Saturday, May 29, 2021

சுப்ரமணிய சாமியும் எஸ்.வி.சேகரும்: கவிஞர் தணிகை

 

சுப்ரமணிய சாமியும் எஸ்.வி.சேகரும்: கவிஞர் தணிகை



பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் மற்றும் விவகாரங்கள் குறித்து சரியான விசாரணை இல்லை எனில் ஆட்சியைக் கலைப்பதைத் தவிர வேறு வழியில்லை என்றும், மெஜாரிட்டி அதிகாமாக எல்லாம் இல்லை நான் நினைத்தால் எனக்கு சட்ட நுணுக்கங்கள் எல்லாம் தெரியும் என்பதால் விசாரணையே நடக்க முடியாமல் செய்து விடுவேன் என்று சு.சாமி என செல்லமாக சுருக்கமாக  பொது வெளியில் அழைக்கப் படும் சுப்ரமணிய சாமி கூறியிருப்பதாக தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது.

குறை குறைதான் குற்றம் தான் அதை சரியாக விசாரித்து உரிய முறையில் தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்பதில் எவருக்குமே மாற்றுக்  கருத்து இருக்க வழி இல்லை. மாற்றுக் கருத்தும் இருக்கக் கூடாது.

ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட தமிழக அரசை இவர் ஒருவரே கலைத்துவிடுவார் என உணர்ச்சி வசப்பட்டு பேசியிருப்பது இவரது இனத்துவேச வன்மையைக் காட்டுகிறது. எனவே தான் என் போன்றோர் கூட எழுதி பதிவிட வேண்டி இருக்கிறது.

இவர் ஒரு பொருளாதாரப் பேராசிரியர், பெரிய வழக்கறிஞர், பொருளாதார மேதை என்றெல்லாம் சொல்லிக் கொள்வார் ஆனால் இவர் கட்சியிலேயே இவர் நான் நல்ல நிதி மந்திரியாக இருப்பேன் இப்போதிருப்பாரை விட எனச் சொல்லியபோதிலும் இவரை எவரும் அவருடைய கட்சியிலேயே மதிக்கவில்லை.

மே.வங்க முதல்வர் மமதா பானர்ஜி பிரதமரை அரை மணி நேரம் காக்க வைத்த விவகாரத்தைப் பற்றியும் செய்திகள் உள்ளன. அதற்காக அரசைக் கலைத்து விட முடியுமா? மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட அரசை கலைப்பதாக பேசுவார் அரசியல் சாசனம், அரசியல் சட்டம் எல்லாம் தெரிந்தவராக நினைத்துக் கொண்டாலும் இது வார்த்தைப் போருக்கான வீண் வார்த்தைகள் ஆனால் வன்மம் வளர்க்கும் வார்த்தைகள்.

 


இவரது கட்சியின் ஹெச் ராசா, எஸ்.வி.சேகர் போன்றோரை மட்டும் எப்படி சட்டபூர்வமாக அணுகி கைது செய்யவே முடியவில்லை அப்போதெல்லாம் இந்த சு.சாமி எங்கு போனார் ? எங்கிருந்தார்? ஏன் கமல்ஹாசன் கூட இதை இனவாரியாகப் பார்க்க வேண்டாம் என்று கண்ணியமாகச் சொல்லியிருப்பதாகச் செய்திகள் இருக்கின்றன

உள்ளூர தி.மு. பிரமுகரின் மகனுக்கு இவர் முதல்வர் ஸ்டாலின் அவர்களின் நெருக்கமான உறவாம் , அவருக்கு படிக்க இடம் இல்லை என்ற சொன்ன காரணமும் இதில் உள்ளது எனவேதான் இந்தப் பள்ளியை தாங்களே எடுத்துக் கொண்டு பழி வாங்க நினைக்கிறார்கள் என ஒரு செய்தியும் வந்துள்ளது.

தினமலர் தி.மு.கவுக்கு எதிராக எழுதுவதும், தினகரன் பா.. அல்லது ஆத்திகம் சார்ந்த மக்களுக்கு எதிராக எழுதுவதும் உள்ளது . இரண்டையும் படித்தால் இரண்டின் வண்டவாளங்களும் வெளிச்சமாகும். எஸ்.வி.சேகர் 20 தொகுதி பா.. சட்டமன்றத் தேர்தலில் நின்று 260 கோடி செலவளித்ததாகவும் அதன் கணக்கு வழக்குகள் எங்கே என்று சமர்ப்பித்துவிட்டீர்களா என வெளிப்படையாகவே கேட்டு வருவதாகவும் தினகரனில் செய்தி

வாட்ஸ் ஆப் செய்தியில் உண்மையோ பொய்யோ: கன்னியாகுமரி பா.. வேட்பாளர் இப்போதைய சட்டமன்ற உறுப்பினர் ...தி.மு. அப்போது ஆளும் கட்சியோ, பா.. மத்திய ஆளும் கட்சியோ இந்த இரண்டு கூட்டணி கட்சிகளுமே தேர்தல் செலவுக்கு என எந்த நிதியும் தரவில்லை, வேட்பாளராகநியமித்ததோடு சரி, நான் அழுக்கு வேட்டியுடன் சரியான உணவின்றி வாக்களப் பெருமக்களை அணுகி ஆதரவு கேட்டு வந்தேன். வியப்பு என்ன எனில் நான் எங்கே வெல்லப் போகிறேன் என நினைத்தேன் ஆனால் வாக்காளப் பெருமக்கள் என்னை வெற்றி பெறச் செய்துவிட்டனர் என வியப்புக்குரிய செய்தியை தெரிவித்ததாக படித்தேன்.

