Wednesday, July 22, 2020

வல்லரசுகளின் ஆய்தம் ஏந்தாத யுத்த காலமா இது? : கவிஞர் தணிகை

வல்லரசுகளின் ஆய்தம் ஏந்தாத யுத்த காலமா இது? : கவிஞர் தணிகை


Bill Gates commits $750M to help Oxford vaccinate the world ...

செயற்கைக் கோள்களை பில் கேட்ஸ் பூமியின் சுற்று வட்டப் பாதைகளில் அனுப்பி செய்தி சேகரிக்கிறார் என்பதும் ஏன் இந்தியா கூட செயற்கைக் கோள் தொழில் நுட்ப வாசலை தனியார்க்கு திறந்து விட்டிருக்கிறது என்பதும் செய்திகள். சிப் வைத்துக் கொள்ள மாட்டேன் என்கிற‌

சீனா உலகெங்கும் தனது முன்னிலையை நிலை நிறுத்திக் கொள்ள மறைமுகமாக பணத்தால் அடித்து போர் புரிந்து வருகிறது என்பதும் கோவிட் 19 வைரஸ்  உலகளாவிய பரவலுக்கு இந்த நாட்டின் செயல்பாடுகள் தாம் காரணம் என்றும் பலப் பல செய்திகள் உள்ளன.

மக்கள் தொகையை குறைக்கலாம் என்றும் மேலும் மேலும் பில் கேட்ஸ் தடுப்பு மருந்து என இலாபம் ஈட்டி உலகை கட்டிப் போடப் பார்க்கிறார் என்றும் , மற்ற நாடுகள் யாவும் பாதிப்படையும்போது சீனா இலாபமடைந்து வருவதாகவும் செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன ஆனால் மைக்ரோ சாஃப்ட்வேர் அதிபர் பில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா பில் கேட்ஸ் ட்ரஸ்ட் மட்டும்  உலகெலாம் நிரம்பி அவர்கள் இருவர் மட்டும் ஆயிரம் வருடம் வாழ்ந்து விட முடியுமா என்ன?

Future Weapons of China 2020 | People's Liberation Army Update ...
மொத்தத்தில் உலகில் தொழில் வளர்ச்சி வியாபாரம் யாவும் படுத்து விட்ட நிலை. ஆனாலும் மாஸ்க் முகக் கவசம், கையுறை (கிளவுஸ்) சானிட்டைசர் கைக்கழுவும் கலவை மருந்து கொரானா பாதுகாப்பு பொருள்கள் என்றும் மருத்துவப் பொருட்களும் உலகெங்கும் வியாபாரச் சந்தையில்.

ந்தை என்றாலே இடைத் தரகர் மட்டுமே அதிகம் இலாபம் ஈட்டுவது என்பது தவிர்க்க முடியாததாக இருக்கிறது
இந்தியாவில் முதலில் மத்திய ஜி.எஸ்.டி, மாநில ஜி.எஸ்.டி என்று முதலாளிகள் கட்ட வேண்டும் என  அரசு சொல்ல ஆரம்பித்து அது நுகர்வோர் தலையில் வந்து விடிந்தது போல... மருத்துவ மனையில் ஒரு நாளைக்கு ரூ.15000 செலவு என ஆரம்பித்து சென்று கொண்டிருக்கிறதாம் இலட்சக் கணக்கில். இருப்போர் செய்வார். இல்லாதவர் அப்படியே இருந்து செத்துப் போவதுதான் சரியோ.?

பொதுவாகவே ஐரோப்பிய நாடுகள், ரஷியா, அமெரிக்கா எல்லாம் ராணுவத் தளவாடங்கள், போர் விமானம்,ஆயுதங்கள், விற்பனை. இந்தியா போன்ற நாடுகள் என்ன தான் தயாரித்தாலும் தம் கை முதலை எல்லாம் அவர்களிடம் ஆயுதம் வாங்கி விட்டு கொடுத்த பின் கையேந்தும் நிலையே.
Pakistan's nuclear weapons: Bigger than India: Report of US Agency ...
இங்கு உள்ளூர் மக்களுக்கு தரம் தாழ்ந்த பொருட்களைக் கொடுத்து விட்டு முதல் தர பொருட்களை ஏற்றுமதி என தேயிலை முதல் எல்லாப் பொருட்களையும் ஏற்றுமதி அந்நியச் செலாவணி என்ற இந்தியா இப்போது தொழில் வளம் இழந்து நிற்கிறது.

இந்தியா மட்டுமல்ல உலகே தனது கொரானாவுக்கு கோவிட் 19க்கு முன் காலத்தை அடைய பல்லாண்டுகள் ஆகலாம். அப்போது எவர் இருக்கிறார்களோ எவர் இல்லையோ...இங்கே நோய் எதிர்ப்புத் தன்மை அதிகரிப்பதும், சித்த மருத்துவத்திலும் பாதுகாப்பு இருப்பதாகச் செய்திகள் ...ஆனால் அதன் வழி முழுதாகச் செல்லாமல் உலகு எவ்வழிச் செல்கிறதோ அதே வழியில் இந்தியாவும் தமிழகமும் சென்று கொண்டிருக்கிறது. அதில் விதி விலக்கில்லை.
The US government is okay with India's purchase of Russian weapons ...
நாமெல்லாம் அறிய முடியாத முற்றிலும் புரிந்து கொள்ள முடியாத உலக அரசியல் அரங்கேறிக் கொண்டிருக்கிறது இந்த கொரானா கோவிட் 19 மூலம். இலஞ்சமும் ஊழலும் இடைத்தரகும் வியாபாரமும் நடந்து கொண்டுதானிருக்கிறது எவர் இருந்தாலும் எவர் இறந்தாலும்...இறப்பிலும் பிணத்திலும் இருந்து வருவாய் ஈட்டிடும் ஈனப் பிழைப்பு நடத்தி வருகிறது '

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை



Tuesday, July 21, 2020

கோவிட் 19 கொரானா தீண்டாமை வேண்டாம்: கவிஞர் தணிகை

கோவிட் 19 கொரானா தீண்டாமை  வேண்டாம்: கவிஞர் தணிகை

VMSDC | VMS Dental College | Vinayaka Mission's Sankarachariyar ...
[principal Prof.Dr. J.Baby John.M.D.S . VMSDC.]

நோய்த் தொற்று ஏற்பட்ட எவருமே தீண்டத்தகாத மனிதரல்ல, அவர்களை சமூகத்திலிருந்து ஒதுக்குவது மனித நேயமல்ல...அவர்களுக்குத் தேவையான உதவிகள் செய்வோம். அவர்களது மனக்காயம் ஆற்றுவோம். வேதனையிலிருந்து தேற்றுவோம். அன்போடு அரவணைத்து நம்பிக்கையுள்ளோராய் மாற்றுவோம். என்றும் அவர் வாழ்வில் தீப ஒளி ஏற்றுவோம், நோயிலிருந்து மீண்டு வர அன்னை தெரஸாவின் வழி நின்று அன்பு வழி காட்டுவோம்:

ஒவ்வொரு உயிருமே நமக்கும் நமது புவிக்கும் அதி முக்கியம். எனவே அதை அவ்வளவு எளிதில் நாம் போக விட்டு விடக் கூடாது...

விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவனம் நிகர் நிலைப் பல்கலைக் கழகம் மற்றும் வினாயகா மிஷன்ஸ் சங்கராச்சாரியார் பல் மருத்துவக் கல்லூரி அரியானூர் சேலம் 636 308 இன்று ஒரு கொரானா கோவிட் 19 தீண்டாமை வேண்டாம் என்ற துண்டுப் பிரசுரத்தை வெளியிட்டது. அதை பொது மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் பொது உறவு அலுவலர் என்ற முறையில் எனக்கும் பங்கு இருந்தது.


இந்த துண்டு அறிக்கை வெளியிட பெரிதும் காரணமாக இருந்தவர் வினாயகா மிஷன்ஸ் சங்கராச்சாரியார் பல் மருத்துவக் கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் மருத்துவர்J. பேபி ஜான் என்றால் அது மிகையாகாது.
      கொரானா கோவிட் 19 வைரஸ் தடுப்பு விழிப்புணர்வுத் தகவல்கள்

Image may contain: one or more people and people standing

                                                       அச்சம் தேவை இல்லை
                                             எச்சரிக்கை அவசியம் தேவை!

1.தவறாமல் முகக் கவசம் அணியுங்கள்
2.சமூக இடைவெளியைக் கடைப்பிடியுங்கள்
3.நன்றாக சத்தான உணவைச் சாப்பிடுங்கள்
4.போதுமான அளவு தூங்குங்கள்
5.நன்றாகப் பணி செய்யுங்கள்
6.தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள்
7.தினமும் குளித்து சுத்தமாக இருங்கள்
8.சாப்பிடும் முன் சோப்பு போட்டு கைகளைச் சுத்தமாகக் கழுவுங்கள்
Image may contain: one or more people, people sitting and indoor

9.மலம் , சிறுநீர் கழித்த  பின் கைகளைச் சுத்தமாகக் கழுவுங்கள்
10.வீட்டை விட்டு வெளிச் சென்று வந்தால் உடல் தூய்மை செய்யுங்கள்
11.கூட்டத்தில் சேராதீர், கூட்டம் சேர்க்காதீர்!
12.புகைப்பதை, மது அருந்துவதை விட்டு விடுங்கள்
13.பொது இடங்களில் எச்சில் துப்பாதீர்கள்
14.மூக்கு , வாய்,கண்களில் கை வைக்காதீர்கள்
15.60 வயது மீறிய பெரியோரையும் சிறு குழந்தைகளையும்
வெளி அனுப்பாமல் கட்டுப் பாட்டுடன் வைத்திருங்கள்
16.சர்க்கரை வியாதி,இரத்தக் கொதிப்பு போன்ற நோயுள்ளவர்கள்
சரியான மருந்து உட்கொண்டு கட்டுப்பாட்டுடன் இருங்கள்
Image may contain: one or more people, people standing, tree and outdoor
 சமூகத் தொற்று ஏற்படும் காலம் இது என்கிறார்கள். அதற்கு நாம் இடமளித்து விடக் கூடாது. நமது பழக்க வழக்கங்கள் முன் சொன்னபடி நன்கமைந்து விட்டால் இந்த நோய் நமைத் தாக்கவே வழி இல்லை.
Image may contain: one or more people and people standing
மனித குலம் தோன்றியது முதல் இது போன்ற பல இடர்பாடுகளை
சந்தித்து மீண்டதுண்டு. நம்புங்கள்! பீதி வேண்டாம்.
கண்ணுக்குத் தெரியா வைரஸ் கிருமிகளை நமது உடலும் உயிரும் வெல்லும்
மனித குலம் மறுபடியும் நற்சேதிகள் சொல்லும் சாதனை செய்யும்.
நம்பிக்கையுடன் வாழுங்கள்.பயமே கோரானாத் தொற்றை விட அதிகம் கொல்கிறது
மீண்டு வாருங்கள் அனைவரையும் காப்போம்
உலகு மீட்சி பெறும்.
Image may contain: one or more people and outdoor
முன் சொன்னவற்றை நாம் கடைப் பிடிக்க ஆரம்பித்தால் தொற்றும் நோயிலிருந்து தப்பிக்கலாம். அதையும் மீறும் போது இருக்கவே இருக்கிறது வெந்நீரும் எலுமிச்சையும் இஞ்சியும் மஞ்சளும் இவற்றை இளம் சூடாகப் பருகி வருவதும் பால் குடிக்கும் பழக்கம் உள்ளார் அதில் சிறிது மஞ்சள் கலந்து குடிப்பதும் சளி நீக்கியான ஓமவள்ளி கற்பூரவள்ளியில், ஆடு தின்னாப் பாலை போன்ற தாவரங்களில் இயல்பாகவே சளி நீக்கும் சக்தி உண்டு. பயன் படுத்தலாம்.
Image may contain: one or more people and people standing

