Thursday, December 8, 2016

சசிகலா நடராஜன்,சண்முக நாதன் கலைஞர் கருணாநிதி, வைரவன் காமராசர்: கவிஞர் தணிகை

சசிகலா நடராஜன்,சண்முக நாதன் கலைஞர் கருணாநிதி, வைரவன் காமராசர்: கவிஞர் தணிகைImage result for jayalalitha burial box picture



உதவியாளர்களாக தலைவர்களுக்கு உறுதுணையாக இருந்தோர் பெயர்களைத் தமிழக மக்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.நிறைய பேருக்குத் தெரியாது நினைவிருக்காது.

அறிஞர் அண்ணாவுக்கு அப்படி யார் இருந்தார் என்பதே தெரியாது. இப்போது ஜெவின் உதவியாளராக இருந்த சசிகலா என்றால் கருணாநிதி என்ற பேர் போல நிறைய இருப்பதால் சசிகலா நடராஜன் என்றே சொல்ல வேண்டியதிருக்கிறது.
இவர் அ.இ.அ.தி.மு.கவின் தன்னிகரில்லாத் தலைவியாக இருந்த ஜெவின் இடத்தை எடுத்துக் கொள்வார் என நிலவரம் .

எப்படி இப்படி?

நமக்கு நினைவு தெரிந்து: காமராசருக்கு வைரவன் என்ற உதவியாளர் ஒருவர் இவரே அவருக்கு சாப்பாடு செய்யும் சமையல்காரராகவும்..அதன் பின் ஒரு நண்பர் சொல்கிறார் அரியபுத்திரன் என்றொருவரும், எம்.சி. பச்சையப்பன் என்றொரு சிறுவனாக இருந்தாராம அப்போது இப்போது அவருக்கு வயது 74 அவர் அலுவலக ஆபீஸ் பாய் ஆக இருந்தாராம் அதல்லாமல் ஒரு அலுவலக நிர்வாகியாக குடுமி வைத்த ஒரு பிராமணர் அவர் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அப்போது ஐ.சி.எஸ்....ஆக இருந்தாராம். இன்று காலை பேசிக் கொண்டிருந்தோம் இது பற்றி...சரி இவர்களை எல்லாம் யாருக்காவது தெரியுமா?

அடுத்து அறிஞர் அண்ணாவின் உதவியாளராக யாரும் குறிப்பிட்டு சொல்லும்படி இருந்ததாகத் தெரியவில்லை. எல்லாம் அவரது கழகத்தின் தம்பிகளே கூட செய்திருக்கலாம்...

கலைஞர் கருணாநிதிக்கு சண்முக நாதன் என்னும் தனி உதவியாளர் பின்னாலிருந்து அவ்வப்போது உதவி வந்ததை நாம் கண்கூடாக பார்த்திருக்கிறோம் ஒளிவு மறைவின்றி பொது நிகழ்வுகளில் எல்லாம் கூட‌

இப்படி எல்லாம் இருந்திருக்கிறார்கள்.ஆனால் சசிகலா நடராஜனை அறிமுகச் செய்து வைத்த சந்திரலேகா ஐ.ஏ.எஸ். எங்கே ? அவரைத்தான் எம்.ஜி.ஆர் ஜெவுக்கு ஆரம்பத்தில் (கொ.ப.செவுக்கு) எல்லா பயிற்சியும் கொடுக்கச் சொல்லி இருந்தாராம்

 அப்போது அவர் ஒரு மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவராகவும் இருந்தார் என்பது செய்தி. சரி அப்போது ஆங்கில படங்களை புதுப் பிரிண்ட்டாக கிடைக்க எங்கிருந்து கிடைக்கிறது எனக் கேட்க சந்திரலேகாவின் கீழ் பணி புரிந்த மக்கள் தொடர்பாளர் நடராஜன் வழியாக அவரது மனைவி நடத்தும் கடையிலிருந்து கிடைக்கிறது என அவர் சொல்ல சசிகலாவுக்கும் ஜெவுக்கும் நட்பு ஆரம்பிக்கிறது...அது அவர் கடந்த 28 ஆண்டுகளாக ஒன்றிப் போகுமளவு...சந்திரலேகாவுக்கு நேர்ந்த கதி   எல்லாரும் மறந்து வைப்போம்.

அதன் பின் டி.என் . சேஷன், மணி சங்கர அய்யர், இந்து என்.ராம் இப்படி பல கதைகள் உண்டு மறக்கப் பட வேண்டியது. அதில் சிலர் இந்த துக்க நிகழ்வில் பங்கு கொண்டார்கள்.
Image result for jayalalitha burial box picture


காலமும் இயற்கையும் சரித்திரம் சொல்பவை. சரித்திரம் மாற்றி மடை மாற்றம் செய்பவை.

எவ்வளவு செய்திகளை தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு முன் உருவாக்கி இருப்பார்கள், எவ்வளவு எதிரிடைச் செய்திகளை சென்னை, கடலூர் வெள்ள சோகச் செய்திகளுக்கு எதிராக உருவாக்கி இருப்பார்கள்,மக்களை திசை திருப்பி, மக்களை மறக்கச் செய்ய நிறைய ஊடகங்கள் விலை பேசப்பட்டு அரசின் ஊதுகுழலாக்கப்பட்டன, நிறைய அரசியல் தலைவர்கள், சுயநலத்துடன் விலைக்கு இரையாக்கப்பட்டனர்.,

 வெற்றி என்பதே இலக்கு அதை அடைய எதை வேண்டுமனாலும் செய்யலாம் என்பது அரசியல் மொழியாக விதி விலக்காக எதுவும் இல்லை என்ற விதிகள் பின் பற்றப்பட்டன. ஆனால் கடந்த 75 நாட்களாக செய்தியை முடக்கம் செய்து செய்தியே வெளி வராமல் செய்ததும் ஒரு சாதனைதான்.அவரைப் பார்க்காமலே எல்லா குதிரைகளும் கனைத்தன...ஒரு திரை போட்டு மறைத்திருந்தார்கள் என்பதும் செய்திதான்.

 75 நாளில் ஒரு முறை கூட அவரின் உருவம் அதாவது ஒரு மாநிலத்தின் முதல்வரின் உருவம் அவரை உருவாக்கி வாக்களித்து முதல்வராக்கிய மக்களுக்கு காண்பிக்கப் படவே இல்லை. இதற்கு மத்திய மாநில அரசுகளும், அப்பல்லோ மருத்துவ மனையும் பொறுப்பேற்று அனைவரையும் இந்த உலகையும் வல்லமையுடன் ஏமாற்றி உள்ளன.

உண்மையாகச் சொன்னால் மக்களுக்கும் இந்த ஜனநாயக ஆட்சி எனச் சொல்லப்படும் இந்த ஆட்சி முறைகளுக்கும் ஒரு தொடர்புமே இல்லை. ஒரு சிறு குழு அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்கிறது. காவல்துறை மந்திரி பிரதானிகள் எல்லாமே அவர்கள் சொல்லியபடி கேட்டிருக்கிறார்கள். அனைவருமே குற்றவாளிகள்தான் உண்மையை மறைத்த குற்றவாளிகள்தான். வழி வழியே செய்த பழக்கம் அப்படியே...மேலும் மத்திய அரசும் ஒரு அதிகார மாறுதல் நிகழ தம்மால் ஆன காய்களை நகர்த்த முனைந்திருக்கிறது மோடியின் தலைமையில் எனவே இந்த சிலரே தமிழகத்தின் ஆட்சி முறையை மாற்றி அமைத்து இருக்கிறார்கள் இதில் மக்களுக்கு எந்தப் பங்கும் இல்லை. வாக்களித்தது விரயமாக. அதனால்தான் வாக்குகள் விலைக்கு விற்கப்படுகின்றனவோ என்ற கேள்விகளும் எழாமல் இல்லை.

ஒரு வேளை தாம் அதிகம் காலம் வாழமாட்டோம் என்ற அறிதலில் இரண்டாம் முறை தொடர்ந்து அரசுக் கட்டில் முதல்வராக பதவி ஏற வேண்டும் என்ற எண்ணத்தில், சாதனை நோக்கில், எல்லாம் செய்யப்பட்டு உயிர் பிரியும்போது முதல்வராக இருக்க வேண்டும் என்ற கனவு மெய்ப்பட எல்லாம் செய்யப் பட்டிருக்கலாமோ? அதற்காகவா எல்லா இடத்திலும் அம்மா அம்மா என பொறிக்கப் பட வேண்டும், எல்லா புயல் நிவாரணப் பொருட்களின் மேலும் உருவப் படம் பொறிக்க வேண்டும் என்றும் முயன்றிருப்பார்கள்? எலலவற்றிலுமே ஸ்டிக்கர் ஒட்ட முயன்றிருப்பார்கள்?

Image result for jayalalitha burial box picture

அப்படி எல்லாம் செய்தவர்கள் அம்மா என பேரை நிலை நாட்ட வேண்டும் என்று எண்ணியவர்கள் அவரது உடலை வைத்த  சந்தனப்பேழையில் புரட்சித் தலைவி செல்வி ஜெ.ஜெயலலிதா என்றுதானே பொறித்து வைக்கப் பட்டுள்ளது. அதில் தமிழக முதல்வர் என்று போட்டுக் கொள்ளக் கூடவில்லையே... விதி எழுதிய சரித்திரம் தமிழகத்தில் நிரந்தரம் என்பது ஏதும் கிடையாது என மறுபடியும் இயற்கை தமது விதியை எழுதி முடித்து விட்டது. இதை எல்லாம் சொல்லாமல் நாம் காலத்தை நகர்த்தவே முடியாது...

இவர்கள் செய்த தந்திரம் எல்லாம் பார்த்தால், எங்கே   clowning  செய்து இன்னொருவரை ஜெ நலம் பெற்றார் எனக் கொண்டு வந்து விடுவார்களோ என்ற சந்தேகம் வந்தது, மேலும் சசிகலா நடராஜனை ஒப்பனை செய்து அவரை காணாமல் செய்து விட்டு அவருக்கு பதிலாக இவர்தான் உங்கள் முதல்வர் ஜெ என்றெல்லாம் சொல்லி விடுவார்களோ என்ற எண்ணமும் வந்து விட்டது.

பேஸ்மேக்கர் கருவியின் வேலை, எம்பால்மிங்   embalming  முறையில்    4 புள்ளிகள் முதல்வரின் கன்னத்தில் உள்ள 4 புள்ளிகள்,இவை அவரது உடல் பதனிடப்படல் முறை அந்த உடலில் பயன்படுத்தப் பட்டிருப்பதாக செய்திகள் வந்து விட்டன. மேலும் இந்த முறை மூலம் இறந்த பின் உடலை    6  மாதம் முதல்   2   ஆண்டு வரை கூட‌ காத்து வைக்கலாம் என்கிற செய்திகள் இருக்கின்றன.

ஆக எல்லாத் தேவைகளும் முடித்துக் கொண்டு  உடலை நறுமணமூட்டி பாதுகாத்து முதல்வர் இறந்து விட்டார் என‌எம்.எல்.ஏக்களை எல்லாம் கூட்டி அதன் பின் அறிவித்து விட்டார்கள்...அறிவித்த ஊடகத்தை எல்லாம் ஒரு பக்கம் மிரட்டி மறுபடியும் நள்ளிரவில் அறிவித்து கதையை முடித்து விட்டார்கள். இது வரை 77 பேர் அதற்காக இறந்துள்ளனராம். அவர் தம் குடும்பத்துக்கு எல்லாம் 3 இலட்சம் நிதி உதவி உண்டாம். ஜெவின் காலியான தொகுதியில் சசி நிற்பாராம்.

இப்படியே காலம் தமிழகத்தின் காலம் போய்க் கொண்டே இருக்கிறது...

Image result for jayalalitha burial box picture



ஒரு உதவியாளராக இருந்த ஜெவின் சசிகலா நடராஜன் இனி தமிழ் நாட்டின் அரசியல் முதுகெலும்பாகி விட்டார்கள் மோடி தலை தடவி ஆறுதல் தர ..அடுத்த அம்மா அவர்தான் எல்லா தமிழக மக்களும் சோகத்தில் தலை சாய்க்க ஒரு மடி வேண்டுமல்லவா அது தான் தாய் மடி, அந்த தாய் மடி இனி இவருடையதுதான்.. மந்திரி முதன் மந்திரி எல்லாமே இந்த அம்மாவிடம் தான் உத்தரவு கேட்க ஒடுங்கி நிற்கிறார்களாம்...

Image result for jayalalitha burial box picture

 ஒன்று டாஸ்மாக் நெடி வேண்டும் இல்லையேல் ஒரு தாய் மடி வேண்டும் அவசியம் ... மேல் மருவத்தூர் அம்மா தமக்கு போட்டியாக வரும் அம்மாக்களை எல்லாம் மாயவலையில் வீழ்த்தி விடுகிறாரோ, ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப் பட வேண்டிய வேலைகள் நிறைய இனி நிறைய நிறைய‌ அம்மாக்களிடம் உண்டு.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.



2 comments: