Sunday, December 4, 2016

சைத்தான் பார்த்த அதிர்வலைகள்: கவிஞர் தணிகை

சைத்தான் பார்த்த அதிர்வலைகள்: கவிஞர் தணிகை

Image result for spirits without body but soul living

இது சினிமா விமர்சனம் அல்ல. உண்மையிலேயே உடலை இழந்த ஆவிகள் பற்றியும் இந்த துறையில் எனக்குள்ள அனுபவ அறிவையும் அசை போட விரும்பும் பதிவு இது.

எனக்கு எப்போதுமே ஒரு கேள்வி உண்டு. உடலை இழந்த உயிர் அதான் ஆன்மா, அல்லது ஆவி எவ்வளவு நாட்கள் இந்த நிலையில் இருக்கின்றன, அதன் பின் என்ன நிலைக்கு அவை போகின்றன என்பது பற்றியது. ஆனால் இந்த கேள்விக்கு எந்த மதமும், எந்த கடவுளும், எந்த முனிவரும் அறுதியிட்டு உறுதியான பதிலை பகிர்ந்ததில்லை. அப்படி சொல்லவும் முடியாது. அதை முற்றிலும் அறிந்தவர் என்பது எவருமே கிடையாது. இது ஒரு ஆய்வுக்குட்பட்ட கேள்வி. இதற்கு முடிவே இது வரை மனித சமூகத்திற்கு கிடைக்கவில்லை.

ஆனால் உடலை இழந்த உயிர், ஆவி அல்லத் பேய் பிசாசு, சைத்தான் எனப்படுவது உண்டு அவற்றுடன் எனக்கும் சில தொடர்பிலான அனுபவமும் உண்டு.
 அதில் ஆவி, பேய், போன்றவை நல்லவை கடவுளைப் போன்ற நல்ல நிலையிலும், பல தீய நிலையிலும் உள்ள அவை பிசாசு அல்லது சைத்தான் எனப்படும் நிலையிலும் உள்ளவை.

இந்த பிசாசு, சைத்தான் அல்லது கெட்ட ஆவி, கெட்ட பேய் என்பன பெரும்பாலும் பயந்த சுபாவத்தினரை, எளிதில் வாய்ப்பு கிடைக்கும்போது பிடித்த்துக் கொள்கிறது என்பது உண்மைதான்.அவை சரியான கிறுக்கல் முறுக்கல்களுடன் இவர்களை கதிகலங்க வைத்து அளவற்ற முறையற்ற எல்லையற்ற செயல்களை புரியவைத்து மானிடத்தை கேலிக்குரியதாக்கிவிடும்.

Image result for spirits without body but soul living

என்னடா இவ்வளவு அறிவியல் முன்னேற்றம் நிரம்பிய இந்த உலகில் இந்தியா 83 செயற்கைக் கோளை ஒரே நேரத்தில் ஒரே ஒரு ராக்கெட் மூலம் அனுப்பி வரும் நேரத்தில், இதெல்லாம் எப்படி என்று கேட்கலாம். ஆனால் அவை ஒருபக்கம் நடக்கின்றன. ஆனால் இவையும் ஒரு பக்கம் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. விண்ணுக்கு ஏவுவோம் விண்கலங்கள் ஆனால் மண்ணில் இருக்கும் கடல் அதிசயங்கள் முற்றிலும் நாம் அறியோம் என்கிறது அதே அறிவியல்.

அப்படித்தான் இந்த சைத்தான் , பேய், பிசாசு: எனது அனுபவத்தில் எனது தாயை, ஒரு மைத்துனரை, ஒரு பக்கத்து வீட்டு குடியிருந்தாரை அவர்கள் இறந்த பின்  சந்தித்து பேசி இருக்கிறேன். தியானத்தில் 32 ஆம் ஆண்டில் இருக்கிறேன் எனவே இந்த ஆவி உலக சந்திப்புகளும் இதனுள் இருக்கின்றன.

ஒரு ஆவி என்னை தியானம் செய்ய விடாமல் நச்சரித்து கொண்டிருந்ததும், அதை அதற்குத் தேவையான விருப்பத்தை நிறைவு செய்து முடித்தவுடன் மறுபடியும் தியானம் அமர அமைதி கிடைத்த அனுபவமும், ஒரு மைத்துனர் என்னதான் நாங்கள் முயற்சி செய்த போதும் திரும்பவும் அவர் இருக்கும் இடம்  திரும்பு வந்தமர்ந்த கதையும் இந்த ஆவிகள் கூட சுயநலமிகளாய் தம்மை சார்ந்தாரை எந்த ஊறு வகை செய்யாமலும் அதே நேரத்தில் தமக்குப் பிடித்த ஏமாந்த நபர்களை எப்படி வேண்டுமானாலும் ஆட்டி விடவும் செய்து விடுகின்றன.
Image result for good spirit evil spirit


 சமயத்தில் ஒரே உடலில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆவிகள் குடியிருக்க ஆரம்பித்து அவற்றினால் இந்த உடலை உடைய நபர் தாறுமாறாக குணநலன்கள் வெளித் தெரிய ஆரம்பித்து அவரைச் சுற்றி இருப்பார்க்கு விசித்திரமான அனுபவங்களைக் கொடுத்து அதனால் அவர்கள் அவற்றிடம் இருந்து இந்த உடலை உடையவருக்கு அந்த ஆவிகளிடமிருந்து விடுதலை பெற்றுத் தர முனையும் நடவடிக்கைகளும் மேற்கொள்வதுமுண்டு.

இதற்கு எல்லாம் சில நேரங்களில் மனோவசியமும் மனோதத்துவ நோய், மருந்து எல்லாம் செய்வாரும் உண்டு. அவற்றிற்கு எல்லாம் அடங்காமல் நோய் நீங்காமல் பிணி நின்று போவதுமுண்டு.விடை கிடைக்காத கேள்வியாய் வாழ்வு இருப்பதுமுண்டு.

எனது அருமைத் தாய் என்னை விட்டுப் பிரிந்த போதும் சில ஆண்டுகள் எங்களுடன் இருந்த உண்மை அனுபவங்களும் எம்மிடம் உண்டு. சரி இதிலிருந்து என்ன சொல்ல வருகிறேன் எனில் : ஆவிகள் தமது விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள மீடியம் அல்லது தமது ஆளுகைக்கு உட்பட்ட உடலை உயிரை எப்படி வேண்டுமானாலும் சொற்களுக்கு படிய ஆரம்பித்து விட்டால் அடிபணிய வைத்து ஆட்டம் கட்டுவதுண்டு. அதை அப்படிப்பட்டதையே நாம் சைத்தான் என்கிறோம் முகமதிய மொழியில்

இவற்றின் இறுதி நடவடிக்கை என்னவாக இருக்கும் எனில் பற்றி இருக்கும் உயிரைக் கூட மாய்த்து எந்த வழியிலாவது, அதாவது தூக்கு, மருந்து, விபத்து, மின்சாரம், ரயில், பேருந்து, மாடியிலிருந்து கீழ் விழுதல் இப்படி எந்த வகையிலாவது நிறைவேற்றி வீழ்த்தி விடுவதுண்டு...அதனால் அவற்றுக்கு என்ன பயன், ஏன் அப்படி தூண்டுகின்றன என்பதெல்லாம் ஆய்வுக்குரியன.

பூமியில் மட்டும்தானா? மனிதர்க்கு மட்டும்தானா? இவை போன்ற கேள்விகளுக்கும் நம்மிடம் தெளிவான விடை இல்லை. இவை அறிந்தார் என சொல்லி ஏமாற்றுவாரும் உண்டு.

இவற்றைக் கட்டுவார் என்போர் துரத்துவார் என்பார், இவை ஏன் பயம் கொள்கின்றன இவை விடைபெற்று எங்கு செல்கின்றன, எங்கு இருக்கின்றன, இவற்றின் உணவு முறைகள்  நடவடிக்கைகள், பண்பாடுகள் உடை, இயங்கும் முறைகள் இவை பற்றும் உடலோடு ஏன் அவை தங்கும் வரை அந்த உடலோடு அந்த மனிதரோடு ஏன் எதிரொலிக்கின்றன எதிரொளிக்கின்றன என்பன போன்ற கேள்விகளும் அப்போது இந்த உயிரும் உடலும் இருக்கும் நபரின் நிலை என்னதான் ஆகிறது என்பது போன்ற கேள்விகளும்

இவை பல சமயங்களில் அவ்வப்போது அந்த குறிப்பிட்ட உடலை ஆக்ரமித்தபடியும் சில நேரங்களில் நீங்கி மறுபடியும் பிடித்துக் கொள்வதாகவும் விளங்குகின்றன.

ஆனால் இவை அனைத்துக்கும் அடிப்படை இருளடைந்த இடங்கள், பயமுடைய மனிதர்கள், அதிக ஆசையுடைய நபர்கள், மலர்களின் மணங்கள், நேரம் கெட்ட நேரம் இப்படி பல காரணங்கள் எல்லாவற்றையும் விட உயிர் பிரியும்போது நிறைவேறாத ஆசை ஏதேனும் இருப்பது இப்படி பல காரணங்கள் இருக்கின்றன.

இவற்றில் சில நாம் அறிந்து கொண்டவை. பல அறிந்து கொள்ளத் தோன்றுபவை தூண்டுபவை, பல அறிய முடியாமலே போய்விடுபவை. அவற்றைப் பற்றிய பல படங்களாக: இப்போது: தேவி, இளமி, சைத்தான்,காஷ்மோரா,மாஸ், இடைக்காலத்தில் சந்திரலேகா அந்தக் காலத்தில் நெஞ்சம் மறப்பதில்லை இப்படி எவ்வளவோ படங்கள் எதை எல்லாமோ சொல்ல முயன்றுள்ளன. இதற்கு மொழி எல்லாம் இல்லை எல்லா மொழிகளும், எல்லா நாடுகளும் எல்லையில்லாமல்

ஆனால் இவற்றுள் சில செய்கைகளைப் பொறுத்து கடவுளாகவும் ஆகிவிடுகின்றன. வணக்கத்துக்குரிய வழிபாட்டுக்குரிய தெய்வங்களாக கருதப்பட்டு வணங்கப் படுகின்றன.

Image result for good spirit evil spirit

முதியோர் , மூத்தோர், இறந்தார் , குல சாமி, தாய் தந்தை, பாட்டி, தாத்தா, உற்றார் உறவுகள் இப்படி எல்லா விதமான காலம் சென்ற உயிர்களையும் இதற்காகத்தான் இப்படித்தான் வணங்குகிறார்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை. மறப்பதற்கில்லை.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment