Sunday, July 23, 2017

வந்தே விட்டது பேராபத்து. :கவிஞர் தணிகை

புலி வருது புலி என்ற பழமொழிக் கதை மெய்யாகி புலி வந்தே விட்டது: கவிஞர் தணிகை

Related image

வந்தே விட்டது பேராபத்து. குடிநீரும் , நீரும் பணக்காரர்களுக்கு கிடைக்கும் பேரமிர்தமாகிவிட்டது.ஏழைகள் வாங்கவும் தேக்கிக் கொள்ளவும் முடியா நிலை. மேட்டூரில் நீர் நிலை தூய்மை செய்கிறார்கள் என்று 8 நாட்கள் நீர் வராது என்று அறிவிப்பை செய்து விட்டார்கள்.

வீட்டுக்கு ஒரு கிணறு இருந்த சூழலை கெம்ப்ளாஸ்ட் அயோக்ய நாய்கள் மக்களின் நலனை சிறிதும் சிந்திக்காத நிலையில் முன்னால் இருந்த அரசியல் பேய்களின் பேச்சைக் கேட்டு சிமென்ட் குழாய்கள் வழியே அனுப்பாமல் கழிவு நீரை நன்னீர் ஓடையின் வழியாக அனுப்பி இந்தப் பகுதி வாழ்வாதரத்துக்கே வஞ்சகம் விளைத்து விட்டார்கள். விளைவாக இன்று எல்லா பயன்பாட்டுக்கும் காவிரி நீரை நம்பியே மேட்டூர் மக்கள்.
\
ஆனால் காவிரியில் 25 அடி இந்த ஆடி மாதத்து உச்சக் கட்டக் காலத்தில் .மக்கள் எல்லாம் நீரின்றி இதே நிலை நீடித்தால் குடி பெயர்ந்தாக வேண்டிய நிலை வரும் என்றே எண்ணுகிறேன்.

தங்கத்தை விட குடி நீரின் விலை அதிகம் கூட ஆகலாம். வீட்டின் மேல் தொட்டி டேங்குகள் வைத்திருப்பார் எல்லாம் நீரை நிறைத்து வைத்திருப்பார் எல்லாம் பிழைத்துக் கொள்ளலாம் ஆனால் அது மட்டும் காலம் முழுதும் வந்து விடுமா? டேங்கரில் நீர் வாங்கி வருகிறார்கள். நிலத்தடி நீர் மட்டும் எவ்வளவு நாளுக்கு வரும்...எங்கும் போதாமை இல்லாமை...

இதில் ஆடி அமாவாசைக்கென்று புரோகிதர்களின் சமஸ்கிருத சத்தம் கோவில் எங்கும்....

டெல்லியில் உயிரியில் பூங்காவில் புலிக்கும், சிம்பன்ஸி குரங்குக்கும் பிறந்த நாள் விழா என கேக் ஊட்டியபடி கொண்டாடிப் பார்க்கிறார்களாம் அங்கே விவசாயிகள் மண்டையோடுகள், எலும்புகள் வைத்து போராடியவண்ணம் அரை மொட்டை அடித்துக் கொண்டு போராடியும் கேட்க நாதியில்லை. அதை மத்திய அரசுக்கு எடுத்துச் சொல்லும் தமிழக அரசும் இல்லை.

இந்நிலையில் ஜந்தர் மந்தரில் இந்த விவசாயிகளுக்கென ஒதுக்கப்பட்ட கழிப்பகம் வேண்டுமென்றே சில நாட்கள் சுத்தம் செய்யா நிலையில் கழிவு நீர் வெளியேறாமல் இவர்கள் போராட்டம் நடத்தும் இடத்துக்கே வந்து நாற்றம் எடுக்கிறதாம்.

இதெல்லாம்தான் இந்த அரசின் ஆட்சியின் இலட்சணங்கள்..இராம் நாத் கோவிந்த், வெங்கய்யா நாயுடு இருவரே பாக்கி.இனி இந்த நாட்டின் பிரச்சனைக்கெல்லாம் இந்த நாட்டின் முதல் குடிமகனாய், இரண்டாம் குடிமகனாய் வந்து தீர்வு செய்து விட...

நீர் பணக்கார சொத்தாக மாறி விட்டது, தனியார் மயம் குடிநீரில் கொண்டு வந்து நீரை எடுத்து விற்பனை செய்தார் எல்லாம் நாட்டுக்கு சேவை ஏன் உலகுக்கே சேவை செய்த வள்ளல்களாய் உலகே பாராட்டுப் பத்திரம், விருதுகள் வழங்க கௌரவிக்கப்படுகிறார்கள்...

இனி நீர் திருட்டு, நீர்க்கொள்ளை, நீர் கொண்டு செல்லும் வாகனம் வழி மறிப்பு, கடத்தல், நீருக்காக கொலை எல்லாம் நடக்கும்...

இந்த நிலை மாற வேண்டுமானால் நீரும் நிலமும் பொது உடமையாக அரசே கையகப்படுத்த வேண்டியதன்றி வேறு வழியே இல்லை...

நிலை ஒரு படி அதிகமாக போய்க்கொண்டிருக்கிறது. சொல்லத் தரமில்லா நிலை என்று சொன்னால் ஒரு படி இன்னும் கீழே இறங்கிக் கொண்டிருக்கிறது. இணையத்தை, வலை தளத்தை வாட்ஸ் ஆப்பை, வலைப்பூக்களை ,முகநூலை வைத்துக் கொண்டு தாகம் தீர்க்க முடியாது...நாக்கை கூட வழிக்க முடியாது. எல்லாம் சர்க்கரை என்று சொன்னவுடன் இனிக்கும் என்ற கதைதான்...

பிக் பாஸ் கமலை முதல்வராக்கலாம்.

அதைக்கூட அப்படி சொல்வதற்கு எஸ்.வி. சேகர் போன்றோர் ரஜினி முதல்வராம், கமல் துணை முதல்வராம் என கமலை தாழ்த்தி ரஜினியை உயர்த்தி பேசி ஒத்த கருத்தைப் போல தமது வேறுபாட்டை காட்டி இருக்கிறார்

வேண்டாம் அரசியல் வேண்டாம் என்னும் ரஜினிக்கு வாய்ப்பளிப்பதை விட மகக்ள் வாக்களித்தால் நானும் முதல்வர்தான் என அரசியலுக்கு வர விரும்பும் கமலுக்கு வாய்ப்பளிப்பது நல்லதுதான்...

தேசிய நீர்வழிச்சாலை சொல்லும் ஏ.சி.காமராஜ் அவரது காலத்தில் அமையுமா இல்லை சசியின் கர்நாடக புராணமாய் நீளுமா என்பதெல்லாம் காலம் காட்சிப் பொருளாய் காட்டிக் கொண்டிருக்கட்டும்...
Related image


குமாரசாமி தீர்ப்பு செய்த போது இந்த கர்நாடகம் மிகவும் தூய்மையாக இருந்தது இந்த சசியின் செயலால் மட்டுமே சிறைத்துறை கெட்டுவிட்டதாம்.
என்றாலும் ரூபா காவல்துறை களங்கமில்லாப் பெண்மணி, உண்மையை வெட்ட வெளிச்சமாக்கியதற்கு அவர்க்கு மாறுதல் பரிசளித்த கர்நாடகம் அவரை தமிழகத்துக்கு அனுப்புவது நல்லது.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Thursday, July 20, 2017

பச்சோலைக்கு இல்லை ஒலி (அ) தலைமுறை இடைவெளி: கவிஞர் தணிகை.

பச்சோலைக்கு இல்லை ஒலி (அ) தலைமுறை இடைவெளி: கவிஞர் தணிகை.


Related image


சாகர சங்கமம் அல்லது சலங்கை ஒலியில் கமலஹாசனுக்கு நேர்ந்தது போல எனக்கும் பவர் பாண்டியில் ராஜ் கிரணுக்கு நடப்பது போல எனக்கும் ஆனால் அந்த மதுக்குடியும், காதலும் இதன் கருப்பொருள் இல்லை, 55 வயதுடனான என்னுடன் 18 வயதுகள் போட்டியும் மோதலும் செய்து, அவர் தான் மாஸ் காண்பிக்க வேண்டும், நாம் எல்லாம் காண்பிக்கக் கூடாது , முடியாது என எங்கள் மேட்டூர் பயணிகள் ரயிலில் இன்று ஒரு இளைஞரின் கமென்ட்.

ரயில் அங்கு சிக்னலுக்காக சற்று வேகம் குறைந்து செல்லும்போது நான் முதன் முதலாக கடைசிப் பெட்டியிலிருந்து எங்கள் ஊரில் இறங்கிக் கொண்டிருக்கிறேன் அது என் நிலை. அந்த நிலைக்குத்தான் எத்தனை போட்டிகள், எத்தனை பொறாமைகள், எத்தனை எதிர்மறை எதிரிமறை சிந்தனைகள்...

வேறு எதுவுமே வேண்டாம், இந்த நாட்டின் பழங்குடி ஆதிவாசிகளுக்கு 10 ஆண்டுகள் உழைத்து உடற் பிணிகள் பல பெற்று இன்று மகனை படிக்க வைப்பதற்காக இப்படி ஊசலாட்டம் ஆடிக் கொண்டிருக்கிறேனே அதில் ஒரு மயிர்க்கால் அளவு இவர்களுக்கு தகுதி இருந்தால் இவர்களும் என்னை போட்டி என நினைக்கலாம்...

இந்த உலகில் ஒவ்வொரு உயிரும், ஒவ்வொரு மனிதருமே தனித் தனி. தனித்தன்மை பெற்றவரே. எவருக்கும் எவருமே போட்டியாளராக இருக்க முடியாது. இந்த சிந்தனையில் நான் தெளிவாக இருக்கிறேன். என்னால் எவரையுமே போட்டியாளராக எண்ணி செயல் படவும் முடியாது.

நான் சொல்வதெல்லாம் கடந்த 50 ஆண்டுகளில் அறிவியல் மாறுதல்கள் ஆயிரம் வகையில் தொடர்பு வழி சாதனங்களை வெகு எளிதாக இந்த இளைஞர்க்கு கையில் கொணர்ந்து சேர்த்தி இருக்கலாம், ஆனால் எமது வாழ்வில் இருந்த சுவையில் நூற்றில் ஒரு பங்கு கூட இவருக்கு இல்லை. இவரிடம் எந்த வித தியாக உணர்வும், நேர்மையான சிந்தனையும் இல்லை.

நான் பார்த்தவரை இவர்களுக்கு எல்லாப் பிரிவு சார்ந்த மக்களும் உதவ வேண்டும் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கின்றனரே அன்றி இவர்கள் எவருக்குமே எதையும் செய்ய ஆரவமாக இருப்பதாகத் தெரியவில்லை.

நான் இந்த உலகு, நாடு, மாநிலம், மாவட்டம், வட்டம், ஊர் என்ற அடிப்படையில் ஏற்பட்ட சமூக, கல்வி, பொருளாதார, அரசியல், கலாச்சார, விளையாட்டு சார்ந்த அனைத்து துறைகளையும் சார்ந்தே சொல்கிறேன்.

நிறைய உறவுகளை இழந்து விட்டனர், நிறைய நட்பை இழந்து விட்டனர், நல்ல நல்ல விடயங்களை இழந்து விட்டனர், வெறும் போலித்தனமான கையளவு ஸ்மார்ட் போன் பெட்டி மட்டுமே இவர்களின் வடிகாலாகி விட்டது.

நான் விளையாடிய கில்லி தாண்டல், பச்சைகுதிரை, சூறைப்பந்து, ஒக்காந்தா கை குடுக்கறது, கோலி குண்டுகளின் பல விளையாட்டுகள், கபாடி எனப்படும் சப்பாளாங்க் குடுகுடு சடுகுடு,குச்சியை தள்ளிக் கொண்டே போதல், கண்ணாமூச்சி, நொண்டி, பாண்டியாட்டம், ஓடி விளையாடி அவுட் ஆக்குவது, பம்பரம் விடுதல், பட்டம் விடுதல், காத்தாடி பறக்க விடுதல், காத்தாடிக்காய் சுழட்டி விட்டு காற்றில் அழகு பார்த்தல்,சூட்டுக்காய் தேய்த்து சூடுவைத்து சண்டை செய்து கொள்ளல், பரம பதம், தாயம், வேர்க்குரு ஒருவருக்கொருவர் எண்ணியபடி கிள்ளிக் கொள்ளல் அல்லது கீறி அதை உடைத்து விடுதல்,ஆடு புலி ஆட்டம், வாசல் கூட்டும் வெளக்கமாறு வைத்து கையை மூடி விளையாடுதல்,பல்லாங்குழி,கேட்வில் கொண்டு காய் அடித்தல் ஏன் குருவி காகம் துரத்துதல், ஊஞ்சல் ஆடுதல் ஆட்டுதல், ஸ்கிப்பிங் இப்போது பேர் அப்போது உயரத் தாவி எண்ணிக்கை எண்ணுதல், இன்னும் எத்தனையோ இன்னும் முழுதாக சொல்லி நிறைவு செய்து விட எனக்கு எண்ணமில்லாமல் குறைவாகவே மனக்குறையாகவே இருக்குமளவு எண்ணிறந்த விளையாட்டுகள்...கருக்காட்டம் பழம் சாப்பிடல், வேப்பம்பழம் சாப்பிட்டு கொட்டையை காசுக்கு விற்றல்..
Related image

விளையாட்டுத் துறை ஒன்றுமட்டுமே இங்கு சொல்லி உள்ளேன். இது போல எல்லாத் துறைகளிலும் ஏகப்பட்ட துறைகளிலுமே இப்போது வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது. கடந்த 15 முதல் 20 ஆண்டுகளாகவே மதுக்குடி இல்லா இளைஞரை பார்ப்பது அரிதாகிவிட்டது. நல்ல பெண்ணுக்கு நல்ல மணமகனும் நல்ல மணமகனுக்கு நல்ல மணப்பெண்ணும் மதுக் குடி இல்லாமல், ஒழுக்க நேறிய நெறிகளுடன் கிடைப்பதே அரிதாகிவிட்டது.

பெற்றோர்கள் தம் பிள்ளைகளுக்கு துணை சேர்க்க ஆண்டுக்கணக்காய் அலையோ அலை என அலைய வேண்டியதிருக்கிறது. அப்பொதெல்லாம் எங்கு எவர் வீட்டில் காட்டில் செல்லும் வழியில் நீர் கேட்டால் கொடுப்பார்கள் குடிக்கலாம் உடல் நலம் கெடாது...எந்தக் காட்டிலு எந்தப் பண்டமும் விளைச்சலில் சும்மாவே கொடுப்பார்கள் தின்ன,,, இப்போது எந்த விவசாயிடமும் சென்று எதையாவது சும்மா கேட்டுப்பாருங்கள் எனச் சொல்வதே தவறு பெரும் குற்றம், விவசாயம் அவர்களுக்கு சுருக்குக் கயிறாகிவிட்டது.

வரலாறு காணாத அளவு இந்த 50 ஆண்டிலும் காணாத அளவில் மேட்டூர் அணையில் நீர் 24 அடி மட்டுமே இந்த ஆடி மாதம் கரை புரண்டு ஓட வேண்டிய காவிரி நதி காய்ந்து கிடக்கிறது...அப்போது எங்கள் ஊர்களில் வீட்டுக்கொரு குடிநீர்க்கிணறு இருந்தது சில அடிகள் வெட்டினாலே அருமையான நீர் கிடைத்தது, அதில் ஒரு ஆவியிலேயே பருப்பு வெந்துவிடும் என்பார்கள்.. அத்தனையும் பாழ் இன்று நீருக்கு நாட்டுக்கே வழிகாட்டும் எமது காவிரி எங்கள் ஊருக்கே குடி நீர் கொடுக்க போதாமல் தவிக்கிறது...

இப்படி பல மனித இயல் அடிப்படையில்  திருமணம், குடும்பம், மதம், சாதி, பிரிவுகள், மொழி, கலாச்சாரம் எல்லா அடிப்படையிலும் முகம் சிதைந்து போய்விட்டது  எனவே இன்றைய இளைஞர்களுக்கு ஒரு நல்ல தமிழ் சிந்தனையை எழுதியுள்ளதை பகிர்ந்து கொள்ளக் கூடத் தெரியவில்லை. ஆனால் இவர்கள் எல்லாம் தெரிந்து கொண்டது போல வயது வித்தியாசம் தெரியாமல் மரியாதை தெரியாமல் பேசி உறவின் நல்லுறவை அழித்து வருகிறார்கள்...

எல்லா இலையுமே துளிர் விட்டு, விரிந்து பச்சையாக இருந்தது பழுப்பாகி, காய்ந்து ஒரு நாளில் உதிர்ந்து போகத்தான் வேண்டும். ஆனால் அவைகள் செய்யும் ஆர்ப்பாட்டம் காட்டவே இந்தப் பதிவு...

நான் வீண் பெருமைக்காக எனது செயல்பாட்டு பட்டியலை இங்கு இணைக்கவில்ல...நான் எனது வாழ்நாளில் இதை எல்லாம் நாட்டுக்காகவும் வீட்டுக்காகவும் செய்திருக்கிறேன். அதில் ஒரு 5 விழுக்காடாவது இவர்கள் செய்து விட்டு என்னோடு போட்டிக்கு வரலாம்...

என்னிடம் மது, புகை, போதை போன்ற எந்த தீய வழக்கமும் இல்லை. இன்னும் என்னால் முடிந்தளவு இந்த நாட்டின் சமுதாய மக்களுக்கு மனமுவந்து பள்ளிப் பிள்ளைகளுக்கும், ஏனைய மாந்தருக்கும் ஒரு நல்ல பொறுப்பான பதவியில் இருந்து கொண்டு அரும்பணியாற்றியே வருகிறேன். அவை பற்றி தனியே வைத்துக் கொள்ளலாம்.

எனது தாயை தந்தையின் இறப்புக்க்கும் பின் சுமார் 20 ஆண்டுகள் நல்ல முறையில் கவனித்து அவர்க்கு செய்ய வேண்டிய காரியம் கடமைகளை நல்ல முறையில் செய்து முடித்தும் கூட இந்த ஆண்டுடன் சுமார் 11 ஆண்டு நிறைவடைந்து 12 ஆம் ஆண்டில் ஆகஸ்ட் 9லிருந்து அடியெடுத்து வைத்திருக்கிறேன்...இந்த தாயும், பெற்றோரும் ஊரும் உலகும் இவரைப் பெற நற்தவம் செய்தே இருக்க வேண்டும் எனப் பேர் விளங்க நல்ல சேவை செய்வதே எனது வாழ்க்கையாகிப் போனது....

நான் பின் சொல்லும் குறிப்புகளுக்கும் அப்பாற்பட்டு: இந்த நாட்டை நல்ல பாதையில் திருப்ப: அன்பு சகோதர நண்பர் கொ.வேலாயுதம் அவர்களுடன் நவ இந்திய நிர்மாணிகள் இயக்கம், காந்திய வழியில் ஊருக்குப் பத்து பேர் இயக்கம், தமிழக இலட்சியக் குடும்பங்கள் என்ற அமைப்புகளிலிருந்து எண்ணிறந்த பணிகளை செய்திருக்கிறோம்...அதில் வந்த இணைந்த பிறவிகள் தாம் சசிபெருமாள், சின்ன பையன் போன்ற தியாகிகள் யாவரும்...

எனக்கு இந்த பிறவியில் பெரும் திருப்தி இருக்கிறது. இன்னும் செய்வதில் எல்லாம் பெறும் திருப்தி இருக்கிறது...

நான் இந்த நாட்டின் மாபெரும் சபைகளில் எல்லாம் கூட எனது உரையை நிகழ்த்தி இருக்கிறேன்...எனத் பேச்சு எழுத்து பலருக்கும், நாட்டுக்கும், ஊருக்கும், எனைச் சுற்றி உள்ள அனைவர்க்கும் எப்போதுமே பயன்பட்டே இருந்து வந்திருக்கிறது இனியும் அது பயன்படும்...ஆனால் இந்த சுயநலப்பதர்கள் எல்லாம் என்னுடன் போட்டியிட்டு பேச வருவதுதான் எனக்கு ஏற்றுக் கொள்ள முடியாதிருக்கிறது...கீழே நான் செய்ததில் சில குறிப்பிடத்தக்கதை சுருக்கமாக சொல்லில் வடித்திருக்கிறேன்...படியுங்கள் பாருங்கள்...பின்னர் பார்க்கலாம்...

கவிஞர் தணிகை
கவிஞர் தணிகை என்ற சுப்ரமணியம் தணிகாசலம் காவிரிக்கரை ஓரத்தில் மேட்டூர் நீர்த் தேக்கத்தின் அருகே பிறந்து (Puthu Samballi)

இந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்த டாக்டர்..பெ.ஜெ.அப்துல் கலாம் அவர்களின் மதிப்பு மிக்க கடிதத் தொடர்புடன் இணைந்து

இந்தியாவின் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாய் இருந்த மேதகு.பி.என்.பகவதி அவர்களின் அவையில் பங்கெடுத்துப் பேசி அவருடன் உண்டு மகிழ்ந்து கலந்து அளாவளாவி

11 சிறு நூல்களை தம்மால் முடிந்த அளவு நாட்டுக்கு ஈந்து ஆனால் எனது புத்தகங்கள் படிக்க அல்ல பயன்படுத்த….  ¦¾Õ  ºó¾¢ôÀ¢ø °¡¢ý Ó츢 «¨¼Â¡ÇÁ¡¸ò ¾¢¸Øõ ¦¾öÅ¡ ¾¢Â¡Éô À¢üº¢
¸Õõ ÀĨ¸Â¢ø ¦À¡ý¦Á¡Æ¢¸û ÀøÄ¡ñθǡ¸ ±Ø¾¢ ÅÕõ Ҹؼý ....
 ¯Õš츢 ¯ÕÅ¡¸¢..

தெய்வா பதிப்பகம், தெய்வா ஆலோசனை மையம், தெய்வா தியானப்பயிற்சி மையம் ஆகியவற்றுடன் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பயிற்சி பெற்றும் பயிற்சி அளித்தும்

முதல் நூலான மறுபடியும் பூக்கும் உலகின் மிகப் பெரும் நூலகத்தொகுதியான அமெரிக்கன் நூலகக் கூட்டத்தில் வாழ்க்கைக் குறிப்போடு இடம் பெற்று

இந்தியாவின் பழங்குடிகள், ஆதிவாசிகள், மலைவாழ் மக்களுக்காக 10 ஆண்டுகளுக்கும் மேல் திட்ட அலுவலராக இணையிலா உழைப்பை ஈந்து இந்தியா எங்கும் பல மாநிலங்களுக்கும் சென்று ஊதியமாக உடல் பிணிகள் பல பெற்று இவரின் உழைப்பு மகாத்மா காந்தி, மதர் தெரஸா ஆகியோரின் பணிகளைப் போன்றது என சான்று வழங்கப் பட்டு

நேரு யுவக்கேந்திரா, காந்திய கிராமியப் பல்கலைக்கழகம், பயிற்சி பணி செய்து, காந்திய சிந்தனையில் வள்ளியம்மை கல்வி நிறுவனத்தில் முதல் பரிசு பெற்று....

வேர்ட்பிரஸ் டாட் காம் வழி 1150 பதிவுகளை மறுபடியும் பூக்கும் தளம் வழிப் பகிர்ந்து அதன் அடையாளமாக மறுபடியும் பூக்கும் சர்வீஸஸ் என சேவை தொடர்ந்து...

இப்போது மறுபடியும் பூக்கும்.பிளாக்ஸ்பாட்,டான் பேஜஸ் டாட் காம், தணிகை ஹைக்கு தளங்களிலும், முக நூல், ட்விட்டர், கூகுள்+ போன்ற சமூக தளங்களிலும் உங்களோடு இணைந்து...
3 கோவில்களை நிர்மாணிக்க அடிப்படைப் பணிகள் செய்து,Tree plantation,A.P.J.Movement etc.

¦¾¡¨Ä측𺢸û, Å¡¦É¡Ä¢ Àò¾¢¡¢¨¸¸û °¼¸í¸Ç¢ý ¦ÅÇ¢îºõ ÀÄÓ¨È ¦ÀüÚ...
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் உங்களுக்கு அது ஆர்வமாக இருந்தால்...

சுயமாக சேவையை விட்டுப் பிரிய நினைத்தாலும் அது வாழ்வின் இறுதி வரை இயற்கையாகவே இணைந்து பின்னிப் பிணைந்து செல்ல வாழ்ந்து

எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே என வாழ்ந்து...visit:www.marubadiyumpookkum.blogspot.com  www.thanigaihaiku.blogspot.com
www.dawnpages.wordpress.com Having Bible,Quran,Geeta with equal status.
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை...

Monday, July 17, 2017

கங்கையும் காவிரியும் பாவிகளால் பொய்த்துப் போனது: கவிஞர் தணிகை.

கங்கையும் காவிரியும் பாவிகளால் பொய்த்துப் போனது: கவிஞர் தணிகை.
Related image


தங்கள் பாவங்கள் எல்லாம் கங்கையிலும் காவிரியிலும் காசியிலும் பவானி கூடுதுறையிலும் மூழ்கி எழுந்தால் காணாமல் போய்விடும் என்று அனைவரும் சென்று காலங்காலமாக தலை மூழ்கி வந்ததால் கங்கையும் காவிரியும் நீரின்றி காணாமலே போய்விட்டன...அதுவும் எவ்வளவு பாவத்தைத்தான் தாங்க முடியும் பாவம்?

அனேகமாக இந்த ஆண்டு ஆடி 18க்கு எனது 55 ஆண்டு கால வாழ்க்கையில் முதன் முறையாக காவிரி ஆற்றுக்கு அணையோரத்துக்கு போக மாட்டேன் என எண்ணுகிறேன்.காரணம்..இன்று ஆடி ஒன்று நீர் அளவைப் பார்த்தால் வெறும் 24 அடி. 128 அடி அணைக்கு. எங்கு பார்த்தாலும் நிலப் பரப்பு, நீர்பரப்பே இல்லை. எனவே அந்த பொட்டிழந்த நெற்றியை, நீரிழந்த பூமியைப் பார்க்க எனக்கு வேதனைப் பற்றிக் கொள்ளும் எனவே இந்த முறை ஆடி 18க்கு நான் முதன் முறையாக செல்லப் போவதில்லை என நினைக்கிறேன்.

ஜக்கி சொல்கிறார், கர்நாடகா 50 சதம் விவசாயத்தை இழந்திருக்கிறது, தமிழகம் 65 சதம் இழந்திருக்கிறது என தமிழ் நாட்டில் இருந்து கொண்டு தாம் பிறந்த பூமிக்கு சமரசப் போக்கை கடைப் பிடித்து இது நாட்டுக்கே வந்த கேடு இதை சரி செய்ய 16 மாநிலங்களில் பேரணி செய்ய இருப்பதாக...

மரங்கள் நடுவது, தலையாயப் பணியாக செய்து 10 ஆண்டுகள்  கழித்து நிலையை சரி செய்து விடலாம் என்கிறார்

மேலும் இந்த ஏ.சி காமராஜ் இருக்கும் வரை தேசிய நீர்வழிச்சாலைத் திட்டம் இருக்கும் என நினைக்கிறேன் அதன் பிறகு அது நமது அரசியல் வாதிகளால் மறக்கடிக்கப்படும்.

Image result for lot of sin not able to wipe out by gangai and cauvery
மேலும் அஸ்ஸாமில் வெள்ளம், தமிழகத்தில் வறட்சி,...மறுபடியும் நல்லகண்ணு டெல்லியில் போராட்டம், மோடி குடியரசுத் தேர்தல் எல்லாம் மறைமுகமாகவே...

Related image
கொஞ்சமான பாவமா அங்கு அந்த நதிகளிலும் நதிக்கரைகளிலும் கரைக்கப்பட்டது? எனவே வற்றி விட்டதில் கவலைப் பட காரணமில்லை, பொருளுமில்லை...
Related imageமறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Sunday, July 16, 2017

கண்ணால் காண்பதும் காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்: கவிஞர் தணிகை

கண்ணால் காண்பதும் காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்: கவிஞர் தணிகை
Related image


மோடி 73 சதவீதம் மக்களால் விரும்பப்படும் பிரதமராமே? விவசாயிகள் தலைவர் அய்யாக் கண்ணுவைத்தான் இது பற்றிக் கேட்கலாம் என நினைக்கிறேன்.

மனிதர்கள் ஒவ்வொரு செய்திக்கும் தங்கள் விருப்பப்படி கண் , காது, மூக்கு முகம் எல்லாம் ஒரு நிகழ்வுக்கு, ஒரு விடயத்துக்கு கொடுத்து விடுகிறார்,எனவே அந்த செய்தி அப்படி எப்படி இப்படி எல்லாம் திரிக்கப்படும்போது உண்மை என்ன என்பதே தெரியாமல் உறங்கி விடுகிறது காலம் அதன் மேல் ஏறிப் போய்விடுகிறது. நேதாஜி இறப்பு போல,...இன்று வரை பேசப்பட்டாலும் எவருக்குமே உண்மை தெரியாது என்பது போல சாஸ்திரி இறப்பில் ரகசியங்கள் என்பது போல, புரூஸ்லீ எப்படிக் கொல்லப்பட்டார், அவர் மகன் பிராண்டன் லீ எப்படி டம்மி துப்பாக்கி ரவைகளுக்கு மாறாக உண்மையான குண்டு கொண்டு திரைப்படம் எடுக்கும் இடத்தில் வைத்து எப்படி சுட்டுக் கொள்ளப்பட்டார், மைக்கேல் ஜாக்ஸன் சிறிது சிறிதாக விஷம் வைத்து கொல்லப்பட்டாரா, குழந்தைகளுடன் அவருக்கு  காம உறவு இருந்ததா?? டயானா மரணம் விபத்தா இல்லை திட்டமிடப்பட்ட கொலையா?

ஜெவின் மரணம் சசியின் சதியா, இயற்கை மரணமா இப்படி நிறைய கேள்விகள் அத்துடன் கார்த்திகேயன் விசாரிப்பில் இராஜிவ்காந்தி புலன் விசாரணை வீரப்பன் மரணம்...இப்படியே நிறைய விடை தெரியா முடிவுக்கு வர முடியா கேள்விகள்...

எல்லாம் அவசர கதியில் ஓடிக் கொண்டிருப்பதால் இப்போது எதை நம்புவது எதை நம்ப மறுப்பது என்றெல்லாம் சொல்வதற்கில்லை, ஏன் செய்திகள் வருவது எல்லாமே உண்மை நிகழ்வை அஞ்சலிடுபவை தானா என்ற கேள்விகளுக்கான கால ஓட்டத்துடன் நாம்...

ஊடகத்தின் நிருபர்கள் கூட ஓடும் நதி வற்றிய நதியாய் ஆகிவிட்டது போல எதையாவது இட்டு ஊற்றி மழுப்பி நிரப்புகிறார்கள்...எதையாவது திகிலூட்டும்படி ஆச்சரியப்படும்படி எழுதி படிக்க வைக்க வேண்டும் என எழுத வேண்டிய கட்டாயம்...

கமல் இந்து முன்னணிக்கு எதிராக, தம் வீட்டு முன் கூடிய கூட்டத்தினர்க்கு பதிலளிப்பது போல ஒரு பேச்சை சஸ்பென்சாக சொல்லி விட்டு இன்றைய தொடரில் பாருங்கள் என சொல்லிவிட்டு அந்த தொடரில் ஏதும் இல்லாமல் வழக்கமாக எப்போதும் போல பிக் பாஸை நடத்தி வருகிறார். எல்லாமே சுயநலப் பொருளாதாரத்தில் முடிந்து விட்டது..

ஜி.எஸ்.டி...பெரும்பணக்கார ஏமாற்றை ஏழை இந்தியக் குடிமகன்கள் ஏற்று வரி கட்டுவது போல...

ஒரு சின்ன செய்தி: தி இந்து தமிழ் மற்றும் சில நாளிதழ்கள் வெளியிட்டன: சேலம் மேக்னசைட் அருகே பால வேலைகள் நடைபெறுவதால் மேட்டூர் சேலம் பயணிகள் ரயில் இந்த ஜூலை 15,16,18 ஆகிய நாட்களில் இயங்காது எனப் பார்த்தோம் செய்தியாக. மாதா மாதம் மாதாந்திர அனுமதிச் சீட்டு பெறுபவன் என்ற முறையில் அது எந்த வகையில் என்னை பாதிக்கப் போகிறது என அறிந்து கொள்ள விழைந்தேன். நண்பர்கள் மூன்று பேர் எனக்கு முன்பே விசாரித்தறிந்தனர். மாலையில் நாங்கள் செல்லும் வேளையில் சேலம் மேட்டூர் பயணிகல் ரயில் எப்போதும் போல வழக்கப்படி இயங்கும் எனச் சொல்கிறார்கள் என்றனர்

நானும் சென்று சேலம் சந்திப்பின் விசாரணை அலுவலரிடம் விசாரித்தேன் அவரும் அதை உறுதிப் படுத்தினார். செய்தி சேகரிக்கும் நம் நிருபர்களும், செய்தி ஊடகங்களும் சந்தேகத்துக்கும் ஊகத்துக்கும் இடமின்றி உறுதியாக செய்தி அளிக்கும் காலம் போய் விட்டது.

செய்தி ஏடுகளை இனி நம்புவது எல்லாம் வீண்தாம் ... இல்லை எனில் இன்னும் ஜெவுக்கு கால் இருந்ததா சசிக்கு சமையல் செய்த அடுப்பு இருந்ததா மோடி 73% மக்களால் விரும்பப் படும் தலைவர் இப்படி எல்லாம் செய்திகள் வருகின்றன...உண்மையில் நாடு முழுதும் 73 சதம் அளவுக்கு தேர்தலில் மக்கள் வாக்களிப்பதே இல்லை என்பது தான் உண்மை...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Thursday, July 13, 2017

சரவணன் மீனாட்சி ராஜா ராணி,மாப்பிள்ளை,நீலி,பகல் நிலவு: கவிஞர் தணிகை.

சரவணன் மீனாட்சி ராஜா ராணி,மாப்பிள்ளை,நீலி,பகல் நிலவு: கவிஞர் தணிகை.
Image result for fools paradise


பயணிகள் ரயில் விட்டு இறங்கி நடக்கிறேன் முன்னால் 3 பெண் பிள்ளைகள், அனேகமாக 10 ஆம் வகுப்பு முதல் ப்ளஸ் 2 படிப்பவராக இருக்கலாம், சரவணன் மீனாட்சியில் வருகிற மாதிரியா என்று பேசிக் கொண்டார்கள், காதில் விழுந்தது காய்ச்சி ஊற்றிய ஈயமாக....

அந்தக் காலத்தில் செருப்பால் அடித்து விட்டால் அது பெரிய மானபங்கம் சிலர் உயிரையே மாய்த்துக் கொள்வார்களாம். இந்த தொ(ல்)லைக்காட்சித் தொடர்கள் மூலம் இந்த தொலைக்காட்சியினர் யாவரும் தமிழ் கூறும் நல்லுலகத்தையே செருப்பால் அடித்து வருகிறார்கள் சரவணன் மீனாட்சி, மாப்பிள்ளை, நீலி,பகல் நிலவு, இராஜா இராணி  என....மாபெரும் அழிவு சக்தி...அணுகுண்டு வீசித்தான் அழிக்க வேண்டுமென்பதில்லை. இது உயிரோடு வாழவிட்டு பெரும் கலாச்சாரச் சீரழிவையே செய்து வருகிறார்கள்.

மக்களை எல்லாம் முட்டாள்களாக, கிரிமினல்களாக ...குற்றவாளிகளாக மாற்ற முயன்று வருகிற பாத்திரங்கள் இவற்றில் எல்லாம். ஒருவர் மூக்கில் பேசுகிறார் , ஒருவர் பேசும் முன்பே கண்களில் பார்த்தே கால் மணி நேரம் ஓட்டி விடுகிறார். ஒருவர் திருடராய் இருந்து கொண்டே நகைச் சுவை செய்வாராம் ஒரு மாமியார் மருமகனை வீட்டு மருமகனாக மாற்றிக் கொண்டு அவருக்கு உணவு கூட கொடுக்காமல் பழி வாங்க தன் மகளை மணந்து கொண்டதற்காக அவன் பணிக்கு செல்வதை கூட தடுத்து தேங்காய் வாங்கி வா சட்னி ஆட்ட, முட்டை வாங்கி வா, காய்கறி வாங்கி வா சமைக்க என எல்லாம் ஆட்டி வைத்து வீட்டுக்கு வெளியே படுக்கச் சொல்லி விடுவாளாம், கதவைத் திறக்க மாட்டாளாம், மற்றவரையும் திறக்க வாய்ப்பின்றி செய்துவிடுவார்களாம்...


இன்னொரு தொடரில் எப்போது பார்த்தாலும் செம்பாவை நொறுக்கித் தள்ளுவதே வேலையாக வைத்துக் கொண்டு அவளை வீட்டை விட்டு கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளி விடுவாராம், சாப்பாட்டில் காரப்பொடியை அப்படியே கொட்டி விட்டு சாப்பிடச் சொல்வாராம், கையை விரலைப் பிடித்து ஒடித்து முறுக்கி எடுப்பாரம்,  இப்படியே....


Image result for fools paradise

எனது வீட்டில் இது போன்ற சீரியல்களைப் பார்க்க வேண்டாம், அதுவும் என் முன்னிலையில் பார்க்கவே வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளேன். என்னால் சிறிதளவு கூட இதை எல்லாம் காதில் விழச் செய்வதில் கூட விருப்பமில்லை. நாம் முன்பே சொன்னபடி பெண்களை எல்லாம் கிரிமினல்களாக மாற்றி விடும் அவை. பெரும்பாலும் பெண்களே இதை எல்லாம் பார்க்கிறார்கள் எனத் தெரியவருகிறது.

தனிமையைத் தவிர்க்க சிலர் பார்ப்பதாகச் சொல்கிறார்கள்,சிலர் அவர்கள் பார்க்கிறார்கள் எனவே தாமும் பார்க்க வேண்டும் எனப் பார்க்கிறார்கள் மொத்தத்தில் இந்த விஷ சிலந்தி வலையில் தமிழகப் பெண்கள் மாட்டிக் கொண்டு சீரழிந்து வருகிறார்கள்.

நல்லதை சொல்லி நாட்டு மக்களிடையே நல்ல புகழடைய வேண்டிய ஊடகத்தின் பணியைப் பார்த்தால் துர் நாற்றம் எடுக்கும் புலைத்தனம்....யாரோ இரு பெண்கள் கல்லூரி மாணவரிடை போராட வாருங்கள் என புதுக்கோட்டைக்கு அழைத்ததாகவும், ஹைட்ரோ கார்பன் , மேட்டர் கதிராமங்கலம் ஹைட்ரோ கார்பன் எனப் பேசி நோட்டீஸ் அளித்த பெண்கள் ஜெயந்தி, வளர்மதி ஆகியோரை மாவோயிஸ்ட் தொடர்பாளர்கள் என காவல் துறை கைது செய்திருக்கும் நாட்டில் ஊடகத்தின் வாயிலாக நச்சை வாயிலே அல்ல நெஞ்சிலே கொணர்ந்து ஊட்டும் ஊடகத்தை பற்றி எல்லாம் கண்டு கொள்வதாகத் தெரியவில்லை...


Image result for fools paradise

நல்ல அரசு, நல்ல மக்கள், நல்ல ஊடகங்கள்

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Tuesday, July 11, 2017

பிக் பாஸ் என நினைத்துக் கொண்டிருக்கும் பதர்கள்: கவிஞர் தணிகை

பிக் பாஸ் என நினைத்துக் கொண்டிருக்கும் பதர்கள்: கவிஞர் தணிகை

Related image


தானுண்டு தன் வேலையுண்டு என சேலம் ஜங்ஷன் பிளாட்பாரத்தில் மேட்டூர் ரயில் புறப்பட நேரம் நிறைய இருக்கிறது என நடந்து கொண்டிருந்த என்னை நோக்கி "உள்ளே அமர்ந்து கொண்டிருந்த ஒரு பதர், "எங்கேடா போறே? என்று ஒரு கெட்ட வார்த்தையும் சேர்ந்து திட்டியது பிக் பாஸில் தானுண்டு தன் வேலையுண்டு என எவர் வம்புக்கும் போகாமல் நடந்து கொண்டிருந்த பரணியை மீதமுள்ள 11 பதர்களும் திட்டி வசை பாடி, அவன் பொல்லாப்பை வாங்கிக் கட்டிக் கொண்டு வெளியே அனுப்பியது போல...

பரணி சும்மா விட்டு விட்டார், நானும் சும்மா விட்டு விட்டேன். கடைசியில் அந்த பதர் சுமார் மாலை 5.50 மணிக்கு எங்கள் மேட்டூர் ரயில் புறப்பட்ட உடன் உள் ஏறிக் கொண்டிருந்த என்னிடம், வெளியே இறங்கி ,சார், இந்த ட்ரெயின் எங்கே போகுது? என என்னிடம் கேட்க, நான் மேட்டூர் எனச் சொல்ல, அப்ப கரூர் ட்ரெயின்  அது கேட்க நான், அது போய் ரொம்ப நேரம் ஆகிவிட்டதே என சொல்லிக் கொண்டே எனதிடம் அமர்ந்தேன்.

கரூர் செல்ல வேண்டிய இந்த மது போதைப் பதர் அமைதியாக நடந்து கொண்டிருந்த என்னிடம் வம்பு இழுத்த போதே ஏதோ தவறாகப் பட புத்தர் சொல்லியபடி அது பேசிய பேச்சை அப்படியே எனை நோக்கி பேசிய பேச்சில்லை என வேறு பக்கம் திருப்பி விட்டு, இயற்கையே இவனுக்கு எல்லாம் என்ன பதில் செய்யப்போகிறாய் எனக் கேட்டேன் ஒரு மணி நேரத்துக்குள்ளாகவே பதில் கிடைத்து விட்டது....

அப்படித்தான் அன்று ஒரு நாள் எனது சக பயணிகளுடன் நான் ரயிலில் வந்து கொண்டிருந்த போது ஒரு குடிகார நாய் தேவைக்கதிகமாகவே கெட்ட வார்த்தைகளால் வசவு மொழிகளால் சொல்லத் தகாத மொழிகளால் எனது சக பயணிகளிடம் பேசி அதன் பின் வாங்கிக் கட்டிக் கொண்டு வாலை சுருட்டிக் கொண்ட நாயாக படுத்தே மேட்டூர் வந்து சேர்ந்தது கண்ணை கூட முழித்து உலகைப் பார்க்க முடியாமல்...

இப்படித்தான் இந்த கமலின் பிக் பாஸ் சுமார் 4 கோடி பேர் பார்க்கிறார்கள் என்ற பெருமை வேறு. கமலுக்கு இந்த சீரியல் வாழ்வில் பெரும் சறுக்கு, நடிப்பு என்ற கலையில் ஏற்பட்ட சுளுக்கு.

முதலில் வெளியேறிய இளைஞர் நல்ல முடிவை எடுத்திருக்கிறார். அதன் பின் இந்தப் பதர்களில் ஜூலியானா என்னும் பதர் இருக்கும் பதர்களுடன் சேர்ந்து கொண்டு  பன்றியுடன் சேர்ந்தால் பசுவும் என்பது போல ஒரு பழமொழி உண்டே அது போலாகிவிட்டது... முதலில் ஜூலியானாவை இந்த    காயத்ரி       ரகுராம் என்னும் பதர் , இந்த எச்சங்களோட எல்லாம்(எச்சில்களோடு எல்லாம்) நான் இருக்க வேண்டிய அவசியமில்லை என்றதும், நேற்று நான் அப்படித்தான் இருப்பேன், நீ அப்படி எல்லாம் இருக்கக்கூடாது என்றதும் பார்க்க சகிக்கலை, முடியலை. ஏன் பார்க்கிறேன் என்கிறீர்களா?

இதைப் பற்றி எல்லாம் எழுதி நம்மை தாழ்வு செய்து கொள்ளக் கூடாது என நிறைய விடயங்கள் பற்றி நான் எழுதுவதில்லை, மோடி, ஜி.எஸ்.டி, பன்னீர், எடப்பாடி, குடியரசுத் தலைவர் தேர்தல், கரு.பழனியப்பன், பிக்பாஸ் இப்படி எதைப்பற்றியுமே எழுதாமல் இருந்தேன் இப்போது எழுதும்படியாகிவிட்டது.\

அந்த கஞ்சா கருப்பு என்னும் காட்டுமிராண்டி எப்படி ஒரு டாக்டர் கட்டிக் கொண்டாரோ? இந்த சினேகன், ஆர்த்தி, காயத்ரி ரகுராம், நமீதா போன்ற பதர்கள் எப்படி வேண்டுமானாலும் பேசுகின்றன அயோக்யத்தனமாய், இந்த சக்திவேல் வாசுவும் வையாபுரியும் கூட,,, அந்த ஓவியா, ரைசா, கணேஷ் வெங்கட்ராம், ஆரார் ஆகியவரிடம் கொஞ்சம் மனிதத் தன்மைகள் இருப்பதாக இதுவரை வந்த நாட்கள் மூலம் அறிய முடிந்தது.

இந்தப் பதர்களுடன் கூட சேர்ந்த ஜூலியானா என்ற பதரும் தன்னிலை தன் குணம் விலக்கி அவர்களைப் போலவே பதராய்ப் போய்விட்டதுதான் உண்மை.

மொத்தத்தில் இந்தப் பதர்களை எல்லாம் உண்மையான பதர்கள் என இந்த சீரியல் மூலம் வெளிக் கொணர்ந்ததற்காகத் தான் கமலுக்கு நன்றி சொல்ல வேண்டும் விஜய் டிவிக்கு நன்றி சொல்லக் கூடாது...எல்லாம் வியாபாரம். பார்க்காலாம் இந்த நாதியத்த  தொலைக்காட்சியின் தொடர் எந்தளவு போகிறாது என...

பிக்பாஸ் என கமல் பல்வேறுபட்ட சமூகத்தில் முன்னேறிய பிரபலங்களை வெளிப்படுத்தி நாட்டின் அரசை மாற்ற, அரசியலை மாற்ற ஏதாவது செய்யக் கூடும் அல்லது அந்த பிரபலங்களால் நாட்டின் நல்ல மாதிரிகள் உருவாகும் வண்ணம் நிறைய மாற்றங்கள் உருவாக அந்த தொடர் காரணமாகும் என்றெல்லாம் எதிர்பார்த்தோம், நல்ல தலமை என்றால் அது இப்படிப் பட்டதாக நாட்டுக்கு இருக்கும் இருக்க வேண்டும் என்ற கருத்து எல்லாம் வெளிப்படும் என்றெல்லாம் தப்புக் கணக்குப் போட்டுப் பார்த்தேன். அங்கு அந்த  கணேஷ் வெங்கட் ராம் பரவாயில்லை. அவர் கூட பரணி விடயத்தில் ஏதோ ஒரு முறை அவதூறாக பேசியது போல காட்சி பார்த்த நினைவு.

இவளுங்க எல்லாம் மாபெரும் தனி மனிதக் குணாம்சமுடைய அன்னை தெராசா போலவும் பரணி இனி அங்கு இருந்தால் ஒரு இரவில் கூட என்ன என்னவெல்லாம் நடக்குமோ எனப் பேத்தியதுகள்...அதுவும் அந்த குண்டு ஆர்த்தி பேசிடும் விஷத்திற்கு அளவே இல்லை. கணேஷ் போன்ற கணவன் அந்தப் பெண்ணோடு எல்லாம் எப்படி காலம் கழிக்கிறாரோ?

மேலும் இவர்களுக்கு எல்லாம் ரேட் எவ்வளவு? எல்லாமே காசுக்கு  மலம் தின்னும் பன்றிகளாகவே இருப்பதுதான் இந்த தொடரின் வெளிப்பாடு....

இவற்றை பார்க்காமல் இருப்பது  மிக நல்லதே. ஆனால் தமிழகமே இந்த தொடரில் மூழ்கிக் கிடக்கிறதே... கஞ்சா கருப்பு ஆடியபோதே நான் செய்தி ஒளிபரப்புத் துறையில் காயத்ரி ரகுராம் பற்றிய்யும் கஞ்சா கருப்பு பற்றியும் சொல்லி உடனே இந்த தொடரை தடை செய்ய வேண்டும் என எனது பதிவை செய்து விட்டேன்.
Related image


இது போன்று அவ்வப்போது எனது வாழ்வில் நிறைய பதர்களை பார்த்து இருக்கிறேன். பார்த்து வருகிறேன். இதெல்லாம் பூமிக்கு பாரம். அழிந்து பட வேண்டியதுதான்

தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Sunday, July 9, 2017

பிஸியோதெரபி செய்த பேருதவி: கவிஞர் தணிகை.

பிஸியோதெரபி செய்த பேருதவி: கவிஞர் தணிகை.


Image result for physiotherapy


கடந்த வாரத்தில் கழுத்து சுளுக்கு, கழுத்தை திருப்பவே முடியவில்லை, வலது பக்கம். ஒரே பக்கம் குக்கிப் போய் கழுத்தை புதைத்துக் கொண்டு அலுப்பில் உறங்கியதன் பரிசாக படுக்கையிலிருந்து எழுந்து புதிய நாளை ஆரம்பிக்கும்போதே தோன்றி இருந்தது.

ஒரிரு நாள் அப்படியே கழிந்தது. உடன் உடல் வலி, சளி பிடிக்கும் அறிகுறியுடன் தொண்டை எரிச்சல், சற்று உள் காய்ச்சல், காய்ச்சல் வருவதன் அறிகுறி எல்லாம் தோன்றியது.

செவ்வாய் கிழமை அன்று கொஞ்சம் வேம்படிதாளம் அரசு மருத்துவமனையில் கொஞ்சம் நிலவேம்புக் குடிநீர்  ஒரு டம்ளர் குடித்ததாலோ, அல்லது என்னிடம் இருக்கும் கழுத்து வலிக்கான நேட்மர் ஹோமியோபதி  மாத்திரை எடுத்துக் கொண்டதாலோ அல்லது நண்பர் ஒருவர் எப்போதோ விலைக்கு வாங்கிக் கொடுத்த ரேபிட் ரெமிடி ஆர் ஆர் மாத்திரை போட்டுக் கொண்டதாலோ நிலை சுமாராகி இருக்க அப்படியே விட்டு விட்டேன்

ஆனால் அதிலிருந்து சில நாட்கள் கழித்து கழுத்து வலி அதிகமாகி பின் மண்டையிலிருந்து தோள் பட்டை வரை நன்றாக வலிக்க ஆரம்பித்து கழுத்தை திருப்ப முடியா வலி.

கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் செந்தில் குமார் அக்கறை எடுத்துக் கொண்டு இந்த வயதில் எல்லாம் கழுத்தில் சடக்கு என்றெல்லாம் போட்டுக் கொண்டிருக்காதீர் உள்ளபடியே மற்றவர்க்கு நன்றாக கழுத்து சுளுக்கு எடுக்கும் எனக்கு யாரை வைத்து சுளுக்கு எடுக்கலாமா சரியாகிவிடுமா என்றெல்லாம் யோசித்து வந்த எனக்கு

விநாயகா மருத்துவக் கல்லூரியில் உள்ள பிஸியோதெரபி துறைக்கு அழைத்து சென்றார். அங்கே பெருமாள் என்னும் மருத்துவர் விசாரித்து விட்டு கவிழ்ந்து பெட்டில் படுக்க வைத்து சுமார் 20 நிமிடம் இருக்கலாம், வைப்ரேட்டர் வைத்து மசாஜ் செய்தார். அது மிகவும் நன்றாக கழுத்துப் பகுதியில் இருந்த சுளுக்கை ஒரே சிட்டிங்கில் சீர் செய்துவிட்டது. மறுபடியும் வலி இருந்தால் வாருங்கள் என்றார். ஆனால் போகுமளவு வலி எல்லாம் இல்லை.அது ஒரே முறையில் சரியாகிவிட்டது.

அந்த மருத்துவர் பெருமாளுக்கும், உடற்கல்வி இயக்குனர் செந்தில் அவர்களுக்கும் விநாயகா பிஸியோதெரபி துறைக்கும் நான் கடமைப்பட்டவனாகிவிட்டேன். அதற்கே இந்தப் பதிவு.

அதை அடுத்து உடல் வலி, காய்ச்சல், மூட்டு வலி ஆகியவை இருப்பதாக சொல்லி வேம்படிதாளம் அரசு மருத்துவ மனையில் மருத்துவர் ராஜேந்திரன் அவர்களிடம் சில வேளைக்கு மாத்திரைகளும் ஒரு ஊசியும் போட்டுக் கொண்டு காய்ச்சலையும் விரட்டி விட்டேன். உடற் வலிக்கு ஏதும் மாத்திரை வேண்டாம் ஏன் எனில் உங்களுக்கு அல்சர் இருக்கிறது. எனவே சளிக்கும் காய்ச்சலுக்கும் மருத்துவம் செய்து கொள்ளலாம், உடல் வலியை அப்படியே பொறுத்துக் கொள்ள வேண்டியதுதான் என அந்த மருத்துவர் பக்குவமாக எனக்கு வழி நடைப்படுத்தினார்.

பல் மருத்துவர்  ஒருவர் 3 வேளைக்கு நில வேம்புக் குடிநீர் குடித்திருந்தாலே காய்ச்சல் போயிருக்கும், மருத்துவ சிகிச்சை மேற்கொண்டாலும், இல்லாவிட்டாலும் 7 நாளுக்குள் உடலுக்கு ஏற்படும் இது போன்ற சில பிணிகள் எல்லாம் போய்விடும் என்றும் சொன்னது எனக்கு காந்திய சிந்தையை மறுபடியும் கிளறி விட்டது. சில நாட்களில் சில யோசனைகள் சில பயன்பாடுகள் சில உதவிகள். சிலர்க்கு நன்றிகள்.

ஒரு பைசா செலவின்றி வேம்படி தாளம் அரசு மருத்துவமனையும், விநாயகா பிஸியோதெரபியும் என் உடலுக்கு வந்த பிணிகளை போக்கியதற்கு நன்றிக் கடன் தீர்க்கவே இந்தப் பதிவு.

Related image


மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.