Friday, December 2, 2016

சைத்தான் (கி பச்சா):விமர்சனம்: கவிஞர் தணிகை

சைத்தான் (கி பச்சா):விமர்சனம்: கவிஞர் தணிகை


Image result for Saithan

 ஹேலுசினேசன்,டெம்பரரி இல்லியூசன் என வார்த்தைகளில் ஆரம்பிக்கும் ஒரு காம்ப்ளிகேட்டட் ஆன குழப்பமான‌ சிக்கலான கதை. இந்தக் காலத்தில் இவ்வளவு கஷ்டப்பட்டு சினிமா எல்லாம் பார்க்க நமது சினிமா இரசிகர்கள் ஒருபோதும் விரும்ப மாட்டார்கள். இசையும் அவரே. நான், சலீம், பிச்சைக்காரன் போன்ற படங்களில் இருந்த அளவு தெளிவான கதையைத் தேர்வு செய்யாதது இந்தப் படத்தில் ஒரு குறைபாடு.

டைட்டில் டிசைன் பிச்சைக்காரன் என்பதை நினைவு படுத்துவது போல வடிவமைக்கப்பட்டிருக்கிறது. நல்ல டிசைன். வித்தியாசமான கதைக்கேற்ற வித்தியாசமான கதை தயாரிப்பு.

குரல் கேட்கிறது, மண்டையில் இருந்து ஒரு குரல் கேட்கிறது என  மாடி ஏறி கைப்பிடிச் சுவரிலிருந்து எல்லாம் விழுந்து சாகத் தயாராக இருக்கும் ஒரு  கணினி வல்லுனர் குழப்புகிறார். குழம்புகிறார். கணினியிலிருந்து ஒரு கை வந்து அடித்து வீழ்த்துவதாக, குரல் கேட்டு பொறுக்க முடியாமல் கார் ஓட்டிக் கொண்டிருக்கும் நண்பர் சாக காரணமாகிறார்.

இப்படி எல்லாம் ஆரம்பிக்கும் தினேஷ் கதை கிட்டி என்கிற கிருஷ்ணமூர்த்தி நெடு நாளைக்கும் பின் ஒரு மனோதத்துவ மருத்துவராக வந்து தினேஷுக்கு சிகிச்சை அளிக்க உதவுகிறார்.சிகிச்சை அளிக்கிறார். நீண்ட காலம் கழித்து ஒய்.ஜி. மகேந்த்ரா வேறு அவரின் பங்குக்கு கம்பெனி பாஸ் ஆகவும், இவரின் குடும்ப நண்பராகவும் இருந்து உதவுகிறார். இவற்றை தெளிவாக சொல்லலாம். அதற்கு மேல் ஒரு மனைவியாக நடித்து ஒரு மருந்தை உடலில் செலுத்த அது பழைய கால நினைவுக்கும் ஏன் போன ஜென்ம நினைவுக்கும் இட்டுச் செல்கிறதாம்.

அதில் தமிழ் தற்போதைய வழக்கப்படி ஆவி, போன ஜெனமக் கதை,சர்மா, ஜெயலட்சுமி, நடராஜன் கள்ளக் காதல் என...

பிறன் மனை நோக்காத பேர் ஆண்மை, சான்றோர்க்கு
அறன் ஒன்றோ? ஆன்ற ஒழுக்கு.

என்ற குறளையும் இன்னொரு குறளையும் கருத்தாக வைக்கிறார். கதைதான் எங்கெங்கோ சுழல்கிறது. எவருமே விரும்பி பார்க்க முடியாமல். ஒரு வகையில் பார்த்தால் பார்ப்பாரை நோகடிக்கிறது. இரண்டு மணிக்கும் மேல் ஓடி சலிப்பு ஏற்படுத்துகிறது. இவரும் பாலா போல் போய்விடலாம் எதிர்காலத்தில்.


Related image
இதெல்லாம் சைத்தான் கடைசியில் வலுவாக இவருள் இருந்து தினேஷை வெளிக் கிளப்பி ஷர்மாவாக மாறி நாட்டுக்கும் அனைவர்க்கும் நல்லது செய்வாராக மாறுகிறார்.

ஜெயலட்சுமிக் கிழவி கடைசியில் மன்னிப்பு கேட்டு இறக்கிறார். கால் தடுக்கி தவறி விழுகையில் கையில் இருந்த குழந்தை கிணற்றில் விழ அதை இவர் வேண்டுமென்றே தகாத உறவால் பிறந்த குழந்தை என கொன்று விட்டார் என வெகுண்டு எழும் ஜெயலட்சுமி தமது கள்ளக் காதலன் நடராஜனுடன் சேர்ந்து ஷர்மாவைக் கொல்வதாகவும் அவர் வளர்த்த வளர்ப்பு மகன் கோபாலையும் கொன்றுவிடுவதாகவும் கதை.

இரண்டு மணி நேரத்துக்கும் மேல் கதை சுற்றி சுழன்று அனைவரையும் கலங்கடித்து செல்கிறது சாதாரண ஒரு கள்ளக் காதலை அடிப்படையாக வைத்து ஆவி,போன ஜென்மம், தற்காலம், மனோவசியம், அறிவியல் ஆய்வு, உடலின் உறுப்பு கடத்தல் கொள்ளை விற்பனை, வேசித்தனம் இப்படியாக இதில் சொல்லப் பட்டிருப்பதை எல்லாம் பார்த்து பயந்தால், குலம் , கோத்திரம், அப்பா அம்மா பெற்றோர் பார்த்து மனைவியை கணவரை வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்க வேண்டும் ,முகநூல் வாட்ஸ் அப் எல்லாம் இப்படி தாறுமாறாக இருந்து விடலாம் என்பதும் கதை சொல்கிறது.


இந்தக் கதை தற்கால மருத்துவ ஆராய்ச்சி, உடல் உறுப்பு கொள்ள என்றெல்லாம் பயணிக்கிறது.

மொத்தத்தில் பார்க்க தெம்பு வேண்டும். சுஜாதா கதை வேறு பாதி என்றும் அதன் அடிப்படையில் படம் எடுக்கப்பட்டிருக்கிறது. எனக்குப் பிடிக்கவில்லை. ஆனால் கஷ்டப்பட்டு எடுத்திருக்கிறார் ஆனால் பார்ப்போரையும் கஷ்டப் படுத்தி இருப்பது இதன் மைனஸ் பாயின்ட். நல்ல முயற்சி ஆனால் ஏன் இவ்வாறாக பார்க்க முடியாமல் இருக்கிறது கதை சொன்ன திருக்கல்களின் காரணமா, இவ்வளவு கனமான அழுத்தத்தை எல்லாம் தாங்கி படம் பார்க்க விரும்ப மாட்டார்கள் என்பதே எம் கருத்து. எனவே இதற்கு 35 மதிப்பெண்கள் நூற்றுக்கு என்றே சொல்ல முடிகிறது. கதையை எப்படியோ கடைசியில் சமுதாய முன்னேற்றம், அறிவியல் கதைப்படி நேரக்கூடிய மருத்துவ சுரண்டலை ஒழிப்பது என வந்து சேர்ந்து கொண்டார்கள்.

தியானத்தில் ஒரு கட்டத்தில் , இது போன்ற குரல் கேட்கும்.என்றும் இந்த அக்கப் போர் பொறுக்க முடியாமல் சுவரை செருப்பால் அடித்துக் கொண்டிருந்த ஒருவரைப் பற்றி எமது மறைந்த நண்பர் ரகுபதி தற்போது இருக்கும் ஜோஸ்யர் அய்யப்ப பக்தர் ஒருவரான வேலுவும் அடிக்கடி என்னிடம் பகிர்ந்து கொண்டு எனது தியான அனுபவங்களை பகிர்ந்து கொண்டதுண்டு.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.




4 comments:

  1. agood review...people may not like to undergo so much pressure to see this movie

    ReplyDelete
    Replies
    1. thanks Nat Chander for your comment on this post. vanakkam.please keep contact

      Delete
  2. அருமையான விமர்சனம் நண்பரே
    நன்றி

    ReplyDelete