  நன்றாக சிந்தித்துப் பாருங்கள்: கடந்த ஜனவரியில் சீனாவில் ஆரம்பித்த இந்த வைரஸ் உலகெங்கும் பரவி இருக்கும் இந்நாள் வரை அதாவது 6 மாதத்திற்கும்மேலாக ஒருவர்க்கு அது எப்படிப் பட்டவராக இருந்த போதும் எந்த வயதில் இருந்த போதும் குழந்தை முதல் பெரியவர் வரை ஆண் பெண் என அனைத்துப் பிரிவினரிலும் நீரிழிவு வியாதி உள்ளார் இரத்தக் கொதிப்பு உள்ளார், பருமனாக இருப்பவர் அல்லது ஒல்லியாக இருப்பவர் இப்படி எந்தப் பிரிவிலும் சளி பிடிக்காமல் இருக்க முடியுமா, சாதாரணக் காய்ச்சல் , தலைவலி, தொண்டைப் புண் வராமல் இருக்குமா, மாறுதலான உணவை உட்கொள்ளும் போதும் இடமாற்றம் செய்யும் போதும், சரியான தூக்கம் இல்லாதிருந்த போதும் உடற்பயிற்சி இல்லாத போதும் மலக் கழிவு வெளியேறாத போதும் இவை எல்லாம் சாதாரணமாக இருக்கும் அறிகுறிகளாகவே இருக்கும். இவை எல்லாவற்றையும் நாம்  கொரானா வைரஸ் 19 தாக்கம் என கணக்கில் கொண்டோம் எனில் இந்த உலகில் அனைவருக்குமே இது இருந்து கொண்டே இருக்கும். எனவே
Image may contain: one or more people, people standing and outdoor
பூமியில் மட்டும்தான் உயிரினங்கள் வாழ்கின்றன. பிற கிரகங்களில் அல்லது துணைக் கோள்களில் எல்லாம் உயிர்கள் இருந்திருக்கலாம் என்றுதான் சொல்கிறார்கள் சாத்தியக் கூறுகள் இருக்கலாம் என்றுதான் சொல்கிறார்களே தவிர உறுதிப் படுத்த முடியாத மனித இனம். இங்கு மட்டுமே இருக்கின்ற நிலையில் அவை இயல்பான நிலையில் முடிவுக்கு வரவேண்டியதன்றி இது போன்ற பீதி, பயம் , தொற்று போன்றவற்றிற்கு எளிய காரணங்களால் ஆட்பட்டு முடிந்து விடக் கூடாது
Image may contain: one or more people and people standing
உயிரைப் போற்றுவோம்             உயிர்ப்போடு உயிர் தீபம் ஏற்றுவோம்.
நன்றி 
Image may contain: one or more people, people standing and outdoor

வணக்கம்.
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Sunday, July 19, 2020

ரெவனன்ட்: ஆங்கிலப் படம் 2015: கவிஞர் தணிகை

ரெவனன்ட்: ஆங்கிலப் படம் 2015: கவிஞர் தணிகை

The Revenant: Watch out for Leonardo DiCaprio's career-best ...

நாடு கடத்தப் பட்டு திரும்பி வந்தவர், இறப்பிலிருந்து மீண்டவர்,  மீட்சி பெற்றவர் இப்படி சில தமிழ் சொற்கள் பொருள் கொள்ளும்படி இந்த ரெவனன்ட் என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இருக்கிறது.

அதை இந்தப் படத்தைப் பார்த்தால் உணரலாம். வார்த்தைகள் பொருள் ஆகாது. வாத்து கோழி ஆகாது. இது எங்கள் சுவர் எழுத்துகள் இன்றைய நாளில். உணர்தல் மட்டுமே பொருள் தரும். புரியும் தெரியும்.

இந்தப் படத்தைப் பார்த்து இரண்டு வாரங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. இதைப்பற்றி எழுத நேரம் வாய்ப்பு இல்லை. ஆனாலும் எழுத வேண்டும் என்ற உள் விதை மட்டும் இருந்து கொண்டே இருந்தது.

இதன் இசையை ஒலியை காதணி இயர் போன் போட்டுக் கொண்டு இரசிக்க வேண்டும் என்றார் எனது வாரிசு, மகன் மற்றும் தோழனுமானவர். அவரால் தாம் இந்தப் படத்தைப் பார்க்க நேர்ந்தது. இதைப் பார்க்க வேண்டுமா 156 நிமிடம் செலவிட வேண்டுமா என மலைத்திருந்தேன். கிட்டத் தட்ட 2.45 மணி அல்லது 3 மணி நேரம் நமக்குத் தேவைப்பட்டது.

அப்படியே விட்டு விட்டு ஒருநாள் பார்த்தே விட்டேன். பிரமிப்பு நீங்கவே வாரக் கணக்காகிவிட்டது அதன் பிடியிலிருந்து விடுபடாததே இதை எழுதக் காரணமும். துல்லியமான இசை நம்மை கதை நடக்கும் இடத்தில் ஒரு பார்வையாளராக்கி வைக்கிறது.இல்லை இல்லை அந்த இடம் சம்பவங்களுடனே நமது நேரம் நாமும் ஒரு பங்கெடுப்பாளராகவே நேரம் நகர்வதே தெரியாமல் படம் நகர்கிறது. இந்தப் படம் சிறந்த கதாநாயக நடிகர், சிறந்த இயக்குனர்,சிறந்த ஒளிப்பதிவு என 2016ன் 3 ஆஸ்கார் விருதைப் பெற்றுள்ளது.

நடிகர் எவருமே தெரியவில்லை. டைட்டானிக் படத்தின் ஹீரோவான டி காப்ரியோ, டாம் ஹார்டி போன்றோர் நடித்துள்ளது என்று சொல்ல முடியாது வாழ்ந்துள்ளது என்றுதான் குறிப்பிட வேண்டும். இதன் இயக்குனர் அலெஜான்டரியோ இனரிட்டு என்பவரையும் தயாரித்த 5 பேரையும் பேர் ஒன்னும் வாயில் நுழையலை. ஆனால் அற்புதமான பணியைச் செதுக்கி செதுக்கி செய்துள்ளார்கள் காமிரா மூலம் .

ஒரு எல்லைப் படையில் பணி புரியும் நபர் அவரின் கலப்பு திருமணம் மூலம் ஒரு பழங்குடியினப் பெண்ணை மணந்து கொள்கிறார். அதன் வழி வந்த மகனை கொன்று விடுகிறார்கள், இவரை ஒரு கரடி பயணத்தின் போது கடித்துக் குதறி எடுத்து விடுகிறது இவரது பகையும் போட்டியாளருமான ஒருவர் இவரை இவரது அணியின் பயணத்தில் இருந்து நீக்க குழி தோண்டி உயிர் இருக்கும் போதே மூச்சுக் காற்று ஒன்றுதான் இருக்கிறது மற்றவை இயக்கமில்லை. அதுதான் சாக்கு என்று குழியில் போட்டு மண்ணை தள்ளி மூடி விட்டு அவரின் மற்றொரு நபரையும் மிரட்டிப் பணியவைத்து மற்றொரு நபரையும் கொன்று போட்டு பயணத்தை தொடருகிறார். இந்த இறந்து விடும் நிலையிலிருக்கும் மனிதர் அசையக் கூட முடியா நிலையில் இருக்கும் மனிதர் எப்படி கடைசி மூச்சு என்று இருக்கும் நிலையில் மறுபடியும் மறுபடியும் பசி, பனிப் புயல், நீண்ட பனி, காடு ஆகியவற்றின் பயணம் போன்றவற்றுடன் போராடி இலக்கை அடைகிறார் தமது எதிரியை எப்படி பழி வாங்குகிறார் என்றுதான் சிறிய அளவிலே சொல்ல முடியும் . கதை என்றால் இதுதான். ஆனால் இதை எல்லாம் சொல்ல முடியாது
அன்பர்களே...அர்ஜைண்டினாவில் சென்று எடுத்தார்களோ அல்லது சைபீரியாவில் எடுக்கப் பட்டதோ தெரியவில்லை. அத்தனையும் விறைத்துப் போகும் பனி...

Less white | The Indian Express
இதை எதற்கு எழுதி இருக்கிறேன் எனில் கடைசி மூச்சிருக்கும் வரை போராடுவது என்பார்களே அதற்கு முழுமையான பொருள் இந்தப் படத்தின் கதையில் உள்ளது நடிப்பில் உள்ளது .பார்க்கும்போது நமக்கும் அந்த தெம்பு வரும் கடைசி வரை கடைசி மூச்சிருக்கும் வரை போராடியே ஆக வேண்டும் நமது இலக்கை எட்டும் வரை...எனவே

அனுபவிக்க வேண்டும்.
இது தான் சினிமா
இது போல ஒரு சினிமாவை எப்போது நமது தமிழ் சினிமா, இந்தியா சினிமாவால் எடுக்க முடியும் என நினைத்துப் பார்க்கவும் முடியவில்லை.
The Revenant (2015) - Cinema Forensic
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை 

குருவை மிஞ்சிய சீடர்: கவிஞர் தணிகை

குருவை மிஞ்சிய சீடர்: கவிஞர் தணிகை

Your role model Kamarajar | Gyan Vitaranam

இராஜாஜி, சத்திய மூர்த்தி போன்றோர் மெத்தப் படித்தவர்கள். சத்திய மூர்த்தி ஆங்கிலத்தில் பேசினால் அனைவரும் அசந்து போவர் என்றெல்லாம் உண்டு. இவரது சீடர் தாம் காமராசர். இவர் பெரிதும் படிக்காதவர் ஆனால் அந்தந்த காலக்கட்டத்தில் என்ன என்ன நடக்கிறது அதை எப்படி கையாள்வது என்ற சமயோசித புத்தி நிரம்ப உள்ளவர். எளிமையாக பேசுவார். அதிகம் பேசாதவர் என்றும் நேரடியாக ஒரு சொல் வந்து விழும் என்றும் சொல்வார்கள். ஆனால் எதிரியையும் நேசிக்கக் கற்றவர் நல்ல பண்பாளர் நல்ல பார்லிமென்டேரியன் என்பதற்கு அறிஞர் அண்ணாவுக்கும் இவருக்கும் எதிர் அணியில் இருந்த போதும் இருந்த நல்லுறவை காரணம் காட்டி நிற்கிறது காலச் சரித்திரம். இவரை திருமணமாகதவர் இவருக்கு குடும்பம் செலவு பற்றி என்ன தெரியும் என்று பேசிய போதும் எங்கள் தலைவரை இப்படி பேசுகிறீரா உங்கள் தலைவர் என்ன  பிள்ளை  இல்லாதவர்தானே என  அண்ணா பற்றிப் பேசிய பெண் எம்.எல்.ஏவை கடிந்து கொண்டு அவர்கள் சொல்வது சரி ஆனால் நீ பேசியது மிகவும் தவறு அவர்கள் வேதனைப் படும்படி பேசலாமா என்று நடந்து கொண்டதை வரலாறு சொல்கிறது

இவரது அப்பழுக்கற்ற தன்மை பெரியார் போன்ற எதிர் அணி தலைவர்களையும் கவரச் செய்தது. இராஜாஜியும் வேண்டாம் சத்திய மூர்த்தியும் வேண்டாம் என்ற காங்கிரஸ் காமராசரை தமிழக முதல்வராக காங்கிரஸ் தலைவராக கொண்டு வர வாய்ப்புகளை அளித்தது. இவர் அதன் பின் இந்திய காங்கிரஸ் தலைவரானதும் கிங் மேக்கர் என்று புகழப்பட்டதும் ஏற்றி விட்ட இந்திரா காந்தியின் வார்த்தைகளாலே மனம் புண்பட்டு இந்தியாவின் நெருக்கடி நிலை எமர்ஜென்ஸி காலத்தில் மறைந்து விட்டதும் ....

இந்த படிக்காத மேதை என்று பார் போற்றப் பட்ட ஏழை எளியவர்களின் மனிதர் செய்த சாதனை அதிகம். சுயம் என்ற வார்த்தையைக் கூட இவர் குறுக்கிக் கொண்டவர்.  இவரது பேர் ராஜாஜி சத்திய மூர்த்தி ஆகிய பெயர்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளி பேர் பெற்றது அதன் காரணம் கர்ம வீரர் என்ற காரணமே. தியாகம் என்று சொல்வது எளிது. அதை செய்வதுதான் மிகவும் கடினம். அதற்கு பேராற்றல் வேண்டும்.
Kamarajar Song - Thalaivar Kamarajar - YouTube
ஏழை எளியோர்க்கு செய்ய வேண்டும் என்ற பேரு வேட்கையே இவரை அப்படியெல்லாம் செய்ய வைத்தது.

சில மனிதர்கள் பேசாவிட்டாலும் அவர்களைப் பற்றி பார் பேசும் அவர்கள் பற்றி அவர்கள் பேர் பற்றி காலம் பேசும் சரித்திரம் பேசும்.

அடுத்த குருவை மிஞ்சிய சீடர் என்ற எதிரணியிலிருந்து உண்டானவர் பற்றி எல்லாம் நான் சொல்ல வரவில்லை. அவர் அப்படி ஏதும் குருவை மிஞ்சிய சீடராகவும் இல்லை. அவர் குலம் வந்ததால் தான்  நிறைய நல் முன் மாதிரிகளும் அழிக்கப் பட்டன நிறைய தீய முன் மாதிரிகளும் ஏற்பட்டன என்கின்றன காலச் சரித்திரங்கள் ஆனாலும் அவரும் நிறைய துணிச்சல் காரர்தாம். நிறைய திட்டங்கள் செய்திருக்கிறார்தாம் என்றாலும் இவர் பற்றி சொல்லும் போது சொல்ல வேண்டுமெனில் இவரின் சுயநலம் இவர் தமது மகவுக்கே கூடவிட்டு விடாத விட்டுத் தராத மாபெரும் பரந்த மனப்பான்மையும் மூப்பனாரும் கலாமும் வந்து இடைமறித்து கண்ணதாசன் வேறு அதற்கு மேல் பால்ய கால வரலாறு எல்லாம் அப்பட்டமாக சொல்லி இவரை வெளிப்படுத்தி நிற்கிறார்கள். எனவே இவர் பற்றி நான் சொல்ல விரும்பவில்லை காரணம் சேவை செய்வது என்பதும் சேவை செய்ய வருகிறோம் என்பதும் சுய நலத்துக்காக என்று ஆகிவிட்டால் அது மாபெரும் அவச் சொல் ஆகிவிடுகிறது. அவச் சொல்லை ஏற்படுத்தி கேரக்டர் அஸ்ஸாஸினேசன் என்பது மரணத்தை விட மாபெரும் கொடுமையானது. என்னதான் வெற்றி பெற்றிருந்தாலும் அத்துடன் இந்த பாம்பும் பின்னிப் பிணைந்து அவரை அவர் செய்த நல்லவற்றை  மறைத்து விடுகிறது.
தலைவர்கள் வாழ்வில்: அலறினார் ...
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

ஏதோ சொல்ல வேண்டும் என்று தோன்றியது சொல்லி வைத்திருக்கிறேன்.

மதம் கடந்தவர்கள்: கவிஞர் தணிகை

மதம் கடந்தவர்கள்: கவிஞர் தணிகை



மதம் கடந்தவர்கள் என்ற வரிசையில் நிறைய மாமனிதர்கள் பற்றி சொல்லலாம். இங்கு நான் சொல்லப் புகுவது என் மனம் கவர்ந்த மதம் கடந்த சிலரைப் பற்றி மட்டுமே. வாய்ப்பு ஏற்பட்டால் மற்றவர்களைப் பற்றியும் சொல்லலாம்.

1.அன்னை தெரஸா:
98 Best Legendary's images | Apj quotes, Kalam quotes, Genius quotes

இவரை பிறப்பாலும் இவரின் வாழ்க்கை முறைகளாலும் கிறிஸ்தவர் என்கின்றனர். இவர் சார்ந்த இயக்க முறையிலான பதிவு அமைப்புகள் இயங்கி வருகின்றன இவர் பேர் சொல்லி இந்தியா முழுதும் ஏன் உலகெங்கும். ஆனால் இந்த மூதாட்டி சிறிய பெண்ணாக பள்ளிப் படிப்பு முடித்து ஆசிரியப் பணி புரியும்போதே தனது நாட்டிலிருந்து கொல்கொத்தாவுக்கு சேவை செய்ய வருகிறேன் என்று முடிவெடுத்துக் கொண்டே வந்தவர் அதன் பின் செவிலியர் பணியை பயிற்சி முடித்து அவர் சார்ந்த மிஷினரி பேரியக்கத்திலிருந்து விடுபட்டு தனக்காக  ஒரு தனி அமைப்பை தனி பாணியை ஏற்படுத்திக் கொண்டு எல்லாவற்றையும் அர்ப்பணித்தவர். இவரை அவர்களது கிறித்தவ அமைப்பு கடவுளுக்கு அடுத்த நிலையில் புனிதர் என்று பட்டம் கொடுத்து பாராட்டி உள்ளது. செயின்ட். இவரது சேவை குறித்து சில வார்த்தைகளாலே சொல்ல முடியாது. எந்த நோயாளியாக இருந்தாலும் தொட்டு அணைத்து அரவணைத்து தூக்கிச் சென்று மருத்துவ சிகிச்சை செய்த மாபெரும் மனிதம். இவரது மடியில் எத்தனையோ உயிர்கள் பிரிந்துள்ளன நிம்மதியாக. இவரிடம் எத்தனையோ குழந்தைகள் பசி, பஞ்சம் பட்டினி தீர்ந்தன. எத்தனையோ நோயாளிகள் நோய் நீங்கி நலம் பெற்றனர். இவர் அவர்களை மதம் பார்த்து ஏற்றதும் ஒதுக்கியதும் இல்லை. சேவை என்பதற்கான ஒரு முழு வடிவம் இது.இலக்கணம் இவரே என்பேன்.
இவரை எனது வாழ்வில் பிடித்தமானவர்களுள் ஒருவராக வைத்துள்ளேன்.
எனது இளமையில்

ஓ! பெண்களே
உங்களில்
எவரேனும்
இன்னொரு தெரஸாவாகத்
தயாராக இருந்தால்
அவர்க்கு
செருப்பாகத் தயாராய் இருக்கிறேன்
    என்று எழுதி அதை எனது முதல் கவிதை புத்தகமாக வெளியிட்ட மறுபடியும் பூக்கும் நூலிலும் வைத்துள்ளேன்.

2.அ.ப.ஜெ.அப்துல்கலாம்:
Teachers, who didn't need a classroom | Newsmobile

 முகமதிய இனம் பிறப்பால். ஆனால் இவர் ஆகாய விமானப் படையில் விமானியாக தேர்வு பெறாமல் தவறியபோது இமாலயச் சாரலில் இந்து மத துறவியின் அன்புக்கு பாத்திரமாக விளங்கி சில புத்தகங்களை ஆறுதலாகப் பெற்றமையும், திருப்பதி முதலான எல்லா கோவில்களுக்கும் சென்ற போதும் குடியரசுத் தலைவராக சென்ற போதும் பிற மதத்தினர் கையொப்பம் இட்டுச் செல்ல வேண்டும் என்ற கட்டுப் பாட்டைக் கடைப் பிடித்தவர். சிஸ்டம் உடன் ஒத்துப் போக விரும்பும் எளிய மனிதர். கொஞ்சம் கூட கர்வம் தலைக்கனம் கொள்ளாதவர். அமரும் போது இவர் கால் மேல் கால் போட்டு எங்கும் அமர்ந்தவரில்லை. யாதும் ஊரே யாவரும் கேளிர் , நன்மையும் தீமையும் பிறர் தர வாரா என்ற உலக மனித சகோதரத்துவத்தை  ஐ.நாவில் பேசி தாம் தமிழர் என்ற உண்மையை நிரூபித்தவர். நிறைய தமிழ் படித்தவர் எழுதியவர், கையொப்பம் தமிழில் இட்ட தமிழர் . எனக்கு தமது கைப்பட குடியரசுத் தலைவராக இருந்த போதே எழுதியவர். மக்கள் குடியரசுத் தலைவர் என்ற பேர் பெற்றவர். சில நேரம் இவர் சில சன்னிதானங்களுடன் சென்று சந்தித்த போது அவர்கள் மேலும் இவரைக் கீழும் அமர வைத்த போது நமக்கு கோபம் வந்தது. இவர் சிரித்துக் கொண்டே இருந்தார். அமெரிக்க விமான நிலையத்தில் இரு முறை ஆடை அவிழ்த்து சோதனை செய்யப் பட்ட போதும் கூட பதற்றம் இன்றி அவர்கள் அவர்கள் கடமையைத் தானே செய்கிறார்கள் என பொறுமை சகிப்புத் தன்மை காத்தவர்.
இவரையும் எனது வாழ்வில் மிகவும் பிடித்தமானவர்களுள் ஒருவராக வைத்துள்ளேன்.

3. மகாத்மா காந்தி:
60 Best Mother Teresa Mahatma Gandhi images in 2020 | Mother ...

பிறப்பால் இந்து. ராம் ராம் என்பது இவரது மூச்சுக் காற்று. இரகுபதி இராகவ இராஜாராம் பதீத பாவன சீத்தாரம் ஈஸ்வர் அல்லா தேரே நாம் சப்கோ சன்மதி தே பஹ்வான் என்ற பாடல் இவர் அடிக்கடி இவரது கீர்த்தனை என்றும் பஜனைகளிலும் இடம் பெற்றது .
உழைப்பாளி என்றால் அதற்கு இவரை இலக்கணம் என்று சொல்லலாம். சகிப்புத் தன்மை என்றால் என்ன என்பதற்கும் இவரிடம் ஏராளமான சான்றுகள் இவர் வாழ்வில் உண்டு. நான் இவரது நூலை எல்லாம் படித்தறிந்து வள்ளியம்மாள் கல்வி நிறுவனம் மதுரை காந்தி அருங்காட்சியகத்துடன் இணைந்தது அதில் முதல் பரிசு பெற்றுள்ளேன் 60000 பக்கம் என்றார்கள் இப்போது அது 80000 முதல் ஒரு இலட்சம் வரை உள்ளது சேர்ந்து என்கிறார்கள் அவர் இந்த உலகுக்கு எழுதிய பக்கங்கள். இவர் தொடாத துறை மிகவும் குறைவு. சமையல், மருத்துவம், பத்திரிகை, நல்லுறவுக்காக ஒவ்வொருவர்க்கும் தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதுதல், ஆஸ்ரமம் நடத்தியது, அச்சு அலுவலகம்  பணி மேற்கொண்டது, ராட்டை நூற்பதற்கான நேரம், ஜெபம் கூட்டுப் பிரார்த்தனைக்கான நேரம், போராட்டம், சத்தியாக்கிரகம், உண்மை நேர்மை சத்தியம் தமிழை கற்றுக் கொண்டது, இரு கைகளாலும் எழுத தெரிந்தது. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். ஆனாலும் சில கேள்விகளுக்கு எனக்குமே கூட விடை தெரியவில்லை என்றாலும் இவரும் ஒரு தனி மனிதர்தானே....ஆனால் இவர் இயக்கம் காந்தியம் தனி மனிதம் அல்ல...  வழக்கறிஞர் தொழிலில் சமாதானம் பேசி நிறைய வழக்குகளை தீர்த்து வைத்தவர். இவர் தமது குற்றத்தை எப்போதுமே மறுத்தவர் அல்ல. ஏற்றுக் கொண்டதாகவே சிறை சென்றவர். இவர் நீதிமன்றத்தில் நுழையும்போது வழக்கத்துக்கு மாறாக நீதிபதிகள் எழுந்து நின்று மரியாதை இவருக்கு செய்தது பிரபலம்.

இவர் மேல் நிறைய குற்றச் சாட்டுகளும் உண்டு: வ.உ.சிக்கு சேர வேண்டி தெ.ஆப்பிரிக்காவில் சேர்த்து அனுப்பிய தமிழர் பணமுடிப்பை கொண்டு சேர்த்தாதவர், எல்லா நிலைகளிலும் உள்ள அனைவரிடமும் பேதமின்றி  நிதி சேர்த்தவர், சுபாஷ் சந்திர போஸ் காங்கிரஸ் தலைமை ஏற்க ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டும் இவரது அதிருப்தியால் சுபாஷ் தமது தந்தை நிலையில் உள்ள இவருக்கு பிடிக்காமையால் விலகி ஆந்திரத்தில் உள்ள சீத்தாரமைய்யாவை (சீத்தாராமையா / பொட்டி சீத்தாராமுலு இதில் இப்போது எனக்கு திடமாகத் தெரியவில்லை படித்து நீண்ட காலம் ஆனதால்)  தலைவராக்க வழி விட்டது...பகத் சிங் மரணத்தை நினைத்திருந்தால் தடுத்திருக்கலாம் என்பது, இவரது முதல் மகனை மதுப்பிரியனாக்கி மது அடிமையாகவே விட்டு விட்டது அம்பேத்கார் சட்ட மேதையுடன் சமுதாய மேம்பாட்டு பணிகளில் கருத்து வேறுபாடு கொண்டிருந்தது ஜீவாவிடமிருந்து கற்றுக் கொண்டது வைகை நதியில் ஆடையைத் துறந்து அது முதல் ஆடை சரியாக அணியாத அரை நிர்வாணப் பக்கிரி என்று பேர் பெற்றது... இப்படி நிறைய நிறைய...காய்ச்ச மரத்தில் தான் கல்லடியும் இருக்கும். இவர் எந்த மதத்தையும் எதிர்த்தவரல்ல. இவர் இந்து என்ற போதிலும். இவர் உலகத்தின் அத்தனை மதத்தையும் மதித்தார். அத்தனை மனிதரையும் நேசித்தார்.  மகாத்மா.

தெரிந்தோ தெரியாமலோ விரும்பியோ விரும்பாமலோ இவர்கள் இந்த 3 பேரும் மதத்துக்கொருவராக இருக்கிறார்கள் இவர்கள் எனது நெருங்கிய மனிதர்களாக இருக்கிறார்கள்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

Monday, July 13, 2020

உண்மைக் கதை 17. மது விற்பனையை விட குடி நீர் விற்பனை பேராபத்து பெரும் பாவம்: கவிஞர் தணிகை

உண்மைக் கதை 17. மது விற்பனையை விட குடி நீர் விற்பனை பேராபத்து பெரும் பாவம்: கவிஞர் தணிகை
Singapore's S$134m bottled water addiction - CNA
இரத்தினச் சுருக்கமாகவே சொல்கிறேன்.ஏன் எனில் இது ஒரு நெடுங் காதை.மேட்டூர் அணையும் காவிரியும் தமிழகத்துக்கே நீர் வழங்கும் ஒரு தாய் மடி. அந்த தாய் மடியில் தவழ்ந்திடும் இலட்சக்கணக்கான குழந்தைகளில் அவனும் ஒருவனாக நானும் ஒருவன்.

ஒன்பது வருடம் அணை கட்டப்பட்டு 1934ல் முடித்தார்களாம். சரி அதெல்லாம் நமக்கு வேண்டாம். நமது கருப்பொருள் குடிநீர்ச் சுரண்டல் அல்லது நீர்ச் சுரண்டல். இயற்கை ஐம்பெரும் பூதங்களில் நீர் ஒரு அரிய அற்புதமான அமிர்தம். எல்லா உயிர்க்கும் கருணை மழை. மனிதர்க்கு மட்டுமல்ல. மழை பூமிக்குக் கிடைத்த கொடை. மழை பொழிந்து அருவி ஓடையாகி நதியாகி பெருவெள்ளச் சமவெளியில் அமைந்தியடைந்து மக்களுக்கு உயிர்களுக்கு பயனானது போக மீதி இருந்தால் கடலோடி மீண்டும் புவி சுழற்சியுள்.

யார் அப்பன் வீட்டு சொத்து இது? எங்க அம்மா இயற்கைத் தாய் தானே இதற்கும் அன்னை. என்னை தன்னை நீரை சொந்தம் கொண்டாட யாருக்கு அதிகாரம் யார் கொடுத்தது? யார் கொடுப்பது? அதில் என்ன சூட்சுமம்...உலகில் மூன்றில் இரண்டு பங்கு மனித இனம் குடிக்க நீரின்றி உண்ண உணவின்றி பசியாலும் தாகத்தாலும் மடிந்தபடி இருக்கிறது என்பது சரியா?

மேட்டூர் அணை கட்ட அந்த ஊரில் இருந்தாரை எல்லாம் ....அது பழைய சாம்பள்ளியாம்..வெளியேறச் சொல்லி புது சாம்பள்ளி என்ற இடத்தில் அவார்ட்தாரர் என்ற முறையில் பல ஏக்கர் நிலம் அளித்ததாம் அன்றைய அரசு. இது நிலை ஒன்று. இரண்டு நதிக்கரையோரம் நீர் தேக்கம் என்பதால் பல தொழில்களும் மலர பணிக்கு வந்து சேர்ந்த குடும்பங்கள் காடழித்து நாடாக்கி கழனியாக வீடாக மாற்றிக் கொண்டன இது இரண்டாம் நிலை. மூன்றாம் நிலையில் அப்படி சொந்த வீடுகள் உள்ளாரிடம் வந்து வெளியோரில் இருந்து வந்தார் வாடகைக் கொடுத்தும், வீட்டுக்கு வாடகை இல்லை பணத்துக்கு வட்டி இல்லை என்ற நிலையிலும், போகியம் குத்தகை என்ற நிலையிலும், இப்படி இருக்க இடம் தேடிக் கொண்ட ஊரும் தொழிலும் தொழிற்சாலைகளும் பெருகின.

முன் நாளில் குழந்தை யானைவேட்டியில் உறங்க ஆள் இல்லா நேரம் பார்த்து குள்ள நரி அருகே வந்து நின்று கொண்டிருந்த இடம்....இன்று செல்பேசி கோபுரங்களுடன் கழிவை சரியாக வெளியேற்ற வழிகளற்று தேங்கிக் கிடக்கிறது. மனித அரவம்.

வீட்டுக்கொரு கிணறு. குடிக்கவும் குளிக்கவும் துவக்கவும் சமைக்கவும் எவரையும் கையேந்தாத நீர் நிலை.அதாவது நிலத்தடி நீருக்கும் நிலவளத்துக்கும் பஞ்சமில்லை.பெரு ஆலைகள் வந்தன. அதில் ஒன்று கெமிகல்ஸ் அன்ட் பிளாஸ்டிக் கம்பெனி லிமிடெட் என்பது. மேட்டூர் கெமிகல்ஸ், மேட்டூர் பியர்ட்செல் போன்ற ஆலைகள் கூட ஆயிரக்கணக்கான மனிதர்க்கு வேலை கொடுத்த போதும் அதன் எச்சம் பெரிதாக கெடுக்கவில்லை. அலுமினியம் ஆலை கூட மாசு காவிரியைப் படுத்துகிறது என மூடி விட்டார்கள் அது அப்போது மால்கோ இப்போது மால்கோ ஸ்டெரிலைட் குழுமம்.
14 Top Bottled water brands - Bottled water top Companies
இந்த கெமிகல் ப்ளாஸ்டிக் இப்போது கெம்ப்ளாஸ்ட் சன்மார் லிமிடெட் அப்போது கெம்ப்ளாஸ்ட் (இப்போது கழிவு நீரே விடுவதில்லை அந்த கழிவு நீர் ஓடையில் என சாதிப்பார்கள்...ஏன் எனில் விட்டு முடித்து ஊரின் நிலவளம், நீர்வளம் யாவற்றையும் முடித்துக் கட்டி விட்டதால்) காமராசர், நேரு போன்றவர்கள் காலத்தில் ஆரம்பிக்கப் பட்ட கம்பெனிதான்.

பிளாஸ்டிக் கம்பெனி என்று பொதுவாக சொல்வார்கள். அங்கு பவுடர், பைப் போன்றவை பாலி வினைன் குளோரைடு, ஹைட்ரோ குளோரின் ஆக்ஸைடு, கேபட் என்றெல்லாம் சாதாரண மாந்தர்க்கு தெரியா இரசாயன வேதிப் பொருட்களை தயாரிக்க ஆலை. அதை வைத்து தான் தற்போதைய இளைஞர்கள் அது வெடித்துச் சிதறினால் என்ன ஆகும்? அதை பராமரிக்காமல் விட்டால் என்ன ஆகும் என மிரட்டியே தமது தொழிலை தக்கவைத்து உயர் ஊதியம் தம் போராட்டத்தின் மூலம் பணி உறுதி பெற்றதாக அதில் பணி புரிந்த எனது சகோதரனைப் போன்ற நண்பர் ஒருவர் பகிர்ந்து கொண்டார்.

இதெல்லாம் வேறு: சுமார் 50 ஆண்டுகளுக்கும் முன் ஏன் அதற்கும் முன் கூட இருக்கலாம் தோராயமாக அரை நூற்றாண்டுக்கும் முன் அந்த ஆலை தனது கழிவு நீரை வெளியேற்ற ஆரம்பித்த போது அப்போது காங்கிரஸ் கட்சியார்கள் தாம் அந்த ஊராட்சியின் அமைப்பை தக்க வைத்துக் கொண்டிருந்தார்கள் என்றும் கட்சி பேதமின்றி முன்னணியினர் அந்தக் கம்பெனி மேலாண்மையுடன் கலந்து பேசி குழாய்களில் கொண்டு செல்ல வேண்டிய கொண்டு செலுத்த வேண்டிய இரசாயனக் கழிவு நீரை நானே பார்த்திருக்கிறேன் அது நுரையுடன் வெளியேறுவதையும் மழைக்காலத்தில் அதன் வேப்பர் தொண்டை எல்லாம் அடித்து மூச்சுக் குழலை சிரமம் செய்வதையும் அப்படிப் பட்ட கழிவை எங்கள் ஊரின் நன்னீர் ஓடையில் செலுத்தி காவிரியில் சென்று கலக்கச் செய்கிறது.  செய்தது. முன்னணியினரும் அந்த அப்போதைய ஆலையின் மேலாண்மையும் மக்களுக்குச் செய்த நற் தொண்டு. அந்த நன்னீர் ஓடையில் படல் தடுக்கு கட்டி சேர்ந்த மீனை தின்ன பாம்பும் வருமாம் காலையில் பார்த்து கட்டியவர்கள் மீன்களை எடுத்துச் செல்வாராம். அப்படிப் பட்ட நன்னீர் ஓடை அன்று முதல் கழிவு நீர் ஓடையாகிப் போனது. இன்று மக்கள் பெருக்கம் ஊரின் விரிவாக்கம் அந்த ஓடையும் இல்லையெனில் கழிவு நீரெல்லாம் எங்குதான் எப்படித்தான் பாய்ந்து ஊர் தூய்மை அடைவது தேங்கி நின்று நாறினால் ஊரே பாழாகும். ஆனால் இந்த நீர் எல்லாம் காவிரியில் தான் கலக்கின்றன என்பதுதான் மறைக்க முடியா மறுக்க முடியா உண்மை.
The Best Water Filters Of 2020 - Reactual
இதன் விளைவு: வீட்டுக்கு ஒரு நல்ல தண்ணீர்க் கிணறு என்றிருந்த கிணற்று நீர் கழிவானது. பப்பாளித் தண்டு வாசம் முதலில் எடுக்க ஆரம்பித்து அதன் பின் நீச வாசம் வீசம்.கிணறு ஒவ்வொன்றாக மூடி ஊரெல்லாம் நீர் இல்லை என்ற நிலை உருவானது. நிலமும் சரியான விளை நிலமாக இருந்தது மாசு அடைந்தது. நிலத்தடி நீர் முற்றிலும் கேடடைந்தது.  இப்போது ஊர் மக்கள் குடிநீருக்காக வேறு மாற்று ஏற்பாடு நீர்வளமும் இல்லை என்ற நிலையில் ஆற்றுக்கு சென்று துவைப்பதும் குளிப்பதுமாக இருந்தனர். குடிக்க என்று சில குடங்கள் நீரை கம்பெனிக்காரர்கள் தர்மம் செய்து ஊராட்சிக்கு வழங்க ஊராட்சி சில குடிநீர்க் குழாய்களை போட்டு வீட்டுக்கு குடும்பத்துக்கு இரண்டு குடங்கள் விநியோகம் செய்தன அதற்கு வாட்ச்மேன் எனப் போட்டு. முதலில் ஊருக்கே மொத்தம் 8 குடிநீர்க் குழாய்கள் என்றிருந்ததை சற்று வீதிக்கொன்றாக மாற்றி விநியோகம் செய்தன. இந்நிலையில் ஊர் மக்கள் அணைக்கு குண்டு வெடி மிரட்டல், நீர்நிலையில் பாதுகாப்பின்மை காரணம் யாவும் சேர அரசும் பொதுப்பணித் துறை குடிநீர் வழங்கும் துறை யாவும் அரசு விதிகளுக்கு உட்பட்டு கம்பி வேலி இடப்பட்டு காவிரியின் ஆற்றில் எவரும் முன் போல் சென்று குளிக்கவோ நீர் கொண்டுவரவோ துவைக்கவோ முடியாது ஆகின முக்கியமான படித்துறைகளில். இன்று ஊரின் மக்கள் பெருக்கமோ சுமார் 5000க்கு அதிகம் இருக்கும்.

இப்போது மாதம் ஒன்றுக்கு குடி நீர்க் கட்டணம் ரூ. 220 அதிலும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் வரும் சுமார் 12 குடம். பெரிய குடும்பத்துக்கு போதாது. அதிலும் நமது மக்கள் மின் மோட்டார் வைத்து நீர் திருடுவார்கள். கேட்பார் இல்லை. அதிலும் செல்வாக்கு பெற்றவர்கள் நேரடியாக குழாய் செருகி பொதுக் குழாய்களிலிருந்தும் வீட்டுக்கு நீர் அனுப்பலாம். பெரும் மாடி வீடுகள் எங்கும் தலையில் மகுடங்களாக குடி நீர் டேங்க் இருப்பதும் நிலத்தடியில் பெரிய நிலத்தடி டேங்க்குகளும் இல்லாமல் புதிய வீடுகள் இல்லை. அவர்களுக்கும் அதே கட்டணம் மாதா மாதம் ஏழை எளியார்க்கும் அதே கட்டணம். மாதா மாதம் மின்சாரக் கட்டணம் போல் கணக்கெடுப்பு மீட்டர் ரீடிங் என்பதெல்லாம் இல்லை.

இதெல்லாம் சொன்னதெல்லாம் எங்கே காவிரிக் கரையில்... மேலும் காவிரி நதி தீரத்தின் ஓரத்தில்.  குடி நீர் விநியோகம் சரியில்லை. அதற்கு மேல் சொன்னால் அரசுத் துரோகமாகக் கருதப்படும் நான் நேரு சொன்ன வார்த்தையின் படி நாடு உனக்கு என்ன செய்தது என்று கேட்காதே, நாட்டுக்கு நீ என்ன செய்தாய் என்ற பாடத்தையே படித்ததால் அதற்கு மேல் எல்லாம் சொல்ல வழியில்லை.

குறிப்பிடத் தக்க மற்றொரு செய்தி என்னவெனில்: இந்நிலையில் எல்லா ஆலைகளுக்கும் நீர் எடுத்துக் கொள்ள அனுமதி. அதை விற்கிற ஆலைகளுக்கும் அனுமதி. அதைப் பார்த்து அரசும் குடி நீர் விற்பனை...அந்த குடி நீருக்கு ஒரு பேர் நீருக்கு எல்லாம் ஒரு பேர் , நிலத்துக்கு பேர், காற்றுக்கு பேர், என்று எல்லாவற்றுக்கும் ஒரு பேர் வைத்து விற்பார் எம் மனிதர் .அதற்கெல்லாம் எம் அரசு துணை நிற்கும். அவர்களைக் காக்கும். . சூரியனுக்கு இன்னும் பேர் வைக்க வில்லை. அதன் ஒளிக்கும் பேர் வைப்பார்கள் எதிர்காலத்தில்
Plastic Mineral Water, Available Packaging Size: 20 Ltr, Lucknow ...
. இப்போது மின் விளக்கு எங்கள் வீட்டு யு.பி.எஸ் உதவியால் வருகிற ஒளி இது எங்களுக்கு மட்டுமே எங்கள் கதவு தாண்டி வாசலில் விழுந்து நீங்கள் அதன் வழி நடந்து விடக்கூடாது  என கதைவை மூடி வைக்கும் மாமனிதர்கள் இவர்கள் எல்லாம் வாழும் நாடு ஊர் எங்களுடையது. ஏட்டில் இருப்பது யாவும் புவி மேட்டுக்கு வருவது எப்போ? இவர்களிடம் இருந்து நான் கற்றுக் கொள்ள வேண்டும்...எப்படி  வாழ என்று...முயற்சிக்கிறேன். பார்ப்போம்.. சொன்னால் வருத்தப் படுவீர்கள் இவர்கள் எல்லாம் பருவ மழை ஒத்தபடி பெய்யட்டும் என பாடும் ஒரு நல்ல மன்றத்தில் இருக்கிறார்கள். எந்த மன்றத்தில் எவர் இருந்த போதும் ஒவ்வொரு மனிதர்க்கும் தனித்தன்மை உண்டோ?

ஒரு முறை பொருளாதாரக் கஷ்டம் ஒரு நகை ஒன்றை அடகு வைக்கச் சென்ற எனது துணைவியார் அந்த  மாபெரும் இயக்க முறைமை சொல்லும் நபர் அந்த தங்கத்தை தேய்த்த தேய்ப்பையும்  உராய்ந்ததையும்  பார்த்து அவரிடம் வாழ் நாள் எல்லாம் போகக் கூடாது என வங்கிக்குச் சென்று வைத்தார். அப்படிப் பட்ட நபர்களே மாமனிதம் வழிகாட்டும் நல் வழிப் படுத்தும் மன்றங்களில் எல்லாம் முக்கியப் பொறுப்பாளர்களாகி நல் தொண்டு செய்து வருகிறார்கள். நிறைய தானம் தர்மம் செய்து வருகிறார்கள்...?

அரசின் குடிநிர் விநியோகமும் மக்களின் பகிர்தலும் இங்கே ஒத்திசைவுத் தன்மையுடன் இல்லை. எனவே குடி நீர் விற்பனை இது மது விற்பனையை விட அரசின் மக்களின் அதைப் பார்த்துக் கொண்டு வாளாவிருக்கும் மக்களின் பெரும் பாவமாகிவிட்டது....எதிரியை விட போராடுவோர்க்கு துணை வராமல் பார்த்துக் கொண்டு வேடிக்கையாக இருப்போரால் தாம் இந்த உலகு மாறாமல் இருக்கிறது.
Cauvery water dispute: Supreme Court to deliver verdict on ...
சொந்தச் சகோதரர்கள் துன்பத்திற் சாதற் கண்டும்
சிந்தை இரங்காரடி கிளியே
செம்மை மறந்தாரடி...பாரதி.


மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

.பி.கு: இன்னும் விவரமாகச் சொல்லப் போனால் இதைப் படிப்பவர்களில் எத்தனை பேர் கோவித்துக் கொள்வீர்களோ என சில விவரங்கள் எல்லாம் பேர் சார்ந்த அமைப்பு  ஊருடன் சொல்லப் படவில்லை. எதற்கு தேவையில்லாத பகை உட்பகை கருத்து முரண் என்ற எண்ணத்தில் மேலோட்டமாகவே சொல்லி இருக்கிறேன். அரசு எப்படி தனியார் முதலாளிகளுக்கு பொதுவான நீரை எடுத்து குடுவையில் அடைத்து அதற்கு பேர் எல்லாம் வைத்து விற்க தனியார் இயற்கையின் கொடையை இலாப நோக்கில் முதலாளித்துவம் ஆக்க இடம் தருகிறது என்றெல்லாம் சொல்லப் போனால் நான் அவன் இல்லை என்ற பேரும் சேர்ந்து கொள்கிறது எனவே நட்பு நாகரீகம் கருதி கண்ணியம் கட்டுப்பாடு காத்து கடமையை செய்திருக்கிறேன்.







Friday, July 10, 2020

வாழ்வது ஒரு முறை: கவிஞர் தணிகை

வாழ்வது ஒரு முறை: கவிஞர் தணிகை

Joythi Paswan Cyclist took his father 1200km

மரணம் எப்படி எப்படி எல்லாம் வருகிறது என்பதை அண்மையக் காலங்களில் பார்க்கும் போது வியப்படைவதைத் தவிர வேறு வழி இல்லை.

விவசாய நிலத்தை ரொட்டேட்டர் கொண்டு மண்ணை மேலும் கீழும் சுழற்றி பதப்படுத்தி உழவுக்கு உகந்த வண்ணம் மாற்றிக் கொண்டிருந்திருக்கிறார் ஒரு விவசாயி...தந்தை தேநீர் அருந்தச் சென்ற வேலையில் முன் அமர்ந்து அந்த ட்ராக்டரை இயக்கி ஓட்டிக் கொண்டிருந்த நபர் காது கேளா ஊமை. பின்னால் தேநீர் அருந்தச் சென்ற தந்தையின் மகன் ( அவர் மது அருந்தியிருந்தாரா என்பது சரியாகத் தெரியவில்லை) ட்ராக்டர் ஓட ஓட ஏற  முயன்று நழுவி பின்னால் விழ கால்கள் கைகள் தலை உடல் எல்லாம் சிதறி விட்டதாக எனது நண்பர் ஒருவர் குறிப்பிட்டார். பின்னால் துடித்துக் கொண்டிருந்த கை விரல்களை பார்த்த பின் தாம் அந்த ஓட்டுனர் என்ன எனப் பார்க்க ட்ராக்டர் வாகனத்தை நிறுத்தி இருக்கிறார்.

சில நாளைக்கும் முன் இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த நபர் ஒருவர் சினிமா ஸ்டில்லில் பார்ப்பது போல ஒரு காலும் அவர் வாகனும் நிலத்தில் சாலையில் ஒரு பாதி சாய்ந்த நிலையில் இருக்க உடலின் மறு பகுதி கால் கை எல்லாம் காற்றில் உறைந்து நின்றபடி இருந்ததாம் விறைத்தபடி நின்றபடி இருக்கிறதாம். எப்படி இப்படி இருக்க முடியும் என்று விசாரித்தால் முன்னால் போன ட்ரக் பின்னால் உள்ள ஹுக் கம்பியால் ஆன கொக்கியில் இவரது பொறியில் பட்டு உடனே மரணம் ஏற்பட்டு உடலின் செயல்பாடு நின்று அப்படியே இருந்திருக்கலாம் அதை உணராத ட்ரக் வாகனம் சென்று கொண்டே இருந்திருக்காலாம் என்பதையும் பார்த்த ஒரு நண்பர் விவரித்தார்.

எனது மூத்த நண்பர் ஒருவர் சொன்ன உண்மைச் சேதி ஒரு ரெயில்வே கிராஸ் அருகே ரயில் வருவதற்காக கேட் மூடப்பட்ட நிலைக்காக கணவனும் மனைவியுமாக ஸ்கூட்டரில் வந்தவர்கள் அந்த கேட் முன் சற்று முன்னதாக நிறுத்தி நிற்க அதே நேரம் வானில் நாகத்தை தன் கால்களில் பற்றி இருந்த கழுகின் கால்களில் இருந்து போராடிய நாகம் நழுவி விழுந்து நேராக ஸ்கூட்டரை ஓட்டி வந்தவர் தலையில் வீழுந்து நாகத்தால் கொத்தப்பட்டு அப்படியே வண்டியிலிருந்து கணவன் மனைவியின் கண்முன்னே சாய்ந்து இறந்ததாகச் சொன்னார் அதுவும் ஒரு உண்மைச் சம்பவம். ஹெல்மெட் எவ்வளவு அவசியம் பாருங்கள்...

இன்று ஒரு நண்பர் வலிப்பு மற்றும் மாரடைப்பால் இறந்ததும்,
சிறுமிகள் கற்பழிக்கப்பட்டு கொலைசெய்யப்படுவதும்
கொரானா கோவிட் 19 உலக அளவில் பல்லாயிரம் இலட்சக்கணக்கான உயிர்களைக் கொண்டு செல்வதும்

ஆக மரணம் என்பது எந்தெந்த வடிவத்திலும் கற்பனைக்கெட்டா முறைகளிலும் அனுதினமும் நடந்துதான் வருகின்றன‌

தினமும் எவராவது ஒருவர் இறப்பைப் பார்த்தபடி இருந்தும் நாம் மட்டும் இறக்கவே மாட்டோம் எனும் என்னும் எண்ணம் தான் மிகப் பெரிய நகைச்சுவை என்கின்றனர் சித்தர்கள்...

எனவேதான் சாதனையாளர்கள் தமது காலத்துக்கும் பின் தமது பெயர் நிலைக்க ஏதாவது செயல்களை நிலைக்க நினைத்து தஞ்சைப் பெரிய கோவில் கட்டியதும் கல்லணை கட்டியதும்  மகாபலிபுரம் ராஜேந்திர சோழ புரம் நிறுவியதும் கலை கல்விகளில் அறிவியல் சாதனை புரிவதும் எல்லாமாக எல்லாவற்றுக்கும் மேல் மனித குலம் சிறந்து வாழ ஏதாவது செய்ய முடியுமா என்று முயல்வதும்...பஞ்சம் பசி பட்டினி வறுமை தாகம் போன்றவற்றிலிருந்து மீட்க முடியுமா என்று முயல்வதும்...

புத்தர், மார்க்ஸ், காந்தி, தெரஸா, கலாம், ஏசு ,நபி என வேறு வேறு வழிகளில் முயன்று பார்ப்பதுமாக...

சர் ஆர்தர் காட்டன் போன்றோர் நீர் வளம் மூலம் நிலவளத்தை மேம்படுத்தி மனித குலத்திற்கு ஏதாவது செய்ய நினைத்ததும்

ஒவ்வொருவரும் இறந்து போகும்போது இவர் இன்னும் சில காலம் இருந்திருக்கலாம் என்றும் அட நல்லவேளை போய்ச் சேர்ந்தானைய்யா என்பதும் பெயர்களாகி அவரது பண்பை வெளிப்படுத்துபவையாகிவிடுகின்றன.
எனவே வாழ்வது ஒரு முறைதானே ஏதாவது மனித குலத்துக்கும் ஏனைய உயிர்களுக்கும் நல்லவற்றை செய்துதான் மடிவோமே...

வாருங்கள் ஒத்த மனதுடைய தோழர்களே...சிற்பி வேலாயுதம் அன்பு வழி புதிய பயணம் வழியே அழைக்கிறார்.

நன்றி
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை



பி.கு: அன்பு நண்பர் சூரியப் பிரகாஷ் ராய் குறிப்பிட்ட படி ஜோதி பாஸ்வான் என்ற சைக்கிள் வீராங்கனை கற்பழிக்கப்பட்டு  ஒரு மாங்காய்க்காக கழுத்து அறுபட்டு சாகடிக்கப் பட வில்லை என்றும் அவர் நலமுடனே இருக்கிறார் என அவரது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்கள்...அவர் பேருடைய ஜோதி குமாரி என்னும் 13 வயது சிறுமி அதே தார்பங்கா என்னும் இடத்தில் இறந்திருக்கிறார் என்றும் அவரும் கற்பழிக்கப்பட்டதற்கான எந்த சுவடும் இல்லை அவர் மின்கம்பி உரசி மின்சாரம் பாய்ந்தே இறந்துள்ளார் என்றும் உறுதிப் படுத்திய செய்திகள் இருக்கின்றன. அதன் பின் அவர் மாங்காய்க்காகச் சென்று அது நடந்ததா மின் கம்பி கட்டியது சரியா பிரேதப் பரிசோதனை உண்மையான தகவல்களை தந்துள்ளதா என்பதெல்லாம் கேள்விக்குரிய ஆய்வுக்குண்டான செய்திகள்தாம். ஊடகங்கள் எல்லாம் இப்படித் தான் உள்ளன. ஒரேயடியாக நம்பிவிடுவதற்கில்லை. நேற்று ஒரு பத்திரிகையில் கல்லூரி என்பதற்கு காலுறை என்று தட்டச்சு செய்து செய்தி வெளியிட்டதையும் கவனித்தேன்.

Tuesday, July 7, 2020

மது நுகர்வோர் ஏன் பொது இடங்களில் குடிக்கிறார்கள்? கவிஞர் தணிகை


மது நுகர்வோர் ஏன் பொது இடங்களில் குடிக்கிறார்கள்? கவிஞர் தணிகை

 மதுவை வீட்டுக்கே வேண்டுவார்க்கு அரசு அனுப்பி வைக்கலாமே என்று ஒரு பேச்சு மது விற்பனை பற்றி நீதிமன்றத்தில் வழக்கில் இருந்த போது நிலவியது.

அப்படி செய்து விட்டாலும் கூட பரவாயில்லை என்னும்படி எந்த இடத்தில் ஆனாலும் சரி கோவில், பள்ளி, இப்படி இட வித்தியாசம் இன்றி அதன் பின் புறம் முன் புறம் சாலை, பாலம் எங்கு எங்கு எப்படி எல்லாம் இடம் கிடைக்கிறதோ அங்கெல்லாம் பொது இடங்களில் திறந்த வெளிகளில் சாலையோரங்களில் எல்லாம்  இவர்கள் அருந்தி வருகிறார்கள். காலிப் புட்டிகளை போட்டுவிட்டும் சென்று விடுகிறார்கள்
வார விடுமுறையான ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு மற்றும் கடையடுப்பு என அரசு மதுக் கடைகள் மூடப்பட்டதால் திங்கள் கிழமையன்று ஒவ்வொரு மாவட்டத்திலும் 30 கோடி 40 கோடி என மது விற்பனை ஆனதாக அரசு புள்ளி விவரங்கள் சொல்கின்றன‌



 IYFS-100 day campaign: Youth clear up 9.7 ton liquor bottles ...
ஏன் டாஸ்மார்க் கடையிலேயே டேபுள் பெஞ்ச்/ மேசை இருக்கைகள் இருப்பதாகச் சொல்கிறார்களே அங்கேயே முடித்து விட்டு இவர்கள் திரும்பலாமே...

டாஸ்மார்க் கடையில் பார் வசதியுடன் இருப்பதை மட்டுமே அரசு அனுமதிக்கவேண்டும் . அப்படி மட்டுமே அனுமதித்தால் இந்த பொது இடங்களில் இவர்கள் இப்படி நடந்து கொள்ளும் முறை இல்லாமல் போகுமே.

இதற்கு தனியார் பெரிய ஹோட்டல்கள் தேவலாம் ஒதுக்குப் புறமாக எவருக்கும் தெரியாமல் எவரும் அறியாமல் பொது இடத்துக்கும் பொது மக்களுக்கும் பங்கம் வராமல் பொது இடங்களில் அனைவரும் பயன்படுத்தும் வண்ணம் இருக்கும் இடத்தை விட்டு விடுகிறது.

இந்த விடயத்தை அரசு சரியாக அமல்படுத்தினாலும்பரவாயில்லை.
Why Tamil Nadu may soon ban alcohol - BBC News
  நிறைய

மலைப் பாங்கான இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் எல்லாம் இவர்கள் ஆதிக்கம் இருக்கிறது என உண்மையான இயற்கை ஆர்வலர்கள் வருத்தப் படுகிறார்கள். பிராணிகள் விலங்குகள் எல்லாம் இந்தப் பிரயாணிகளால் துன்பம் அனுபவிக்கிறது என பதிவுகளும் பகிர்வுகளும் இருக்கின்றன.

தற்போது யானைகள் பெரும் எண்ணிக்கையில் இறந்து வருவதாக எல்லாம் செய்திகள் வருகின்றன. அவை எதனால் என்று ஆய்வும் நடந்து வருவதாகச் சொல்கிறார்கள். இந்த மனிதப் பயல்கள் செய்யும் அட்டகாசம் ஏதாவது காரணம் எனச் சொல்வார்கள் இயற்கையை வேறு யார் இவ்வளவு மாசு படுத்த இருக்கிறார்கள். எந்த உயிர்கள் இப்படி எல்லாம் செய்கின்றன.
 Kerala - Wikitravel
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

ஷிச்சோரி: கவிஞர் தணிகை

ஷிச்சோரி: கவிஞர் தணிகை

நாம் வெற்றி பெற வைப்பதை வெற்றியை மட்டுமே போதிக்கிறோம் அதை அடைய முயற்சி செய்யச் சொல்கிறோம்
ஆனால் எல்லாவகையிலும் முயன்று தோல்வி அடைந்தால் அந்த தோல்வியிலிருந்து எப்படி மீள்வது அதன் பின் எப்படி மகிழ்வுடன் வாழ்வது என்பதை சரியாகச் சொல்லித் தராமல் விட்டு விடுகிறேமே அதுதான் இங்கு நமக்கு முன் உள்ள பிரச்சனை என நாயகன் மூலமாக இந்தப் படத்தில் சொல்லப் படுகிறது.தற்கொலை தீர்வல்லவே எனச் சுட்டிக் காட்டுகிறது
These videos of Sushant Singh Rajput playing with kids will melt ...


சுஷாந்த் சிங் ராஜபுத் இறந்தது அண்மைக் காலத்தில் கொலையா தற்கொலையா என நிறைய சந்தேகங்களை எழ வைத்த நிலையில் அவரது தந்தை இந்த வழக்கை சி.பி.ஐ எடுத்து விசாரிக்க வேண்டும் என்று கோரியுள்ளார் இதெல்லாம் ஏற்கெனவே செய்திகளை கவனிப்பார் அறிந்த செய்தியே.

இவரின் தில் பச்சேரா என்ற ஜுலை 24ல் வெளியிடப்படும் படத்தின் ட்ரெய்லர் என்ட்கேம் ஆங்கிலப் படத்தை விட 24 மணி நேரத்தில் அதிகம் பார்க்கப் பட்டது என்ற சாதனையை ஏற்படுத்தி உள்ளது. 34 வயதுக்குள்ளாகவே இந்த மனிதர் தோனி படத்தில் நடித்து பிரபலமாகி இந்திப் படங்களின் முன்னணி கதாநாயகராக வந்து விட்டவர் எப்படி இப்படி முடிந்து போனார் என்பது கேள்விக்குறியுடனான ஆய்வுக்குள்ளாகும் நிகழ்வுதான்.
Happy Birthday MS Dhoni: Fans Remember Sushant Singh Rajput as ...
இவரது ஷிச்சோரி என்ற படத்தை நேற்று பார்க்க நேர்ந்தது இன்று தோனியின் பிறந்த நாளில் அவரது வாழ்வின் பகுதியை வண்ணப் படமாக நம்முன் உலவ விட்ட இந்த மனிதன் அசைவற்றுப் போனபின்னும் இவரது அதிர்வலைகள் இன்றைய உலகை அசைத்து வருவது இவரது சாதனைதான்.

ஷிச்சோரி என்றால் மேலோட்டமான என்பது பொருளாம். இந்தக் கதை ஒரு நுழைவுத் தேர்வு எழுதிய இளைஞர் அந்தத் தேர்வில் தேறாததால் தற்கொலைக்கு முயன்று சாகக் கிடக்கிறார் அவரை தாயும் தந்தையும் அவரது நண்பர்களும் எப்படி உயிர்ப்பிக்கிறார்கள் உயிர்ப்பிக்க வைக்கிறார்கள் என்பதுதான் கதை. கதை ஆரம்பமே சற்று சிக்கலாக இந்தப் படத்தை ஆரம்பிக்கிறது நெருடலாக பார்க்க நேரிடுகிறது. ஆனால் அதன் பின் தந்தை அவரது கதையை கல்லூரி வாழ்க்கையை விளக்க ஆரம்பிக்கும்போது நேரம் போவதே தெரியாமல் மகிழ ஆரம்பித்து விடுகிறோம்

அதனால் தான் இந்தப் படம் செப் 2019ல் வெளி வந்திருந்தாலும் பரவாயில்லை என்று பார்க்காதார் பார்க்கட்டும் என எழுதுமளவு பாதிப்பு.அதில் ஒரு கேள்வி சரி ஒரு நுழைவுத் தேர்வில் 10 இலட்சம் பேர் எழுதுகிறார் எனில் 10ஆயிரம் பேர் தேறி உரிய இடத்தைப் பெற்று விடுகிறார் எனில் மீதமுள்ள 9 இலட்சத்து 90 ஆயிரம் பேரின் நிலை என்ன அவர்கள் எல்லாம் இப்படி தோல்வி கண்டு தற்கொலைக்கு போவதென்றால் உலகின் நிலை என்ன ஆகும் என்ற கேள்வியும்

நாம் வெற்றி பெற வைப்பதை வெற்றியை மட்டுமே போதிக்கிறோம் அதை அடைய முயற்சி செய்யச் சொல்கிறோம்
ஆனால் எல்லாவகையிலும் முயன்று தோல்வி அடைந்தால் அந்த தோல்வியிலிருந்து எப்படி மீள்வது அதன் பின் எப்படி மகிழ்வுடன் வாழ்வது என்பதை சரியாகச் சொல்லித் தராமல் விட்டு விடுகிறேமே அதுதான் இங்கு நமக்கு முன் உள்ள பிரச்சனை என நாயகன் மூலமாக இந்தப் படத்தில் சொல்லப் படுகிறது.தற்கொலை தீர்வல்லவே எனச் சுட்டிக் காட்டுகிறது

அந்த வெற்றியை கிடைக்காத என்னதான் முயன்றாலும் எட்டாத கனியாகவே இருக்கும் அந்த வெற்றிக்காக நாம் எதை எல்லாம் அதிகம் விரும்புகிறோமோ எதை எல்லாம் வாழ்வின் பிடிப்பாக வைத்திருக்கிறோமோ எதை எல்லாம்  நேசிக்கிறோமோ அதை எல்லாம் தியாகம் செய்து போராடும் போதுதான் அந்த வெற்றி நமது கண்களுக்குத் தெரிய ஆரம்பிக்கும் என்ற சூத்திரமும் சொல்லப் பட்டுள்ளது.

மது அடிமையான ஒருவர் மதுவை கைவிடுகிறார் நோய் வாய்ப் பட்டு மருத்துவ மனை வரை சென்றும் கூட தாம் நட்புக்காக எடுத்துக் கொண்ட உறுதி மொழியை காப்பாற்றுகிறார் உள சுத்தியுடன்

ஒருவர் தமது உயிரினும் இனிய காதலியுடன் பேசுவதை தொடர்பில் இருப்பதை துறக்க முனைகிறார்

ஒருவர் பாலியல் புத்தகங்கள் படிப்பது சுய இன்பம் அனுபவிப்பது என்ற செயல்பாட்டிலிருந்து வெளியேற முயற்சிக்கிறார்

ஒருவர் அம்மா பாசத்தையும் மறுத்து அவருடன் பேசுவதையும் நிறுத்தி வைக்கிறார்

ஒருவர் சிகெரெட் புகைப்பதை  தொடர்ந்து புகைத்து வந்தவர் நிறுத்தி முயல்கிறார் இப்படி அந்தக் கல்லூரியில் மிகவும் கேவலமாக பார்க்கப் பட்டு எப்போதும் தோற்பவர்கள் என்ற பேருடன் இருக்கும்   4 ஆம் எண் விடுதியில் தங்கும் பொறியியல் கல்லூரி மாணவர்கள் பெரிதும் முயல்கிறார்கள் எப்படி குறிக்கோளை எட்டுகிறார்கள் என்பதுவே கதை.

அதை விட மேலும் எப்போதும் நமக்கு டங்கல், கனா,  தோனி போன்ற படங்களில் எல்லாம் கூட பொதுவாக எல்லாப் படங்களிலுமே எம்.ஜி.ஆர் பாணியில் வெற்றி பெறுவதையே காட்சிப் படுத்தி இரசிகர்களை இரசிக்க வைத்து மகிழ வைப்பதற்கு மாறாக ஒரு மாற்றாக கூடைப்பந்து கடைசியில் கூடையில் விழும் வெற்றி பெறுவார்கள் என்ற நிலையில் அது தவறி கீழே விழுந்து தோல்வி உற்றாலும் வெற்றி பெற்ற அணியினர் தாம் எப்படி வெற்றி பெற்றோம் என்பது தெரிவதாலும் இந்த தோல்வி பெற்ற அணி எப்படி எல்லாம் அதற்காக வெற்றி பெற முயன்றிருக்கிறது என்பதெல்லாம் உணர அனைவராலும் மதிக்கப் படுமளவு இவர்களுக்கு பாராட்டை பெற்றுத் தருகிறார்கள்.
IIT-Bombay to host a special screening of Chhichhore
வெற்றி பெறுகிறோம் தோல்வி பெறுகிறோம் என்பதுகூட முக்கியமல்ல அதற்காக எவ்வளவு முயல்கிறோம் உண்மையாக என்பதுதான் மிக முக்கியம் அதையும் தாண்டி வாழ்வு இருக்கிறது அந்த வெற்றி தோல்விக்காக வாழ்வை விட்டு விடக் கூடாது என்ற அரிய கருத்த பதிவு செய்கிறது.

மேலும் அந்த தற்கொலைக்கு முயன்ற இளைஞர் உயிர் பிழைத்து கல்லூரிக்குச் செல்கிறார் என்பதும் எந்தக் கல்லூரிக்கு என்பது எல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளப் படத் தேவையில்லை என்பதாக திரைப்படம் முடிகிறது

கலாம் கூட தாம் பைலட் ஆக வேண்டும் என நேர்முகத் தேர்வு சென்று அதில் 8 பேர்  தேர்வான சூழ்நிலையில் 9 ஆம் ஆளாக இருந்ததால் வெளியேறி இமயமலைச் சாரல் சென்று அங்கு ஒரு சாமியாரிடம் சென்று அவரது பேச்சைக் கேட்டு அறிமுகமாகி ஆறுதல் பெற்று அவரிடமிருந்து சில புத்தகங்களும் பரிசாகப் பெற்று திரும்பினார் என்று அவரது சுய சரிதையில் குறிப்பிட்டுள்ளார். அந்த சாமியார் யார் தயானந்த சரஸ் வதியா இல்லை வேறு யாரோ என்று பேர் இப்போது நினைவில்லை எனக்கு...

படத்தில் ஒவ்வொரு நடிகரும் சும்மா கலக்கி உள்ளார்கள். செக்ஸா என்பவராகட்டும் மம்மி என்பவராகட்டும் ஆக்சிட் அணில், பேவ்டா, டெரிக் இப்படி எல்லா நடிகர்களுமே மிகவும் அருமையாக செய்திருக்கிறார்கள் சுமார் 58 கோடி வரை செலவு செய்து எடுக்கப் பட்டு 215 கோடி வரை சம்பாதித்த பாக்ஸ் ஆபிஸ் ஹிட் படம் . இந்தப் படத்தை சுஷாந்த் சிங் ராஜ்புத்தும் பார்த்திருப்பார் இதைப் பார்த்த பின்னும் தாம் உயிர் கொடுத்து உருவம் கொடுத்து நடித்த இந்தப் படத்தைப் பார்த்த பின்னும் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறாரா இருப்பாரா என்பது நமக்கே கூட ஐயப்பாட்டை ஏற்படுத்துவதாக இருக்கிறது.ஷ்ரத்தா கபூர் நன்றாக இணையாக செய்திருக்கிறார். நன்றாக இரசிக்க முடிந்த திருப்தியான மொழி கடந்தும் பார்க்க வேண்டிய சில பார்வகளையும் கோணங்களையும் மாற்றிக் கொள்ளுங்கள் எனக் கேட்டுக் கொள்ளும் படம்

இதன் இயக்குனர் நிதேஷ் திவாரி தயாரிப்பாளர் நதியாவாலா கிராண்ட்சன் கம்பெனி போன்ற அனைத்து உழைப்பாளர்களையும் பாராட்டலாம். நல்ல மெசேஜ். நாட்டுக்கும் இளைஞர்களுக்கும் பெற்றோர்களுக்கும் நற்சேதி சொல்லும் தேவையான படம்.
Chhichhore box office collection day 6: Sushant Singh Rajput ...
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

Friday, July 3, 2020

(சிஸ்டமே சரி இல்லை) தனி மனிதர்களே சமுதாயத்தை பிரதிபலிக்கிறார்கள்: கவிஞர் தணிகை

(சிஸ்டமே சரி இல்லை) தனி மனிதர்களே சமுதாயத்தை பிரதிபலிக்கிறார்கள்: கவிஞர் தணிகை

Bacterial Clones Show Surprising Individuality | Quanta Magazine

சிஸ்டமே சரி இல்லை. குற்றம் செய்தவர்களை சத்தியமா விட்டு விடக் கூடாது என்றார் ரஜினிகாந்த். உடனே ஊடகங்கள் அந்தச் செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளன. பிறர் சொல்லிக் கொடுப்பதை பேசி செய்வார்கள் தாமாகவே பேசும்போது அது இன்னும் முக்கியத்துவம் பெறுகிறது. தலைவர்கள் நிதானமாகவே தெளிவாகவே ஒரு முடிவெடுத்தே  பேசுவார்கள் செயல்படுவார்கள். அது போலவே எனது இந்தப் பதிவும்.எம்.ஜி.ஆர் பாடல்களை எழுதிய பட்டுக் கோட்டையை விட எம்.ஜி.ஆருக்கு பேரும் புகழும் பொருளும் அதிகம் கிடைத்தது .

இங்கு ஜெயராஜ், பெனிக்ஸ் கொடூரக் கொலைகளில் பரபரப்பு நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்க மறுபடியும் ஒரு சிறுமியின் கொடூர வன்முறை புதுக் கோட்டையில் அரங்கேறிய செய்தி வந்து விட்டது. உ.பியில் மந்திரியைக் கொன்ற கூட்டத்தினரிடம் சிக்கி 8 காவலர்கள் அதில்  ஒரு துணை ஆய்வாளரும் சுடப்பட்டுள்ளனர். கொலைகாரர்கள் கூரை மேல் ஏறி நின்று காவல் படையை துப்பாக்கி குண்டுகளுக்கு இரையாக்கி உள்ளனர்.

இந்தப் படுகொலைகளில் (பெனிக்ஸ்...) பயன்படுத்தப் பட்ட லத்தி இரத்தம் தோய்ந்ததைக் காணோம் என்றார்கள்,சிசிடிவி காட்சிகள் அன்றாடம் அழிக்கப்படுமாறு செய்திருக்கிறார்கள் என்றார்கள் ஆனால் இப்போது அது கொஞ்சம் கிடைத்திருப்பதாக விசாரித்து வரும் ஐ.ஜி. சங்கர் சற்று முன்னர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும்போது கூறியிருந்ததை கவனித்தேன்.

 ரேவதி முக்கிய கண்ணால் கண்ட சாட்சி பயந்து கொள்கிறார்.அவரின் கணவர் சந்தோசம் கூட வீட்டுக்கு பாதுகாப்பு கேட்டுள்ளார். தமிழக அரசு ஒரு மாதம் விடுமுறையில் சம்பளத்தைக் கொடுத்து அவரின் வீட்டுக்கு பாதுகாப்பு அளித்து வருவதை தொலைக்காட்சி மற்றும் புகைப்படங்கள் சொல்கின்றன. அவரின் பெண் குழந்தை உண்மையைச் சொல்லும்மா எனச் சொல்லியதாக செய்திகள் இருக்கின்றன....உண்மைதான் இந்த சமுதாயத்தில் எப்படி எல்லாம் ஒளிந்து வாழ வேண்டிய பயந்து வாழவேண்டிய பாதுகாப்பு கேட்க வேண்டிய நிலையில் இருக்கிறது என்பதற்கு இதெல்லாம் சாட்சிகள்.

இந்நிலையில் ஒரு காவலர் அப்ரூவராக மாறப் போவதாகவும் செய்தி புதிய  தலைமுறைச் செய்திகளில் வந்தது.ப்ரண்ட் ஆப் போலீஸ் மேலும் விசாரணை இருக்கிறது என செய்திகள்... நல்ல வேளை பிரதீப் பிலிப் என்னும் ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக்கும் கூட ஒரு முறை ரெஸ்பான்ஸ் செய்து ஒரு கடிதம் அனுப்பி இருந்தார் அவர்தாம் அந்த  பிரண்ட் ஆப் போலீஸ் திட்டத்தின் நாயகன்.நானும் ப்ரன்ட் ஆப் போலீஸ் ஆக உள்ளூர் காவல் நிலையம் வரை சென்று அவரது கடிதத்தைக் கொண்டு சென்று காட்டி விட்டு வெகு நேரம் காத்திருந்தேன். ஆனால் அவர்களுக்கு என்னைப் பிடிக்கவில்லை போலும் பின்னால் பார்க்காலாம் என்று ஏதோ சமாதானம் செய்து திருப்பி அனுப்பியவர்கள் அதன் பின் அதைப் பற்றி எந்தப் பேச்சையும் எடுக்க வில்லை. நானும் விட்டு விட்டேன். அது நடந்து வெகுகாலம் பல்லாண்டு இருக்கும் ஆனால் இந்த அளவு தான் நினைவு இருக்கிறது.... அவர் என்ன நோக்கத்துக்காக ஆரம்பித்தாரோ இந்த சம்பவத்தில் அவர்களும் இருக்கிறார்கள் ஆனால் நல்ல பேருடன் அல்ல.
Individualism: True and False - Foundation for Economic Education
நான் சொல்ல வருவதைச் சொல்லி விடுகிறேன் அதற்குள் எனது மின்னிணைப்பு துண்டிக்கப்பட்டு மறுபடியும் தொடர்புக்கு வந்துள்ளது. என்னிடம் யு.பி.எஸ் வேறு தற்போதைக்கு இல்லை இன்டர்நெட் மோடம் கனக்டிவிட்டி செய்யும் அடாப்டர் வேறு அடிக்கடி போய் திடீர் திடீரென 150 ரூ சூடு போட்டு விடுகிறது . இதை எல்லாம் ஏன் சொல்லுகிறேன் எனில் நமது சிஸ்டம் சரியில்லை என்பதற்காக. அது இலஞ்ச இலாவண்ய வம்பு தும்புகளில் வெகுவாக மாட்டிக் கொண்டு உள்ளது. எமது கணினி அமைப்பு கூட சிஸ்டம் என்றுதான் சொல்லப்படுகிறது. எனக்கு போதிய வசதி இன்மையால் அதன் பசிக்கு போதிய மின்சார உணவு கிடைப்பதில்லை.

கல்வி முறை சரியில்லை என்றால் நாங்கள் எல்லாம் எதிலிருந்து படித்து வந்தோம் என்ற குரல் இருக்கிறது எழுகிறது உண்மைதான். இந்த சம்பவத்தில் காவல் துறை இருக்கிறது. இவர்கள் இளங்கலை முதுகலை படித்தவர்கள் ஆய்வாளர்கள், துணை ஆய்வாளர்களாக உள்ளனர். ஐ.பி.எஸ் படித்த கனவான்கள் எஸ்பி டி.எஸ்.பி என்ற நிலையில் இருக்கிறார்கள். இவர்களுக்கு சேவகம் செய்யும் தலைமைக் காவலர், காவலர் அவர்களுடன் ப்ரண்ட் ஆப் போலீஸ். இது ஒரு துறை

அடுத்து மருத்துவக் கல்வி பயின்ற மருத்துவர் என்றால் வேறு யார் தெய்வம் என்பார்களே அந்த வெண்ணிலா என்ற மருத்துவர் அவர் மேல் உள்ள குற்றச் சாட்டுக்கு அவர் என்ன நிலையில் உள்ளார் என்றும் செய்திகளில் இன்னும் தெரிய வரவில்லை.
Biochemical Individuality - Patricia Daly
அடுத்து சட்டத்தில் தேர்ச்சி பெற்ற நீதி மன்ற நடுவர்(ஜுடிசியல் மாஜிஸ்ட்ரேட்) அவர் பேர் சரவணன் என்று சொல்லக் கேள்வி. அவரைப் பற்றி அவர் கைது செய்யப் படுகிறாரா அல்லது என்ன விசாரணை அவர் மேல் என்று ஊடகத்தில் இன்னும் செய்திகள் பரவலாக பிரபலமாக கிடைக்கவில்லை. அவர் எப்படி சரியாக விசாரிக்காமலேயே பார்க்காமலேயே சிறைக்கு செல்ல அனுமதித்தார்.

அடுத்து சிறைக் காவலர், வார்டன் போன்றோர்  இப்படி சமூகத்தின் தூண்களான துறைகள் மெத்தப் படித்தவர்கள் இந்தக் குற்றப் பிண்ணனியில் தொடர்புடையவராக இருக்கின்றனர் என்பது ஆதாரப் பூர்வமாகி இருக்கிறது.

சிறை என்றாலும் காவல் துறை என்றாலும் அதன் மேல் பொதுஜனத்துக்கு நம்பிக்கை ஏற்படுமாறு இவை எல்லாம் இல்லை. நல்லவர்கள் காவல் துறைக்குச் செல்ல அஞ்சுகிறார்கள் அதிலும் பெண்கள் காவல் நிலைய வாசலை மிதிக்கவே பயப்படுகிறார்கள் என்பதெல்லாம் செய்திகள் இதில் உண்மை இல்லாமல் இல்லை.

ஆக அனைவர் மேலும் சட்டம் நீதி நிலைநாட்டப் படும் என்றும் சி.பி.சி.ஐ.டி . தமிழக அரசு ஆகியவை அறிக்கை கொடுத்துள்ளன. சி.பி.ஐ தனது கடமையைச் செய்யுமாம்.
Rugged Individualism Cannot Save Us. Only Enlightened Collectivism ...
 ஆக முக்கியமாக எல்லாத் துறைகளிலும் படித்த கனவான்கள்: மருத்துவம், சட்டம் , நீதி, இளங்கலை, முதுகலை எல்லாம் ஆம் எல்லாக் கல்வியும் கற்றுக் கொடுக்கப் பட்ட மனிதங்களே இவை யாவும். ஆக கல்வி என்பது இங்கு குயுக்தி குள்ளநரித் தனத் தந்திரம் ஆகியவற்றைக் கற்றுக் கொடுத்துள்ளது இவர்கள் படிக்காத பாமரர்களையும் சட்டம் பற்றி எல்லாம் பெரிதும் தெரியாதாரை எல்லாம் தமக்குத் தேவையான வழி வகைகளில் வழிப் படுத்திக் கொள்கிறார்கள் அல்லது கொல்கிறார்கள்...

இந்த நடைமுறைகளில் ரேவதி தலைமைக் காவலர், மதுரை உயர்நீதிமன்றக் கிளை, ஊடகங்கள் ஆகியவை பெரிதும் பாராட்டப் படும் வண்ணம் தோன்றக் காரணம் ஏற்கெனவே இருந்து வரும் நமது கட்டமைவு எப்படி நடந்து வந்து கொண்டிருக்கிறது என்ற நிலைதான். இல்லையெனில் இந்த மூன்று அம்சங்களுமே தமது கடமையைத் தான் செய்து வருகிறார்கள் என்பது விளங்கும். அவரவர் கடமையைச் செய்வதே பெரும் சாதனையாக விளங்கும் வண்ணம் அரசமைப்புகள் இயங்கி வருகிறது என்பது இவற்றின் மூலம் தெரியவருகிறது. என்றாலும் இந்த மூன்று அம்சங்களில் ஈடுபடும் மூன்று நிலையில் உள்ளார்க்கும் உலக மனித குலமே நன்றி செலுத்த கடமைப்பட்டுள்ளது.  ஆனாலும் இழந்த அந்த 2 உயிர்களுக்கு அது போல தினமும் இரையாகிவரும் உயிர்களுக்கு இவை எல்லாம் எப்படி நீதியாக முடியும் என்றுதான் யோசிக்க வேண்டி இருக்கிறது. இது போல எண்ணிலடங்கா நீதி மறுக்கப்பட்டிருக்கின்றன மறைக்கப்பட்டிருக்கின்றன என்று மனித உரிமை ஆணையம் சொல்லி வருகிறது

இந்நிலையில் இதில் ஈடுபட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் என்பார் தமது வெண்ணிறக் காரில் ஏறித் தப்பித்து செல்லும்போது ஜெயங்கொண்டம் என்ற சோதனைச் சாவடியில் சி.பி.சி.ஐ.டி கடிவாளத்தால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளதாக புதிய தலைமுறை செய்தி வாயிலாக அறிந்தேன். விசாரிக்க வந்த நீதிமன்ற நீதிபதியையே நீ என்னடா செய்ய முடியும் என்று தரக்குறைவாகப் பேசிய தலைமைக் காவலர் முத்துராஜ் சரணடைய இருப்பதாகவும் செய்தி.அந்த நீதிபதிக்கு முகமன் கூட செய்யாத காவல் துறை உயர் பதவி அலுவலர்கள் பற்றி செய்தி பெரிதாக இல்லை. அதனிடையே நிறைய உயர் அதிகாரிகள் பதவி உயர்வும் இடமாற்றமும் நிகழ்ந்துள்ளன.

காவல்துறை டி.ஜி.பி. அறையில் மக்கள் நம் எஜமானர்கள் அவர்களின் சேவகர்களே நாங்கள் என்ற காந்தியின் வாசகம் இடம் பெற்றுள்ளதை உயர் காவல் துறை அதிகாரி ( அதிகாரி என்பதன் மறு பெயர் அலுவலர் என்பதாகும்)கூறினார் இந்த சம்பவத்துக்கும் பின். பெண்களை எப்படி நடத்த வேண்டும், சிறுவர்களை எப்படி நடத்த வேண்டும் என்றெல்லாம் நன்றாக சொன்னார். கேட்பதற்கு நன்றாக இருக்கிறது.  அவர் சொல்படி அதன் படி எல்லாக் காவலரும் காவல் துறையும் நடந்தால் உண்மையிலேயே எவ்வளவு நன்றாக இருக்கும்...
An Analysis of American Individualism Culture – haosuyawen
மன்னிக்கத் தெரிந்தவற்றை மன்னிப்பதும் அடங்காமல் ஆர்ப்பரித்து குற்றப் பிண்ணனி கொண்டாரையே தண்டிப்பதும் அதுவும் சட்டப் பிண்ணனியுடன் நீதியின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத் தரவேண்டியதுமான காவல் துறைப் பணி தூய்மையாக நடக்கட்டும் ஒழுக்கம் நிலவட்டும். நற்பணி செய்வாரின் புகழ் நீடித்தோங்கட்டும்.

அந்தக் காலத்தில் சிறு சிறு குற்றங்கள் செய்வார்க்கு இந்த மரத்துக்கு இரண்டு குடம் தண்ணீர் ஊற்றி விட்டுப்
 போ, ஒரு குயர் பேப்பர் வாங்கிக் கொடுத்து விட்டுப் போ, என்றெல்லாம் தண்டனை கொடுத்து அவர்களை மன்னித்த காவல் நிலையம் பற்றி எல்லாம் எனது தந்தை சொல்லக் கேட்டதுண்டு.அப்போதெல்லாம் பெரிதாக எவரையுமே காவல் நிலையத்துக்கு அழைத்துக் கொண்டு எல்லாம் செல்ல மாட்டார்களாம் ஏன் எனில் பெரிதாக அப்படி எந்தப் புகாரையுமே மக்கள் கொடுக்கவும் மாட்டார்களாம். ஆனால் இந்த வழக்கை தாமாக ஒரு உயர் நீதிமன்றமே கையில் எடுத்திருக்கும் அளவு நிலை வந்திருக்கிறது.
Professor Chiye Aoki - The Neurobiological Roots Of Individuality ...
இது போன்ற செரிக்க முடியாத மனித குல இழிவான சம்பவங்கள் இனியாவது நடக்காது இருக்க இயற்கை நமக்குத் துணை புரியட்டும். ஏன் அந்தச் சூழ்நிலையில் மேல் அதிகாரிகளுக்கு இதைப் பற்றி வேறு எவருமே தெரிவிக்க முடியவில்லை அப்படித் தெரிந்திருந்தால் தடுத்திருக்கவும் உயிர் போகுமளவு நிலை இருந்திருக்காதே என அந்த உயர் காவல் அதிகாரி சொல்வது எனக்கும் கூட சரியாகப் படுகிறது. அது போன்று செய்திருந்தால் இருவர் உயிரும் போயிருக்காதோ...என்ற நப்பாசை...நடந்து முடிந்த பின்னே சித்திரத்தை மாற்றி எழுதவே முடியாதே...இவர்கள் எல்லாத் தடயங்களையும் அழிக்கும் அளவுக்கு காலக் கெடுவை எடுத்துக் கொண்டிருந்திருக்கிறார்கள் என்பதும் செய்தி.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை