Sunday, May 24, 2026

மியாஜகி: கவிஞர் தணிகை

 மியாஜகி: கவிஞர் தணிகை



மியாஜகி ஒரு மாம்பழ வகை. இது ஜப்பான் நாட்டில் இருந்து உலகெங்கும் பரவியுள்ள அரிய இரகம். இது சரியான ஒரு மாம்பழப் பருவ காலம்(சீசன்). அந்தந்தப் பருவத்தில் கிடைக்கும் கனிகளை ருசித்து விடும் மனிதர்கள் கொடுத்து வைத்தவர்கள். பலாப் பழம் சுவைக்க அறுத்து கிலோ கணக்கில் விற்கப்படுகிறது சுளைகளாக...நீண்ட நாள் கழித்து ரஸ்தாளி வாழைப் பழங்களைக் கண்டேன் பெரிய அளவு ஒன்றின் விலை ரூ.10 என்று அது இயற்கை விளைவா அல்லது உரத்தின் விளைவாய் கட்டி கட்டியாய் இருக்குமா என இனி தான் பார்க்க வேண்டும் 5 பழம் மட்டும் வாங்கி வைத்துள்ளேன் இன்னும் முழுதாக பழுக்க வில்லை... தேன் வாழை, பூ வாழை போன்ற பழங்களை குடல் புண் உபாதை உள்ளவர்  உண்ணும் போது வயிறு மேலும் வேதனை செய்யும் என்பதையும் நினைவில் கொள்க.


நிறைய மாம்பழ விளைச்சல், நிறைய விலையாகாமல் அல்லது தரமில்லாமல் கீழே கொட்டுப் பட்டு வரும் நிலை பார்க்கிறேன் நடைப்பயிற்சிக்கு செல்லும் வழித் தோட்டங்களில்.நல்லவேளை ஒரு முக்கியமான வியாபாரி கடந்த காலத்தில் கடந்த ஆண்டில் மாம்பழம் விற்று கெட்ட பேரை சம்பாதித்துக் கொண்ட எங்கள் நடைப்பயிற்சி தோழர் ஒருவர் இந்த வருடம் மாம்பழம் விற்காமல் தான் உண்டு தன் தொழில் வேலை உண்டு என நல்ல பேரை எடுத்திருக்கிறார். விலை கிலோ 28 எனச் சொல்லப்பட்டாலும் இங்கே எல்லாம் கிலோ தோட்டக்காரர்களே ரூ. 50க்கு என விற்பனை செய்கிறார்கள்.


இந்த மியாஜகி மாம்பழம் ஒரு கிலோ ரூபாய் இரண்டு இலட்சத்திற்கும் மேலாம். ஒரிஸ்ஸாவில் மல்க்கங்கிரி பகுதியில் (இந்திரா காந்தி பேசிய கடைசிக் கூட்டம் இந்த ஊரில் தாம் நடந்தது.) ஒரு ஆர்வமிக்க விவசாயி ஒரு சமூக சேவகர் வழங்கிய மரக்கன்றை பல வருடங்களாக அக்கறையுடன் சிரமப்பட்டு வளர்த்து இப்போது கனி கொடுக்க ஆரம்பிக்க அதன் மதிப்பு கருதி 24 மணியும் உறங்காமல் கூட பாதுகாத்து வருகிறாராம் திருட்டு போகாமல்.


ஆனால் பாருங்கள் ஒரு வேடிக்கை இந்தப் பழத்தை இவ்வளவு காசு கொடுத்து யார் வாங்குவார்கள்? இந்தியாவில் இங்கு எவரும் வாங்க வழி இல்லை என்பதால் சாதரணமான பழம் போல் போய் விடுமோ என்ற கவலை அவருக்கு... அப்படி என்னதான் அந்தப் பழத்தில் இருக்கிறது அவ்வளவு விலை கொடுக்குமளவு அதன் தரம் நீங்களும் தேடிப்பாருங்கள்  இணையத்திலாவது...



நாய் பெற்ற தெங்கம்பழம்

சூரிய  முட்டை என்ற ஒரு பேரும் உண்டு. EGG OF THE SUN

மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.

Tuesday, May 19, 2026

படித்ததில் பிடித்தது மிக அரிய கட்டுரை பிடித்து வைக்கிறேன்: கவிஞர் தணிகை

 நன்றி: பிபிசி தமிழ்

மின்சார வாகனங்களின் எதிர்காலத்தையே இந்திய விஞ்ஞானிகளின் சிறு கண்டுபிடிப்பு மாற்றுமா?



பட மூலாதாரம்,GETTY IMAGES

  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

இந்தியாவின் சாலைகள் எங்கும் மின்சார வாகனங்கள் அதிகரித்து வருகின்றன. அதேநேரத்தில், ஆன்லைன் வங்கிப் பரிமாற்றம், யுபிஐ பரிமாற்றம், வீடியோ ஸ்ட்ரீமிங், சமூக ஊடகங்கள், கிளவுட் ஸ்டோரேஜ் ஆகியவற்றை ஆதரிக்கத் தேவையான தரவு மையங்களும் வேகமாக விரிவடைந்து வருகின்றன.

இந்த இரண்டும் தனித்தனியாகப் பார்க்கையில் இருவேறு உலகங்களாகத் தெரிந்தாலும், இவை ஒரு முக்கியமான தொழில்நுட்பத்தை அடிப்படையில் சார்ந்துள்ளன. அதுதான், வலுவான, நம்பகமான மின்னணுவியல்.

சமீபத்திய ஆராய்ச்சியில், பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள், கேலியம் நைட்ரைட் அல்லது GaN என்றழைக்கப்படும் சக்திவாய்ந்த ஒரு பொருளின் பரவலான பயன்பாட்டிற்குத் தடையாக இருந்த ஒரு முக்கியமான சிக்கலுக்குத் தீர்வு கண்டுள்ளனர்.

அவர்களுடைய ஆராய்ச்சியின் விளைவாக, மின்சார வாகனங்களின் பாதுகாப்பு, ஆற்றல் திறன் ஆகியவை பல மடங்கு அதிகரிக்கும் என்றும், அவற்றை விரைவாக சார்ஜ் செய்ய முடியும் எனவும் இது குறித்து இந்திய அறிவியல் நிறுவனம் வெளியிட்இந்த ஆய்வுக்குத் தலைமை தாங்கிய, இந்திய அறிவியல் நிறுவனத்தின் மின்னணு அமைப்புகள் பொறியியல் துறையைச் சேர்ந்த மயங்க் ஸ்ரீவஸ்தவா பிபிசி தமிழிடம் பேசியபோது, "இப்போது பயன்பாட்டில் இருக்கும் சிலிக்கானை விட கேலியம் நைட்ரைட் அதிவேகம் மற்றும் அதிக திறனைக் கொண்டது. ஆனால், சில தடைகளின் காரணமாக அது நம்பகமானதாக இதுவரை இருக்கவில்லை. அதை இந்த ஆராய்ச்சியில் நாங்கள் வடிவமைத்துள்ள புதிய கட்டமைப்பு மாற்றுகிறது," என்று கூறினார்.

கேலியம் நைட்ரைட் என்றால் என்ன? அது ஏன் முக்கியம்?

இதைப் புரிந்துகொள்ள முதலில் டிரான்சிஸ்டர் எனப்படும் ஒரு சிறிய, ஆனால் சக்திவாய்ந்த சாதனத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும்.

டிரான்சிஸ்டர் என்பது ஒரு சிறிய மின்சார சுவிட்ச் போன்றது. அது இயக்கப்படும்போது, மின்சாரம் பாய்கிறது. அது அணைக்கப்படும்போது, மின்சார ஓட்டம் நிறுத்தப்படுகிறது. இத்தகைய சுவிட்சுகளை நவீன இயந்திரங்கள் ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் பயன்படுத்துகின்றன.

இந்த டிரான்சிஸ்டர்கள் பன்னெடுங்காலமாக, பெரும்பாலும் சிலிக்கான் எனப்படும் ஒரு பொருளைப் பயன்படுத்தியே தயாரிக்கப்படுகின்றன. சிலிக்கான் மின்னணு உலகுக்கு மிகச் சிறப்பாகச் சேவையாற்றிக் கொண்டிருக்கிறது. ஆனால் இயந்திரங்கள் அதிக சக்தி வாய்ந்தவையாக மாறி, ஆற்றல் தேவைகள் அதிகரிக்கும்போது, அதற்கு ஈடுகொடுக்கும் வகையிலான ஒரு மாற்றினை விஞ்ஞானிகள் தேடுவதும் தொடங்கியது.

அத்தகைய ஒரு மாற்றுப் பொருள்தான் கேலியம் நைட்ரைட். சுருக்கமாக GaN என்றழைக்கப்படுகிறது. சிலிக்கானுடன் ஒப்பிடும்போது, இதனால் ஒப்பீட்டளவில் அதிக ஆற்றலைக் கையாள முடியும், மின்சாரத்தை வேகமாக மாற்ற முடியும். வழக்கமாக இயந்திரங்களில் ஆற்றல் பயன்பாட்டைப் பொறுத்து, வெப்பமாகக் குறிப்பிடத்தக்க அளவிலான ஆற்றல் வீணாகும். இந்த கேலியம் நைட்ரைட், அப்படி வெப்பமாக வீணாகும் ஆற்றலின் அளவையும் குறைக்கிறது.

இந்த நன்மைகள் இருப்பதால், சிலிக்கானுக்கு பதிலாக கேலியம் நைட்ரைட் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட சாதனங்கள் அளவில் சிறியதாகவும், சில நேரங்களில் மூன்று மடங்கு சிறியதாகவும் இருக்கலாம் என்று இந்த ஆராய்ச்சி கூறுகிறது.

இதன் விளைவாக, மின்சார வாகனங்கள், சார்ஜர்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைப்புகள் மற்றும் தரவு மையங்களில் இவற்றின் பயன்பாடு பல சாதகமான பலன்களை வழங்கும் என்று இந்திய அறிவியல் நிறுவனத்தின் செய்திக் குறிப்பு கூறுகிறது.

இவ்வளவு நன்மைகள் இதன் மூலம் கிடைக்கும் என்றாலும், சிலிக்கானுக்கு பதிலாக அவற்றை முழுமையான மாற்றாக சந்தையில் பயன்படுத்த முடியாமல் இருப்பதற்குக் காரணம் உள்ளது. அதற்கான காரணம், 'கேட்' என்று அழைக்கப்படும் டிரான்சிஸ்டரின் மிகச் சிறிய ஆனால் முக்கியமான பாகத்தில் இருக்கிறது.

'கேட்'டில் என்ன பிரச்னை?

ஒவ்வொரு டிரான்சிஸ்டரின் உள்ளேயும், அந்தச் சாதனம் எப்போது இயக்கப்படும், அணைக்கப்படும் என்பதைக் கட்டுப்படுத்துவதற்கான கேட் என்ற பாகம் இருக்கிறது. அதை ஒரு தண்ணீர் குழாயுடன் ஒப்பிடலாம். குழாயின் பிடியைத் திருப்பும்போது தண்ணீர் பாய்கிறது, அதை பின்புறமாகத் திருப்பும்போது குழாய் மூடப்பட்டு தண்ணீர் வரத்து தடை செய்யப்படுகிறது. இதேபோன்ற வகையில்தான் மின்சார ஓட்டத்தை டிரான்சிஸ்டரில் உள்ள இந்த கேட் கட்டுப்படுத்துகிறது.

ஒரு டிரான்சிஸ்டர் இயக்கப்படுவதற்கு, கேட்டில் குறைந்தபட்ச மின்னழுத்தம் பயன்படுத்தப்பட வேண்டும். இந்தக் குறைந்தபட்ச மின்னழுத்தம் 'கேட் மின்னழுத்தம்' என்று அழைக்கப்படுகிறது. அதாவது ஒரு குழாயைத் திறப்பதற்கு நீங்கள் கொடுக்க வேண்டிய குறைந்தபட்ச அழுத்தமாக இதைக் கற்பனை செய்யலாம்.

தற்போதைய பல கேலியம் நைட்ரைட் சாதனங்களில், இந்த கேட் மின்னழுத்தம் என்பது ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது. அதாவது, சுமார் 1.5 முதல் 2 வால்ட் வரையிலான மின்னழுத்தம் இருந்தாலே, மின்சார ஓட்டத்தை அனுமதிக்கும் கேட் திறந்துவிடுகிறது. இது ஒரு சிக்கலை உருவாக்கியது. மின்சார வாகனங்கள், தரவு மையங்கள் போன்ற பெரிய மின்னணு அமைப்புகளில் உள்ள மின்னழுத்தத்தில் சிறிய தேவையற்ற தொந்தரவுகளை ஏற்படுத்துகிறது. கேட் மின்னழுத்தம் மிகக் குறைவாக இருந்தால், இவ்வாறு ஏற்படும் சிறிய தொந்தரவுகள்கூட தற்செயலாக சாதனத்தை இயக்கிவிடக்கூடும்.

இதில் இருக்கும் மற்றொரு சிக்கல் மின் கசிவுப் பிரச்னை. அதாவது, மின்னணு சாதனம் அணைக்கப்பட வேண்டியிருந்தாலும்கூட, சிறிதளவு மின்சாரம் பாய்ந்துகொண்டிருக்கும். இது ஒரு குழாய் மூடப்பட்ட பிறகும் தண்ணீர் சொட்டிக் கொண்டிருப்பதைப் போன்றது. காலப்போக்கில், இந்தத் தொடர்ச்சியான கசிவு டிரான்சிஸ்டரின் செயல்பாட்டை பாதிக்கக்கூடும்.

இந்தப் பிரச்னைகளின் விளைவாக, மிக அதிக நம்பகத்தன்மை கொண்ட அமைப்புகளில் கேலியம் நைட்ரைட்டை பயன்படுத்துவதில் நிபுணர்கள் எச்சரிக்கையாகவே இருந்தனர். மின்சார வாகனங்கள், தரவு மையங்கள் போன்றவை வெப்பம், அழுத்தம், மாறி வரும் நிலைமைகளுக்கு நடுவில் பல ஆண்டுகளுக்குப் பாதுகாப்பாக இயங்க வேண்டும். அவற்றில் கேலியம் நைட்ரைட் சாதனங்களில் நிகழும் இத்தகைய எந்தவொரு கணிக்க முடியாத நடத்தையாக இருந்தாலும் அது மிகவும் ஆபத்தானது.

தீர்வுக்கு அடித்தளம் அமைத்த நுண்ணிய கண்டுபிடிப்பு

ஆனால், இந்த ஆபத்துகளுக்குத் தீர்வு காணும் வகையில், இந்தச் சிக்கலுக்குப் பின்னாலுள்ள அடிப்படை அறிவியலைப் புரிந்துகொள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் முயன்றனர்.

டிரான்சிஸ்டருக்குள் இருக்கும் சிறிய கசிவுப் பாதைகள், அதன் இயக்கவியல் நடத்தைகளை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை அவர்கள் கவனமாக ஆராய்ந்தனர்.

இதன் மூலம் மின் கசிவுக்கும் டிரான்சிஸ்டர் எவ்வாறு இயக்கப்படுகிறது என்பதற்கும் இடையே ஒரு வலுவான தொடர்பு இருப்பதை ஆய்வுக் குழு கண்டுபிடித்ததாக பேராசிரியர் மயங்க் ஸ்ரீவஸ்தவா விளக்கினார். "அது சீக்கிரமாகவோ அல்லது தாமதமாகவோ இயக்கப்படுமா என்பதில் சிறிய கசிவுப் பாதைகள் தாக்கம் செலுத்தின. இது இதற்கு முன்பு காணப்படாத ஒரு புரிதல்."

சோதனை அளவீடுகளை விரிவான மாதிரிகள் மற்றும் நுண்ணிய பகுப்பாய்வுகளுக்கு உட்படுத்தியதன் மூலம், இந்தச் சிறிய கசிவுப் பாதைகளைக் கட்டுப்படுத்துவது கேட் மின்னழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும் என்பதை ஆய்வாளர்கள் நிரூபித்தனர். இந்த நுண்ணறிவு கேலியம் நைட்ரைட்டில் இருந்த பிரச்னைகளுக்கான தீர்வுக்கு அடித்தளம் அமைத்தது.

மின்சார வாகனங்களின் எதிர்காலத்தையே மாற்றக்கூடிய இந்திய விஞ்ஞானிகளின் சிறு கண்டுபிடிப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

விஞ்ஞானிகள் வடிவமைத்த புதிய கேட்

கேலியம் நைட்ரைட் சாதனங்கள் ஏன் நம்பத்தகுந்தவையாக இருப்பதில்லை என்பதற்கான மூல காரணத்தைக் கண்டறிந்த பிறகு, ஆய்வுக்குழு, அதை நிவர்த்தி செய்யும் வகையில் புதிய கேட் கட்டமைப்பை வடிவமைத்தது.

டிரான்சிஸ்டரில் உள்ள p-GaN உடன் அலுமினியம்-டைட்டானியம் ஆக்சைடை பயன்படுத்தி மேம்படுத்தப்பட்ட கேட் அடுக்குகளை உருவாக்கியுள்ளதாக இதுகுறித்து விளக்கிய பேராசிரியர் மயங்க் தெரிவித்தார். "இந்தப் புதிய அமைப்பு தேவையற்ற கசிவை கணிசமாகக் குறைக்கிறது" எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஆய்வாளர்களின் கூற்றுப்படி, இந்தப் புதிய வடிவமைப்பு இதற்கு முன் கேட்களில் நிகழ்ந்த மின் கசிவை 10,000 மடங்கு வரை குறைக்கும். அதேநேரத்தில், இது 4 வால்ட்டுகளுக்கு மேல் தொடக்கநிலை மின்னழுத்த அளவை அதிகரிக்கிறது. அதாவது முன்பு 1.5 வால்ட் மின்சாரத்திலேயே திறக்கப்பட்ட சுவிட்ச் இனி அவ்வாறு தற்செயலாகத் திறக்காது.

"இது முக்கியமானது, ஏனெனில், மோஸ்ஃபெட் (MOSFET) எனப்படும் பாரம்பரிய சிலிக்கான் சாதனங்கள் வழக்கமாக 3 முதல் 3.5 வால்ட்களில் இயக்கப்படும். அதோடு சுமார் 15 வால்ட் வரை கேட் மின்னழுத்தங்களை பொறுத்துக்கொள்ள முடியும். இந்த ஆய்வின் மூலம், கேலியம் நைட்ரைட் சுவிட்ச்களிலும் 1.5 வால்ட்டுகளில் இருந்து 4 வால்ட்டுகளாக அவற்றின் தாங்குதிறனை உயர்த்தி, நிலைத்தன்மையை மேம்படுத்துவதன் மூலம், புதிய GaN சாதனங்கள் நம்பகமான சிலிக்கான் கூறுகளைப் போலவே செயல்படுகின்றன என்பது தெரிய வந்துள்ளது. அதேபோல, கேட் முறிவு மின்னழுத்தமும் சுமார் 15.5 வால்ட்டுகளாக அதிகரித்துள்ளது, அதன் வலுவான தன்மையை மேம்படுத்துகிறது."

பேராசிரியர் ஸ்ரீவஸ்தவா இதுகுறித்துப் பேசியபோது, "குறைவான கசிவுடன், அதிகமான தாங்குதிறன் மின்னழுத்தத்தை அடைவது கேலியம் நைட்ரைட் சாதனங்களைப் பரவலாகப் பயன்படுத்துவதன் அடுத்த கட்டத்திற்கான முக்கிய செயல்படுத்தல்களில் ஒன்று" எனத் தெரிவித்தார்.

"எளிமையாகச் சொல்ல வேண்டுமெனில், கேலியம் நைட்ரைட் சாதனங்களை பொறியாளர்கள் எதிர்பார்க்கும் அமைப்புகளில் பயன்படுத்துவதற்கு மிகவும் கணிக்கக்கூடிய, நிலையான, வசதியான, நம்பகத்தன்மை வாய்ந்த சாதனமாக மாற்றியுள்ளது."

மின்சார வாகனங்களுக்கு இதனால் என்ன பயன்?

மின்சார வாகனங்கள் மின்னணுவியல் சாதனங்களைப் பெரிதும் சார்ந்துள்ளன. இந்த மின்னணு சாதனங்கள், ஆன்-போர்ட் சார்ஜர்கள், டிசி-டிசி மாற்றிகள், இன்வெர்ட்டர்கள், மோட்டார் டிரைவ்கள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகின்றன.

சார்ஜரில் இருந்து பேட்டரிக்கும் பேட்டரியில் இருந்து மோட்டாருக்கும் மின்சாரம் பாயும் விதத்தை இவை கட்டுப்படுத்துகின்றன.

சென்னையிலுள்ள வேலூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியின் மின்னணு பொறியியல் பள்ளியின் மின்சார வாகனங்கள் இன்குபேஷன் சோதனை மற்றும் ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த பேராசிரியர் முனைவர் ஃப்ளோரன்ஸ் ஞான பூவதி, "மின் கசிவைக் குறைப்பது, மின்னழுத்த தாங்குதிறனை அதிகரிப்பது போன்ற முன்னேற்றங்கள் மின்சார வாகன அமைப்புகளில் செயல்திறனை கணிசமாக மேம்படுத்தும்" என்று விளக்கினார்.

அதோடு, மின் கசிவு குறைக்கப்படும்போது, வெப்பமாக வீணடிக்கப்படும் ஆற்றலின் அளவும் குறைவதாகக் கூறுகிறார் அவர். "இதனால் சிறந்த வெப்ப மேலாண்மை மற்றும் அளவில் பெரிய குளிரூட்டும் கட்டமைப்புகளுக்கான தேவையும் மின்சார வாகனத்தில் குறைகிறது."

இதன்மூலம் பேட்டரியின் செயல்திறன் அதிகரிப்பதால், அதிகமான ஆற்றல் மோட்டாரை அடைய முடியும் என்பதோடு, சார்ஜிங் நேரமும் குறையும், பேட்டரி வேகமாக சார்ஜ் ஆவதற்கு இந்தக் கட்டமைப்பு உதவும் என்று ஃப்ளோரன்ஸ் ஞான பூவதி விளக்கினார்.

அதுமட்டுமின்றி, அவரது கூற்றுப்படி கேலியம் நைட்ரைட் பயன்படுத்துவதால் ஏற்படும் தற்செயல் டர்ன்-ஆன்களை இது தடுப்பதால், சாதனத்தின் மீதான பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மை மேம்படுகிறது.

பொதுவாகவே, கேலியம் நைட்ரைட் சாதனங்களைப் பயன்படுத்துவது மின்னணு சாதனங்களின் மொத்த அளவைக் குறைப்பதாக ஏற்கெனவே அறியப்படுகிறது. தற்போது, அவற்றில் இருந்த சிக்கல்களைத் தீர்க்க உதவும் இந்த மேம்படுத்தப்பட்ட கேட் வடிவமைப்பால், மின்சார வாகனங்களால் சிறிய வடிவமைப்புகளைச் செயல்படுத்த முடியும். ஒருவேளை பேட்டரிகள் அல்லது பிற கூறுகளின் அளவு குறைவதால் அதிகமான வெற்றிடத்தை அது விட்டுச் செல்லக்கூடும்.

இத்தகைய மேம்பாடுகள், நடைமுறையில், எதிர்கால மின்சார வாகனங்களில், நீண்ட தூர செயலாற்றல், வேகமான சார்ஜிங், சிறந்த செயல்திறன் ஆகியவற்றை வழங்கக்கூடும் என்கிறார் ஃப்ளோரன்ஸ்.

கரிம உமிழ்வை குறைக்க உதவுமா?

தரவு மையங்கள் அதிகளவிலான மின்சாரத்தைப் பயன்படுத்துகின்றன. இந்தக் கட்டமைப்புகளுக்குள் ஏற்படும் மின் இழப்புகள் மின்சார கட்டணங்களை அதிகரிப்பது மட்டுமின்றி, அதிக வெப்பத்தையும் உருவாக்குகின்றன. இதனால் அவற்றுக்குப் பெரிய அளவிலான குளிரூட்டும் அமைப்புகள் தேவைப்படுகின்றன.

தரவு மைய மின் விநியோகங்களில் மிகவும் நம்பகமான, திறன் மிக்க GaN சாதனங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டால், ஆற்றல் இழப்புகள் குறைக்கப்படலாம் என்கிறார் ஃப்ளோரன்ஸ் ஞான பூவதி.

ஆற்றல் வீணாவது குறைவது, குளிரூட்டும் தேவைகளைக் குறைக்கும். இது கரிம உமிழ்வு அளவைக் குறைக்கும் என்றும் விஞ்ஞானிகள் வாதிடுகின்றனர். ஆயிரக்கணக்கான தரவு மையங்களில் இந்தச் சிறிய செயல்திறன் மேம்பாட்டைச் செய்வது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்பது நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

இந்தப் புதிய தொழில்நுட்ப முன்னேற்றம், ஓர் அடிப்படை இயற்பியல் சிக்கலைத் தீர்த்து, அதை நடைமுறை பொறியியல் தீர்வாக மாற்றுவதன் மூலம் இந்திய அறிவியல் நிறுவனத்தின் ஆய்வுக்குழு கேலியம் நைட்ரைட் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் நிலவிவந்த தொழில்நுட்பத் தடையைச் சரி செய்துள்ளது.

இதோடு, "அரசின் ஆதரவு, தொழில் கூட்டாண்மைகள், உரிமம் ஆகியவற்றின் மூலம் வணிக ரீதியாக இதைப் பயன்படுத்துவதற்கான தொழில்நுட்பங்களை அளவிடும் நிலையில் ஆய்வாளர்கள் இருப்பதாக" இந்திய அறிவியல் நிறுவனத்தின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்தக் கண்டுபிடிப்பு வெற்றிகரமாக ஏற்றுக்கொள்ளப்பட்டால், அது மின்சார வாகனங்களில் ஒரு புதிய முன்னேற்றத்தை இந்தியா காண உதவும் எனவும் நிபுணர்கள் கருதுகின்றனர்.

மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை


Monday, May 18, 2026

பி எஸ்.என்.எல்(BSNL) தகவல் தொழில் நுட்பச் சுரண்டல்: கவிஞர் தணிகை

 பி எஸ்.என்.எல்(BSNL) தகவல் தொழில் நுட்பச் சுரண்டல்: கவிஞர் தணிகை



பி.எஸ்.என்.எல் உட்பட அனைத்து செல்பேசி சேவை வழங்கும் நிறுவனங்களுமே சுரண்டலின் வர்க்கங்கள். இலவசமாக சிம்களை வழங்கினார்கள். இன்று சொல்லாமலே அறிவிக்காமலே கோடிகளில் சுரண்டுகிறார்கள் நுகர்வோரின் அத்தியாவசியத் தேவைகளைக் காரணம் காட்டி 24 மணி நேரமுமே பகற்கொள்ளை அடித்து பணத்தைப் பிடுங்கி வருகிறார்கள்.


கேட்டால் டேட்டா என்பார் டாக் டைம் என்பார், கஸ்டமர் கேரில் அதை அழுத்தவும் இந்த எண்ணை அழுத்தவும் என ஒரே ஒப்பாரி. எளிதில் மேலதிகாரிகளிடம் புகாரைச் சொல்லவே முடியாத வாடிக்கையாளர் சேவையும் மையமும் தகிடுதத்தங்களும்.


முதலில் மாதமொன்றுக்கு 107ரூ கட்டி வந்தேன், அதை கூகுள் பே முலம் செலுத்த அவர்களுக்கு ரூ.1.90 இடைத் தரகு. ஆக 108.90ரூ. 28 நாள் அத்துடன் ஒரு வாரம் கருணைக் காலமாம் மறுபடியும் புதுப்பித்துக் கொள்ள...திடீரென எந்தவித முன்னறிவிப்புமின்றி 28 நாள் 20 நாளாக மாறியது. இப்போது 107க்கும் மாறாக 147 கட்டிக் கொள்ளுங்கள் என தகவல் செல்பேசி வழி... எனவே இனி என்னைத் தொடர்பு கொள்ள வேண்டி எவராவது விரும்பின் வாட்ஸ் அப் அழைப்பு ஒன்றே வழி .இவர்கள் சொல்லியபடி எல்லாம் ஆடிக் கொண்டிருக்க யாமொன்றும் அடிவருடி அல்ல.


ராஜ்யசபாவிலேயே ஒரு உறுப்பினர் உங்களுக்கு மட்டும் எப்படி வருடத்திற்கு 13 மாதம்? எனக் காறித் துப்பியும் இவர்களுக்குள் எவ்வித மாற்றமும் வரவில்லை. நெட் கால் எல்லாம் இலவசம் என்பார் நெட் இணைப்பு உள்ளார்க்கு...ஆனால் ஒரு அழைப்பு கூட செய்ய யோக்யதை இல்லை.


இதில் செல்பேசிக்கு டேட்டா இலவசம் என்பார் காசு கட்டவில்லை என்றால் அன்றே டேட்டாவும் கிடைக்காது, நெட்டும் கிடைக்காது, பேசவும் முடியாது என்ற நிலையை ஏற்படுத்தி மக்களை நிர்பந்தித்து வருகிறார்கள். இவர்கள் மக்களிடம் இருந்து அடிக்கும் கொள்ளைக்கு ஒரு அளவுகோலை நியமித்து ஆராய வேண்டும் என்று அரசுகளை அணுக:


அவற்றின் நிலை என்ன எனில், இலவச எரிவாயு , விறகு வேண்டாம் என்று எல்லாரும் வாங்கிக்கங்க, என்று பாடி விட்டு இன்று பெட்ரோல் ,எரிவாயு எல்லாமே விலை ஏற்றம்...எல்லா விலையுமே பெட்ரோல் பம்ப்பினால் விலை ஏற்றம்.இவை ஏழை மேலும் ஏழையாகி பணக்காரர் மேலும் பணக்காரராகும் சமூக அமைப்பின் நோய் அல்லவா?எல்லாமே உலகெலாம் கீழிருப்போரை இல்லாரை சுரண்டி மேல் எடுத்துச் சென்று கொண்டு அனுபவிக்கும் அமைப்புகளாகி பல்லாண்டுகள் ஆகின.மாற்ற வழி இல்லை. ஜென்மம் போதவில்லை. மக்களிடம் மாயை நிலவிட...


எல்லொரும் ஒரு வங்கிக் கணக்கு என்று சொல்லி விட்டு, வீட்டுக்கொரு மரம் என வீடில்லாரிடம் சொல்வது போல, தண்ணி வராமலேயே தண்ணி விட்டு செடி கொடி மரங்களை காப்பாத்துங்க எனச் சொல்வது போல காசில்லாதார் கணக்குகளிடம் கூட குறைந்த பட்சம் காசு இருக்க கெடுபிடி... வங்கிகள் கட்டுப் படுத்துவது போல...


ஏழைப் பெண்களிடம் இருக்கும் சிறுவாட்டுத் தங்கத்தை எல்லாம் 916 செய்க ஹால்மார்க் என்றெல்லாம் சொல்லி ஏழை பாளைகளிடமிருந்த தங்கம் அப்படியே இருந்தால் செல்லாது எனச் சொல்லி இன்று ஒரு வருடத்திற்கு தங்கம் வாங்க வேண்டாம் என தலைமை...விலையோ என்ன என சொல்ல அவசியமே இல்லை....


நுகர்வோர் நீதிமன்றம் செல்ல வேண்டும்...


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை

Friday, May 15, 2026

முட்டாள்கள்,நன்றியற்றவர்கள், தோல்வியுற்றவர்கள்... கவிஞர் தணிகை

 முட்டாள்கள்,நன்றியற்றவர்கள், தோல்வியுற்றவர்கள்... கவிஞர் தணிகை



 ... அவர்களுக்கு எதிரானவர்களை எல்லாம் முட்டாள்கள், நன்றியற்றவர்கள், தோல்வியுற்றவர்கள் தங்களை எதிப்பவர்கள் என்று மொழிந்திருக்கிறது. உலகின் அத்தனை நாடுகளும் மக்களுமே அந்த ஒரு நாட்டைத் தவிர இந்த போர்களுக்கு உதவ முற்படவில்லையே என்று....காழ்ப்புணர்ச்சி, வெறுப்பு, விரக்தியால் வரும் வந்த வார்த்தைகள் இவை.


இங்கு எல்லா விலையும் ஏற அந்த நபரே காரணம் என்றால் அதெல்லாம் உங்கள் நாட்டுக் கொள்கை, பொருளாதாரப் பிரச்சனை தாம் என்று சாட் ஜிபிடி சொல்கிறது


உலகம் எல்லாமே இவர்களையன்றி முட்டாள்களாக, தோல்வியுற்றவர்களாக, நன்றியற்றவர்களாக இருக்கிறார்கள் என்று ... இப்படி எல்லாம் பேசி வருவதைக் கண்டிக்காமல் இருப்பதில் இருந்து யாருமே இது பற்றி எல்லாம் சட்டை செய்வதில்லை என்று அறிய முடிகிறது.


தீயவர்கள் பக்கமே வீசிக் கொண்டிருக்கும் காற்று என்று திசை மாறி வீசுமோ?


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை

Monday, May 11, 2026

எல்லா இடங்களிலும் பூனைக்காலி: கவிஞர் தணிகை

எல்லா  இடங்களிலும் பூனைக்காலி: கவிஞர் தணிகை



எல்லா வேலிகளிலும் பூனைக்காலி கொடிகளில் காய் காய்த்து பழம் வெளியில் புசுபுசுவென ஸ்பான்ச் போன்ற தாவர மூடியுடன் கிடைக்கிறது.பக்கத்தில் சென்று பார்த்தால் வெறும் பழத்தின் தோல் அப்படியே இருக்க, உள் இருக்கும் பழத்தின் கதுப்பு, விதைகள் எவையும் இருப்பதில்லை. எல்லாம் குருவிகளுக்கு உணவு.இந்தக் குருவிகளே இதன் பழத்தை உண்டு விதைகளை ஆங்காங்கே விதைக்கின்றன தமது எச்சங்கள் மூலம். என்னே இயற்கையின் விளைவு. எனவே எல்லா இடங்களிலும் பூனைக்காலி அல்லது பூனைப் புடுக்கு காய்களும் பழங்களும்.

விதைகளையும் மென்று தின்னலாம்  அல்லது அப்படியே  விழுங்கலாம் என்கிறார்கள் என்னுடன் நடைப் பயிற்சி உலா வரும் மைதிலி டீச்சரும்,மைதிலி டீச்சரின் கணவர் தம்பி கார்த்தி ஆகியோர்,மணியும்(மணி வண்ணனும்). சிறு வயதில் நிறைய பழங்களை பறித்துச் சென்று டம்பளரில் போட்டுக் கொண்டு கலக்கி  குடிப்போம் அவ்வளவு பழங்கள் எங்கள் பாட்டி வீட்டு காடுகளில் இருக்கும் என்பது மணி...

ரோஸ் மில்க், அல்லது  பாதாம் கீர் போல அப்படி ஒரு ப்ளேவர்,நல்ல வாசனை. ஆனால் பால்போல் வரும் அதன் கதுப்பை உறிஞ்சி விட்டு தொல்லியையும், விதைகளையும் துப்பி விடுகிறேன். காடுகளில் சுற்றி குடிநீருக்கு அலையும் போது இது ஒரு அரிய தாகம் தீர்க்கும் மருந்தாகும்.

மேலும் ருசுப்பிக்கப் படாத செய்திகளாக: 1. புற்று நோயை மேற்கொண்டு பெரிதாக்காமல் கட்டுப் படுத்துவதாகவும்,2. இன விருத்திக்கான குழந்தைப் பேற்றுக்கான ஆண் தன்மையை அதிகப்படுத்துவதாகவும் செவி வழிச் செய்திகள். அது எப்படி இருந்தாலும் உட்கொள்வதற்கு இயற்கை அளித்த அரிய பழம் இது. இலந்தை ஒரு வகை என்றால் இது ஒரு வகை, அது முட்செடி மரங்களில், இது கட்கொடி வேலிகளில்...

பயப்படத் தேவையில்லை பக்க விளைவு ஏதும் இல்லை சுவைத்துப் பார்க்கலாம்.
இப்படி நாம் சுவைக்காத அரிய வகை தாவரங்கள் இலை,காய் கனிகள் எத்தனை எத்தனையோ... வாய்ப்பு வருவார்க்கு அனுபவம் தாம்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

பி.கு: நான் சொல்லி இருப்பது சிறு பூனைக்காலியாம் இதில் வேறு பூனைக்காலி என்ற இரகமும் உண்டாம். நான் சொல்லி இருப்பது நோகாமல் நோம்பி கும்பிடுவது. சிறு பூனைக்காலி பற்றியே.எவ்வித முயற்சியும் இன்றி பார்த்தவுடன் பறித்துச் சாப்பிடலாம்.


Tuesday, May 5, 2026

தமிழ் நாட்டில் நிகழ்ந்தது ஒரு அரிய ஒரு விரல் புரட்சி: கவிஞர் தணிகை

 தமிழ் நாட்டில் நிகழ்ந்தது ஒரு அரிய ஒரு விரல் புரட்சி: கவிஞர் தணிகை



எல்லாம் நன்மைக்கே. அறிஞர் அண்ணாவில் ஆரம்பித்து கலைஞர் கருணாநிதி, எம்.ஜி.ஆர்.,ஜெயலலிதா இப்படி எல்லாத் தலைமைகளுமே காங்கிரஸ் அரசை தமிழகத்தில் வீழ்த்தியதில் இருந்து திரைத் துறை சார்ந்து அதன் முக்கியத்துவம் உணர்ந்து செயல்பட்டார்கள். ஆட்சி அமைத்து அரசாண்டார்கள், ஆட்சி செய்தார்கள்.


அதன் இறுதியாக இன்று திரை நட்சத்திரம் விஜய் அவர்களுக்கு கிடைத்த வெற்றி முழுதும் அரசியலை திரை உலகும், திரை இரசிகர்களும் முழுவதுமாக துடைத்து எடுத்துச் சென்று விட்டார்கள் என்றே தோன்றுகிறது.மிகவும் குறுகிய காலத்தில் நிகழ்ந்த ஒரு மாற்றம் இது.


அந்த அளவு மக்கள் வெகுண்டு நொந்து போய் இருந்திருக்கிறார்கள் என்பதையே இந்நிகழ்வு அறிவுறுத்துகிறது.

மாற்றி மாற்றி இரண்டு திராவிட இயக்கங்களே அதற்கு மாற்றாக ஏதும் இல்லை என்ற ஒரு பல்லாண்டு காலமாக நிலவி வந்த பிம்பங்களை இந்த அடி அடித்து தூளாக்கி விட்டது. வாக்கு சதவீதம் அதிகமானதும் பதிவானதும் முதல் முறை வாக்களிப்பாரும், இளைஞர்களும் அதற்கு பெரும்பாலும் வித்திட்டார்கள் என்றே தோன்றுகிறது.இரண்டு அணிகளுக்கு மாற்றாக மூன்றாம் அணி ஒன்று உருவாகிவிட்டது. மக்கள் உருவாக்கி விட்டார்கள் இனி தமிழக அரசியலில் ஆடுகளம் புதிதாகவே இருக்கும்.


எவருமே இவ்வளவு பெரும் வெற்றி தமிழக வெற்றிக் கழகத்திற்கு இருக்கும் என எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். எந்தக் கட்சியுமே ஆட்சியில் பங்கு என்று சொன்னதற்கும் பிறகும்,கை நீட்டி எல்லாக் கட்சிகளையும் அழைத்த பிறகும் (எவருமே) வந்து சேரவில்லை. இப்போது தனியாக இவ்வளவு பெரிய வெற்றி இமாலய வெற்றி கிடைக்கும் கிடைத்திருப்பதை அவர்களே கூட எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை. மக்கள் சக்தி அப்படி இருக்கிறது.ஒரு வகையில் பார்க்கும்போது வாக்குக்கு பணம் என்ற வரையறையில் இருந்து மீண்டு இந்த வெற்றி வந்துள்ளதைப் பாராட்டலாம்


மத்திய ஆளும் கட்சி ஒரு தொகுதியில் அதுவும் சிறிய வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. ஆனால் அவர்கள் நினைத்த மாறுதலை நிகழ்த்தி விட்டதாகவே படுகிறது. தனிபெரும் பெரும்பான்மை எந்தக் கட்சிக்கும் இல்லை என்பது தமிழக வரலாற்றில் ஏற்கெனவே ஒரு முறை கலைஞர் கருணாநிதியால் அனுபவிக்கப் பட்டு ஆட்சியைக் கொண்டு சென்றது எவரும் மறந்து விடக் கூடாது. அதே போன்ற வாய்ப்புதாம் நிகழ்ந்திருக்கிறது இப்போதும் ஆனால் அவர்களுக்கு இருந்தது தோழமை ஒத்துழைப்பு. இவர்களுக்கு தோழமை கட்சிகள் என்று எதுவும் இல்லை என்பதையும் நாம் மறந்து விட முடியாது. ஆனால் வெற்றி பெற்றாலே தாமாக உதிரிகள் ஏதோ ஒரு எதிர்பார்ப்புடன் வந்து சேர்ந்து கொள்ளும் என்பதையும் மறுத்து விட முடியாது.


 தேர்தல் நிகழ்ந்த 5 மாநில சட்டசபைத் தேர்தலில் மற்ற மாநிலங்களில் எல்லாம் கேரளம் தவிர மத்தியில் ஆளும் கட்சியே ஆக்ரமித்திருக்க தமிழகத்தில் இந்த முடிவு நேர்ந்திருக்கிறது இதை அனைவரும் ஏற்றுக் கொள்கிறார்கள். ஆம் ஆத்மியின் 7 ராஜ்ய சபா உறுப்பினர்களின் கட்சி மாறல் கொஞ்சம் கொஞ்சமாக அனைத்து மாநிலங்களையும் ஆக்ரமித்தல் எல்லாம் ஒரு அபாய சங்கொலியாகிறது ஒரே நாடு ஒரே தேர்தல் என்று கூட இலக்கு நோக்கி அந்தக் கட்சி நெருங்கி வருவதை அனைவரும் அறிய வேண்டும்.

காலம் பேசாது பதில் சொல்லும் என்ற ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்றோர் நழுவ விட்ட வாய்ப்பை இவர் பெற்றுக் கொள்ள மக்கள் வாக்களித்து விட்டனர்.இதை ஒரு விஜய் அலையாகவே பெரும்பாலானவர்கள் கருதுகின்றனர்.


இந்த தேர்தலில் மட்டுமல்ல எந்த தேர்தலிலுமே வாக்கு சீட்டு முறை எந்திர முறை, அரசு அலுவலர்களின் உள் குத்து போன்றவை விவாதிக்கப்பட வேண்டிய அம்சங்களே.

குழந்தைகளை ஊக்குவித்தல் என்ற சட்டத்துக்குப் புறம்பான தேர்தல் பரப்புரை இருந்த போதும் சரியாக மாநிலம் முழுதும் பரப்புரை செல்லாத போதும் இந்த மாற்றம் மக்களால் நிகழ்த்தப் பட்டிருக்கிறது கவனிக்கத் தக்கது. வாக்குறுதிகளை நிறைவேற்றல் பற்றிய சிந்தனை இனி மக்களிடம் தொடரலாம்...

ஜனநாயகம் என்ற பிரமையிலிருந்து மக்கள் என்று விடுபடுகிறார்களோ அன்றிலிருந்து ஒரு வேளை நல் ஆட்சியும் சம வாய்ப்புகளும் கிடைக்க வாய்ப்பிருக்கலாம்.



மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.




Wednesday, April 29, 2026

74 வயது முதியவர் ஓடும் பேருந்தில் கொலை: கவிஞர் தணிகை

 நன்றி: பிபிசி தமிழ்

APRIL 28

 

74 வயது முதியவர் ஓடும் பேருந்தில் அடித்துக் கொலை: கவிஞர் தணிகை



காரணம் வாக்குவாதம் என்பது சரி  அல்ல, மது, போதை, ஆட்சி, அதிகாரம்,வீரியமில்லா மக்கள், மக்கள் உயிர்கள் மேல் அக்கறையின்மை. இந்த சம்பவத்தைப் படித்துப் பார்ப்போர்க்கு எனது கோணம் சரி என்று விளங்கும். பாரதியின் நெட்டை மரங்களென நின்றார் என்ற வரிகள் ஏனோ வந்து மொய்க்கிறது.


நதிகள் நீரை இணைத்திருக்க வேண்டும்  ,இந்தியா ஒரு நரகப் படுகுழி நாடு என்பதற்கு வெகுண்டு எழுந்திருக்க வேண்டும்,இந்திய மக்களை அகதி என்ற பேரில் கை கால் இரும்பு சங்கலி கொண்டு கட்டி கொண்டு வந்து சேர்த்ததற்கு மன்னிப்பு கேட்கச் செய்திருக்க வேண்டும், அப்படி செய்ய விடாமல் தடுத்திருக்க வேண்டும். ...உயிரின் எடை எவ்வளவு?  


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை

  • பதவி,பிபிசி தமிழ்
    • எச்சரிக்கை: இக்கட்டுரையில் உள்ள சில விவரிப்புகள் சங்கடம் தரலாம்.
      • எனக்குப் பக்கவாத பாதிப்பால் கை, கால் செயலிழந்துவிட்டது. அவர்தான் எனக்குப் பணிவிடை செய்து வந்தார். இனி என்னை யார் பார்த்துக் கொள்வார்கள். அந்தப் பையன் எனக்கு எமனாக வருவான் எனக் கனவிலும் நினைக்கவில்லை" எனக் கூறி அழுகிறார் கலைச்செல்வி.

        தாம்பரத்தில் அரசுப் பேருந்து ஒன்றில் கலைச்செல்வியின் கணவர் சந்திரசேகரன் மீது சக பயணி ஒருவர் நடத்திய கொடூர தாக்குதலில் அவர் உயிரிழந்துவிட்டார்.

        முதியவரைக் கொன்றதாகக் கைதான அமர்நாத் என்ற 25 வயது இளைஞர் மீது 'ஆபாசமாக பேசுதல், கொலை' உள்ளிட்ட பிரிவுகளில் குரோம்பேட்டை காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

        ஞாயிறு காலை சுமார் 11 மணியளவில் நடந்த 'திடீர்' தாக்குதல் சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அன்று காலை கூடுவாஞ்சேரியில் இருந்து வடபழனி நோக்கிச் செல்வதற்காக தாம்பரம் வந்த அரசு பேருந்தில் ஏறிய இளைஞர் ஒருவர், "இந்தப் பேருந்து கோயம்பேடு செல்லுமா?" எனக் கேட்டுள்ளார். அதற்கு நடத்துநர், "வடபழனி வரை மட்டுமே செல்லும்" எனக் கூறியுள்ளார்.

        தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிறுத்தம் அருகே பேருந்து வரவே, அப்போது படப்பையை சேர்ந்த சந்திரசேகரன் என்ற 74 வயது முதியவர் ஏறியுள்ளார். அவருக்குப் பின் சீட்டில் தாம்பரத்தில் ஏறிய இளைஞர் அமர்ந்திருந்தார்.

        "பஸ்ஸில் முதியவர் ஏறி அமர்ந்ததும், 'இந்த பஸ் எங்கே போகுது?' என அந்த நபர் கேட்டுள்ளார். அவர் பதில் அளித்தும் தொடர்ந்து கேள்விகளை கேட்டுள்ளார்" என்கிறார், குரோம்பேட்டை காவல்நிலைய ஆய்வாளர் முகமது பரக்கத்துல்லா.

        ஒருகட்டத்தில் நடத்துநரிடம் கேட்குமாறு முதியவர் பதில் அளித்தபோது 'உன்னால் பதில் சொல்ல முடியாதா?' எனக் கேட்டு அந்த நபர் வாக்குவாதம் செய்ததாகவும் காவல் ஆய்வாளர் கூறுகிறார்.

        "ஒருகட்டத்தில் முதியவரை அந்த நபர் அடித்துள்ளார். அப்போது நடத்துநரும் அருகில்தான் இருந்துள்ளார். இருவரையும் பிரித்துவிட்டு முதியவரை மட்டும் தனியாக அமர வைத்தார்"எனவும் அவர் கூறினார்.

        இந்தத் தாக்குதலில் முதியவரின் தலை, முகம், மார்பு உள்ளிட்ட இடங்களில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது.

        "சக பயணிகளில் இருந்த நர்ஸ் ஒருவர் பரிசோதித்துவிட்டு, முதியவருக்கு பல்ஸ் இறங்கிக் கொண்டிருப்பதால் உடனே மருத்துவமனைக்குச் செல்லுமாறு கூறியுள்ளார்" என்கிறார் சந்திரசேகரனின் மகள் மகேஸ்வரி.

      • "அந்த இளைஞன் பேருந்தில் ஏறும்போது கடும் போதையில் இருந்துள்ளான். என் அப்பாவை அவதூறான வார்த்தைகளில் திட்டியுள்ளான். இதனைக் கவனித்த நடத்துநர், 'என்னுடைய சீட்டில் வந்து அமர்ந்து கொள்ளுங்கள்' என அப்பாவிடம் கூறியுள்ளார்" என்கிறார் மகேஸ்வரி.

        இதையடுத்து, நடத்துநரின் இருக்கையில் அமர்வதற்கு தனது அப்பா சென்றதாகக் கூறிய அவர், "அப்போதும் அந்த நபர், 'எனக்குப் பதில் சொல்லாமல் பயந்து ஏன் ஓட வேண்டும். இவ்வளவு வயதுக்கு மேல் நீ வாழ்ந்து என்ன செய்யப் போகிறாய்?' எனக் கூறி கடுமையாக தாக்கியுள்ளான்" எனக் கூறினார்.

        "சுமார் அரை மணிநேரத்துக்கு இந்த வாக்குவாதம் நடந்துள்ளது. என் அப்பா அந்த நபரிடம் சித்ரவதையை அனுபவித்துள்ளார். அவர் மயங்கி விழுந்ததைப் பார்த்ததும் அந்த நபர் பேருந்தில் இருந்து ஓடியுள்ளார். அனைவரும் சத்தம் போடவே, எதிர்முனையில் இருந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர்தான் அவனைப் பிடித்துள்ளார்" என்கிறார் மகேஸ்வரி.தாக்குதலுக்கு ஆளான முதியவரை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சக பயணிகள் கூட்டிச் சென்றுள்ளனர்.

        "அங்கு பரிசோதித்தபோது முதியவர் இறந்துபோனது தெரியவந்தது. இருவருக்கும் இடையில் வாக்குவாதம்தான் பிரதானமாக இருந்துள்ளது" என்கிறார், காவல் ஆய்வாளர் முகமது பரகத்துல்லா.

        இந்த வழக்கில் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயதான அமர்நாத் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இவர் சென்னை பாரிமுனையில் தங்கி கட்டட வேலை செய்து வந்துள்ளார்.

        "பேருந்தில் இருந்த சாட்சிகளிடம் விசாரித்துள்ளோம். அவர்களும் வாக்குவாதம் நடந்த தகவலைக் கூறியுள்ளனர். பேருந்தின் ஓட்டுநர், நடத்துநர் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகிறோம்" என காவல் ஆய்வாளர் முகமது பரகத்துல்லா கூறுகிறார்.

        தாக்குதலில் இறந்துபோன முதியவருக்கு மனைவியும் நான்கு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். அனைவரும் திருமணம் முடிந்து பல்வேறு பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர். சென்னையை பூர்வீகமாகக் கொண்ட சந்திரசேகரன், எலக்ட்ரீஷியனாக வேலை பார்த்து வந்துள்ளார்.இவரது மனைவி கலைச்செல்விக்கு கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பு பக்கவாத பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அவருக்கு ஒரு கையும் காலும் செயலிழந்துவிட்டது. கணவரும் மனைவியும் மட்டுமே வசித்து வந்ததால் கலைச்செல்விக்கு சந்திரசேகரன் பணிவிடைகளை செய்து வந்துள்ளார்.

        "எனக்கு சோறு ஊட்டுவது, தலைவாரிவிடுவது என எல்லா வேலைகளையும் அவர் தான் செய்து வந்தார். அவருக்கும் வயதாகிவிட்டதால் எங்காவது வேலை இருந்தால் கூப்பிடுவார்கள். அவரும் சென்று வருவார். அப்படித்தான் அன்று வடபழனிக்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்றார்" என்கிறார் கலைச்செல்வி.

        பிபிசி தமிழிடம் தொடர்ந்து பேசிய அவர், "கிளம்பும்போது எனக்கு உதவிக்கு ஒருவரை துணைக்கு அமர்த்திவிட்டு, 'சிறிய வேலை தான். இரண்டு மணிநேரத்தில் வந்துவிடுவேன்' எனக் கூறிச் சென்றார். அப்போதும் எனக்குக் காபி கொடுத்துவிட்டு காலுக்கு ஒத்தடம் கொடுத்துவிட்டுக் கிளம்பிப் போனார்" எனக் கூறுகிறார்.

        "அவர் சென்ற ஒரு மணிநேரத்தில் போன்கால் வந்தது" எனக் கூறும் கலைச்செல்வி, "அவரைவிட்டால் எனக்கு வேறு ஆதரவு இல்லை. தாம்பரத்தில் அந்தப் பையன் எனக்கு எமனா வருவான் என நினைத்துப் பார்க்கவில்லை" எனக் கூறி கலங்கினார்.

        தாம்பரத்தில் விபத்து ஒன்றில் சந்திரசேகரன் சிக்கிவிட்டதாகவே குடும்பத்தினருக்கு முதலில் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சந்திரசேகரனின் உறவினர்கள் சென்றபோது அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

        "அவருக்கு எந்தக் கெட்ட பழக்கங்களும் இல்லை. நான் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டதால் என்னைவிட்டு எங்கேயும் நகர மாட்டார்" எனக் கூறியபடியே கதறியழுதார் கலைச்செல்வி.

        "வெளியில் போகும்போது ஆட்டோ, காரில் தான் அழைத்து செல்வார். அவ்வளவு ஒற்றுமையாக இருந்தோம். அவர் இல்லாமல் சோறு சாப்பிடக் கூட முடியவில்லை. மே 2-ஆம் தேதியன்று எங்களுக்கு ஐம்பதாவது கல்யாண நாள். அதற்குள் இப்படி நடந்துவிட்டது " எனக் கூறி அவர் வேதனைப்பட்டார்.

        'தடுப்பதற்குக் கூட யாரும் வரவில்லை'

        இருபது வயதில் இருந்தே தனது கணவர் கடுமையாக உழைத்து வருவதாகக் கூறிய கலைச்செல்வி, "அவரது உடலில் உள்ள காயங்களைப் பார்த்தால் கொடுமையாக இருக்கிறது. ஒரு பெரியவரை இப்படியெல்லாம் ஒருவரால் அடிக்க முடியுமா?" எனவும் கேள்வி எழுப்பினார்.

        "பேருந்தில் அவ்வளவு பேர் இருந்துள்ளனர். ஒரு பெரியவரை போதையில் ஒரு நபர் தாக்கும்போது அதைத் தடுப்பதற்குக்கூட யாரும் முயற்சிக்கவில்லை. அந்த நபர் தப்பி ஓடும்போது, 'தங்களுக்குப் பாதிப்பு வரும்' எனக் கருதி நடத்துநர் பிடிப்பதற்காக ஓடியுள்ளார்" என்கிறார், சந்திரசேகரனின் மகள் மகேஸ்வரி.

        "பேருந்தில் இருந்த யாராவது அந்த நபரைத் தடுத்து எனது அப்பாவைக் காப்பாற்ற முயற்சி செய்திருந்தால் அவர் இன்று எங்களுடன் உயிருடன் இருந்திருப்பார்" எனவும் அவர் வேதனைப்பட்டார்.


Friday, April 24, 2026

நீலக் கிரகத்தின் பெரும் பீடை அமெரிக்கா: கவிஞர் தணிகை

 நீலக் கிரகத்தின் பெரும் பீடை அமெரிக்கா: கவிஞர் தணிகை



டொனால்ட் ட்ரம்ப் இந்தியாவை இந்தக் கிரகத்தின் நரகப் படுகுழி என தேவையின்றி விமர்சித்ததற்கான‌  பதில் பதிவு இது. பைத்தியங்கள் எப்படி வேண்டுமானாலும் பிதற்றும் விட்டு விடலாம் என விடாமல் இதை ஒரு இந்தியனான நான் நின்று பதில் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.


டொனால்ட் ட்ரம்ப், டொனால்ட் ட்ரம்ப் பெட்ரோல் பம்ப் ஆண்டு வரும் அமெரிக்கா வியட்நாமில் அடி வாங்கி வாலை சுருட்டி வந்ததை உலகே அறியும்,கியூபா நாட்டின் தலைவரான பிடலை எத்தனை முறை கொல்ல நினைத்து படு தோல்வி அடைந்தது வரலாறு. இப்போது ஈரான், கொலம்பியா, கனடா, வெனிசுலா, கியூபா என உலக நாடுகள் எல்லாவற்றுக்கும் அச்சுறுத்தல் மேலும் உலகின் எல்லா மனிதர்களுக்கும் தீங்கு செய்யல் எந்தக் கணக்கு? 


இவர்கள் நாடான பெரும்பீடை அமெரிக்கா ஒரு நாடு மட்டும் தான் உலகில் இருக்க வேண்டுமா என்ன? வேறு எந்த நாடும் உலகில் தலை எடுத்து விடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் எப்போது பார்த்தாலும் இந்த நாடு இதன் தலைவர்கள் பெரிய அண்ணன்களாக வாலாட்டுவது சட்டாம்பிள்ளைத் தனம் பண்ண நினைப்பது அற்பத்திலும் அற்பத்தனம்.


 உலக நன்மைக்கு கம்யூனிசம் என்ற தத்துவத்தை நடைமுறையில் தந்த சோவியத் ரஷியாவை ஒழித்து துண்டாக்கி உக்ரேன் ரசியா போரில் கொண்டு வந்து நிறுத்த இவர்கள் எல்லாம் பின்னால் உள்ளதே காரணம். உக்ரேன் ரசியா சண்டை என்கிறான் இங்கே சிமென்ட் விலை ஏறுது என்கிறார். ஈரான் சண்டை என்கிறார் இங்கே எரிவாயு உருளை சாதாரண மனிதர்க்கு 60 ரூ ஏற்றி உள்ளார் இப்படி உலகில் அத்தனை மனிதர்க்கும் இந்த மனிதன் எதிரிடையாக இயங்கும் துரோகி. சூடானில் அதன் இராணுவத்துக்கும், துணை இராணுவத்துக்கும் சண்டையில் சுமார் 2 கோடி பேர் உணவின்றி மாட்டுத் தீவனங்களையும், இலை தழைகளையும் உண்டு வாழ்கிறார்களாமே அங்கே சென்று உங்கள் நீதி செய்யலாமே? இந்தியாவைப் பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது? இந்த நரகப் படுகுழியில் நீங்கள் எவ்வளவு வீயாபாரம் செய்து கொழுத்து வருகிறீர்கள்?


சண்டையிட்டாலும் நாம் சகோதரரன்றோ, ஆயிரம் உண்டிங்கு சாதி எனில் அன்னியர் வந்து புகல் என்ன நீதி என்பான் பாரதி, பாரத சமுதாயம் பாரத சமுதாயம் வாழ்கவே என்பான்...அப்படி இருக்கும் நாட்டின் ஒரு மண்ணின் மைந்தனாக மார் தட்ட வேண்டிய கட்டம் இது. வாயை விட்டு வாங்கிக் கட்டிக் கொண்டான் ஒரு நாட்டின் தலைவன். இந்த அந்த நாட்டிலேயே குற்றம் சாட்டப் பட்டு நிரூபணமான குற்றவாளி நீலப்பட நடிகைக்கு இழப்பீடு வழங்கிய உத்தமன்,அந்த நாட்டு மக்களாலேயே 51% வேண்டாம் எனச் சொல்லப்படும் துரோகி,...


சுந்தர் பிச்சை முதல் அங்கிருக்கும் இந்தியர்கள் உண்மையிலேயே இந்த மண்ணில் தாம் பிறந்தீர் என்றால் அந்த நாட்டை விட்டு இப்போதே மீண்டும் நம் நாட்டிற்கே குடி பெயர வேண்டும். அங்குள்ள இந்தியர் 40 சதம் இங்கே திரும்ப நினைக்கின்றனர் என்ற செய்தி இருக்கிறது அது 100% ஆக வேண்டும்.


இங்குள்ள அந்த நாட்டின் தூது அமைப்புகள் திருப்பி அனுப்பப் பட்டு, அங்கிருக்கும் நமது இந்தியாவின் தூதரகங்கள் மூடப் பட்டு திரும்ப அழைக்கப் பட வேண்டும்... நரகப் படு குழி நாடு அவர்களுக்கு இனி எந்த வகையிலும் பயன்படக் கூடாது. நாமே நரகப் படுகுழி நாடான போது இந்த சொர்க்க‌ புரிக்காரர்களுக்கு இங்கு வேலை என்ன? இவர்களுடன் தொடர்பு என்ன?


வாஜ்பாய் பிரதமராக இருந்த போது கலாமை வைத்து அணு சோதனை செய்தபோது இந்த நரகப் படுகுழி நாடு இந்தியா மீது பொருளாதாரத் தடைகளை விதித்து என்ன சாதித்து விட்டார்கள்? இந்திராவை நிக்சன் கேலி செய்ய நினைத்து வாங்கிக் கட்டிக் கொண்டதெல்லாம் சரித்திரம். இவர்கள் ஒரு நாடுதான் அணு சக்தி வைத்திருக்க வேண்டுமா என்ன? மற்ற நாடுகள் எல்லாம் இவர்களுக்கு மறுபடியும் கப்பம் கட்ட வேண்டுமா என்ன? இந்த தகுதி இல்லா மனிதரை வேறு எந்த நாடுமே ஆதரிக்கவில்லை என்பதில் இருந்தே இவர்கள் நாடிருக்கும் கேவலம் தெரியவில்லையா?இந்த இலட்சணத்தில் நோபெல் பரிசு வேண்டுமாம்?


இந்த ஒரு விசியத்தில் பாரதப் பிரதமரும் அனைத்து மக்களும் ஒரே கருத்தில் நிற்க வேண்டும், நிற்போம் அந்தப் பெரும் பீடை நாட்டுக்கு உலக நாடெல்லாம் சேர்ந்து ஒரு நல் வழி காட்ட வேண்டும், உலக மாந்தர் எல்லாம் துக்கமின்றி வாழ தூக்கத்துடன் நிம்மதியாக வாழ வழி வகை செய்தாக வேண்டும்...


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை




Thursday, April 23, 2026

நக்கீரன் பேசுகிறேன்:என் நாடு வீடு மனைவி மகன் மக்கள்: கவிஞர் தணிகை

 நக்கீரன் பேசுகிறேன்

என் நாடு வீடு மனைவி மகன் மக்கள்: கவிஞர் தணிகை


 ஈன்றாள் பசி காண்பான் ஆயினுஞ் செய்யற்க

 சான்றோர் பழிக்கும் வினை.



இந்த குறளுக்கேற்ப வாழ்க்கை 65ஆம் வயதில்...

இவனுக்கு மட்டுமென்ன ஸ்பெசல்? என்றார்கள், என்பார்க்கு:


இது வரை வாக்களிக்க மறுத்தும் கூட இருந்திருக்கிறேன் என்றாலும்

வாக்களிக்க காசு வாங்கியதே இல்லை...

இலஞ்சம் வாங்கியதும் கொடுத்ததும் இல்லை அதற்கெதிரான போராட்டத்தில் சுய வாழ்வு பெரிதும் பாதித்த போதும்...

மதுவுக்கு எதிராக போராடி இருக்கிறேன் பல்வேறு வழிகளில்

42 ஆண்டு கால தியானப் பயிற்சி தொடர‌

மாலை சுமார் 8 கி.மீ நடைப் பயிற்சியில் திரும்புகையில் தெரு விளக்கு ஏற்றுவதை தொடர்ந்து செய்து வருகிறேன்.

மழைக்காக தினமும் எனது தியான நேரத்தில் பிரார்த்திக்க சில நிமிடம் அல்லது சில நொடிகள் நினைவால் துதிக்கிறேன்.

எனது சீடர்கள், எனது உண்மையான சகோதர உறவுகள் , அவர் தம் குடும்பங்கள், நல்லவர்கள் நீடித்த காலம்  இந்த மண்ணில் நல்லபடியாக வாழ வேண்டும் எனப் பிரார்த்திக்கிறேன்


சில கோயில்கள் உருவாகவும், 11 புத்தகங்கள் சமூக மேம்பாட்டிற்காகவும் வெளியிட்டு சுயநலத்தை தாண்டி ஆயிரக்கணக்கான இலட்சக்கணக்கான மக்களுக்கு உதவியிருக்கிறேன்...


கலாம் போன்ற மகான்கள் எனக்கு தனிப்பட்ட முறையில் மக்கள் குடியரசுத் தலைவராக இருந்தபோதே கடிதம் எழுத காரணமாக இருந்திருக்கிறேன்

இப்போதும் எப்போதும் நாட்டில் எனது வரிசைப்படி நின்று உரிமைகளைப் பெறப் போராடுகிறேன்.

கீழ்த் தட்டு மக்களின் பிரச்சனை தீர நாட்டின் உச்ச நீதி மன்றத் தலைமை நீதிபதி அவையில்  எனது 24 ஆம் அகவையின் போதே அரசு அலுவலர்களின் நடப்பு எப்படி இருக்கிறது மக்களுடனான‌ அணுகுமுறை என சில நிமிடங்களில் விளக்கிச் சொல்லும் வாய்ப்பை பெற்றிருக்கிறேன்...இப்படி நிறைய ஸ்பெஷல்ல்கள் என்னிடம் உண்டு எனவே நான் ஸ்பெஷல் தான்...


தாய்க்கும், வீட்டுக்கும் என்னால் முடிந்ததை செய்து முடித்திருக்கிறேன் அதே போல இந்த மண்ணின் இளம் சிறார்களுக்கும்,ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கும் என்னால் முடிந்ததை செய்த பின் தாம் சொந்த வாழ்வில் அடி எடுத்து வைத்தேன்.


இனி மகனுக்கும் மனைவிக்கும் மட்டுமே செய்ய வேண்டிய நிலை ஏதாவது செய்ய முடிந்தால்...


 சட்டம், நீதி, நிர்வாகம் என்கிறார்கள் ஊடகம் என்கிறார்கள் யாவும் அவற்றின் பண்பு கெட இலக்கணம் இல்லாமல்...


ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்து செய்யப் பட்ட பெரும் தியாகத்துக்கு துளி கூட எவருமே மதிப்பளிப்பதாய் இல்லை. பெண்கள் அதிக எண்ணிக்கை இருக்கையில் இப்போதுதான் 33% சதவீதம் என்கிறார்கள் 50% இருப்பது நியாயம் எனும்போது.


மீச்சிறு மானிடமோ மாபெரும் மகாத்மாவாகவோ இல்லாமல் ஒரு தனி மனிதம் எவ்வளவு இந்த உலக முன்னேற்றத்துக்கு பாடுபட முடியுமோ அவ்வளவு பாடு பட்டிருக்கிறேன்.


சுதந்திரத்துக்கு வயது 78, குடியரசுக்கு 75 என்னையும் எனது சகோதரத் தோழர்கள் சில இயக்க வழிகளில் கொண்டு சென்றனர்: அவை: 1. நவ இந்திய நிர்மாணிகள் இயக்கம்,2, காந்திய வழியில் ஊருக்குப் பத்துப்  பேர் இயக்கம், 3.தமிழக இலட்சியக் குடும்பங்கள்.4. அன்பு வழி அறப்பணி மன்றம்.அவை பெரிய அளவுகோல்களைத் தொட முடியவில்லை.


சசிபெருமாள், சின்ன பையன், பொறியாளர் மணி போன்றவர்கள் அதில் துடித்த இதயங்கள்.


 சில நாடுகளின் தலைமைகளைப் பார்க்கும் போது அவர்களின் சர்வாதிகாரத்தனத்தை பார்க்கும்போது அவர்கள் பைத்தியக்காரத் தனத்தை பார்க்கும்போது இந்த வாழ்க்கைத் தேவையா? முடிந்து விட்டது போலுள்ளதே என்ற விரக்தி நிலைக்குத் தள்ளப் படுகிறேன்.


உக்ரேன் ரசியா, ஈரான்,யு.எஸ். உலக கொந்தளிப்பு, சூடான் பசிக் கொடுமை இதெல்லாம் மனிதகுலத்தின் பெரும் தோல்வியைக் குறிப்பிட, உள் நாட்டிலோ அப்பட்டமான பொய்களை மக்களை நம்பவைக்க தலைமைகள் முயல்வது பார்க்க அசிங்கமாக இருக்கிறது. 


அரசுகளிடம் பணம் இல்லை, ஆனால் கட்சிகளிடம் பணம் அதன் தலைவர்களிடம் பணம் இலட்சக்கணக்கான கோடிகள் இருப்பதை தேர்தல்கள் உணர்த்துகின்றன, வெளிப்படைத்தன்மையுடனேயே தொலைக்காட்சிகளும், பண்பலைகளிலும் தேர்தல் மக்கள் பணம் பற்றி பேசுகின்றன, விமர்சிக்கின்றன.ஆனாலும் எந்த மாறுதலும் இல்லை.


எனவே தேர்தல் என்பது கேலிக்கூத்தாகவும் வெறும் மாய விளையாட்டுகளாகவும் இருப்பதற்கு பக்குவப்படாத ஆட்சிகள், கட்சிகள், தலைவர்கள், மக்கள் ஆட்சி நிர்வாக அமைப்புகள் யாவும் காரணமாக இருப்பதைக் காணமுடிகிறது


தேர்தல் வழிமுறைகள் இன்னும் மாபெரும் உலகின் முதல் மக்கள் தொகை உள்ள நாடான இந்தியாவில் விகிதாச்சார முறை, சரி இல்லா வேட்பாளரை திரும்ப அழைக்கும் முறை போன்றவைக்கு வழி செய்யப் படவில்லை.

ஜனநாயகத்தின் அடுத்த கட்ட நகர்வுக்கு சென்றாக வேண்டிய மிக முக்கிய நிர்பந்தத்தில் இந்திய ஜனநாயகம் சென்று கொண்டிருக்கிறது.


அமெரிக்க ஜனநாயகத்தில் கூட 51% தலைமை மேல் எதிர்ப்பிருந்தும் துணைத் தலைமையும் செனட் என்னும் மந்திரிசபையும் ஏற்காமல் தலைவரை இறக்க முடியாத நிலை உள்ளதை மாற்ற வேண்டிய நிலை உள்ளது.


தேர்தல் நேரத்தில் பெரும் பணம் பிடிபட்டிருக்கிறது. எல்லாம் டிஜிட்டல் மயம் என்று சொல்லப் பட, பணக்கற்றைகள் எப்படி இப்படி வெள்ளமாகப் பாய்ச்ச வாய்ப்புகள் என்ற கேள்விகள் நிறைய உள்ளன...தடி எடுத்தவன் தண்டல்காரன், கோல் எடுத்தவன் கொண்டைக்காரன் என்ற ஆட்சி முறை முற்றிலும் ஜனநாயகத்துக்கு எதிராக உள்ளது.


மக்கள் தொகை கணக்கெடுப்பு , தேர்தல் தொகுதி மறு வரையறை, மகளிர் இட ஒதுக்கீடு என 3 மசோதாக்களையும் ஒரு சேர இந்தியப் பாராளுமன்ற ஆளும் கட்சி நிறைவேற்ற மூன்றில் இரண்டு பங்கு எண்ணிக்கை அல்லது கூட்டு மன்றத்தில் பாதிக்கும் மேல் எண்ணிக்கை இல்லை என்ற போதும் நாலைந்து மாநிலங்களில் தேர்தல் நடந்து வரும் நிலையில் நிறைவேற்ற எத்தனித்து மண்ணைக் கவ்வி உள்ளதை இந்த தோல்வியை இந்திய ஜனநாயகம் வெற்றி எனக் கொண்டாடலாம், நிலை அப்படி இருக்க அதை எதிர்க்கட்சிகளுக்கு எதிராக திசை திருப்பும் உத்தி அல்லது தேர்தலில் முளை விட வேண்டிய யுக்தி சக்தி என பிரச்சாரங்கள் போய்க் கொண்டிருக்கின்றன ஒரு சார்பாகவே...


ஊடகங்கள் நிறைய பக்கங்களை ஊதிப் பருக்க வைத்து உடைத்த படி இருக்கின்றன காற்றில்லா பலூன்களாக.

இந்தியத் தலைமைக்கென எப்போதுமே உலக அரங்கில் ஒரு உயரமான அங்கீகாரம்(அந்தஸ்து) இருந்திருக்கிறது, இருக்கிறது அது சரியாக செயல்பட்டிருந்தால் உள்ளரங்கில் நதிகள் இணைப்பு செய்திருக்கலாம் வெளி உலகில் உக்ரேன் ரசியா, ஈரான், யு.எஸ் போன்ற உலகை உலுக்கும் கொதிநிலைகளை அமைதிப்படுத்தி இருக்கலாம். சூடான் போன்ற நாட்டு மக்களின் பசி போக்கவும் முடியும் பேச்சு வார்த்தை வழி காந்திய நெறி உலகை வெல்ல எப்போதும் கையில் உள்ளது. ஆனால் அதற்கு  நாடெல்லாம் நாமே இருக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லா வீடுகளிலும் நானே, எல்லா தொகுதிகளிலும் நானே எல்லா உயிர்களிலும் நானே இருக்கின்றேன் என்று கீதையில் சொல்லப் பட்டது போல இருக்கத் தோன்றுவது போலுள்ளது.


முடிந்த வாழ்க்கை என்றே தோன்றுகிறது... எனவே இறந்தது பேசியதாக இதை நீங்கள் கொள்ளலாம். இந்த வலைப்பூவின் எழுத்துப் பதிவுகள் உலகெலாம் பரவுகிறது எனவே இந்த மனித இதயத்தின் அந்தரங்க சங்கீதத்தை வடிவம் தந்து பாட முடியாத போதும் முனகல்களாகவாவது கேட்க முடியும் என்பதற்காகவே இந்தப் பதிவு, எதையோ எதை எதையோ சொல்ல வேண்டும் என பல தூக்கமிலா இரவுகள், இன்றும் கூட விடியல் மூன்று மணி முதலே வார்த்தைத் தூறல்கள் ஆரம்பித்து விட்டன என்றாலும் ஏதோ இப்போது இதையாவது உங்களுடன் பகிர்ந்த நிலை இருக்கிறதே என குறைவான நிறைவைப் பெறுகிறேன். இடது கை சுட்டு விரல் மை அடையாளத்துடன்.


இந்த 4 வேட்பாளர்களில் இவர் சரியானவர், உயரமாக இருக்கிறார் என்றால் உடனே நீங்கள் அந்தக் கட்சியா என்கிறார்கள், பணம் கொடுக்க வில்லை என சண்டை செய்து வருகிறார்கள் கட்சிக்காரர்களுடன் இந்தியக் குடிமக்கள், இந்திய வாழ் பெருங்குடி மக்கள். தமிழகம் உலகுக்கே வழி செய்த தமிழ் நாடாகவும் வள்ளுவனை உலகுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ் நாடாகவும் என வாய் கிழிய பேசிய முழக்கமெல்லாம் அவமானமாகத் தெரிகிறது.

பாதகம் செய்பவரைக் கண்டால் மோதி மிதித்து விடு பாப்பா

அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா என்றான் பாரதி

அதற்கு ஸ்ட்ரெந்த்(strength) வேணுமே ...


எனது வாழ்வெல்லாம் முடிந்து போனதாகவே யோசிக்கும் போது நினைக்கத் தோன்றுகிறது. இந்த கூத்துகளில் நான் எங்கே இருக்கிறேன் எனக் கேட்கும்போது இருப்பதாகவேத் தெரியவில்லை.


எங்காவது உங்கள் உள்ளங்களிலாவது ஒரு சிறு ஓரத்தில் இருப்பேன் கண்டு கொள்ளுங்கள்

உண்மையுடன்,பெருங்குணங்களுடன் நேர்மையுடன்  அன்பு நெஞ்சங்களே...


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை

THERE IS NO FREEDOM WITH OUT RESTRICTIONS.

THERE IS NO INDEPENDENCE WITH OUT DISCIPLINE

THERE IS NO ACHIEVEMENTS WITH OUT SACRIFICE

            BY DR.S.RADHA KRISHNAN

P.S:

சாலையில் நடப்பார் வலது பக்கத்தில் வாகனம் இடது புறத்தில்

செல்ல வேண்டுமென்பது இந்திய சாலை விதி...எவர் கேட்கிறார்

எவர் செய்கிறார் கடைப்பிடிக்கிறார், நானும் இன்னும் சில பேரும் மட்டுமே...

கடைசியில் நான் ஒருவன் மட்டுமே கடைபிடிப்பதாக, இருப்பதாகப் படுகிறது...

எனவே விதி சட்டம் இவற்றை மீறாமல் கடைபிடிப்பார்க்கு கடுக்கா கொடுப்பது அரசு


ஆங்கிலத்தில் லா மேக்கர்ஸ் ஆர் லா பிரேக்கர்ஸ் LAW MAKERS ARE LAW BREAKERS என்ற பழமொழிக்கேற்ப‌

அரசியலாளர்களே மக்களை குற்றவாளிகள் ஆக்கி வைக்கிறார்கள்.

எனவே இலஞ்சம் கொடுத்த அனைவர்க்கும் எமது பகுதியில் பட்டா கொடுக்கப் பட்டு விட‌

இலஞ்சம் கொடுக்காத எனக்கு இது வரை கொடுக்கப் படவில்லை பல்லாண்டுகளாக...

கேட்டால் எல்லாம் சட்டப்படி, ரூல்ஸ்படிதான் நடக்குமாம்.....

இலஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் எந்த விதியில் சட்டத்தில் வருகிறது\என்பதைத்தான்

சட்டம் அறிந்தார் சொல்ல வேண்டும்...


வாக்குகளுக்கு பணம் கொடுப்பதும் வாங்குவதும் அதே நடைமுறையில் தாம் வருகிறதோ?








Wednesday, April 8, 2026

எல்லோரும் ஓர் நிறை எல்லோரும் ஓர் விலை எல்லோரும் பூலோக மன்னர்: கவிஞர் தணிகை

 


எல்லோரும் ஓர் நிறை எல்லோரும் ஓர் விலை எல்லோரும் பூலோக மன்னர்: கவிஞர் தணிகை


இரு பெரும் சம்பவங்கள் மனக்குளத்தை பாதிப்புக்குள்ளாக்கி விட்டன.பூமி திரும்பி வர முடியாத ஊறு விளைவுகளுடன் பயணம் செய்த படி இருக்கிறது. அதன் பயணத்தில் இன்னும் பாதி கால‌ அளவே பாக்கி இருக்கிறது.


உடல் சொல்லொணா அதிசய அமைப்புகளுடன் இயங்கி வருகிறது அதன் இயக்கம் (உயிர்) இருக்கும் வரை.


52% இந்த  வாக்களிப்பு மூலம் வந்த தலைவன் வேண்டாம் என்று சொன்ன பிறகும் அமெரிக்காவின் துணைத்தலைமையும், மந்திரிசபையும் முடிவுக்கு வந்தாலன்றி அந்த இரத்தக் காட்டேறி காட்டுமிராண்டித் தனமான தலைமையை மாற்ற வழி இல்லையாம்.அது அந்த நாட்டின் சட்ட திட்டம். அது பூமிப் பந்தையே ஒரு புரட்டு புரட்டிக் கொண்டிருக்கிறது.


அரசுப் பணி, ஆட்சி அதிகாரம் என்பதில் எல்லாம் மக்களுக்கு என்று சொல்லப் பட்டாலும் அதை நடைமுறைக்கு கொண்டு வருவதில் ஏகப்பட்ட இடியாப்பச் சிக்கல்கள் இருக்கிறது.


சாத்தான் குளம் தீர்ப்பை அனைவரும் பாராட்டி வருகையில் அதில் ஒளிந்துள்ள அந்த குற்றவாளிகள் எனச் சொல்லப்பட்ட இரைகளைப் பார்க்காமலேயே சிறைக்கு கொண்டு சென்று ரிமான்ட் செய்க எனக் கருத்தளித்த அரசு மருத்துவரின் பொறுப்பின்மையையும், சரியாக பணி புரியாமையையும், பார்க்காமலேயே கொரானா எனப் பயமுறுத்தி பார்க்க விடாமலேயே அந்த நீதிபதியையும் குழப்பி இரைகளை சிறைக்கு கொண்டு சென்ற போது அதன் மேல் கவனம் செலுத்தி தமது பணியை ஒழுங்காக பணி செய்யாத மாஜிஸ்ட்ரேட் மற்றும் அதிலிருந்து தொடங்கி இந்த சம்பவம் உடல் நலக் குறைவால் ஏற்பட்டது காய்ச்சலால் ஏற்பட்டது என மாநிலம் ஆண்ட முதல் மந்திரி வரை அப்படிப் பட்ட அரசுகளைத் தோற்றுவிக்கும் மக்கள் இன்ன பிற தேர்தல் ஆணையம், நீதி, நிர்வாகம் சார்ந்த அமைப்புகள் வரை யாவுமே கறைபட்டதாகவே இருப்பதை இது போன்ற நிகழ்வுகள் வலியுறுத்துகின்றன. அனைவரையும் தண்டிப்பதென்றால் யார் தாம் இவர்களை எல்லாம் தண்டிப்பது...சிந்தித்தபடி கேட்டுப் பாருங்கள்...


அதில் ஜான் மைக்கேல் டி குன்ஹா போன்று பாரதி தாசன், மற்றும் முத்துக் குமரன் நீதிபதிகள் இந்த தற்போதைய 5 ஆண்டு 9 மாத வழக்கில் பெருமை பெற்றுள்ளார்கள். ரேவதி போன்ற காவலர்கள் உண்மையைச் சொல்லத் தான் முடிந்ததே அல்லாமல் சம்பவத்தை தடுக்க முடியவில்லை அப்பேர்ப்பட்ட அமைப்பு.அவர்கள் கொண்டு சென்ற சிறை மருத்துவர் தம் பணியை நிறைவு செய்து மருத்துவ மனையில் அனுமதிக்கச் சொல்லி அறிவுறுத்தி அவரது செம்மையை உறுதி செய்தும் இருக்கிறார்.


இதற்கு மேலும் இவர்களுக்கு உயர் நீதிமன்ற , உச்ச நீதிமன்ற மேல் முறையீடுகள் தேவையா ? தாமதிக்கப் பட்ட நீதி, மறுக்கப் பட்ட, மறைக்கப் பட்ட நீதி என ஒருபுறம் சொல்லி நீதியின் நேர்மையை பாராட்டிக் கொண்டு மறுபுறம் அதற்கு அடி வெட்டு வெட்டிக் கொண்டிருக்கும் அமைப்புகள் அதில் வேறு அம்பேத்கார் நீதியைக் குறை சொல்லும்...


எனவே நமது கருத்து யாதெனில் ஒருவர் எப்படிப்பட்ட பதவி, அதிகார அமைப்புகளில் இருந்த போதும் அவரவர் செயல்கள் தாம் அவர்களுக்கு மதிப்பு கூட்டுவதாக இருக்க வேண்டுமேயன்றி பதவிகள் அல்ல.எனவே மக்கள் என்ற வட்டத்தில் அனைவரும் அடக்கம். எல்லோரும் ஓர் நிறை எல்லோரும் ஓர் விலை ஆம் எல்லோரும் பூலோக மன்னர். பட்டத்துக்கும் பதவிக்கும் எப்படி வேண்டுமானாலும் வந்து விடுகிறார்கள். பாவிகள்.


அந்த நிலையை,பதவிகளில் இருந்தாலே அவர்கள் பெரியோர்,அமைப்புகளில் இருந்தாலே அவர்கள் உயர்ந்தோர், தேர்ந்தெடுக்கப் பட்டு விட்டாலே அவர்கள் கடவுள் என்ற‌ கருத்தை மக்கள் கொண்டு மாந்தர்களை மதிக்கும் வரை எதுவுமே நடக்கும் இப் புவியில்.


அரசுப் பணியில் இருந்து விட்டாலே அரசுப் பணிக்கு சென்று விட்டாலே அவர்கள் மக்கள் அல்ல அந்த வட்டத்தில் வருவோர் அல்ல என்ற கோடுகள் இருக்கும் வரை எந்தக் கேடுகளும் தொடரும் இதற்கு மாநிலமோ, நாடோ, உலகோ விலக்கல்ல. புவியின் பரப்பு என்ன செய்யும்?ஆள்வோர் செயல் அல்லவா யாவும்?


காவல் நிலையமா? கொலைக் களமா?

காவல் துறை நண்பனா? பகைவனா?

காவல் துறை பாதுகாக்கவா? பாதகம் செய்யவா?


எதைச் சொல்லி நாம் நமது இளந் தலைமுறைக்கு கற்றுக் கொடுப்பது?



உன்னையே நீ அறிவாய்! உண்மையை யார் அறிவார்?


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.