 அப்படி ஆனால் அந்த தொகுதிக்கு கொடுக்கப் பட வேண்டிய கொடுக்கப் பட்டிருக்க வேண்டிய‌ 13 கோடி ரூபாய் தேர்தல் நிதி எவரிடம் சென்றது என்பது போன்ற கேள்விகள் நிறைய எழுகின்றன....தேர்தல் ஆணைய ஆணைப்படி ஒரு சட்ட மன்றத்திற்கு 30.8 இலட்சம் ரூபாய்கள் மட்டுமே அதிகபட்சம் செலவளிக்க வேண்டும் என்பதற்கு மாறாக அவரது பொறுப்பான கட்சி பிரமுகரே 13 கோடி வீதம் 20 தொகுதிக்கும் சேர்த்து 260 கோடி செலவுக்கு தரப்பட்டதே கணக்கு என்ன எனக் கேட்டிருப்பதிலிருந்து தேர்தல் ஆணையம், மத்திய அரசு, போன்றவை என்ன செய்தன? சட்டபூர்வமான நடவடிக்கைகளை சு.சாமி எடுக்க வேண்டுமே? எடுப்பாரா? இந்த சட்ட மேதை? அப்படியே எடுத்து அரசைக் கவிழ்த்தாலும் 20 தொகுதியில் ...தி.மு.கவிடம் கெஞ்சி 4 தொகுதியில் வெற்று பெற்றுள்ள அந்தக கட்சியின் 4 தொகுதியும் தமிழகத்தில் போய்விடுமே அதற்கும் அவர்கள் தயாராகத் தானே இருந்தாக வேண்டும்? இதுதான் எனக்கு ஒரு கண் போனால் அவருக்கு இருகண்ணும் போக வேண்டும் என்ற நியதியோ... நாங்கள் வெல்ல முடியவில்லை எனவே எவருமே வெற்றி பெற்றிருக்கக் கூடாது  அனைவரின் பதவியும் போகட்டும் ஆட்சியும் இல்லாமல் போகட்டும் என்னே ஒரு நல்ல எண்ணம் பாருங்கள்...

பள்ளிகளை அரசுடைமையாக்கி விடுவது சிறந்த தீர்வாக இருக்கும்.

தனியார் பள்ளிகளை இல்லாமல் செய்வது நிறைய நன்மை தரும்.

இனியாவது தேர்தலில் அரசு, மற்றும் தேர்தல் ஆணையம் மட்டுமே செலவு செய்ய வேண்டும் அரசியல் கட்சிகள் செலவு செய்வதை அனுமதிக்கக் கூடாது என்பது போன்ற தேர்தல் சீர்திருத்தங்கள் துவங்கப் பட வேண்டும். அது ஓரளவு பலனளிக்கும் தேர்தல் சீர்திருத்தம் மற்றும் ஜனநாயக முறைகளின் வளர்ச்சியின் போக்குக்கு.

இதற்கு எல்லாம் சட்ட மேதைகள் உதவ வேண்டும் சு.சாமி போன்ற சட்டமாண்பு தெரிந்தவர்களே கூட உதவலாம். நாட்டில் நல்ல ஜனநாயகம் மலர,வளர வழிவகுக்க வேண்டும் என்று சொல்லி இரு கரம் கூப்பி வணங்கிக் கேட்டுக் கொள்கிறேன்

மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை

இன்றைய நாட்டு நடப்பு: பள்ளிக் கல்வியும் விளையாட்டும் அரசியலும்:: கவிஞர்...

இன்றைய நாட்டு நடப்பு: கவிஞர் தணிகை பள்ளிக் கல்வியும் விளையாட்டும் அரசியலும்
இன்றைய நாட்டு நடப்பு: கவிஞர் தணிகை பள்ளிக் கல்வியும் விளையாட்டும் அரசியலும் #சுசீல்குமார் #விஜேந்திர சிங் #மேரி கோம்ஸ்' #செய்னா #சு.சாமி #ஹெச்.ராசா #எஸ்.வி.சேகர் #கன்னியாகுமரி #பள்ளிகள் #பத்மா சேஷாத்ரி #மஹரிஷி வித்யாலயா #விளையாட்டு #அரசியல் மறுபடியும் பூக்கும்

Friday, May 28, 2021

மனிதரில் இத்தனை நிறங்களா குணங்களா? மறுபடியும் பூக்கும் தணிகை மணியம்:

மனிதரில் இத்தனை நிறங்களா குணங்களா?
மறுபடியும் பூக்கும் தணிகை மணியம்:

#பாரதி
#மிளகாய்
#சுவை
#இளநீர்
#குழந்தை
#மனிதம்
#வேறுபாடு
#ஐம்பூதம்
#காற்று
#ஆக்ஸிஜன்
#விதைப்பது
#முளை
மறுபடியும் பூக்கும் 
கவிஞர் தணிகை

Thursday, May 27, 2021

கோடி ரூபாய் கொடுத்தாலும் புகைப்பது போல‌ நடிக்கவும் மாட்டேன்: கார்த்திக்

 சிவகுமார் கார்த்திக்: கவிஞர் தணிகை



திரை உலக மார்க்கண்டேயன் என்று புகழப் பெற்ற சிவகுமாரின் இளைய மகன் கார்த்திக் பல ஆண்டாக திரைத்துறையில் இருந்தாலும் 20 படங்கள் மட்டுமே நடித்திருக்கிறார் என்பதற்காக இந்த பதிவு அல்ல.

அவர் கோடி ரூபாய் கொடுத்தாலும் புகைப்பது போன்ற காட்சிகள் இருந்தால் அந்தப் படங்களில் நடிக்க மாட்டேன் என்று கூறியதான செய்திகளைப் படிக்க நேர்ந்தது.இவர் அமெரிக்காவில் நியூயார்க்கில் தொழில் பொறியியல் பட்டப் படிப்பு படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


பாரட்டத் தக்கது

தந்தையைப் போல பிள்ளை எல்லா நலமும் பெற்று நீடுழி வாழட்டும்

வாழ்த்துகள் கார்த்திக் சிவகுமார் குலம் தழைக்கட்டும்



மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.


கோடி ரூபாய் கொடுத்தாலும் புகைப்பது போல‌ நடிக்கவும் மாட்டேன்: கார்த்திக்

நேசமுடன் ஒரு நினைவதுவாகி...எல்லோரும் இன்புற்றிருக்க...

படைப்பதனால் நானும் கூட இறைவன்: கவிஞர் தணிகை

#கண்ணதாசன்
#வாழ்க்கை சரிதம்
#சுய வாழ்க்கை சரிதம்
#முரண்பாடு
#உண்மை
#சுடும்
#பாலியல்
#அளவுக்கு மிஞ்சினால்
#பயன்பாடு
#வாழ்க்கை மாற்றம்
#ஆசிரியர்
#மறுபடியும் பூக்கும்
#கவிஞர் தணிகை

அளவுக்கு மிஞ்சினால்...
உண்மை சுடும்

நேசமுடன் ஒரு நினைவதுவாகி...எல்லோரும் இன்புற்றிருக்க...

Wednesday, May 26, 2021

ஒரு நூல் ஓர் வாழ்வு: கவிஞர் தணிகை

நூல்கள் சேர்த்து வைக்கும்: கவிஞர் தணிகை

#நார்
#வாழை
#நூல் 
#ஆடை
#ஏடுகள்
#மனிதம்
#ஒரு நூல்
#ஒர் வாழ்வு
#பகத்
#வீடு
#ஓய்வு
#மறுபடியும் பூக்கும்
#கவிஞர் தணிகை

ஒரு நூல் ஓர் வாழ்வு: கவிஞர் தணிகை

Tuesday, May 25, 2021

வாழ்ந்தவர் கோடி: கவிஞர் தணிகை ...ஒரு நூல்


வாழ்ந்தவர் கோடி: கவிஞர் தணிகை #ஒரு நூல்
வாழ்ந்தவர் கோடி: கவிஞர் தணிகை #ஒரு நூல் #ஆண்டவர் #ஆன்றோர் #சான்றோர் #கல்வி #கரையில‌ #கற்பவர் #நாள் சில‌ #மக்களின் #மனதில் #இடம் பெற‌ #நூல் விடு #பட்டம் #பொட்டலம் #திண்மை #மறுபடியும் பூக்கும் #கவிஞர் தணிகை

Why Did Swami Vivekananda Die So Young?

Monday, May 24, 2021

Cinema சினிமா Cinema:Operation Java(Malayalam) and Her (English)


http://thanigaihaiku.blogspot.com/2021/05/game-of-nature.html
சினிமா: 
#ஆப்பரேசன் ஜாவா
#சைபர் கிரைம்
#ஜெ லேப்
#தற்காலிகம்
#ஒப்பந்தம்
#பயிற்சி
#பணியாளர்
#உயிர்
#ஆபத்து
#வீண் பெருமை
#சமூகக் கட்டமைப்பு
#தன்னுணர்வு
#தன் புணர்ச்சி
#ஹர்
#2 ஆஸ்கார்
#தேவைதானா?
மறுபடியும் பூக்கும் 
கவிஞர் தணிகை

Tuesday, May 18, 2021

தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு: கவிஞர் தணிகை

  தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு: கவிஞர் தணிகை



வணக்கம்


மக்கள் பிரதிநிதிகள் கட்சியை சார்ந்திருக்கக் கூடாது. அவர்கள் மக்கள் அனைவர்க்கும் பொதுச் சேவை புரியவேண்டும் என நீங்கள் ஒரு கொள்கை முடிவுடன் அரசாட்சி அமர்ந்தவுடன் கடைப் பிடிக்க முயற்சிசெய்து வருவது  அனைவராலும் பாரபட்சமின்றி பாரட்டத் தக்கது.

தலைமைச் செயலர் இறையன்பு ஐ.ஏ.எஸ் முதல் மற்றும் திறமையுள்ள‌ 4 ஐ.ஏ.எஸ் செயலர்களை தனிச்செயலர்களாக நியமித்திக் கொண்டுள்ளது மேலும் நம்பிக்கை பிறக்கிறது நல்லவர்களுடன் கை கோர்ப்பு அவசியம் என்பதாக.



நீங்கள் தலைமையில் இப்படி இருக்கும் போது 


1.உங்கள் கட்சி சார்ந்த ஒருவர் குடித்துவிட்டு, இடுப்பில் வேட்டி கூட நழுவுவதை கையில் பிடித்தபடியே ஊரடங்கு உள்ள நிலையில் பணியில் இருக்கும் ஒரு பெண் காவலரிடம் அதிகார தோரணையில் புரிந்தும் புரியாமலும் பேசுவதை தினமலர் பத்திரிக்கை வெளியிட்டிருந்தது.


2. திருச்சியில் உங்கள் மாவட்ட கட்சி அலுவலகத்தில் தமிழக அமைச்சர்களில் ஒருவரான அன்பில் பொய்யாமொழி மஹேஷ் அவர்கள் கூட்டம் நடத்தியதாகவும் அதில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளர் /ஆணையர் கலந்து கொண்டதாகவும் செய்திகள் வெளி வந்துள்ளன.


இது போன்ற செயல்கள் எல்லாம் நீங்கள் நல்ல நோக்கத்துடன் ஆள வந்திருக்கும் இச்சூழலை போகப் போக கெடுத்து விடும். ஆரம்பத்திலேயே இப்படி என்றால் இனி எப்படி இருக்குமோ என்ற நிலையை மக்கள் யோசிக்க ஆரம்பித்து விடுவார்கள்.


எப்படி அம்மா உணவகத்தின் முன் உள்ள விளம்பரப் பலகையை எடுத்து எறிந்த  கட்சியினர் மேல் நீங்கள் நடவடிக்கை எடுத்தீர்களோ அதே போல இது போன்ற நடவடிக்கைகளிலும் கவனித்து செயல்பட வேண்டும் அப்போதுதான் அரசின் கட்டுப்பாட்டை உங்கள் கட்சியினர் அனுசரித்து நடந்து கொள்வர்.


3. மேலும் முக்கியமாக இப்போது அரசின் மதுக்கடைகள் முழு ஊரடங்கில் மூடப்பட்டு இருப்பது வரவேற்கத் தக்கது. அதை அப்படியே நீடித்து முழுமையாக அரசு மதுக்கடைகளை தமிழகத்திலிருந்து எடுத்து விட்டால் அது புண்ணியமாகும். ஏன் எனில் அதனால் ஏற்படும் சமூகக் குற்றங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல.மேலும் இது போன்ற இடைவெளிகளில் கவனித்துப் பார்த்தால் குற்றம் குறைகள் குறைந்திருப்பதை வெளிப்படையாகவே பார்க்க முடியும்.

 எனவே மதுக்கடைகள் நிரந்தரமாக எடுக்கப் பட்டால் அது நல் விளைவுகளை ஏற்படுத்தும். உங்கள் கட்சி ஆட்சி அரசு முறைக்கும் புகழ் சேர்க்கும். இது கடந்த தேர்தலின் போது வெற்றி பெற்றால் முதல் கையெழுத்தாக உங்கள் தந்தை போட்டு அமல்படுத்துவதாக இருந்த திட்டம் தான். அதை ஏன் நீங்கள் துணிந்து செய்யக் கூடாது என ஒரு மக்கள் சேவகனாக நின்று கேட்டுக் கொள்கிறேன்.


நன்றி


இவண்

மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை

இணைத் தலைவர்

தமிழ் நாடு அன்பு வழி அறப்பணி மன்றம்




Monday, May 17, 2021

காந்தியம் என்றும்...பின்னூட்டம் 2 கவிஞர் தணிகை

காந்தியம் என்றும்...பின்னூட்டம் 2 கவிஞர் தணிகை
#இளங்கோ
#குத்தம்பாக்கம்
#பாலு
#நல்லோர் வட்டம்
#பேராசிரியர்
#பழனித்துரை
#கவிஞர் தணிகை
#மறுபடியும் பூக்கும்

காந்தியம் என்றும்....பின்னூட்டம் 1. கவிஞர் தணிகை

https://youtu.be/vzOQJJWWz6Q
காந்தியம் என்றும்....பின்னூட்டம் 1. கவிஞர் தணிகை
#மார்கண்டன்
#விவேகானந்தன்
#விடியல் குகன்
#கார்த்திகேயன்
#சாமியார்
#விக்னேஷ்
#ரஞ்சித்
#வலை
#தமிழ்
#தொலைக்காட்சி
#மறுபடியும் பூக்கும்
#கவிஞர் தணிகை

Sunday, May 16, 2021

Cinemaசினிமா Cinema: தி பிரீஸ்ட் (மம்மூட்டி) மலையாளம் & Venom English: க...

சினிமா: தி பிரீஸ்ட் (மம்மூட்டி) மலையாளம்: கவிஞர் தணிகை
#அமானுஷ்யம்
#சிறுமி
#மஞ்சு வாரியர்
#மம்மூட்டி
#துப்புறியும்
#இரண்டு 
#தற்கொலைகள்
#கொலைகள்
#காவல் துறை
#உதவி
#வெனம்
#ஆங்கிலம்
#துணை நடிகர்கள்
#உதவி இயக்குனர்கள்

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

Friday, May 14, 2021

வாழ்த்து மற்றும் பிரார்த்தனை: கவிஞர் தணிகை

வாழ்த்து மற்றும் பிரார்த்தனை: கவிஞர் தணிகை

#கோவிட் 19
#தீ நுண்மி
#கடந்து போகும்
#பிரார்த்தனை
#கன்யாஸ்த்ரி
#ரமலான்
#பிறை நிலா
#செவிலியர்

மறுபடியும் பூக்கும் 
கவிஞர் தணிகை

Wednesday, May 12, 2021

பிரபலங்களின் தொடர்புகள்: கவிஞர் தணிகை

 பிரபலங்களின் தொடர்புகள்: கவிஞர் தணிகை



நேற்று எனது மறுபடியும் பூக்கும் தணிகை மணியம் யூ ட்யூப்பில் மறுபடியும் பூக்கும் புத்தக வெளியீடு பற்றி குறிப்பிடும் போது வார்த்தைச் சித்தர் வலம்புரிஜான் எம்.ஜி.ஆருக்கு சற்று நெருக்கமாக இருந்து தாய் என்னும் வார இதழை நடத்திக் கொண்டிருக்கும் போது எனது கவிதைகளை அனுப்பி வைக்கச் சொல்லி அவருடைய "கவிதா பானு" என்ற நிறுவனத்தின் வழியாக வெளியிடுவதாகவும் சில நிபந்தனைகளுடன் கேட்டிருந்தார். அதைச் சொல்ல மறந்ததால் இந்தப் பதிவுக்கு அவசியமாகி விட்டது



அவை எனக்கு ஒத்து வரும் என்று தோன்றாததால் பிற பதிப்பகங்களை எல்லாம் நாடிவிட்டு, அதன் ஒரு முனையில் மீரா பதிப்பகம் புதுக்கோட்டை அவர்களுடன் எனக்கு நேர்ந்த அனுபவங்களைக் குறிப்பிட்டு இருந்தேன். ஈரோடு புத்தகத்திருவிழாவுக்கு வந்திருந்த கௌரா ஏஜன்ஸி கூட உங்கள் கருத்துகளை எடுத்து வாருங்கள் புத்தகம் செய்யலாம் என பின் நாளில் அதாவது நான் ஈரோடு புத்தகத் திருவிழாவில் எனது புத்தகங்களையும் போட்டு விற்பனை செய்த ஆண்டில் பேசியதாக நினைவு. ஆனால் அதுவும் ஏனோ எந்த காரணத்தாலோ தள்ளிப் போக விட்டாகி விட்டது. 



ஆனால் அப்போது இது போல எவரிடம் எல்லாம் நாம் சிறு சிறு தொடர்புகள் கொண்டிருந்தோம் என எண்ணிப் பார்க்க வேண்டியதாயிற்று: சுஜாதா ஒரு  நாவல் எழுதுகையில் தணிகை என்ற ஒரு கேரக்டரை நாயகனாக அதிக  சந்தேக புத்தி உள்ளவனாக செய்திருப்பார் கதையின் பெயர் மறந்து விட்டது..



நாம் என்ன நூல் செய்தாலும் அதை உரிய முறையில் செய்து இந்தியாவில் உள்ள மும்பை பொது நூலகம், கொல்கொத்தா தேசிய நூலகம் பெல்வடார் ,கன்னிமாரா சென்னை,டெல்லி பொது நூலகம்,அண்ணா நூற்றாண்டு நூலகம், போன்ற நூலகங்களுக்கு 2 நூல்கள் அனுப்பி ஒப்புகை சீட்டு பெற்று வைத்திருப்பது சிறந்தது. அதன் படி எனது நூல்களை அனுப்பி அப்படி ஒப்புகை சீட்டு பெற்று வைத்துள்ளேன்



லேனா தமிழ்வாணன் வெட்டி பந்தா எல்லாம் இல்லாமல் எப்போதும் தம்மை மதிப்பவருக்கு அவரது பதிலை எழுதுவார் அப்படி சில அவர் எழுதிய சில கடிதங்கள் எனக்கும் உண்டு



சுந்தர ராமசாமி ஒரு முறை இப்போதைய இளைஞர்கள் எல்லாம் காதலிப்பது இல்லை என்று பேட்டி கொடுத்திருந்தார் அதைப் பார்த்து அப்படி எல்லாம் இல்லை உங்கள் பார்வைக்கு மாறாக இப்போதும் இளைஞர்கள் இருக்கிறார்கள் என எழுதி அவரும் எனக்கு பதில் எழுதி, அவரின்" ஒரு புளிய மரத்தின் கதை, ஜெ ஜெ. சில குறிப்புகள்" என்னிடம் வந்து சேர்ந்தன.



ஒரு திருமணத்தில் மலைச்சாமி ஐ.ஏ.எஸ்  அவர்களை சந்தித்து நூல் பரிமாறி உரையாடினோம். நன்றாகப் படித்து அதைப் பற்றி ஒரு கடிதம் எழுதி வியக்க வைத்தார். கொஞ்ச நாள் எம்.பியாக இருந்தார் சீக்கிரம் மறைந்தார்.



தாரமங்களத்தில் அரட்டை அரங்கம் வந்து நடத்திய விசுவுக்கும் எனக்கும் கடிதத் தொடர்பு ஏற்பட்டு சில கடிதங்களைப் பரிமாறிக் கொண்டோம். அவர்தாம் முதலில் லிட்டில் திங்க்ஸ் மேக்ஸ் பர்வெக்சன் பட் பெர்வெக்சன் ஈச் நாட் லிட்டில் திங்...என தமது கடித தலைப்பில் பயன்படுத்தி இருப்பதை முதன் முதலாக அவரிடம் இருந்துதான் பார்த்தேன்...



அவரின் சீடராகவும் உறவினராகவும் இருந்த பாஸ்கர் ராஜ் உடன் அகடவிடகம் பவானியில் செய்கையில் எனக்கும் அவருக்கும் தொடர்பு ஏற்பட எனது "அளவுக்கு மிஞ்சினால் " நூல் அவரால் மெச்சப் பட்டது. மறுபடியும் புதுக்கோட்டை ஒளிப்பதிவுக்கு அழைத்தார் உடல் நலம் இடமளிக்காது என மறுத்துவிட்டேன். இவரின் அகட விகட நிகழ்வில் பேசியபோது வி.ஜி.பி. செல்வராஜ் என நினைக்கிறேன், அவர், நடிகர் சந்திரசேகர்,அறிஞர் அப்துல்காதிர் ஆகியோருடன் நல் தொடர்பு ஏற்பட்டது. அப்துல் காதிர் மிகவும் உயர்ந்த பேச்சு என என்னுடையதைக் குறிப்பிட்டார்.



அகடவிகடத்தில் பேசியதால் மறுபடியும் என்னை தாரமங்களம் நிகழ்வுக்கு பிறகு தலைவாசல் போன்ற நிகழ்வுக்கு அவர்களாகவே அழைத்தும்  என்னை அவர்கள் நிகழ்வில் பேசவிடவில்லை. விசுவுக்கும் பாஸ்கரராஜுக்கும் அந்தளவு போட்டி பொறாமை ஏன் ஏற்பட்டது என்றுதான் எனக்கேத் தெரியவில்லை.



டாக்டர் குழந்தைசாமி  சிகாகோவில் ஒரு தமிழ் மாநாடு நடப்பதாக சொல்ல அவருடன் நான் கடித வழி, தொலைபேசி வழி தொடர்பில் இருந்தோம். அப்போதுதான் நான் கலாமின் கடிதத்தோடு சிறு பிள்ளைகளுக்கான "தணிகையின் பார்வையில் தலையாய குறள்கள்" என்ற நூலை பரப்ப முயன்று வந்தேன்...அந்த ஒருங்கிணைப்பாளர் செலவு ஏதும் தரமுடியாது நீங்கள் உங்கள் சொந்த செலவில் வேண்டுமானால் வரலாம் என்ற காரணத்தால் அந்த புறப்பாட்டைக் கைவிட்டேன். ஆனால் அப்போது குழந்தை சாமி அவர்களின் நட்பு சிறிது காலம்



கோவையில் நடந்த செம்மொழி மாநாட்டுக்கு பார்வையாளராக வாருங்கள் என அழைப்பு வந்தது, கலாம் கலந்து கொள்ள அழைக்கப் படவில்லை என்ற குறையும்,  எனது நெருங்கிய நண்பராக அப்போது இருந்த ஒருவர் போட்ட தடையும் அதில் கலந்து கொள்ள முடியாமல் போயிற்று. ஆனால் எனது தூண்டு உணர்வால் ஒரு நூல் வெளியிட்ட விருமாண்டி என்ற பாரதிய வங்கி மேலாளர் அங்கே சென்று அவர் புத்தகத்தையும் "ஞான உதயன் " என்ற பேரில் "இறைவனும் மனிதனும்" என்ற பேரில் வெளியிட வாய்ப்பாயிற்று.





State Bank  தனிக் கணக்கு மேலாளராக இருந்த மா.ஜார்ஜ் மணோகரன் அவர்கள் எனக்கு பெரிய ரேப்பர் போட்ட பைபிளை  நீங்கள் என்னுள்ளும் என் வார்த்தைகள் உங்களுள்ளும் இருந்தால் நீங்கள் கேட்டதெல்லாம், விரும்பியதெல்லாம் நடக்கும் என்ற வார்த்தைகளை எழுதி கையொப்பமிட்டு " வார்த்தை கடவுளாயிருந்தார்" என்ற யோவானின் வார்த்தையுடன் பரிசளித்தார்










பொன் மாணிக்கவேல் சேலம் காவல் துறைக் கண்காணிப்பாளராக இருக்கும்போது கருமலைக்கூடல் காவல் நிலையக் கட்டடத்தை ஒரு டி.ஐ.ஜி. திறக்க வந்திருந்த போது மதுவிலக்குக்கு ஆதரவாக கையொப்பமிடுங்கள் எனக் கேட்க அவரோ , அரசின் கொள்கை முடிவுக்கு எதிராக எப்படி ஒரு அரசு ஊழியரான தான் கையொப்பம் இட முடியும் என அன்புடன் விளக்கம் தந்தார்.




மிக நெருக்கமாக சேலம் மாவட்ட ஆட்சியராக இருந்த எம்.எப். பாரூக்கி அவர்களுடன் பழக வாய்ப்பு வந்ததது. அவர்தாம் முதன் முதலில் சேலத்துக்கு மேம்பாலம் தந்தவர், நள்ளிரவில் பேருந்து நிலையத்தை தற்போதிருக்கும் அர்ச்சுவான் ஏரிக்கு மாற்றி அந்த பெரும் பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைத்தவர், அவர் நான் எதிரில் வந்தால் காரை நிறுத்தியும் கூட என்னுடன் பேசாமல் செல்லாத குணவானாக இருந்தார். அவர் அதன் பிறகு மத்திய அரசின் கீழ் தொழிற்சாலை செயலராக இருந்ததை எல்லாம் கேள்விப்பட்டேன்.



அவருடன் செயல்படும்போதுதான் க.ராசாராம் அவர்களின் மூத்த சகோதரர் ஜெயசீலன் அவர்களுடன் அப்போது அவர் சேலம் மாவட்ட கைப்பந்துக் கழக தலைவராகவும் இருந்தார் அவருக்கும் எனக்கும் தொடர்பு ஏற்பட்டது அவர் எனது புத்தகம் ஒன்றை சேலம் தமிழ் சங்க வழியாக வெளியிட துணை செய்தார் ஆனால் எனது கா.வை.பழனிசாமி என்பாரின் வெளிப்படையான புத்தக‌ விமர்சனம் ஒன்றால்  அந்த முயற்சியை  அந்த வங்கியில் பணிபுரிந்தவரும் அப்போது  சேலத்து தமிழ் சங்க நிர்வாகிகளை உறவினராகப் பெற்றிருந்தவருமான கா.வை பழனிசாமி அதை தடை செய்து விட்டார். சிரித்துப் பேசிய அந்த சந்திப்பு  என்றும் கசந்துபோகும்படியாக மாறிப்போனது .பாம்பின் கால் பாம்பறியும் என்னும்படி இந்த நாட்டில் தமிழ் எழுத்தாளர் ஒருவர்க்கொருவர் எப்படி துணைபுரிய மாட்டார் என்பதற்கு இவர் ஒரு எடுத்துக்காட்டு என்பதை உணர்ந்து கொண்டேன்.



ஹோகேனக்கல் கவிதைப் பட்டறை வாருங்கள் என்றார்கள், நிறைய பேர் ஜெமொ, சாருப்ரபா சுந்தர் (அரைக்கால் சட்டை பிரபலம்)விக்ரமாதித்யன் இப்படி நிறைய பேர் வந்திருந்தார்கள். இரண்டு நாள் நிகழ்வு முதல் நாள் முடியுமுன்பே போதுமடா சாமி உங்கள் சகவாசம் என பிய்த்துக் கொண்டு ஓடி வந்து வீடு சேர்ந்தேன். ஏன் எனில் எல்லாம் தாக சாந்திக்காகவே வந்திருந்தது போல் இருந்தது. முதல் சுற்றில் அவரவர் அவ்வப்போதைய எழுதிய கவிதையை சமர்ப்பித்து கலந்துரையாடலாம் என்றவர்கள் முதலில் இருந்த புதிய நபர்கள் அப்படி முயற்சி செய்து சமர்ப்பிக்கையில் பிரபலமானவர்கள் எல்லாம் அவரவர்கள் ஏற்கெனவே எழுதிய கவிதையை சமர்ப்பித்தார்கள்.இப்படி முதலில் இருந்தே முரண்பாடுகள்...இருந்தாலும் சிலருக்கு எனது புத்தகத்தை பரிசளித்தேன் விக்ரமாதித்யன் எனக்கும் ஒரு புத்தகம் கொடுங்கள் எனக் கேட்டு வாங்கிக் கொண்டார். இவர் நான் கடவுள் வயோதிகப் பிச்சைக்காரராகவும் இப்போதைய சுல்தானில் கூட கார்த்திக்கிடம் விவசாயம் பற்றி உரைப்பவராகவும் வருகிறார். இவர் எல்லாம் இன்னும் இருப்பதில் என் போன்றோர்க்கு மகிழ்வே. ஏன் எனில் நரை விழுந்து, பல் போய், சரியான உணவு கூட அக்கறையின்றி மதுவுக்குள் மாய்ந்து போனவராக காணப்பட்டார்.



ஏன் பெரும்பாலும் கவிஞர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் இப்படி போதைக்கு அடிமையாகி மனித வாழ்வை தொலைத்து விட்டு உடலையும் கெடுத்துக்கொள்கிறார்களோ அதனால் தாம் என் போன்றோர் சினிமாத் துறைக்கே செல்ல வில்லை என்பதையும் எப்போதும் நான் நினைத்துப் பார்ப்பதுண்டு...விதிவிலக்கு: சிவகுமார் அவர்கள்


ஈரோடு புத்தக கலைவிழாவில்: நிறைய பிரபலங்கள் பேசுவதைக் கேட்க சென்றோம். 2 முறை மகனுடன் கலாமை பார்க்க, ஒரு முறை சிவகுமார் பேசுவதையும் கேட்டோம், நெஞ்சுருகிப் போனது அவருடைய புத்தகங்கள் உண்மையைப் பேசியது.



எங்கள் இயக்க சசி பெருமாள் உண்ணா நோன்பிருந்த  போது சசிக்குமார் நினைவுடன் சிவக்குமார் அவரை வந்து சந்தித்தது மனித நேயத்தை அவர் எவ்வளவு மதிக்கிறார் மரியாதை செய்கிறார் என்பது தெரிந்தது.


சில முறை நான் எழுதிய முதல்வரின் குறை தீர்க்கும் பிரிவுப் பிரச்சனைக்கு கலைஞர் கருணாநிதியும், ஜெயலலிதாவும் மிகவும் நல்ல செயல்பாட்டை தீர்வாகத் தந்தார்கள். அதையும் மறக்க முடியாது.


எல்லாவற்றையும் விட சிகரத்தின் உச்சிக்கு என்னை நினைக்க வைப்பது: கலாம் குடியரசுத் தலைவராக இருந்தபோது எனக்கு எழுதிய கடிதம், அவருக்கு எனது புத்தகங்களை சேர்ப்பித்தது,


இந்தியாவின் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக 1988 வாக்கில் இருந்த பிரபல்ல குமார் நட்வர்லால் பகவதி அவர்தாம் பி.என்.பகவதி அவர்கள் அவையில் சேவையாளருக்கு அரசு தரப்பில் என்ன மரியாதை கிடைக்கிறது இன்னும் மக்களுக்கு எப்படி சேவையைக் கொண்டு செலுத்துவது போன்றவற்றை பேசி இந்த வாய்ப்பே எதிர்பாராத போது திடீரென கிடைத்த வாய்ப்பாக இருக்க ஆங்கிலத்தில் சில நிமிடம் பேச நேர்ந்தது அது மட்டுமின்றி அன்று ஹைதராபாத் ரிட்ஜ் ஹோட்டலில் மதிய உணவும் சுமார் அரை நாள் அவருடன் இருந்து பல்வேறுபட்ட நாடு சார்ந்த முன்னேற்றம் சார்ந்த பிரச்சனைகள் பற்றி கலந்தளாவியது...

இவை யல்லாமல் சேலத்தில் ஒரு தமிழ் சங்க நிகழ்வில் சாலமன் பாப்பையா,அப்துல் ரஹ்மான், மு.மேத்தா,சிலம்பொலி செல்லப்பன் அனைவரையுமே சந்தித்து எனது நூலை பரிசளித்துள்ளேன்...இப்படியே செல்லும் இந்தப் பயணத்திற்கு....



இப்போதைக்கு இது போதும்,இன்னும் ஏதுமிருப்பின் பின் நாள் ஒருநாள் தொடர்வேன் என்று சொல்லி

மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை






Tuesday, May 11, 2021

மறுபடியும் பூக்கும் : கவிஞர் தணிகை

மறுபடியும் பூக்கும் : கவிஞர் தணிகை

#முதல் நூல்
#1990களில்
#கோ.பெ.நாராயணசாமி
#கோனூர் பெருமாள்
#சிந்தனையாளர்
#அர்த்த்னாரி
#குன்றக்குடி
#அடிகளார்
#தென்கச்சி
#சுவாமினாதன்
#வலம்புரிஜான்
#விடியல் குகன்
#சிற்பி வேலாயுதம்
#மீரா
#கவிஞர் தணிகை

Monday, May 10, 2021

எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சித் தலைவரானது சரியே: கவிஞர் தணிகை

 எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சித் தலைவரானது சரியே: கவிஞர் தணிகை



வெளியே போலீஸ் லத்தியுடன் தயாராக இருக்கிறது . அ.இ.அ.தி.மு.க கட்சித் தலைமையைத் தேர்ந்தெடுக்கும் கூட்டத்தில் ஏதாவது தகராறு ஏற்பட்டால் அடித்து கலைத்து விட. அதே போலீஸ் தான் சில நாட்கள் வரை எடப்பாடி பழனிசாமி முதல்வர் என்ற அந்தஸ்தில் எங்கு சென்றாலும் ப்ரொட்டோக்கால் என்று சுமார் 10 மீட்டருக்கு ஒரு காவலரை நிறுத்தி பொது மக்களை எல்லாம் வேறு வழியில் செல்லச் சொல்லி அல்லது அவர் போன பின்னால் செல்லுங்கள் எனத் தடுத்து நிறுத்தியதும்.



சில நாட்களில் பாருங்கள் என்ன ஒரு தலைகீழ் மாற்றம். மக்கள் அப்படியேதான் இருக்கிறார்கள். ஆனால் முதல்வராக இருப்பவர் எதிர்க்கட்சித் தலைவராவதும், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவர் முதல்வர் ஆவதும் மக்களின் கையில் இருக்கிறது. அதுதான் ஜனநாயகம்.


ஆனால் அது பற்றி எல்லாம் நான் குறிப்பிட இங்கு எதுவும் பதிவிட வில்லை. ஏன் எனில் அ.இ.அ.தி.மு.க கட்சி ஜனநாயகத்தில் சசிகலா உள் வருவதாக அவர்கள் கட்சி தலைமையகத்தில் போஸ்டர் வைத்ததும், பா.ஜ.க 4 உறுப்பினர்களில் ஒருவர் எதிர்க்கட்சித் தலைமையை முடிவெடுக்கப் போவது நாங்கள் என பழைய மனப்பால் குடித்து வார்த்தையை விரயம் செய்ததற்கும் மாறாக பொதுச் செயலாளர்தாம் அதாவது ஓ.பி.எஸ் தான் வரவேண்டும் எவ்வளவு தான் விட்டுக் கொடுப்பது, நீங்கள் தாம் முதல்வராக இருந்தீரே எனக் கேட்டதும் மத்திய பி.ஜெ.பி சொல்வார்தாம் வரவேண்டும் என்றதும் தவிடு பொடியாக‌



ஜனநாயக மாண்பு என்றால் என்ன இருக்கும் 65 சட்டமன்ற அ.இ.அ.தி.மு.க பிரதிநிதிகளில் 61 பேர் எடப்பாடி பழனிச்சாமியை ஆதரிக்க, 4 பேர் மட்டும் எதிர்த்திருக்கிறார்கள். ஒருமித்த கருத்து அல்லது ஏகோபித்த கருத்தாக த‌லைமையை முடிவு செய்ய முடியவில்லை எனில் யார் பக்கம் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்பதுதான் முறையான ஜனநாயகத் தேர்தல் முறையாக இந்தியாவில் இது வரை இருக்கிறது. அதன்படி எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது சரியானதுதான்.


ஊடகங்களுக்கு தீனி கிடைக்க வேண்டுமே என்பதற்காக ஊதிப் பெருக்க வைத்து ஆச்சரியமூட்டும்படியாக எதையாவது எழுதுவது பேசுவது வீடியோ போடுவது என்ற மரபுகள் பழங்கதையானவை. அவை சரியானவையும் அல்ல.


எனவே அப்படி தேர்ந்தெடுக்கப் படுவதில் எந்த சிக்கலும் இல்லை. அப்படித்தான் எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார் அந்தக் கட்சியின் தலைவராக. ஓ.பி.எஸ் கோபித்துக் கொண்டு கூட்டம் முடிந்த‌தும் முதல் ஆளாக வெளியில் போனாலும் நியாயம் நியாம்தானே...

இனி எதிர்க் கட்சித் தலைவர் பழனிசாமிக்கு ஒரு மந்திரிக்குரிய அந்தஸ்து மாநிலத்தில் உண்டு. ஆனாலும் அவர் செய்த வேலையை எல்லாம் ஆராய்ந்து பார்க்க அவசியமும் உண்டு.



ஆறுமுக சாமி விசாரணைக் கமிஷன் இன்னும் ஜெ மறைவு எப்படி என்றெல்லாம் சொல்லவே வெளியில் இல்லை. அதன் பிறகு எவருக்கும் வராத வாய்ப்பு எடப்பாடிக்கு ஊற்றாக கிடைத்தன. ஊற்று அடங்கவில்லை இன்னும் இருக்கும் போல இருக்கிறது. ஆனால் இனி வரும் நீர் வற்றுமா வற்றாதா என்பதையும் அந்த நீர் எதற்கு பயன் என்பதையும் காலம் சொல்லும்.... எக்காலமும் ஒன்று போல இருப்பதில்லை. ஓடமும் வண்டியிலும் வண்டி ஓடத்திலும் ஏறுவதை காலம் செய்து விடுகிறது.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை

காந்திகிராம் அலைகள்: கவிஞர் தணிகை


காந்திகிராம் அலைகள்: கவிஞர் தணிகை
#அங்கு விலாஸ்
#திண்டுக்கல்
#சவுந்தரம் அம்மையார்
#முனைவர்
#மு.அறம்
#பேராசிரியர்
#ரங்கராஜன்
#இந்திரா காந்தி
#அருணாச்சலம்
#தேங்காய் நார்
#தொழில்

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

கிறிஸ்மஸ் நினைவலைகள்: கவிஞர் தணிகை

கிறிஸ்மஸ் நினைவலைகள்: கவிஞர் தணிகை
#நட்பு
#உறவு
#தனிமை
#நல்லாம்பள்ளி
#நள்ளிரவு
#குமார்
#கொ.வேலாயுதம்
#பொறியாளர் மணி
#சின்ன பையன்
#சுப்ரமணி
#துணைவி
#பாலாஜி
#முரளி
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

சினிமா: அந்தகாரம், ஸ்பீசிஸ்,சீனா,உயிரி ஆயுதம்: கவிஞர் தணிகை


சினிமா: அந்தகாரம், ஸ்பீசிஸ்,சீனா,உயிரி ஆயுதம்: கவிஞர் தணிகை
கிறிஸ்மஸ் நினைவலைகள்: கவிஞர் தணிகை #நட்பு #உறவு #தனிமை #நல்லாம்பள்ளி #நள்ளிரவு #குமார் #கொ.வேலாயுதம் #பொறியாளர் மணி #சின்ன பையன் #சுப்ரமணி #துணைவி #பாலாஜி #முரளி மறுபடியும் பூக்கும் வரை கவிஞர் தணிகை

Thursday, May 6, 2021

அன்னை தெரஸாவும் பெண்தானே?: கவிஞர் தணிகை


அன்னை தெரஸாவும் பெண்தானே?: கவிஞர் தணிகை

#வாய் நிறைய‌
#வாய் இனிக்க‌
#கோப்ஜெ
#யுகேஸ்லேவியா
#நோபெல்
#பாரத ரத்னா
#புனிதர்
#ஆசிரியை
#செவிலியர்
#தாய்
#ரயில் பயணம்
#விருந்து
#சேவை
#சிகரம்
#உச்சம்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

Wednesday, May 5, 2021

05.05.2021 மே ஐந்து: கவிஞர் தணிகை


05.05.2021 மே ஐந்து: கவிஞர் தணிகை
#கார்ல் மார்க்ஸ்
#பிறந்த நாள்
#ஏங்கெல்ஸ்
#காந்தி
#ஆஸ்த்மா
#இயற்கை
#பெண்கள்
#ஆண்கள்
#பில் கேட்ஸ்
#மெலிண்டா
#அமெரிக்கா
#முழு ஊரடங்கு
#தலைமை 
#மருத்துவர்
#கிராமம்
#நகரம்
#தீண்டாமை

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

Tuesday, May 4, 2021

லகருல்லாவின் அணுகுண்டுக்கு எதிரான வேண்டுகோள்: : கவிஞர் தணிகை


லகருல்லாவின் அணுகுண்டுக்கு எதிரான வேண்டுகோள்: அன்பு : கவிஞர் தணிகை
#அன்பு
#அணுகுண்டு
#கல்லூரி
#கார்
#பந்தயம்
#பனியன்
#அழகிரி
#செம்பண்ணன்
#ஐரோப்பியா
#அன்பு வேண்டல்
#மின்வெட்டு
#கலாம்
#அறிவின் 
#உச்சம்
#தெரஸா
#சேவை 
#உச்சம்
#காந்தி
#மனித உச்சம்

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

Monday, May 3, 2021

Cinema சினிமா Cinema sulthan;Karnan: கவிஞர் தணிகை

சினிமா: கவிஞர் தணிகை
#கர்ணன்
#குதிரை
#யானை
#நாய்கள்
#தனுஷ்
#அசுரன்
#சுல்தான்
#பேருந்து
#நிறுத்தம்
#கர்ப்பிணி
#கல் எறிதல்
#நடராஜ்( நட்டி)
#காவல்துறை
#கலெக்டர்
#துணை நடிகர்கள்
#விக்ரமாதித்யன்

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

தேர்தல் முடிவுகள் தமிழக சட்டமன்றம்:2021: கவிஞர் தணிகை

தேர்தல் முடிவுகள் தமிழக சட்டமன்றம்:2021: கவிஞர் தணிகை
தேர்தல் முடிவுகள் தமிழக சட்டமன்றம்:2021: கவிஞர் தணிகை #மாயை #தி.மு.க‌ #ஸ்டாலின் #கமல்ஹாசன் #வானதி சீனிவாசன் #சீமான் #காங்கிரஸ் #பா.ஜ.க‌ #கம்யூனிஸ்ட் #மே.வங்கம் #தீதி: #மமதா பானர்ஜி #கேரளா #பினராயிவிஜயன்

மேதினம் 2021 சிறப்பு நிகழ்ச்சி: கவிஞர் தணிகை


மேதினம் 2021 சிறப்பு நிகழ்ச்சி: கவிஞர் தணிகை

#அர்விந்த்கெஜ்ரிவால்
#குத்தம்பாக்கம் இளங்கோ
#தினமணி
#கலைஞர்
#வெங்கய்யா நாயுடு
#குத்தம்பாக்கம்
#அண்ணா ஹசாரே
#ஐ.நா
#முனைவர்
#பேராசிரியர்
#பழனித்துரை
#நல்லோர் வட்டம்
#பாலு
#பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி
#நடராஜன்
#மதுரை
#காந்தி 
#அருங்காட்சியகம்
#சித்ரா 
#பாலசுப்ரமணியம்
#மண்னுக்கு
#உவப்பானவர்கள்
#அன்ன வயல்
#சேவை
#கோவிந்தராஜ்
#கவிஞர் தணிகை
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை