Monday, January 30, 2023

9489203900 வாட்ஸ் ஆப் நெம்பர் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து சேவை மேம்பாடு வேண்டி: கவிஞர் தணிகை

 9489203900 வாட்ஸ் ஆப் நெம்பர் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து சேவை மேம்பாடு வேண்டி: கவிஞர் தணிகை



இந்தியாவெங்கும் பல ஆண்டுகளுக்கும் முன் வலம் வந்த காரணத்தால் தமிழகத்தின் போக்குவரத்து சேவையின்பால் என்றுமே பெருமை உண்டு.கர்நாடகா,கேரளா, ஆந்திரா அண்டை மாநிலங்களில் கூட இந்த சேவை மிகவும் குறைவான தரத்தில் உள்ள போது தமிழகத்தின் சேவை பாராட்டுக்குரியது தான்...ஆனாலும்


9489203900 என்ற எண்கள் ஒரு டவுன் பஸ்ஸில் எழுதப் பட்டிருந்தது  சேவை மேம்பாடு வேண்டி அல்லது குறை தீர்க்க அல்லது தெரிவிக்க என...எனவே...


டவுன்பஸ்...நகரப் பேருந்து, புற நகர்ப் பேருந்து, கிராமங்களை இணைக்கும் பேருந்து என பலவாறாக ஓடிக் கொண்டிருக்கின்றன... அதிலும் பெண்களுக்கு கட்டணமின்றி...தமிழ் நாடு முழுவதும் கூட பயணம் செய்ய முடியுமளவு.


ஒரு முறை அல்ல சில முறை கவனித்த பின் 

கீழ் வருபவனவற்றை சொல்லத் தலைப் பட்டிருக்கிறேன்:


 நான் தாரமங்களம் செல்ல வேண்டும். அந்த எட்டரை மணி சுமாருக்கு புறப்படும் போதெல்லாம் நீண்ட நேரம் காத்திருந்த பின் செல்ல வேண்டியதாகிறது. 

மேட்டூர் முதல் தாரமங்களம் வரை சுமார் 20 கி.மீ.தான். டவுன் பஸ்கள் பல உண்டு. ஆனால் சுமார் 8.40 மணிக்கு ஆர். எஸ் பகுதிக்கு வரும் 25 எண் என நினைக்கிறேன் ஜலகண்டாபுரம் போகும் வண்டி... நங்கவள்ளி வரை . அப்போதே நடத்துனர் சில இளம் பெண்களிடம் சொல்லிக் கொண்டிருந்தார் தாரமங்களத்துக்கு நேரடியான பேருந்து இல்லை, நங்கவள்ளி சென்றுதான் நீங்கள் செல்வது சரியாக இருக்கும் என்றார்.

ஏறிக்  கொண்டோம்...எனைப் போல காத்திருந்த பல பயணிகள். சுமார்.9.12 மணிக்கு அது நங்கவள்ளி சென்றடைய அங்கே சென்று காத்திருந்தோம். தாரமஙகளம் பேருந்துக்கு...முக்கால் மணி நேரத்துக்கு எந்தப் பேருந்தும் இல்லை. எல்லா ஊருக்கும் அதாவது மேச்சேரி, கொங்கணாபுரம் வழி சங்ககிரி, திருச்செங்கோடு, மேட்டூர், ஜலகண்டாபுரம் இப்படி எல்லா ஊர்களுக்கும் பேருந்துகள் தொடர்ந்து ஒன்றல்ல இரண்டுக்கும் மேலாக‌ சென்று கொண்டே இருந்தன...தாரமங்களத்துக்கு பேருந்து இல்லை.


மேட்டூரில் இருந்து வரும் 32 தாரமங்களம் என போர்டு போட்டுக் கொண்டு வரும் பேருந்தும் ஜலகண்டாபுரம் தான் செல்லும் எனச் சொல்லி விடுகிறார்கள்.


இப்படி முக்கால் மணி நேரம் அல்லது ஒரு மணி நேரமே கூட கழித்து, சுமார் 10.15 மணி இருக்கலாம் பவானியிலிருந்து வரும் தனியார் பேருந்து பேர் பாரத் ( யாத்விக்) என்னும் பேருந்து அனுமதிச் சீட்டில்VMT வி.எம்.ட்டி என ஆங்கிலத்தில் பேர் உள்ளது. எல்லாப் பயணிகளும் அதில் ஏறிக் கொண்டு தாரமங்களத்துக்கு பெண்கள் ஆண்கள் என ரூ.10 பயணக் கட்டணம்.கொண்டு செல்கிறது.


இது அரசுப் பேருந்துகளின் மைய‌ மேலிட‌த்தின் அனுமதியுடன் தான் நடக்கிறதா?

இந்த வசூல் அரசு பேருந்துக்கு செல்வதன் மூலம் நாட்டுக்கு  நல்ல வருவாய்தானே?

தினம் சுமார் ரூ.500 என்றால் கூட மாதம் ஒன்றுக்கு என்ன ஆகிறது?

நேரடியாக தாரமங்களத்துக்கு ரூ.15 கட்டணம் ஆனால் இப்படி செல்வதன் மூலம் 20 ஆகிறதே...அந்த 5 ரூபாய் பொதுமக்கள் பயணிகளிடம் இருந்து அதிகப்படியாக செல்வது ஒன்று அரசுப் பேருந்துக்கு செல்லட்டும் அல்லது மக்களுக்கு பயன்படட்டுமே? ஏன் தனியாருக்கு செல்கிறது? இதுவும் ஒரு வகையில் சுரண்டல் தானே?


எல்லாவற்றையும் விட பணம் கூட இரண்டாம் பட்சம், எவ்வளவு மக்களின் நேரத்தை வீணாக்குகிறீர்கள்? காத்திருக்க வைத்து...மெத்த வளர்ந்தார் எல்லாம் நேரத்தை பயன்படுத்துவோரே... எல்லாம் வினாடிக் கணக்கில் இயங்க ஆரம்பித்த உலகத்தில் இன்னும் ஏன் நமது பேருந்து சேவையில் இது போன்ற ஏற்பாடு...மேலும் மேம்பட வேண்டும் நிறை(வு) வேண்டி குறை தீர இது அன்பான வேண்டுகோள்...யாரையும் குறை சொல்ல வேண்டும், காயப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் சொல்லப் படுவதல்ல...


