Saturday, December 10, 2016

டாக்டர் வி.சி. குழந்தைசாமிக்கு அஞ்சலி: கவிஞர் தணிகை

டாக்டர் வி.சி. குழந்தைசாமிக்கு அஞ்சலி: கவிஞர் தணிகை

இன்று காலமான இந்த அறிஞரின் வயது 87. அவருக்கு எம் ஆழ்ந்த அஞ்சலிகள்.
Image result for VC Kulandaiswamy


நல்ல தமிழறிஞர். நீர்வளம் குறித்த ஆய்வாளர், சில பல்கலைக் கழகங்களின் துணை வேந்தராக இருந்தவர். இந்திய தொழில் நுட்பக் கழகம் கரக்பூரில் பட்டம்பெற்று இல்லினாய்ஸ் பல்கலையில் முனைவர் பட்டம் பெற்றவர் அனைத்து தமிழ் ஆர்வலர்களுக்கும் தெரிந்தவர், எனக்கும் அவருக்கும் கடிதத் தொடர்பும் தொலைபேசி வழித் தொடர்பும் இருந்தது. 2004ல் என நினைக்கிறேன். அவரும் நானும் சிகாகோவில் நடைபெற்ற ஒரு தமிழ் மாநாட்டுக்கு செல்ல அவர் எனை ஊக்குவித்தார். ஆனால் அப்போது எனக்கு எந்த கணினித் தொடர்பும் இணையத் தொடர்புமே இல்லை, அந்த மாநாட்டை நடத்த முனைந்த பெயர் மறந்து போன ஒரு நபர் (பிரபாகரன் என நினைக்கிறேன்) எனது வரவை சொந்த செலவாக ஏற்க வேண்டும் எனச் சொன்ன காரணத்தால் என்னால் போக முடியாமல் போயிற்று.

அது ஒரு திருக்குறள் தொடர்பான மாநாடு. அப்போதுதான் நான் குடியரசுத் தலைவராக இருந்த டாக்டர்.ஆ.ப.ஜெ அப்துல்கலாம் கடிதத்துடன் எனது முன்னுரையை வைத்து "தணிகையின் பார்வையில் தலையாய குறள்கள் 100" என்ற ஒரு பாக்கெட் சைஸ் புத்தகம் வெளியிட்டு அனைத்து பள்ளிப் பிள்ளைகளுக்கும் விநியோகித்து வந்தேன்.

எனவே இந்த நூல் அமெரிக்க வாழ் பள்ளிக் குழந்தைகளுக்கும் சென்றால் எப்படி இருக்கும் என கனாவும் கற்பனையுமாய் இருந்தேன்.ஆனால் அந்த பிரபாகரன் என்னும் இந்தியாவுக்கு வந்திருந்த அமெரிக்க வாழ் இந்தியர், இந்த புத்தகங்களை அனுப்புவதும் பெரும் செலவு, நீங்கள் வருவதாய் இருந்தால் வரலாம் என விட்டேற்றியாக பதில் சொல்லி தட்டிக் கழித்தார்.

ஆனால் அப்போது இந்த தமிழறிஞர் என்னை தொடர்பு கொண்டு, கடிதங்கள் எழுதி, தொலைபேசியில் பேசி என்னை ஊக்குவித்தார் ஆனால் அவரும் இந்த நபரையே தொடர்பு கொள்ளச் சொல்லி ஏற்பாடு செய்து கொள்ளச் சொன்னதால் பின்னடைவாக போயிற்று
Image result for VC Kulandaiswamy


விவேகானந்தர் என்னும் பிச்சைக்காரருக்கு சிகாகோ ஒரு திருப்புமுனையாக அமைந்தது போல் அந்த மனோரதம் நிறைவேறியிருந்தால் எனக்கும் ஒரு திருப்புமுனை ஏற்பட்டிருக்கலாம்.

அப்போது ஒரு மின்னஞ்சல் முகவரி கூட என்னிடம் இல்லை. அதை ஏற்படுத்திக் கொள்ள ஒரு நபர் ரூ.50 கட்டணம் பெற்று மின்னஞ்சல் முகவரியை உருவாக்கித் தந்தார்.

Image result for VC Kulandaiswamy


அதன் வழியேதான் இந்த பிரபாகரன் என்பவரோடு முதலில் செய்தி பரிமாற்றம் செய்தேன். அங்கு அந்த மாநாட்டில் இந்த சிறு நூலையும் வெளியிட்டால் எப்படி இருக்கும் என்ற கற்பனை பொய்யானது.

ஆனால் இந்த தமிழறிஞர் வி.சி. குழந்தைசாமி என்னிடம் ஒட்டி இருந்தார் தமது எளிமை காரணமாக.

அதன் பிறகு மற்றொரு காலம்:

அப்போதும் எனது போதாத காலம், ஒரு தோழமை என்னை கோவையில் நடைபெற்ற கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்து நடத்தி செய்த செம்மொழி மாநாட்டுக்கு பார்வையாளராக கடித வழி அழைப்பை பெற்றும் போகவிடாமல் போதித்து எனை தடுத்து விட்டது. அப்போதும் ஒரு நூலை வெளியிடும் மும்முரத்தில் இருந்தேன் . ஆனால் அதையும் அங்கெடுத்து சென்று வெளியிடவில்லை மாறாக உறவினர் ஒரு குடும்பத்தின் லீ மெரிடியன் சென்னையில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் கலந்து கொள்ள வேண்டியதாயிற்று.ஆனால் அந்த விழாவிற்கு அப்துல் கலாம் கூட அழைக்கப் படவில்லை. ஆனால் இந்தக் கலைஞரும் பாராட்டும் வண்ணம் இந்த டாக்டர்.வி.சி.குழந்தை சாமி இருந்தார்.


Image result for VC Kulandaiswamy

இன்று அவர் இறந்தார். அந்த பெரிய மனிதருக்கு இந்த அடையாளம் மறந்து போன நிலையிலிருக்கும் சிறியோனின் அஞ்சலி.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

பி.கு:Image result for VC Kulandaiswamy


 பீப்பிள் யூனியன் பார் சிவில் லிபர்ட்டீஸ் பி.யூ.சி.எல் உறுப்பினராக இருந்தபோது சோ இதன் தலைவர் அப்போது அவரும் கூட எனக்கு எழுதியதாக நினைவு. ஜெவின் ஒரு தேர்தல் வாக்கு கேட்பு கடிதம் அவர் கையொப்பமிட்டது எங்கோ இருக்கிறது, லேனா தமிழ்வாணன், விசு, சுந்தர ராமசாமி இப்படி பலருமே பல்வேறு கட்டங்களில் எனக்கு எழுதி இருக்கின்றனர் அவற்றில் சில சேமிப்பில். சில தொலைந்து போன கணக்கில்.

Related image





2 comments:

  1. ஓரிரு முறை இவரை நேரில் சந்தித்துப் பேசும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன்
    ஆழ்ந்த இரங்கல்கள்

    ReplyDelete
  2. thanks for your feedback on this post sir. vanakkam.

    ReplyDelete