Sunday, April 28, 2024

அப்துல் அஜீஸ்: கவிஞர் தணிகை

 





அப்துல் அஜீஸ்: கவிஞர் தணிகை

பிரான்ஸ் தேசத்துக் குடிமகனும் வெளி நாட்டு வாழ் இந்தியருமாகிய எனது பள்ளிப் பருவத்து நண்பர் அப்துல் அஜீஸ் நேற்று தமது துணைவியாருடன் சேலம் கேம்ப் பிலோமினாள் பள்ளி வளாகத்துக்கு வந்து தமது பால்ய கால நண்பர்கள் 25க்கும் மேற்பட்டோருக்கு விருந்தளித்தார். சுமார் 5 மணி முதல் 7 மணி வரை நண்பர்களின் கலந்தளாவல்  இருந்தது. இவரது குடும்பம் பிரான்ஸ் தேசத்தில் வாழ்ந்து வருவது குறிப்பிடத் தக்கது.



ஆன்டனி ராஜன் இந்த நிகழ்வை ஒருங்கிணைக்க, குருசாமி வரவேற்புரை நிகழ்த்த அடியேன் வழக்கம் போல சிறப்புரை நிகழ்த்த வேண்டி இருந்தது.

மதி அழகன், ஆன்டனி, ராஜு,போன்றோர் உணவு வழங்கும் பிரிவை நன்கு கவனித்து செய்திருந்தனர்.
திருமதி அப்துல் அஜீஸ், திருமதி ஆண்டனி ராஜன், பாபு நாராயணசாமியின் மகள் ஆகிய மகளிரும் கலந்து கொண்டனர்

கேரளத்து நண்பர் ராதாகிருஷ்ணன், சென்னையிலிருந்து பாலகிருஷ்ணன், சேலத்திலிருந்து செல்வ அரசு போன்றோரும் நிகழ்வின் ப்ரசன்னா அமைப்பாளர்,மற்றும்ஜீவானந்தம், சிவகுமார், மோகன் போன்றோர் மேட்டூரில் இருந்தும் தங்கமாபுரி பட்டணத்திலிருந்து செல்வராஜ், கோபாலகிருஷ்ணன்,இன்ன பிற நண்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும் எனக்கு இப்போது பெயர்கள் நினைவுக்கு வராத நண்பர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

மேலும் கோம்பூரான் காடு கபாலீஸ்வரர் ஆலயத்தின் கிரிவலத்துக்காக பாதையில் அஷ்டலிங்க வழிபாட்டுக்காக எதிர்வரும் காலங்களில் தம்மால் முடிந்தளவு  விளக்குகள் அமைத்து தரவும் உறுதி அளித்தார் அப்துல் அஜீஸ்.

அண்மைக் காலத்தில் இந்த சேலம், ஈரோடு மாவட்டங்களின் உச்ச பட்ச வெய்யில் இருந்த போதிலும் இந்த நண்பர்களின் சந்திப்பு பற்றிக் குறிப்பிடத் தக்கதானது.





மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை




Friday, April 19, 2024

The curious case of Benjamin Button

 தி க்யூரியஸ் கேஸ் ஆப் பெஞ்ச்மின் பட்டன்: கவிஞர் தணிகை



ஆங்கிலத்தில் 2008ல் வந்த ஒரு நல்ல திரைப்படம்.3 ஆஸ்கார் விருதுகளையும் அதற்கும் மேல் பல விருதுகளையும் வென்ற திரைப்படம்.


பிறந்த குழந்தை தோல் எல்லாம் சுருக்கம் விழுந்து முதியவரைப் போல் பார்க்க சகிக்க முடியாமல் இருக்க அதன் தந்தை அதை ஆற்றில் தூக்கி வீசி எறிய முற்பட போலீஸ்காரரால் கண்ணில் பட்டதால் அதையும் செய்ய முடியாமல் ஒரு முதியோர் இல்லத்தின் படிகளில் போர்த்தி வைத்திருந்த போர்வைத் துணியுடன் வைத்து விட்டு சென்று விடுகிறார்.


அந்த விடுதியின் கறுப்பினப் பெண் ஒருவர் அந்தக் குழந்தையை கண்டு எடுத்து வளர்க்கிறார். அது  வளர வளர இளமை அடைகிறது. வளர வளர இளமை திரும்புகிறது மேலும் வளர்கையில் அதன் பின் அது குழந்தையாகி கண் மூடுகிறது இறந்து விடுகிறது. மனைவி குழந்தை யார் என்றெல்லாம் அதற்கு நினைவு வராத வாழ்வு பின்னோக்கிய சக்கர வாழ்வு. இந்த இடைவெளியில் அதன் வாழ்வு எப்படி எல்லாம் செல்கிறது எங்கெல்லாம் செல்கிறது என்ன என்ன எப்படி எப்படி எல்லாம் அனுபவங்களைப் பெறுகிறது என்ற வாழ்வின் பின்னோக்கிய பயணத்தின் பார்வையுடனான திரைப்படம்.


மிகவும் பொறுமையிருந்தால் மட்டுமே பார்க்க முடியும் . ஆனால் இப்படிப் பட்ட படத்தை எல்லாம் பார்க்கும் அனுபவத்தை அமெரிக்க சிந்தனை நமக்கு கொடுத்திருக்கிறது.


தெய்வ மகன் படம்(சிவாஜி) நமக்கு நினைவுக்கு வந்த போதும் ஆனால் அது அல்ல இது. 

எல்லாம் வாழ்ந்திருக்கிறார்கள். அந்தக் கதையை நம்பி.   இன்னும் தமிழ் சினிமாக்காரர்கள் இது போன்ற சினிமாக்களை எல்லாம் காண வேண்டிய தேவை இருக்கிறது என உணர்த்தும் படம். கொஞ்சம் பின்னோக்கிய கதை என்பதால் கொஞ்சம் டைட்டானிக் படத்தையும் நினைவு படுத்தி விடுகிறது.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை