Sunday, April 28, 2019

அரசு அலுவலகங்கள் இயங்குகிறதா? கவிஞர் தணிகை

அரசு அலுவலகங்கள் இயங்குகிறதா? கவிஞர் தணிகை
Image result for govt offices are  not working in india


அரசு அலுவலகங்கள் இயங்குகிறதா? மக்களாட்சிதான் நடக்கிறதா? மத்திய மாநில அரசுகள் மக்களின் குரலுக்கு மதிப்பளிக்கின்றனவா இது போன்ற கேள்விகளுக்கு பதில் இல்லை என்பதுதான்.

எடுத்துக் காட்டாக: எங்கள் ஊராட்சிப் பகுதியில் 50 ரூபாய் இருந்த குடி நீர்க் கட்டணத்தை மாதம் ஒன்றுக்கு 220 உயர்த்தி விட்டார்கள் எந்தவித ஆட்சேபணைக்குரலுக்கும் மதிப்பளிக்காமலே.

இது குறித்து நான் மாவட்ட ஆட்சியருக்கு மின்னஞ்சல் மூலமும், தபால் மூலமும் , தமிழக முதல்வரின் குறை தீர்க்கும் பிரிவுக்கு மின்னஞ்சலோ, ஆன்லைனிலோ முயற்சி செய்தும் அவை ஏற்கும் நிலையில் இல்லாததால் தபால் வழியிலும், அதற்கு மேல் கால அளவுக்குப் பின் நுகர்வோர்நீதிமன்றத்திற்கும் கூட தபால் அனுப்பினேன்  அத்துடன் சேலம் மேட்டூர் ரயில் பற்றியும் நுகர்வோர் நீதிமன்றத்துக்கும் குறிப்பிட்டிருந்தேன்.

ஆனால் இதுவரை எந்த அரசு அலுவலகத்திலிருந்தும் இது குறித்து எந்தபதிலுமே இல்லை. தனி மனித குரலுக்கும் பிரதிநிதித்துவத்துக்கும்தான் இந்நிலை என்று நினைக்காதீர்

 ஒரு பதிவு பெற்ற அரசு ஊழியர்  அவர் கல்வி நிலையம் சார்ந்த பிரதிநிதித்துவத்துக்கும் நிலை இதுதான். அவர் கல்வி நிலையம் சார்ந்த ஒரு முக்கியமான அடிப்படைத் தேவையை நிறைவேற்றும் ஒரு மின்சாரப் பொருளை சீர் செய்ய அவர் மிகுந்த கால அளவை செலவிட்ட பின் அந்த உபகரணம் பயன்படாது எனச் சொல்வதற்கே 18 மாதங்கள் இத்தனைக்கும் அவர் மனு நீதி நாள், கிராம சபை  வார மாதாந்திர அரசு தொடர்பான கூட்டங்களில் எல்லாம் இது குறித்து எழுத்து வடிவில் பதிவு செய்ததற்கே இந்நிலை மேலும் அந்த குறை சரி செய்யப்படவே இல்லை என்று அவர் தெரிவித்தார்.

கலைஞர் கருணாநிதி, செல்வி ஜெயலலிதா முதல்வர்களாக இருக்கும் போது இரு முறை நான் முதல்வர் குறை தீர்க்கும் பிரிவுக்கு எழுதி அதற்கு பதில் பெற்று ஏன் சரியான நடவடிக்கை எடுத்ததையும்  கண்டிருக்கிறேன்.

ஆனால் இப்போது மாநில மாவட்ட ஏன் மத்திய நிலையும் அப்படியேதான் பிடித்துவைத்த கல்லாக இருக்கிறது.

அன்றைய காலக் கட்டத்தில் ஒரு கடிதம் எழுதியதற்கு பதிலை குடியரசுத் தலைவராக இருந்த மக்கள் குடியரசுத் தலைவரே எழுதினார்.

எல்லாமே ஆன்லைனில் விண்ணப்பித்து செய்து கொள்ளலாம் என பீற்றிக் கொள்கிறார்கள். ஆனால் எந்த வித அசைவும் இல்லை. இலஞ்சம் இல்லாமல் எந்த வித பதிவும், சான்றிதழ்களும்  மக்களுக்கு கிடைப்பதில்லை.

மோடி அரசும், எடப்பாடி அரசும் தமது அரசை எப்படி தக்க வைத்துக் கொள்ளலாம் என குள்ள நரித்தந்திரம் செய்வது ஒன்றிலேதான் குறியாக இருக்கிறதே ஒழிய எந்த வித பணியிலும் கவனம் செலுத்துவதில்லை என்பது நான் மேல் சொன்ன இரண்டு உதாரணங்கள் வழியே நீங்கள் தெரிந்து கொள்ள முடியும்.

எம்.எல்.ஏ, எம்.பி பற்றி சொல்லவே வேண்டாம் மிகவும் அருகே உள்ள காவிரியும் மேட்டூர் அணையும் இருக்கும்போதும், நாடு விடுதலை ஆகி சுமார் 70 ஆண்டுகளுக்கு மேலான பிறகும் குடி நீர் பிரச்சனையைக் கூட தீர்க்காத மக்கள் பிரதிநிதிகள்...
நல்ல அரசு, நல்ல மக்கள், நல்ல மக்கள் பிரதிநிதிகள், நல்ல அரசின் அலுவலகங்கள்...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Saturday, April 27, 2019

இது ஆட்டம் பாட்டத்தில் ஊடகத்தின் போதையல்ல உண்மையின் வாழ்வு போராட்டத்தின் நிகழ்வின் உயர்வு: கவிஞர் தணிகை.


Image result for gomathi marimuthu





goomathi_marimuthu
Image result for gomathi marimuthu
Image result for gomathi marimuthu

Image result for gomathi marimuthu
Related image

கிழிந்த ஷூவுடன் ஓடித்தான் ஆசியேட் போட்டியில் முதல் இடம் பிடித்தார்.தனது விமான கட்டணத்தை தானே செலுத்தி இருக்கிறார். எந்த ஸ்பான்சர்ஷிப்பும் கிடைக்கவில்லை. வேலம்மாள் நிறுவனமே உதவி இருக்கிறதாம். கர்நாடகாவில் இன்கம் டாக்ஸில் வேலை கிடைத்ததால்தான் ஓரளவு வாழ்வு கிடைத்திருக்கிறதாம்...

Image result for gomathi marimuthu

Gomathi marimuthu role model is: Santhi who missed her Silver medal due to gender issue.

Image result for gomathi marimuthu




Image result for gomathi marimuthu

Image result for gomathi marimuthu

Image result for gomathi marimuthu

Image result for gomathi marimuthuImage result for gomathi marimuthu


மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை




Sunday, April 21, 2019

மேட்டூரில் நள்ளிரவில் பெரு மழை...கவிஞர் தணிகை

இயற்கையின் கொடை மழை: கவிஞர் தணிகை
 Image result for heavy rain in summer

நீண்ட காலம், நீண்ட நாட்களுக்கும் பிறகு நேற்று இரவு அதாவது ஏப்ரல் 20, சித்திரை 7 இரவில் எந்த வித ஆர்ப்பாட்டமும் இன்றி எவருக்கும் எந்தவிதமன தொந்தரவும் இன்றி மழை எங்கள் மேட்டூரில் பெய்தது. அது பெருமழை என்று விடிந்த பின் தான் நாங்கள் அறிந்தோம். அது 7 செ.மீ இருக்கும் என செய்தி வழி அறிந்தோம்.

இவ்வளவு ஒரு கடும் கோடையில் எல்லா இடங்களிலுமே நீர் தேங்குமளவு இருந்தது. எல்லார் வாயிலுமே ஒரு நல்ல வலுவான மழை என்றே பெயர் பெற்றது.

கடும் கோடையின் தாக்கத்தை தாளமுடியாமல் இயற்கையை பல முறை இது போல மழை வந்து அனைத்து உயிர்களையும் காக்க வேண்டும் என பிரார்த்தனை செய்தது வீண் போகவில்லை.

மனிதமே ஏமாற்றுகிறது . இயற்கை ஏமாற்றுவதில்லை.

பசும்புல் தலை காண்பது அரிது என்பார் வள்ளுவர்.
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது ... குறள்
Related image
இந்த பெருமழை கூட போதாத பூமிச் சூடு. இன்னும் சாலைகளில் சூடு அடங்கவில்லை.

ஆனால் எல்லா உயிரினங்களுமே புத்துயிர் பெற்றன.

பறவைகளும், பூச்சியினங்களும் குதூகலித்து அதன் கத்தலிலேயே ஒரு மகிழ்வை தெரிவிப்பதை அதன் சத்தத்தில் இருந்து தெரிந்து கொள்ள முடிந்தது.

மரங்களும் செடி கொடிகளும் பிழைத்துக் கொண்டோம் என பெருமகிழ்வில் மிதந்தபடி இருக்கின்றன...
Image result for heavy rain in summer
இந்த மழைக்கே நமக்கு இது போன்ற புத்துணர்வு இருக்கும்போது அந்தக் காலத்தில் மன்னர் காலத்தில் அமைச்சரே மாதம் மும்மாரி பொழிகிறதா என்பாராம் ... மாதம் மூன்று முறை பெய்து வந்த நாளில் உலகும் ஊரும் நாடும் எப்படி செழித்திருக்கும், எப்படி தாவரங்கள் செழித்திருந்திருக்கும், எவ்வளவு சத்தான உணவும் உயிர்களும் இருந்திருக்கும் என்ற கற்பனையே நம்மால் செய்ய முடியவில்லை.

இயற்கையின் கொடை மழை
செயற்கையின் பிழை மின் தடை

அன்று இரவு முழுதும் மின் தடையை ஏற்படுத்தி....தேர்தல் முடிவுக்குப் பின் குடிநீர், மின் தடை யாவும் அமலுக்கு வந்தநிலையில்...

இயற்கையின் கொடை இந்த மழையை வணங்கி வாழ்த்தி பிரார்த்திக்கிறோம்.

இது போல்  பல மழையை இயற்கை வாரி வழங்கட்டும்.

பூமிச் சூட்டுடன் தொடர்புடைய நமது உடலும் சற்று சூடு குறைந்தது மகிழ்வானது என்பதை எத்தனை வார்த்தையில் சொன்னாலும் அது மிகையாகாது

நிலை இப்படி இயற்கையுடன் சார்ந்திருக்கையிலேயே இந்த மனிதம் மட்டும் எப்படி இப்படி பேராசையுடன் அழித்து அழிந்து வருகிறது...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.
 பி.கு: இலங்கை குண்டு வெடிப்புகளும் உயிர்ச்சேதங்களும், ஐ.பி.எல் கிரிக்கெட் கூட்ட விழாக்களும் விளையாட்டுகளும், விஜய் டிவியின் வீடும், 25 இலட்ச தங்க நகைகளும், 10 இலட்சங்களும் பரிசாக போகும் நிகழ்வுகளுக்கிடையில் இந்த மழை பற்றி நான் நேற்றிலிருந்தே குறிப்பிட விரும்பினேன். ஏன் எங்கள் இயக்க நண்பர் மணி மறைவுக்கும் பின்னும் இது பற்றிக் குறிப்பிட்டிருக்கிறேன். அவ்வளவு முக்கியமானது மழை.  அத்துடன் நிழலற்ற நாளையும் மறந்தோம் அந்த 12 மணியளவில் வெயிலில் நின்று பார்க்கவும்...

எஞ்சினியர் மணிக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்

சற்று முன்னர் கிடைத்த செய்தி: கவிஞர் தணிகை


Image result for salem engineer c. mani classical construction

சேலம் பொறியாளர் சி.மணி அவர்கள் சென்னை செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்திருந்த நிலையில் மாரடைப்பால் காலமானார் என்பதை எங்களது சகோதர நண்பர்  சிற்பி. கொ. வேலாயுதம் அவர்கள் சற்று முன்னர் என்னிடம் தெரிவித்தார்.

அவரது உடலுக்கு உண்டான இறுதி மரியாதை இன்று மாலை நடைபெற்று இன்று மாலையே நல்லடக்கம்  செய்யப்படும் என்றும் செய்திகள் உள்ளன.

சிறிய வயதுதான். வயதுக்கு வந்து மணமாகா ஒரு மகனும் மகளும் படித்து முடித்து பணியில் இருக்கிறார்கள் என்றும்  நான் சந்தித்த காலத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

நல்ல சுறு சுறுப்பான நண்பர்.
 நான் தலைமை ஏற்க முடியாமல் இயக்கத்தை விட்டு பொறுப்பை இவர் கையில்தான் கொடுத்து வழிவிட்டேன்.

எல்லா பணியையும் இழுத்துப் போட்டு செய்து முடிக்கும் ஆற்றல் பெற்ற மனிதர். இவரும் இவரது நண்பரும் கிளாஸிக் பிரிண்டர்ஸ் என்ற நிறுவனத்தையும்,  இவர் சேலத்தில் மிகவும் பிரபலமான கிளாசிக் கன்ஷ்ட்ரக்சன்ஸ் என்ற  கட்டுமான நிறுவனத்தையும் நடத்தி வந்தார். இவர் ஒரு காலத்தில் சேலம் பொறியாளர் சங்கத்துக்கும் தலைவராக இருந்து பணியாற்றி இருக்கிறார். மேலும் எப்போதும் சிறந்த அரிமாவாக அரிமா சங்கப் பொறுப்புகளில் வீற்றிருந்து செயல்பட்டவர்.
Image result for black symbol
எங்கள் நவ இந்திய நிர்மாணிகள் இயக்கம், காந்திய வழியில் ஊருக்குப் பத்துப்பேர் இயக்கம், தமிழக இலட்சியக் குடும்பங்கள் ஆகியவற்றில் தோளோடு தோளாக நின்று பணியாற்றியவர்.

இராம மூர்த்தி நகரில் நடைபெற்ற தலைமை பொறுப்பு பயிற்சி முகாமில் அப்போதைய பாரதிய ஜனதாவின் நம்பிக்கை நட்சத்திரமாக சேலத்தில் மிளிர்ந்த ஆடிட்டர் ரமேஷ், பீட்டர் அல்போன்ஸ், கம்ப்யூனிஸ்ட் ராசகோபாலன் போன்றோர் எல்லாம் கலந்து கொண்ட பல நாள் முகாமில் நிறுவனர் வேலாயுதத்துக்கு அடுத்த தலைமைப்பொறுப்பில் தணி, மணி, முனி என எங்களைக் குறிப்பிட்டு அழைப்பிதழ் செய்திருந்தனர்.

அந்த முகாமில் கவிதையாக: நதி நீர் இணைப்பு பற்றி நான் கொடுத்த கவிதையை முடித்ததும் உணர்ச்சிப் பெருக்கில் என்னை வந்து முத்தமிட்டு என்னை இறுக்கி அணைத்தவர் இந்த மணி. அப்போது கலாம் வாஜ்பாயால் எப்போதும் குடியரசுத் தலைவராக முன் மொழியப்படுவார் என்றிருந்த நேரம். அந்தக் கவிதையில் நிறைய இடங்களில் கலாம் கலாம் என்றே முடிந்து இருக்கும்...

 சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் காவிரி நீரைக் கர்நாடகாவிடம் கேட்டு நடத்திய அடையாள உண்ணோ நோன்பு போராட்டத்தின் போது நான் ஆற்றிய நதி நீர் இணைப்பு பற்றிய உரை வீச்சை, கங்கை காவிரி இணைப்பு காலத்தின் கட்டாயம் என்ற சிறு கையேடாக வெளியிடுவதில் பெரும் ஆர்வம் காட்டி அதை தமிழகம் ஏன் உலகெங்கும் தமிழ் கூறும் நல் உலகிற்கு எடுத்துச் செல்லக் காரணமாக இருந்தவர். அச்சாக்கி அதை அமரகுந்தி காந்திய இளைஞர் நற்பணி மன்றத்தில் வெளியிட்டோம். ரூ. 5ன் செலவில் அந்த அறிக்கை சிறு நூலை கொண்டு வந்திருந்தோம்...

இதைப் படிக்கும் சேலத்து அன்பர்கள் கிச்சிப்பாளையத்தில் உள்ள் அன்னாரது இல்லத்தில் நடைபெறும் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ஆழ்ந்த அனுதாபங்களுடனும் வருத்தத்துடனும்.

Image result for salem engineer c. mani classical construction


எங்களது இயக்கத்தின் சசிபெருமாள், அடுத்து சின்னபையன் இப்போது முக்கியமான மணி ஆகியோர் தங்களது இலட்சியத்திலிருந்து விலகாதிருந்து தங்களது உயிரை நீத்துள்ளனர்.

அவர்களை மறுபடியும் பூக்கும் தளம் என்றும் நீங்கா நினைவுகளுடன்
வாழ்வில் எடுத்துச் செல்கிறது...
Image result for salem engineer c. mani classical construction
மக்களுக்கு பணி புரியும் இது போன்ற உண்மையான சேவையாளர் எல்லாம் அடையாளமில்லாமலே மடியும்போது சுயநல நோக்கம் ஒன்றை மட்டுமே கொண்ட நபர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு எந்த வித சேவையையும் மக்களுக்கு செய்யாமலேயே பெயர் பெருவது பெரும் அவலத்துக்குரிய இந்திய நாட்டின்  நிலை...அது மாறும் வரை...தொடர்வோம் தொடர்வார்கள்... எங்கள்  தியாக சிகா மணிகள்

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Saturday, April 20, 2019

WHAT IS THE VALUE OF VOTING? வாட் ஈஸ் த வேல்யூ ஆப் வோட்டிங்?,,,கவிஞர் தணிகை.

ஜனநாயகக் கடமை வாக்களிப்பது, வாக்களிக்காதார் குடிமகனே அல்ல  குற்றவாளிகளே....ஹா ஹா ஹா: கவிஞர் தணிகை.

Image result for indian election 2019


நோய்வாய்ப்பட்டிருக்கும் நடக்க முடியாதார் ஒருவரை கசக்கி தூக்கி ஆட்டோவிலும் மற்றொருவரை டாக்ஸியிலும் வாக்களிக்க கொண்டு வந்திருந்தனர் சில கட்சி ஆர்வலர்கள்.

பெங்களூரிலிருந்து வாக்களிக்க எனது பக்கத்து வீட்டுக் குடும்பம் ஒன்று வந்திருந்தது. அதிலும் ஒருவர் முதிய நீரிழிவு வியாதி உடையோர்

சென்னையிலிருந்து தங்கை மகனும், தங்கை மகளும் அவரது குடும்பமும் வாக்களிக்க வந்திருந்தனர். பல மணி நேரப் பயணங்கள்...ஏன் சில பேர் அமர இடம் இல்லாமல் நின்றபடியே கூட...

சென்னையிலிருந்து 70 வயதுக்கும் மிக்க எனது அணுக்கமான நண்பர் ஒருவர் தனது வாக்களிக்க வந்திருந்தார். (இவர் ஏற்கெனவே நாங்கள் நடத்திய நவ இந்திய நிர்மாணிகள் இயக்கம், காந்திய வழியில் ஊருக்குப் பத்துப் பேர் இயக்கம், தமிழக இலட்சியக் குடும்பங்கள் இயக்கம் போன்றவற்றிற்கு நிறுவனர்....இந்த இயக்கமே சசிபெருமாள், சின்ன பையன் சேலம் வடக்குத் தொகுதியின் ஒரு காலத்தில் மதுவிலக்கு வேட்பாளாராக நின்று வெறும் 800 சில்லறை வாக்கு பெற்றவர் போன்றவர்களை எல்லாம் தயாரித்தளித்தது என்பதெல்லாம் நான் உலகெங்கும் சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்)...

இப்படி உயிரைக் கொடுத்து ரிஸ்க் எடுத்து வடிவேலு பாணியில் ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடுவது போல என்று பேருந்துகளிலும் தொடர்வண்டியிலும் நமது சீமான் சொல்வது போல தமிழ் தேசம் நோக்கி படை படையாக நமது மக்கள் வந்து வாக்களித்தனர். அந்தக் காலத்தில் சுதந்திரப் போர் நடந்தபோது கலந்து கொண்ட விடுதலைப் போர் தியாகிகள் போல...

இவ்வளவு உடலை வருத்திக் கொண்டு முக்கியத்துவம் தந்து வந்து வாக்களிக்க வேண்டுமா என்ன? இந்தளவு முக்கியத்துவம் கொடுத்து அளிக்கும் வாக்குகளைப் பெற்ற  வேட்பாளர் அல்லது  வென்ற வேட்பாளர் உங்களுக்கு அந்தளவு நன்மை செய்யப் போகிறார்களா என்ன?

பாப்பாரப்பட்டியில் நான் 6 வாக்களித்தேன் நீ, என்றதற்கு அந்த இன்னொருவர் நான் நாலு போட்டேன் என்றாராம். அந்த தொகுதியில் வன்னியர் தவிர வேறு எவருமே சென்று வாக்களிக்க முடியாது என்று பெருமை படச் சொன்னாராம் மற்றொருவர்... அரசு அலுவலர்களும் பாதுகாப்புப் படையினரும் அங்கே எதற்கு என்ன செய்தார்கள் என்றெல்லாம் கேட்கக் கூடாது.. தி.மு.க வேட்பாளர் டாக்ட‌ர் செந்தில் குமார் மறு தேர்தலுக்கு அந்த வாக்குச் சாவடிக்கு கோரிக்கை வைத்துள்ளதாகவும் தமிழ் இந்து நாளிதழ் நேற்று செய்திகளை வெளியிட்டதை  படித்து அறிந்தேன். இன்னும் எப்படி அய்யா இப்படியே இருக்கிறீர்? இன்னும் எப்படி அய்யா இப்படி எல்லாம் நடக்கிறது? இன்னும் எப்படி அய்யா இப்படி எல்லாம் நடக்க அனுமதிக்கிறீர்...>?
Related image
ஒரு புறம் வாக்களிப்பது ஜனநாயகக் கடமையாக கமல், சீமான் கேட்பது போன்றும் மறுபுறம் முன்னால் மத்திய சுகாதார மந்திரி சொன்னது போலவும் இரு வேறு துருவங்க‌ளில் தேர்தல் பயணம் செய்து கொண்டிருக்கிறது

ஒரு தேர்தல்  கட்சியின் ஆர்வலர் சொல்கிறார்: எல்லாம் பணம் தான் சார். இந்திய வரலாற்றில் ஒரு பாராளுமன்ற தேர்தலுக்கு இந்தளவு வாக்கு சதவீதம் பெற்றது இதுவே முதல் முறை. இனி தேர்தல் எல்லாம் இப்படித்தான் சார் இருக்கும் என்கிறார். அவர் பார்த்த வாக்குச்சாவடியில் இரவு 8.30 மணி வரை வாக்குப்பதிவு நீடித்ததாம்.

சென்னையில் வாக்குப்பதிவு 54 சதவீதமாகவும் தர்மபுரியில் 80.49 சதவீதமாக அதிக பட்சமாகவும் இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.

சேலத்தில் மொத்த வாக்குப்பதிவு 66க்கும் மேல் இருந்த போதும் ஸ்வர்ணபுரியில் சேலத்தின் இதயப்பகுதியும் மேல்தட்டு மனிதர்கள் வாழும்பகுதியான வாக்குச் சாவடியில் சுமார் 1180 வாக்குள்ள பகுதியில் சுமார் 540 வாக்குகள் ( தோராயமாகச் சொல்கிறேன் கேட்ட செய்தியில் சரியான எண்ணிக்கையை மறந்து விட்டேன்) பதிவு இருந்ததாக அறிந்தேன்.

பேசாமல் ஏலம் விட்டு விடலாம் தொகுதியை பதவியை... யார் அதிக ஏலம் கேட்கிறாரகளோ அவர்களுக்கு கொடுத்து விடலாம் என்று வேடிக்கைக்காக சொன்னாலும் அது பற்றி சிந்திக்க வேண்டி இருக்கிறது...
Image result for indian election 2019
தேர்தல் ஆணையம் பணி செய்திருக்கிறது...எங்கும் சுவர் எழுத்து விளம்பரம் இல்லை. பிரச்சாரக் கட்டுப்பாடுகள் இருந்தன இவை பாராட்டப்படவேண்டியவை. மேலும் ரொக்கப்பணம் தங்கம் எல்லாம் நிறைய கோடிகளில் பிடித்திருக்கிறார்கள் என்ற போதும் ஆளும் கட்சிக்கு சாதகமாக பயன்பட்டிருப்பதாகவும் புகார்கள் இல்லாமல் இல்லை. என்றாலும் மேலும் மேலும் அடுத்தடுத்த தேர்தல்களில் மேலும் நல்ல மேலான மக்களுக்கு சாதகமான சீர்திருத்தங்களை எதிர்பார்க்கிறோம்.
Related image
ஏன் வீடுகளில் இருந்தே வாக்களிக்கலாம் என்பதை, சின்னம் இனி இருக்கக் கூடாது என்பதை, காபந்து சர்க்கார் இருப்பதற்கு மாறாக குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ் நேரடியாக தேர்தல் நடத்தும் முறையை, பாராளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சி ஆகிய் 3 தேர்தல்களையும் ஒரே காலத்தில் நடத்த வேண்டிய முறைகளை, விகிதாசார முறைகளில் வாக்களிப்புக்கேற்ப பதவியேற்கும் முறைகளை தவறு செய்யும் பதவியில் இருப்பாரை திரும்ப அழைக்கும் உரிமை வாக்களர்களுக்கு வருவதுமாக‌ இப்படி நிறைய தொலைவு போக வேண்டிய பணி தேர்தல் ஆணையத்துக்கும் தேர்தல் சீர்திருத்தம் பற்றி அக்கறை உள்ளார்க்கும் இருக்கிறது...

 அதுவரை வாக்களிக்காதார் ஒன்றும் குற்றவாளியுமல்ல, வாக்களிக்காதது குற்றமுமல்ல....ஏன் எனில் வேட்பாளர்களும் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களும் மக்களுக்கானவர்களாக மாறாதவரை இந்த நாடகத்தில் நடிப்பது நடப்பது யாவுமே வெளி புனை வேடத்திற்காக மட்டுமே... குறைந்த பட்சம் வாக்கு பெற்றார் வெற்றி பெற்றதாகவும் அதை விட அதிகம் வாக்களித்தாரின் வாக்கு தோல்வி பெற்றதாகவும் விரயமாகும் வரை இந்த தேர்தல் எல்லாம் சரியாக இல்லை, சரியாக இருக்காது என்பதே நியதியாக இருக்கிறது.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.





Thursday, April 18, 2019

தேர்தலை நம்பி ஏமாந்ததும் ஏமாற்றியதும் போதும்: கவிஞர் தணிகை

தேர்தலை நம்பி ஏமாந்ததும் ஏமாற்றியதும் போதும்: கவிஞர் தணிகை

Image result for scholars and social workers rule the country


பாராளுமன்றத் தேர்தல்,சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் ஆகியவற்றை ஒரே கட்டமாக நடத்துவதும்

தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தங்களை மக்கள் சேவையாளர் என நிரூபிக்காமல் தவறுகளையும் குற்றங்களையும் செய்ய நேரிடுகையில் அவர்களை பிரதிநிதிகளாக அல்லாதார் என்று திருப்பி திரும்ப அழைக்கும் உரிமை வாக்காளர்க்கு வரவழைப்பதும்

30 சதவீதம் வாக்கு வாங்கி பெருமளவில் வென்று விட்டதாக ஆள்வோர் இருக்க மீதம் 70 சதவீதம் போட்ட வாக்குகள் விரயமாகிடும் நிலை தவிர்த்து வாக்கு விகிதாசார முறைப்படி அட்சி அதிகாரப் பங்கீடுகள் இருக்கும் வண்ணம் அனைவரும் அனைத்து தரப்பு கட்சிகளும் 100 சதவீத மக்களின் பிரதிநிதிகளுமே நிர்வாகத்தில் பங்கு பெறும் பதவிகள் தரப்பட வேண்டும்.

நாடு சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளுக்கும் மேலான பிறகும் குடிநீருக்கும், கல்விக்கும் மருத்துவத்துக்கும் எல்லா மக்களுக்கும் உத்தரவாதமில்லா தேர்தல் முறைகளில் இருந்து மீள வேண்டும் அல்லது அந்த முறையை மாற்றித் திருத்திக் கொள்ள வேண்டும்.

கட்சிகளின் வழியே வருவார் மட்டுமே ஆள முடியும் என்ற நிலை இருப்பதால்தான் கமல், சீமான் போன்றோர் கூட கட்சி ஆரம்பிக்காமல் இங்கே ஒன்றும் செய்ய வழி இல்லை என்ற முடிவுக்கு வந்து அல்லலுறுகிறார்கள். சசிபெருமாளையும் சின்ன பையனையும் சேவைவழியில் இழந்த எங்களது சிறு அமைப்புகளான நவ இந்திய நிர்மாணிகள் இயக்கம், காந்திய வழியில் ஊருக்குப் பத்துப் பேர் இயக்கம்,தமிழக இலட்சியக் குடும்பங்கள் போன்ற இலட்சிய அமைப்புகள் எல்லாம் காணாமல் போயிருக்கின்றன.

எனவே கல்வியாளர்கள், அறிவியல் அறிஞர்கள், மக்கள் சேவையாளர்கள்,அறிஞர்கள் கட்சி சார்பில் அல்லாமல் ஒருங்கிணைந்து நாட்டுக்கு, நாட்டு மக்களுக்கு தொண்டு செய்திட ஆட்சி முறை அதிகார வரம்புகள் கைக்கொள்ளப்பட வேண்டும். அதற்கான சட்ட வரைவுகளை நீதிமன்றங்களும், பாராளுமன்றமும், சட்டசபைகளும், ஊராட்சி அமைப்புகளும் குடியரசுத் தலைமயும், தேர்தல் ஆணையமும் முன் மொழிந்து கடமையாற்றிட வேண்டும். அப்போதுதான் இந்திய ஜனநாயகமானது தனது அமைப்பு முறையில் மாறி மக்களுக்கான அமைப்பாக மாறி அனைத்து தரப்பு மக்களுக்கும் நல்லதை செய்திட முடியும்.
Image result for scholars and social workers rule the country
இல்லாவிட்டால் பணநாயகமே காலமெல்லாம் தொடரும்.

நோட்டா அதற்கு வழி வகுக்கும் எனச் சொல்லப்படுவது எல்லாம் கானல் நீரே..

இப்படி தேர்தல் வழியில் வரும் பல்வேறுபட்ட நபர்களுக்கும் படித்தார் படிக்காதார் நல்லார் கெட்டார் குற்றம் செய்தார் செய்யாதார் என்ற வேறுபாடின்றி இவர்கள் பதவிகளில் வந்தமர்ந்து விட்டால்  ஏனைய அறிவு சார்ந்த வர்க்கப் பதவியில் உள்ளாரும் அனைத்துப் பொறுப்பு பணிப் பதவிகளில் உள்ளாரும் சலாமிட்டு அவர்கள் சொன்னதை செய்வதும், அவர்கள் சொல்வதைக் கேட்பதுமான முறைமைகள் ஆட்சி அமைப்புகளில் இல்லாது ஒழித்திடல் வேண்டும்.
Image result for scholars and social workers rule the country
இதை எல்லாம் செய்யும்போதுதான் இந்தியாவின் குடியாட்சி இந்தியாவின் குடியரசு உண்மையிலேயே பணநாயகத்திலிருந்தும் அரசியல் சுரண்டலிலிருந்தும் உண்மையிலேயே வெளி வந்து மக்களுக்கான அமைப்பு முறைகளாக மாற முடியும் அதற்காகவும் இயங்க முடியும். இல்லையேல் இதே சுழற்சிதான் தொடரும்.
Image result for scholars and social workers rule the country
மோடி இல்லையேல் ராகுல், ராகுல் இல்லையேல் மோடி இல்லையேல் யாரவது ஒரு மமதா, மாயா, என்றெல்லாம், ஸ்டாலின் இல்லையேல் ஈ.பி.எஸ், ஓபிஎஸ் என்றே போய்க் கொண்டிருக்க வேண்டியதுதான்... ஆனால் எந்திரம் மாறப்போவதில்லை...தேர்ந்தெடுக்கப்பட்ட இராஜாக்களின் அடிமையாகவே தேர்வு செய்வார் இருக்க வேண்டியதும் அவர்கள் வாக்கெல்லாம் விரயமாகவும் வேண்டியதுதான்...அதில் வேறு ஜனநாயகக் கடமை யாற்ற வில்லை என்றால் அவர்கள் எல்லாம் துரோகி விரோதி என்றேல்லாம் சொல்லப்பட வேண்டியதுதான்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.



Tuesday, April 16, 2019

வேலூர் தேர்தல் ரத்து அப்போது ராதாகிருஷ்ணன் தொகுதி ரத்தாகாதது ஏன்? கவிஞர் தணிகை.

வேலூர் தேர்தல் ரத்து அப்போது ராதாகிருஷ்ணன் தொகுதி ரத்தாகாதது ஏன்? கவிஞர் தணிகை.

Next one is Thoothukudi?

Image result for election 2019



வேலூர் தொகுதி மக்களவைத் தேர்தல் இரத்து என்பது இந்திய தேர்தல் வரலாற்றில் முதன் முறையாக ஒரு மக்களவைக்கான தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்ற அந்தஸ்தை பெற்றிருக்கிறது. ஏன் சென்னை ஆர் கே நகர் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டு பின் நடத்தப்பட்டபோது இதே பிரச்சனை எழுந்ததே அப்போதும் தேர்தல் ஆணையம் அந்த தேர்தலை நடத்தி முடித்ததே ஏன்?

இப்போதுதான் தேர்தல் ஆணையம் விழித்துக் கொண்டு இருக்கிறது... அதுவும் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக...ஸ்டாலின் கேள்வியில் பொருள் உள்ளது  கனிமொழி வீட்டில் சோதனை நடப்பது சரிதான் ஆனால் ஏன் தமிழிசை வீட்டில் நடக்கவில்லை, ஏன் ஓபிஎஸ் மகன் வீட்டில் நடக்கவில்லை என்றெல்லாம் கேட்டிருக்கிறார். அது சரிதான் எந்த வித பாரபட்சமுமின்றி எல்லாக் கட்சி வேட்பாளரையும் அணுக வேண்டும். அது ஆளும் கட்சிக்கு ஒர் மாதிரியாக ஆதரவும் எதிர்க்கட்சிகள் மேல் ஆளும் கட்சியின் தூண்டுதல் பேரில் நடப்பதும் தெளிவாகத் தெரிகிறது.

இதனடிப்படையில் பார்த்தால் இந்தியாவில் தேர்தல் இப்படி காபந்து சர்க்கார் அல்லது ஆளும் கட்சியின் தலைமையின் கீழ் நடைபெறுவதே சரி இல்லை. இங்கே தமிழகத்தில் அவரவர்களின் ஊடகத்தில்  அவர்களுக்கு எதிரானவர்கள் பால் நடந்து வரும் நடவடிக்கையை எடுத்து கொம்பூதுகிறார்கள்.

இவை ஒரு புறமிருக்க சென்னை துறைமுக அலுவலம் தேர்தல் நாளன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் இப்படி அரசு அலுவலகமே நடைபெற்றால் எப்படி 100 சதவீதம் வாக்குப்பதிவு இருக்கும் என்ற கேள்விகளையும் வீசியிருக்கிறார்கள்...

அரசு அனைத்து தனியார் நிறுவனங்களுக்கும் கூட சம்பளத்துடன் கூடிய விடுமுறையை வாக்குப்பதிவு நாளன்று கொடுக்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்து இருக்கும் நிலையில்...


கூலி வேலைக்காரர்கள், அன்றாடம் காய்ச்சிகள், கொத்து வேலை, மரவேலை கம்பி கட்டுதல் கட்ட பணி சார்ந்த வேலைகள், வண்னம் பூசும் வேலை  இப்படி தனியார் சிறு குறு முதலாளிகளிடம் பணி புரியும் பொருத்துனர்கள், பற்ற வைப்பாளர்கள், இயந்திர வேலை செய்வார் அனைவர்க்கும் எப்போதுமே தினமும் பணி வாய்ப்பு என்பது இருக்கும் என்று சொல்வதற்கில்லை

அவர்கள் ஒரு நாள் வேலைக்குச் செல்லாவிட்டால் மிகக் குறைந்த பட்சம் 200ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரை அவர்களுக்கு இழப்பு.

அரசுப் பணி புரிவோர்க்கும் தனியார் நிறுவனங்களில் பணி புரிவார்க்கும் ஒரு நாள் ஊதியத்துடன் விடுமுறை வாக்களிக்கத் தரும்போது எங்களுக்கு என்ன கிடைக்கிறது \

எனவே கட்சிக்காரர் தரும் தேர்தல் திருவிழா காசை நோம்பி காசை  நாங்கள் பெற்றால் என்ன என்று ஒரு கேள்வி இருக்கிறது அப்படித்தான் ஆரம்பித்ததோ அல்லது கட்சிக்காரர்கள் கொடுத்ததால் ஆரம்பித்ததோ இந்த தேர்தலுக்கு வாக்குக்கு பணம் கொடுக்கும் பழக்கம் தொன்று தொட்டு நடந்து வருகிறது...இப்போதுதான் ஒரு தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது...

அதற்காக அப்படி வாக்குக்காக பணம் பெறும் ஏழையரை நாய் என்றெல்லாம் முன்னால் தேர்தல் ஆணையர் கிருஷ்ணமூர்த்தி போன்றோர் பேசியதும் தவறுதான்.

இது போன்ற கூலி வேலை செய்து கொண்டு அன்றாடம் காய்ச்சிகளாய் இருந்து வாழ்ந்து வரும் மக்களிடம் சுத்தம் இருக்காதுதான், அவர்கள் வாழ்நிலையோ கீழ் தரமானதுதான்...என்றாலும் இவர்கள் தாம் வாக்குச் சாவடிக்கு நேரடியாகச் சென்று தமது வாக்கை தவறாக   தவறாமல் வாங்கிய காசுக்கு ஏமாற்றாமல்
 அளிப்பவர்கள் எனவே கட்சிகள் இவர்களை நம்பி களத்தில் பணத்தை இறைக்கின்றன. இதற்கெல்லாம் மாற்று வேண்டும் என்ற கருத்தில் மாறுபாடு இல்லை. அது எங்கிருந்து எப்படி என அனைவரும் சிந்தித்து முடிவுகள் மேற்கொள்ள வேண்டும் அனைவர்க்கும் நியாயமாக.



ஆனால் இந்த மக்களுக்கு பீடி, மது, பான் பராக், குத்கா, தீய ஒழுக்கம் யாவும் சேர்ந்திருக்கிறது ஆனால் நல்லவை சென்று சேரவில்லை நல்லவற்றின் பால் இவர்களுக்கு எந்த அக்கறையும் இல்லை. எனவே இவர்களை எல்லாம் எப்படி மீட்டு எடுக்கிறோம் என்பதில் தாம் ஒரு நாட்டின் அரசியலே அடங்கி இருக்கிறது. அவர்களின் வாழ்நிலைகளை நாம் உயர்த்தியே ஆக வேண்டும். இப்போது கூட குடிக்க நீர் கேட்டு போராட்டஙகள் எழும் கோடைக்காலம்.

முதலில் விகிதாசார வாக்குமுறைகளும் அதன் பிரதிநிதித்துவமும் அடுத்து  வென்ற வேட்பாளர்களை திரும்ப அழைக்கும் உரிமையும் அடுத்துஅனைத்து மக்களுக்கும் சம வாய்ப்புகளும் வாழ்வின் அடிப்படைத் தேவைகளின் நிவர்த்தி உத்தரவாதம், கல்வி, மருத்துவம் போன்றவை அரசிடம் இருந்து தங்கு தடையின்றி பாரபட்சமின்றி கிடைப்பதும்... இவை யாவும் இன்றைய ஜனநாயகத் தேவைகள்..

இவற்றை எல்லாம் நாங்கள் பல பத்தாண்டுகளுக்கும் முன்பிருந்தே எழுதியும் பேசியும் சுவாசித்தும் வருகிறோம்...நேற்று எவரோ எழுதிவிட்டார்கள் அதுவும் தேர்தல் காலத்தில் என ஒரு சில ஊடகங்கள் பீற்றிக் கொள்கின்றன...ஒவ்வொரு கட்சியும்  ஒரு ஊடகத்தின் சார்பாக ஒவ்வொரு ஊடகமும் ஒவ்வொரு கட்சியின் சார்பாகவும் இயங்கி படி இருக்கையில் இவர்களை எல்லாம் நாம் எந்தக் கணக்கில் எடுத்துக் கொள்வது...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை


லிங்கனைப்பற்றியோ, ஜனநாயகம் பற்றியோ, அறிஞர் அண்ணா, பெரியார் பற்றி எல்லாம் மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மாண்டெலா பற்றி எல்லாம் தெரியாது எம்.ஜி.ஆர், சிவாஜி, டீக்கடை பெஞ்ச் எல்லாம் தெரியும் சாதி மதம் சண்டை சச்சரவு, வரப்பு சண்டை, காவல் நிலையம் அடி தடி தகராறு இவை மட்டுமே தெரியும் இவர்களிடம் எப்படி காந்தியம் மார்க்ஸீயம், லெனினிசம் எல்லாம் கொண்டு செலுத்தப்போகிறீர்
 வாக்கின் முக்கியத்துவம் பற்றியோ இவர்களுக்கு இன்றும் புரியாது என்றாலும் தேர்தல் ஆணையம் ஓரளவு ஒவ்வொரு தேர்தலிலும் சில படிகள் ஏறிய படிதான் இருக்கிறது. இப்போது கொஞ்சம் பிரச்சாரம் அடங்கி இருக்கிறது. சுவரில் எழுதுவதும் ப்ளக்ஸ் கூட குறைந்துவிட்டது. இனி வீட்டில் இருந்தபடியே வாக்களிக்கும் முறையும் நடைமுறைக்கு வரவேண்டும்....




Image result for election 2019

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை





Monday, April 15, 2019

ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் அரசாங்கமும் ஆட்சி அதிகாரமும்: கவிஞர் தணிகை

ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் அரசாங்கமும் ஆட்சி அதிகாரமும்: கவிஞர் தணிகை


Image result for darbar rajini movie
மனிதன் மனிதன் எவன் தான் மனிதன்? வாழும்போதும் செத்து செத்துப் பிழைப்பவன் மனிதனா என்று தலைவர் பாடுவார்...பிறருக்காக கண்ணீரும் பிறருக்காக செந்நீரும் சிந்தும் மனிதனே மனிதன் மனிதன் அதே படத்தில் வானத்தைப் பார்த்தேன் பூமியைப் பார்த்தேன் மனிதனை இன்னும் காணலையே என்ற பாடல் இருக்கும்....

பேட்ட படத்திற்காக 65 கோடி சன் குழுமம் வழங்கி இருக்கிறது 40 நாள்  கால் சீட் ஒதுக்கியதற்காக... இது ஆசியாவிலேயே ஒரு நடிகர் வாங்கிய அதிகம் சம்பளமாம்...இப்போது தர்பார் படத்திற்காக 90 நாள் கால்ஷீட் ஒதுக்கி இருப்பதாக செய்தி. நீஙகளே யூகித்துக் கொள்ளுங்கள்...

இதெல்லாம் இல்லாமல் படம் நன்றாக ஓடுகிறது என்றால் விநியோக உரிமையும் பிரித்துக் கேட்டு எடுத்துக் கொண்டதும் உண்டு. படம் ஓடாம்ல் நஷ்டப்பட்டதற்கு இழப்பீடு ஒதுக்கியதும் ஒதுக்க முடியாது கொடுக்க முடியாது என்று  சொன்ன செய்திகளும் உண்டு.

சாக்ரடீஸ் பகலிலேயே இராந்தல் விளக்கை எடுத்துக் கொண்டு தேடிக்கொண்டே செல்வாராம். என்ன தேடுகிறீர் என்றால் மனிதனை என்பாராம்

அதே போல டார்ச் லைட் சின்னத்தை வைத்துக் கொண்டு முயற்சி செய்தபடி இருக்கிறார்கள் கமல்ஹாசனும் அவர்கள் குழுவினர்களும். அவர் கூட மிகவும் உள் வந்து என் போன்ற கிராமிய சமுதாயத்துக்காக உழைத்தவர் எவரையும் பின் பற்றவோ துணைக்கொள்ளவோ இல்லை இருந்தாலும்

எவர் எவரோ எந்த எந்தக் காலத்தையும் மறந்து கவுண்டமணி குரலில் சொல்லப் போனால் அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா என்று தி.மு.கவும் அ.இ.அ.தி.மு.கவும் அணி அணியாய் சேர்ந்து சேர்த்துக் கொண்டு தேர்தலை சந்திக்க முயல்...

இந்த நடிகர்கள், விஷால், ரஜினிகாந்த், விஜய் போன்றோர் சேர்ந்து கமல்ஹாசனுக்கு ஒத்துழைத்து தனது இரசிகர்களை வாக்களிக்க்ச் செய்தால் அவருக்கும் கணிசமான தேர்தல் முடிவுகள் பலனாக கிடைக்கும் ஆனால் அதெல்லாம் சினிமாவில் தான் சொந்த வாழ்க்கைக்கோ, அல்லது நாட்டு நலன் என்ற பேச்சிற்கோ உதவாது என அனைவரும் வேடிக்கை பார்த்தபடி இருக்கின்றனர்.

கூத்தாடிகள் இனி வரக்கூடாது அரசியலுக்கு என்று ஒரு வாதமும், ஏன் வரக்கூடாது என்ற ஒரு விவாதமும் இருக்கிறது...இன்றைய தேர்தல் முனையத்தில் பழைய அணிகளுக்கு மக்களுக்கு சேவை செய்வதில் எந்தவித அருகதையும் தகுதியும் இருப்பதாகத் தெரியவில்லை. எனவே புது அணிகள் வரவேண்டும். அது கமலின் மக்கள் நீதி மையம், சீமானின் இயக்கம் இப்படி எது வேண்டுமானாலும் இருக்கட்டும் அவர்களுக்கு புதிய இரச்சம் பாய்ச்சுவது போல இந்த முக்கிய புள்ளிகளின் ரசிகர் அணிகளும்  சேர்ந்தால் அது வலிமையும் சின்ன அடையாளங்களும் காலம் காலமாக உள்ள வாக்கு வங்கி உடைய அந்த இரு அணிகளுக்கும் பீதியை கிளப்பும்.

நேரடியாகவே மோடி மிலிட்டரி சாதனை என்று பேர் சொல்லி  புதிதாக வாக்கு முதல்முறையாக போட வரும் இளையோர் அதற்காக போடவேண்டும் என்றிருக்கிறார்.

பொதுவாகவே பதுகாப்பு படைகள் செயல்பாடுகள் குறித்து தேர்தலில் பெருமை பேசி வாக்கு கேட்கக் கூடாது அதை தேர்தலில் இழுக்கக் கூடாது என்று ஒரு தார்மீகப் பொறுப்பு அரசியல் கட்சிக்கும் ஆள்வோருக்கும் வேண்டும் என்கிறது இந்திய முறைமைகள் அதை எல்லாம் மீறி அணில் அம்பானிக்கு மோடி உதவி அந்நிய நாட்டின் வரி விதிப்பிலிருந்து விலக்கு வாங்கிக் கொடுத்தது போல... எதை வேண்டுமானாலும் செய்யத் தயராக இருக்கிறார்கள் மோடி அமித் நிதின் கட்காரி குழுவினர்


இவர்களுக்கு ஒத்துழைப்பராம் நதி நீர் இணைப்பு அவர்கள் தேர்தல் அறிக்கை சொல்கிறது என நம்ம ஊர் பேட்ட ரஜினிகாந்த் என்னும் சிவாஜிராவ் கெய்க்வாட்


குழந்தை நட்சத்திரமாகி அறிமுகத்திலிருந்து இன்று வரை கமல்ஹாசன் என்னதான் முயன்ற போதும் அவருக்கு அவ்வளவு இரசிகர் கூட்டம் இல்லை என்றும், இந்த சிகரெட் நாயகனுக்கு  மார்கட்டும், இரசிகர் கூட்டமும் இன்னும் இருப்பதாக இவரை நம்பி பணம் போட்டு படம் எடுப்பதாகச் சொல்கிறார்கள்..

இந்த கூட்டம் வழிபடும் கூட்டம் அப்படியே இவர் சொன்னால் வாக்க்ளிக்குமா இல்லையா என்று சட்டசபை தேர்தல் வந்தால் தெரியும் ஏன் எனில் அப்போதுதான் இவர் கட்சியை  ஆரம்பித்து தேர்தலை சந்திப்பாராம். அல்லது இந்த தேர்த்ல் முடிந்தபின் அதன் முடிவுகளுக்கு ஏற்ப தனது முடிவுகளை செயல்பாடுகளை எடுத்துக் கொள்ளலாம்...
Image result for darbar rajini movie
பிழைக்கத் தெரிந்த மனிதனும் மனிதர்களும்..

வாழும்போது செத்து செத்துப் பிழைப்பவன் மனிதனா...

இப்படி ஒவ்வொரு தனிமனிதர்களிடமும் எத்தனை முடைகள், தடைகள், உள் ஒதுக்கீடுகள் நல்லதை நியாயத்தை எவருமே நம்ப மறுக்கிறார்கள் சுயநல வழிகளில் மக்கள் தமது தரங்கெட்ட வாழ்வில் வாழ்ந்து வருகிறார்கள் எனவே வேட்பாளரும், கட்சிகளும் ஆட்சியும் அப்படியே போய்க்கொண்டிருக்கிறது. தேர்தல் இருக்க இருக்க மக்கள் இடையே இடைவெளி ஏற்படுத்திக் கொண்டு நல்லாட்சி தத்துவத்திலிருந்து விலகி விலகியே போய்க் கொண்டிருக்கிறது. இதை எல்லாம் எப்படி சீர் செய்ய முடியும் என்று சிந்தித்தாலும் அதன் விடை காண முடியா நிலைகளே அதிகம்.

ஒரு பேருந்தில் எவர் அக்கம் பக்கம் அமர்ந்திருக்கிறார் என யோசித்து கவனித்து பார்க்க வேண்டிய காலத்தில் இருக்கிறோம். எத்தனை எத்தனை மனித எண்ணங்கள் வண்ணங்கள்...அமர்ந்து கொண்டு நகர மறுப்பவர்களும், பெண்கள் வழி விடச் சொன்னால் கூட வழி விடாதாரும், பெண்கள் அமர்வதற்கு இடம் கொடுக்காதாரும்....இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் எல்லாம் அவரவர்க்கென்று ஒரு உலகில் அவரவர் ப்ரி அரசாங்கத்திலும் ஆட்சி முறைகளைலும் கூடு கட்டு வசித்து வாழ்ந்து வருகிறார்கள். சாமான்யமாக இவர்களைஇ நல்வழிப்படுத்தி பொதுமைப்படுத்தி இழுத்து செல்வது இயலா காரியமாகவே படுகிறது.

( சிறு சிறு முயற்சிகள் வழியே எடுத்து செல்லும் தீபமே பின் விரிவடைய வேண்டும். அதை மட்டுமே அதனால் மட்டுமே நிலை சரியாகும் என்ற ஒரு சிறு கீற்றுப் பொறி மட்டும் இருந்து கொண்டு இருக்கிறது...)

அதே போல தூத்துக் குடி சம்பவங்களும், எட்டு வழிச் சாலைகளும்,  எல்லாமாக இருக்கும் அணிக்கு இந்த மனிதன் ஒத்துழைப்பாராம் ஆனால் ஆதி முதல் தம்முடன் சேர்ந்து ஒரே துறையில் பணி புரியும் நண்பர்கள் எனச் சொல்லிக் கொண்டு இருந்தபடியே அவர் நல் முயற்சிக்கு கை கொடுக்க மாட்டாராம்...

எங்கேயோ இடிக்கிறது இல்லையா, ரெய்ட் எங்கெங்கோ போவது இங்கே வந்து விடுமோ என்ற பயம் கூட காரணமாக இருக்கலாமோ....எம்.ஜி.ஆர் கூட இது போன்ற பயத்தில் இருந்ததாக செய்திகள் சொன்னதுண்டு... கமல் பொது இடத்திலேயே அறைகூவல் செய்கிறார் தமது அரசு வரிக் கணக்கில் தெளிவாக எந்தவித பாக்கியும் இல்லாதிருப்பதாக...

செயல்பட ஆரம்பித்திருக்கிறார் பயமின்றி...தொல்லைகளுடன்...ஆனால் ரஜினிகாந்த் இனிமேலும் இந்த வயதுக்கும் பின்னும் என்ன செய்யப்போகிறார்,,,ஒரு வேளை பாராதிய ஜனதாவின் ஒத்துழைப்புடன் தமிழக முதல்வராக இருக்கிறாரோ?
Image result for darbar rajini movie

 ஓரு வேளை கட்சி நடத்த பணம் போதவில்லை என்றுதான் அடுத்தடுத்து எவ்வளவு விரைவாக எவ்வளவு படத்தை நடித்து முடித்து பணம் சேர்க்க முடியுமோ அவ்வளவும் சேர்க்க முயற்சிக்கிறாரோ...

சாருஹாசன் இதை எல்லாம் கருத்தில் கொண்டே தம்பி கமல் வாய்ப்பில்லாமல் போகலாம் என்றும் ரஜினிக்கு அந்த வாய்ப்பு கிடைக்கலாம் என்றும் சொல்லி இருக்கலாம்...

நேரடியாக மோதினால் பாறையில் தலை சுக்கலாகும்... சுற்றி வளைத்து சம்பவ சாங்கியங்கள், வாய்ப்புகள்  கூட்டு சேர்தல், காலத்தை பயன்படுத்தல் இப்படி காய் நகர்த்தி தலைமைக்கு குறி வைப்பார் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறார்கள் கலைஞர் கருணாந்தி காலத்தில் இருந்து...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Wednesday, April 10, 2019

கருப்பு சாயம் வெளுத்துப் போச்சு டும் டும் டும் ரஜினி வேஷம் கலைஞ்சுப் போச்சு டும் டும் டும்: கவிஞர் தணிகை

கருப்பு சாயம் வெளுத்துப் போச்சு டும் டும் டும் ரஜினி வேஷம் கலைஞ்சுப் போச்சு டும் டும் டும்: கவிஞர் தணிகை

Image result for neela sayam veluthu


நதி நீரை இணைப்பதாக பாரதிய ஜனதா தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளதாம் அது நம்மூர் புலி வருது புலி ராசா ரஜினி காந்துக்கு பிடித்துப் போய்விட்டதாம், அதைத்தான் ஆரம்பத்தில் இருந்தே சொல்கிறாராம். கருத்து நல்லதுதான் ஆனால் அதை யார் சொல்வது பாரதிய ஜனதாவா...அதாவது கடந்த தேர்தலில் இதே கட்சி அயல் நாட்டில் முதலீட்டில் உள்ள இந்தியப் பணத்தை எல்லாம் மீட்டு வருவோம் என்ற கட்சி, தாங்கள் பதவிக்கு வந்தால் காங்கிரஸ் செய்ய முடியாததை எல்லாம் செய்வோம் இந்த ஆதார் தேவையில்லை, எரிவாயுவுக்கு இப்படி மானியம் தேவையில்லை, ஜி.எஸ். டி காங்கிரஸ் முயல்கிறது அது தேவையில்லை  என எதற்கெடுத்தாலும் காங்கிறஸ் ஆட்சிக்கு இவர்கள் வந்தால் பரவாயில்லை என நம்ப வைத்தார்கள்...கழுத்தறுத்து விட்டார்கள்.

இப்போது காங்கிரஸ் ஆட்சியே பரவாயில்லை என்று இவர்கள் ஆட்சி சொல்லிவிட்டது சொல்லாமல் சொல்லி விட்டது.

இந்த காங்கிரஸ் கட்சிக்கு விவஸ்தையே கிடையாது மாநிலத்தில் பிரியாணி பொட்டலம் கட்சித்தலமை அலுவலகத்தில் உனக்கு முந்தியா எனக்கு முந்தியா சண்டை...அதை ஊடகம் ரெடியாக ஊதி வைத்து பெருக்க வைத்து செய்தி ஆக்கி வரும் நிலையில் கே.எஸ் . அழகிரி மாநிலத் தலைவர் நதி நீரை இணப்பது சாத்தியமில்லை என தேவையில்லாத நேரத்தில் பேசிக் கெடுத்து வருகிறார். ராகுல் கூட அப்படி பேசித்தான் பாதிக் கெட்டார். எல்லாக் கட்சிகளையும் அரவணைத்துப் போகவேண்டும் என்று எங்கள் ஊர் ஓ.பிஎஸ் ஈ.பி.எஸ் கேட்டாவது தெரிந்து கொண்டிருக்கலாம்....
Related image
இந்நிலையில் நம்ம சூப்பர் ஸ்டார் கறுப்பழகன் என்றும் பதினாறு கட்டழகன்  தர்பார் நடத்த தில்லி செல்கிறார். அவர் தமக்கும்  கமலுக்கும் இருக்கும் நட்புறாவை சொல்லாத எதையாவது எழுதி கெடுத்து விடாதீர் எனக் கேட்டுக் கொண்டு அவருக்கு தமது ஒத்தழைப்பு ஆதரவு இல்லை இல்லை என்பதை சொல்லாமல் சொல்லி, நதி நீர் இணைப்பு பாரதிய ஜனதா தேர்தல் அறிக்கையில் இருக்கிறது அவர்கள் அதை நடத்தி விடுவார்கள் நள்ளிரவில் பணத்தை எல்லாம் செல்லாது என ஓரிரவில் அதுவும் நள்ளிரவில் சொல்லியபடி ஓரிரவிலேயே நடத்தி விடுவார்கள் என மகிழ்வடைந்ததாக பூரித்திருக்கிறார்.  அதையே சொல்லாமல் சொல்கிறார் யார் பக்கம் தாம் என்பதையும்...பிழைக்கத் தெரிந்தவன் 167வது படமாக தர்பார் செய்வார் அவர் பின்னால் பிழைக்கத் தெரியாத ஒரு கூட்டம் போய்க் கொண்டே படுகுழியில் விழுந்தபடியே....

அதற்கு கமலே பரவாயில்லை துணிச்சலுடன் எத்தனை பேர் வாக்களித்தாலும் இல்லையென்றாலும் நின்றே பார்த்துவிடுவது என கட்சி ஆரம்பித்த புதிதிலேயே நாடாளுமன்றம் வரை தமது குரலை கொண்டு போக‌
 இருக்கிறார்
Related image
காமராசர் சொன்னாராம்  என்று ஒரு காட்சி உலவுகிறது வாட்ஸ் ஆப்பில், கூத்தாடுகிறவனிடம் நாட்டை கொடுங்கள், அவன் கூத்தியாவிடம் அதைக் கொடுப்பான், அவள் அதை குற்றவாளிகளிட‌ம் அதைக் கொடுப்பாள் அவர்கள் அதை அடமானம் வைப்பவர்களிடம் கொடுப்பார்கள் என திண்டுக்கல் தேர்தலில் எம்.ஜி.ஆர் முதன் முதலாக தமது கட்சிக்கு வேட்பாளரை நிறுத்தியபோது  சொன்னாராம் அது அப்படியே நடந்தும் விட்டதே...
Related image
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

விடுதலை என்றால் முழுப் பொறுப்பு: கவிஞர் தணிகை

விடுதலை என்றால் முழுப் பொறுப்பு: கவிஞர் தணிகை

Image result for freedom means total responsibility

விடுதலை என்றல் முழுப்   பொறுப்புடன் இருப்பது என்றும் ஏழ்மை வறுமை சொரணை இல்லாத் தனத்தை தோற்றுவிக்கும் என்றும் அறிஞர்கள் கூற்று. உண்மைதான் பசி வந்தால் பற்றும் பறந்திடும் என்கிறது தமிழ் மொழி

எனவே தான் பொறுப்பே இல்லாமல் இந்திய விடுதலையை அனுபவிப்பவர்கள் பசி, பஞ்சம், போதை, சாதி, மதம் போன்றவற்றுடன் பொது மக்களை சாதாரண மக்களை அடித்தட்டு மக்களை பின்னிப் பிணைத்து விட்டு தாங்கள் மேலும் மேலும் மேல் ஏறிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு அரசியல் என்னும் ஆய்தத்தை பயன்படுத்தி வருகிறார்கள்.

ஆளுமை அடிமை  மேன்மை கீழ்மை என அரசும் ஆட்சி முறைகளும் இருப்பவை இன்னும் அனைத்து மக்கள் தொகைக்குமான வசதி வாய்ப்புகளை சமமாக கொண்டு செல்ல வேண்டும் என்ற அடிச்சுவடே ஆரம்பிக்காத ஆட்சி முறைகளே இன்னும் நீடிக்கிறது. எனவே  மது எங்கும் கிடைக்க குடி நீர் எங்கும் கிடைக்கவில்லை...செல்பேசி எல்லார் கைகளுள்ளும் இருக்க கழிப்பறைகள் இல்லை,அடிப்படைத்தேவைகளான உணவு உடை உறையுள்ளுக்கான உத்தரவாதம் அளிக்கும் வேலைவாய்ப்புகள் உணவு தானிய உற்பத்திக்கான விவசாயம் காலம் செல்லச் செல்ல நசிந்து வருகின்றன.

பொதுமக்களின் ஜனநாயகப் பார்வையை திசை திருப்ப அனைத்து கட்சிகளும் போராடி வருகின்றன. மக்களுக்கும் ஜனநாயகம் மேல் எந்தவித நம்பிக்கையும் இல்லை எனவேதான் காசு பணம் பிரியாணி குவாட்டர் பாட்டல் மது போன்றவற்றிற்காக தமது வாக்குரிமையை கீழ் தட்டு மக்கள் விற்பனை செய்து வருகின்றனர்.

எழுச்சி மிக்காரின் கருத்துகளை, ஏன் அவர்களையே புறக்கணிப்பு செய்யும் மக்கள் ஆட்சி, அதிகாரம், இவற்றின் பால் எந்தவித பிடிப்பும் இல்லாதிருக்கின்றனர்

சட்டம் நீதி நியாயம் ஒழுங்கு இடத்துக்கு இடம், ஆளுக்கு ஆள் மாறுபட்டே விளங்கிட மக்களின் கடைசிப் புகலிடமான நீதிமன்றங்களோ சிறிய விஷயங்களில் நீதியை நிலைநாட்டுவதாக பாசாங்கு செய்துவிட்டு பெரிய பெரிய முக்கியமான நடவடிக்கைகளில் கோட்டை விட்டு விடுகின்றன...அதற்காக சுயநலப் பலிகடாவாகும் நீதிபதிகளும் இந்த நிலைக்கு முக்கிய காரணம்.

எடுத்துக் காட்டாக : குன்ஹா வழங்கிய தீர்ப்பை ஓரங்கட்டிய குமாரசாமி தீர்ப்பும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளே பதவிகளுக்காக நல் செல்வ மிகுதி வாழ்வுக்காக பலிகடாவாகப் போய்விடுவதும்...

எனவேதான் ஆங்கிலேயர்களே இருந்திருந்தாலும் பரவாயில்லை, விடுதலை என்பதை பொறுப்புணருமுன்னே இந்தியர்கள் அடைந்து விட்டு பாடாய் படுத்தி வருகின்றனர் என நல் உள்ளங்கள் சலிப்பாக பேசி வருகின்றன.

அட, பொதுக்கழிப்பறையை சுத்தமாக வைத்திருக்கத் தெரியாத காட்டுமிராண்டிக் கூட்டமாகவே இருக்கிறார்களே...எங்கும் காணுமிடங்கள் எங்கும் அது சாலையாக ரெயில்வே சாலையாக பொது இடமாக இருந்தாலும் எச்சிலும், சிறு நீரும், மலமும், குப்பையும் கூளமுமாக ஆக்கி நீர் நிலையை எல்லாம் பாழாக்கி இன்று பாட்டிலில் அடைத்த குடி நீரை விலைக்கு வாங்க கம்பெனி முதலாளிகளுக்கு விற்க அனுமதி வழங்கி  நாட்டை கூறு போட்டு விற்று விட்டனரே...
Image result for freedom means total responsibility
பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் பணியாளர்க்கு கொடுக்க மாத ஊதியச் சம்பளம் இல்லையாம்...ஜியோ ரிலையன்ஸ் சக்கை போடு போடுகிறதாம்...மோடியை முகேஷ் அம்பானிமார்களைத்தான் வெற்றியின் தாரக மந்திரங்களின் சூட்சமம் பற்றி சொல்லித் தரச் சொல்ல வேண்டும்.
Image result for freedom means total responsibility
இந்நிலையில் தன்னிலை உணரா மக்களிடையே மாக்களாய் உள்ளார்க்கான தேர்தல் ஒரு கேடு, திருவிழாக் கூத்து...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Tuesday, April 9, 2019

இந்தியத் தேர்தலும் பி.எஸ்.என்.எல் சேவையும்: கவிஞர் தணிகை



 Related image

இந்திய ஜனநாயகம் தேர்தல் வித்தையில் எப்படித் தடுமாறிக் கொண்டிருக்கிறதோ அப்படியே பி.எஸ்.என்.எல் சேவையும் தடுமாறிக் கொண்டிருக்கிறது வாடிக்கையாளர்களை அதிருப்திப் படுத்திக் கொண்டு.

கடந்த பல நாட்களாகவே இதன் நெட்வொர்க் படு வீழ்ச்சி அடைந்துள்ளது. தானாகவே  இணைப்பு துண்டிக்கப்படுவதும், மறுபடியும் திரும்பக் கிடைப்பதாக பாசாங்கு செய்வதும் மறுபடியும் கிடைக்காமல் போவதுமாக‌

மேலும் மோடத்தின் எல்லா குறிப்பு பட்டன் விளக்குகளும் எரிந்த போதிலுமே வலையத்தில் நாம் தேடும் பக்கத்துக்காக சக்கரம் சுற்றிக் கொண்டே இருக்கிறதே ஒழிய  அந்தப் பக்கம் திறப்பதில்லை.

மேலும் புகார் அளிக்கும்போது அந்த இணைப்பில் வந்து பேசுகிறார்கள் அல்லது நேரிலும் வந்து லைன்மேன்கள் வந்து பார்க்கிறார்கள்

அவர்கள் பேசும்போது அல்லது வந்து பார்க்கும்போது டவுன்லோட் வேகம் 6 எம் பி ப்பி எஸ் 4 எம்.பி. ப்பி எஸ் இப்படியாக  வித்தை காட்டுகிறது ஆனால் அவர்கள் சென்றதும் பழைய படி இரண்டு என இறங்கி மேலும் ஒன்றுக்கும் குறைவாகி சுழியத்தின் பின்னக் கணக்கீட்டில் ஜீரோ புள்ளி 44 என்ற கண்க்கிற்கும் கீழ் செல்கிறது அப்லோட் பற்றி சொல்லவே வேண்டாம் ஜீரோ புள்ளி 13 இப்படித்தான் கிடைக்கிறது.

இந்த இலட்சணத்தில் 4 ஆம் தலைமுறைக்கு முயற்சி செய்து கொண்டிருப்பதால்தான் இப்படி நடக்கிறது...முதல் தலைமுறையே இங்கு ஒழுங்கில்லாதபோது உங்களுக்கு எல்லாம் எதற்கு 4 ஆம் தலைமுறை அலைக்கற்றை...இருப்பதை ஒழுங்காக பிரித்துக் கொடுத்து  அதில் நல்ல பேர் வாங்கி அதன் சேவையை  மேம்படுத்திய பிறகல்லவா அடுத்த தலைமுறை பற்றி யோசிக்க வேண்டும்

இது பற்றி புகார் மேல் புகார் பதிவு செய்தாலும் நிலை இதுதான். மாறவே இல்லை. பின் எப்படி இப்படி இருந்தால் பில் கட்டுவது என்றால் அது மட்டும் தேதிக்குள் கட்டி விட வேண்டும்....

ஒன்று சரியாக சேவை தரவேண்டும் அல்லது அந்த நாட்களுக்கான தொகையை மாதாந்திர சேவைக்கட்டணத்திலிருந்து குறைத்துக் கொள்ள வேண்டும். அதுதான் வாடிக்கையாளரை திருப்திப்படுத்தும் நியாயம் நேர்மை.

என்னவோ சூப்பர் டீலக்ஸ் என்ற படத்தில் வங்கியில் நாம் சென்று ஏ.டி.எம் சென்டரில் பணம் கேட்க அங்கு இல்லையெனில் அதற்கு வங்கி அபராதத் தொகை தரவேண்டுமல்லவா,,, வாடிக்கையாளரின் பணம் குறைந்த பட்ச இருப்புத் தொகையை விடக் குறைந்தால் அதற்கு மட்டும் அபராதத் தொகை எனக் கழிப்பது என்ன நியாயம் என்று சொல்லியுள்ளதாக...

ஆனால் இது பற்றி ஏற்கெனவே வாட்ஸ் ஆப் உலவியில் நண்பர்கள் இதே கருத்தை பதிவிட்டு பகிர்ந்து கொண்டு பல மாதங்கள் ஆகிறது. அதைத்தான்... சினிமாவில் சேர்த்துள்ளார்கள்..

ஒரு பேருந்தில் ஒரு நிறுவனத்தில் அதாவது மின்கட்டணம், குடி நீர்க்கட்டணம் என்று கட்டுகிற இடத்தில் ஒரு ரூபாய் குறைவாக இருந்தாலும் வாங்க மறுக்கும் அதே நிறுவனத்தார் பல நேரங்களில் சில்லறை இல்லை என எவ்வளவோ பேருக்கு ஒரு ரூபாய் கொடுப்பதேயில்லையே அது என்ன நியாயம்...

குறைந்த பட்சம் ஆயிரம் ரூபாயை ஓவ்வொருவருக்கும் பிடித்து வைத்திருக்கும் வங்கிகள் எத்தனை வாடிக்கையாளர்களைக் கொண்டிருக்கிறதோ அத்தனை பணத்தை சேர்த்து வட்டி இல்லாமல் பயன்படுத்தி வருகிறது...அவர்கள் அனுமதியின்றியே அவர்கள் பணமானது பயன்படுத்தப்படுகிறது...இது தான் மோடியின் கேடி வேலைகள்...

இல்லை இல்லை ஜீரோ பேஸ்ட் அக்கவுண்ட் என்று ஒன்றாமே அதில் குறைந்த பட்ச இருப்புத்தொகை வைக்க வேண்டிய அவசியம் இல்லையாமே என்று கேட்டால  ஊஹூம் அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை என்று தட்டிக் கழித்து விடுகிறார்கள்....

என்னய்யா நிறுவனங்கள் இந்தியாவில் மக்களுக்கு சேவை செய்யுது அவர்கள் வருவாயை பிடிங்கித் தின்றபடி...

இதில் எல்லாம் நெட்மயம்தான் நெட் இருந்தால் தான் வேலையாம். ஏண்டா எல்லாமே ஆன்லைன் என்கிறீர் எவனாவது இலஞ்சம் இல்லாமல் ஆன்லைன் பதிவின் படி நேர்மையாய் வேலையை செய்து கொடுக்கிறீர்களா...ஏன் அந்த இலஞ்சத்தையும் ஆன்லைனிலேயே பெற்று அக்கவுண்ட்ஸ் மெய்ன்டெய்ன் செய்ய வேண்டியதுதானே....

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Monday, April 8, 2019

குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ் தேர்தல் நடத்துவதே சரியாக இருக்கும்: கவிஞர் தணிகை.

குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ் தேர்தல் நடத்துவதே சரியாக இருக்கும்: கவிஞர் தணிகை.

Image result for election commission of india
எதிர்க்கட்சிகளை மட்டுமே குறி வைத்து தங்கத்தையும், பணத்தையும் பிடித்து வருவதாகவும் ஆளும் கட்சியின் நடவடிக்கைகளை கண்காணிக்கத் தவறுவதாகவும் தேர்தல் ஆணையத்தின் மேல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது இப்போதைய தேர்தலின் போது மட்டுமல்ல ஒவ்வொரு தேர்தலின் போதும் சொல்லப்படுவதுதான்.

ஆளும் கட்சி ஆம்புலன்ஸ் காவல் துறை ஆகியவற்றை பயனபடுத்தி தமது நடவடிக்கையை நடத்திக் கொண்டு எதிர்க்கட்சிகளின் தேர்தல் பணி மற்றும் பணம், பொருள், தங்கம் ஆகியவற்றின் நடவடிக்கையை முடக்கி வைப்பதாகவும் அதன் மூலம் தங்களது வெற்றி வாய்ப்பை முடுக்கி விட்டுக் கொண்டிருப்பதாகவும் ஊடகங்களும் தெரிவித்து வருகின்றன.

உண்மையிலேயே நூற்றுக் கணக்கான செய்திகள் எதிர்க்கட்சி முடக்கத்தை செய்தியாக ஊடகம் வெளியிட்டால் இரண்டு அல்லது ஒன்று ஆளும் கட்சியின் குற்ற நடவடிக்கையையும் சொல்கிறது அந்த அளவுதான் ஊடகங்களுக்கு செய்தியாகும் அளவு ஆளும் கட்சியின் நடவடிக்கைகளில் அரசின் அங்கங்களும் ஊடகங்களும் மூழ்கி உள்ளன.

இப்போதைய காலக் கட்டத்தில் அங்கே இவ்வளவு தங்கம், பணம் பிடித்தோம், இங்கே இவ்வளவு பிடித்தோம் என்று சொல்வதோடு தேர்தல் ஆணையத்தின் பணி முடிவடைந்துவிடுவதில்லை.

 மாறாக சட்டமன்றத் தேர்தல்களையும், பராளுமன்றத் தேர்தல்களையும் காபந்த் சர்க்கார் என்ற பேரில் ஏற்கெனவே ஆளும் கட்சியாக இருந்தார்  தொடர முடியாமல் குடியரசுத்தலைவரின் கீழ் ஆட்சியைக் கொண்டு வந்து விட்டு அதன் பிறகு தேர்தல் நடத்தப்பட வேண்டியது அவசியம் என்ற சட்ட வரைவை என்ற திட்டத்தை குடியரசுத்தலைவர்' பாராளுமன்றம், உச்ச நீதிமன்றத்தின் முன் வைத்து அதை அமலுக்கு கொண்டு வர வேண்டிய கடமையும் பொறுப்பும் தேர்தல் ஆணையத்துக்கு உண்டு.

இதை தேர்தல் ஆணையத்தைத் தவிர மற்ற அரசின் அமைப்புகள் மேற்கொள்ளும் என்றோ, மக்கள் அதை அமல்படுத்த கோரிக்கை வைப்பார் என்றோ சொல்வது தமது கடமையிலிருந்து தேர்தல் ஆணையம் தவறுவது என்றே சொல்ல முடியும்.

எலிக்கறி தின்று, கோவணத்தை அவிழ்த்து தவழ்ந்து டில்லி வீதிகளில் சாலைகளில் திரிந்த விவசாயிகள் பற்றி எல்லாம் கவலை கொள்ளா மோடி அரசின் தேர்தல் அறிக்கையில் விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், விவசாயிகள் பெறும் கடனுக்கு வட்டி இல்லை என்றும் இன்று சொல்லப்பட்டுள்ளது.

தேர்தல் என்றால் அதற்காக எதையும் சொல்வார்கள் செய்வார்கள், நாளை ஆட்சிக்கு வந்தவுடன் மாற மாட்டார் என்று என்ன நிச்சயம்?

எட்டு வழிச்சாலைக்கு நில ஆர்ஜிதம் செய்ததும் தவறு, ஆர்ஜிதம் செய்வதும் தவறு என உயர் நீதிமன்ற தீர்ப்பு வந்துள்ள நிலையில் மாநிலக் ஆளும் கட்சிக்கு நாட்கள் நெருங்கி வருவது போல அறிகுறிகள்

ஏன் எனில் ஸ்டெரிலைட் காப்பர் போராட்டத்தில் வாயிலும், காதிலும், உடலின் மேற்பகுதியில் எல்லாம் குண்டுகளை பாய்ச்சி இறந்திருந்த 13 உயிரற்ற உடலை போராட்டக்காரர்களை  முதல்வர் என்ற முறையில் அனுதாபத்துடன் கூட எட்டிப்பாராதிருந்த எடப்பாடி அரசு எந்த மக்கள் மேல் நம்பிக்கை வைத்து இந்த தேர்தலை சந்திக்கிறது என்றே விள்ங்க வில்லை. எல்லாம் மக்கள் மறந்து விடுவார்கள்...வாக்கு வங்கி இருக்க பயமேன் என கூட்டணி தர்மம் நமைக் காப்பாற்றி விடும் என்றெல்லாம் நம்புகிறார்போலும். ஒருவர் என்ன வென்றால் பூத்தை பார்த்துக் கொள்ளுங்கள் நம்மைத் தவிர வேறு யாரும் இருக்க மாட்டேன் என்கிறார். இவர் இத்தனைக்கும் மத்திய சுகாதாரத் துறை மந்திரியாக இருந்து எம்.பியாக இருந்து அந்த திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார் இந்த திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார் என அந்தக் கட்சிக்காரர் பெருமை பேச, ஆளும்கட்சியிடம் இருந்து பொற்குவியல் பெற்றமைக்கு ஆதாரம் உள்ளதா என்றெல்லாம் கேட்டு வருகிறார்கள் அதன் அடிமட்டத் தொண்டர்கள்...

இதை எல்லாம் சீர் தூக்கிப் பார்க்கும்போது ஆளும் கட்சி கூட்டணி தமது வெ(ற்)றிக்காக எதையும் செய்யும் சொல்லும் என்பது எல்லாம் கவனித்து உன்னித்துப் பார்க்காமல் மேலோட்டமாகப் பார்த்தாலே விளங்கும்...

எதை வேண்டுமானாலும் சொல்லுங்கள் செய்யுங்கள் தேர்தல் நடத்தியே தீருவோம் முடிவுகள் வெளியான பின் நீங்கள் நீதிமன்றத்தை அணுகி நீதியைப் பெற்றுக் கொள்ளலாம் என பேசுவது சரியான நியாயமாகத் தெரியவில்லை.
Image result for president of india
தேர்தல் ஆணையம் சரியாக பணிபுரிய வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறது.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Sunday, April 7, 2019

மனித மாய்மாலங்கள்: கவிஞர் தணிகை

மனித மாய்மாலங்கள்: கவிஞர் தணிகை

Image result for ooty trains


என்றோ இயற்கைச் சீற்றத்தால் இறந்த கோடிக்கணக்கான உயிர்களின் உடல்களின் இரசாயனக் கசிவெண்ணெயே  மனிதராகிய நாம் அனைவரும் பயன்படுத்தி வரும் வாகன எரிபொருள்...

என்றோ இயற்கைச் சீற்றத்தால் பட்டு எரிந்து போன மாபெரும்  மரங்களின் புதை நிலை நிலக்கரிகள் நமது மின்சாரத் தேவைக்கு அனல் மின் நிலையத்தை மின் சார உற்பத்தியின் கலயமாக்கி
Image result for ooty trains
 என்றோ சேர்ந்து நிலத்து மேலே சேர்ந்து நிற்கும் நீரே நமக்கு பயன்பாட்டு நீராக‌

என்றோ பண்பட்ட நிலமே நமது உணவுத் தேவைகளை எல்லாம் நிவர்த்தி செய்யும் பூமியாக மண்ணாக

இப்படி எல்லாவிதத்திலும் இயற்கையிடமிருந்து பெற்றுவிட்டு மனிதம் எல்லா அதமங்களும் செய்யும்போது அக்கினியாய் கதிரவன் தகிக்க நிலத்தில் மரத்தினடியில் ஒதுங்க முடியாமல் நமது கூட்டம் மட்டுமல்ல விலங்கினங்களும் பறவையினங்களும்...
Image result for ooty trains
என்னதான் குளிரூட்டப்பட்ட அறையாய் இருந்தாலும் அன்றைய ஏற்காடு கோடைவிழா நடந்ததே அதற்கு இணையாகுமா இன்று ஏற்காட்டிலும் தீயாய் தகிக்கிற வெப்பம்

ஊட்டி கொடைக்கானலிலும் இந்த கானக வெப்பத்தில் பணம் படைத்த  மனிதர்கள் ஒதுங்கி அடைக்கலம் தேடுவார்களே அதற்கும் வந்தது வேட்டு.... அங்கும் இங்கும் எங்கும் வெப்பக் காடாய்

ஊட்டியின் 20 கி.மீ ரயில் பயணத்துக்கு பெரும் கட்டணம் வசூலிப்பதாகவும் அன்று வெளிநாட்டுப்பயணிகள் நிறைய வருவார்கள் என்றும் செய்தி...
Image result for ooty trains
எனவே குடிநீரும்,பயணமும், உணவும்,  யாவும் பணம் படைத்தவர்களுக்கே என ஆகிவிட்ட நாட்களில் பணத்தின் பின்னே தேர்தல் ஆணையமும் ஓடிக் கொண்டிருக்கிறது மக்கள் பின்னே ஓடமாட்டார்களா என்ன....ஓடாமல் வீட்டில் இருப்போரையும் இந்த வெப்பசலனம் இருக்க விடாமல் யாவற்றையும் அழித்து விட்டார்கள் நாளையப் பற்றி எண்ணாத பாவிகள்

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Saturday, April 6, 2019

யாருக்கு வாக்களிக்க வேண்டும்? கவிஞர் தணிகை

யாருக்கு வாக்களிக்க வேண்டும்? கவிஞர் தணிகை

Image result for socrates


சுமார் 2450 ஆண்டுகள் முன்பு சாக்ரடீஸ் :ஏதென்ஸ் நகரத்து மக்கள் இடையே 501 பேரில் சாக்ரடீஸுக்கு மரணமா விடுதலையா என்ற வாக்கெடுப்பில் 220 பேர் சாக்ரடீஸை விட்டு விடச் சொல்ல 281 வாக்குகள் அவர் கொல்லப்பட வேண்டும் விஷக்கோப்பை ஏந்தி விஷமருந்தி என்று முடிவு இருந்ததால் தற்கொலையை தாமே ஏற்றுக் கொண்டார் என்பது உலக வரலாறு.

இவரே உலகின் முதல் தத்துவ ஞானி என்றும் இவரை சந்தேகம் கேட்பாரை இவர் கேள்வி மூலமே எதிர் கேள்வி கேட்டு தெளிவு பெறச் செய்து இவரைச் சுற்றி எப்போதும் ஒரு இளைஞர் பட்டாளமே இருந்ததும் செய்திகள்...இவரை தீர்த்துக் கட்டியது மற்ற சில கலைஞர்கள் இவர் மேல் கொண்ட பொறாமையும் வாக்கெடுப்பும்.பகலிலும் விளக்கேந்தி மனிதரைத் தேடுகிறேன் என்பார் என்பதெல்லாம் செய்திகள்

சுமார் ஒன்பதாம் நூற்றாண்டு முதல் பதினாறாம் நூற்றாண்டு வரை முதலாம் பராந்தக சோழன் ஏற்படுத்திய கிராம சபையின் குடவோலை முறை தங்களது பிரதிநிதிகளைத் தேர்வு செய்ய காரணமாக இருந்தது என்று நமது தமிழர் கால வரலாறு சொல்கிறது அது மட்டுமில்லாமல் ஒரு தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளுக்கு அதாவது ஓலையில் பேர் எழுதி குடத்தில் போடப்படுவதற்கே தகுதிகள் இவை இவை என்றும், தகுதியற்றவர் இவர் என்றும் சில விதிகள் இருந்ததாகவும் பட்டியல் இருக்கின்றன இந்தக் கல்வெட்டை இப்போதும் உத்திர மேருர் கல்வெட்டு வாயிலாக அறியலாம்.

இப்போது அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று எங்கு பார்த்தாலும் அறிவிப்புகள் அப்படி இருக்கும்போது நோட்டா மற்றும் 49 ஓ வும் இருப்பது எதனால்... இது இருந்தால் அது இருக்கக் கூடாது அது இருந்தால் இது இருக்கக்கூடாதல்லவா?

உலகிலேயே மிக முன்னேறிய நாடுகளாகக் கருதப்படும் அமெரிக்கா, பிரிட்டன்,  போன்ற நாடுகளில் எல்லாம் கூட வாக்குச் சீட்டு முறை இருக்கும்போது இந்திய மாபெரும் உலக ஜனநாயகத்தில் மின் பொருளியல் வாக்கு எந்திரம் வந்து பல தேர்தல் ஆகிவிட்டது.இப்போது அந்த வாக்கு யாருக்கு விழுந்தது என்பதையும் காட்சிப்படுத்திட...

செயற்கைக்கோளை ஏவுகணை வீசி அழிக்கும் நாடுகள் உலகிலேயே  நான்கு மட்டுமே அவற்றில் இந்தியா ஒன்று...ஆனால் குடி நீர் கழிப்பறைகள் கூட குடிமக்களுக்கு இல்லாமல் கிடைக்காமல்...

சுதந்திரமும் குடியரசும் பெற்று சுமார் அறுபது முதல் எழுபது ஆண்டுகள் போனபின்னும் இன்னும் வெள்ளை ஏகாதிபத்தியத்திலிருந்து இந்தியா விடுபடவே இல்லை ஒரு வரையறுக்கப்பட்ட இனம் சார்ந்த கனிஷ்கா ஐ.ஏ.எஸ் ஆகி இருக்கிறார் இந்த படிக்காத மந்திரிமார்களுக்கு சல்யூட் அடிக்க‌

ஆங்கிலம், மெட்ரிக் பள்ளிகள், ஆங்கில வைத்தியம், ஆங்கில மொழியறிவு, கோடை விடுமுறை, அவர்கள் என்ன செய்தார்களோ என்ன தந்தார்களோ என்ன என்ன நடைமுறைப்படுத்தினார்களோ அவையே இன்றும் தொடர பேர் மட்டும் இந்திய ஜனநாயகம்...

 காலனி ஆதிக்கம் போய் பணக்காரக் காலனி ஆதிக்கமாகிவிட்டது. உண்மையில் கீழ் தட்டு மக்களுக்கு அடிப்படை ஆதாரங்கள் கொண்டு சேர்க்கப்படவே இல்லை...

இந்நிலையில் மத்தியில் தேர்தல் மோடியின் பாரதிய ஜனதாவா காங்கிரஸ் கட்சியின் ராகுலா, மாயவதியா, மமதாவா, அரவிந்த் கெஜ்ரிவாலா மாநிலக்கட்சிகளின் எவற்றுக்கு வாக்களிக்கப் போகிறோம்.

மாநிலத்தில் : அ.இ.அ.தி.மு.க அணியும் திமுக அணியும் அதில் ஆளும் கட்சியின் கைப்பாவையாக ஆம்புலன்ஸ் சேவையும், காவல்துறை வாகனங்களும் தேர்தல் பணப்பட்டுவடாவில் ஈடுபடுத்தப்பட எதிர்க்கட்சிகளின் பணப் பட்டுவடாவை மட்டும் சுழன்று சுழற்றி தேர்தல் ஆணையமும் ஆட்சியும் அதிகாரமும் பிடித்து வருவதாக கோடிகளாக தங்கக் கட்டிகளாக புதுக் கருக்கழியா கரன்ஸி நோட்டுகளுமாய்...என எதிர்க்கட்சிகள் குற்றம் சாற்றிட ஊடகம் அதன் பங்குக்கு ஒருபக்கம் தி.மு.க கூட்டணி வெல்லும், என்றும் மோடிக்கு அறுபது சதத்திற்கும் மேல் மவுசு கூடி விட்டது என்றும் செய்திகளை இடைவிடாமல் சொல்லி வருகின்றன.

 இந்நிலையில் யாருக்கு வாக்களிப்பது என்று எப்படி சொல்வது இவர்களுக்கு எல்லாம் வாக்களிக்கக் கூடாதுதான். ஆனால் அரவிந்த் கெஜ்ரிவால், கமல் போன்றோர்க்கு சீமான் போன்றோர்க்கு அவ்வளவு செல்வாக்கு இருக்கிறதா என்ன எப்படி இருந்தாலும் பழைய நுழை நரிகளுக்குப் போடுவதற்கு பதிலாக புதிய முகங்களை அமர்த்துவதும் ஏற்கெனவே பதவியில் இருந்தவரை தூக்கி எறிந்து மறுபடியும் வேறு நபர்களைக் கொண்டுவருவதும்தான் சரியான வாக்களிக்கும் முறையின்  யுக்திகளாய் இருக்க வேண்டும்...எனவே வாக்களிப்பது அப்படி இருந்தால் தான் நல்லது...அப்படித்தான் வாக்களிக்க வேண்டும் அப்படி நடக்குமா மக்கள் செய்வார்களா?

இங்கு தான் குற்றவாளிகளின் ஆட்சியில் அடிமைப்பட்டுக் கிடக்கத் தயாராகி இருக்கிறார்களே...இந்தியாவின் ஒரு சதவீத மக்களிடம் எழுபத்து மூன்று விழுக்காடு செல்வ வளம் குவிந்திருக்கிற ஒரு நாட்டில் ஏழை தம் பணத்தை வங்கியில் போட்டு எடுக்க விடாது  எடுக்க முடியாது பணம்படைத்த முதலைகளுக்கு அது வாராக் கடனாய் பயன்பட வேண்டும் என இருக்கிற நாட்டில் அதைப்பற்றி அரசு எந்த வித மேல் நடவடிக்கையும் எடுக்க முடியா நாட்டில்
Related image
சிறுமிகளை வன்புணர்ச்சி செய்த காட்டுமிராண்டிகளை விடக் கேவல
மான குற்றவாளிகளுக்கு மரண தண்டனைக்கும் பதிலாக ஆயுள் தண்டனை என உயர்நீதிமன்றங்கள் நீதி செய்து வருகிற நாட்டில்...

ஆள் ஆளுக்கு சட்டமும் நீதியும் மாறிக் கொண்டிருக்க‌

இங்கு நாம் நினைப்பதற்கா இவர்கள் வாக்களிப்பர், எல்லாம் சாக்ரடீஸ் கதைதான் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆன போதும்...நியாயம் நீதி நேர்மை எல்லாம் வெல்லப்போவதில்லை...
Image result for to whom u r going to vote
மாறுபட்ட சிந்தனை இருந்தாலே அதை ஏற்றுக்கொள்ள முடியாத மனித சமுதாயம் கலிலியோவை  ஆயுள் சிறை வைத்ததும், கோபர்நிகஸ் நாவைத் துண்டாடியதும்...சரித்திரம் எப்போதுமே மூடத்தனம் செய்வாரையே விரும்புகிறது நல் அறிஞரை ஏற்றுக்கொள்வதே இல்லை...


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.