Sunday, December 11, 2016

சென்னை 600 028 II : கவிஞர் தணிகை

சென்னை 600 028  II     : கவிஞர் தணிகை

Related image

முதலில் வெறுப்பேற்றி பார்க்காமல் விட்டு விடலாமா என்னுமளவிற்கு சராசரி நட்பு, மது போதை, குடும்பம் , பார்ட்டி என்றே போகிறது. ஜெய் சானா காதல் திருமணத்தை அனுவாக நடிக்கும் சானா வின் கிராமத்தில் வைத்து ஒரு திருவிழாவாக நடத்தலாம் என்ற பேச்சு வார்த்தையின் அடிப்படையில் கிராமம் போகிறது நண்பர்கள் குடும்பம் எல்லாம். அங்கும் மது, பார்ட்டி என்றே செல்ல...

சும்மா இருக்காமல் அங்கிருக்கும் நண்பரின் வேண்டுகோளுக்கிணங்க கிரிக்கெட் ஆட்டம் விளையாடி அதில் வென்றுவிடுவார்கள் என எதிர் அணியினர் உள்ளூர்க்காரர் இவர்களுக்கு மது மங்கை என பார்ட்டி வைக்க கடைசியில் ரகு 4 நாட்களில் நிச்சயம் செய்ய விருந்த நிலையில் இன்னொரு ஆட்டக்காரப் பெண்ணுடன் தாலி கழுத்தில் இருக்கும் நிலையில் போதையில் படுத்துக் கிடக்கிறார்.நல்ல வேளை செல்போனில் படமாக இல்லை என ஆறுதல் அடைகிறார். ஆனால் அந்தப்பெண் கழுத்தில் இரவில் தாலி இல்லை ஆனால் இப்போது தாலி இருக்கிறது

காலையில் எழுந்தால் பயம் தொற்றிக் கொள்ள, தாலியைக் கழற்றி விட்டு தப்பித்துக் கொள்ளலாம் என நினைக்க, எதிரணித் தலைவர் நீங்கள் கிரிக்கெட் விளையாட்டில் தோற்று விட்டால் அந்தப் புகைப்படத்தை எங்கும் பரப்ப மாட்டோம் என மேட்ச் பிக்ஸிங் செய்து கொள்ள அவரிடம் இருக்கும் செல்போன் போட்டோவை காண்பிக்கிறார். அவ்வாறே இவர்கள் தோற்று விட்டு புகைப்படத்தை டெலிட் செய்யலாம் எனக் கேட்டால் அங்கு அந்த ஊரில் இருக்கும் உறவுப் பையன் பெண் கேட்டு தர மறுத்த கோபத்தில் அந்த போட்டைவை வைரலாக்கி அனைவர்க்கும்  சமூக தளங்களில் எல்லாம் தெரிவிக்க‌ திருமணம் நின்று விடுகிறது. அது மட்டுமல்லாமல் இந்த நட்புக் கூட்டணி உடைபட மனைவி மார் வேண்டுகிறார்கள். காதலியின் குடும்பம் வெகுண்டெழுகிறது. காதலி திருமணத்தை ஏற்க மறுக்கிறார்.



அதை எல்லாம் மீறி சிகை அலங்காரக் கடை இளவரசு ஊக்கப்படுத்த எல்லா நண்பர்களும் சேர்ந்து மறுபடியும் அதே கிராமத்திற்கு சென்று கிரிக்கெட் ஆடி காதலியை மணமுடிக்கின்றனர். அதற்குள் நிறைய தில்லுமுல்லுகள் திருப்பங்கள், சச்சு மனோரமா, சரண்யா வேடம்போல காதலர்களுக்கு உதவுகிறார்.

ஏராளமான மதுப் புட்டிகளை சினிமாவில் பயன்படுத்தி இருக்கிறார்கள். இவர்கள் இந்தப் படத்தை எஸ்.பி.பாலசுப்ரமணியம்,மற்றும் அவர் மகன்: எஸ்.பி சரண் தயாரிக்க, வெங்கட் பிரபு, பிரேம்ஜி ஆகியோர் இரு குடும்ப கூட்டு முயற்சியில் விளைந்த படம் இதற்கு யுவன் சங்கர் ராஜா இசை பின்னணி இசை பிரேம்ஜி...
Image result for chennai 60028 II

மொத்தத்தில் இளையராஜா கங்கை அமரன் குடும்பம், எஸ்பி பாலசுப்ரமணியம் குடும்பம் தமது வாரிசுகளுக்கு சினிமாத்துறையில் வாய்ப்பும் பணியும் வழங்கி இருக்கிறது.

இந்தப் படத்தின் 3 ஆம் பாகம் தொடரும் என்ற நிலையில் படத்தை முடித்திருக்கிறார்கள்

பார்க்கலாம் , பார்க்காமல் இருந்தாலும் ஒன்றும் தவறு இல்லை.
நிறைய நடிகர்கள், நிதின் சத்யா, சிவா, பிரேம்ஜி,ஜெய்,ஆகாஷ், வைபவ் இப்படி ஒர் கூட்டமே இருக்கிறது. இரு அணியின்  கிரிக்கெட் டீம் கணக்குப் படி பார்த்தாலும் 25 அல்லது 30 பேர் வேண்டுமல்லவா, அதன் பின் அவர்கள் பெற்றோர், மனைவி,குழந்தைகள் என...கூட்டம்...இளவரசு , பரவாயில்லை, சந்தான பாரதி ரோல் விரயம்...

எல்லாமே மதுப் பிரளயமாய் பொங்கி வழிகிறது. அதற்கு கங்கை அமரன் வேறு 2 காட்சிகளில் துணையாகிறார் அந்தக் காலத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியமும் நாங்களும் கோவா போவோம் என பிரேம்ஜியிடம் அழுது வடிகிறார்...

இந்த சென்னை ட்ராக் ஒன்றும் சாதனை படமாக வழியில்லை. ஆனாலும் குறிப்பிட்ட கட்டத்திற்கும் மேல் கதையில் முடிச்சுகள் விழுந்து அதை அவிழ்க்கும் வரை மேல் திரைக்கதை விறுவிறுப்பாக இருந்து படத்தை பார்க்கும்படி வைக்கிறது.
Image result for chennai 60028 II



சுமார்  சென்னை சார்க்ஸ் அணி பிஷன் சிங் பேடி இந்திய அணிக் காப்டனாக இருந்தபோது மழையை வேண்டி கிரிக்கெட் ஆடுவது போல இதிலும் இயற்கையாக கடவுளை வேண்டி மழை வருகிறது. பிட்ச் நனைகிறது. சார்க்ஸ் ஜெயிக்கிறது இப்படி சில கட்டங்கள்...

பரவாயில்லை முதல் அரை மணி நேரம் பொறுத்துக் கொண்டால் பார்க்கலாம்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

1 comment: