராதா இரவியும் இராமய்யாவும்.
Image result for veera tamil movie


சரண் தீப் ஒரு மாபெரும் வில்லனாக வரும் காலத்தில் உலா வர வாய்ப்பிருக்கிறது. அதற்கு அவர் உயரமும் உடல் வாகும் அடிப்படை.நன்றாக நினைவில் நிற்கிறார்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.


Thursday, February 15, 2018

முபீன் சாதிகாவின் உளம் எனும் குமிழி: நூல் மதிப்புரை: கவிஞர் தணிகை

முபீன் சாதிகாவின் உளம் எனும் குமிழி: நூல் மதிப்புரை: கவிஞர் தணிகை

Image result for mubeen sadhikaImage result for mubeen sadhika


முபீன் சாதிகா 2017 டிசம்பரில் ஒரு நூலை அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம் சென்னை 11 என்ற இடத்திலிருந்து தயாரித்து வெளிக் கொணர்ந்திருக்கிறார். நூலின் விலை 150. பக்கம் 176. மிகவும் நல்ல தரத்துடன் நூல் தயாரிக்கப்பட்டுள்ளது.

எல்லாம் இணையமயம் எல்லாம் மின் ஊடகம் மின்னஞ்சல் மின் புத்தகம் என்று சென்று கொண்டிருக்கும் காலப் பயணத்தில் இப்படி நூலை செய்து வெளியிடுவது எல்லாம் எவ்வளவு கடினமான முயற்சி என்பதை என் போன்றவர்களிடம் கேட்டறிந்தால்தான் புரிந்து கொள்ள முடியும்.

இது அவரது 3வது நூல் என்கிறார், அனேகமாக 4 வதாகவும் இருக்கலம். இவர் ஒரு ஆய்வாளர். தமிழின் பால் பற்றுக் கொண்ட பெண்மணி. தமிழ் மொழியில் ஆர்வம் கொண்டு இப்போது கூட சென்னையில் நடந்த டெல்யூஜ் என்ற மாநாட்டிற்கு வெளி நாட்டு அறிஞர்கள் எல்லாம் வந்து கலந்து கொண்டு ஆய்வறிக்கைகள் கொடுத்ததை கவனிக்க கலந்து கொண்டிருந்தார்.

எல்லாவற்றையும் விட நான் மதிக்கும் திருவில்லிபுத்தூர் என்.ரத்தினவேல் அய்யா அவர்களின் நன் மதிப்பை பெற்றுள்ளார். எனவே இவரைக் குறைத்து மதிப்பிட முடியாது.

மிகுந்த வேலைப்பளுவுக்கிடையே இந்த நூலைப் படித்து விட்டு உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற அவசியத்தின்பாற்பட்டே நினைத்த இந்த விடியற்காலையில் விடியாத காலையில் இதைப்பற்றி சில கருத்துகள் சொல்லத் துணிகிறேன்.

புள் போலும் இறையாய்
பூ அன்ன அருவாய்
ஊன் நிகர் திருவாய்
மால் ஒத்த மதியாய்

என்ற வரிகள் இவரது மேதமையை கவிதா விலாசத்தை வெளிப்படுத்துகிறது மேலும் உருவகம் நன்றாக இவருக்கு வருகிறது.

நான் இலக்கியம் பல் வேறு மொழி இலக்கியம் உட்பட நிறைய கடந்து வந்துள்ளேன் கடந்து வருகிறேன். லா.ச.ராமமிர்தம், , மௌனி போன்ற கட்டவிழக் கடினாமாய் இருக்கும் எழுத்துகளுடனும், டாக்டர்,மு.வ, அறிஞர் அண்ணா, போன்ற வறட்சியான எழுத்துகளுடனும் கண்ணதாசன், போன்ற எளிமையான எழுத்துகளுடனும், புதுமைப்பித்தன் , ஜெயகாந்தன் உட்பட மிகவும் கூர்மையான எழுத்துகளுடனும் இன்றைய ஜெயமோகன் வரை, சரித்திர எழுத்துகள் படைத்த கல்கி, சாண்டில்யன், கோவி, அகிலன்,போன்ற எழுத்துகளம் கண்டவர்கள் , சுஜாதா போன்ற மாபெரும் எழுத்தாளர் வரை  இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் கவிதை என்று சொன்னால் பாரதி பாரதி தாசன் பட்டுக்கோட்டை இன்றைய வைரமுத்து, மேத்தா, ரகுமான், இன்குலாப்,தமிழ் இலக்கியப்பாடல்களில் வலம் வரும் திருவள்ளுவர், கம்பர், இப்படி பலரையும் சொல்லிக் கொண்டே போகலாம்...எல்லாவற்றிலும் ஏதாவது ஒரு நயம் உண்டு. அவரவர்க்குரிய முத்திரை உண்டு. இவர்கள் சிலருடன் கலந்து மேடைகளில் பங்கேற்ற அனுபவமும் எனக்குண்டு.

என்னடா உளம் எனும் குமிழி பற்றி சொல்லாமல் உங்களைப்பற்றி சொல்ல இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டிருக்கிறாரே என்று உங்களுக்குத் தோன்றக்கூடும்.

நிறைய தலைப்புகளில் நிறைய கவிதைகள் நெய்திருக்கிறார். ஆனால் ஒரு முறை படித்தால் இதை உணர முடியாது. ஒற்றை மேகமாய் இவரும் இவரது எழுத்துகளும் தனியாக எளிதில் அவிழ்க்க முடியா முடிச்சிட்டுக் கொண்டு அலைந்து திரிகின்றன சாதாரணமாக பிடிக்க முடியாமல். நெடுந் தொடர் வாக்கியங்களை மிகுதியாக பயன்படுத்தி இருக்கிறார்.


Image result for mubeen sadhika

புத்தகத்தின் பின் பக்கம் பாதியளவிலிருந்து அதாவது நூலை இருபகுதியாக்கினல் இரண்டாம் பகுதியில் இடம்பெற்ற கவிதைகள் சுலபமாக இருக்கின்றன இவற்றை முன்பகுதியில் வைத்திருந்தால் மேலும் நூல் சுவை பெற்றிருக்கும்

மேலும் நிறைய பக்கங்கள் காலியாக இடைவெளியுடன் இருப்பதை சில நவீன ஓவியம் கொண்டு நிரப்பி இருக்கலாம் அது புத்தகத்தை மேலும் மெருகூட்டியிருக்கும். இது எல்லாம் தயாரிப்பு பிரிவில் வருபவை. எல்லாம் வெறும் எழுத்துக் களமாகவே இருக்கின்றன. கவிதை கட்டுக்குள் அடங்காதது...அதற்கு இலக்கணம் என்றெல்லாம் அறுதியிட்டு சொல்லுமளவு அது அடங்காமல் வளர்ந்தபடி இருக்கிறது. சொல்லியும் சொல்லாமலும் அது உணர்வலைகளை படிப்பாரிடை கிளர்த்தி அவரை அந்த கவிஞரின் சுகானுபவத்துக்கு முடிந்த அளவு கொண்டு சேர்க்க முயல்வதாய் இருக்க வேண்டும்...

ஒரு
நல்ல கவிதையின்
படிக வரிகள்

மனதை விட்டகலாது

ஒரு சிறந்த விதை
மண்ணுக்குள் மக்காது...

இவர் கொண்டிருக்கும் அகமென்பதின் உள்ளே ஏதுமற்ற நிலையில் மோனம் நிலவுவதாகக் கொள்ளலாம் என்று அட்டையின் வெளிப்புறத்தில் சொல்லப்பட்டிருப்பது போல...

உளம் எனும் குமிழி

ரமண மஹரிசி சொல்லியது போல‌

நினைவு என்ற ஒன்ற நீக்கிப் பார்க்கின்ற போது மனம் என்ற ஒன்று இல்லை என்ற தத்துவப் பொருளுக்கு உண்மை நிலைக்கு கட்டியம் கூறுகிறது.

ஆனால் இவரது கவிதையின் உள்ளகம் என்பது பெரும் அமைதியை நிரப்பிக் கொண்டிருக்கிறது என்று இவர் சொல்வது போல் தோன்றவில்லை...ஆங்காங்கே திமிறி வெளியேறத் துடித்து ஒரு இடத்துக்குள் அடைபடுவதாகவே இருக்கிறது...அது பிரவாகமாக கட்டுடைத்து வெளியே பொங்கிப் பாயும், சீறி எழும் ஒரு காட்டாற்று வெள்ளமாக புயலாக மாறி புலைத்தனங்களை அடித்துச் செல்வதாக இருக்க வேண்டும் இனி...

பொதுவாகவே கவிதை என்றாலும் இலக்கியம் என்றாலும் இரு கூறுகள்: அவை புறமாக இருந்தாலும் அகமாக இருந்தாலும்
1. கலை கலைக்காகவே என்னும் கட்சி கொண்ட படைப்பாளிகள்
2. கலை மக்களுக்காகவே என்னும் புரட்சி மனப்பாங்கு கொண்ட படைப்பின் கருவிகள்

இவர் எந்தப் பக்கம் இருக்க வேண்டும் என்ற வரையறைகளை இப்போதே முடிவு செய்து கொள்வது மிகவும் பண்பட்ட எதிர்காலத்தில் இவருக்கு மேலும் படைப்பின் ஆற்றலைப் பெருக்க காலப் பிரளய ஓட்டத்தில் இவரும் ஒரு சிறு கல் தடயமாக இருக்க மாறிக் கொள்ள மாற்றிக் கொள்ள சமுதாய நெருடல்களை, அவலங்களை மாற்றிச் செல்ல....உறுதுணையாக இருக்கும்.இருக்கட்டும்

எவ்வளவு எழுதுகிறோம் என்பது முக்கியமல்ல...என்பதை மௌனி போன்ற சில சிறுகதைகளை எழுதிவிட்டு சிறுகதை இலக்கியம் என்றால் இவர் பேரை விட்டு விடாமல் இடம் பெறச் செய்தல் போல...

இந்த ஆண்டு சாகித்ய அகாடமி பெற்ற இன்குலாப் போல‌
மிகவும் குறைவாக எழுதினாலும்

நிறைவாக நீண்ட நாள் பெயர் வளர‌

வாழ்த்துகள் முபீன் சாதிகா

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.அறிவே இல்லையாடா? இப்படி பண்ணித் தொலைக்கிறீங்களேடா? கவிஞர் தணிகை

https://youtu.be/2hG7xdo-ofs

அறிவே இல்லையாடா? இப்படி பண்ணித் தொலைக்கிறீங்களேடா? கவிஞர் தணிகை

பிரபஞ்சத்தில் பூமியைத் தவிர வேறெங்கும் உயிர்கள் கண்டறியப்படவில்லை.
மனந்திறந்து பேசலாம் வாங்க...

பிரேம்குமார் என்ற வாகனப் பொறியியல் படிக்கும் ஒரு கல்லூரி மாணவர் நேற்று கோவை சார்ந்த பகுதியில் பிப்ரவரி 14 அன்றே அதாவது காதலர் தினம் என்று சொல்லிக் கொள்ளும் தினத்திலேயே கல்லூரி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்கின்றன கேள்விப்படும் செய்திகள். அவரின் சொந்த ஊர் அல்லது பெற்றோர் இருக்கும் ஊர் : ஒசூர்.

அவரின் வயது சுமார் 20.

இந்த நாட்டின் முக்கியப் பிரச்சனை பெருகி வரும் மக்கள் பெருக்கமல்ல வீரியமற்ற மக்கள் பெருக்கமே. எதற்கு எப்படி போராடுவது என்பதெல்லாம் தெரியாததே.

நீலத் திமிங்கலம் ஒன்றைத் தவிர வேறு எந்த உயிருமே மனிதர் தவிர தற்கொலை செய்து கொள்வதில்லையாமே...

Image result for no suicides further more in our universe

குடி நீர்ப் பிரச்ச்னை, குடி நீர் வியாபாரம், குடி நீர் திருட்டு
மின்சாரப் பிரச்சனை, அவை சார்ந்த உற்பத்தி விநியோகம்
தகவல் தொடர்பு அவை சார்ந்த ஊடகம் மற்றும் அதன் சுரண்டல்
ஆட்சி, அரசு, கட்சிகள், அதிகாரம் அவை சார்ந்த இலஞ்சம் ஊழல்
கல்வி மருத்துவம் தனியார் மயம் அவை சார்ந்த பிரச்சனைகள்
தேர்தல் , தேர்தல் ஆணையம், அவற்றின் குளறுபடிகள்
சட்டம், நீதி, நிர்வாகம் அவை சார்ந்த சார்புடமை
போக்குவரத்து, ரயில்வே, விமானப் போக்குவரத்து அவை சார்ந்த பிரச்சனைகள், வேலை வாய்ப்பின்மை, அரசுப் பணிகளின் சேவை ஒழுங்கின்மை, சாதி மதக் கட்சிகளின் குளறுபடிகள்....
சினிமா, தொலைக்காட்சி, பத்திரிகை முன்பே சொன்ன ஊடக விளைவுகள்
இப்படி கோடிக்கணக்கான பிரச்சனைகள் நாட்டை , வீட்டை உலுக்கி எடுத்து வருகையில் இதை எல்லாம் புறம் தள்ளி விட்டு பயந்து கொண்டு போய்விட்டாயா? வெறுத்து வேரறுத்துக் கொண்டாயா? வாழ்வே போராட்டக் களம்தானே.போராடுவது ஒன்றுதானே நமக்கு எல்லாம் கிடைத்த வரம்...

எவளோ ஒருத்தி அவள் உனக்கு நீ நினைத்தபடி செயல்படவில்லை என உயிரை மாய்த்துக் கொண்ட சிறுவனே, நீ கொஞ்சமும் யோசனை செய்தாயா இதன் விளைவெலாம் எப்படி இருக்குமென...

பெற்றோரும் உனது பிரிவில் படிக்கும் அத்தனை மாணவர்களும் உனது பிணம் கிடக்கும் மரணப் பிரேரணை அறிக்கையை உனது உடலை கூறிட்டுப் பார்த்த பின் வாங்கக் கிடக்கிறார்கள். அரசு மருத்துவர்களுக்கும், அரசு மருத்துவமனைக்கும் அது மற்றொரு உடல். பேசாமல் அந்த உடலைக் கூட அந்தப் பெற்றோர் மருத்துவத் துறைக்கே தானம் தந்துவிடுவது கூட பயனுடையது...அப்படியாவது அது சமூகத்துக்கு பயன்படட்டுமே...சரி அது அவர்கள் பெற்றவர் விருப்பம்..

காவல்துறை தலைவலியுடன் கல்லூரி நிர்வாகத்தை எல்லாக் கோணங்களிலிருந்தும் குடைந்து எடுத்துக் கொண்டிருக்கிறது. கல்லூரி நிர்வாகம் பயில வரும் ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு காவல்காரரை 24 மணி நேரமும் அவர் கழிப்பறையில் இருக்கும்போதும் தனிமையில் ஓய்வாக  தனது அறையில் இருக்கும்போது காத்து நிற்க முடியாது..

இவன் இப்படி எல்லாம் செய்து கொள்வான் என மின்விசிறி அமைக்காமல் அறை இருக்காது, கயிறு கட்டி துணி காயவைப்பதை அனுமதிக்கமல் இருக்க முடியாது, படுக்க மாணவர்களுக்கு இரும்புக் கட்டில் தராமலும் இருக்க முடியாது...விபத்து எப்போதாவது நிகழ்கிறதே என போக்குவரத்தை, வாழ்வின் போக்கை மாற்றவும் முடியாது, நிறுத்திக் கொள்ளவும் முடியது. என்றாலும் இது ஒரு சமூக அவலம். நாட்டின் வீட்டின் நட்டம் உயிர் உள்ள ஒவ்வொருவருமே அவரவரின் மதிப்பை உணர்ந்தே ஆக வேண்டும்....அப்படி உணர்ந்து விட்டால் நீ உன்னதங்கள் செய்து காட்ட முடியும் மற்றவர்க்கும் வழி காட்ட முடியும்.

உனது உடலுடன் உனது பெற்றோர் இருப்பிடம் செல்லும் வரை அந்த 53 மாணவர்களும் சரியாக சாப்பிடாமல், சரியாக தூங்காமல் உனது உடல் அடக்கம் அல்லது எரியூட்டப்படு முடிக்கும் வரை அந்த உணர்விலிருந்து வெளி வர முடியாமல் இருக்கிறார்கள்.

எத்தனையோ ஏழை மாணவர்களுக்கு முக்கியமான செலவு செய்ய முடியாமல் அவர்கள் பெற்றோர்  இருந்தும் கூட உனது இறுதிச் செலவுக்கு அவர்களுக்கு கொடுத்து உதவி கடன் படுகிறார்கள்

அப்படி என்னடா கண்டாய் அவளிடம்?

வெளித் தோற்றம், கர்ப்பப் பை, சூல் கொள்ளும் இடம், இவை போன்ற சில பரிமாற்றம் அன்றி பெண்களுக்கும் உனக்கும் இருக்கும் உறுப்புகளும் செயல்பாடுகளும் ஒன்றுதாம்.

இராமலிங்கர் சொல்வது போல‌

அவளுள்ளும் மலம், நிண நீர், மூத்திரம், சளி, எலும்பு, இரத்தம், கண் பீளை எல்லாம் உண்டு உனக்கிருப்பது போலவே...பெண் எனப்படுவது அதிசய பிறப்பெல்லாம் இல்லை, அதுவும் ஒரு தாயிடம் இருந்து இரு கால்வழியே மரண அவஸ்தைக்கிடையே பிறந்து மண்ணில் வீழ்வதுதான், அதற்கும் அதன் பெற்றோர்களின் ஜீன்கள் உண்டு...அவை ஏதோ வேறு கிரகத்திலிருந்தெல்லாம் வந்து வீழவும் இல்லை, யேசு காப்பியத்தில்  சொல்வது போல உயிர்த்தெழுதல் எல்லாம் இல்லை

நினைவு என்ற ஒன்றைப் பிரித்துப் பார்க்கும்போது மனம் என்ற ஒன்றே இல்லை. இரமண மஹரிசி..

அப்படி என்னடா அவசரம்?


Image result for no suicides further more in our universe

ஒரு வேளை நீ ஏமாலி படம் பார்த்தவனாய் இருப்பாயோ? அதில் கூட அந்தப் பெண் இன்னும் இரண்டு நாளில் அவனுக்கு நல்ல செய்தி சொல்வதாகத் தானே சொல்லக் கூடும் என்றுதானே சொல்லி இருக்கிறார்கள்...

ஒரே நாளில் உலக பிரபலம் அடைந்த பிரியா பிராகாஷ் வாரியரின் ஒரு ஆதர் லவ் படம் பார்த்து விட்டாயோ? அதனால் வாழ்வை முடித்துக் கொள்ளலாம் என முடித்துக் கொண்டாயோ?

ஒரு புருவச் சுழிப்பு, ஒரு கண் அடித்தல் அவ்வளவுதானே வாழ்வு உலகெலாம்...

மதர் தெரசா இப்படி எல்லாம் நினைத்திருந்தால் கோடிக்கணக்கான மக்களுக்கு சேவை புரிந்து செயின்ட் என்று வரலாற்றில் இடம் பிடித்திருக்க முடியாது

காந்தி இப்படி எல்லாம் நினைத்திருந்தால் மகாத்மா ஆகி இருக்க முடியாது...

நான் மானிடத்தில் அதிக பட்சம் தொட்ட இருவரை மட்டுமே தொட்டிருக்கிறேன்

போடா நீயும் உன் வாழ்வும்...
பெண்ணுக்காக சாவதிலும் ஒரு அர்த்தம் இருக்க வேண்டுமல்லவா?
இந்தச் செய்தி நான் கேள்விப்பட்ட மறு நொடி சொன்னேன் காதலா என்று இல்லை தெரியவில்லை...வகுப்பில் சோர்ந்திருந்தவனை, மாணவர்கள் ஏன் இப்படி எனக் கேட்டிருக்கிறார்கள், சற்று ஓய்வெடுக்க வேண்டும் விடுதி அறைக்கு செல்வதாகச் சொல்லி இருக்கிறான், அவனது நண்பர்களும் அவனுடன் வரக் கேட்டிருக்கிறார்கள். வேண்டாம் வேண்டாம், துறைத் தலைவர் திட்டுவார், நீங்கள் வகுப்பிலேயே இருங்கள் எனக்காக நீங்கள் ஏன் வகுப்பை விட்டு வருகிறேன் எனச் சொல்லி விட்டு, அறைக்குச் சென்று அதன் பின் அவர்களின் முக்கிய நண்பர்களுக்கு எல்லாம் சாரி  என மன்னிப்பு செய்தி அனுப்பி விட்டு மரணித்திருக்கிறான்.

இப்போது வகுப்பே நடக்காமல் அவனுடைய உடல் இறுதி வரை மாணவர்கள் எல்லாம் பின் தொடர இருக்கிறார்கள்...

எனது கோணம் எல்லாம் அவனே யாருமே வேண்டாம் எனப் புறக்கணித்துவிட்டு சென்று விட்டபோது அவனுடைய உடலுடன் ஏண்டா நீங்க எல்லாம் சென்று கஷ்டத்தை அனுபவிக்கிறீர்கள், போங்கடா போய் வேலையைப் பாருங்கடா, இது போன்ற தவறான முன்னுதாரணத்தை எவருமே எப்போதுமே வழி மொழியாதீர், பின் தொடராதீர் என்று சொல்லியும்

அவர்கள் இவ்வளவு பழகிய பின் அதாவது 2 வருடமாகத் தெரிந்து பழகிய (உண்மையில் தெரியாமல் பழகியிருக்கிறார் என்று சொல்வதும் பொருந்தும்) நண்பனுக்கு கடைசியாக செய்யும் அஞ்சலி, கடைசி வரை இருக்க வேண்டிய சந்தர்ப்பம் என்று எல்லாம் சொல்கிறார்கள்....அவனுக்கு அவன் உடலுக்கு உயிரற்ற அந்த சடலத்துக்கு அதெல்லாம் தெரியப்போகிறதா என்னடா?

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.


Wednesday, February 14, 2018

ஆணவம் அடியோடு அழிந்த காதை: கவிஞர் தணிகை

ஆணவம் அடியோடு அழிந்த காதை: கவிஞர் தணிகை
Image result for sivarathri nandanar


இதுவும் சிவ ராத்திரி அன்று நடந்த திருவிளையாடல்தான். ஒரு ரகசிய வெற்றியின் உண்மைச் சம்பவம்தான். வாழும் இயற்கை வழித்தடமே கடவுள் என்பதுதான், கர்ம யோகத்தில் இருப்பார் கடவுளைக் கூட கோவில் சென்று கும்பிட வேண்டிய அவசியமில்லை என்பதுதான்.

இராஜராஜன் வழக்கப்படி நடைப்பயிற்சி முடித்து விட்டு எப்போதும் அமரும் முனியப்பன் கோவிலில் சென்று தனித்துவ தியானம் செய்ய முயன்றான். அன்று செவ்வாய்க் கிழமையாதலால் பெண்களும் சிறுவர்களும் இரண்டு நாய்களும் கோவில் படி ஏறி வந்து முனியப்பனை பார்த்து பேட்டி காண முற்பட்டன...ஒரு வயதான சிவப்பு சேலை அணிந்த முதியவள் இருக்குமிடமே தெரியாமல் ஒரு ஓரமாய் அமர்ந்திருந்ததை இராஜ இராஜன் கொஞ்ச நேரம் கழித்துதான் பார்த்தார். இந்த முதியவளை இவர் இங்கு பார்ப்பது இரண்டாம் முறை. அந்திமக் காலம் இவர் இந்தக் கோவிலில் வந்து இருந்து தனது காலத்தை முடிக்கப் பார்க்கிறார் என்று தோன்றியது அவருக்கு. இது போல அங்கு எவருமே வந்து இருந்ததில்லை. அந்தப் பகுதியிலேயே இயற்கை சூழ் மிக உயரமான இடத்தில் இருக்கும் சீமாட்டுக்கல் முனியப்ப சாமி கோவில் அது. அது தோன்றிய பின் அங்கு நிறைய கோயில்கள் மாரியம்மன், கபாலீஸ்வரர் எனத் தோன்றிவிட்டன‌... நாய்களும், சிறுவர், மற்றும் பெண்களும் தங்களது பிரார்த்தனையை முடித்து விட்டு சென்று விட்டனர்.ஆனாலும் இராஜ இராஜனுக்கு மன ஒருமிப்பு நிகழவில்லை

சரி என வழக்கம் போல வீடு திரும்ப முற்பட்டார். போகாதே என்று ஒரு உள்குரல்.நடைப்பயிற்சி ஆரம்பிக்கும்போதே யோகக் கிருஷ்ணன்  இராஜராஜனின் நண்பர்
கூப்பிட்டார், காதில் விழாதது போல இராஜராஜன் பல அடிகள் நடந்த பின்னும் யோகக் கிருஷ்ணனின் குரல் பெயர் சொல்லியே இரண்டு முறை அழைக்க , இனியும் நின்று திரும்பிப் பார்க்காமல் போவது அழகல்ல என, திரும்பி வந்தார், கபாலீஸ்வரர் கோவிலிலிருந்து யோகக் கிருஷ்ணனன் தாடியும் காவியும் வெளிப்பார்வைக்கு சாமியார் ஆனால் கெமிகல் கம்பெனி முதலாளி வெளி வந்து இன்று 7 மணி வரை பிரதோச நேரம் முடிந்ததும் நாலு கால வேள்வி இருக்கிறது, நீங்கள் வரணும், பேசணும், ஜட்ஜும் நீங்களும் தான் பேசவேண்டும் என்றார்.

என்ன பேசுவது? என்றார் இராஜராஜன்,
என்னைத்தான் திட்டுங்களேன் என்றார் யோகக் கிருஷ்ணன்
அதுதான் நேரிலேயே திட்டுகிறேனே , அது போதாதா என்றார் இராஜராஜன்.

அதற்குத்தான் போகாதே என்று உள் உணர்வின் குரல் எச்சரிக்கிறதோ என்ற நிலையில் அதுதான் நாம் ஏற்கெனவே முடிவு செய்தாகிவிட்டதே என வழக்கம்போல அருகிலிருந்த புதுரெட்டியூர் மாரியம்மன் கோவில் வழி சென்று குறுக்கு வழியில் முட்களிடை காபாலீஸ்வரர் கோவில் வாசல் வழியே வீடு வரும் சாலைக்கு வர முற்பட்டார்.

Image result for karma yoga


மஹா சிவராத்திரியை முன்னிட்டு கூத்து, விழா என பந்தல் போடப்பட்டிருந்தது கபாலீஸ்வரர் கோவில் வாசலில். பார்த்துக் கொண்டே வாசலில் இவர் வெளியேறவும் தேவரசர் வெண்ணிற வேட்டி சட்டையுடன் கோவில் பந்தலுக்குள் வரவும் சரியாக அமைந்திருந்தது. ஓ. அதுதான் நம்மை போகாதே என்று தடுத்ததோ? என தன்னிலை உணர்ந்து கொண்டார் இராஜராஜன்.

இவரை தேவரசரும் பார்த்தார், அவரை இராஜராஜனும் பார்த்தார். இருவருமே பேசிக் கொள்ளவில்லை. தேவரசரின் மனைவி பின்னால் வந்து கொண்டிருந்தார் எனவே அவரை திரும்பி பார்த்தபடி தேவரசர் உள் நுழைந்தார் இராஜராஜன் வெளியேறினார்.

நினைவு அலைக்கழித்தது. தேவரசர் அந்த மேட்டூர் மாநகரிலேயே மாபெரும் பள்ளியின் முதல்வர், தாளாளர்ஏன் ஒரு அறக்கட்டளையின் உறுப்பினர் கூட ஆகிவிட்டார் என்று செய்தி. முன்னால் இருந்த கணபதியாரை சரியில்லை என இவர் வந்தார். சுமார் 4000 மாணவ மாணவியர்க்கு சென்று சேர வேண்டிய அறிவுச் செறிவு நிகழ்வைத் தடுத்து விட்டாயே நீயெல்லாம் கபாலீஸ்வரரை வணங்க வந்துள்ளாயே? உனது வேண்டுதல் நிறைவேறுமா?

பாவிகளை இரட்சிக்கவே வந்தேன் என கிறித்தவத்தில் யேசு   வெளிப்படையாகவே சொல்கிறார் . ஆனால் இந்து மதக் கோவில் அப்படி அல்லவே!...ஒரு வேளை இந்த செயல்பாட்டையும் அப்படி புரிந்து கொள்ளலாம்.

இந்த மூலவர், அதைச் சுற்றி உள்ள அத்தனை கற்சிலைகள், நாலாபுறம் உள்ள அஷ்டலிங்க பிரதிகள் யாவற்றையும் நீ வணங்க வந்துள்ளாயே அவை எல்லாம் அந்த சாமியார் கிருஷ்ணன் செய்தது என்று நினைத்தாயா? இல்லை அந்த கர்விக்கு அந்த வாய்ப்பு என்னதான் செலவு செய்திருந்தாலும் 3 முறை முயன்ற போதும் அவர் செய்யச் சொன்ன போது அந்த  லிங்க மூர்த்தி பின்னப்பட்டன, கோடு விரிசல் விழுந்தன, சரியாக செய்ய முடியாமல் போயின..

கடைசியில் இராஜராஜன் கேட்டுக் கொண்டபடி எல்லாரும் செய்ததால்தாம் எல்லா சிலைகளுமே வடிவம் பெற்றன வந்தமர்ந்தன...அது ஒரு நெடுங்காதை . இராஜராஜன் 18 மாதங்கள் படாத பாடு பட்டார் அந்த கோவிலின் வடிவமைப்பிற்காக. யோகக் கிருஷ்ணன் என்னதான் மூன்றில் ஒரு பங்கு பணத்தை தனது பங்காக போட்டிருந்தாலும், அந்தக் கோவில் வடிவமைய பொருளாளராக மட்டுமில்லாமல் செயல்பாடுகள், ஒருங்கிணைப்பு, கூட்டம் கூட்டுதல், வசூல், அரசு அனுமதி, எல்லாவற்றையும் ஆவணப்படுத்தல் போன்று எல்லாப் பணிகளையும் இவரே செய்ய வேண்டுமளவு செயலாளர் ஒரு எழுதப் படிக்கத் தெரியாதவர்.

அவருக்கு பாக்கி என்பதை பக்கி என்றுதான் எழுதத் தெரியும் மேலும் அவரும் இந்தக் யோகக் கிருஷ்ணனும் அறமல்லா வழிகளில் அந்தக் கோவில் உருவாவதற்குள் அடித்த கூத்து கொஞ்ச நஞ்சமல்ல...அத்தனையும் பொறுத்துக் கொண்டு வேல், மாது , முத்து மாணிக்கம், இரத்தினம் , பச்சை, வெங்கி ஆகியோர் கை கொடுக்க இராஜராஜன் எடுத்த பணியை முடித்தே விட்டார்.
Image result for karma yoga


மிகவும் கோவில் உருவாக பங்காற்றிய கண்ணாடிக்கார கோவிந்தனும், யோகக் கிருஷ்ணனின் மனைவியும் கூட கோவில் குட முழுக்கு நடத்த போதிய அளவு பணம் சேரவில்லை எனில், வட்டிக்கு கொடுக்கிறோம், வாங்கி நடத்துங்கள் வசூல் ஆனதும் வட்டி போட்டு கொடுத்து விடுங்கள் என்றெல்லாம் கேட்டார்கள். இது என்ன கோவில் பணியா? வட்டிகடையா? என்று தெரியாமல்...

ஒவ்வொரு கட்டத்திலும் நிறைய சோதனைகள், யோகக் கிருஷ்ணனின் தலைக்கன லீலைகள் கொஞ்சம் நஞ்சமல்ல...அத்தனையும் தாக்குப்பிடித்து அவரை நேருக்கு நேராகவே கடிந்து கொண்டு, வாராந்திர கூட்டத்தில் வைத்து பொதுவாகவே மிரட்டி அமர வைத்து...இப்படி எல்லாத் தரப்பு யுக்தி, முயற்சி, உழைப்பு ஆகிய எல்லாவற்றையும் கையாண்டு  3 வழிகளில் நடந்த வரவு செலவுகளை முறைப்படுத்தி குடமுழுக்கு முடிந்த கையுடன் கணக்கு வழக்கை சரியாக ஆவணப்படுத்தி முடித்துக் கொடுத்து விட்டு இனி கோவில் உருவாக சேவை செய்தாருக்கு ஒரு கல்வெட்டு அவசியம் செய்ய வேண்டும், இல்லாவிட்டால் இனி கோவிலுக்கு வரமாட்டேன் கோபுர தரிசனம்  கோடி புண்ணியம் என யார் வந்து அழைத்தாலும் மறுத்து ஆனாலும் வெறுக்காமல் இராஜ இராஜன் இருந்து வருகிறார். சிறிதும் வருத்தமில்லாமலே. ஆனால் அந்த கோவில் வழியேதான் தினமும் நடைப் பயிற்சியும் மேற் கொள்கிறார்.
நான் கும்பிடவேண்டிய தேவையுமில்லை. அப்படியே கும்பிட்டாலும் வெளியே இருந்து கும்பிட்டாலே போதும்...என‌


ஆனால் இவை எல்லாம் தேவரசருக்கு தெரிய வாய்ப்பில்லை. தேவரசரைப் பொறுத்தவரை இராஜராஜன் ஒரு பொது மக்கள் நல்லுறவு அலுவலர் ஒரு கல்லூரியின் சார்பாக அவரது பள்ளிக்கு முகாம் நடத்தி பள்ளிப் பிள்ளைகளுக்கு நன்மை செய்ய முயன்றவர். உள்ளூர்க்காரர். இவரைத் காரணமின்றி ஏதோ தவறாகப் புரிந்து கொண்டு வெளி நாட்டு மாணவர்களும், பெரிய பல்கலைக்கழகத்தின் 3 கல்லூரி பிரதிநிதிகளாக வந்த சுமார் 30 பேரை 3 ஆம் நாள் தமது பள்ளியில் முக்கியமான அறிவு சார் செய்திகளை சென்று அடைய விடாமல் தடுத்து விட்டார்.  அவர் தாம் தம் மனவியுடன் இப்போது கபாலீஸ்வரர் ஆலயத்துக்கு இரவில் வந்திருக்கிறார்

அவரிடம் தாம் யார் என்று தெரிவிக்கவே இல்லை. அந்தக் கோவிலுக்கும் இராஜராஜனுக்கும் என்ன தொடர்பு என்றும் தேவரசருக்கும் தெரியாது. ஆனால் அவர் வணங்க வந்தது, கை கூப்பி நின்றது யாவுமே இராஜராஜனின் அரிய சேவை மூலம் வந்தது, யோகக் கிருஷ்ணனை அவரது தலைக்கனத்தை உடைத்தெறிந்து நிகழ்த்திய உண்மைச் சம்பவத்தின் அடையாளமாகவே அந்தக் கோவில் தலைநிமிர்ந்து நிற்கிறது.

இயற்கை வலிமையுடையது. நினைத்துப் பார்த்தால் அது கூட ஒரு திருவிளையாடல் போலவே இருக்கிறது. சிலைகள்எடுக்க  தயார் செய்ய முன் பணம் கொடுக்க,  ஒப்பந்தம் போடப் போகும் முன்   இரவில் கோவில் வாசலில் யோகக் கிருஷ்ணனும், இராஜராஜனும் மட்டுமே பேசிக் கொண்டிருக்கின்றனர் அடுத்த நாள் பற்றிய திட்டம் தயாரிப்புக்காக.

இராஜ ராஜன் சொல்கிறார்:
நான் விசாரித்த தகவல் பல்வாரியாக இருக்கின்றன‌
சென்னை, காஞ்சி, மாமல்லபுரம், தஞ்சை, சேலம், கோபி இப்படி பல இடங்களில் சில செய்கின்றனர் நாம் பல இடங்களில் விசாரித்து வேலைத்திறம், மற்றும் தொகை யாவற்றையும் பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டும் கோபியில் கூட சில இளைஞர்கள் நன்றாக செய்கிறார்களாம் பக்கத்தில் ஒரு சிறு கோவிலை நிறுவிய ஒரு நிறுவனரும் சொல்கிறார் என்று சொல்ல...

ச்சீ, சீ , உங்களுக்கு கோவிலைப்பற்றி என்ன தெரியும், உங்க வேலையைப் பாருங்க , இது ஒரு பெரிய அளவிலான கோவில், எங்களுக்கு எல்லாம் தெரியும் என தகாத வார்த்தைகளை எல்லாம் சொல்லி விட்டு திருமுருகன் பூண்டியில் மட்டுமே ஒப்பந்தம் செய்து முன் பணம் தரமுடியும் என வசூலான தொகையில் ஒரு பகுதியை தூக்கிக் கொண்டு போய் செய்தனர்.
அதை கோவில் கட்டி வரும் சிற்பி சொல்லியதாக.

திருமுருகன் பூண்டிக்கு செல்லும் வழியில் குறுக்கு வழியில் அம்மாப்பேட்டை அந்தியூர், கோபி என இருந்தும் அதை பல மாதங்கள் எட்டியும் பார்க்கவில்லை.

பல மாதங்கள் ஓடி, குட முழுக்க் நாளும் குறிக்கப்பட்டு சிலைகளும் செய்யாமல், கொடுத்த பணத்தையும் வாங்க முடியாமல் சிக்கிக் கிடந்தனர் கோவில் குழுவினர்.

இடையில் கிருஷ்ணன் ஒப்பந்தம் போட்ட இடத்தில் மூலவரான லிங்கத்தை செய்யவே முடியவில்லை. முதல் முறை பின்னம், இரண்டாம் முறை உள் கீறல், கோடுகள்,காற்று உள் புகுந்த தடங்கள், நீடித்த நாளில் வெடித்து சிலை உடையும் தடங்கள், தடயங்கள், மூன்றாம் முறை ஆட்டுக்கல் போல கொத்து மேலே கறுப்பு தாரை மெழுகியது போல அவசரமும் ஆத்திரமும் சேர செதுக்கப்பட்ட அடையாளங்கள்...

எனவே அந்த இடத்தை கொடுத்த முன்பணத்துக்காக சிறு சிறு சிலைகளுக்காக ஒதுக்கி விட்டு கடைசியில் ஒரு நாள் யோகக்கிருஷ்ணனை ஒதுக்கி விட்டு இந்தக் குழு திருமுருகன் பூண்டிக்கு செல்லும் வழியில் கோபிக்கு வண்டியை திருப்பச்சொல்லிக் கேட்க கண்ணாடிக்காரர் , அவர்தாம் இத்தனை முறை சொல்கிறார் இல்லையா, போய்த்தான் பார்ப்போமே என முன் மொழிய வேண்டா வெறுப்பாக வேறு வழியின்றி ஒரு நப்பாசையுடன் பொலீரொ வண்டி கோபி அந்த இளைஞர்கள் சிற்பக் கூடம் சென்றடைய , தொகையும், கைவேலையும் பார்த்து எப்படி திருமுருகன் பூண்டியின் ஆசாடபூதி ஏமாற்றி இருக்கிறான் எனப் புரிந்து கொண்டு அதிலிருந்து அந்த கோபியின் இளைஞர்களின் சிற்பக் கூடத்தையே வாடிக்கையாகக் கொள்ளுமளவும் உடனே அங்கே வேல் தமது பங்காக தொகை ரூ. 30,000 கொடுத்து மூலவரை அங்கேயே அப்போதே ஒப்பந்தம் போட்டுச் செய்யச் சொல்லியும்...திசை திருப்பம் மாறுதல்

இராஜராஜன் கேட்கிறார் ஜீப் வரும் வழியில் இயற்கை என்ற ஒன்று இருக்கும்போல் தாம் இருக்கிறது இல்லையா? கண்டிப்பாக எல்லாரும் ஆமோதிக்கிறார்கள்..அது யோகக்கிருஷ்ணனுக்கு விழுந்த இல்லை இல்லை அவரது தலைக்கனத்துக்கு விழுந்த அடி...மிகவும் அருமையாக மற்ற சிலைகள் யாவும் செய்யப்பட்டு பிரதிஷ்டை செய்ய உரிய காலத்துள் எடுத்து வரப்பட்டு 24 நாட்கள் நெல்லிலும் 24 நாட்கள் நீரிலும் ஊறவைக்கப்பட்டு வேன்டிய யாவையும் செய்யப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட கதை எல்லாம் மிக நீளம். அதற்கு குட முழுக்கு செய்ய கோபியில் ஒரு மாபெரும் கடையில் சாமான் வாங்கிய கதையும், கோவில் மூலவர் அம்பிகா படம் போட்ட டாலர்கள் விற்ற கதையும்...இப்படி ஒரு புத்தக்ம். எழுதலாம் என இராஜராஜன் எண்ணுமளவு....
Image result for karma yoga


தமது கல்லூரி முதல்வர் தம்மை முற்றிலும் புரிந்து கொண்டவர் அந்த மேட்டூரின் மாபெரும் பள்ளியின் முன்னால் மாணவர் ஜேம்ஸ், அவரை 3 ஆம் நாளில் அந்தப் பள்ளிக்கு அழைத்து வந்து பேச வைப்பது என்றும் தாமும் அந்தப் பள்ளிக் குழந்தைகளுக்கு அப்துல் கலாம் வழி நின்று நிறைய  விழிப்புணர்வு அறிவுரை நம்பிக்கை தருவதென்றும் நினைத்திருந்த கனா எல்லாம் கானலாகப் போக இந்த தேவரசர் என்ன காரணம் பற்றியோ அந்த 3 நாள் நடக்க சம்மதித்து ஒப்புக் கொண்டு ஏற்றுக் கொண்ட முகாமை இரண்டு நாளோடு தமது சொந்த விருப்பு வெறுப்பு உணர்வை உள் வைத்து சுமார் 4000 மாணவர்களுக்கு போய்ச் சேரவேண்டிய அறிவுச் செல்வத்துக்கு தடை ஏற்படுத்தி விட்டாரே....

இந்த பொது நல சேவா வாதியான இராஜராஜனை மதிக்காமல் விட்டாரே அதன் விளைவாய் அந்தக் கோவிலின் அச்சாணியாய், ஆணிவேராய் இராஜராஜன் உருவாக்கிய கோவிலில் இன்று தேவரசன் கைக் கட்டி நின்றிருக்க வந்திருந்ததன் பின் உள்ள வெற்றியும் தோல்வியும் வெளியே எவருக்குமே தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

இந்த இரகசிய வெற்றியை இராஜராஜன் எண்ணி எண்ணி கடவுளின்,இயற்கையின் திருவிளையாடல் அந்த மூன்றாம் நாளில் நிறைய வய்ப்புகள் மற்றொரு பள்ளிக்கு சென்று விட்டதே அதுதான் அங்குதான் போய்ச் சேர வேண்டும் என்றிருந்ததோ என்னவோ அதனால் தாம் இப்படி எல்லாம் நிகழ்ந்ததோ!

இந்த முகாம் நாட்கள் இரண்டும் கடந்த மறு நாளிலேயே மிகவும் அருகாமையில் ஒரு தனியார் மருத்துவர் முகாம் நடத்துவதாகச் சொல்லி போஸ்டர் விளம்பரம் செய்ததையும் கவனிக்க முடிந்தது நெருடல்களுடன்.

வீட்டிலும் , சொந்த ஊரிலும் தவிர இறைவாக்கினர் வேறு எங்கும் மதிப்பு பெறுவர்  என்ற பைபிள் வாசகத்தை முறியடிக்கிறோம் என ஜேம்சை கூட்டி வந்து 3 ஆம் நாளில் அவர் படித்த பள்ளியிலேயே பேச வைக்க வேண்டும் என்றும் உள்ளூர் பள்ளியில் நமது பேர் விளங்க நாமும் பள்ளிப் பிள்ளைகளுக்கு ஒரு அரிய உரை நிகழ்த்த வேண்டும் என்று இருந்ததை நிறைவேற்ற முடியாமல்  பைபிள் வாசகம் நின்று வென்று விட்டதையும் இராஜராஜனால் இரசிக்க முடிகிறது...


இன்னொரு விஷயம் என்ன இந்த இராஜராஜனுக்கு அப்துல் கலாம் தம் சொந்தக் கைப்பட கடிதம் எல்லாம் எழுதியுள்ளது தேவரசருக்கும் தெரியும், ஆனால் தேவரசர் அப்துல்கலாம் மார்பளவு சிலையை நடுவில் வைத்து உலகின் மாபெரும் அறிவியல் அறிஞர்களை வேலிச் சுவர்களில் எல்லாம் செய்ய வைத்து ஒரு அறிவியல் அறிஞர் பூங்காவை செய்ய முயற்சி செய்து வருகிறார்...மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Monday, February 12, 2018

இந்த நாட்டில் இனியும் வாழ்வதென்பதே இழுக்கு: கவிஞர் தணிகை

இந்த நாட்டில் இனியும் வாழ்வதென்பதே இழுக்கு: கவிஞர் தணிகை

Image result for living is sin in Tamil nadu and India


சாவதற்கு ஒரு நொடி துணிச்சல் போதும், வாழ்வதற்கு ஒவ்வொரு நொடியும் துணிச்சல் வேண்டும் என்ற எண்ணக் கீற்றின் பகிர்தல் என்னுள் எழுந்த வன்மத்தை சாந்தப் படுத்தி விட்டது.

பாரதி சொன்னபடி எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே என்பதற்கேற்ப இன்பசுகத்தில் விளைந்த மணியை முத்தை கொஞ்சம் பட்டை தீட்டவே இந்த ஜீவன் படும் பாடு கொஞ்சம் நஞ்சமல்ல...

திருவள்ளுவர், மகாத்மா காந்தி, இவர்கள் வரிசையில் 11 வதாக இடம் பெற்ற தமிழகத்தின் சட்டசபையின் ஓவியப்படம் நிறைய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளன.
இனி எது எதற்கோ வாக்கெடுப்பு நடத்துவது போல இது போன்ற ஒரு தீர்மானத்திற்கும் பொது மக்கள் வாக்கெடுப்பு நடத்தி வைப்பதும் கூட சரியாக இருக்குமா என்றுத் தோன்றவில்லை எனினும் ட்ரையல் அன்ட் எர்ரர் முறையில் செய்து பார்ப்பதில் தவறில்லை.

Image result for living is sin in Tamil nadu and India


உச்ச நீதிமன்றம் லாலுவுக்கு குற்றவாளி எனத் தண்டனை பெற்ற ஒருவர் கட்சித் தலைவராக இருக்க வாய்ப்பில்லை எனக் கண்டனம் தெரிவித்திருக்கும் நிலையில் ஒரு குற்றவாளித் தலைவருக்கு தமிழகத்தின் சட்டசபையின் வளாகத்தில் ஒரு அங்கீகாரம் வழங்கி பெருமைப்படுத்திய நிகழ்வு தமிழகத்தின் நடந்து கொண்டிருக்கும் ஆட்சி எத்தகையது, அதன் மக்கள் எத்தகையராக இருக்கின்றனர் என்பதற்கான அத்தாட்சி.

இவர் அதைச் சாப்பிட்டுவிட்டு அந்தக் கோவிலுக்கு போகிறார் என தேர்தல் பிரச்சாரம் அண்டை மாநிலமான கர்நாடகாவில் அரங்கேறி வரும் வேளையில் இங்கு குடிநீர்ப் பஞ்சம் தலைவிரித்தாட ஆரம்பித்திருக்கிறது
Image result for living is sin in Tamil nadu and India
பாரதியின் பேர் சொன்னாலே பகலவன் போல சுட்டெரிக்கும் சிந்தனையுடனான பேர் கொண்ட பல்கலைக் கழகத்தின் தலைமையும் , அதன் செய்கைகளும் நாடே சிரிக்கிற அளவில் அரங்கேறி வருகிறது..

ஒரு 8 மாதக் கைக்குழந்தை உறவின் ஒரு மிருகத்தால் தவறான செயலுக்கு உட்படுத்தப் பட்டிருக்கிறது இராஜஸ்தானில், டில்லியில் ஒரு 6 வயது தளிர் புழை,குதம் , சதை, ஜவ்வு எல்லாம் கிழிந்து இறந்திருக்கிறது...

இப்படி இங்கு நடந்து வருகையில் , மோடியின் ஆட்சி மிகவும் வல்லமை உள்ளது காங்கிரஸ் 60 ஆண்டுக் கால ஆட்சிதான் சரியில்லை என நாட்டின் பிரதானக் கட்சிகள் ஒன்றையொன்று கத்தரிக்கோலின் இரு விளிம்பின் முனைகளாய் வெட்டிக் கொண்டிருக்கின்றன மக்களாட்சி தத்துவத்தை....

இந்தியாவுக்கு 180 வாக்குகள் பாகிஸ்தானுக்கு 1 வாக்குதான், எனவேதான் மோடி வெளியுறவுக் கொள்கையை செப்பனிடவே நாடு தங்காமல் வெளிநாடே கதி என்றிருக்கிறார்...என்கிறார்கள்...ரேணுகா சவுத்ரி வாய்விட்டு சிரித்ததில் ஒரு தவறுமே இல்லை...வேறு வாயில் சிரிக்கும்படியான ஆட்சிதான் இது. ஏழை மக்களை கேட்டுப்பார்த்தால் தாம் தெரியும் அவன் படும்பாடு பற்றி.. புராணத்தையும் இதிகாசத்தையும் சொல்லிச் சொல்லி இன்னும் மக்களை மடமைப்படுத்தி அடிமைப்படுத்தி மயக்கியே ஆட்சிக்காலத்தை நீட்டித்துக் கொள்கிறார்கள்...

மாநிலத்தில் இலட்சத்திற்கும் மேல் ஸ்கூட்டிக்கு பெண்களிடமிருந்து விண்ணப்பம் குவிந்திருக்கிறது, பேருந்து கட்டணத்தில் பயணம் செய்ய முடியா அளவு வாழ்க்கை சீர் குலைந்தபோதும்... பேருந்து பயணத்திலிருந்து எப்படியாவது தப்பித்தால் போதும் என்ற எண்ணத்தின் வீச்சை இதிலும் பார்க்கலாம் அல்லது இன்னும் இலவச மோகம் அவர்களை அலைகடலில் ஆடும் படகாக ஆட்டி வருகிறது என்றும் சொல்லலாம்.
Image result for living is sin in Tamil nadu and India
ஆக மாநிலத்திலும் மத்தியிலும் நடந்து வரும் ஆட்சி முறைகள் மக்களை நெறிப்படுத்தும் வடிவத்தில் எந்த வகையிலும் செயல்படுவதாகத் தெரியவில்லை

உள்ளே உள்ள மக்களுக்கு குதத்தில் மிளகாய்ப் பொடி தடவி விட்டு, வெளி நாட்டு ஜம்பத்திற்கு ஐஸ் வைத்துக் கொண்டிருக்கும் இந்தியா, மானத்தை விற்று விட்டு, மானத்தை மறைக்கும் கோவணத்தையும் உருவி விட்டு மயிருக்கு டை அடித்துக் கொண்டிருக்கிறது

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

சசிக்கு சட்டசபையில் சிலை வைக்க வேண்டும்...

நிரந்தர முதல்வர் அம்மா ஜெ அவர்களுக்கு முழு உருவ ஓவியப் படம் வைக்கும்போது அவரைப் பாதுகாத்த சசிக்கு சட்டசபையில் சிலை வைக்க வேண்டாமா? கோரிக்கை வலுக்கிறது... தியாகச் செம்மல் சிறை புகுந்த ஜான்சி, தமிழகம் காத்த கண்ணகி அவரை மட்டும் குற்றவாளி எனச் சொல்லி தண்டனை தந்து விட்ட நீதிமன்றங்களே அவரது கூட்டுக் குற்றவாளிக்கு மட்டும் சரித்திரத்தில் இடம் பெற தமிழக சட்டசபையில் படம் வைத்து விட்ட நிலையில் அவருக்கு துணைக்குத் துணையாய், கண்ணுக்குக் கண்ணாய் உயிருக்கு உயிராய் உடலுக்கு உடலாய் இருந்த சசிக்கு சட்டசபையில் சிலை வைக்க வேண்டாமா?
Image result for sasikala news in tamilசசிக்கு சட்டசபையில் சிலை வைக்க வேண்டும்...

இது யாருடைய குரல் அடுத்து ஆட்சி அமைக்கவிருக்கும் தினகரனின் குரலா?மன ஓசையா? உள் குரலா? இல்லை  பத்திரிகைத் துறையில் கொடி கட்டிப் பறந்த சசிகலாவின் இணைபிரியாத கணவர் நடராஜன் குரலா அல்லது அவர்களுக்கு திருமணம் நடத்தி வைத்த கலைஞர் கருணாநிதி அவர்களின் வெளித் தெரியாத ஆன்மாவின் குரலா

Image result for sasikala news in tamil


இல்லை எல்லாம் கற்பனைதான்
ஒரு நாளைய கற்பனைதான் இன்னொரு நாள் நிஜம்.

எனவே தமிழகத்தில் எதுவும் நடக்கலாம், எது நடக்காது என்பதுதான் சரியான பார்வை...Image result for sasikala news in tamil
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

நாதியத்த நதி காவிரி, நாதியத்த நாடு தமிழ் நாடு: கவிஞர் தணிகை

நாதியத்த நதி காவிரி, நாதியத்த நாடு தமிழ் நாடு: கவிஞர் தணிகை
Image result for future less cauvery and Tamil nadu


மறுபடியும் நீர் 40 அடிக்கு நீர்த்தேக்கத்தில் மிகவிரைவாக குறைந்து வருகிறது. 47 கன அடி வருகிறதாம் 500 கன அடி குடி நீருக்குத் தேவைப்படுகிறதாம். இப்போதே நீர்க்கரையில் இருக்கும் எம் போன்ற குடித்தனங்களில் எல்லாம் குடுமிப் பிடிகள் ஆரம்பித்து விட்டன...இந்நிலையில் இனி வரும் கோடைக்காலத்தை தமிழகம் குடி நீர் த்தேவை, மற்றும் நீர்த்தேவையை எப்படி சமாளிக்கப் போகிறதோ? இந்த இலட்சணத்தில் பாசனத்திற்கு என பற்றாத பாசன நிலங்களுக்கு என போயும் சேராத நீரை குடி நீருக்கு எனக் கூட வைக்காமல் சரியான முடிவெடுக்கும் திறனின்றி திறந்து விட்ட அரசை என்ன தான் சொல்வதோ?

Related image

முதல்வர் அவரது கட்சித் தலைவிக்கு சட்டசபையில் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவர் அமரும் இடத்திற்கு எதிராக அவரால் என்ன செய்ய முடியும் எனச் சவால் எழுப்புவது போல,,, கலைஞர் கருணாநிதிக்கு இன்னும் அந்த திருவள்ளுவர், மகாத்மா காந்தி,அண்ணா, பெரியார், காயிதே மில்லத்,அம்பேத்கார், காமராஜ்,முத்து ராமலிங்கத் தேவர், இராஜாஜி,எம்.ஜி.ஆர், ஆகியோர் படங்களுடன் வைக்க இடம் கிடைக்கவில்லை அதற்குள் ஜெயலலிதாவின் ஆளுயர முழு  உருவப் படம் பதினோராவதாக திறந்து வைத்த் மகிழ்ந்து கொண்டிருக்கிறார்,ஸ்டாலினுக்கு அப்படி ஒரு வருத்தத்தை ஏற்படுத்தி விட்டார்க
ள்..Related image ஆனால் கர்நாடகத்தில் இவர் நீர் கேட்க நேரம் கேட்டபோது அந்த மாநிலத்து முதல்வரால் நேரம் மறுக்கப்பட்டதை இவர்கள் சொல்லாமல் துணை முதல்வர் காவிரி நீர் கிடைக்காது என்று பதில் உரைத்த செய்திகள் வந்துள்ளன.

இவர்கள் முடிவுக்கு வந்து விட்டனர், இனி இந்தக் கட்சி எப்படியும் கோட்டையை பிடிக்கப் போவதில்லை. இறங்குவதற்குள் என்ன எல்லாம் செய்ய முடியுமோ அத்தனையும் செய்து முடித்து விடலாம் என...

கர்நாடகாவிற்கு இராஜ இராஜ சோழன் படையெடுத்து சென்று அவர்கள் அன்று கட்டியிருந்த தடையை உடைத்து நீர் கொண்டுவந்ததாக சரித்திரம் பேசுகிற தமிழ் நாட்டில்... அரசாணை பெற்றுவிட்டதாக வெட்டிப் பேச்சு வரும் அரசு மக்களுக்கு என எதையும் செய்யாமல் ஸ்கூட்டி வழங்க ஏற்பாடு செய்து வருகிறது...பேருந்து கட்டணத்தை தாக்குப் பிடிக்க முடியாமல் ஏற்றிவிட்ட நிலையில்.

காவிரி நீரற்ற நிலையுடனும்
தமிழ் நாடு நாதியற்ற நிலையுடனும்
போகப் போக செல்வதன் அறிகுறிகளும், அடையாளங்களும் நிறையவே தெரிகின்றன...

விகடன் குழுவும், அகரம் போன்ற குழுக்களும் இன்ன பிற சிறு சிறு குழுக்களும் விழிப்புணர்வை நகர்புறங்களில் ஏற்படுத்தி வரும் நிலையில் இன்னும் கிராம விழிப்புணர்வு கிடைக்கவில்லை...

கமல் மாவட்டத்திற்கு ஒரு கிராமத்தை தத்து எடுத்து பணி செய்து அதை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டிருப்பது வரவேற்கத் தக்கது...

செல்லுகின்ற நிலையைப் பார்த்தால் மத்திய அரசுடன், தமிழக மாநில அரசுத் தேர்தலும் வந்து விடும் என்றே எண்ணத் தோன்றுகிறது...கணபதி பாரதி பேர் வைத்த பல்கலைகழகத்தில் பலி ஆடாக, இது போன்ற கருப்பு ஆடுகள் இன்னும் மேல் மட்டத்திலும் கீழ் மட்டத்திலும் எண்ணிறந்தன இதை எல்லாம் எப்படி சமாளிக்கப்போகிறோம்?

Related image


பொதுவாகவே இந்த தமிழகத்தின் மக்களை சுயநலத் திருட்டு என்னும் பேயும் மது என்னும் அரக்கனும், அரசு என்னும் திசை திருப்பும் பூதமும், வேட்டையாடிக் கொண்டிருக்கும்போது, இலவச பிசாசுகளும் பேய்களும் கபளீகரம் செய்து வருகையில், வாக்குக்கு பணம் கொடுத்தால் போட்டு விடுவான் என்ற அரசியல்வாதியின் இறுமாப்பு மலையை இந்த சமூக ஆர்வலர்கள் எப்படி தகர்க்கப்  போகிறார்கள்?

முதல் இலக்காய் குடி நீர்க் கொடுங்கள்...நீர் விற்பனை தடுங்கள். குடி நீர் விற்பனை என்பது மது விற்பனையை விட மிகவும் கொடுமையானது நீருக்காக எப்படி எல்லாம் திருட்டுத் தனம் நடக்கிறது என களத்திலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன்...எனவே சொல்லத் தோன்றியதை சொல்லி இருக்கிறேன்

நீரை மனிதரால் தயாரிக்க முடியாதபோது எப்படி சொந்தம் கொண்டாட முடியும்?

Image result for future less cauvery and Tamil nadu


நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாயம் அனைத்து ஜீவ ராசிகளுக்கும் சொந்தமானதை எப்படி இந்த சில இலஞ்சம் கொடுத்து ஊழல் செய்யும் மனிதர்கள் மட்டும் கையில் எடுத்து விற்பனை செய்து சுயஇலாபம் ஈட்டிக் கொள்ள முடியும்? அதற்கு இந்த அரசுக் கட்டிலைக்  கட்டிப் பிடித்துக் கொண்டிருக்கும் இடைத்தரகர்கள் எப்படி அனுமதி அளிக்க முடியும்? எப்படி இவர்கள் அவர்களின் பங்காளிகளாக பணி யாற்ற முடியும்? பதவி என்ற ஒன்று வாக்குகளால் பெற்று விட்டால் போதுமா எல்லா அராஜகமும் செய்து விட முடியுமா?

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Thursday, February 8, 2018

தமிழக தலைவிதி மாற்று(ம்) இயக்கம்: தலைவர்: ரஜினிகாந்த் தமிழக முதல்வர்: கமல்ஹாசன்

இப்படி இருந்தால் எப்படி இருக்கும்?/ கற்பனையும் உண்மையும் கலந்ததுதானே வாழ்க்கை? ...கவிஞர் தணிகை

Related imageதமிழக தலைவிதி மாற்று(ம்) இயக்கம்: தலைவர்: ரஜினிகாந்த்

தமிழக முதல்வர்: கமல்ஹாசன்

நிதி அமைச்சர்: ஜோசப் விஜய் சந்திரசேகர்

சுற்றுலா மற்றும் வணிகம்: விக்ரம்

போக்குவரத்து மற்றும் பொதுப்பணி: அஜித்குமார்

: இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை: விசால்

 ஊனமுற்றோர் மற்றும் மகளிர் மேம்பாடு : லாரன்ஸ்

குடும்ப நலத் துறை: சிவகுமார்

சிறுபான்மை நலம்: நாசர்

: செய்தி ஒளிபரப்பு : தங்கர் பச்சான்

மீன் வளம் மற்றும் கடல் சார்பு மேம்பாடு: பாரதி ராஜா

தமிழ் வளர்ச்சி: வைரமுத்து

ஆதி திராவிடர் மற்றும் பிற்பட்டோர் நலத் துறை: கர்ணாஸ்

வனவளம்: மன்சூர் அலிகான்

கல்வி தனியார் கல்வி ஒழிப்பு: குஷ்பு

பொது சுகாதாரம் மருத்துவம்: மாதவன்

கால் நடை வளர்ப்பு மற்றும் பிரிய பிராணிகள்: பாண்டு

நியாய விலைக்கடைகள் பொது விநியோகம்: ரேவதி ஆஷா கேளுன்னி

வருவாய் மற்றும் நிலவரி விவசாயம்: ராஜ் கிரண்

தொழிலாளர் மேம்பாடு: இயக்குனர் சங்கர்

சட்டம் நீதி: ஜெயமோகன்

இப்படியாக....

செல்லும்போது

நயன் தாராவுக்கு என்ன பதவி என்று கேட்டு அவரது இரசிகர் மன்றம் கேள்வி

பதில் சொல்ல பொதுக்குழுவும் செயல் குழுவும் கூடி அவரே கட்சியின் கொ.ப.செவாக அறிவிக்கப்பட்டுள்ள செய்தி.. ஜெ ஜெ என்று ஒலிக்க‌

Image result for cinema changes


தினசரி, தொலைக்காட்சி ஊடகங்கள் யாவும் இப்போது ஒரே கல்லின் ரெண்டு மாங்காய் என நடிகர் சினிமா அரசியல் பேட்டிகளை ஒன்றாகவே எடுத்து ஒரு முறை வெளியிட்டாலே போதும் என்று வேலைப்பளுவை குறைத்து விட்டன.

தமிழ் நாட்டில் புகை, மது இல்லை

பள்ளிகள் , மருத்துவம், கல்வி, நிலம், நீர் , கட்டடம்,  அறக்கட்டளை யாவும் அரசுடைமையாக்கப்பட்டு போக்குவரத்து கல்லூரி செலவு யாவும் அரசின் செலவாக்கப்பட்டு விட்ட செய்திகள் வந்த வண்ணம் உள்ளன...

எப்படியோ இப்போது இருக்கும் அரசியல் ஒழிந்து ஒழித்து மாற்று வந்தால் போதும்...மக்களை வாழ வையுங்கள், வாழ விடுங்கள் ரஜினிகாந்த் கமல்ஹாசன்...


Related image

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Monday, February 5, 2018

நாங்கள் சொல்வதெல்லாம்: கவிஞர் தணிகை

நாங்கள் சொல்வதெல்லாம்: கவிஞர் தணிகை

Image result for what we saying is satya in satyagraha


கணபதி பாரதியார் பல்கலைக் கழக துணை வேந்தர் கையும் களவுமாக இலஞ்சம் பெற்று மாட்டிக் கொண்ட ஒரே காரணத்துக்காக தமிழக அரசு பதவி விலகலாம்... ஊழலின் ஊற்றுக் க‌ண்  எப்படி எவரெஸ்ட் சிகரத்தில் தமிழகத்தில் கொடி கட்டிப் பறக்கிறது என்பதற்கு இந்த சான்று ஒன்றே ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு என்ற அளவில் போதும்.

6 வயது சிறுமி வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு குதம், பிறப்புறுப்பு கிழிந்த காரணத்தால் இறந்து போன ஒரே காரணத்துக்காக மத்திய அரசு பதவி விலகலாம்.
Image result for what we saying is satya in satyagraha
கரூர் ரயில் இப்போது திருச்சி வரை சோதனை ஓட்டமாக 3 மாதம் இன்று முதல் இயக்கப்படும் என்கிற சேலம் கோட்டம் மேட்டூர் ரயில் பாதையின் பழுது நீக்கும் பணியை ஒரு சேர பல நாட்கள் நிகழ்த்தி விட்டு ரயிலை ஒரு நாளும் ரத்து செய்யாமல் வழித்தடத்தில் வெற்றி கரமாக இயக்கலாம். ஏன் எனில் இப்போது பேருந்து கட்டண உயர்வால் மேட்டூர் பயணிகள் அனைவருமே ரயிலில் வரவே ஆசைப்படுகின்றனர்.

அடுத்து காலையில் ரயிலை 7. 30 மணிக்கு இயக்கி மக்கள் துயர் துடைக்கலாம். இல்லையேல் இவை எல்லாம் அரசே அல்ல. மக்களுக்கான அரசே அல்ல. தனியார் முதலாளிகளுக்கான அரசே.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Sunday, February 4, 2018

சேலம் மேட்டூர் பயணிகள் ரயிலை நிரந்தரமாக நிறுத்த சதியா? கவிஞர் தணிகை

சேலம் மேட்டூர் பயணிகள் ரயிலை நிரந்தரமாக நிறுத்த சதியா? கவிஞர் தணிகை

Related image

வாரம் ஓரிருமுறை பால வேலை நடைபெறுகிறது என்று சொல்லி திடீர் திடீர் என மாலை வேலையில் சேலத்திலிருந்து மேட்டூர் செல்லும் பயணிகள் ரயில் ரத்து செய்யப்படுகிறது. இதன் பின்னணியில் தனியார் பேருந்து முதலாளிகளின் கை இருக்கிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது...

முதலில் காலையில் 7.30 மணி அளவில் மேட்டூரிலிருந்து சேலம் புறப்பட்டு வந்த ரயிலை 8.50 என நேரம் மாற்றி உருப்படி இல்லாமல் செய்து எந்த கல்லூரி மாணவரும், எந்த அலுவலகம் செல்லும் பயணிகளும் செல்ல முடியாமல் செய்தனர். எனவே அது மிகவும் பயணிகள் குறைவாக செல்ல ஆரம்பித்தது...இதன் பின்னணியில் தனியார் பேருந்து முதலாளிகளின் கை வரிசை மற்றும் அரசு, அரசியல் யாவும் இருந்தன. 8.50 காலையில் செல்ல நேரம் என்றாலும் இந்த ரயில் காலை 9.15 வரை மேட்டூரிலிருந்து புறப்படும் நேரம் என்றாகிவிடுவதால் இது எந்தவகையிலுமே கல்லூரி செல்வாருக்கும், அலுவலகம் செல்வாருக்கும் பயன்படுவதில்லை. ஏன் எனில் இது சேலம் சந்திப்பு அடைவது10.30 மணியிலிருந்து சில நாட்கள் காலை 11 மணி கூட ஆகிவிடுகிறது.

சரி அதைத்தான் விடுங்கள், எம் போன்றோர் மாதாந்திர சீசன் டிக்கட் எடுத்தது காலையில் வீணாகப் போனாலும், மாலை வேளையில் 5.30 என்பார்கள் ஆனால் கோவையிலிருந்து சென்னை செல்லும் கோவை எக்ஸ்பிரஸ் குறுக்கீடு இதே வழித்தடத்தில் இருப்பதால் இருந்தால் 5.45 மாலை 5.50 அல்லது  6 மணிக்குள்ளாக சேலத்திலிருந்து எடுக்கப்பட்டு மேட்டூரை 7 மணிக்குள் வந்தடைந்து வந்தது.

புதுசாம்பள்ளியில் சிக்னல் அருகே ரயில் மெதுவாக ஊரும்போது, கல்லூரி மாணவர்களும், எம் போன்ற தினசரி செல்வோரும் இறங்கிக் கொள்வது வழக்கம் . ஏன் எனில் மேச்சேரி ரோடு, ஓமலூர் பயணிகள் கூட அதிகம் இல்லாமல் இருந்தாலும் அங்கே நிறுத்தம் உண்டு. ஆனால் இங்கு எப்படியும் குறைந்த பட்சம் 30 முதல் 50 பயணிகள் இருந்தாலும் இங்கு நிறுத்தவே மாட்டேன் எனச் சொல்லி அடம் பிடிக்கிறது ரயில்வே நிர்வாகம்.

இது பற்றி நான் தனிப்பட்ட முறையில் சேலம் கோட்டம், தென்னக ரயில்வே சென்னை, ரெயில்வே மந்திரி, பிரதம மந்திரி, குடியரசுத் தலைவர்  வரை எழுதியும் மின்னஞ்சலில் தொடர்பு கொண்டும் மாணவர்கள் கையொப்பம் பெற்று கோரிக்கை மனுவாக அனுப்பியும் ஒரு பயனோ பலனோ இல்லை அவர்கள் ஒரு 30 வினாடி கூட அலுவலக ரீதியாக நிறுத்த மறுப்பதுடன் ஓடும் ரயிலில் இருந்து இறங்குவது, ஏறுவதும் குற்றம் எனச் சொல்லிக் பதில் கொடுத்துள்ளனர். நல்ல மக்கள் பற்று.


Related image
இந்த ரயிலை காலையில் அலுவலக நேரத்துக்கு கொண்டு சேலம் சென்றடைய விடும்படி நான் பேசிய பேச்சு புதிய தலைமுறை தொலைக்காட்சியில் மோதும் வேட்பாளர்களும், கணிக்கும் வாக்காளர்களும் என்ற பேச்சரங்கில் முன்னால் மேட்டூர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர்கள் எஸ்.ஆர் பார்த்திபன், பா.ம.க தலைவர் ஜி.கே. மணி  ஆகியோர் முன்னிலையில் பதிவு செய்யப்பட்டு ஒலி ஒளிபரப்பானது.

அப்படி இந்த பயணிகள் ரயில் உரிய நேரம் மாற்றம் செய்து ஓடும் பட்சத்தில் பயணிகள் சுமார் 10 லிருந்து 20 பேருந்து பயணிகள் எப்படி குறைவாகப் பார்த்தாலும் 500 பேரிலிருந்து 1000 பேர் வரை பயணம் செய்வர் அவர்களை பேருந்துகள் வாட்டி கூட்டத்தில் வதைத்து விடுகின்றன...ஒரு அரசின் கடமை மக்களுக்கு வசதி செய்து தரவேண்டியதுதானே...

பயன் பலன் ஒன்றும் இல்லை.

இப்போது சென்னைக்கு இந்த சேலம் மேட்டூர் ரயிலில் இணைத்து சுமார் 6.30 மணிக்கு வந்து 7.15க்குள் எடுக்க வேண்டிய ரயிலுடன் இரண்டு பெட்டிகள் இணைத்திருந்ததை நிறுத்தி விட்டு அந்த வண்டிக்கு அனுமதிச் சீட்டு பெற்றவர்களை பேருந்தில் ஏற்றி சேலம் வரை அனுப்பி அங்கு சென்னை ரயிலுக்கு ஏற்றி விடுகிறார்கள்...

அது மட்டுமல்லாமல் இரண்டு பெட்டி ஒதுக்கியிருந்த நிலை மாறி 20 அனுமதிச் சீட்டுகள் மட்டுமே கொடுக்கப்படும் என்று அதற்கு மேல் இல்லை என்று நிர்பந்தம் ஏற்படுத்துவதாகவும் பயணிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும், சென்னை ரயிலை இந்த நிலையில் கைவிட்டு விட்டதோடு மட்டுமல்லாமல் சேலம், மேட்டூர்  56103 என்ற எண் கொண்ட ரயிலை தற்காலத்தில் வாரத்தில் சில முறை பால வேலை நடைபெறுகிறது என்ற காரணத்துடன் முன்னறிவிப்பின்றி நிறுத்தி வைத்து விடுகிறார்கள்.

என் போன்றோர் வாங்கிய மாதாந்திர அனுமதிச் சீட்டு விரயத்துக்கு என்ன பதில் சொல்கிறது எனக்க் கேட்டால் விசாரணை மையத்தில் நாங்கள் என்ன சார் செய்ய முடியும்? கமர்சியல் செக்சனில் சொல்லச் சொல்வதை நாங்கள் சொல்கிறோம்...என்கிறார்கள். வில்லை விட்டு அம்பை நொந்து என்ன பயன் > என்ற நிலையில் யாரைக் கேட்பது என்றால் அதற்கு கோட்ட அலுவலகம் வரை சென்றால் மட்டுமே கமர்சியல் பிரிவை சந்திக்க முடியும் அது இருக்கிறது ஒரு மைலுக்கும் அப்பால்,,,அதற்கு போய் விட்டு நாம் வீடு வந்து சேர்வது சுலபமானதாக இல்லை.

மேலும் ஏற்கெனவே நானும் ஒரு வழக்குரைஞரும் சென்றபோது கோட்ட மேலாளரை சந்திக்க விடாமல் பர்சனல் கோரிக்கையை பெற்றுக் கொண்டார், அதன் பின் அவர்கள் சென்னை தெற்கு இரயில்வே அலுவலகத்தை தொடர்பு கொள்ளச் சொல்லி கையைக் காட்டினார்கள் கை காட்டி மரமாக அவ்வளவுதான், அது, டெல்லி வரை செலுத்தப்பட்டு ஒன்றுமில்லாமல் போய் அலைச்சலானதுதான் மிச்சம்.

அது மட்டுமல்லாமல் ஆன்லைன் போர்ட்டலில் ஒரு விண்ணப்பம் செய்ததும் விரயமாகவே போனது...

இப்படியே திட்டமிட்டு சில நாட்கள் நிறுத்தி நிறுத்தி அந்த ரயிலில் வசூல் ஆகவில்லை எனக் காரணம் காட்டி தனியார் பேருந்து முதலாளிகளின் ஆதரவாக மேட்டூர் சேலம் சேலம் மேட்டூர் ரயிலை நிறுத்தி விடுவார்கள் என்ற சந்தேகம் வந்து விட்டது. இதன் பின்னணியில் ஒரு சதி வலை பின்னப்பட்டிருக்கிறது.

இப்போது இந்த ரயிலுக்கு நல்ல கூட்டம் வந்து கொண்டிருக்கிறது இந்த பேருந்து கட்டண உயர்வால்....பேருந்தில் மேட்டூர் ஆர். எஸ் பகுதிக்கு 29 ரூபாய். ஆனால் ரயில் கட்டணம் அன்றாடம் 10 ரூபாய்.மாதம் முழுதும் அனுமதிச் சீட்டு பெற 185 ரூபாய்தான்.

ஆனால் இதை எல்லாம் எடுத்து விழுங்கி சாதாரண ஏழை, நடுத்தர மக்களை சுரண்டித் திங்க ஆளும் வர்க்கமும், முதலாளி வர்க்கமும் திட்டமிட்டு சதி செய்து வருகின்றன.
Image result for salem mettur passanger train at 5.30 pm


மேலும் இந்த இலட்சணத்தில் மேட்டூர் சேலம் இருப்புப் பாதை இரண்டாம் வழித் தடம் வேறு போடப்பட்டுக் கொண்டிருக்கிறது...எனவே நடப்புகள் முரண்பாடாக உள்ளன‌

இந்த நிலையில் சேலம் கோட்ட ரெய்ல்வே நிர்வாகம் உரிய பதிலை அலுவலகரீதியாக அறிவித்து இந்த ரயிலை நம்பிப் பயணிக்கும் எம் போன்ற நடுத்தர வேறு வழியற்ற மக்களுக்கு சரியான நேர்மையான ஆறுதலான பதில் தந்து இந்த சேவையை என்றும் நிறுத்தி விடாமல் தொடர் வேண்டுமாய் இந்தப் பதிவு வலியுறுத்துகிறது.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.