காந்தி அமரத்துவ தினம் அல்லது தியாகிகள் தினம் இன்று: மகாத்மாவின் வார்த்தைகளில் ஒன்று: நாம் செய்யும் செயல் இந்த நாட்டின் கடைசி மனிதனுக்கு பயனளிக்கிறதா எனப் பார்த்து செயல்பட வேண்டும் என்பார். அப்படிப் பட்ட காரணங்களுள் ஒன்றாகவே இந்த பதிவையும் கருதுகிறேன்.



வணக்கம்

நன்றி


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை




Friday, January 27, 2023

எம்.அண்ணாதுரைக்கான ஒரு பதிவு: சினிமா சினிமா சினிமா: கவிஞர் தணிகை

 எம்.அண்ணாதுரைக்கான ஒரு பதிவு: சினிமா சினிமா சினிமா: கவிஞர் தணிகை



இரத்தம், இரணம், ரௌத்திரம் (தெலுங்கு)

கட்டா குஸ்தி (தமிழ்)

லவ் டுடே ( தமிழ்)

அர்ச்சனா 34 நாட் அவுட் (மலையாளம்)

ஜெய ஜெய ஜெயஹே (மலையாளம்)


எனது  V M S D C கல்லூரி  நண்பர் ஒருவர் சொன்னபடி எழுதுவது அவசியமா? அதை வெளியிடத்தான் வேண்டுமா? படிப்பவர் மனதில் அதனால் ஏற்படும் பாதிப்புகள் எப்படி இருக்கும் என்றெல்லாம் கருத்து மோதல்களை நிகழ்த்தியபடி நான் எழுதுவதை நானே தணிக்கை செய்து கொண்டிருப்பதால் எனது எழுத்தைக் குறைத்துக் கொண்டிருக்கிறேன்.


என்றாலும் எழுதியே ஆகவேண்டும் அது மனப் புழுக்கத்தைக் குறைக்கும், எழுதியே ஆக வேண்டும் அது பிறர்க்கு பயன்படும், பிறரை மகிழ வைக்கும்,  என்பதால், என்பதை மட்டும் எழுதுகிறேன்.


3000 பக்கம் குற்றப் பத்திரிகை சமர்ப்பித்து டில்லி போலீஸ் தற்காலக் காதல் குளிர் சாதனப் பெட்டியில் ஸ்ரத்தா துண்டுகளாகிப் போனது பற்றியே எழுத தலைப்பட்டு  இவ்வளவு அரசின் உழைப்பு அதில் விரயமாக்கப் பட வேண்டுமா ஜெ இறப்பு பற்றிய ஆறுமுகசாமி விசாரணை ஆணைய அறிக்கை தேவை ஆனால் ஸ்ரத்தா தேவையா என்றெல்லாம் கேடகத் தோன்றியது...ஆனால் அதை எல்லாம் யார் கேட்டு என்ன ஆகப் போகிறது? அரசுக்கு குடியரசு விழாவும் தேவைப்படுகிறது குடி அரசாகவும் இருக்க மதுக்கடைகளும் தேவைப்படுகிறது என்னும்போது எனது கடையை மூடிக் கொள்ள வேண்டும் என்றே தோன்றுகிறது.


மேலும் நான் ஒரு தணி(கை) மனிதப் போராட்டத்தில் கடந்த ஓராண்டாகவே இருந்து வருகிறேன். அதில் வெற்றி தோல்வி இன்னும் இல்லை. எனவே அதை இடையூறு செய்யும் படியாகவும் எனது எழுத்து இருந்து விடக்கூடாது என்ற எச்சரிக்கையும் கூட காரணமாக இருக்கலாம்.


சரி எம்.அண்ணாதுரை விடியல் நண்பருக்காக:


சில நல்ல சினிமாக்களைப் பார்த்தேன், காலம் கடந்த போதிலும்..RRR..இரத்தம்,இரணம்,ரௌத்திரம்...ராஜமௌலி,ராமாராவ்,ராம்சரண் கூட்டணி சக்கைப் போடு போட்டுள்ளது. தெலுங்கு. அதன் இசைக்கு கீரவாணிக்கு ராஜமௌலியின் உறவினர் இவரின் மனைவியும் அவரின் மனைவியும் சகோதரிகள், மேலும் அந்த முக்கிய பாடலை கீரவாணியின் மகனே பாடியும் உள்ளார் குலோபல் GLOBAL அவார்ட் கிடைத்தது மேலும் ஆஸ்கார் OSCAR விருதுக்கான பரிசீலனையில் உள்ளது...அந்தப் படத்தை எப்போதும் பார்க்கலாம்...கற்பனையிலேயே நன்றாக தேசம் தொட்ட கதையாக ...


கட்டா குஸ்தி (தமிழ்), அர்ச்சனா 34 நாட் அவுட்( மலையாளம்) ஆகிய படங்களை ஐஸ்வர்யா லட்சுமி என்பவரை நம்பியே எடுத்தாற்போல அவ்வளவு நேர்த்தி...பொன்னியின் செல்வன் மணிரத்தினத்தின் பூங்குழலி இவர்தான். கட்டா குஸ்தி நல்ல பொழுது போக்கு,அர்ச்சனா 34 நாட் அவுட் ஒரு பெண் எப்படி தனது முக்கியமான தலை போக வேண்டிய கட்டத்தை தலை போகாமல் காத்துக் கொள்கிறாள் தனது அறிவுத் திறன் கொண்டு என...Essential Cinema to face Critical situation.


கேரளத்துப் படங்கள் மிகவும் நமது வாழ்வுக்குள் எளிதாகப் புகுந்து கொள்கின்றன என்பதற்கு இது போன்ற படங்கள் எல்லாம் உதாரணம். எந்த வித வலிமையும், துணிவும் , சினிமா அரசியல் வாரிசு எல்லாம் தேவையில்லை என்பது போன்ற துணிச்சலில் அவர்களின் படங்கள் சட்டென பார்ப்பாருடன் மொழி பேதமின்றி மனிதர்களின் அன்றாட வாழ்வில் அவர் பிரச்ச்சனைகளில் நேர்த்தியான‌அணுகுமுறைகளுடன் கை கோர்த்துக் கொள்கின்றன.


லவ் டுடே (தமிழ்): அனைவரும் பார்த்தே ஆக வேண்டிய காலத்தின் பதிவு. தமிழில் ஒரு நல்ல தற்கால அவசிய சிந்தனையை இழைய வைத்துள்ளார் அந்தக் கோமாளிப் பட இயக்குனர் தாமாகவே கதாநாயகமாகவும் நின்று...


ஜெய ஜெய ஜெயஹே: திருமாணமாகும் வரை பெண்கள் வீட்டின் விளக்குகள் என்று சொல்லி எப்படி நிராகரிக்கப் படுகிறார்கள், ஆனபின்னும் அவர்கள் எப்படி அவர்கள் எண்ணமும் விருப்பமும், கோரிக்கைகளும் நிராகரிக்கப் படுகின்றன எனத் தெளிவாக்கி இருக்கிற படம். பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி ஆண்களே பெண்களை இழிவு படுத்தினால் அதன் விளைவு என்னவாக இருக்கும் என ஒவ்வொரு கணவன்மாருக்கும், போலி மனிதர்க்கும் சூடு போடும் படம்...பெண்கள் எல்லாம் இப்படி கிளர்ந்து எழ ஆரம்பித்தால் குடும்பம் என்ற நிறுவனம் நிலைக்குமா? அவரவர்க்கு பொருத்தமான இணை அமையாதவரை எல்லாம் தனித்துவமாக நின்று விடுமே? ஆண் பெண் ஒருங்கிணைப்பு நிகழ இது போன்ற வீரியமிக்க பெண்களின் ஆற்றல்,விட்டுக் கொடுத்தல் இல்லாவிட்டால் என்ன ஆகும் என ஒவ்வொரு ஆணின் மனதிலும் கேள்விகள் எழ வைத்து சிந்திக்க வைக்கும் படம்...



இப்படி சில இன்றைக்கு போதும்...


இனி 

மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை

P.S: This post is Dedicated to SATHIS JJ PRINTERS too. Because he is also a Cinema lover and good cinema viewer and fan of my cinema writings.

Saturday, January 21, 2023

சன் கெமிகல்ஸ் இல்லத் திருமண வாழ்த்து

                                                   திருமண வாழ்த்து


மா.ஐஸ்வர்யலட்சுமி வழக்கறிஞர்               பொறியாளர்.க.ஆனந்த்

இடம்:ஸ்ரீ வாசுதேவ் மஹால் சங்ககிரி           காலம்:26.01.2023 வியாழன்



சன் கெமிகல்ஸ் மாதப்பன் அவர்களை 1978 களில் தட்டச்சுப் பள்ளி ஆசானாய்

பார்த்ததுண்டு.


2013ல் கபாலீஸ்வரர் கோவில் பணிச் சேவையில் அடியேன் பொருளாளராகவும்

ஒருங்கிணைப்பாளராகவும் இருந்த திருப்பணிக் குழுவின் பக்குவமான தலைவர்.

ஆன்மீகம் எங்களை அன்புச் சகோதரர்களாக்கியது.


சிலருக்கு மட்டுமே ஏறும் இடத்தை தக்க வைக்கும் ஆற்றல் உண்டு

அப்படி மேட்டூர் சிட்கோ தலைவராக இன்றும் தொடர்பவர்


தோற்றத்துக்கு எளியவர் மாற்றத்துக்கு உரியவர் காட்சிக்கு மட்டுமல்ல‌

உள்ளம் எல்லாம் கூட வெள்ளைதான்.


 பழனி பாத யாத்திரை குழுவுக்கு

ஆண்டுக்கொரு முறை அன்னதானம் தவறாமல் செய்பவர்

எங்கே எப்போது சென்றாலும் பொதுச் சேவையாளரின் உணவை

போட்டியிட்டு முதலில் ஏற்கும் அன்னபிரபு.


இப்படிச் சொல்லிக் கொண்டே போக இரு மருத்துவர்களை 

ஒரு வழக்கறிஞரை உருவாக்கிய எனது சகோதரர்க்கு

தன்னடக்கம் இடம் கொடுக்காது


மாதப்பன் தந்தையும் உமா மஹேஸ்வரி தாயும் பெற்ற 

முதல் மூத்த மகள் மா.ஐஸ்வர்ய லட்சுமி ஆனந்த் கைப்பற்றும் கால நேரத்தில்

எங்களது அன்பைத் தெரிவித்து அவர் குடும்ப மகிழ்வில் எங்கள் குடும்பம்

மகிழும் உரிய தருணம்.


மண மக்கள் கலையாத கல்வி முதல்...உதவிப் பெரிய தொண்டரொடு 

கூட்டு கண்டாய் வரை...பதினாறு செல்வங்களும் பெற்று

பெருவாழ்வு வாழ என்றும் வாழ்த்துகளை கோர்க்கும்


கவிஞர் தணிகை, த. சண்முக வடிவு, பொறியாளர்: த.க.ரா.சு.மணியம்.


Thursday, January 19, 2023

நாகாவின் நூலேணி: கவிஞர் தணிகை

 நாகாவின் நூலேணி: கவிஞர் தணிகை



எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே...தாயுமானவர்


 அன்பு கவின் நண்ப நாகா:

 நன்றி கலந்த வணக்கங்கள்


ஆன்மாவிற்கு பால் வேறுபாடோ, நாடோ, இடமோ காலமோ இல்லை என்கிறார் தியானப் பயிற்சியில் விவேகானந்தா.

எழுதுவதை பேசுவதை எல்லாம் புறமாக்கிவிட்டு ஆன்மீக வாதியாக வாழலாம் என முயலும்போது எப்படி என் போன்றோர்க்கும் 90களில் பாம்பு சுற்றிய லிங்கம் படம் போட்ட செய்திக் கையேட்டை அனுப்பி ஈசா மையம் ஏற்படுத்தும் காலத்தில் லிங்க நிர்மாணத்திற்கு நிதி கேட்டுக் கொண்டிருந்த ஜக்கி வாசுதேவ் போன்றோர்  இன்று உலகளாவிய அளவில் பெரும் புகழுடன் மக்கள் கூட்டத்துடன் சென்று கொண்டிருக்கிறார்கள் என்ற விந்தை புரியவே இல்லை பிடிபடவில்லை.  இருக்கட்டும்.


உண்மைதான் மேல் மருவத்தூருக்கு அனைத்து சாதியினரும் தாழ்த்தப்பட்ட பட்டியிலன மக்கள் அதிகம் விரும்பிச் செல்வதும், மாதவிடாய் பற்றிய பயம் எல்லாம் அங்கில்லை என்று நீங்கள் குறிப்பிட்டதும் மிகவும் சரியே. இந்த ஆண்டில் முன் எப்போதும் இல்லா அளவு கூட்டம்...ஏன் அந்தளவு அவர்களுக்கு உள்ளூரில் நெருக்குதல்கள் இருக்கின்றன.


அடியேன் மீச்சிறு மானிடமாகவே இருக்க விழைகிறேன்...

வாஜ்பேயி, நல்லகண்ணு ஏனோ நினைவுக்கு வருகிறார்கள்...

எதெற்கென்றுதான் தெரியவில்லை.


இங்கே சாதிக்கட்டு, மதக் கட்டு, சாமிக் கட்டு,பணக் கட்டு,இனக் கட்டு, கட்சிக் கட்டு என்றானபடியால் நியாயக் கட்டு, தர்மக் கட்டு, நீதிக் கட்டு எல்லாமே தளர்ந்து அறுந்து கிடக்கிற சூழல் எனவே ஜெ.கே என்னும் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி உச்சத்தில் சொல்லும் மனிதக் கட்டும், வள்ளுவம் சொல்லும், இராமலிங்கர் சொல்லும் கேள்விகளாகவே போயின...மனிதக் கட்டு ஏற்படவில்லை. மனிதத் தேடலில் காண்பது பஞ்சமே...


எனவே ஆக்ஸ்வாம் சில நாளுக்கு முன் சொன்னபடி இந்தியா போன்ற ஒரு நாட்டிலேயே 1 சதவீத மக்களிடமே 40 சதவீத சொத்து உள்ள செய்தியைக் கூட படிக்க ஆர்வமின்றி இருப்பார் இடையே... கம்யூனிசமும், காந்தியிசமும் சொல்வது மக்கள் நல வாழ்க்கைத் தரத்தின் உயரங்களையே என்ற போதும்...


பேசுவது, எழுதுவது, நடப்பது, தியானிப்பது இப்படி சுருங்கிப் போன வாழ்வில் பேசுவது எழுதுவது என்ற கோதாக் கொட்டாயிலிருந்து கொஞ்சம் விலகிவிட்டதாகவே எனைக் கருதுகிறேன். பின் இரண்டும் அதிகம் வாழ்வுத் தளத்தை ஆக்ரமித்துக் கொண்ட வேளையில்...


புத்தகம் என்றால் கணக்கின்றி படித்து கண் கெட்ட பின்னே: அளவற்ற நூல்களைப் படிப்பதால் பயனில்லை எல்லா நூல்களிலுமே மனோ நிக்ரஹமே வழி என்று சொல்லப் பட்டிருக்கிற படியால்...என்பது ரமணரிடமிருந்து கற்றது. கண்டதைப் படிப்பவன் பண்டிதன் ஆவான்...ஆனான் ஆகிறான் ஆனால் இப்போது யார் படிக்கிறார் என்ற கேள்விகள் எழும் போது சர்வதேச புத்தக கண்காட்சி சென்னையிலும், மாவட்டம் தோறும் புத்தகக் கண்காட்சிகளுமாக புத்தக வழிகாட்டிகள் வாழ்வுக்கு வளம் காட்டிகளாக...


இந்நிலையில் நாகா  என்னும் எனது அன்பு நண்பர் நாகச் சந்திரன் தனது இரண்டாம் படைப்பான "நூலேணி" எனக்கு தந்து நாட்கள் சுமார் 10 ஆன பின்னும் அதைப் படிக்காமல் விடுவது எனக்கு இழுக்கு... ஏன் எனில் புத்தகம் என்றாலே முன் அட்டை முதல் பின் அட்டை வரை படிக்காவிட்டால் அடுத்த வேளை, அடுத்த வேலை என இல்லை என்று கணக்கின்றி படித்து இரண்டு கண்களையும் அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிறகு...கண்களுக்கு சீரான வேலை மட்டும் கொடுக்க வேண்டும் என்ற நியதியை தளர்த்தி சில நாட்களில் படித்து முடித்தேன்.


எனது ஊர்க்காரர் மேட்டூர் பற்றி அணை பற்றி எழுத வேண்டும் என அவாவுற்றவர்,ENGLAND (இலண்டன்), இந்தோனேசியா,ஸ்விஸ் போன்ற நாடுகள் பயணித்தவர் அடக்கமானவர், நாகரீகமான மனிதர். தனது முதல் புத்தகம் : நூலிலிருந்து, இப்போது நூலேணி...இரண்டுமே அழகிய தயாரிப்பு. எண்ணிப் பார்த்தாலும் இரண்டு எழுத்துப் பிழைகள் மட்டுமே இருந்தன...சரியான உழைப்பு. நூல் வழிச்சாலை என சமூக வலைகளில் தமது படிக்கும் நூல்கள் பற்றி பகிர்ந்து கொள்கிறார். நல்ல முயற்சி.


தாம் படித்தது, பார்த்தது...நூல்களை, திரப்படங்களைப் பற்றியும் சந்தித்த மனிதர் பற்றியும் பகிர்ந்து கொண்டுள்ளார்


சொல்ல விரும்பியது: இவரது அலை நீளம் பெரும்பாலான இடங்களில் படிக்கும் நம்மோடு ஒத்துப் போகிறது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு துளியாய்: ஷிண்டலர்ஸ் லிஸ்ட் போன்ற திரைப்படத்தை சினிமா பார்க்கும் அன்பர்கள் யாவரும் பார்க்கத் தூண்டி சொல்லி வைப்பது...


காந்திய சத்திய சோதனை போல குவி ஆடியை பள்ளிப் பருவத்தில் திருடிய சிறுவனாக இருந்தமை, வேதனை பட்டது, தாய் தேறுதல்...தொட்டுவிட்டார்...இவர் 


பெர்னாட்ஷா ஆஸ்கார், நோபெல் இரண்டுமே பெற்றவர் என்று குறிப்பிட்டுள்ளார், பெர்னாட்சாவின் புவிப் பங்களிப்பு சுமார் 15000 பக்க இலக்கிய எழுத்துகள், மகாத்மா காந்தியின் 20 காந்தி வழி நூல்கள் உட்பட‌ மற்றும் இன்ன பிற பங்களிப்பு சுமார் 100,000 பக்கங்களுக்கும் மேல் இருக்கும் அவற்றை எல்லாம் படித்துய்ந்து பகிர்ந்து கொள்ள வேண்டும்... தனது சொந்த நடையில்...


 காந்தியின் பேரும் சில முறை நோபெல் பரிசுக்கு பரிந்துரைக்கப் பட்ட நிலையில் அவருக்கு அது கிடைக்க வில்லை. ஆனால் நோபெல் பெற்ற ஒபாமா போன்றோர் தமது நோபெல் உரையில் அதன் பின் பேட்டிகளில் காந்தியுடன் அமர்ந்து சந்தித்து அளாவளாவி சிற்றுண்டி அருந்த விரும்புகிறேன் எனக் கூறியதை நினைவு கூர்வோம்... சந்திர சேகர் என்னும் இயற்பியல் அறிவியல் அறிஞர் தமது மாணவர் இருவருக்கும் நோபெல் பெற்ற பின் தாம் தாம் பெற்றவர் என்பதையும் நினைவில் கொள்வோம்...


மேலும் அன்பு நண்பர் இராமலிங்க வள்ளலார், மாணிக்க வாசகர், அபிராம பட்டர், விவேகானந்தர், இராமகிருஷ்ணர் போன்ற ஆன்மிக வாதிகளின் எழுத்தையும் நுகர வேண்டும்...


இந்த நூல் நூலேணி பெண்ணியம் பற்றியது. 15 அல்லது 16 வயதிலேயே மலாலா நோபெல் பரிசு பெற்ற சிறுமியின் பெண்கல்வி பற்றி உயரத் தூக்கி பிடிப்பது...வரவேற்கத் தக்கது.ஒரு பெண் படித்தால் ஒரு குடும்பம் படிப்பது...உண்மைதான் பாரதி முதல் நமது ஏர் உழவர் யாவருமே உழுதுழுது விதைத்த பயிர் யாவும் அவைதாம். ஆனாலும் மலாலா சொல்லியபடி இறுதி நாள் அந்த வெந்தணலுக்கு இல்லாமல் அந்த அஞ்ஞானம் எரிந்து கொண்டே இருக்கிறது...


தீயின் அழிவு என்பதற்கு பதிலாக தீயினால் அழிவு அல்லது தீயினால் ஏற்பட்ட அழிவு என்று சொல்லலாமா?


மேழி போற்று கவிதை யாருடையது எனக் குறிப்பிட்டிருக்கலாம்...

 பழந் தமிழ் இலக்கியத்தில் எல்லாம் அகம் புறம் என்றே வாழ்க்கை பிரிக்கப் பட்டிருக்க, இவர் அகம், புறம் , அந்தரங்கம் என மூன்று பகுதிகளாய் சற்று அகத்தை இரண்டாக்கி உள்ளார். அல்லது இவர் கற்ற வழி மூலம் இரண்டாக்கி உள்ளதைக் குறிப்பிடுகிறார்.ஏற்புடையதாகவே இருக்கிறது இக்கால முறைமைகளுக்கேற்ப‌.



உதவிய நண்பரின் பெருந்தன்மையை குறிப்பிட்டமை, சாலையின் HD ஆங்கில ஹெச் டி High ways Department  ஹைவேஸ் டிபார்ட்மென்ட் என்பதற்கு Humanity and Divine  ஹ்யுமனிட்டி அன்ட் டிவைன் Help and Divine   ஹெல்ப் அன்ட் டிவைன் என்றும் கூடஇனியும் சொல்லலாம்.. குட் டச். Good Touching pages.


பங்களா தேஸ், நஸ்ரிமா, இந்து முகமதிய இனக் கலவரங்கள் உயிர் அழிப்புகள்...கர்நாடகா காவிரித் தமிழ் பற்றி கூட நினைவுக்கு வருமளவு தொடல்...


யாம் பெற்ற இன்பம் வையகம் பெறுகவே என தாம் துய்த்ததை பகிர்ந்து தரும் நூலில் இருந்து, நூலேணி,நூல் வழிச் சாலை போன்றவை நன்முயற்சிக்கான விதை தந்த கனிகள்... pages:235 price: 225.  with Attractive Wrapper. Good Design by Jeeva.


இவர் மேலும் இவரது உழைப்பை ஆக்க பூர்வமாக தருவதை எதிர்பார்க்கிறோம்.ஆக்க பூர்வமாக தருவார் என்று நம்புகிறோம்.


மறுபடியும் பூக்கும் வரை

அன்புடன்


கவிஞர் தணிகை

பி.கு:

நம்ம ஊர் அனுராதா ரமணன் பற்றியும் பெண்ணியத்தில் சேர்த்திருக்கலாம் நாகா








பிக்பாஸ் 6. கமல் செய்த தவறு: கவிஞர் தணிகை

 பிக்பாஸ் 6. கமல் செய்த தவறு: கவிஞர் தணிகை



பொதுவாகவே தொடர்களும், தொலைக்காட்சிப் பழக்கங்களும் குறைவாகவே உள்ள எனக்கு கமல் மேல் ஒர் ஈர்ப்பு உண்டு. சில நாட்கள் அரிதாக அவர் வருகிறார் என்பதற்காக கொஞ்சம் பிக் பாஸ் பார்த்தேன்.


அப்படி பார்த்த ஒரு நாளில் அவர் :  சாண்டில்யணின் "கடற் புறா" கதையில் கனோஜ் ஆங்கரே என்ற பாத்திரம் இடம் பெறுவதாக தவறாகக் குறிப்பிட்டார்.


ஆனால் அது பற்றி இது வரை நானறிந்த வரை எவரும் தவறை சுட்டிக் காட்டவில்லை.நானும் இது பற்றி எல்லாம் அக்கறை குறைவாக உள்ளதால் இது வரை எழுதவில்லை. இன்னும் சில நாட்களில் தொடர் முடிவுறுகிறது என்பதால் இப்போதாவது எழுதிப் பகிர்ந்து கொள்ள அவாவுற்றேன்.


கனோஜ் ஆங்கரே என்னும் கடற்படைத் தளபதி பாத்திரம் சாண்டில்யன் ( ரங்க பாஷ்யம் அய்யங்கார்) எழுதிய கடற்புறாவில் வருவதல்ல நாயகன் கமல் அவர்களே. அது ஜலதீபம் என்ற கதையில் இடம் பெறுவது.


கனோஜ் ஆங்கரே ஸார்கேல் ஆப் தாராபாய்....


மராட்டிய‌ வீர சிவாஜி  வாரிசுகள், வாரிசுரிமை பற்றிய நிழல் மற்றும் நிஜங்களிலும் உள்ளன...


போட்டி பணம் கிடைக்கும் என்பதற்காக எதை வைத்தாலும் கூட சாப்பிட்டு விட முடியுமா? போட்டியாளர்கள் மிகவும் இம்முறை கீழ்த் தரமாக நடந்து கொண்டுள்ளனர். காரணம் பிக் பாஸ். கமல் ஒரு புறம் எடுத்த‌ பாதி மீசை தாடி,மொட்டை,கலரிங் போன்ற போட்டி சரியானதில்லை என்றுக் குறிப்பிட்டு கண்ணியத்தைக் காப்பாற்றிக் கொண்டதாக தெரிந்தது.


அஜீம் என்ற இளைஞர் உண்மையாக நடந்து கொள்வதாகவும்,விக்ரமன் த‌ம் கருத்தில் உறுதியின்மை,மற்றும் சந்தர்ப்ப வாதம் , சிவின் சகிக்க முடியா சொல்லொணா ஏமாற்று வேலைகளையும் செய்வதாகத் தோன்றுகிறது... அமுதவாணன் வெற்றியாளராக நிறைய போட்டிகளில் இருந்தாலும் அவரின் குணாம்சம் மக்கள் ஏற்புடையதாகக் கொள்ள முடியாதிருக்கிறது. மணிவண்ணனும், கதிரவன் போன்ற இளைஞர்கள் மென்மையாக மேன்மையாக நடந்து கொண்டதாகவும் இருக்கிறது.


கலந்து கொண்ட பெண்கள் பற்றி எதுவும் சொல்வதிற்கில்லை... 


பொதுவாக ஒரு கருத்து வெளிவருவதற்கும் முன் அது சரியானதுதானா என ஊடகங்கள் உறுதிப் படுத்திக் கொண்டு வெளியிட வேண்டும். ஆனால் அதற்கெல்லாம் இவர்களுக்கு ஏது நேரம்?


மேலும் வியாபாரம் நடந்தால் சரி...


எல்லாம் தெரிந்தவர்கள் என்பவர்கள் எவரும் இல்லையே....


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.

Monday, January 16, 2023

IN INDIA 1% OWNS 40% WEALTH,50+% OWNS: 3% ONLY, .RICH BECAME RICHEST POOR BECAME POOREST: கவிஞர் தணிகை

நன்றி: இந்து தமிழ் திசை



 ந்தியாவின் பெரும் பணக்காரர்களாக இருக்கும் 1 சதவீதம் பேரிடம் நாட்டின் மொத்த சொத்து மதிப்பில் 40 சதவீதம் குவிந்திருப்பதாகவும். அடித்தட்டில் உள்ள பாதிக்கும் மேற்பட்ட மக்கள்தொகை வெறும் 3 சதவீதம் சொத்துகளை பகிர்ந்து கொண்டுளதாகவ்வும் ஆக்ஸ்பேம் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.


ஆக்ஸ்ஃபேம் இன்டர்நேஷனல் என்ற பொருளாதார உரிமைகள் குழு டேவோஸ் நகரில் நடைபெற்று வரும் சர்வதேச பொருளாதார கூட்டத்தின் முதல் நாளில் இந்த அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. பொருளாதாரத்தில் இந்தியாவின் சமுத்துவமின்மை பற்றி இந்த அறிக்கையில் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அந்த அறிக்கையின் தகவலின்படி இந்தியாவின் டாப் 10 பணக்காரர்களுக்கு ஒருமுறை 5% வரி விதித்தால் அதைக் கொண்டு நாட்டின் ஒட்டுமொத்த குழந்தைகளுக்கும் பள்ளிக் கல்வி வழங்கிவிடலாம் என்று தெரிகிறது. 2017 முதல் 2021 வரை கவுதம் அதானிக்கு மட்டும் இதுபோன்ற ஒருமுறை பிரத்யேக வரி விதித்திருந்தால் அதன் மூலம் 1.79 லட்சம் கோடி ரூபாய் கிடைத்திருக்கும். அதைக் கொண்டு இந்தியாவில் உள்ள 50 லட்சம் ஆரம்பப் பள்ளிகளுக்கு ஓராண்டுக்கு ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கி நியமித்திருக்கலாம்.

இந்த அறிக்கைக்கு 'Survival of the Richest' என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இந்திய பில்லினர்களுக்கு குறைந்தது 2 சதவீதம் வரி விதித்தால் கூட அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு நாட்டில் உள்ள ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு தேவையான உணவை, மருத்துவ சேவையை வழங்க தேவையான ரூ.40,423 கோடி பணத்தை பெறலாம் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்திய பில்லினர்களுக்கு ஒரே ஒருமுறை 5 சதவீதம் வரி விதித்தால் ரூ.1.37 லட்சம் கோடி வருவாய் கிட்டும். இது மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம், ஆயுஷ் அமைச்சகத்தின் ஓராண்டு பட்ஜெட்டான முறையே ரூ.86,200 கோடி மற்றும் ரூ.3,050 கோடியை பகிர்ந்தளிக்க பயன்படும்.

பாலின சமத்துவத்தைப் பொறுத்தவரை இந்தியாவில் பெண் பணியாளர்கள் 63 பைசா சம்பாதித்தால் ஆண் பணியாளர் ரூ.1 சம்பாதிக்கும் சமத்துவின்மையே நிலவுகிறது. இந்தியாவின் 100 பெரும் பணக்காரர்களுக்கு ஒரே முறை 2.5% சொத்து வரி விதித்தால் நாட்டின் ஒட்டுமொத்த குழந்தைகளுக்கும் பள்ளிக் கல்வி வழங்கலாம். கரோனா பெருந்தொற்று தொடங்கி 2022 வரையிலான காலகட்டத்தில் இந்திய பெரும் பணக்காரர்களின் சொத்து 121 சதவீதம் அல்லது ரூ.3,608 கோடியாக அதிகரித்துள்ளது.

2020ல் இந்தியாவில் பில்லினர்களின் எண்ணிக்கை 102 ஆக இருந்த நிலையில் 2022 ஆம் ஆண்டில் இது 166 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவின் டாப் 100 பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ.54.12 லட்சம் கோடியாக உள்ளது. இது இந்திய பொது பட்ஜெட் மதிப்பீட்டில் உள்ள செலவுத் தொகையை 18 மாதங்களுக்கு சமாளிக்கக் கூடியது.
ஆக்ஸ்ஃபேம் இந்தியாவின் சிஇஓ அமிதாப் பெஹார் கூறுகையில், தலித்துகள், ஆதிவாசிகள், முஸ்லிம்கள், பெண்கள், முறைசாரா துறை சார்ந்தோர் பொருளாதார ரீதியாக மேலும் ஒடுக்கப்படுகின்றனர் அது பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாக பிழைத்திருக்க உதவுகிறது என்று தெரிவித்துள்ளது

 மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை




Friday, January 13, 2023

கற்கண்டல்ல கண்ணாடித் துண்டு: கவிஞர் தணிகை

 கற்கண்டல்ல கண்ணாடித் துண்டு: கவிஞர் தணிகை



எதையும் தெரிந்து கொள்ள விரும்பும் துறு துறு என இருக்கும் குழந்தை. மூன்று அல்லது 4 வயதுள் இருக்கும், அப்பாவின் பிடியிலிருந்து விடுவித்து சாலையில் கற்கண்டு போலவே துண்டுகளாக கிடக்கும் கண்ணாடிச் சில்லுகளை எடுக்க பாய்ந்து ஓடியது...


அந்த இந்தியாவின் மாபெரும் தேசிய வங்கியின் முது பெரும் மேலாளாரக சில மாதங்கள் மட்டுமே இருந்து அப்போது கல்கத்தாவிற்கு மாறுதலாகிப் போன இளங்கோ இந்தக் குழந்தைக்கு வங்கிக்கு சென்ற போதெல்லாம் கிறிஸ்டல் கல்கண்டு(படிக கற்கண்டுத் துண்டுகள்) கொடுத்தது, ஒருவேளை அதை நினைத்தே இந்தக் குழந்தை இப்படி ஓடி எடுக்க நினைத்திருக்கலாம்...


2003 இதே போல புத்தாண்டு தின நினைவுடன் மா.ஜார்ஜ் மனோகரன் என்ற தனிப்பிரிவு மேலாளர் பெரிய விவிலிய நூலை பரிசளித்து அதைப் படிக்கும் அட்டவணையுடன் பகிர்ந்தது... கவனச் சிதறல் செய்து பெரியவர்கள் பேசுவதற்கு இடையூறாக இருக்கும் சிறுவனுக்கு ஒரு சிறு நோட் பேடு மற்றும் பேனா அல்லது பென்சிலை கொடுத்து எழுது, வரை, கிறுக்கு என வழிகாட்டியதையும்...


இப்படி நன்னினைவுகளுடன் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு மதுபானக் கடைகள் வந்த பிறகே இப்படி சாலை எங்கும் கண்ணாடித் துண்டுகள் சிதற ஆரம்பித்ததையும், இவை கற்கண்டல்ல கண்ணாடித் துண்டுகளே என்பதையும்


சினிமா என்பதற்கும் வாழ்க்கை என்பதற்கும் கூட இந்த இடைவெளிகள் உண்டு என்பதையும், ப்ளாஸ்டிக் உண்ணும் கால்நடைகளும், கண்ணாடித் துண்டுகளைக் கூட விழுங்கும் நிலையும் பறவைகளுக்கும் வரலாம் என்பதையும் அரசு, அரசியல்  எல்லாம் இதன் உள் எல்லாம் விரவிக் கிடப்பதை எல்லாம் கூறினால் புரியும் வயதில் இல்லையே இந்த சிறுவன்...என்றெண்ணிய தந்தை...


அதை எல்லாம் எடுக்கக் கூடாது, சாலையில் கிடப்பவை கற்கண்டுகள் அல்ல, கண்ணாடித் துண்டுகள் ஆபத்தானவை என்று மட்டுமே கூறினார்... பதில் சொன்ன அவருக்கே அவரது பதிலில் திருப்தி இல்லை...


சினிமா அரசியல் எல்லாம் கண்ணாடித் துண்டுகள் என்றால் வாழ்க்கை கற்கண்டுத் துண்டுகள் ஏன் ஒவ்வொரு நாளும் ஒரு வைரத் துண்டாகக் கூட இருக்கலாம்... அதன் மதிப்பறிவோர்க்கு.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.

Wednesday, January 11, 2023

இன்பமாய் வளரட்டும் 2023: கவிஞர் தணிகை

 இன்பமாய் வளரட்டும் 2023: கவிஞர் தணிகை



பொதுவாக ஆங்கில புத்தாண்டை கொண்டாடுவதில்லை.தமிழ் புத்தாண்டு என்பதை இரண்டாம் வாக்காக அரசியல் ஆக்கி இருந்தாலும் அவற்றை கொண்டாடுவதில் அவா. பொங்கல் ஒரு உழைப்பின் விழா அதை எதிர் நோக்கும் இந்நாளில் பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்ற  புதன் கிடைத்த பொன்னாளில் நீண்ட நாள் இடைவெளிக்குப் பின் 2023 பதிவின் கணக்கை ஆரம்பிக்கிறேன்...


கணக்கீட்டு அடிப்படையிலும் பெரும்பாலும் கி.பி.2023 என்ற கிரிகோரியன் ஆண்டில் 10 நாட்கள் ஓடக்கூடிய இன்றைய நாளில் இருந்தாவது எனது எழுத்து சிறிது பதிவாக இந்த பதிவு


எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான் இங்கிவனை நான் பெறவே...என்றபடி ஸ்டாலின் என்ற இளைஞர் ஒர் மேசை மாத நாட்காட்டியுடன் திருப்பதி பிரசாதங்களுடன் எனது இந்த ஆண்டுக்கான நகர்த்தல் நினைவை ஆரம்பித்து வைத்திருந்தார்


குவெய்ட் நாட்டில் பணி பொருட்டு இருக்கும் குடும்ப நண்பர் செந்திலின் குடும்பத்தார் அவரின் ஆசிரியை துணைவியாரும் அவருடைய பொறியாளர் மகன் இனியனும் வருகை தந்தனர்...


மேட்டூர் சிட்கோவின் தலைவரும், கபாலீஸ்வரர் கோவிலின் எனது 18 மாத உழைப்புச் சேவையில் எனது பொருளாளர் மற்றும் ஒருங்கிணைப்பு பணிகளில் என்னுடன் உறுதுணையாக திருப்பணிக் குழுவின் தலைவருமாக‌ இருந்த அன்புச் சகோதரர் மாதப்பன் அவர்களின் மூத்த வழக்கறிஞர் மகளுடைய திருமணத்தின் அன்பான அழகான‌ அழைப்புமாக...

நூல் வழிச் சாலை நாகா என்னும் நாகச்சந்திரன்  நண்பர் வந்திருந்து தமது இரண்டாம் நூலை" நூலேணி"யை அளித்து சிறிது நேரம் தமது மேட்டூர் அணை பற்றி ஒரு நூலைக் கொண்டுவர வேண்டும் அது மண்ணின் மைந்தராக தமது கடமை என்றுக் குறிப்பிட்டார்.


நான் வேர்ட்பிரஸ்ஸில் "காவிரிக் கரையோரத்துக் காலச் சங்கிலிகள்" தொடர் செய்து சுஜாதா அவர்களின் இரத்தம் ஒரே நிறம் என்ற தொடர் நின்றாற் போல இடையே நின்று போனது நினைவு வந்தது. அதற்கும் இதற்கும் திருவில்லிப் புத்தூர் இரத்தினவேல் அய்யா ஊக்கம் கொடுத்த தொடர்பும் இருந்தது.


கருப்பு ரெட்டியூர் தமிழ் பசங்க எழுத்து பெரிதாக போட்டு திருவள்ளுவர், பாரதி, கலாம், இராஜ இராஜ சோழனுடன் இந்த முறையும் நாட்காட்டியை முயற்சியுடன் போட்டு எனக்கும் கொண்டு வந்து சேர்த்தனர் இப்படி குறிப்பிட நல்ல நிகழ்வுகளுடன் இந்த நாட்கள் நாட்காட்டியில் உருண்டோட...


இந்த தமிழ் பசங்க இப்படி இருக்கும் போது தமக்கு இரசிகர் மன்றமே வேண்டாம் எனும் அஜித் துணிவுக்காக இரசிகர்கள் தியேட்டர் கண்ணாடிகளை அனுமதிச் சீட்டு கிடைக்காத ஆத்திரத்தில் உடைத்தும், தூக்கி (கிரேன்) மேலே தசை நார்கள் பிய்ந்து  தொங்கிக் கொண்டு அலகு குத்தியும், பால் வழிய அவருடைய கட்டை உருவத்துக்கு வழிபாடு செய்வதுமான செய்திகளையும் ஊடகம் பகிர்ந்து வந்ததைப் பார்த்து தமிழன் என்று சொல்லடா தலை குனிந்து நில்லடா என்ற வேதனையுடனான‌ சொற்றொடரும்...சட்டத்துக்குப் புறம்பான இரசிகர் மன்றக் காட்சிகளும் அனுமதிச் சீட்டு கள்ளச் சந்தையில் ரூ. 2000 வரை விற்கப்படுவதான செய்திகளும் நஞ்சாக தமிழ் செய்திகள்...



மக்கள் பிரதிநிதிகள் VS நியமனப் பிரதிநிதிகளுக்கான கயிறு இழுத்தல் போட்டிகள் அரசியலை கேலிக் கூத்தாக்க...மத்தி ஒரே ஆட்சி வேட்கைக் கனவுடன் பரப்பை விரிக்க முயல...


கடந்த ஆண்டின் மாபெரும் கண்டுபிடிப்பு நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலை நோக்கி வழி 22,000 ஒளியாண்டுக்கு அப்பால் உள்ள கோடிக்கணக்கான விண்மீண்கள் உள்ள உடு திரள்(நட்சத்திர மண்டலம்‍‍  கேலக்ஸி) ...


பத்தாம் தேதி கிடைத்த‌ மாத ஊதியத்தில் இப்போது இல்லாது போன மேட்டூர் பியர்ட்செல் மற்றும் எங்கள் தந்தை சுப்ரமண்யம் அவர்கள் உழைப்பில் வளர்ந்த நினைவடக்கங்களுடன் 


நேற்று கூட  மேட்டூர் பேர் சொல்லும் மறைந்த  வீனஸ் மணி என்னும் ஒரு நல்ல கலைஞரின் மகன் உதய குமாருடன் சந்திப்பு. (உதயா) இவர் ஒரு நல்ல வாரிசாகவே உருவாகி 33 வயதான பின்னும் தந்தையின்றி திருமணத்துக்கு மேல் நடவடிக்கை எடுக்க தந்தையைப் போல் எவரும் இரார் என்ற ஏக்கப் பெருமூச்சுடன்...ஒரு சந்திப்பு...இவர் கோவில் சிற்பம் மற்றும் ஓவியம், வண்ணம் தீட்டுதல் பணியை சிறப்பாக செய்து வருகிறார் என ஊரெங்கும் பேச்சு...


இந்த ஆண்டு மிகவும் சிறப்பாக அனைவர்க்கும் முக்கியமாக குறிப்பாக உழைத்து துன்புறும் அனைவர்க்கும் இன்பமாக இருக்கட்டும் இருக்கும் என்ற நேர்மறையான எண்ணங்களுடன்...


மறுபடியும் பூக்கும் வரை

உங்கள் அன்புடன்

கவிஞர் தணிகை


* எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே...