ஜூன் 3 2016ல் வெளிவந்த இறைவி: கவிஞர் தணிகை
நேற்று பார்த்த இந்த படத்தை என்னால் மறுக்கவும் மறக்கவும் முடியவில்லை எனவே இந்த பதிவு. பார்க்காமலிருந்தால் அனைவருமே பார்க்க வேண்டிய படம்தான். படம் மனதில் அப்படியே தைத்து விட்டது.
ஆண்பிள்ளைத்தனம் மிக்க இந்த ஆணவ ஆண்கள், பொம்பளைக்கி பிறந்தவர்கள்.ஆண் என்றாலே நெடில் இருக்க, பெண் என்பது வெறும் குறில்தான். எனவே அவர்கள் பொறுத்துக் கொள்ளப் பிறந்தவர்கள், ஆண்கள் அவசரப் படவும், பொறுமையின்றி தமது உணர்வுகளை அனைத்தையும் அப்படியே வெளிக்காட்டப் பிறந்தவர்கள் எனச் சொல்லி ஆனால் அவை எவ்வளவு தாறுமாறுகளை விதைத்து விளைத்து விடுகின்றன என உணர்தலின் பாதிப்பை கொடுத்து உள்ளது
எவருமே எதிர்பார்க்காத திருப்பங்கள், தன்னை தமது உயிரை காப்பாற்றும் நபரையே கடைசியில் கொல்லும் அண்ணன் , இயக்குனர் சூரியா விஜய் சேதுபதியிடம் சொல்லும் வசனம், நீ தம்பி மாதிரிடா, ஆனால் அவன் பாபி சிம்ஹா என் தம்பிடா என தம்மைக் காப்பாற்றி தம்மைக் கொல்ல இருந்த வில்லனை கொன்றவன் என்றும் பாராது கொன்றுவிட்டு படத்தின் மெசேஜை கடைசியில் சொல்லி முடிக்கிறார்.
கோயில் சிலை செய்யும் குடும்பம் அது ஒரு கலையகம் நடத்தி அதன் மூலம் விற்பனை செய்யும் கலைக்குடும்பம் அதில் ஒரு சினிமா பட இயக்குனர் படும் பாடு. அதில் 2 சகோதரர்கள், அவர்களுடன் ஒட்டிய பிறப்பாக விஜய் சேதுபதி என்ற ஒரு கிறித்தவ நண்பர். ஆனால் இவர்களுக்காக தமது குடும்பத்தைக் கூட விட்டு விட்டு அவர்களுக்காக சிறை செல்வதும், மறுபடியும் அவர்கள் கூப்பிடுகிறார்கள் என கேரளாவுக்கு சிலை திருட புறப்பட்டு மாட்டிக் கொள்வதும் அதன் பின் பாபி சிம்ஹாவின் கதை ஆரம்பிப்பதும், பெண்கள் ஆண்களிடம் மாட்டிக் கொண்டு சித்ரவதைப் படுவதை தடுக்க வேண்டும் என்றும், தமக்குத் தெரிந்த பெண்களுக்கு எல்லாம் நல்வாழ்வு தர எண்ணிக் கொண்டு அஞ்சலி விஜய் சேதுபதியின் மனைவிக்கு விஜய் சேதுபதியை அப்புறப்படுத்தி விட்டு அவருடன் வாழ ஆசைப்படுவதாகவும் அது கடைசியில் அவரின் உயிருக்கு வேட்டு வைப்பதாகவும், அதற்காக அண்ணன் சூரியா பழி வாங்கி விட வரும்போது நேர்ந்து கொண்ட செம்மறி ஆடாக அங்கேயே விஜய்சேதுபதி திகைத்து நின்று துப்பாக்கி குண்டை வாங்கிக் கொண்டு மரணிப்பதாகவும் கதை.
சொல்ல வந்தது: பெண்கள் முதல் காட்சியிலேயே தாம் எப்படி வாழவேண்டும் என்ற கல்யாணக் கனவு எப்படி நிதர்சனத்தில் தகர்ந்து போகின்றன என்றாலும் கணவனைக் கட்டிக் கொண்டு எதிர்ப்பார்த்த வாழ்வுக்கு மாறாக இந்த வாழ்வு இருந்த போதும் அதற்காக தம்மை அர்ப்பணித்துக் கொள்வாராகவும் கதை செல்கிறது.
எல்லாருமே நன்றாக நடித்திருக்கிறார்கள்....எவரையுமே குறை சொல்ல வழி இல்லை நல்ல கதை. நாட்டில் உள்ள ஒவ்வொரு வயது வந்த ஆணும் பெண்ணும் பார்த்து புரிந்து கொண்டு இதில் சொல்லப்பட்ட செய்தி, கொஞ்சம் பொறுமை காட்ட வேண்டியது பெண்ணுடைய செயல் மட்டுமல்ல, ஆணுடைய செயலும் அப்படி இருந்தால் நிறை வாழ்வு வாழலாம் என சொல்லாமல் சொல்லும் ஏன் உணரவைக்கும் படம்.
நாளை தமது இலட்சியப் படம் பல்வேறு இன்னல்களைத் தாண்டி வெளி வரப் போகிறது என்ற சூழ்நிலையிலும் தம்மைக் காத்தவனையே தமது தம்பி உயிருக்கு பலி வாங்க கொன்று விட்டு தமது மனைவியை வேறு பாதைக்கு திருப்ப குடித்தவர் போல கெட்ட வார்த்தைகளில் தமது மனைவியையே தேவடியா எனப் பேசுவதும் எல்லாமே கொஞ்சம் மிகைதான் ஆனாலும் அதுகதைக்குத் தேவைதான் கதை ஆரம்பம் முதலே வித்தியாசமான கதைக்களத்துடனே திருப்பங்களுடன் செல்கிறது.
சுத்தியால் தலையில் அடித்து கொல்லும் விஜய் சேதிபதி எப்படி வேண்டுமானாலும் நடிக்க தோதுப்படுவார் என்பதான மெட்டல் எப்படி வேண்டுமானாலும் வளைத்துக் கொள்ளலாம் என்ற கதாபாத்திரம். அடுத்தவருக்காக கொலையும் செய்து சிறைக்கும் செல்லும் தமது முழுகாத மனைவி சொல்லச் சொல்லக் கேட்காமலும்.
இராதாரவி நன்றாக பாத்திரமுணர்ந்து செய்திருக்கிறார். வடிவுக்கரசி அதிகம்
ஸ்கோப் இல்லை என்றாலும் இருக்கிறார். கமலினி முகர்ஜி அஞ்சலி, பூஜா தேவரியா என்ற 3 பேருமே நடிக்க அருமையான வாய்ப்பு பெற்றிருக்கிறார்கள்.
கண்ணகி சிலையில் கை வத்தால், கோவில் சிலை திருடினால் என்ன என்ன விளைவு ஏற்படும் என்பது போலும் கண்ணகி கோவலன் கதையான சிலப்பதிகாரம் கதைபோலும் இறைவி பெண் தெய்வம் என்பது சொல்லப் பட்டிருப்பது நன்றாக இருக்கிறது.
இதில் சொல்லப்பட்ட 3 முக்கியமான பெண் பாத்திரங்களுமே தனித்து வாழ முற்படுகின்றன. தனித்து வாழத் தகுதியானவை அவை என்ற போதிலும் தாம் ஆசைப்பட்ட வாழ்க்கை கிடைக்காமல் இருப்பதற்காக வருந்தவும் செய்கின்றன. தம் அடுத்த தலைமுறையை தமது துன்பத் தடைகளிலிருந்து நீக்க முனைவார்கள் என்பது போல முடித்து இருக்கிறார்கள்.
எவ்வளவுதான் சொன்னாலும் இந்தப் படம் பார்க்காமல் அதன் சுவை உணரும் தன்மையாய் கொடுக்காது எனவே பார்த்து அனுபவித்து விடுங்கள் பெண்கள் மேல் இருக்கும் நமது பார்வையே மாறும்.
மேலும் வழக்கம் போல இதிலும் ஆண்களின் அதிகபடியான மதுக் குடியும் போதை வெடியும் கலந்திருக்கின்றன ஆனால் இந்தக் கதையில் வரும் பாத்திரங்கள் அப்படிப் பட்டவைதான் எனவே பொறுத்துக் கொள்ளத் தோன்றுகிறது. ஆனால் அந்தக் குடியிலிருந்து தமது குடியை அழித்துக் கொண்ட பிறகும் வெளி வர முடியவில்லை இவற்றிலிருந்து எல்லாம்
தமிழக இந்திய கலாச்சாரப் பின்னணியை ஆண் பெண் நுட்பமான உறவுகளை துல்லியமாக கையாண்டிருக்கிறார் இயக்குனர் சுப்புராஜ் கார்த்திக். அவரையும் இதை துணிச்சலுடன் தயாரித்த தயாரிப்பாளர்களையும் நாம் பாராட்டியே ஆகவேண்டும். கற்றுக் கொள்ள வைக்கும் படம், நல்ல மெசேஜ் இருக்கும் படம் ஆனால் இந்தப் படம் நன்றாக பேசப்பட்டது. ஆனால் எப்படி ஓடி வசூலித்தது என்பதை நானறியேன். சூரியாவின் குடிகாரப் பாத்திரம் மிகை என்ற போதும், அது இயல்பாக அப்படித்தான் இருக்கும். மது போதையிலிருந்து வெளியேற்ற அடித்து மருத்துவம் செய்யும் மையம் முதலில் கொடூரமாய் தோன்றியபோதும் அப்புறம் அதன் நன்மையை நாமும் உணர்கிறோம். நல்ல நல்ல உணர்தல்தரும் படம் எத்தனை பேருக்கு பிடிக்கிறதோ இல்லையோ நெஞ்சை பிசைய வைக்கும் படம். ஆணவமான ஆண்களின் அவலமான சோகமான வாழ்வுக்கு காரணம் என்ன என அலசி ஆய்ந்து தீர்வு சொல்லி இருக்கும் படம். பாருங்கள் அவசியம் அனைவருக்கும் சொல்வேன் எனது மேஜரான 18 வயது வந்த மைந்தனையும் அவசியம் பார்க்கச் சொல்வேன்.
நன்றி இதனை ஆக்கியோருக்கு.
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

அருமையான விமர்சனம் நண்பரே
ReplyDeleteஅவசியம் வாய்ப்புக் கிட்டும்பொழுது பார்ப்பேன்