Saturday, February 25, 2023

திருமணம் வாழ்த்து(ம்) கல்வெட்டு

                                                 திருமணம் வாழ்த்து(ம்) கல்வெட்டு



ஜெ.அருண்குமார் DECE         03.03.2023       ஜி.கற்பகாம்பாள் B.Sc,D.El.Ed.


நாள்: வெள்ளிக்கிழமை   இடம்: கந்தசாமி கோயில் காளிப்பட்டி ஹரிதா மஹால்.

கருவாகி உருவாகி உடலாகி உயிராகி தாய் வயிற்றுள்

இருந்த போதிருந்தே இவனை நானறிவேன்.


எங்கள் வீட்டு வீதியின் விளையாட்டு முழக்கத்தில் இவன் குரல்

முக்கியமானதாக இருந்தது.


சதுரங்கம்,கேரம் விளையாட்டுகளில் எப்படியாவது/ ஏமாற்றியாவது

அவனது சகோதரிகளை வென்று காட்டி(ய) சண்டையிட்ட காட்சிகள்

இன்னும் நினைவிலாட...எண்ணி எண்ணி அகமகிழ்கிறேன்


இப்படி பல நினைவுகள் பல‌ நிலைகள்,பல காட்சிகள் எம் வாழ்வில் சுடர் விட...

அதன் அதிர்வலைகளை சொற்களாக்கி காலத்தின் கற்களில் பதிவேற்றுகிறேன்

பொன்வாழ்வில் வைரம் போல் பொதித்து வைக்கிறேன்.

                                                   அன்புத் தம்பி

நமது கதாநாயகன் ஜெயபால் திலகவதி அருண்குமார்

நமது கதாநாயகி கோபால் பார்வதி கற்பகாம்பாளை கைப்பற்றும்  காலத்தில்

வாழ்த்த வார்த்தைகள் போதா(து)


பெற்ற தாய்தனை மறவாத மகவாகவும் பிள்ளையைத் தாய் மறவாமலும்

உற்றதேகம் உயிர் மறவாமலும் உயிரை மேவிய உடல் மறவாமலும்

கற்ற நெஞ்சகம் கலை மறவாமலும், கண்கள் நின்றிமைய மறவாமலும்

இருப்பது போல் மணமக்கள் இன்றியமையா உறவாக என்றும் வாழ்ந்து


              பதினாறும் பெற்று பெரு வாழ்வுடன் இல்லறம் சிறக்க‌

                          தலைமுறை தொடர்க காலத்தை வெல்க‌

                                                         என்று(ம்)

                                                         வாழ்த்தும்

கவிஞர் சுப்ரமணியம் தணிகை  த.சண்முக வடிவு த.க.ரா.சு. மணியம் B.E.,

                               தெய்வா தியானப் பயிற்சி மையம்.

Sunday, February 12, 2023

918986793967 குறித்துக் கொள்க இது ஒரு பக்கா FRAUD & CHEATING நெம்பர்: கவிஞர் தணிகை

 918986793967 குறித்துக் கொள்க இது ஒரு பக்கா ப்ராட் அன்ட் சீட்டிங் நெம்பர்: கவிஞர் தணிகை

This Number is not in functioning and exist our BSNL said like that.

1.பி.எஸ்.என்.எல் என்ன பிடுங்குகிறார்கள் என்று தெரியவில்லை

அவசியமில்லாமல் மிஸ் யூ மிஸ் யூ கால் மீ என்ற எண் குறுஞ்செய்தியாக வருகிறது miss you/ miss you...


2. ரம்மி ஆடுங்கள் டேஷைப் பிடுங்குங்கள் என்றும் குறுஞ்செய்தி


3. நகைக் கடையிலிருந்து வெட்டிங் ஆல்பம் பர்ச்சேஸ் வருகை தர அழைப்பு வேறு

4. சார் வீட்டு மனை வாங்குங்க சார்

5. சார் சார் லோன் குடுக்கறோம் சார்... இப்படி... நிறைய முட்டாள் தனங்கள் தொலைத் தொடர்பில்...

6.உங்கள் கணக்கில் 93,990 ரூபாய் வரவு வைக்கப் பட்டுள்ளது. இணைப்புக்கு வாருங்கள் என்றும் உங்கள் ரம்மி ஆட்டத்தில் வென்றதற்கு என்றும்

 எந்த வகையிலும்  வங்கிஇணைப்பில் இல்லா செல்பேசி எண்களுக்கும் கூட உங்கள் வங்கிக் கணக்கு... எனவும்...


... துக்கிலியூண்டு, சில்லியூண்டு காசுக்கு வேண்டி நமது டேட்டாவை எண்களை எல்லாம் விற்கிற நாடு இது.

நமது எண்கள் எப்படி அந்த நாய்களுக்குப் போகிறது என்றுதான் தெரியவில்லை நிற்க‌

இனி சொல்வது மிகவும் தீவிரமானது அபாயகரமானது:

மேற் சொன்ன 91 8986793967 என்ற எண்ணிலிருந்து தொலைபேசி அழைப்பு,மற்றும் குறுஞ்செய்திகள்


1.உங்கள் வங்கியின் கணக்கு  செயல்பாடு நிறுத்தப் பட்டு விட்டது...DE ACTIVATE (டி.ஆக்டிவேட்) நீங்கள் உங்கள் PAN பான் கார்ட் எண்களை இணைக்க வேண்டும் இந்த இணைப்புச் செயலிக்கு வாருங்கள்...நோ யுவர் கஸ்டமர் KYCஎன்ற விதியின் கீழ்...

2. உங்கள் YONO (Y0N0  They typed like this)யுனோ கணக்கு  இடைநிறுத்தம்/நீக்கம் செய்யப்பட்டு விட்டது(suspended) சஸ்பெண்டட்) உங்கள் PAN பான் கார்டை விரைந்து இணையுங்கள் immediately (இம்மீடியட்லீ) தேங்க் யூ என வங்கியின் பேர் இட்டு:...... என்றும் ஒரு செய்தி link:https://rb.gy/5fynx7

3. அந்த எண்களை வேறு வேறு எண்களில் இருந்து தொடர்பு கொண்டேன்... அதன் விளைவாக அந்த திருட்டுப் பயல்கள் கேரள மற்றும் இந்தி வாடையில் மொழி விச முனந்ததை கண்டறிந்தேன்.

நீண்ட நாட்களாக வசவு அல்லது கெட்ட வார்த்தகளை பயன்படுத்தாமல் இருந்த இன்று அதை வெகுவாக பயன்படுத்தினேன்.

துணிச்சலுடன் அந்த எண்களை தொடர்பு கொள்ள வைத்திருக்கிறார்கள், சந்தேகம் வரும்போது எண்கள் இல்லை என்றும் அல்லது எடுக்காமலும் இருக்கிறார்கள்

CYBER CRIME PORTAL IS NOT USERS FRIENDLY TO RECEIVE COMPLAINTS சைபர் கிரைம் போர்ட்டல் புகார் பதிவுக்கு சென்றால் அது பயனாளிகளின் நட்பு முறையில் அல்லாமல் புகாரை எப்படி ஏற்காமல் இருக்கலாம் என்பதற்காகவே செயல்படும் செயலியாக காணப்படுகிறது.

முதலில் ப்ரொபைல், நமது விவரங்கள் எல்லாம் கேட்டுக் கொண்டு  அதன் பின் எல்லா தகவல்களையும் தந்தாலும் SUPPORT FILE சப்போர்ட் ஃபைல் இல்லாமல் ஏற்காமல் இருக்கிறது. WE TRIED AND TAKE SCREEN SHOT AND UTILIZED WITH MAIL AND  FILE LINKS...

அதன் பின் புள்ளி சரியில்லை, அது சரியில்லை, இது சரியில்லை என்றே படுத்துகிறதே ஒழிய பயன்பாட்டுக்கு எளிதாக இல்லை.

இவை யாவும் தான் இந்த திருட்டுப் பயல்களுக்கு கை வரிசை காட்ட வழியாகிறது

தி.மலையில் இரவோடு இரவாக ஒன்றை முடித்து அடுத்தது என 4 வங்கிகளின் ATM ஏ.டி.எம்களை வெட்டி எடுத்து 20 இலட்சம், 33 இலட்சம் என கொள்ளை. அதில் 2 பாரதிய வங்கி SBI இந்தியாவின் பெரிய வங்கி. வெல்டிங் செய்து வெட்டி எடுத்து கொள்ளை அடிக்கும் வரை அலார வசதி இல்லையா? அதையும் வெட்டி விட்டார்களா? காவலாளி என்ன செய்தார்? காவல் துறை என்ன செய்கிறது போன்ற கேள்விகள் சாதாரண மனிதர்க்கு எழாமல் இல்லை.

இந்த வடக்கத்திப் பயல்கள் வக்கத்தப் பயல்களாக நல்லா வேலை செய்ய வரான்கள், என இங்கிருக்கும் சுயநலமிகள் பொது நலத்தை துளியும் நினைக்காமல் ஒத்து ஊதுகிறார்கள்

குற்றங்கள் பெருகி வருவது 1. மதுவால், 2. இந்த வடக்கத்திப் பயல்களால் மட்டுமே...

தமிழ் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலக் கட்டம் இது...

ஒன்று நூதன திருட்டு கொள்ளை

மற்றொன்று பகிரங்க கொள்ளை

  இரண்டுக்குமே மக்களின் பணத்தை வங்கியில் இட்டே ஆக வேண்டும் எனச் சொல்லிய ஒன்றிய அரசே காரணம் என்று சொல்லலாம். எல்லாப் பணத்தையும் சுருட்டி கார்ப்ரேட் அதானி, அம்பானிகளுக்கு கடன் கொடுத்து வாராக் கடனாகச் சொல்லும் அதைப் பற்றி எல்லாம் நான் சொல்ல வரவில்லை

எனது கணக்கில் பணமே இல்லை. அது வேறு...ஆனாலும் இந்த கொசுக்களை அடித்தே ஆக வேண்டும்... அதற்கு எனது கையும் உங்கள் கையும் இணைக்கவே இந்தப் பதிவு...எச்சரிக்கையாக இருங்கள் உங்களுக்கும் குறுஞ்செய்தியும் , போன் காலும், இணைப்புத் தூண்டல்களும்  வரலாம்....மிகப்பெரும் ஆளுமைகள் கூட இந்த திருட்டுப் பயல்களிடம் ஏமாந்த கதையை நாம் செய்திகளாக கண்டதுண்டு எனவே தான் இந்தப் பதிவு.



மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.


நுப்பது அல்ல அது முப்பது (முப்பத்து= மூன்று பத்து)முப்பதின் பிரோஜனமல்ல பிரயோஜ‌னம்: கவிஞர் தணிகை

 நுப்பது அல்ல அது முப்பது (முப்பத்து= மூன்று பத்து)முப்பதின் பிரோஜனமல்ல பிரயோஜ‌னம்: கவிஞர் தணிகை



ஊடகவியலாளர்கள், தொ(ல்)லைக் காட்சி தொடர் நடிகர்கள்,மிகவும் பிரபலமானவர்கள் கூட. முக்கியமாக வசனங்கள் எழுதுவோர் மற்றும் பேச்சாளர்கள் கடைப் பிடிக்க வேண்டும் சரியான வெளியீடுகள் செய்வதற்காக பின் சொல்வதை கவனித்து சீர் படுத்தல் வேண்டியது அவசியம் . இங்கு இந்த இரண்டு இது போல எண்ணிறந்தன...


1. நுப்பது என்கின்றனர் முப்பது என்று சொல்வதற்கு மாறாக‌

 அவர்கள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் அது மூன்று பத்தில் இருந்து விளைந்த சொல் முப்பத்து முப்பது என்பதை...


2. நிறைய பேர் பிரோஜனம் என்கின்றனர். பிரயோஜனமே இல்லை பயனே இல்லை என்ற பொருள் பட.

  பிரயோஜனம் என்பதை ப்ரோஜனம் என்றே சொல்லி வருவதை கவனித்து இருக்கிறேன்.


இது ஒன்றும் தூய தமிழ் சொல் அல்ல,  இருப்பினும் சொல்லாடல் மிகவும் தவறாகவே சென்று கொண்டிருப்பதை சுட்டிக் காட்டவே விரும்புகிறேன்.


நான்ழகரம் பற்றியோ ளகரம் பற்றியோ கரம் பற்றியோ இங்கு ஏதுமே குறிப்பிடவில்லை.


நிறைய பதாகைகள், கூட்டங்கள் எல்லாவற்றிலும் சொல்லாடல்கள் மிகவும் தவறாகவே உருவாக்கப் படுகின்றன.

இங்கு யாம் சொல்லப் புகுவது ஆசிரியர்கள் , பெரியவர்கள், சமூக எடுத்துக் காட்டாக இருப்போர் யாவருக்கும் பொருந்தும்


இங்கு வேரே காய்ந்து, அழுகி, தமிழ் கருக ஆரம்பித்து விட்டது இனி கிளை, பூ, இலை பற்றி எல்லாம் சொல்லவே வேண்டாம்.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை

Saturday, February 11, 2023

தூமகேது: கவிஞர் தணிகை

 தூமகேது: கவிஞர் தணிகை



பொன்னியின் செல்வன் கதையைப் படித்த எவருமே இந்த தூம கேது வால் நட்சத்திரம் பற்றிய நிகழ்வுச் செறிவை நினைவு படுத்திக் கொள்ள முடியும்.



வால் நட்சத்திரம்

எப்போதெல்லாம் தோன்றுகிறதோ அப்போதெல்லாம் ஒரு அழிவு அது பேரழிவாகவோ பெரும் விளைவாகவோ அல்லது பெரு மரணங்களாகவோ அல்லது பெரும் பேர் பெற்றவர்களின் மரணங்களாகவோ...


இல்லை இல்லை இவை மூட நம்பிக்கை என்பாரும் உளர்.


ஆனாலும் பச்சை நிற ஒளி உமிழ் வால் மீன் ஒன்று 50000 ஆண்டுகளுக்கும் பின் பூமியருகே வந்ததை வந்து செல்வதை தோன்றியதை கடந்த வாரங்களில் செய்திகள் உறுதி படுத்தின. அதை ஒரிஸ்ஸா, அஸ்ஸாம், போன்ற மாநிலங்களில் இருந்து தொலை நோக்கி வழியாக விடியல் காலை வடகிழக்கே அல்லது வடமேற்கே துருவ நட்சத்திரம் அருகே காணமுடியும் என்ற செய்தி


ஆனால் என்ன வித முயற்சி செய்த போதும் இங்கிருந்து காணக் கிடைக்கவில்லை.


ஆனால் ஆசியா மைனர் துருக்கி (துருத்தி) சிரியா பூகம்பம்...25000க்கும் அதிகமான உயிர்ச் சேதத்துடன் பூவுலகில் பெரும் அழிவை சந்திக்க அந்த பூகம்பத் தொடர் இந்தியாவிலும் தொடரவிருப்பதாக தொடர்ந்திருப்பதாக செய்திகள் இருக்கின்றன...


Monday, February 6, 2023

சில நினைவுகளை பகிர்ந்து கொள்ளாமல் இருக்க முடியாது: கவிஞர் தணிகை

 சில நினைவுகளை பகிர்ந்து கொள்ளாமல் இருக்க முடியாது: கவிஞர் தணிகை



சில நினைவுகளை சில நினைவலைகளை பகிர்ந்து கொள்ளாமல் இருக்க முடியாது....

தயாரிப்பு இல்லாமலும் குறிப்புகள் இல்லாமலும் சோனா எப்.எம். சமுதாய வானொலியில் மகாத்மா காந்தியைப் பற்றி பேசும்போது சம்ப்ரான், சௌரி சௌரி சத்யாக்கிரகம் என்று குறிப்பிட மறந்து சம்ப்ரான் என்பதற்கு மாறாக பொக்ரான் என்று குறிப்பிட்டு விட்டேன்.

வாக்காளர் தினம் பற்றி பேசிய பேச்சில் மூன்றில் ஒரு பகுதியை மட்டுமே அவர்கள் ஒலிபரப்பி உள்ளனர்.

சுஜாதா என்னும் ரங்கராஜன் அவர்களே எலக்ட்ரானிக் ஓட்டிங் மெஷின் அமைத்த அறிவியல் அறிஞர்கள் குழுவின் தலைவர் ...ஆம் நமது சுஜாதா ரங்கராஜன் எழுத்தாளர் அவர்களே...

ஏழை தினக் கூலிகள் அன்றாடங் காய்ச்சிகள் வாக்களிக்கும் தினத்தில் வேலைக்குப் போகாமல் கூலி இல்லாமல் போவதால் அதற்கு மாறாக வாக்குக்கு காசு வாங்கினால் என்ன தவறு ? என்ற கேள்விக்கு சரியான பதில் இல்லை. அதைப் பற்றி தேர்தல் ஆணையமும் ஆட்சிகளும் முடிவெடுக்க வேண்டிய நிலை.

 வெகு காலத்துக்கும் முன் ப்ரஜா சோசலிஸ்ட் கட்சி சார்பாக மேட்டூர் தொகுதி எம்.எல்.ஏ வாக சுரேந்திரன் (நாயர்) என்பவர் தொழிலாளர்களின் தோழர் தேர்ந்தெடுக்கப் பட்டார். அப்போது இருந்தால் எனக்கு ஏழெட்டு வயது இருக்கும். எங்கள் வீடு ஓடையோரம்...அப்போது கடைசி வீடு இப்போது அது ஊரின் மையம். விவரம் தெரிய ஆரம்பிக்கும் தருணம்... கட்டாக  நோட்டுகளை புதிதாக அப்போதுதான் பார்த்தது.ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் நோட்டுகளை கட்டின் பின்னிலிருந்து எடுத்து தேர்தல் முதல் நாள் இரவு கொடுத்துக் கொண்டிருந்தார்கள் பலரும் வந்து வாங்கிக் கொண்டிருந்தார்கள்.

 கைவிரல்களின் முனை குண்டு குண்டாக( அப்படி இருந்தால் அதிர்ஷ்டமாமே?) இருக்கும் சுரேந்திரன் நாயர் வென்றார் சென்றார் அவரது மகன் பின்னாளில் ஒப்பந்த முறைகேடுகளில் ஈடுபட்டதாக எல்லாம் செய்தி உலவியது...சுரேந்திரன் நாயர் மிருதங்க சக்கரவர்த்தி சிவாஜி கணேசன் போல ஜிப்பா எல்லாம் போட்டுக் கொண்டு, மிகவும் மெதுவாக பேச ஆரம்பித்து போகப் போக ஒலியைக் கூட்டிக் கொண்டே போவார் பொதுக் கூட்டங்களில் . அது அவரது பாணி. மேட்டூர் மில், மால்கோ போன்ற நிறுவனங்களின் தொழிலாளர் வர்க்கத்தின் பிரச்சனைக்காக காந்திய முறையில் சத்தியாக்கிரக போராட்டம், உண்ணா நோன்பு எல்லாம் இவருக்கு தண்ணி பட்ட பாடு.



 இந்த சுரேந்திரன் நாயர் சார்பாக பணம் அளித்த எங்கள் குடும்பத் தொடர்புள்ள உறவுக் குடும்பம் சார்ந்த பெரியவர் ஒருவர் ஒரு முறை பேரூராட்சித் தலைவர் தேர்தலில் வென்றார். ஆனால் அவர் பதவி ஏற்க சென்ற போது கும்பல் கும்பலாக இருளில் சாலையோரம் இருந்தபடி  கற்களால் தாக்கி , பேரூராட்சி அலுவலகத்தில் அவரது காரை அந்த சாதி வெறி பிடித்த கும்பல் காரையே தூக்கி அவர்களை காரில் இருந்து இறங்க விடாமல் செய்து பதவி ஏற்கவும் விடவில்லை...அப்போதிருந்து அந்த செல்வாக்கு மிக்க குடும்பத்தினர் இன்று வரை அரசியலில் கலந்து கொள்வதே இல்லை... 

அந்த நிலை தொடர்கதையாகவே...

எங்கள் வீதியில் எங்கள் குடும்பம், நாங்கள் மட்டுமே இந்த வாக்குக்கு காசு சுழற்சியில் சிக்காதவர்கள் எனலாம்.

தைப்பூசம், வள்ளலார் நினைவு தினம் என்பதை எல்லாம் மறந்து கூட்டம் குறையாமல் இருக்கிறது டாஸ்மார்க் கடை இருக்கும் திசை...நிறைய பேர்க்கு அது விடுமுறை என்பது நினைவு இல்லாமல் கடை இருக்கும் என சென்று பார்த்தனர், இடையே சந்து கடை பற்றி எல்லாம் யாமறியோம்.

மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை



Sunday, February 5, 2023

கலை வாணி வாணி ஜெயராம் இறப்பு இசை உலகின் பேரிழப்பு: கவிஞர் தணிகை

 கலை வாணி வாணி ஜெயராம் இறப்பு இசை உலகின் பேரிழப்பு: கவிஞர் தணிகை



தமிழ்க் குயில்,கலைவாணி, இசை வாணி வாணி ஜெயராம், திடீர் மறைவு இரு பாடங்களைத் தருகிறது. உடல் பொருள் ஆவி அல்லது ஆன்மலயிப்பு, அர்ப்பணிப்பு வீண் போகாது என்பதும், வயோதிகத்தில் உடன் துணயின்றி வாழ்வது தவறு என்றும். உடன் இருந்து உடனே மருத்துவ உதவி கிடைத்திருந்தால் இவர் நேரே சென்று பத்ம பூஷணைப் பெற்றிருக்கலாம் மேலும் வாழ்வை நிறைவு செய்யுமளவு வாழ்ந்திருக்கலாம். விபத்தா? வேறா அதை காவல்துறையின் கடமைக்கு விட்டு விடுவோம். Death always inevitable and  unexpected.


உங்களுக்குத் தெரியாதது இல்லை, புதிதாக ஒன்றும் இல்லை என்றாலும் இது தேவைதான் இந்தப் பதிவைத்தான் சொல்கிறேன். 


ஏன் எனில் இப்போதெல்லாம் கிரைம், ஹாரர், செக்ஸ் என செய்தி மட்டுமே எண்ணற்ற‌ மனிதரால் செய்தியக்கப்படும் காலத்தில் சில வாழ்வையும் பதிவு செய்வது அவசியம் என்ற சிந்தனையில் இருப்போர் சிலரில் அடியேனும் ஒருவன்.


ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியது மற்றும் விருதுகள் பல பெற்றதெல்லாம் பெரியதில்லை 19 மொழிகளில் பாடியதும் பல்வேறு இசை வடிவங்களில் பாடியதும் உண்மையிலேயே மிகப் பெரிய சாதனை.


பிறப்பு இறப்பு எல்லா உயிர்க்கும் உண்டு...சிலரே தோன்றின் புகழொடு  தோன்றுக... குறளுக்கு இலக்கணமாகிறார்கள் அப்படி இவரும் 6 பெண்களில் 5 வது பிறந்த பெண்குழந்தையாக வேலூரில் பிறந்து உலகை வலம் வந்த சாதனையாளராக இருக்கிறார். இவர்கள் குடும்பத்தில் 6 பெண்குழந்தைகள் 3 ஆண் குழந்தைகளாம்.


பி.சுசீலா, எஸ். ஜானகி போன்றோர் தமிழ் திரைப்பட இசையை ஆக்ரமித்துக் கொண்டிருந்த போது இவரும் தனது தனித் தன்மையை விடாது ஆட்சி செலுத்தி வந்திருக்கிறார். இவருக்கு ஜோடி பாடல்களை விட தனியான பாடல்களே அதிகம் புகழ் சேர்த்திருக்கின்றன.


பட்டதாரி, வங்கி ஊழியராக இருந்த போதிலும் இசையின் ஆன்ம குரலுக்கு செவி சாய்த்து தமது வாழ்வு முறையை அமைத்துக் கொண்டார் அதற்கு இவரது கணவர் உறுதுணையாக இருந்திருக்கிறார். குழந்தைகள் வாரிசுகள் ஏதும் இல்லாத சாதனையாளரே இவரும்... Real name is Kalai Vaani. Name really Suits her. He deserve for all prizes and awards in Music.


அடுத்து தமிழ்ப்பட இயக்குனர் டி.பி.கஜேந்திரன் மறைவு , இப்படி பல மறைவுகள் வந்து எல்லா செய்திகளையும் புதுச் செய்திகள் பழையனவற்றை பின் தள்ளி விடும் என்றாலும் வாணி ஜெயராம் எம் போன்றோரை தம் குரலால் வசியப்படுத்தியவர் அவருக்கு நாம் செய்யும் நன்றிக் கடன் இந்தப் பதிவு என்றே நினைக்கிறேன். அந்த 77 வயது முதிய பெண்ணுக்கு எனது அஞ்சலிகள். காலத்தை விஞ்சிய சாதனை. பத்ம பூஷன் பெறாமலே போய்ச்  சேர்ந்த ஜீவன். அதை அறிவிக்கும் போதே தகுதியானவர் என அனைவரும் எண்ணும்படியான நல்ல குரலுக்கு சொந்தக்காரர்.


HE +ART (HEART) ART ஆர்ட் என்னும் மூன்று எழுத்தைக் கொண்டிருப்பதால் அதில் ஈடுபடுவார் நல்ல இதயம் கொண்டவராக இருப்பார் என்ற பொருள் இருப்பே ஆங்கில HEART  ஹார்ட் என்று சொல்லக் கேள்வி.


இனி இந்தக் குயில் கூவப் போவதில்லை என்றாலும் நல்ல வேளை அறிவியல் அவர் பாடிய எல்லா பாடல்களையுமே அவர் வானொலியில் சிறுமியாக ஆரம்பித்தது முதல் சேர்த்து வைத்திருக்கிறது.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.