Sunday, January 28, 2018

புகழ் பெற்ற முரண்கள்: கவிஞர் தணிகை

புகழ் பெற்ற முரண்கள்: கவிஞர் தணிகை

Image result for beautiful and famous contradictions

உள் செல்வதெல்லாம் தீட்டாகாது; வாயிலிருந்து வெளிவருவதே தீட்டாகும் என்ற ஒரு பழமொழி பைபிளில் இடம் பெற்றுள்ளது. அது 2000 ஆண்டுக்கும் மேம்பட்ட நாட்களில் யேசு சொல்வதாக உள்ளது இப்போது சரியாக இருக்குமா எனத் தெரியவில்லை. உள் செல்வதெல்லாம் என அவர் சொன்னது உணவை, உண்ணுவதை, அவை சரியாக இருந்தால்தாம் வெளித் தள்ளும் கழிவும் சரியாக இருக்கும். அவை பற்றியே உடல் நலமும் அமையும். ஆனால் அவர் தம் சீடருக்கு சொன்னது அனைவர்க்கும் பொருந்தா என்றும் கூட சொல்லி விட முடியும்.

வாயிலிருந்து வெளி வரும் வார்த்தைகளில் தாம் கவனம் இருக்க வேண்டும் அவைதாம் மற்றவரை புண்படுத்தி விடும் தீட்டானவை என்று பொருள் படவே அவை சொல்லப்பட்டுள்ளன.

அதையே தாம் வள்ளுவரும் தமது திருக்குறளில்:

தீயினால் சுட்ட புண் உள்ளாறும்; ஆறாதே
நாவினால் சுட்ட வடு

என்பார்.Image result for beautiful and famous contradictions

வாய் சுத்தம் என்பதும் உடல் நலம் என்பதும், நாம் வெளித்தள்ளும் கழிவு யாவுமே நாம் என்ன உள்ளே எடுத்துக் கொள்கிறோம் என்பதைப் பொறுத்தே அமைகிறது. எனவே பற்களும், ஈறுகளும், நாவும் , வாயின் மேலண்ணமும் அதன் கடைவாய் எலும்புகளும் மொத்தமாக வாய் என்ற மனித உடலின் வாசல் மிகவும் சுகாதாரமாக பேணிப் பாதுகாக்கப்பட வேண்டியது இல்லையேல் அது தலைவலி, காய்ச்சல், அதிகபட்சம் மாரடைப்பு புற்று நோய் ஆகியவற்றைக் கூட உடலுக்குக் கொடுத்து விடும்.

இது பற்றி நான் ஏற்கெனவே வாய் சுத்தம், ஆசன வாய்சுத்தம் என்ற எமது முந்தைய பதிவுகளில் சொல்லியுள்ளதால் அதை மறுபடியும் திருப்பி பதிவு செய்ய அவசியமில்லை என நினைக்கிறேன்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்த உணவு முறைகளும், அதன் தயாரிப்புகளும், பதப்படுத்தி உணவாக மாற்றி உண்ணுதலும் வேறு முறைகளில் இருந்திருக்கும். இப்போது அவை எல்லாம் வேறு வேறு. முழுக்க முழுக்க வேறு. மேட்டூரில் ஒரு வகையான சதைப் பிடிப்பில்லா முட்செறிவுடனான மீன்கள் வலைகளில் கிடைப்பதாக மீனவர்கள் துயரப்படுகின்றனர் . அவை பிடித்து மேலே விடப்பட்டாலும் அவை இறப்பதில்லை என்றும் சொல்லி உள்ளனர். அவை உணவுக்காக இல்லை.

இப்படி எல்லாமே மாற்றங்களில் ....

அதே போல யேசு ஓரிடத்தில் சொல்வார், கோயில் சுற்றி உள்ள வியாபார்களை எல்லாம் அடித்துத் துரத்தி விட்டு கோயில் ஒரு வியாபாரத் தலமல்ல என்பார்.

அது சரியானதே.

ஆனால் கடவுள் கட்டிய கோயிலில் மனிதர் குடியிருப்பதில்லை என்ற ஒரு சொல்லின் ஆட்சி பைபிளில் உண்டு.

அப்படி இருக்கும்போது ஏன் இத்தனை பிரிவுகளுக்குமுண்டான தேவாலயங்கள்?

யேசுவின் வார்த்தை அல்லது பைபிளின் வார்த்தை என்று சொல்லப்போனால் இவை போன்ற கோவில்களுக்கு அவசியமில்லை. அங்கு கடவுள் இருக்கப் போவதுமில்லை.


Related imageRelated image
ஆனால் மக்களை நெறிப்படுத்த அவர்களை மனிதக் குவியலிலிருந்து பிரித்தெடுக்க ஒரு இடம் தேவை அங்கு பேசப்படுபவை அவை சார்ந்து இருக்க வேண்டும் என்ற முறைமைகளில் அவற்றின் நம்பிக்கையாளர்களால் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன....அவ்வளவில் அதை நாம் பார்த்தால் சரிதான்.

ஆனால் அவற்றில் முன்பே சொன்னபடி கடவுள் இருக்கிறாரா என்பதெல்லாம் ஆய்வுக்குரியதுதான்.

மதங்கள் மனிதரை மாட்சிமைப்படுத்தும்போதும், நெறிப்படுத்தும்போதும் புகழ் பெறுவன பேதம் விளைத்து மனிதத்தை சிறுமப்படுத்தும்போது அவை அபின் தாம் மார்க்ஸ் சொன்னபடி...
Image result for beautiful and famous contradictions

வாழும்  வழித்தடமே
   கடவுள்

மௌனத்தின் விளைவாகும் தொழுகை
தொழுகையின் விளைவாக உண்மை
உண்மையின் விளைவாக அன்பு
அன்பின் விளைவாக சேவை
 சேவையின் விளைவாக அமைதி....அன்னை தெரஸா.
Image result for jesus christ and apj

அதை எல்லாம் விட வேறொரு முக்கியமான சொல்ல மறந்து விட்ட ஒன்று:வீட்டிலும் சொந்த ஊரிலும் தவிர இறைவாக்கினர் வேறெங்கும் மதிப்பு பெறுவர் என்ற வாக்கு உண்டு.

அதற்கேற்ப யேசுவை அவருடைய சொந்த ஊரில் எவருமே நம்பவில்லை.அங்கே எந்த விதமான அதிசய நிகழ்வையும் அவரும் நிகழ்த்தவில்லை...அல்லது அவராலும் நிகழ்த்த முடியவில்லை என்றும் சொல்லலாமா ஏன் எனில் அந்த மக்களுக்கு அவர் நம் ஊர்க்காரர் ஜோசப் மகன் தானே அவன் என்ன செய்யப் போகிறான் என்ற நம்பிக்கையின்மையாலும்தான்..

Image result for jesus christ and apj


ஆனால் கல்வியும், மனிதரின் செயல்பாடுகளும் இது போன்ற வசனங்களை கடந்து சென்று புகழ் பெற்று விடுகின்றன. அந்த வகையில் எனக்கு என்னத் தோன்றுகிறது எனில் அப்துல் கலாம் போன்ற மாமனிதர்களால் அவர் ஊருக்கும் வீட்டுக்கும் பெருமைதான், மதிப்புதான்...அவரால் ராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம், பேய்க்கரும்பு அவரது நினைவிடம் யாவுமே பெருமை பெற்று விட்டதே...எனவே அந்த வசனத்தை கடந்து நின்று தமது சொல்லால் பெயரால் செயலால் பெருமைப்பட வைத்துவிட்டாரே அதன் காரணம் கடுமையான உழைப்பு, உண்மை, நேர்மை,அறிவு , ஆற்றல் , கற்ற கல்வி, பெற்ற மனிதர்கள், எல்லாவற்றையும் மீறிய அவரின் பணிவு போன்றவை இது போன்ற வசனங்களையும் தாண்டிச் சென்று பெருமைப் பட வைத்து இது போன்ற வசனங்களை, சொற்றொடர்களை, பழமொழிகளை, இறைவாக்கையும் கூட மனித ஆற்றல் விஞ்சி விடுகின்றன எனத் தோன்றுகிறது.

Image result for jesus christ and apj


மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Friday, January 26, 2018

குடி அரசு: கவிஞர் தணிகை

குடி அரசு: கவிஞர் தணிகை

Image result for 69th republic day of india


பொன் மாணிக்க வைர முத்து மரகத மணி நடைப் பயிற்சி சென்றபடி இருந்தார். ராசா கடையில் டம்ளருடன் பாலாவின் தந்தை மஹேஸ் குடித்துக் கொண்டிருந்தார் அருகே சிகரெட் சேகரும், சிப்பாய் முருகனும் கடைக்கார மும்பை சொர்ணக்காவும் இருந்தனர்.

என்ன இதுதான் குடி அரசா ? என சிகரெட் சேகரைக் கேட்டார்....

பதில் 1. இல்லை சார், சாம்பள்ளி போனாதான் குடி அரசு

என்ன சாம்பள்ளி போனாதான் குடி அரசா ? மறுபடியும் இவர் கேட்க‌

பதில் 2. இப்போது  சிப்பாய் முருகன் சொன்னார்:
           டாஸ்மார்க் போனாதான் குடி அரசு என்கிறார்கள் என்றார்,

அதற்குள்

 பதில் 3: இபோது மஹேஷ் சொன்னார், இல்ல சார்,
         சுடுகாடு போனாதான் குடி அரசு என்றார்

( சாம்பள்ளி சுடுகாட்டில் தான் அரசின் மதுக்கடை உள்ளது)

ஆமாம் ஆமாம் சுடுகாடு போனாதான் குடி அரசு ...சரியாகத்தான் சொல்லி இருக்கிறீர் என எதையோ நினைத்தபடி நடக்க ஆரம்பித்தார்.

மக்களின் வாக்குகளை காசு கொடுத்து வாங்கி விட்டாலும்,அதற்காக அவர்கள் கருத்துகளை கவனிக்காமல், இளைஞர் கல்லூரி மாணவர் என்றும் கருதாமல் அடித்து இழுத்து செல்வதும், சிறை வைப்பதும் , அவர்கள் வாழ்வை சூறையாடுவதும் என்ன நியாயம்?

மக்களின் வரிப்பணம் போதாது என்றுதானே இத்தனை களேபரம், போக்குவரத்து விலையேற்றம்,போராட்டம், டாஸ்மார்க் தள்ளாட்டம் எல்லாம்...

அந்த இளைஞர்கள் தாம் உண்மையாக தமது கருத்தை ஒளிவு மறைவின்றி வெளிக்காட்டுபவர்கள், ஏன் நாமே கூட எவர் படிக்கிறார் எவர் படிக்கவில்லை என்றெல்லாம் தெரியாமல் அவை என்ன மாற்றம் விளைவிக்கப் போகிறது என்றெல்லாம் கருதாமல் கடமையைச் செய் பலனை எதிர்பாராதே என்ற கீதையின் சொல்லைப் பின் பற்றி வாழ்வை அதன் வழி வாழ்ந்து கரைந்து கொண்டிருப்பார்தாம்...

அட சேலம் செல்ல வேண்டுமென்றால் ஒரு நூறு ரூபா இல்லாமல் கால் வைக்க முடியாது போலிருக்கிறதே...

குடி அரசு உரையில் ஒரு தேசப்பற்றாளர் பேசிக் கொண்டிருந்தது காலையில் கேட்டது நினைவுக்கு வந்தது அவர் சொன்னார் பெருமையாக, இந்த நாட்டின் இந்த குடியரசுக்கு கிழக்கத்திய நாடுகளின்( பத்து தலை இராவணர்கள் அல்ல அல்ல) பத்து நாடுகளின் தலைவர்கள் வந்து கலந்து கொன்டனர் என்று  அதே நேரத்தில் விளையாட்டில் விவசாயத்தில் வறுமைக்கோட்டில் நம் நாடு நலிவடைந்து வருவதையும் குறிப்பிடத் தவறவில்லை

இந்தக் குடியரசு தின விழாவில் கோட்டையிலிருந்து செங்கோட்டையிலிருந்து அணி வகுத்த வண்டி வாகன வேடிக்கை விருந்துகளில் தமிழக வாகனம் வரவில்லையாம்...

ஏன் தெரியுமா, குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்ட என்றும் முதல்வரான ஜெ மறைவுக்கு துக்கம் அனுஷ்டிப்புதான்...அட ஜோசப் விஜய்க்கும் கூட சிலை வைத்துள்ளார்களாமே...இப்படி எல்லாம் ஒரு மேடைப்பேச்சு,

மோடி இந்த நள்ளிரவு முதல் எதையும் அறிவிக்காதிருப்பாராக...ஏன் எனில் ஏற்கெனவே அவரால் எல்லா தொழிலும் முடங்கி எழ முடியாமல் தடுமாறிக் கொண்டே இருக்கிறது ரிலையன்ஸ் குரூப் கொடி கட்டிப் பறக்க..

அட நம்ம செல்லூர் அல்ல தெர்மாக்கூல் அய்யாவுக்கு ஒரு ரூபாய் எல்லாம் பெரிதில்லையாமே...கடந்த சுமார் 2 வருட காலமாக ஒரு ரூபாய் தள்ளுபடியுயில் சேலம் போய் வந்தது அந்த தனியார் முதலாளியின் நிலைப்பாட்டால், அவரை மறுபடியும் கேட்க வேண்டும், அவரும் 24 ரூபாய் 36 என்றான பின்னும் உன்னால் சேலம் செல்ல முடிகிறது என அந்த ஒரு ரூபாயையும் பிடித்துக் கொள்ளச் சொல்லி விட்டார் போலும்.இப்போது நடத்துனர்கள் சில்லறை தராமல் எல்லாரையும் போல டிக்கட் கொடுத்து விடுகிறார்கள்...அந்த ஒரு ரூபாய் அருமை எங்களுக்குத் தானே தெரியும்...அதை அப்படியே எடுத்து வந்து டப்பாவில் போட்டு வைப்பதை மகனும்     மனைவியும்

    சில்லறை தேவைப்படும்போதெல்லாம் எடுத்து செலவு செய்வார்கள்...இனி அதற்கு வழி இல்லை...

சில்லறை பிரச்சனையே இல்லாமல் சுத்தமாக வழித்து எடுத்து விட்டார்கள்...நடுத்தரமக்களின் பணத்தை நாம் இந்தியன் எகனாமி என்பதை பிரமிட் அமைப்புடன். மிகவும் கூம்பும் இடத்திலான சதவீதம் மிகவும் அதிக செல்வ வளத்துடனும், அடியில் உள்ள அதிக மக்கள் சிறிய செல்வ அளவுடனும் என பாடம் நடத்துவதை அப்படியே பார்க்கலாம்,,,இந்தக் காசு எல்லாம் முதலாளிகளுக்கும், அரசியல் கட்சிக்கும் இலஞ்சமாக  செல்வதையும்...இவர்களுக்கு அந்த ஒரு ரூபாயையும் ஏழையின் பாக்கெட்டிலிருந்து எடுத்து பணக்கார பக்கெட்டில் போட வேண்டும் என்பது தானே...இலக்கு நிறைவேறி விட்டது... But it is not only meagre one rupee But instead of 24 now the fair is 36 to 53 km. so: 12 Rupees higher in this one hike....


நல்ல குடி அரசு....மத்திய பாராளுமன்ற தேர்தலையும், மாநில சட்டசபை தேர்தலையும் ஒரு சேர நடத்த முடியாதாமே...ஓய்வு பெற்ற தேர்தல் ஆணையர் சொல்லியுள்ளார், உனக்கே ஓய்வு கொடுத்து விட்டார்களே..உன்னை எவர் கேட்டது?... how your election commission conducted RK Nagar one constituency every body knows about it... மக்களுக்கும் பொது ஜனநாயகத்துக்கும் நலம் பயக்கும் சீர் திருத்தம் ஏதாவது செய்ய வேண்டும் அல்லாவிடில்.....மூடிக் கொண்டிருக்க வேண்டியதுதாமே...ஏன் இந்த ஊடகப் பெருச்சாளிகள் ஏதாவது இறை போட்டுவிட்டனவா..?

நடையும் நடைப் பயணமும் ஓய்ந்தது...வழி எங்கும் இந்த பழநி, திருப்பதி நடை பயண வாசிகள் பிளாஸ்டிக் குப்பையை ஆங்காங்கே சாலைகளில் போட்டுச் செல்கிறார்களே என ஒரு அம்மணி வேறு ஆற்றாமையில் வாட்ஸ் அப்பில் அழுது கொண்டு அடம் பிடிக்கிறது அதெல்லாம் இவர்களுக்கு கேட்க போகிறதா என்ன...வெற்றி வேல், வீர வேல்....
மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை

Sunday, January 21, 2018

போக்குவரத்தும் பேருந்தும் பொதுமக்கள் சொத்து எனவே நஷ்டத்தை அவர்கள்தாம் ஏற்க வேண்டும்: கவிஞர் தணிகை

போக்குவரத்தும் பேருந்தும் பொதுமக்கள் சொத்து எனவே நஷ்டத்தை அவர்கள்தாம் ஏற்க வேண்டும்: கவிஞர் தணிகை

Image result for politics is not a business


தமிழக முதல்வர் போக்குவரத்துக் கழகங்களும் பேருந்துகளும் பொதுமக்கள் சொத்து, எனவே நஷ்டத்தையும் அவர்கள்தாம் ஏற்க வேண்டும்,  என மேடையில் பேசி இருக்கிறார். எனவே இலாபம் வந்தாலும் பொதுமக்களுக்கு பிரித்துக் கொடுப்பார்கள் என நம்புவோமாக...

இலாபமும், நஷ்டமும் வியாபாரம், தொழில் இவற்றுக்கு பொருந்தும். அவற்றிலும் இலாபம் பிரித்துக் கொடுக்கப்படும், அதை அனுபவிப்பவர்கள் தாம் நஷ்டம் வரும்போதும் சந்திக்க வேண்டும் தாங்கிக் கொள்ள வேண்டும்.

ஆனால் போக்குவரத்து, மருத்துவம், கல்வி இவை எல்லாம் சேவை என்ற அடிப்படையில் இருப்பவை .முதல்வரின் இந்தப் பேச்சிலிருந்து இவர்கள் எலலாருமே வியாபாரம், தொழில் செய்து வந்தவர்கள்....அரசியலில் இருந்து ஆட்சி, சேவை என்றெல்லாம் செய்ய பொருத்தமானவர்களே அல்ல.

எம்.ஜி.ஆர், ஜெ கொடுத்த துறை என அவர்களை எல்லாம் இல்லாத அவர்களை எல்லாம் மக்களை ஏமாற்றத் துணைக்கழைக்கிறார்கள். விஜயபாஸ்கர் என்ற போக்குவரத்து மந்திரி மன்னிப்பு கேட்டுள்ளார். கம்யூனிஸ்ட்கள் கட்டண உயர்வுக்கு ஒத்துழைப்பேன் என்றதாக சொன்னவர்கள் இப்போது எதிர்க்கிறார்கள் என்று சொல்கிறார். அவர்களுடையதா ஆட்சி.? நீங்கள் ஆண்டு விட்டு அவர்கள் மேல் ஏன் பழி போடுகிறீர்கள்? அவர்கள் இவ்வளவு அதிகம் கட்டண உயர்வு செய்வீர்கள் என்று ஒரு போதும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் ...எனவே எதிர்க்கிறார்கள் என்று சொல்லலாமா?

பொன் இராதாகிருஷ்ணன் என்னும் மத்திய பா.ஜ.க மந்திரி இந்த கட்டண உயர்வை ஆதரிக்கிறாராம்...மக்களே நீங்கள் கவனித்துக் கொள்ளுங்கள்.

இவை எல்லாம் இப்படி இவர்களுக்கு அத்துபடி இதனால்தாம் ஓட்டுக்கு காசு கொடுத்து வாங்கி விலைக்கு வாங்கி வியாபாரம் நடத்தி தொழில் என்று மக்களாட்சியைக் கேலிக் கூத்தாக்கி வருகிறார்கள்....எனவே இவர்களை எல்லாம் தூக்கி எறிய வேண்டிய மக்களாகிய நீங்கள் மழுங்கிக் கிடப்பதும் மதுவில் மயங்கிக் கிடப்பதுமாய்...காலம் கழித்து பொறுப்புணராமல் இருந்து வருகிறீர் எனவே அவர்கள் காலம் அப்படியே போய்க் கொண்டிருக்கிறது....

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.Saturday, January 20, 2018

ஞாநியுடன் ஒரு சந்திப்பு: கவிஞர் தணிகை

ஞாநியுடன் ஒரு சந்திப்பு: கவிஞர் தணிகை

Image result for gnani sankaran


ஞானியின் மறைவு எனக்கும் அவருக்கும் நேர்ந்த ஒரு சந்திப்பை நினைவுக்கு கொண்டு வந்தது. அது 90 முதல் 95க்குள்ளான ஆண்டாக இருக்கலாம். டான்பாஸ்கோ இன்ஸ்டியூட்டில் சென்னையில் தான் மீடியா எக்ஸ்ப்ளாய்ட்டேசன் என்ற ஒரு இரண்டு மூன்று நாள் கருத்தரங்கம்...

இந்து என். ராம், ஆசியாநெட் சசிக்குமார், இப்போது இந்துவின் ஆசிரியராக இருக்கும் பன்னீர் செல்வம் இப்படி பலரில் சிலர் மட்டுமே என்னுள் நினைவில் இருக்கின்ற்னர் அது மட்டுமல்லாமல் பெண்பாலினத்தவரும் நிறைய வந்திருந்ததாக நினைவு.

அந்த டான் போஸ்கோ இன்ஸ்டியூட் என்னை இரண்டு முறை என்னை அழைத்திருந்தது இரண்டு முறையுமே எனக்கு  நல்லவை ஏதோ நடந்ததாக நினைவு.

அதை எல்லாம் விட அந்த கருத்தரங்கத்தில் ஞாநி ஒரு தொடர்பாளராக இருந்தார் தேவையில்லாமல் அனைவர்க்கும் பேச்சாளர்கள் பேசுவது புரிந்தே இருந்தாலும் இவர் மறுபடியும் அதை விளக்கிச் சொல்லி எங்களை பாடாய் படுத்தி எடுத்தார்.

நான் எழுந்து நின்று, நீங்கள் அமருங்கள் இங்கு வந்திருக்கும் அனைவருமே பத்திரிகையாளர்கள், படித்தவர்கள், மொழியறிவு உள்ளவரே, நீங்கள் ஒரு முறை ஒருவர் பேசியதை மறுபடியும் திருப்பிச் சொல்லி எங்களை ஏன் அனைவரின் நேரத்தையும் வீணடித்து வெறுப்பேற்றாதீர் எனச் சொல்லி அவரை மட்டுப்படுத்தி, கட்டுப்படுத்தி அமரச் செய்தேன். அவருக்கு அது வியப்பாகவும், திகைப்பாகவும் தலையில் தட்டியதாகவும் அமைந்து விட்டது.

ஆனாலும் அதன் பின் அவருடைய எழுத்துகள், பலமுறை பத்திரிகை ஊடகங்களில் வெளிவந்தபோதெல்லாம் அவரைப் படித்து அந்த சம்பவத்தை நினைவு கூர்ந்தேன்.

அந்த மனிதர் மறைந்த செய்தி அறிந்து உண்மையிலேயே வருந்துகிறேன்.சமுதாய சிந்தனை உள்ளார் எல்லாம் எண்ணிக்கையில் குறைந்து வருவது தமிழகத்துக்கு நல்லதல்ல...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

மக்கள் நல அரசின் மாயாஜால பேருந்து கட்டண உயர்வு:/ நாய் வாலை நிமிர்த்த முடியாது: கவிஞர் தணிகை

மக்கள் நல அரசின் மாயாஜாலம் பேருந்து கட்டண உயர்வு:/ நாய் வாலை நிமிர்த்த முடியாது: கவிஞர் தணிகை


Image result for bus fare hike in tamilnadu

மேட்டூர் டூ சேலம் 24 ரூபாயிலிருந்த கட்டணம் இன்று 36 ரூபாய் ஆகிவிட்டது. தெர்மாக்கூல் செல்லூர் ராஜு ஒரு ரூபாய் என்பது எல்லாம் இன்று மதிப்பில்லாதது என்கிறார் மதிப்பில்லாதவர், மேலும் போக்குவரத்து மந்திரி ஒரு ரூபாய்தாம் ஏற்றி உள்ளோம் மக்கள் தாங்கிக் கொள்ள வேண்டும், இது மக்கள் நல அரசு வேறு வழி இல்லாததால்தான் ஏற்றி உள்ளோம், கர்நாடகா, கேரளா, ஆந்திராவில் எல்லாம் பேருந்து ஓட்டை உடைசல் இங்குதான் (இறந்தபின் செல்லும் சொர்க்க ரதமாக) மிகவும் நன்றாக‌ இருக்கிறது என்கிறார். முதல்வர் மனமுவந்து ஏற்றவில்லை என்கிறார். உள்ளாட்சி தேர்தலிலும் அ.இ.அ.தி.மு.கவே வெல்லும் என்கிறார் பொதுமக்களே கவனித்துக் கொள்ளுங்கள்.

ஏழை எளியோர் தொழிலுக்கு செல்வோர் அடிவயிறு கழுவ பயணம் செய்வோரிடமிருந்து இந்த அரசு வயிற்றில் நெருப்பெரிய , வய்ற்று எரிச்சலைக் கொட்டி மிக அதிமான கட்டண உயர்வை செய்திருக்கிறது. அதுவும் குறைக்கவே போவதில்லை அதற்கான வழி இல்லை என்கிறார்கள்.

ஏழைகளிடமிருக்கும் கொஞ்ச நஞ்ச காசையும் பிடுங்கி தனியார் பேருந்து முதலாளிகளிடம் குவிக்கவும், அரசுப் பேருந்து வழியாக அரசுக்கு பணம் சேர்க்கவும் மோடி வித்தை செய்திருக்கிறார்கள்.

இவர்கள் பேருந்து ஊழியர்களின் போராட்டத்தை முடித்தபோதே விவரம் அறிந்தார் அறிவார் இப்படி பேருந்து கட்டணத்தை உயர்த்தித்தான் நிதிச் சுமையை மக்கள் செலுத்தித்தான் செய்வார்கள் என...

யாருக்கு என்ன என்ன வேலை செய்யத் தெரியுமோ அந்த வேலையை கையில் எடுப்பார்கள்.,,,பாலம் கட்டுதல், பஸ்போர்ட் கட்டுதல், கட்டடம் கட்டுதல் இதெல்லாம் இவர்களுக்கு கை வந்த கலை எங்களூரில் ஒரு கெமிகல் கம்பெனிகாரர் கோவில் என்ற பேரில் கட்டடம் கட்டிக் கொண்டே செல்வது போல...

ஸ்பேர் பார்ட்ஸ் விலை அதிகம், கடும் டீசல் விலை அதிகம் எனவே காரை விட்டு விட்டு நடந்து போங்களேடா பாவிகளா? மக்களின் பணத்தில் இருந்து செலவுக்கு என எடுத்துக் கொண்டு நீங்கள் காரில் போய்க்கொண்டு வேதந்தம் பேசுகின்றன வேதாளங்கள்.

கக்கனைப் போல காமராசரைப் போல, எளிமையான நட்சத்திர பிரபலங்களைப்போல நீங்களும் காரில் செல்லாமல் பேருந்தில் சென்று கொண்டே இப்படி எல்லாம் சொல்லி இருந்தால் இந்தப் பதிவுக்கே அவசியம் இருந்திருக்காது பன்னாடைகளா? ஸ்பேர் பார்ட்ஸ் ஊழலைப் பற்றி ஒவ்வொரு டிப்போவில் இருக்கும் பணி செய்யும் ஊழியர் எல்லாம் வேறு வழியில் வாயில் இல்லாமல் வேரு புறத்தில் சிரிக்கிறார்கள்...

சகாயம், போன்றோரிடம் விட்டு விடுங்கள், கோ...ஆப்டெக்ஸை நட்டத்திலிருது விடுவிப்பார், சுதந்திரமான தலைமையேற்க அவர் போன்றோரை தலமைப் பொறுப்பை கொடுங்கள் நல்லது நடக்கும்...

மாறாக கூலித்தொழிலாளி , மாதாந்தர தனியார் ஊழியர்களின் தலையில் கைவைத்து பிழைப்பைக் கேள்விக்குறி ஆக்கிவிட்டீர்களே அரசியல் பதர்களே...

நீங்கள் அரசுப் பணியாளரை ஒன்றும் பிடுங்க முடியாது. பிடுங்க வேண்டாம். தனியார் மற்றும் சிறு நிறுவனங்களில் , தனியார் பள்ளி, தனியார் கல்லூரி போன்ற  தொழில் நிறுவனங்களில் ஊழியர்க்கு சுமார் குறைந்த பட்ச ஊதியம் ஒன்ற நிர்ணயம் செய்து உத்தரவு இடுங்கள் அதன் பின் இது போன்ற கட்டண உயர்வை செய்யலாம், அல்லாது இப்படி கட்டண உயர்வை செய்து தனியார் முதலாளிகளின் பையை அரசியல் வாதிகளான உங்கள் கையை நிரப்புவது என்ன நியாயம் அதற்காக நாங்கள் எல்லாம் நூற்றுக்க்கு நூறு சதம் வாக்குச் சாவடி சாவடிப்பதுதான்  வந்து வாக்களித்தோம்\

எல்லாம் கத்துவார்கள்  20 சதம் எனச் சொல்லி விட்டு 100 சதவீதம் ஏற்றிவிட்டு அதில் ஒரு 50 காசை குறைத்து விட்டு கோரிக்கையை நிறைவேற்ற குறைத்து விட்டோம் என்ற நாடகத்தை அடுத்து அரங்கேற்றுவதை அரங்கேறுவதைப் பார்க்கலாம்...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Friday, January 19, 2018

கமல்ஹாசனின் வரவு நல்வரவாகட்டும்: கவிஞர் தணிகை.

கமல்ஹாசனின் வரவு நல்வரவாகட்டும்: கவிஞர் தணிகை.

Image result for apj memorial place


அப்துல் கலாம் நினைவிடத்திலிருந்து தமது அரசியல் பயணத்தை 21.01.2017ல் துவக்கும் கமல்ஹாசனை மகிழ்வுடன் வரவேற்கிறோம்.

ஏன் எனில் இவர் இரண்டரை மணி நேரம் ஆகாய விமானத்தில் பேசிக் கொண்டிருந்ததை பெருமையாக நினைத்து,

அவர் பிறந்த அதே மண்ணில் தானும் பிறந்தது பற்றி மகிழ்ந்து

அவருக்கு அஞ்சலி செலுத்திய பின் அவரின் ஆசிகளுடன் புறப்படுவதற்காக மறுபடியும் பூக்கும் தளம் மனமுவந்து வாழ்த்துகிறது. பாராட்டுகிறது. வரவேற்கிறது. நல் வரவு கூறுகிறது.

யாரிடம் குறை இல்லை, யாரிடம் நிறை இல்லை எல்லோரும் இந்நாட்டு மன்னர் யாவரும் ஒரு விலை யாவரும் ஒரு நிறை என்ற பாரதியின் சொல்லுக்கேற்ப இனி ஆரம்பித்த இந்த நேரத்திலிருந்தாவது எந்த பிழையும் செய்யாமல் மக்களுக்கு நல்லது செய்ய நினைத்தாலும் போதும்.


அந்த வகையில் கமல் இன்றைய அரசியல்வாதிகளுக்கு எவ்வளவோ தேவலாம்.

கமல் மேட்டூர் வந்தால் எனை வந்து சந்திக்க முயலுங்கள். அடியேன் 10 ஆண்டுகள் இந்த நாட்டின் அடித்தட்டு மக்களுக்கு உண்மையாக உழைத்தவன்

அப்துல் கலாமின் கடிதத்தொடர்பில் அவர் குடியரசுத் தலைவராக இருந்தபோதே இணைந்தவன். அவர் எழுதிய கடிதம் இன்றும் என்னுள் என்னுடன் இருக்கிறது நினைவுச் சின்னமாக. அவர் 2004 டிசம்பர் 23ல் அதை ராஷ்ட்ரபதிபவனிலிருந்து எனக்கு இலஞ்ச ஒழிப்பு அவரவர் குடும்பத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டிய ஒன்று என்ற கருத்துடன் தமது சொந்தக் கையெழுத்துடன் முதல்வரியை எழுதி ஆரம்பித்துள்ளார். தமிழில் கையொப்பமிட்டு முடித்துள்ளார்.

அவரை செம்மொழி மாநாட்டிற்கு அழைக்காமல் மாநாட்டை நடத்தியவர் கலைஞர்

அவரை அவரின் இறுதி அஞ்சலிக்கும் கூட செல்லாமல் சென்னையில் இருந்தவர் அ.இ.அ.தி.மு.கவின் நிரந்தர முதல்வர் ஜெ.

அவரை இரண்டாம் முறை  குடியரசுத் தலைவராக ஒரு பேச்சுக்கும் கூட தமிழராயிருந்தும் ஆதரவு தராமல் அவர் கல்லூரிக்கே வகுப்பு எடுக்க போகட்டும் எனச் சொன்னவர் தி.மு.கவின் நிரந்தரத் தலைவர் மு.க.

ஆனால் அந்த மனிதரை யாவரும் பாராட்டுவர். உலகே பாராட்டும் நீங்களும் நினைத்து ஆரம்பிக்கிறீர். வெற்றி உண்டாகட்டும். நான் 3 முறை பார்த்துள்ளேன். அதில் 2 முறை ஈரோடு புத்தகத் திருவிழாவுக்கு வந்தபோது.

எனது மகனையும் அழைத்து சென்று காண்பித்தேன் அதுவே அவர் விடைபெறுவதற்கு முன் ஆண்டு...

எனது புத்தகங்களையும் அவருக்கு பரிசளித்துள்ளேன்.

எனது சுயவாழ்வின் குறிப்புகள் எவருமே எளிதாகப் பெற முடியாதது. எனவே நீங்கள் அது பற்றி அறிய எனது தோழமையும் உங்களது பக்கம் ஆதரவாக இந்தப் பதிவு. ஒரு வேளை இது உங்கள் கண்ணில் பட்டால் தொடர்பு கொள்க...

கலாமின் ஒரு இரசிகன், ஒரு காதலன் உங்களுக்காகவும் உங்கள் கலாமை வணங்கிடும் பண்புக்காகவும் உங்களோடு பயணம் செய்ய ஆவலாயிருப்பான்.
 
நன்றி
Image result for kamal haasanவணக்கம்.

மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.

Wednesday, January 17, 2018

தானா சேர்ந்த கூட்டம் ஸ்கெட்ச் குலேபகவலி: கவிஞர் தணிகை.

தானா சேர்ந்த கூட்டம் ஸ்கெட்ச் குலேபகவலி: கவிஞர் தணிகை.

தானா சேர்ந்த கூட்டம்:
Image result for thaanaa serndha koottam


சிவகுமார் பாசறையில் இருந்து எடுக்கப்பட்டுள்ள படம். ஞானவேல்ராஜா சூரியா கூட்டணி. பெரிதாக சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல் சும்மா ஜாலியாக வேண்டுமானால் பார்க்கலாம். ஆனால் இதில் சொல்லப்பட்டதற்கும் நிஜ வாழ்க்கைக்கும் சிறிதும் கூட தொடர்பேற்படுத்தி சீர் தூக்கி ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது, வேலை கிடைக்கவில்லையே என்ற ஒரு சிறு இளைஞர்களின் பிரச்சனை தவிர.

எல்லோரும் ஏற்கெனவே சொல்லி விட்டார்கள், கொஞ்சம் ஜென்டில் மேன், கொஞ்சம் கமலின் சத்யா, கொஞ்சம் இலஞ்ச ஊழல், கொஞ்சம் ராமைய்யா, கொஞ்சம் நாயகன் இப்படியே பார்த்த படங்களை எல்லாம் நினைவூட்டிய காட்சிகள் கடைசியில் நாடக பாணியில் எல்லாம் இவர்கள் செட்டப்பில் கெட்டப்பில் சம்பளம் பெறும் போலீஸ்கள் படத்தை முடித்து வைக்கிறார்கள். சுரேஷ்மேனனை நீண்ட காலம் கழித்து இதில் பார்க்கிறோம். சுரேஷ் மேனன் மற்றும் ரேவதி தம்பதியர்க்கு இது ஒரு வாய்ப்புக் காலம் போலும். இருவருமே இரண்டு படங்களில் முக்கியமான பாத்திரத்தில் நடித்து பொங்கல் படங்கள் வெளிவந்து விட்டன.

ரம்யா கிருஷ்ணன் நன்றாகவும், சத்யன் சுமாராகவும் மற்றவர்கள் எல்லாம் அவரவர் பங்குக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி இருக்கிறார்கள். என்றாலும் சில காட்சிகள் இரசிக்கும்படியாக இல்லை. சில காட்சிகள் இரசிக்கும்படியாக இருக்கின்றன.கார்த்தி நயவஞ்சக காவல் துறை அதிகாரியாக கடைசியில் இவர்கள் அனைவரையும் வீழ்த்தி விடுகிற இளைஞர் படையுடன் சூரியா.

கீர்த்தி சுரேஷ் எல்லா படங்களிலும் ஒரே மாதிரியாக வழிகிறார். இவருக்கு அவ்வளவு பெரிய ரோல் எல்லாம் இல்லை. ரம்யா கிருஷ்ணனுக்கு இருக்குமளவு கூட இல்லாமல்.\ ஆனந்த ராஜ், மன்சூர் அலிகான் போன்ற நடிகர்கள் வாய்ப்பின்றி இருந்தவர்கள் இப்போது பொறுப்பை உணர்ந்து செய்துள்ளனர்.

விக்னேஷ் சிவனும், மணி அமுதவனும் எழுதி அநிருத் இசையில் அந்தோணி தாசன் பாடிய பாடல் ஹைலைட் ஆப் திஸ் சினிமா
Image result for sketch movie

ஸ்கெட்ச்:
விக்ரமின் பல படங்கள் இதே போல வெளிவந்தவைதான். தமன்னா காதலியாக துணிச்சலான பெண்ணாக மணத்தை உதறி இந்த கொலைகார விக்ரமிற்காக வருகிறார். எதிர் பாராத முடிவை படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளாக இணைத்து படத்தை எழுந்து ஸ்கெட்ச் போட்டு நிற்க வைத்து விட்டார்கள். வேலையில்லா படிக்காத இளம் சமுதாயம் இப்படி ஒரு தொழிலுக்கு வரவே கூடாது என்ற முக்கியமான தற்போதைய சமூக அவலத்துக்கு காரணமான ஒரு கனமான கருத்தோடு படம் சொல்லப்பட்டிருக்கிறது ஆனால் அதற்காக முடிவு கொஞ்ச நேரம் நன்றாக இருப்பது ஒன்றிற்காக முழு படத்தையும் பார்க்க வேண்டிய நிர்பந்தத்தை இந்தப் படம் ஏற்படுத்தும்படியாக பார்த்த படத்தைப் போலவே இருக்கிறது புதுப்படம் போல் இல்லாமல்.


குலேபகாவலி:

நகைச்சுவை என்ற பேரில் ஒரு கூத்து. பார்ப்பவர்க்கு அது எப்படி எரிச்சலாக இருக்கும் என்ற உணர்வு துளி கூட இன்றி. ரேவதி மாஷாவாம், கரகரப்புக் குரல் மன்னன் இராஜெந்திரன் ஒரு பக்கம் தகர சிலேட்டாய் நம்மை அறுத்துத் தள்ள, பிரபு தேவா, ஹன்சிகா , மன்சூர் அலிகான் இன்னும் பிற நகைச்சுவை நடிகர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு ரேஸ், ரிலே செய்துள்ளார்கள். பிரபுதேவா இரண்டு ஆட்டம் பாட்டு வழக்கமாக செய்துள்ளார்.
Image result for kulebagavali


இந்த பொங்கல் அன்று வெளிவந்துள்ள இந்த மூன்று படங்களுமே பார்த்தாக வேண்டிய லிஸ்ட்டில் வராது. வேலை மெனக்கெட்டு எல்லாம் பார்க்க வேண்டியதில்லை.  மற்றபடி பொழுத்போக வேண்டும் என்றிருப்பார் மட்டுமே பார்க்கலாம்.

மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.

வாட்ஸ் அப் குப்பையில் சில நெல்மணிகள்: கவிஞர் தணிகை

வாட்ஸ் அப் குப்பையில் சில நெல்மணிகள்: கவிஞர் தணிகை

Image result for some good in a lot of wastage of whats app


வாட்ஸ் அப்பை நான் பயன்படுத்த ஆரம்பித்து பல மாதங்கள் இருக்கலாம். இதெல்லாம் காலத்தின் உபயம். ஒரு காலத்தில் பிறர் கேட்டுக் கொண்ட போதெல்லாம் என்னிடத்தில் அந்த உபயோகம் இல்லை எனச் சொல்லியதால் நான் அரிய தொடர்பு என்று நினைத்ததெல்லாம் கை நழுவிப் போயிற்று.

அதன் பிறகு இப்போது பார்த்தால் அதில் வருபவை யாவுமே பெரும்பாலும் வாரி வெளித் தள்ளிக் கொட்ட வேண்டிய குப்பையாகவே இருக்கிறது.அதை டெலிட் செய்வதே பெரிய வேலையாக தலைவலி கொடுக்கும் வேலையாகிவிட்டது.

திரும்பத் திரும்ப செய்திகள் ஏற்கெனவே படித்ததே திரும்பி வந்து கொண்டிருக்கின்றன.

சிலர் மட்டுமே அதை சரியாக பயன்படுத்துகிறார்கள் என்ற எண்ணம் உறுதிப்பட்டு விட்டது.

உண்மைதான் சில சிறு சிறு விஷயங்கள் கூட நமது கவனத்தில் பதியாமல் தெரியாமல் இருந்தவை எல்லாம் தெரிந்தன என்பது உண்மைதான். ஆனால் அவை சிலவற்றுக்காக நாம் செலவளிக்கும் நேரம் தேவையில்லா விரயம்

எலி மிச்சம் வைக்கும் பழம் தான் எலுமிச்சை , எலுமிச்சையை எலி தொடுவதே இல்லை போன்ற சிறு சிறு செய்திகளும்,

சிலர் வேலைவாய்ப்பு பற்றி பதிவு கொடுத்து பங்கிடும் செய்திகளும்,

சிலர் தரும் மருத்துவக் குறிப்புகளும் பயனாகின்றன  என்பதெல்லாம் உண்மைதான்
Image result for some good in a lot of wastage of whats app


ஆனால் குவிந்து கிடக்கும் குப்பையை கோழி சென்று கலைத்து அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும் ஒரு சில தானியமணிகளை பொறுக்கி எடுப்பது போல்தாம் இருக்கிறது இந்த வாட்ஸ் அப் செய்திகள் யாவும் ....எனவே

ஒரு காலத்தில் இது வேண்டும், இதில்தாம் அரசு சார்ந்த செய்திகள் எல்லாம் முதலில் வருகின்றன என நாமும் பயன்படுத்த வேண்டும், நமக்கும் இது வேண்டும் என இருந்த நான் இப்போது நிரம்பிக் கிடக்கும் ஆண்ட்ராய்ட் செட்டை செயல்பட விடாமல் தடுத்து தேங்கிக் கிடக்கும் இந்த குப்பை போன்ற செய்திக் குவியல் யாவற்றையும் நீக்குவதே சலிப்பூட்டும் வேலையாக நினப்பதால் இதில் இருந்து வெளியேறி விடலாம் என எண்ணமிட்டு வருகிறேன்.

ஆனாலும் புகைப்படம் எடுத்து அனுப்புவது, அலுவலக முறைகளில் பயன்படுவது, தொடர்பு வழி சாதனமாக பயன்படுவது, தொலை தூரத்தில் இருக்கும் தொடர்புடைய நபர்களுக்கு உடனுக்குடன் செய்தி பரிமாற்றம் செய்து கொள்ள, புகைப்படம் பரிமாறிக் கொள்ள உதவுவது ...இப்படியாக இதன் பயன்பாடு அள்ளவும் முடியாமல் தள்ளவும் முடியாமல் பிடித்துக் கொண்டு விட்டது....உதறி விட வழியின்றி...

எதற்காக இது வேண்டும் இது வேண்டும் என மனம் அடம்பிடித்தபடி கிடந்ததோ அது கிடைக்காமல் இது மட்டும் காலம் தாழ்ந்து வந்து என்னுள் அப்பிக் கொண்டது...

Related image


ஏங்கியவை
எட்டிய போதும்

எட்ட மறுப்பதுவே

திருப்தி...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.


       

Saturday, January 13, 2018

நிகழ்வும் பிறழ்வும்: கவிஞர் தணிகை.

நிகழ்வும் பிறழ்வும்: கவிஞர் தணிகை.

Image result for vairamuthu is not so humble


கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் திராவிட கடவுள் மறுப்புக் கொள்கையாளர்களுக்கும் இந்து மதக் கடவுளர்களை தூக்கிப் பிடிப்பாருமிடையே மிகவும் தரம் தாழ்ந்த விவாதங்கள். உபயம் தேசிய செயலாளர் எனப்படும் ஹெச்.ராசா.  பொருள் வைரமுத்துவும் ஆண்டாளும். அதில் கனிமொழியின் திருப்பதி பற்றிய பேச்சும். எனது பார்வையும் பதிவுகளும் கீழ் வருபவை.

மொத்தத்தில் தேர்தல் என்று ஒன்று 2019ல் பாராளுமன்றத் தேர்தல் வரும்போது தமிழக சட்டசபைக்கும் வரக்கூடும் அதன் முன்னேற்பாடாகவே இத்தனை காட்டம் என நினைக்கிறேன்.

அதில் தி.மு.க நிமிர்ந்து விடக்கூடாது என்பதற்காகவே பாரதிய ஜனதா திட்டமிட்டு காய் நகர்த்தி பிரச்சார உத்திகளை ஏற்படுத்தி கடவுளை நம்புவோர் அனைவரையும் ஓரணிக்குள் திரட்ட விழைகிறதோ என்ற சந்தேகமும் யூகமும் அந்த ஒரு நபரின் பேச்சைக் கேட்கும்போது தெளிவாக கிடைக்கிறது. அவர் மதுரை மீனாட்சி, திருவண்ணாமலை உண்ணாமுலை, அண்ணாமலை, திருவில்லிபுத்தூர் ஆண்டாள், திருச்சி திருவரங்கத்தான் என அனைவரையும் மெச்சுவதுடன் அவர்கள் எல்லாம் அவர்களின் அப்பா அம்மா  என அப்பப்பா என கொண்டாடி பக்தர்களை எல்லாம் அவர் கருத்துக்கு ஆட்படுத்தி கலகம் விளைய முனைகிறார். அதற்கு ஒரு மத்திய மந்திரியும், கண்ணியத்துக்கு சொந்தக்காரர் என்னும் மற்றொரு தலைவரும் கூட தமது கட்சிக்காரர் நடந்து கொண்டது தவறு என்று சொல்லவே இல்லை.
Image result for vairamuthu is not so humble


இதனிடையே ஸ்டாலின் திமுக செயல் தலைவர் மதத்துக்கு எதிரான நிலை திமு.க வுடையது இல்லை எனச் சொல்லி தேர்தல் பயத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இது தொடர்பான அனைவரது உணர்ச்சி பூர்வமான அதாவது வைரமுத்து VS  ராஜா தொடர்பான அனைத்து பிரபலங்களின் கருத்து வெளிப்பாடுகளையும் கவனித்தேன். பெரும்பாலும் சார்புடையதாகவே இருக்கின்றன. அதில் திருமுருகன் காந்தி சொல்வது நடுநிலையுடன் இருப்பதாக எனக்குப் படுகிறது.

இந்த நிலையில் நாம் ஒன்றைச் சொல்லவேண்டும்: கவிப்பேரரசு எனச் சொல்லப்படும் சொல்லப்பட்ட வைரமுத்து நோபெல் பரிசு கூட பெறலாம். கமலுக்கு ஆஸ்கார் விருது இன்னும் கிடைக்காதது போல இவருக்கும் அந்த தகுதி அந்தஸ்து கிடைக்காமல் இருக்கலாம். பாரதி ராஜா சொல்வது போல 7 முறை தேசிய விருது பெற்றவர் இவர் ஒருவரே, பத்மபூசன் என்ற விருதெல்லாம் பெற்றவர் எல்லாம் சரிதான். ஆனால் கவியரசர் கண்ணதாசனிடம் இவர் கற்றுக் கொள்ள வேண்டியது எளிமை. எனவே இன்று இல்லாதிருக்கும் கண்ணதாசன் இவரை விட ஆளுமையில் பெரியவர்தான் மதுப்பழக்கத்துக்கு அடிமையாக இருந்தபோதும்.

வைரமுத்துவைக் கூட கஞ்சாக் கவிஞர் என்று அந்த ...ராசா பேசினார், பொன்மணியிடமிருந்து பாடல் எழுதி சம்பாதிக்கிறார் , அவரது அம்மா பற்றி எல்லாம் பேசி இருந்தார். தமிழ் மற்றும் தமிழ் நாட்டிற்கும் அவலம் ஏற்படும் அறிகுறி இவை எல்லாம்.

வைரமுத்து சரியான சுயநலவாதி, பொதுநலம் பற்றி பேசுவது எல்லாம் மேடைக்குத்தான் என்பது அவரை நெருங்கி பார்த்தவர்க்குத் தெரியும். அவர் தமது புத்தகம் அன்றி வேறு புத்தகத்தில் சிறு ஏழை மாணவர்கள் சென்று ஆட்டோகிராப் கேட்கும்போதும் போட விரும்பாமல் தவிர்த்தவர், இது நானே கண்கூடாகப் பார்த்த நிகழ்வு.

மற்றொரு முறை ஒரு கல்லூரி மாணவர் அவரைத் தம் கல்லூரிக்கு வரவழைக்க அவர் கொடுத்த நிபந்தனைகளை தாளமாட்டாமல் அவரது நிகழ்வே வேண்டாம் என பின் வாங்கியது பற்றி வேதனைப்பட்டிருந்தார். அதாவது இத்தனை எண்ணிக்கை புத்தகம் வாங்க வேண்டும், இப்படி எல்லாம் இருக்க வேண்டும், இவ்வளவு தொகை வேண்டும் இப்படியாக இந்த பட்டியல் நீள்கிற போக்கு...

சேலம் மாவட்டத்தில் ஒரு பிரிவினர் என்னை அவர்கள் சங்கத்துக்கு அழைக்கும்போது வைரமுத்துவே அவரது சாதி, சமயம் மக்கள் என்று இருக்கும்போது நீங்கள் ஏன் வந்து எங்களுடன் இணையக் கூடாது என ஒரு பிரபலம் என்னைக் கேட்க நான் வளர்ந்த விதம் அப்படி, நான் இந்தியா முழுதும் 10 ஆண்டுக்கும் மேலாக கீழ்த்தட்டு மக்களுக்காக உழைத்தவன் என்னை இந்த சிறு வளையத்துக்குள் எல்லாம் சிக்க வைத்துக் கொள்ள விரும்பவில்லை என பதில் சொல்லி விட்டேன். இல்லையேல் எனது பின்னணியில் அது இருந்து மேலும் என்னை பிரபலம் செய்திருக்கும்...

இப்போதும் கூட வைரமுத்து எந்த தரப்பிலும் தமது பேர் இப்படி கீழ்பட்டுபோய் தமது வாழ்நிலையும், வருவாயும், குடும்பமும் பாதிக்கப்படக் கூடாது என்ற கவனத்தில் இருப்பதைக் காணமுடிகிறது.

ஏன் எனில் இராசா எப்படிப்பட்ட நச்சரவமாக இருந்தபோதும் அது பரமசிவன் கழுத்தில் இருப்பதால். ஏன் கனிமொழி ஸ்டாலின் போன்ற ஒரு கட்சியின் தலைமையில் கோடிக்கணக்கான தொண்டர் படையுடன் இருப்பாரே இராசாவின் பிறந்தநாளின்போது அவர் இருப்பிடம் சென்று வாழ்த்து தெரிவித்து கலந்து கொண்டதை செய்தியாக அறிந்தோம். ஏன். அதன் சில மாதங்களில் 2 ஜி வழக்கு ஒன்றுமே இல்லாமல் புஸ் வாணமாகிப் போனதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்

Image result for vairamuthu is not so humble

எல்லாருமே மத்தியின் கை எங்கே தம் வரை நீண்டு விடுமோ என்ற மடியிலே கனமிருக்கும் மனசிலே பயமிருக்கும் பயந்தாங்கொள்ளிகள்தாம்.

அதிலும் வைரமுத்து ஒரு வார்த்தை வியாபாரி, மரணத்துக்கு மரணம் நிகழும் என்றெல்லாம் சொல்வார். போலிக்கவிஞர். சினிமா அவருக்கு சிகரங்களைத் தொட்டு விட உதவியது அதன் துணையுடன் வாய்ப்பாக நிறைய நூல்களையும் படித்துவிட்டார் படைத்து விட்டார். கண்ணதாசனுக்குப் பிறகு இவர் சினிமாத்துறையில். எப்படி எழுத்துத் துறையில் ஜெயகாந்தன், சுஜாதா போன்றோரை அடுத்து ஜெயமோகனின் காலமாக இது இருக்கிறதோ அது போல... அதாவது கவிஞர் என்றால் கற்பனை வளத்துடன் எழுதுவார் மட்டுமல்ல கவிஞர். பாரதி போல, பாரதிதாசன் போல, இன்குலாப் போல ரகுமான் போல கடைசிவரை பொதுநலம் பற்றிய வாழ்வில் வாழ்ந்தாராக இருக்க வேண்டும். கொள்கையை விட்டுத் தந்திருக்கக் கூடாது.

வளமான அழகுபடும் வார்த்தைகள் அவரிடம் தூய தமிழ் எல்லாம் உண்டு. ஆனால் சக மனிதரின் துயரத்தின் பங்கு கொள்ளாதவர். தம்மையும் தமது சிகையையும் போலியாக மை பூசி தோற்றப் பொலிவில் மயங்கி நிற்பவர். மனிதரால் ஒரு முடியைக் கூட கறுப்பாக்கவோ வெளுப்பாக்கவோ முடியாது என்று பைபிளில் சொல்வாரே அது போல...அல்லாமல் இவர் போலியாக மை பூசித் திரிவார்...வெளித்தோற்றத்தில் அக்கறை உள்ளவர்...ஏன் இதை சொல்லவேண்டி வருகிறது எனில் கவிஞர் என்பார் இயற்கையோடு இணைந்தார்,போலியாக வாழ முனையார், தோற்றப் பொலிவில் அக்கறை கொள்ளார் அதேசமயம் உண்மை நேர்மை சத்தியம், வீரியம் வீரம் இதன் பால் நிற்பார் இதெல்லாம் இவரிடம் இல்லை.

கவிஞராய் இருப்பதை விட தமிழராய் இருப்பது நல்லது. தமிழராய் இருப்பதை விட மனிதராய் இருப்பது சிறந்தது.

ஆனால் இதற்காக ராசாவை ஆதரிக்கிறேன் என்று எண்ணி விடாதீர் அந்த நபரை தமிழன் என்ற ஒருவர் தேர்தலில் நின்று என்னை வென்று காட்டடா என போனில் அழைத்துப் பேசுகிறார் ஒருமையில்....அந்த சவாலை ஏற்க முடியாமல் நீ வேலை வெட்டி இல்லத பயல், உன்னுடன் எல்லாம் பேச முடியாது என போனைத் துண்டித்து விடவே பெரும்பாலும் முயன்ற அந்த பேச்சையும் நான் கேட்டேன்.

நுனிப்புல் மேயும் இந்த நபரின் பேச்சு வன்முறையை இந்த மண்ணில் விளைக்கும்... அதன் அடிப்படையை நிறைய இடங்களில் அந்த பேச்சு பொருளாக கொண்டிருக்கிறது. லால் கிருஷ்ண அத்வானியை கோவைக்கு வந்த பிரதமர்  என்கிறார். அந்தக் குண்டு வெடிப்பு சம்பவம் பற்றி பேசுகிறார். அவர் ஒரு துணைப்பிரதமராக இருந்தவர், அவர் மேல் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறதே என்ற கேள்விக்கு பதில் சொல்ல மறுக்கிறார்...அவரை மோடி எப்படி ஓரங்கட்டி குடியரசுத்தலைவர் பதவிக்கு வேட்டு வைத்தாரோ.... அது போன்ற ஒரு உள் கட்சி வன்முறை உடைய கட்சி எந்தவகையிலும் தமிழகத்தில் கால் பதிக்கவே போவதில்லை...

அதன் பொச்சரிப்புதான் இன்றைய நிகழ்வுகளாகவும் பிறழ்வுகளாகவும் தமிழக மண்ணில் ஒரு தனிமனிதனின் கால்ப்புணர்ச்சியாக எல்லாரையும் ஆம் ஆம் எல்லா தரப்பு மனிதரையுமே, அந்தக் கட்சி இந்தக் கட்சி என்று பாராமல் தரங்கெட்ட முறையில் பொது மேடையில் பொது வெளியில் நின்று பொது இடத்தில் கெட்ட வார்த்தைகளை கேட்ட வார்த்தைகளாக மாற்றிக் கொண்டுள்ளது.

சொல்ல முடியாது இப்படி மேடையில் திட்டிக் கொண்டே இந்த .....எல்லாம் கூட்டணி என ஒரு நாளைக்கு தேர்தலில் நின்று மக்களிடையே வாக்கு கேட்கவும் வரக்கூடும்..எல்லாம் அரசியல்ல நடக்குமப்பா...மோடியும், ராகுலும் வந்து உலக மகா எத்தன் நமது மு.கவை சந்திக்கவில்லையா?.... அப்படி

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Friday, January 12, 2018

எப்படி சிஸ்டத்தை சரி செய்யப் போகிறோம்? : கவிஞர் தணிகை.

எப்படி சிஸ்டத்தை சரி செய்யப் போகிறோம்? : கவிஞர் தணிகை.

Related image

திருடிய திருடன் சிசி காமிராவில் பதிவாகி அந்த வீதியிலேயே சுற்றிக் கொண்டிருக்கும்போதும் காவல் நிலையத்தில் புகாரளித்த பிறகும் அவனைப் பிடிக்கவும் திருட்டுப் போன பெரும் தொகையை மீட்டுத் தர முடியவில்லை

அதிகாலை தொழிலுக்குப் போன அந்த நபரை மறித்து அவரை இரு சக்கர வாகனத்திலிருந்து கீழே தள்ளி விட்டு வாகனத்தை அதிலிருந்த பெரும் தொகையுடன் ஓட்டிக்  கொண்டு ஓடி மறைந்த நபர்களை இன்னும் கண்டு பிடிக்கவே முடியவில்லை

Image result for how can we set right our system in India and Tamil Naduபேருந்தில் பயணம் செய்தபோது மடிக்கணினி மற்றும் கணினி சார்ந்த வன்பொருள்களை பல்லாயிரக்கணக்கான தொகை மதிப்புடையதை மாற்றி எடுத்துப் போனவர்களை என்ன செய்தபோதும் கண்டு கொள்ளவே முடியவில்லை

ரெயில் சந்திப்பில் கொஞ்சம் நேரமாக போனாலும் அங்கே சுற்றித் திரியும் விடலைகள் டைம் என்ன என உங்களிடம் கேட்டு உங்கள் கவனத்தை திசை திருப்பி நீங்கள் ஏமாந்தால் உங்கள் மதிப்பு மிகுந்த பொருள்களை செல்பேசியை, பையை எடுத்துக் கொண்டு ஓடி மறையும் செயல்கள் நடைமுறையில் இருந்து ஒழிக்க முடியவில்லை

இன்னும் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் மட்டுமல்ல மிகுதியான பணம் ஈட்டுவார் யாவருமே தங்கள் கணக்கு இவ்வளவுதான் எனச் சொல்லவே போவதில்லைImage result for how can we set right our system in India and Tamil Nadu
பெரும் அரசியல் வியாதிகளும், பெரும் கார்ப்ரேட் முதலாளிகளும் அடிமை வர்க்கமாக அத்தியாவசியத் தேவைக்கு பணி புரிவோரை சுரண்டாமல் விடவே போவதில்லை

இத்துடன் இடைவர்க்கமாக இருபக்கமும் உறிஞ்சிப் பிழைக்கும் ஒரு வர்க்கமும் வளர்வதை தடுக்கவும் வழி இல்லை...

இந்நிலையில் காசு கொடுத்தால் வாங்கிக் கொள்வோம், அப்படித்தான் அதென்ன அவர் பணமா என்று வாக்குகளை மதிப்பறியாமல் செல்லாததாக்கும் மக்கள் கூட்டம்

இத்தனைக்கும் இடையே நடுவே அடையாளம் தெரியாது இயக்கம், சேவை என்ற பேரில் எங்கள் உடலை நாங்களே கெடுத்துக் கொண்டு தியாகம் என்ற பேரில் அவரவர் குடும்பத்துக்கும் கூட எதுவும் செய்ய முடியாத எம் போன்ற பிழைக்கத் தெரியாதவர் என்று பேர் பெற்ற சிறு எண்ணிக்கையினர்...

எல்லாமே தெரிகிறது, இவர்களை எல்லாம் விட அதிகமாக இந்த நாட்டின் மக்களுக்கு கீழ்த்தட்டு மாந்தருக்கு, கிராமிய முன்னேற்றத்துக்கு எங்களது இளமையை பலியிட்டு தீர்த்து பலி ஆடாக மாறமாட்டோம் என களப்பலியாகவே தீர்ந்து போய்க் கொண்டிருக்கிறோம்...

Image result for how can we set right our system in India and Tamil Nadu


நாங்கள் நடத்திய உண்மையான தியாகசிந்தையுடைய இயக்கங்கள் எல்லாம் சசிபெருமாள், சின்னபையன் போன்றோருடன் மறைந்து விட்டது...இன்னும் சிலர் எஞ்சியிருக்கிறோம்...அசை போட்டுக் கொண்டு...

நிலை இப்படி எல்லாம் இருக்க இன்று ஊசலாட்டத்துடன், அலைக்கழிப்புடன் இருக்கும் அரசியலை சரி செய்ய, சிஸ்டத்தை சரி செய்யப் போவதாக இருப்பாரை எல்லாம் விட எமக்கு தகுதிகள் அதிகம் இருந்தும் எம் முன் உள்ள கேள்விக்ளும் இதுவேதான் எப்படி இந்த சிஸ்டத்தை சரி செய்யப் போகிறோம்?

செய்தியாக நேற்று கூட இலஞ்சம் பெற்றதாக சில அலுவலர்கள் தொழில் முனைவர் ஒருவரிடம் பணம் பெற்றதாக கையும் களவுமாக பிடிபட்டதாக செய்தி....விவேகானந்தர் பிறந்தநாளும், லால்பகதூர் நினைவு நாளும், திருப்பூர் குமரனின் நினைவு நாளும் நாட்காட்டி செய்திகளாக அச்சடிக்கப் பட்ட நிலையில் ஆண்டுகள் கடந்து கொண்டே இருக்கட்டும்....

இந்த சிஸ்டத்தை எப்படி சரி செய்யப் போகிறோம்? மோடிகளும் ஜெக்களும் கடவுளாக ஸ்டாலின்களும் கருணாக்களும் அசைக்க முடியாத தலைமைகளாக இருக்க, எத்தனை கட்சிகள், எத்தனை தலைமைகள்? நல்ல கண்ணு போன்றோர் இருப்பது கூட இன்னும் அடையாளம் தெரியாமலே...எங்கிருந்து சகாயம் போன்றோர், தலைமை நிலைக்கு வர முடியும்?Related imageநான் என்ன நினைக்கிறேன் எனில்: இன்னும் தனி மனித ஒழுக்கமும், தனி மனித சிந்தனையின் ஓட்டமும், தனி மனித மேம்பாடும் இங்கு வரவே இல்லை

வினோபா சொல்கிறார்:

அடிமைகளின் தெய்வம் பணம்      என்று

மனிதரை உருவாக்குவதே கல்வி  என்று அவர் குரு காந்தி சொல்கிறார்

லால் பகதூர் காந்திக்கு வாக்கு கொடுத்து விட்டேன் எனவே எந்த அசையா சொத்தையும் வாங்கவே மாட்டேன் என உறுதி மொழி கொடுக்கிறார் நாட்டின் பிரதமராக பெரிய பொறுப்பிலிருந்த போதும்

நாட்டின் பிரதமரை உருவாக்கும் கிங்மேக்கராக இருந்த போதும் காமராசர் தமது பெற்ற தாயைக் கூட உடன் வைத்து வாழ்க்கை நடத்த முடியாது என்று சொல்லிச் சென்றார்.

திருப்பூர் குமரன் போன்றோ பிடித்த கொள்கையை கையிலிருந்து நழுவாமல் பிடித்த கொடியாய் இருந்து மண்டை பிளக்க இரத்தம் சிந்தி மாண்டுபோனபோதும் உறுதியுடன் நின்றார்கள்....

நாங்களும் இன்னும் அப்படியேதான் இருக்கிறோம்...இதுவரை இவர்களுடைய எந்தக் கட்சியிலுமே சேராமல் சாராமல் உறுப்பினராக அங்கம் வகிக்காமல்...

என்றாலும் இந்த சிஸ்டத்தை எப்படி சரி செய்யப் போகிறோம்> பார்த்தவரை எவரிடமுமே தாக்கு பிடிக்கும் திறமும், சகிப்புத் தன்மையும், தியாகமும், சீரிய உழைப்பும், நாட்டுப் பற்றும் இருப்பதாக சிறிது கூடத் தெரியவில்லை அதிலும் இப்போதும் இதன் பின் வரும் தலைமுறைகளிலும் துளியளவு கூட அடுத்தவர் நலத்தில் அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை...

இதெல்லாம் ஊடகத்திற்கு தெரியவில்லை .காரணம் அதன் நிலைப்பாடும் வியாபரத்தில் நிலைக்க வேண்டும் என்ற போட்டியில் இருப்பதே அதற்கு பெரிய பாடாக இருக்கிறது..

Image result for how can we set right our system in India and Tamil Nadu


எனவே இந்த சிஸ்டத்தை எப்படித்தான் சரி செய்யப் போகிறோம் என்ற கேள்வி எப்போதும் என்னுள் கனன்று கொண்டே இருக்க...கார்ல் மார்க்ஸ் ஏங்கெல்ஸ், காந்தி, பிடல் காஸ்ட்ரோ, ஹோசிமின் , போன்ற மாபெரும் தலைவர்கள் எல்லாம் எப்படி சாதித்தார்கள் நம்மால் ஏன் முடியவில்லை...அதற்கு உண்டான தகுதி ஏதும் நம்மிடம் இல்லையா என்ற கேள்விகளுடன் எனது நாள் நகர்ந்தபடியே இருக்கிறது எந்த மதமும் சாதியும் சாராமல்

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Sunday, January 7, 2018

சொல்வதெல்லாம் உண்மை: கவிஞர் தணிகை

 சொல்வதெல்லாம் உண்மை: கவிஞர் தணிகை
Image result for only truth truth only


அரசு வேலைக்கு இலஞ்சம் இல்லாமல் பணி ஆணையும் இட மாறுதலும் பெறுவதென்பது குதிரைக்கொம்பு...தேர்தல் காலம் மதுப் பிரியர்களுக்கும், இலவச பிரியாணி தினசரி பேட்டா காணும் கூலிப்படையினர்க்கும் ஒரு திருவிழாக்காலம் இதை எல்லாம் நடுவண் மற்றும் மாநில அரசுகளும், தேர்தல் ஆணையமும், சட்டம் நீதி நிர்வாகம் அனைத்துத் துறைகளுமே அறிந்ததுதான். அதன் எதிரொளியும், எதிரொலியும், பிரதிபலிப்பாகவுமே போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் இன்ன பிற...

மக்கள் தமது நியாயமான தேவைக்கு அரசு அலுவலகங்களை அணுகுவது எளிது என்பதும், அதற்கு எந்தவித குறுக்கு வழியிலுமல்லாமல் இலஞ்ச ஊழல் அல்லாமல் நேர்மையாக தமது பணிகளை செய்து முடிக்க முடியாது என்ற நிலை நீக்கமற நிலவி வருவதும்...


 ஆனாலும் இதை எவர் சொன்னாலும் அவரிடமே ஆதாரம் தந்து நிரூபிக்கச் சொல்வார்கள்,அவரைத் தாக்க முனைவார்கள் ஏன் அவர்களை இழிவு படுத்தி பொது வாழ்வை விட்டே துரத்தி அடித்து விடுவார்கள்... இந்த நாட்டில் மேல் தட்டு கீழ் தட்டு, ஆண்டை அடிமை என்ற வர்க்கம் மெதுவாக பிரிய ஆரம்பித்துள்ளது என்றே நினைக்கிறேன்.

இலட்சக்கணக்கில் வருவாய் மாதா மாதம் நாளுக்கு நாள், வாரத்துக்கு வாரம் காலத்துக்கு காலம் பெருக்கிக் கொண்டே இருக்கும் ஒரு கூட்டம் அதற்கு ஏவல் புரிவோர் என ஒரு கூட்டம், இந்த இரண்டிடமும் இல்லாமல் இடைப்பட்ட ஒரு இவர்கள் பால் சார்ந்து குற்றவாளியாக வாழ்க்கை நடத்தவும் தெரியாமல், வாழ்க்கை நடத்தவும் முடியாமல் வாழ்ந்து போராடவும் தெரியாமல் போராடவும் முடியாமல் மடிந்து கொண்டிருக்கும் ஒரு மாபெரும் நடுத்தர வர்க்கம் என இந்தியா சரித்திரம் செய்து கொண்டிருக்கிறது.

குற்றவாளிகளை கோவில் கட்டி கும்பிடுவார்கள், அது மட்டுமல்லாமல் அவர்களைச் சார்ந்தோரையே வெற்றி பெறவும் செய்வார்கள் மத்தியிலும் மாநிலத்திலும் தமது சார்பாக நடக்கச் செய்யாதவர்களை நோக்கி நேரடியாக தனிப்பட்ட வாழ்வை ஆராய்ந்து அவர்கள் பழைய வாழ்வில் செய்த தவறுகளை இன்டு இடுக்கில் எல்லாம் நுழைந்து அவர்களை ஒரு பூஜ்யமாக்கி விடுவார்கள்.. குன்ஹாவைத் தாக்கி போஸ்டர் ஒட்டி வசை மாறி பொழிந்தார்கள் எல்லாம் நீதி செய்தவரை பணத்தால் விலைக்கு வாங்கி தீர்ப்பை மாற்றி எழுத வைத்தார்கள்... அதன் மத்திய அரசின் பொம்மலாட்டத்துக்கு ஆடிக் கொண்டிருக்கிறார்கள் ஏன் எனில் எல்லாமே குற்றம் செய்த கயிற்றில் ஊசலாடிக் கொண்டிருப்பதால்...

எல்லாத் துறைகளிலுமே ஒரு படித்த பணத்தை அதிகமாக அள்ளும் ஒரு சிறுபான்மைக் கூட்டம் ஒரு கீழ் மட்டத்துப் பணியாளர்களை நெருக்கிப் பிழிந்து கொண்டிருக்கிறது. இதை விசாரித்து நீதி செய்வோர் எல்லாமே அரசின் பிரதிநிதிகளாக, விழி பிதுங்கி பார்க்க மறந்த நீதியாளர்களாக,  எல்லாமே பணச் சுழலில் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள்...

ஒழுக்கமற்ற அறிவு அபாயகரமானது என்கிறார் இந்தியாவின் தேசத் தந்தை
பணமே அடிமைகளின் தெய்வம் என்கிறார் வினோபா பவே...

பினாய் ராய் கேரளத்தின் முதல்வரான பிறகு 5 மந்திரிகளின் வண்டவாளங்கள் வெளிவந்து  அந்த மாநிலத்தின் 4 மந்திரிகள் இதுவரை அந்த பதவி பொறுப்பிலிருந்து விடுவிக்கப் பட்டிருக்கிறார்கள். மூக்குக் கண்ணாடி அரசுக் கணக்கில் வாங்கிய 28,000 பில்லும், அந்தப் பெண்மந்திரியும் அவரின் கணவரும் மருத்துவமனையில் தங்கிய செலவை அரசின் கணக்கிலிருது பயன்படுத்தியமை இப்போது அந்த மாநிலத்தின்  Talk of the State and current affairs.

அந்தளவு அங்கு வெளிப்படைத்தன்மை இருக்குமளவு ஆட்சியும் ஊடகங்களும் அமைந்தமைக்கு அங்குள்ள மக்கள் விழிப்புணர்வடைந்தவர்களாக அறிவு பூர்வமாகவும் படித்தவர்களாகவும் விளங்குவது பாரட்டத்தக்கதாகவே உள்ளது.

இங்கு இன்னும் அரசு விழாவா, கட்சி விழாவா என்று தெரியாமலே எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடந்து வருகிறது. மேலும் குற்றவாளி ஜெவின் மரணம் இன்னும் மர்ம முடிச்சாகவே இருக்கிறது அவரின் மறைவுக்கும் பின் ஓராண்டு ஓடி மறைந்த பின்னும். அந்தளவு ஆட்சியும், ஊடகங்களும், மத்திய அரசும் வெளிப்படைத்தன்மை உடையதாக இருக்கின்றன.

மத்திய அரசு மாநில அரசு ஆளும் வர்க்கம், மேலாண்மை செய்யும் முதலாளித்துவ குணம் கொண்ட நிர்வாகிகள் , விசாரணை செய்து நீதி செய்யும் அமைப்புகள் எல்லாமே திறக்க முடியாத மூடிகளுடன் அறைந்து சாத்தப்பட்டு இருக்கின்றன.

விசாரணை என்ற பேரில் கண்துடைப்புகளும், பேருக்கு என்ற பேரில் பாசாங்கு செய்யும் போக்குகளும், அவற்றுக்கு சரியாக தம்மை வெளிப்படுத்தாத மனதடிமைகளாகிப் போன கொத்தடிமை வர்க்கமும்...

ஆளும் ஆட்சிகள் மாறுகின்றன கட்சிகள் மாறுகின்றன மக்கள் நிலை இருக்க இருக்க கோழைத்தனம், நேர்மையின்மை,குற்றப் பின்னணி எல்லாம் பெருகியபடி அதன் விளைவாய் ஆள்வோரின் தரமும் காலத்துக்கு காலம் கடந்த ஆட்சியே பரவாயில்ல என்று தோன்றுமளவு நலவடைந்து இழிவடைந்து கொண்டே வருகின்றன...


இதிலிருந்து எல்லாம் என்று மீளப் போகிறதோ? என்றுதான் மீளுமோ? யார்தான் மீட்பரோ?

எப்போதுமே விளம்பரங்களையே பிரபலங்களையே இந்த நாடு தமது முகமாகக் கொண்டிருக்கிறது, முகமாகக் கொள்ள வேண்டும் என ஊடகங்களும் ஆட்சியாளர்களும் மக்களும் கருதிக் கொண்டிருக்கிறார்கள் இப்படி எல்லாம் இருந்திருந்தால் உலகுக்கே முன் மாதிரியான ஒரு இந்திய சுதந்திரப் போரை இந்தியா நடத்தி வெற்றி கண்டிருக்காது....கொண்டிருக்காது...


இப்படி எல்லாம் இருந்திருந்தால் ஹோசிமின் என்னும் ஒரு உணவகத்தில் சாப்பிட்ட எச்சில் தட்டுகளை கழுவியும் இரவு நேரத்தில் எதிரிகளின் கொடூரத்துக்கு பயந்து நாட்டு வயல்வெளிகளில் பாறைகளில் படுத்துறங்கிய ஒரு கீழ் தட்டு மனிதர் வியட்நாம் என்ற நாட்டுக்கு ஒரு விடிவை ஏற்படுத்தி மாபெரும் தலைவராக ஆகி இருக்க முடியாது...

இது போன்ற ஒரு சரித்திரம் இந்த நாட்டிலும் எழுதப்பட வேண்டியது அவசியம்.
நாட்டுக்கு சேவை செய்யும் கள்ளங்கபட மில்லாத பொருளாதாரக் குற்றம் இல்லாத மக்களை நல்ல வழி நடத்தும் அறநெறிப் படுத்தி ஆட்சியை அதிகாரம் இல்லாமல் நிர்வாகம் செய்து அனைவர்க்கும் நல்லதையே செய்யும் தலைமைக் குழுவும் தலவர்களும் அரசாள அரசுக் கட்டில் ஏற வேண்டிய அவசியம் உண்டு என்பதே எமது 2018ல் ஆரம்பமாக முதல் பதிவாக சொல்லும் செய்தியாக இருக்கிறது.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.