Sunday, September 29, 2019

மரகதப் பொண்ணு சபிதா மறைந்தாள்: கவிஞர் தணிகை

மரகதப் பொண்ணு சபிதா மறைந்தாள்: கவிஞர் தணிகை





நேற்று அதிகாலை 28.09.2019 அன்று  5.45 மணி அளவில் சபிதா என்னும் 33 வயதுடைய பெண் என வளராத ஒன்றுமறியாமல் ஒரு குழந்தையாகவே இருந்து வாய் பேச முடியாமல் வாழ்ந்த ஒரு எங்கள் குடும்பத்தில் இருந்து எனது மூத்த சகோதரிகளில் ஒருவரானவருக்கு பிறந்த 3 ஆம் பெண் இயற்கையோடு இணைந்து விட்டாள்.

அப்படி என்ன பெரிய விடயம் அப்படி என்ன சிறப்பு இதில் இதைப் பதிவு செய்யுமளவு என்கிறீர்களா?

இவள் ஒரு தெய்வப் பிறவி என்று சொல்வார்களே அது போல ஸ்பெஷல் சைல்ட். மன வளர்ச்சி குன்றியவர் என்று முழுதும் சொல்லி விட முடியாது. ஏன் எனில் இவளுக்கு நன்றாகப் புரியும் ஆனால் பேச வராது. கைகள் எல்லாம் பென்சில் கூடப் பிடிக்க வலுவில்லாதிருக்கும் எனவே எழுதவும் முடியாது. பற்கள் துருத்தியபடி முன்னும் பின்னுமாக இருக்கும். ஆனால் மிகவும் கூர்மையான அறிவுடையவளாகவே இருந்தாள்

பிறவியிலேயே வாய் பேசவும் வராது. இவற்றுக்கு எல்லாம் ஆதி முதல் அடிப்படைக் காரணம் எது எனில் இவள் 3 ஆம் குழந்தையாக தாயின் வயிற்றில் இருக்கும்போது இவளது தாய்க்கு கொடுக்கப்பட்ட தீவிரமான மாத்திரகைள் உண்மையில் சொல்லப்போனால் மூன்றாவதும் பெண்குழந்தையாக இருப்பதை ஒரு வாறாக யூகித்த இவளின் பெற்றோர் இவள் வேண்டாம் என்று காலங்கடந்த எடுத்த முடிவால் விளைந்த விளைவு. இவள் பிறவி இப்படி ஆகிப்போனது.

மற்றபடி எல்லாக் குழந்தைகளோடும் அதாவது அப்போது அவளை விடக் குறைவான வயதில் இருந்த எனது தங்கை மகள் , மகன், எனது மகன், மற்ற உறவினர்களின் குழந்தைகள் அங்கே தெருவில் உள்ள அண்டை அயலாரின் குழந்தைகள் யாவருடனும் நட்பு பாராட்டி வருவாள். குழந்தைகளை நேசிக்கத் தெரிந்தவளாகவே இருந்தாள்.

இவளை இதற்காகவே இருக்கும் பள்ளியிலும் ஒரு முறை சேர்த்தியும் பார்த்தேன் தாய்க்கு மகளை விட்டு இருக்க முடியாமல் இவளுக்கும் குடும்ப சூழல் மறக்க முடியாமல் இருக்க திரும்பவும் வீட்டுக்கே வந்து சேர்ந்தாள். தலையில் பேன்கள் எல்லாம் பிடித்த நிலையில்.

அது மட்டுமில்லாமல் இவளுக்கு தந்தை கிடையாது. இவள் கைக்குழந்தையாக இருக்கும்போதே இவளது தந்தை மாரடைப்பால்  அகால மரணமடைந்தார். இவளும் இவளது மூத்த சகோதரிகளும் இவளது தாயும் அவர்களது வாழ்வை எங்களோடு பிணைத்துக் கொண்டிருந்தனர். ஒரு குறிப்பிட்ட காலம் வரை அதாவது அவளது மூத்த சகோதரிகள் மணக் காலம் வரை. அதாவது 1985 முதல் 2006 எங்களது தாயின் மரணம் வரை அவர்கள் எங்களோடுதான் எங்களைச் சார்ந்துதான் வாழ்ந்து வந்தனர் என்றும் சொல்லலாம். சுமார் 20 ஆண்டுக்கும் மேல். அதன் பின் சுமார் பத்து ஆண்டுகள் அவர்கள் வாழ்வு வேறாகிப் போனது எங்கள் வேர் இடைவெளியானது.

அதன் பின் பல ஆண்டு ஓடியது...கிளிகள் இறகு முளைக்க கிளைகள் தாவ சமூக சாதிபேத வேற்றுமை பகைமை படர வாழ்வு எப்படி எப்படியோ தடம் மாறிப்போக பல ஆண்டு காலம் இவளது தாயின், சகோதரிகளின் அரவணைப்பில்  வாழ்ந்தாள்.

நேற்று முடிந்து போனாள். முன் சென்று வழி நடத்தினேன் இறுதிக் காரியங்களை எப்படி ஆரம்பத்தில் அவர்களுக்கு உற்ற துணையாக விளங்கினோமோ அப்படியே...அதற்குள் புரட்டாசி சனிக்கிழமை என்கிறார்கள், அமாவாசை கோவில் பூஜை என்கிறார்கள் விரைவாக எடுத்து விடுங்கள் என பார்ப்பனியக் கோவில் கொட்டம் .... அமைதியாக நிறைவாக நிதானமாக எல்லாம் செய்து முடித்து விட்டோம் ஒரு வாறாக.

மழை வேறு மாலையில்
அமைதி அறக்கட்டளையால் நடத்தப்படும் வாகனத்தின் மூலம் மேட்டூர் நகராட்சியின் நவீன எரிவாயு தகன மேடைக்கு கொண்டு சென்று சில நிமிடங்களில் காரியத்தை கணக்காக முடித்தபின் வீடு வந்து சேர்ந்தோம்.

எங்கள் குடும்பம் சார்ந்த  மற்றொரு சகோதரியின் மருமகனான பழனிவேல் இவர் நல்லாசிரியர் விருது பெற்றும்  உதவிக் கல்வி அலுவலர் பணியை வேண்டாம் என மறுத்தும் தற்போதும் தலைமை ஆசிரியராக இருப்பவர் தாரமங்கலத்தில் இருந்து வந்து இந்த நிகழ்வில் கலந்து கொண்டவர் அழகாக சிவபுராணம் தேவாரப் பாடல்களைப் பாடி  தேவையான இடங்களில் சேர்த்து கோர்த்து பிரார்த்தனையை நடத்திக் கொடுத்து இறுதி யாத்திரையை நிகழ்த்திட உதவி புரிந்தார் இதைக் குறிப்பிடா விட்டால் இந்தப் பதிவு நிறைவுபெறாது.

Thursday, September 26, 2019

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா: கவிஞர் தணிகை

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா: கவிஞர் தணிகை
Image result for nenjamundu nermaiyundu odu raja


சிவகார்த்திகேயன் தயாரித்த ஒரு நல்ல படம். இது ஜுன் 14 அன்று வெளியிடப்பட்டு காற்றோடு காற்றாக போய்விட்டது. கடுகு என்று ஒரு படம் வந்ததே உங்களுக்கு எங்கே நினைவிருக்கப் போகிறது...அது புலிவேசம் என்ற கருத்துருக் கொண்டு வந்த படம் அது


அதே போல இதுவும் ஒரு நல்ல படம் ஆனால் அதை விட நல்ல கதை என்றே சொல்ல வேண்டும். பொது இடத்தில் ஒரு வன்முறை அல்லது ஒரு அசம்பாவிதம் அல்லது அநியாயம் நிகழும்போது எவருமே அதை தட்டிக் கேட்க வருவதில்லையே எல்லாமே செல்பி எடுத்து வேடிக்கை பார்த்துக் கொண்டே சப்புக் கொட்டிக் கொண்டே போய் விடுகிறார்களே என்ற ஆதங்கத்தையும்

அப்படி நடக்கும் அநியாயத்தை வெளிபடுத்த முனையும் சமுதாய நலம் சார்ந்த மனிதரை எப்படி வீழ்த்தி விடுகிறார்கள் என்பதுவும் படம். குறைந்த செலவில் எடுக்கப்பட்ட படம்.

ரியோ ராஜ் தொலைக்காட்சி தொடர் நடிகர் சத்தமில்லாமல் அடக்கமாக அலட்டல் இல்லாமல் நடிக்கிறோம் என்று தெரியாமல் நன்றாகவே நடித்திருக்கிறார் தனது நண்பராக‌ விக்னேஷ் காந்த் என்னும் நடிகருடன். இதில் ராதாரவி பத்திரிகை நிருபராக இருக்கும் தன் மகனை இழந்த அப்பா மற்றும் கதையை நகர்த்தும் முக்கிய பாத்திரம்.

மயில்சாமி, நாஞ்சில் சம்பத் போன்ற துணை பாத்திரங்களுடன்  விவேக் ப்ரசன்னா அடுத்த சத்யராஜாக வலம் வரலாம்.

இந்தப் படம் இன்றையத் தேவை ஆனால் இது அவ்வளவு சென்றடைந்ததா என்றே சொல்ல முடியாது.
தெரிந்தவர் பாருங்கள்

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

அரசியலும் பணமும் விருதும்: கவிஞர் தணிகை

அரசியலும் பணமும் விருதும்: கவிஞர் தணிகை


Image result for gretta speech


குளோபல் கோல்கீப்பர் விருது பெறுபவர் நரேந்திரமோடி இந்தியப் பிரதமர் இது மெலிண்டா பில் கேட்ஸ் பவுண்டேசன் மூலம் வழங்கப்பட்டுள்ளது
இது அப்படி ஒன்றும் உலகப் புகழ் பெற்ற விருது என்றெல்லாம் சொல்லிவிடுவதற்கில்லை.

இப்போதெல்லாம் கூட்டம் சேர்ந்தபக்கம் தான் எல்லாம் கொடி பிடிக்கிறார்கள் எவரும் எதையுமே சிந்தித்துப் பார்ப்பதெல்லாம் இல்லை. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நோபெல் பரிசுகள் நியாயமாக வழங்கப்படுவதில்லை என்றும் அப்படி வழங்கப்பட்டால் தனக்கு வழங்கப்பட வேண்டும் வழங்கப்பட்டிருக்கும் என்றெல்லாம் பேசியுள்ளார் அந்த நோபெல் பரிசுக்கு ஆசைப்பட்டு.

அதுமட்டுமல்ல பராக் ஒபாமாவுக்கு எதற்காக கொடுக்கப்பட்டது என்று அவருக்கும் எனக்கும் தெரியாது என எள்ளி நகையாடியுள்ளார். உண்மையிலேயே சிதம்பர சொல்வது போல‌ இந்தியப் பிரதமரும் ஐக்கிய அமெரிக்க நாட்டின் அதிபரும் பரமசிவன் கழுத்தில் உள்ள பாம்புகள்தாம்.

இருவருமே ஒருவரை ஒருவர் வெகுவாக புகழ்ந்தபடியே இருக்கின்றனர். இவரை  இந்தியாவின் தந்தை என்றும் இவரே இந்தியாவை ஒருங்கிணைத்தவர் என்றும் அவர் சொல்லி இருக்கிறார். மேலும்  இவர்களை எல்லாம் கிரெட்டா தன்பெர்க் என்னும் 16 வயது சிறுமி உலக வெப்பமயமாதல் பற்றிய உச்சி மாநாட்டில் தோலுரித்துக் காட்டி நோபெல் பரிசுக்கு நிகரான பரிசை பெற்றுள்ளார்.

சீனாவை அடுத்து உள்ள இந்தியா மாபெரும் ஜனநாயக அரசு உலகளவில் இதற்கு வியாபார வாய்ப்புகள் அதிகம் உள்ளதை எல்லா பணக்கார நாடுகளும் உலகின் பெரும் பணக்காரர்களும் அறிவர் எனவே இந்தியவை ஆள்வார் எவர் என்றாலும் அவரை புகழ்ந்தே ஆகவேண்டும் அவருக்கு விசா கூட வழங்கக் கூடாது என மறுத்த தேசம் இப்படி போற்றிப் புகழ்கிறது மேலும் இவர்களே கலாம் போன்ற மாமனிதர்களை ஆடையை அவிழ்த்து விமான நிலையத்தில் சோதனை இட்டவர்கள் என்பதை எல்லாம் எவருமே மறந்து விட முடியாது.

அங்கே ட்ரம்புக்கு தேர்தல் இங்கே மோடிக்கு தேறுதல்...
எல்லாம் ஒரு தேவைக்காகவே...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை 

Tuesday, September 24, 2019

அண்டப் புளுகு, ஆகாசப் புளுகு, உலக மகாப் புளுகு :கவிஞர் தணிகை.

அண்டப் புளுகு, ஆகாசப் புளுகு, உலக மகாப் புளுகு எது என்றால்
அது மகாத்மா காந்தியின் 150 ஆம் ஆண்டில் இந்தியாவில் யாரும்
வெளியிடத்தில் கழிப்பதே இல்லை என்பதை அமெரிக்காவில் அறிவித்ததுதான்
இப்போது உலகுதான் சுருங்கிவிட்டதே...யார் எங்கே சொன்னால்தான் என்ன‌
தெரியாமலா போய்விடும்?

கலாம் 2020ல் இந்தியா ஒரு நல்லரசாக மாறி விடும் என்ற கனவுகாலத்தின் கனத்த பாதங்களின் முன்
கலைந்து சுக்கு நூறாகிப் போனது அதை உறுதிப்படுத்த  இன்னும் 3 மாதங்கள் மட்டுமே
பாக்கி.
Image result for elephant crushes small egg

Image result for universal lie
இந்நிலையில் ரஷியாவுக்கு கடன் 72000 கோடி கடன் கொடுக்குமளவு
இந்தியா வளர்ந்து விட்டதாக வெளிநாட்டில் படியளப்பதும்
இங்கே விவசாயம் நலிந்து போவதும், படித்த இளைஞர்க்கு வேலைவாய்ப்பே
இல்லாமல் போவதுமாக....

நடப்பதையும் நடந்ததையும் மட்டுமே சொல்லி இருக்கிறேன்
இதில் எனது சொந்தக் கருத்து எதுவுமே இல்லை.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

பி.கு: தூய்மைப் பாரதத் திட்டத்தில் நோடல் ஆபிசராக பணிபுரிந்தவன்
என்ற உரிமையிலும், அனுபவத்திலும் இதை சொல்லி இருக்கிறேன்.

Thursday, September 19, 2019

என் நட்பின் நனி சிறந்தவர்கள்: 5. அழகு என்கிற அழகிரிசாமி: கவிஞர் தணிகை.

என் நட்பின் நனி சிறந்தவர்கள்: 5. அழகு என்கிற அழகிரிசாமி: கவிஞர் தணிகை.



அழகிரி இரண்டாம் ஆண்டு படிக்கும்போது எனது விடுதி அறைத் தோழன். அவன் மேல் கட்டிலைத் தேர்வு செய்து கொண்டான். என்னுடையது கீழ்க் கட்டில்.பத்தாம் வகுப்பு படித்த இந்த சின்னப்பயல்களையும் எங்களோடு  அதாவது பதினோராம் வகுப்பு படித்த எங்களோடு காலம் இணைத்து விட்டது. அப்படி பத்தாம் வகுப்பு முடித்து எங்களுக்கு சமமாக படிக்க வந்தவர்களில் இந்த அழகிரி, இளங்கோவன் இப்படி இன்னும் பல பேர். இவனும் பாலுவும் சேர்ந்து சிறந்த கல்லூரியின் டேபுள் டென்னிஸ் ஆட்டக்காரர்கள். அப்போது காமன் ரூம் விளையாட்டு அறையின் பொறுப்பாளன் நான் . அது வேறு அவனுக்கு பெரிய ப்ளஸ் பாய்ண்ட்  எப்போது வேண்டுமானாலும் ஆடுவதற்கு. ஆனாலும் அதிலும் நான் விதிமுறைகளின் படி நேரம் ஆகிவிட்டால் போங்கடா என வெளியில் துரத்திவிடுவேன்.

அழகிரியின் திருப்பூர் வீட்டுக்கு பல முறை சென்றிருக்கிறேன். அப்போது அவனது தந்தை ஒரு மில்லில் பணி புரிந்து வந்தார். அம்மா வீட்டில் வேஸ்ட் காட்டன் என்றும்  மற்ற வீட்டில் செய்யும் பணிகளையும் செய்து வந்தார். அவனது தந்தை, தம்பி சிவான் என்னும் சிவகுமார்....இவரை சமீபகாலத்தில் நடந்த  அழகிரியின் ஒரே மகன் திருமணத்தின்போதுதான் நீண்ட காலத்துக்கும் பின் பார்த்தேன் நெற்றியில் விபத்து நடந்த அடையாளமான பெரிய தலைக் கட்டுடன்.

தாத்தா, அப்பா, அம்மா, தம்பி ஏன் அவனது முறைப்பெண்ணாக இருந்து துணைவியாக வாழ்ந்துவரும் அவர்கள் குடும்பம் எல்லாமே எனக்கு அறிமுகமாகி மிகவும் அன்புடன் நடந்து கொண்டது இனிய நினைவுகளாகவே இன்றும்.

அழகிரியின்  மகன் பாலாஜியின் திருமணத்திற்கு நான் சென்று கலந்து கொண்டது நீண்ட காலம் கழித்து. எனவே அவனின் தாய் என்னை உச்சி மோந்து கன்னத்தில் கன்னம் வைத்து முத்தமிட்டு என்னை அன்பின் உச்சி எது என்று கொண்டு சென்று காண்பித்து விட்டார்கள் .அப்படிப்பட்ட தருணங்களுக்காகவே அந்த திருமணத்திற்கு சென்று வேலுசாமி வீட்டில் தங்கி இருந்து மறு நாள் முகூர்த்தம் முடிந்து அதன் பின் தான் வந்து சேர்ந்தேன் வீட்டுக்கு எனது வழக்கத்துக்கும் மாறாக. மேலும் அப்போதைய அன்பின் பூரிப்பினால் நினைவு மறதி வந்து எனது செல்பேசியை மின்னூட்டம் செய்ய வைத்ததை அப்படியே கல்லூரியில் விட்டு விட்டு சென்றதும் திருமணம் முடிந்ததும் உடனே கல்லூரிக்கு வந்து அதை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வரவேண்டி நேர்ந்ததும் இன்னும் நினைவகலாமல் உள்ளது.

அழகிரியின் மருமகளும் ஒரு முதுகலை பல் மருத்துவம் படித்த பல் மருத்துவர்.

அழகிரியின் தாய் சேமித்துக் கொடுத்த பணத்தை வைத்துத்தான் முதன் முதலாக அழகிரி வெளிநாட்டுக்குப் போனதாக அவனே சொன்னான். அந்த இராசிதானோ என்னவோ அவன் ஆண்டில் பாதி நாட்களை சீனா, சிங்கப்பூர், தாய்லாந்து, மலேசியா போன்ற நாடுகளில் வணிகம், தொழில் என சுற்றி வருகிறான்.

அதற்கு எல்லாம் முன்னால் அவன் எல்.ஜி.பி  உரிமையாளர் ஒருவருக்கு தனிப்பட்ட உதவியாளராக இருந்தபோதும் அங்கே சென்று அவனது பணியிடத்தில் அவனை சந்தித்து வந்திருக்கிறேன்.

திருப்பூரும் பொள்ளாச்சியும் அருகே என்பதால் அவனைத் தேடி அவன் குடும்பத்தினர் அடிக்கடி இல்லை என்றாலும் அவ்வப்போது எங்கள் விடுதிக்கு வந்து அவனை பார்த்துச் செல்வார்கள். எங்கள் வீட்டில் இருந்து எவரும் வருவதான சூழல் இல்லை. எனவே அவனது குடும்பம் கூட எனது குடும்பமாகவே இருந்தது.

அவனது இளமைக் கால முறைப்பெண்ணுடனான மணத்திற்கு நான் மட்டுமே நண்பர் என்ற பிரதிநித்துவத்தில் கூட இருந்து சிறப்பு செய்தேன். அதே போல் அவனது மகனது திருமணத்திலும் நான் கலந்து கொண்டிருந்தது இன்னும் வெகுசிறப்பு.

அவனும் நானும் திருப்பூர் செல்லும்போது சில சினிமாக்கள் பார்த்ததுண்டு அப்படிப் பார்த்ததில் இன்னும் மறக்க முடியாத படம் தமிழ் மொழிபெயர்ப்பில் "பேய்க்கார்" எனப்படும்" கார்" என்னும்  ஆங்கிலப்படம் மறக்க முடியாததாயிருக்கிறது.

அவன் காங்கேயத்தில் ஒரு விசைத்தறிக்கான லெதர் உபரிப் பொருட்கள் தயாரிக்கும் அகியோடெக்ஸ் என்னும் கம்பெனியை நண்பர்களை பங்குதாரராக்கி நடத்தி வந்து அப்போது தனிக்குடித்தனம் நடத்தி வந்தான். அப்போதும் நான் அங்கு சென்று வந்தேன் அப்போது அவனது குழந்தையாயிருந்த மகன் பாலாஜியை ஸ்கூட்டரில் முன்னும் என்னை பேருந்து நிலையத்துக்கு கொண்டு விட பின் இருக்கையிலும் ஓட்டி வந்தது இன்னும் நினைவில்...

எப்போதும்  நகைச்சுவை உணர்வுடன் கேலிப்பேச்சு பேசிக் கொண்டு இன்னும் குழந்தை மனப்பான்மையுடன் அவன் இன்னும் வாழ்ந்து வந்தாலும் இன்று அவன் தாத்தா ஆகப்போகிறான் ஏற்கெனவே முழுச்சொட்டை விழுந்த தாத்தா அவன். அவனது தாய் கூப்பிடுவது போல ஒரு நாள் கூப்பிட்டு ஏதோ எழுதப்போய் இப்போது அதை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் அவன் இல்லை என்பதை அவனது இடவெளி ஏற்படுத்தி இருந்தது.

அப்போதெல்லாம் வருடத்திற்கு ஒரு முறை திருப்பூர் சென்று அந்த அந்த காலக் கட்டத்திற்குரிய பனியன் டிசைன்களை அவனிடமிருந்து பெற்றுக் கொண்டு வந்து அதை அணிந்து கொண்டு பார்ப்பவர்களை எல்லாம் மிரள வைத்த காலம் இளமையில் உண்டு.இவனுக்கும் எனக்கும் பெரிய ஒட்டுதல் இல்லாதது போன்ற வெளித் தெரியாத அளவிலேயே நட்பு இருந்த போதும் நான் சொல்லி விட்டால் அவன் கேட்பான் என்று அவன் தந்தை சொல்லியதும் நான் குடித்துவிட்டு கீழே கிடக்கும் குடிகாரர் பற்றி திட்டி எழுதியபோது அதனால் தான் உன்னுடன் பேசவே பயம் கொள்கிறேன் என்று பிதற்றியவன்

அவனும் நானும் ஒரே அறையின் பங்காளர்களாக இருந்தபோதே அவனுடைய சட்டை போன்றவற்றை நான் போட்டுக் கொண்டு கல்லூரிக்குச் சென்ற அனுபவங்களும் உண்டு.
 அதில் ஒரு சில்க் சட்டை போன்றது சிவப்பு நிறப் பின்ணணியில் சிறு பிறை போன்ற கறுப்புக் கோடுகளுடன் இருந்த சட்டை இன்னும் என் நினைவில் உள்ளது ஆண்டுகள்  40 ஆகும் தருவாயில் கூட...

நினைவுகள் மறக்கவில்லை அதில் பொலியும் இனிமையும் மாறவில்லை...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Tuesday, September 17, 2019

மறுபடியும் புதர் அடியில் கிடந்த மூக்குக் கண்ணாடிப் பெட்டி கிடைத்துவிட்டது: கவிஞர் தணிகை

மறுபடியும் புதர் அடியில் கிடந்த மூக்குக் கண்ணாடிப் பெட்டி கிடைத்துவிட்டது: கவிஞர் தணிகை

Image result for again I got my spectacles with it box in muddy bushes in yesterday rain


நேற்றே கிடைக்கும் கிடைக்கும் என்ற வார்த்தை வந்து கொண்டுதான் இருந்தது. எனினும் நான் மிக்க கோபமும் விரக்தியிலும் இருந்ததால் நானே எனது கவனக் குறைவால் அது கீழே விழுந்ததை கவனிக்காது,அதை சரியான முறையில் வைக்காமல் தவறவிட்டது என்றாலும் கூட எனக்கு வழிகாட்டும் சக்தியை நான் கோபித்து அது சொல்வதை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இல்லை.கிடைத்தாலும் கிடைக்கட்டும் கிடைக்காவிட்டாலும் போகட்டும் என வெறுப்பில் நம்பாமல் இருந்தேன்.

ஆனால் சரியாக அது தவறிப்போன 24 மணி நேரமுமே நான் என்ன செயலில் ஈடுபட்டுக் கிடந்த போதிலும் ஒரு ஓரத்தில் மெலியதாக இந்த எண்ணமும் ஓடாமல் இல்லை.

கனி கிடைக்காத ஆத்திரத்தில் பெற்றோரை கோபித்துக் கொண்ட குமரன் முருகன் பழநி சென்று நின்றதாக சொல்லி சொல்லி வளர்க்கப்பட்டதாலோ என்னவோ அதே கோபம் அப்படியே இருக்கிறது. என்னதான் தியானத்தில் பெரிதாக ஈடுபட்டு பயிற்சியாளராக இருந்தபோதும் எனக்கு கோபத்தை இன்னும் சரியாக விலக்கவே தெரியாமல் வாழ்ந்து வருகிறேன் என்பது இது போன்ற நிகழ்வுகள் மூலம் நிரூபணம் ஆகிறது.

நேற்று அந்த மழை ஈரத்திலும் தேடிக்கொண்டிருந்த போது: சீர்காழி குரலில் இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி அலைகின்றார் ஞானத் தங்கமே என்ற பாடலின் வரி வந்து கொண்டிருந்தது. நான் அந்த புதர் சேறுஞ்சகதியுமான இடத்தை விட்டு மறுபடியும் அரை கிலோமீட்டருக்கும் மேல் சென்று அந்த மழை இரவில் தேடி முடித்துவிட்டு இந்தப் புதரிலும் டார்ச் அடித்துப் பார்த்துவிட்டு ஏமாந்தே வந்தேன்.

அப்போதெல்லாம் முனியப்பன் கோவிலில் நாம் மறந்து வைத்து விட்டு வரும் குடை,குளிர் கண்ணாடி  இப்படி என்ன பொருள் அங்கு வைத்தாலும் மறு நாள் போய்ப் பார்க்கும்போதும் அப்படியே வைத்த இடத்தில் இருக்கும் அப்படி மறந்து வைத்துவிட்ட பொருள்களை பல முறை நான் மறுபடியும் சென்று எடுத்துக் கொண்டது உண்டு.

அதே போல இன்றும் அமைந்தது. கல்லூரி முடிந்ததும் டாக்டர் குமார் வாருங்கள் போகலாம் என்று என்னைக் கொண்டு வந்து குரங்குச் சாவடி பேருந்து நிலையம் அருகே காரில் இருந்து இறக்கி விட்டபோது மணி 3.52. அதன் பின் பேருந்தில் ஏறி வீடு வந்த போது மணி 4.58. குளித்து முடித்து வெளிச்சத்திலேயே நடைப்பயிற்சிக்கு சென்ற போது மணி 5.20மாலை.

அதே இடம் சென்று தேடினேன். முதற்கட்ட தேடலில் தென்படவில்லை. பின் எப்படி நேற்று வீடு வரும்போது வந்தேனோ அதே போல சேற்று நீரை விட்டு விட்டு புதர் பக்கம் எப்படி நான் கால் வைத்து வந்தேனோ அதே போலத் தேடினேன் சில அடிகளிலேயே செடிகளின் புதர் அடியில் மண் கலரில் உள்ள எனது மூக்குக் கண்ணாடி பெட்டி அப்படியே கிடந்தது. எடுத்துக் கொண்டேன்.

இப்படி எல்லாம் நடக்க வேண்டும் என்றும் நான் நம்பாமல் மீறிச் செயல்படும்போது அதன் வேதனை அனுபவங்களும் அதன் பின்னும் அந்த சக்தி எப்படி வழிகாட்டுகிறதோ அப்படியே நடக்கிறது அவை என்னுடைய போக்கில் போவதல்ல.
Image result for again I got my spectacles with it box
மறுபடியும் அதுவே வெல்கிறது. எனது மீறலுக்குரிய தண்டனையாக அனுபவித்த வேதனை பக்குவமாக.

நான் தோற்றவனாகவே நிற்கிறேன். ஆனால் தோற்பதில் உள்ள சுகம் அனுபவித்து வேதனைக்குப் பதிலாக வேள்வியை இன்னும் அதிகம் உறுதியாக மேற்கொள்ள வேண்டிய பாதையில் போக வேண்டிய படிகளில் மறுபடியும் ஒன்றை ஏறுபவனாக...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

தெய்வத்தின் குரலா ஆன்மாவின் குரலா: கவிஞர் தணிகை

தெய்வத்தின் குரலா ஆன்மாவின் குரலா: கவிஞர் தணிகை
Image result for meditation side effects


சகுனமும், நாள் கிழமைக் கணக்கீடுகளும் என்னைப் பொறுத்தவரை சரியாகவே செயல்படுகின்றன. இதை நான் ஏற்றுக் கொண்டதை சொல்ல ஒளிக்க அவசியமே இல்லை. பெரியார் பிறந்த மண்ணில் பெரியாரைப் படித்தபின்னும் எனக்கு  நேர்ந்த இவற்றை பெரியார் பிறந்த நாளில் சொல்லக் கூச்சப்பட்டாலும் உண்மை உண்மைதானே.

நேற்று கல்லூரி முடிந்தவுடன் பயணம் முடித்து வீடு சேர்ந்தேன் துணைவியாரின் மனைவி தனது கூந்தலை அவிழ்த்து முடிந்து கொண்டிருந்தார் அதுவே நான் பார்த்த காட்சி. அது எனக்கு சரியாகப் படவில்லை

அடுத்து குளித்து முடித்து சுமார் மாலை 6 மணி நடைப்பயிற்சி புறப்பட்டேன் தினமும் மாலையில் வரும் மழை. இன்றும் வானெங்கும் கருக்கல் மேகம் திரண்டிருந்தது எனக்கு அமெரிக்கன் படமான இன்டிபெண்டன்ஸ் படத்தில் மேகம் திரண்டு செல்வதைப் பார்ப்பது போல் இருந்தது.

வேண்டாண்டா, வேண்டாண்டா என இரு முறை ஒரே வாசகமாய் ஒலியற்ற குரலின் மென்மையான எச்சரிக்கை. மீறி நடந்தேன் உடல் நலம் தேவைப்படுவது மிகவும் முக்கியமாகப் பட..

வழியில் கோம்பூரான்காட்டில் இரண்டு நண்பர்கள் நீங்கள் அந்தப் பாலத்தருகே செல்வதற்குள் மழை வந்து விடும் என்றார்கள். அப்படியே ஆரம்பித்தது மழை. கருப்பு ரெட்டியூர் வரை மட்டுமே செல்ல முடிந்தது கையில் குடையும் , அத்தியாவசிய கல்லூரி கைபேசியும், சிறு துண்டும், கைடார்ச் லைட்டும், அத்துடன் பூச்சி கண்ணில் அடிக்காதிருக்க ஒரு பவர் மூக்குக் கண்ணாடியுடன் பெட்டியில் இப்படி இத்தனை தேவைப்படுகிறது ஒரு நடைப்பயிற்சி மேற்கொள்ளக் கூட...

ஒரு டைலர் கடை முன் புறம் எவருமில்லை. நானும் அஜித் என்னும் இளைஞர் தெர்மல் பணிக்குச் செல்பவர் எதிர் வீட்டுக்காரர் இருவரும் தஞ்சம் அடைந்தோம் அரை மணி நேரத்துக்க்கும் மேல் நல்ல மழைப்பொலிவு.

சற்று குறைய பொறுமை இழந்து குடை இருக்கும் தைரியத்தில் வீடு திரும்பலாம் என முடிவெடுத்து எதையும் மறக்காமல் எடுத்துக் கொண்டேனா எனப் பார்த்துவிட்டு புறப்பட்டேன்.

கண்ணன் வீட்டில் சற்று நிற்கலாமா இல்லை அந்தப் பெரியவர் வீட்டில் சற்று இடைவெளி கொடுக்கலாமா என்று கேட்டபடியே பாலம், அதன் பின் கோம்பூரான்காடு என நடந்து கொண்டே இருந்தேன்.

அர்ஜுனன்...கிருஷ்ணன் மட்டி மண் கம்பெனி அருகே ஒரே சேறுஞ்சகதிய்யும் அதில் குட்டையாக மழை நீர் தேக்கம், மேல் மழை. குடை கையில் இடையே ஒரு இடத்தில் சிறு நீர் கழிப்பு...அப்படியே அந்த நீர்க்குட்டையை தாண்ட வழியின்றி கம்பெனி சுவர் உள்ள புதர் ஓரம் செல்ல  முயற்சி செய்து வெளியே தாண்டி வரும்போது பார்த்தால் பாக்கெட்டில் மூக்குக் கண்ணாடிப் பெட்டியை கால் சட்டைப் பையில் சிறு துண்டுடன் வைக்க முடியாமல் செருகி வைத்திருந்ததைக் காணவில்லை. எங்கே விழுந்ததோ...தெரியவில்லை.

மனம் அடித்துக் கொண்டது..உடனே அந்த குரல்... பழி வாங்கியது போல வேண்டான்னு சொன்னோம் கேட்டியா...என..

பதறி அடித்தபடி டார்ச்சை அடித்துக் கொண்டு வந்த வழியே அந்தப் பாலம் வரை நின்று சிறு நீர் கழித்த இடம் எது எனத் தேடிக்கொண்டும், ஒரு வேளை பிரபு கடையில் சாக்ஸை கழட்டி ஷூவுக்குள் இருந்த நீரை சாக்ஸைக் கழட்டி பிழிந்த இடத்தில் ஏதாவது வைத்து இருக்கிறோமா, என்று இப்படி எல்லாம் மனம் அடித்துக் கொள்ள சென்று பார்த்தேன். அது எங்கும் காணப்படவில்லை.

மறுபடியும் சேறும் சகதியும் புதருமான பகுதியில் எங்காவது கிடக்குமென்ற நம்பிக்கையில் தேடினேன் ஆனால் கிடைக்கவில்லை. அதை எவரும் எடுத்தாலும் அவருக்கு அது பெரும்பயனாக இருக்கப் போவதில்லை என்பது உண்மைதான் என்றாலும் பொருளாதாரம் நலிவடைந்திருக்கும் நேரத்தில் சுமார் இரண்டாயிரம் பெறுமான ஒரு அத்தியாவசியப் பொருளை தொலைத்தது எனது கவனக் குறைவால் என்பதை மனம் ஏற்றுக் கொள்ளவில்லை

என்றாலும் இது  வரை வாழ்வில் எவ்வளவு இழந்திருக்கிறேன், எவ்வளவு அரிய உயிர்களை இழந்திருக்கிறேன் எத்தனை பொருள்களை இது போல் இழந்திருக்கிறேன், மேலும் இந்தக் கண்ணாடி எங்கே எங்கே என்று விசாரித்து எப்படி எப்படிஎல்லாம் செய்ய வேண்டும் என முயன்று செய்து விலை கொடுத்து வாங்கி இப்படி வீணாக போனதே என்ற கவலையை நிலையாமையை சொல்லி எல்லாவற்றையும் விட்டு விட்டு ஒரு நால் எல்லாமே போவதுதானே எனத் தேற்றிக் கொள்கிறேன்.

போனது எல்லாம் போனதுதானே..

வருவது எல்லாம் வருவதுதானே...

தீதும் நன்றும் பிறர் தர வாரா...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.
Image result for meditation side effects
மறுபடியும் என்னை விட எனது நானை விட அந்த வார்த்தைகளே பிரதானமாகி நிரூபித்து விட்டது.... 

என் நட்பில் நனி சிறந்தவர்கள்: 4. சி.பி.கிரிதரன் எலக்ட்ரிகல்

என் நட்பில் நனி சிறந்தவர்கள்: 4. சி.பி.கிரிதரன் எலக்ட்ரிகல்


Image result for nachimuthu polytechnic college


 எப்போதும் குறு நகை தவழும் முகமும் கலகல என சிரிக்கும் குணமும் எப்போதும் கிரிதரனுக்குச் சொந்தம்.

.    1978ல் நாங்கள் அறிமுகமானபோதே  கிரிதரனுக்கு தந்தை கிடையாது. தங்கை உண்டு. தாயுடன் உக்கடத்திலிருந்து ஒரு வலுவான பரிந்துரையின் பேரில் கல்லூரி சேர்ந்து மின்னியலை படித்தவன். எனக்கும் அவனுக்கும் எப்படி நட்பு உருவானது என்றே தெரியவில்லை .ஆனால் அது 1978 முதலே ஆரம்பித்து விட்டது.

அவனுக்கு என்னிடம் என்ன அப்படி ஒரு ஈர்ப்பு என்பதோ எனக்கு அவனிடம் என்ன ஒரு பிடிப்பு என்பதோ வார்த்தையில் சொன்னால் முடியாது.
அந்தக் காலத்திலேயே ஒரு வெள்ளை வேட்டையை மடித்துக் கட்டிக் கொள்வான், மேலே காக்கி சட்டையை போட்டுக் கொண்டு இருப்பான். அந்தக் காட்சி இன்னும் என்னுள் அப்படியே இருக்கிறது.

அவன் தான் என்னை இரண்டாவது ஆட்டம் சினிமாவுக்கு அழைத்துச் செல்லப் பழக்கியவன் என்று சொல்லலாம். அவனுடன் பொள்ளாச்சியில் ஊருக்குள் இருந்த ஒரு பெயர் மறந்து போன தியேட்டரில் மலையாள படங்கள் அதிகம் பார்த்தோம். ஓமன், சீமா நடித்தது, ஜெயன் நடித்தது  ஜெயப்ரதா நடித்தது கமல் நடித்த ஈட்டா என்னும் படம் ஈட்டா என்றால் மூங்கிலாம்.

பெரும்பாலும் அவனே அந்த டிக்கட் செலவை எல்லாம் ஏற்றுக் கொண்தாக நினைவு. பகலில் விடுமுறை நாளில் மேட்னி பார்த்துவிட்டு பெயர் மறந்து போன ஒரு பிரபலமான கடையில் தேங்காய் பன்னும், ஏலக்காய் தேநீரும் உண்டது இன்னும் மணமாக இருக்கிறது.அதுதான் அங்கே அதிகம் அனைவர்க்கும் பிடித்த வகை உணவு. கல்லூரி மாணவர் அனைவருமே அங்கு அதையே விரும்பு உண்ணச் செல்வர்.

அவன் நல்ல பொறுப்புடன் இருப்பான். அவனுடைய குடும்ப கஷ்டத்தை வெளியே எவரிடமும் காண்பிக்கவே மாட்டான். ஏன் என்னிடம் கூட சொன்னதில்லை அப்போது அவன் அப்படி நினைத்துக் கொள்ளும்போதெல்லாம் அவன் அறை உள் தாளிடப்பட்டு இருக்கும் என்ன நாம் முயற்சி செய்து தட்டினாலும் காட்டுக் கத்து கத்தினாலும் கிரிதரா கிரிதரா என உருகினாலும் கதவை பிடிவாதமாகத் திறக்கவே மாட்டான். அப்படி அவன் கதவைத் திறக்காமல் நான் காய்ந்ததெல்லாம் உண்டு.

அவனது சொந்தக்கார விரிவுரையாளர் நாச்சி முத்து என  நினைக்கிறேன் எங்களுக்கு வணிகவியல் பாடம் எடுக்க ஒராண்டு ஒரு பாடத்துக்கு வந்து சுருக்கமாக விரிவுரை செய்த நினைவு. அவனின் சொந்தக்காரப் பெண் துளஸிமணி கூட அங்கேயே வந்து படிக்க சேர்ந்தது.

எப்படியோ படிப்பு முடித்து எங்களுடைய செட்டில் முதன் முதலாக குவெய்த் சென்று பணியில் அமர்ந்தவன் அவன் தான். அவனுடைய கடிதம் வரும்போதெல்லாம் மனம் மிகவும் மகிழும். அப்போதெல்லாம் தொலைத் தொடர்புதான் அவ்வளவு இல்லையே. அந்தக் கடிதத் தொடர்பு கொஞ்ச நாள் இருந்தது அதன் பின் என் போதாத நேரம் எனக்கு ஏதாவது வேலை கிடைக்குமாடா எனக் கேட்டது முதல் நின்று போயிருந்தது.

அதன் பின் வெகு காலம் கழித்து சிங்கப்பூரில் ஹனீபா டெக்ஸ்டைல்ஸ் மூலம் நிர்வாக அலுவலர் பணிக்கு அவர்கள் அழைத்து என்னிடம் பாஸ்போட் இருந்தும் தாய் தனியாக இருப்பவரை ஒருவர் மட்டுமே அப்போது என்னிடம் இருந்தவரை பிரிந்து செல்லக் கூடாது என அந்த வாய்ப்பை பயன்படுத்தாமல் நான் பாதை மாறிப்போனதெல்லாம் வேறு.
Image result for nachimuthu polytechnic college
முதலாண்டு அவனுடன் வள்ளியப்பன் டெக்ஸ்டைல்ஸ், மேட்டுப்பாளையச் செல்வன் மெக்கானிக்கல்  மற்றும் ஒரு நண்பர் பெயர் மறந்துபோனது ஆகியோர் அவனது அறைப் பங்காளர்கள். அவர்கள்  ஒரு முறை எல்லாம் சேர்ந்து என்னைப் பிடிக்க முயற்சிக்க அத்தனை பேரையும் வலுவாக இடித்துத் தள்ளி என்னை எனது பலத்தை நிரூபித்து ஜெயித்த நிகழ்வெல்லாம் அவனுடைய அறையில் நடந்த உண்மைக்கதை அதை எல்லாம் சொல்லில் சொல்லி சிரிப்பார்கள் மகிழ்வில் மாய்வார்கள்

அதை அடுத்து அவனும் நானும் ஒரு முறை மெஸ்ஸில் சாப்பிடாமல் அனைத்து மாணவர்களும் ஸ்ட்ரைக் செய்த இரவு இருவரும் மட்டும் சென்று சாப்பிட்டு விட்டு வந்த போது எங்கள் இருவரையும் அனைத்து சீனியர் மாணவர்களும் வளைத்துக் கொண்டு எதிர்த்துக் கேள்விகள் கேட்டபோது எங்களிடம் வீட்டில் இருந்து கொடுத்த காசு பணம் ஏதும் இல்லை. பசிச்சிது...போய் சாப்பிட்டோம்...என நான் பதில் சொன்னதைக் கேட்ட சீனியர் மாணவர்கள் ஒன்றும் செய்யாமல் சரி விடுங்கள் அவர்கள் போகட்டும் என விட்டு விட்டார்கள் ரூமுக்கு. அதை  கிரி எப்போதும் உனக்கு எவ்வளவு துணிச்சல் எத்தனை பேர் இருந்த போதும் கொஞ்சம் கூட சீனியர் ஜூனியர் பயமில்லாமல் எப்படி பேசினாய் ... என்பான்...
Image result for nachimuthu polytechnic college
அன்பு கிரிதரா இப்போது நீ எப்படி இருக்கிறாய்...தாய், தங்கை நலமா, உனது குடும்பம் எப்படி, நீ எங்கே இருக்கிறாய் என்றெல்லாம் கேட்க எப்போதும் ஆவலாய் இருக்கும் உன் அன்பு தணி.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Sunday, September 15, 2019

பேரறிஞர் அண்ணாவுக்கும் எனக்கும் உள்ள தொடர்பு: கவிஞர் தணிகை

பேரறிஞர் அண்ணாவுக்கும் எனக்கும் உள்ள தொடர்பு: கவிஞர் தணிகை


Image result for anna birthday chief minister of tamil nadu

இன்னும் அவரின் இறுதி அஞ்சலி நிகழ்வில் கூடிய மக்கள் வெள்ளத்தின் உலக  சாதனையை எவராலும் விஞ்ச முடியவில்லை.  40 ஆண்டுகள் ஆனபின்னும் பிறந்தாலும் இவர் போல என பேர் சொல்ல வேண்டும் இவர் தான் என ஊர் சொல்ல வேண்டும். அண்ணா இந்த சாதனைகளுக்கெல்லாம் முற்றிலும் தகுதியனவர்.



பேரறிஞர் அண்ணா தமிழக முதல்வர் ஆன பின் வேம்படிதாளம் அரசு மருத்துவமனைக்கு வந்து ஒரு மருத்துவமனைக் கட்டிடத்தை திறந்து வைத்துள்ளார்.1967/68 அதன் புகைப்படம் இன்றும்  அதன் முக்கிய இடத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.அதன் மூலம் நாம் அந்தக் காலத்துக்கு செல்ல முடிகிறது.

  அடியேன் 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் அந்த இடத்திற்கு தொடர்புடையவனாகி இருக்கிறேன்.

 முதன் முதலாக அந்த அரசு மருத்துவ மனைக்கு சென்ற போது அதன்   தலைமை மருத்துவர் வேண்டா விருப்பாக இருந்தார். காரணம் சேவை செய்ய சென்றவர்கள் சரியாக செயல்படவில்லை என்பதே.

அதை சீர் செய்யவே வந்திருக்கிறேன் எனச் சொல்லி இந்த கடந்த  3 ஆண்டு காலத்தில் மிகவும் சீரிய முயற்சியுடன் இயங்கி வேண்டா விருப்பாக இருந்த அதே தலைமை மருத்துவரால் மெச்சி மகிழ்ந்து வாரத்தில் இரு நாள் இயங்கி வந்த பல் மருத்துவத்திற்கான பிரிவை அவருடைய உதவி மற்றும் இணை சுகாதார இயக்குனரகம் ஆகியவற்றின் ஆதரவுடன் தினமும் இயங்கும் வண்ணம் மாற்றி அமைத்து சேவைகள் சென்று சேர ஒரு கருவியாக இருந்திருக்கிறேன்

இதற்காக இணை சுகாதார இயக்குனரகம் ஆணை வழங்கிட வேம்படிதாள தலமை மருத்துவரும் எங்கள் கல்லூரியின் முதல்வரும் புரிந்துணர்வு ஒப்பந்தம் 5 ஆண்டுகளுக்கு மேற்கொண்டு இருக்கின்றனர். எங்கள் கல்லூரி இதற்கான அத்துணை பொருளாதார உதவிகளையும் செய்ய அரசு அதற்குண்டான பங்களிப்பை செய்து வர இரு கை ஓசையாகி இருக்கிறது இங்கொரு சேவை.

இது ஒரு சத்தமில்லா சாதனைதான். ஏன் எனில் பல் வலியோடு வரும் நோயாளிகளுக்கு வாரம் இரண்டு நாள் போதாது அவ்வப்போது அன்றைய தினமே நோய் தீர்வு செய்யப்படுவதுதான் சரியாக இருக்கும் என்ற பொதுமக்களுக்கான சேவை மனப்பான்மையோடு இந்த செயல்பாடு சேவையாக செய்யப்பட்டு வருகிறது.

இங்கு பணி புரிய வரும் மருத்துவர்களிடம் நான் உவந்து சொல்வதுண்டு இதை அறிஞர் அண்ணா திறப்பு விழா செய்திருக்கிறார். என. இது மட்டுமல்ல  அப்போது மத்திய மந்திரியாக இருந்த  மரகதம் சந்திரசேகர் 1953ல்  தற்போது இயங்கி வரும் சித்த மருத்துவ பிரிவுக் கட்டடத்துக்கு வந்து திறப்பு விழா செய்து சென்றிருக்கிறார்.

அதை அடுத்து அறிஞர் அண்ணா அளவு எவருமே பெரிய பேச்சாளராக இருக்க வழியில்லை. இருந்தாலும் நானும் ஒரு நல்ல பேச்சாளர் என்ற  பேச்சு இருக்கிறது அது உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அவையில் பேசுமளவு எனைக் கொண்டு சேர்க்குமளவும் காலமும் வாழ்வும் செய்திருக்கிறது. அவர் கன்னிமாரா நூல்கள் அனைத்தையும் படித்து முடித்ததாக சொல்வார், நானும் எங்கள் ஊரில் உள்ள இரு கிளை நூலகம் நூல்கள் படித்து அதன் பின் மற்றொரு தனியார் ஆலையின் மனமகிழ் மன்ற நூல் நிலையத்தின் நூல்களை எல்லாம் படித்து முடித்தேன். அதன் பின் சேலம் மைய நூலகம் சென்றேன். பெரியார் படிப்பகமும் சென்றேன் தொட்டுக் கொள்ள மட்டும்.
ஒரு முறை தலைவாசல் அரட்டை அரங்க தேர்வின் நிகழ்வில் உதயம் ராம் என்னையும் என்னுடன் இருந்த மற்றொரு தம்பியையும் விளையாட்டாக என்ன அண்ணாவும் கலைஞருமாக என என்னை அறிஞர் அண்ணா எனக் குறிப்பிட்டது யாவும் சுவைபடப் பகிரத்தக்கதாகவே உள்ளது.

அண்ணா ஓரிவில் என்ற நாடகத்தை ஒர் இரவில் எழுதி முடித்தார் அது சினிமாவாகவும் எடுக்கப்பட்டது அடியேனும் அளவுக்கு மிஞ்சினால் என்னும் சுமார் 30 பக்க நூலை ஒரே இரவில் எழுதி முடித்து அப்போது என்னுடன் தொடர்பிலிருந்த இரு நண்பர்களுக்கு காட்டினேன்


அறிஞர் அண்ணா கலாம் படித்த பள்ளிக்கு எப்படி வரவழைக்கப்பட்டு பேச வைக்கப்பட்டார் என கலாமே தமது நூல் குறிப்பில் குறிப்பிடுகிறார் அது ஒரு சுவையான நிகழ்வு. அந்த கலாமிடம் கூட எனக்கு தொடர்பிருந்ததும் அந்தக் கலாமும் அடியேனும் கூட அறிஞர் அண்ணாவை பின் பற்றுவாரே. .மேலும் காமராசர் மட்டுமல்ல அறிஞர் அண்ணாவும் மிகவும் எளிமையானவரே. சுயநலம் இல்லாதவரே அவர் அவர் குடும்பத்துக்கு எல்லாம் எதையும் சேர்த்தவர் அல்ல. அவருக்கு எனக் குழந்தையே இல்லை. தத்து எடுத்து வளர்த்தவரே டாக்டர் பரிமளம் போன்றோர். அவரது மனைவி ராணி அம்மையாருக்கு முன்னாள் முதல்வர் ஜெ உதவியதாக வந்த செய்திகள் இன்றும் நினைவில்.

பேரறிஞர் நல்ல மனிதர். பானுமதி பற்றி ஊடகம் கேள்வி எழுப்பியபோது கூட உள்ளதை உள்ளபடி வெளிப்படையாக நயம்பட அவள் ஒன்றும் பத்தினியுமல்ல நானொன்றும் புத்தனுமல்ல என்று கூறிய கதையை உலகே பேசும்.
Image result for anna birthday chief minister of tamil nadu
ஆனால் கலைஞரின் அரசியல் சாகசம் அவரையும் பீடித்து விட்டது. கண்ணதாசனும் கலைஞர் கருணாநிதியும் கட்சிப் பணி செய்து வென்ற ஒரு தேர்தல் பற்றி தான் அண்ணாவிடம் பாராட்டு பெற பொதுக்கூட்டத்தில் தான் விலைக்கு வாங்கிக் கொடுத்த மோதிரத்தை அண்ணாவிடம் இருந்து பரிசாகப் பெற்றதாக வெளிக்காட்டிக் கொண்டு பேர் வாங்கிய கதையை பற்றி கண்ண தாசன் கேட்க அறிஞர் அண்ணாவோ நீயும் வாங்கிக் கொடுத்திருந்தால் உனக்கும் மேடையில் பரிசாக கொடுத்திருப்பேன் என சமாதானப்படுத்தி சமாளித்ததாக வனவாசம் மனவாசம் நூல் குறிப்புகள் சொல்கின்றன.

அந்த அரசியல் சாகசம்  பாசாங்கு மக்களுக்கும் பிடித்துப் போக  அன்றைய காலம் முதல் இன்றைய காலம் வரைத் தேவைப்பட நல்லவர் அரசியலில் நுழைய முடியாத போக்கும் வித்தை தெரிந்தவர் மட்டுமே கோலோச்சும் போக்கும் காணப்படுகிறது சுயநலம் மட்டுமே குடும்பம் மட்டுமே தலைமை ஏற்றிருக்க அதிலிருந்து தமிழக அரசியல் தலைவிதி அண்ணாவுக்கும் பின் கலைஞர் கை வர எம்.ஜி.ஆர் உதவ அதன் பின் அதே எம்.ஜி.ஆர்  மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவார் தம் மக்கள் நலம் ஒன்றேதான் மனதில் கொள்ளுவார் என்று பாடி விமர்சித்து அரசியலுக்கு வந்து அ.இ.அ.தி.மு.கவை அரியணை ஏற்றி வைத்தார்.

இன்று ப்ளக்ஸ் தலையில் விழுந்து சுபஸ்ரீ மரணத்துக்கு ஸ்டாலின் குரல் கொடுப்பது எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் வரவேற்கத்தக்கதே எனினும்  மது ஆலைகள் எல்லாம் இவர்களிடம் சொந்தமாக இருக்கிறது அவர்கள் போன்றோர்தான் டாஸ்மாக்கிற்கே மதுவை விநியோகம் செய்கிறார்கள் என்றெல்லாம் செய்திகள் இருப்பதை  மறுப்பதற்கில்லை.

கலைஞருக்கும் பின் ஸ்டாலின் ஸ்டாலினுக்கும் பின் உதயநிதி என்றே வளரும் கட்சி....இப்போது ஏனோ அழகிரியின் குரல் அடங்கி இருக்கிறது இந்த பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க வெற்றியும் பெற்று விட்டது. ஆனால் அதனால் அதற்கு எந்த வித பெரும்பயனும் இல்லாமல்...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.
Related image
 எல்லோரும் இன்று அண்ணாவைப் பற்றி நினைக்கிறார் எனவே நானும் சொல்ல வேண்டுமல்லவா எனக்கும் பேரறிஞர் பிடித்தமானவர்தானே...மயிலும், காகமும் பாராளுமன்றத்தில் பேசிய பேச்சு இன்று அமித்ஷாவும் அண்ணாவும் என நினைத்துப் பார்க்கிறேன் இன்றும் பொருந்த...

Saturday, September 14, 2019

அசம்பாவிதங்கள் நடந்தால் மட்டுமே அரசு செயல்படும் : கவிஞர் தணிகை

அசம்பாவிதங்கள் நடந்தால் மட்டுமே  அரசு செயல்படும் : கவிஞர் தணிகை




சுபஸ்ரீ இறப்பு 2000க்கும் மேலான போஸ்டர் ப்ளக்ஸ்களை எடுக்க வைக்க ஒரே பெண்ணை பெற்று எடுத்ததாகச் சொல்லும் தந்தை வயிறு வாயுமாக அடித்துக் கொள்ள மகளை இழந்த குடும்பத்துக்கு 5 இலட்சம் இழப்பீடு அளிப்பதாக அரசு விளம்பரங்களும் நீதிமன்றத்தின் தீர்வுமாக ...

முதன் மந்திரி வழியாக வந்தால் உடனே சாலை போட்டிருப்பார்கள்
பாராளுமன்ற உறுப்பினர் வருவதாக இருந்தால் கொசுமருந்து அடித்து சாலை இருபக்கமும் சுண்ணாம்பு வட்டங்கள் இட்டு அலங்கரிப்பார்கள்
 சாலையில் செல்ல வேண்டுமெனில் குறைந்தபட்சம் ஒரு கவுன்சிலராகவாவது இருக்க வேண்டுமல்லவா?
இப்படி பொதுமக்கள் எல்லாம் போகவா சாலையும் ரோடும்....
Image result for subashri death
போனால் இப்படித்தான் இருக்கும், நடக்கும். இதை எல்லாம் யாரும் கேட்கக் கூடாது. ட்ராபிக் இராமசாமிக்கு வயதாகிவிட்டது ப்யூஸ் மானுஸ் போன்றவர்களுக்கு செருப்பு மாலையும் அடி அடி பூஜையும், எனைப் போன்றோர்க்கு வீட்டிலேயே கொசுக்கடி தாளவில்லை சிறைக்கு சென்று கொசுக்கடியை தாக்குப் பிடிக்க உடலில் சத்து இல்லை,.இதைப்பற்றி எல்லாம் பேச எழுத கேட்க கேள்வி எழுப்ப குடும்பம் வாய் வயிறு ஏதுமே  இருக்கக் கூடாது அவர்கள் மனிதராயும் பிழைக்கக் கூடாது...பிழைத்திருக்கவும் கூடாது. பிழைக்கவும் விடமாட்டார்கள் அதெல்லாம் வேறு.

காவல் நிலையத்துக்கு புகார் வந்தால் தான் நடவடிக்கை எடுத்தாலும் எடுப்பார்
நீதிமன்றத்திற்கு வழக்கு  தொடரப்பட்டால்தான் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
புகார் மனு வந்தாலும் கொடுத்தாலும் மட்டும்தான் அது பற்றி கவனித்தால் நடவடிக்கை என்ற பேரிலாவது எதாவது செய்ய விரல் அசைக்கப்படும்

ஊடகம் எல்லாம் எதையும் கண்டு கொள்ளாது அதிசயமாக இருந்தால் மட்டும் கண்டு கொள்ளும் இரட்டைத்தலைப் பாம்பு, ஒங்களைப் போடணும் சார் என்ற சினிமா விளம்பரம் இது போன்று வித்தியாசமாக இருந்தால் மட்டுமே ஊடகம் வருவாய் இருந்தால் மட்டுமே தொழில் நடத்த முடியும்.... எனவே பொதுமக்கள் பிரச்சனையை எல்லாம் யார் கையில் எடுத்துக் கொள்ளப்போகிறார்கள்... எல்லாம் ஆன்லைனிலேயே சான்றிதழ் பட்டா மாறுதல் யாவுமே செய்து கொள்ளலாம் ஆதார் பான் போன்றவை கூட ஆனால் கொடுக்க வேண்டியதை பார்த்துக் கொடுத்துவிட்டால்... தனியார் என்பவை இருக்கும் வரை அரசு என்பது இப்படித்தான் இருக்கும்...
Image result for subashri death
சேலத்தில் முதல்வர் வருகிறார் என்று சிட்டியிலும் அர்பன் லிமிட்டிலும் ஹைவே சாலைகளிலும் அடிக்கடி இந்த சம்பவம் நூற்றுக் கணக்கான காவல்துறையினர் பத்து பதினைந்து மீட்டர் இடைவெளியில் ப்ரோட்டோக்கால் என்ற நடைமுறையில் சாலையில் கடும் வெயிலிலும் மழையிலும் நூறடிக்குள் அல்லது நூறு மீட்டர் இடைவெளிக்குள் மற்றொரு காவலர் இதுவே கிலோமீட்டர்களின் நீளத்தில் தொடர்ச்சியாக வரிசையாக....
Image result for subashri death
சாலையின் இருமருங்கும் கட்சிக் கொடிகள் சில இடங்களில் சாலையின் உள் பக்கமாகவே அக்கறையில்லாத படிக்காத பாமர குடிகார வேலைக்காரர்களால் நடப்பட்டிருக்க  எங்கும் எங்குமே எங்கெங்கும் போஸ்டர்கள் .அம்மாவின் விளம்பர ஸ்டைல் இன்றைய முதல்வர் விருப்பமாக... இதெல்லாம் சட்டம் நீதிக்கும் புறம்பானது என முதல்வருக்கு தெரியாது என நினைப்போமாக அல்லது அவரது கவனத்திற்கு கொண்டு செல்ல முடியாது அதை எல்லாமா ஒரு முதல்வர் பார்த்துக் கொண்டிருக்க முடியும்... அவர் மிகவும் பிஸியானவராக இருப்பார், ஸ்டெரிலைட்டாலையில் மனிதர்கள் சுடப்பட்ட கதை போல அங்கு ஒரு பெண்ணை வாயில் குண்டு சுட்டு சாகடித்த கதை போல இன்று இந்த சுப-ஸ்ரீ விபத்து...

பாருக்குள்ளே நாடு நம் பாரத நாடு, டாஸ்மாக் பாருக்குள்ளே நல்ல நாடு நம்ம தமிழ் நாடு.
ப்லக்ஸ் போர்ட் வைக்கக் கூடாது என சட்டமும் நீதியும் சொன்னபோதும் எதற்கெடுத்தாலும் போஸ்டர் கலாச்சாரம் கட்சி என்று இல்லாமல் மக்கள் கலாச்சாரமாகவே ஆகிவிட்டது இறந்தாலும், பிறந்தாலும், மணம் என்றாலும், பூப்பெய்தினாலும்,இன்னும் டைவர்ஸ் செய்து கொண்டோம் என்ற போஸ்டரைத்தான் இன்னும் பார்க்க முடியவில்லை. அதையும் செய்தித்தாள்களில் மறுதேடலுக்காக போட்டுக் கொள்வார்கள்.... இதற்கு எல்லாம் ஆரம்பம் இந்த அரசியல் கட்சிகள்தான்.

போஸ்டர் அடிக்கச் சொன்னவர்கள் மேல் செயல்நடவடிக்கை மேற்கொள்ளாமல் அதை அடித்த பிரஸ்காரர்கள் மேல் நடவடிக்கை எடுக்கிறார்களாம் வாயில் அல்லாமல் வேறு ஏதிலோ சிரிக்கிறார்களாம் கேட்பவர்கள்...
Image result for subashri death
இதெல்லாம் ஒரு அரசு இதற்கெல்லாம் அரசு என்று பேர்...
அதிலும் கட்சிக்காரர்கள் என்றால் சொல்லவே வேண்டாம் எல்லார் வீட்டு திருமணங்களும் தலைவர்கள் போஸ்டர்கள் இல்லாமல் இல்லை. அதில் ஜக்கி வாசுதேவ் போன்ற ஆன்மீக போஸ்டர்களும் இருக்கின்றன... யாரைச் சொல்லியும் குற்றமில்லை மக்களின் மனநிலையே அப்படி ஆகிவிட்டது...இதை எல்லாம் எதிர்த்து கேட்டால் மனநிலை பிறழ்ந்தவராகவே கருதப்படுவார். இதெல்லாம் இந்தக் காலத்தின் அவசியமய்யா என்ற குரல்கள் ...டாஸ்மாக்கில் பணி செய்யும் எனக்குத் தெரிந்த ஒரு சாகக் கிடக்கும் சவத்துக்கு சம்பளம் ஒரு குவாட்டரும் இருபது ரூபாயுமாம்...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.
Image result for subashri death
இறந்து போன சுப-ஸ்ரீக்கும், ஒரே மகளை இழந்த பெற்றோர்க்கும் இந்த பதிவை ஆழ்ந்த  வருத்தத்துடன் காணிக்கையாக்குகிறேன்.


Thursday, September 12, 2019

என் நட்பின் நனி சிறந்தவர்கள்: 3 மறக்க முடியுமா மணிமாறன் உன்னை: கவிஞர் தணிகை


மறக்க முடியுமா மணிமாறன் உன்னை: கவிஞர் தணிகை

நீ எனக்கொரு சகோதரனாய் நண்பனாய் சீனியராய் எல்லாம் இருந்தாய்..உனக்கும் எனக்கும் இடையே நம்மிடம் ஒரு நாகரீகமான உறவு நட்பையும் மீறி இருந்தது. அதை வெறும் ஒரு பெயர்ச் சொல்லி(ல்) குறிப்பிட முடியாது.
Image result for good friend

மணிமாறனை அவர்கள் வீட்டில் ராஜா என்றுதான் கூப்பிட்டதாக நினைவு. 1979 முதல் 1997 வரை வந்த இந்த உறவு அதன் பின் ஏனோ விடுபட்டுப் போயிருக்கிறது. இப்போது அவர் ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர். எனக்கு அவர் ஒரு ஆண்டு மூத்தவராக இருந்து எங்கள் படிப்பில் ஆனால் வேறொரு பிரிவில் இருந்து  படித்து முடித்து வேலை  வாய்ப்பு மையம் வழியாக அப்போதைய சேரன் போக்குவரத்துக் கழகத்தில் பணியமர்ந்தார். அவரது அலுவலக சிறப்பிதழ்களில் கூட என்னிடம் ஒரு கவிதையைக் கேட்டு வாங்கி  வெளியிடக் காரணமாகி இருந்தார்.

அவரது திருமணத்துக்கு நானோ அவர் எனது திருமணத்துக்கோ வர வாய்ப்பில்லாமல் காலம் செய்திருந்தது. அவரது துணைவியாரும் அவர் காட்டிய அதே அன்புடன் அவர்கள் வீடு செல்லும்போதெல்லாம் என்னிடம் நடந்து கொண்டதும் அவரது தாய் தந்தை தங்கை தம்பி அனைவருமே என்னை ஒரு வேண்டப்பட்டவராக வைத்துக் கொள்ள இவர் அப்படி என்னதான் அவர்களிடம் சொல்லி என்னை அவர்கள் வீட்டுக்கு அழைத்திருப்பார் என்றுதான் தெரியவில்லை.

நான் எனது சொந்த வீட்டுக்கு போவது போல அவர்கள் வீட்டுக்கும் போவேன் அப்போது அவர்கள் சிங்கா நல்லூரில் நந்தா நகர் என்ற  இடத்தில்  இருந்தனர். முதல் முறை அவர்கள் வீட்டை தேடிக் கண்டுபிடித்துச் சென்றேன். அது நேற்று நடந்தது போலத்தான் இருக்கிறது. அதன் பின் பல முறை சென்றேன். எப்போதுமே அவர் அன்பு அப்படியே இருந்தது
Image result for good friend
அவரும் எங்கள் வீட்டுக்கு வந்து தங்கி இருக்கிறார். அவருக்கு என எங்கள் வீட்டில் சிறப்பு கவனம் எடுத்துக் கொண்டு (பிரத்யோகமாக என்ற வார்த்தையை தவிர்க்க முனைந்திருக்கிறேன்) எங்கள் இருவரையும் மீன் வளத்துறைக்கு அனுப்பி  புதிதாக மீன்கள் வாங்கி வந்து அவருக்கு உண்ண செய்த நிகழ்வு இன்றும் இரசிக்கத் தக்கதாகவே இருக்கிறது.

அவர் ஈரோட்டில் பணியமர்ந்த போது ஒரு உறவினர் வீட்டில் தங்கி இருந்தார். அங்கும் அவர் அழைக்க நான் சென்றிருந்தேன். சில பெண்கள் ....எங்களுக்கு தனிச் சிறப்புடன் பஜ்ஜி இதற்கு சரியான தமிழ் வார்த்தை வாழைக்காய்  பலகாரம் என்பது கூட சரியாக இல்லையே சரி ....வாழைக்காய் சீவலுக்குப் பதிலாக  அதில் ஒரு தேங்காய் ஓட்டை வைத்தும் விளையாடியது நினைவிருக்கிறது இப்படி சாப்பிடும் பொருள்களில் கூட விளையாட முடியும் என்பதை நான் அங்கு தெரிந்து கொண்டேன்.

எதிர்பாராது அந்தப் பலகாரத்தில் இருந்த தேங்காய் ஓட்டை நாங்கள் கடிக்க அதைப்பார்த்த அந்தப் பெண்கள் சிரி சிரி என சிரிக்க மணிமாறனுக்கு வந்ததே கோபம் அதை அவரிடம் அந்தக் கோபத்தை அன்று மட்டுமே பார்த்தேன். மற்றபடி மணிமாறனுக்கு  எப்போதும் சிரித்த முகமே எனக்கு  பரிச்சயம். அவர் கோபப்பட்டு நான் பார்த்ததே இல்லை.

நான் விளையாட்டு அறையில் உதவியாளனாக இருந்து பகுதி நேர வேலை கல்லூரி நிர்வாகத்தில் பார்த்த போது அவர் நூலகத்திற்கு உதவியாளராக இருந்தார். அப்போது அவர்  மூன்றாம் ஆண்டு. நான் இரண்டாம் ஆண்டு.

 நாங்கள் எப்படி அறிமுகம் ஆனோம் என்பது கூட சரியாக நினைவில் இல்லை. சரியான  சீனியராக அவர் இருந்தார். என்னை தவறான வழியில் மூன்றாம் ஆண்டு சீனியர்கள் தங்கள் சுயநலத்துடன் வழிகாட்டி சுருக்கெழுத்தை short hand course along with all theory subjects and not selecting banking subject with a wrong selection..தேர்ந்தெடு என ஆசிரியர்களும் வழிகாட்டி திருப்பு முனையை ஏற்படுத்தி அதனால் விளைந்த மோசமான விளைவுகள் எல்லாம் வாழ்வெலாம் பேசப்பட வேண்டியது தொடர்ந்து வருவது. ஆனால் இவருக்கும் அதற்கும் எந்த பழியும் இல்லை.Image result for good friend

முதலாண்டில் ஒரு மனப்போராட்டத்தின் போதுகல்லூரியில் நடந்த ஒரு சச்சரவில்   எனக்கு ஆறுதலாக இருந்து கிணத்துக் கடவில் உள்ள அவர்களது தாத்தா பாட்டி அவர்கள் மொழியில் அப்பத்தா அம்மாச்சி வீட்டில் கூட தங்கி அதன் பின் சொந்த ஊருக்கு திரும்பி வர உதவிகள் செய்தார். அவருடைய நண்பர் ஜோசப் கிணத்துக் கடவில் ஒரு கிறித்தவ அனாதை ஆசிரமத்தில் செல்வாக்குடன் வளர்ந்த இளவரசன் என்பதும் அவரும் அப்போதே கல்லூரிக்கும் கூட தனது சட்டையில் ரோஜா வைத்துக் கொண்டு வருவதும் இன்றும் நினைவில். மேலும் அவர் மின்னியல் படிப்பில் இருந்தார் என்பது நினைவிலிருக்கிறது.

அவர் அப்போதே இருந்தால் 18 அல்லது 19 வயது கூட இல்லாதபோதே தலையெங்கும் முடியின்றி சொட்டைத்தலையுடன் தான் இருப்பார். ஆனால் அது பற்றி எல்லாம் அவர் அலட்டிக் கொண்டதே இல்லை. ஏன் எனில் அவர் ஒரு ஜென்டில் மேன் எனச் சொல்லப்பட வேண்டிய அரிய கனவான். நீட்டாக ட்ரஸ் செய்து கொள்வார். அவர் பேச்சில் என்றுமே ஒரு முதிர்ச்சி இருக்கும். என்னிடம் எதனால் அப்படி பிரியமாக இருந்தார் என்றே எனக்கும் தெரியவில்லை.
Image result for good friend
எனது சகோதரி ஒருவரின் திருமணம் தாரமங்களத்தில் நடந்தபோது ஒரு நண்பர்கள் பட்டாளமே வந்து அதில் கலந்து கொண்டது. அதில் இவரும் வந்திருந்தார் நாம் முன்பு சொன்ன குகனும்  , செம்பண்ணனும், இன்னும் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அன்று மணத்துக்கு முன் இரவு இரண்டாம் ஆட்டம் சினிமாவுக்கும் கூட சென்றிருந்தோம் தாரமங்களத்தில் அப்போதிருந்த கார்த்திகேயன் தியேட்டரில்.

அதன் பின் குழந்தைகள் எல்லாம் வந்த பின்னே அவர் கோவையில் உள்ள வேறொரு ஊருக்கு தனிக்குடித்தனம் சென்றுவிட்டார் என்பதை அவர்கள் வீட்டுக்கு வழக்கம்போல எனக்குத் திருமணமான பின்னே ஜி.டி. தாமோதரன் இன்ஸ்டியூட்டுக்கு ஒரு பயிற்சிப் பட்டறைக்கு பல்கலைக் கழக மானியக்குழுவின் நிகழ்ச்சிக்கு  சென்றிருந்தபோது அவரை வழக்கம்போல் அவரது வீட்டுக்கு சென்றபோது அறிந்தேன். மிகவும் சோர்வடைந்ததாலும் அது மிக இரவு நேரமாகிவிட்டதாலும் அவரைப்பார்க்க அவரது இருப்பிடம் செல்லாமலே வந்து விட்டேன்
Related image
ஏற்கெனவே 1997 என நினைக்கிறேன் கோவையில் உள்ள திவான் பகதூர் சாலையில் உள்ள தனிஷ்க் கடைக்கு அப்போது சேலத்தில் அது திறக்கப்படவில்லை. கோவையில் தான் இருந்தது. அங்கு சென்ற நான் அவரது சந்திப்பிற்கான நேரமின்றி திரும்பி வந்துவிட்டேன் அது முதல் அவரது வாழ்வும் எனது வாழ்வும் தனியாகிப் போனது.

என்றென்றும் அந்த அன்புக்கு நன்றியறிதலுடனே நான் வாழ்ந்து வருகிறேன் ஆனால் அவை பற்றி அவர் அறியாதிருக்கவும் கூடும்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Sunday, September 8, 2019

மறுபடியும் அணை நிரம்பிவிட்டது: மேட்டூரிலிருந்து கவிஞர் தணிகை

மறுபடியும் அணை நிரம்பிவிட்டது: மேட்டூரிலிருந்து கவிஞர் தணிகை

நேற்று மறுபடியும் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை கடந்துவிட்டது. பதினாறு கண்மாய் பாலத்தின் வழியே சுமார் அரை அடி கதவு திறக்கப்பட்டு 30ஆயிரம் கன அடிக்கு மேல் நொடிக்கு நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. இன்று நீர் வரத்து 73 ஆயிரம் கன அடிக்கும் மேல் இருக்குமென ஹொகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைச் செய்திகள் தெரிவிக்கின்றன. Total Height of the dam is :128 feet.





120க்கும் மேல் நீர் வந்தால் அந்த நீர் தானாகவே வெளியேறுமாறு கட்டமைவு. வெளியேற்ற வேண்டிய நிலை எல்லாம் அவசியமில்லை. கொள்ளளவு: சுமார். 95 டி.எம்.சி

நேற்றே அணையும் மேட்டூருக்கு செல்லும் பாலங்களும் வியாபார வேடிக்கை நிமித்தங்களால் களை கட்ட ஆரம்பித்து விட்டன.
இன்று ஞாயிற்றுகிழமை வார விடுமுறை எனவே சொல்லவே வேண்டாம். வெளியூர் பயணிகளின் வருகை மறுபடியும் மேட்டூருக்கு ஒரு உற்சவத் திருவிழாதான்.

இப்போதாவது வெளியேறி வரும் உபரி நீரை சேமித்து வைத்து அதன் பிறகாவது கர்நாடகா அரசை மற்றும் நடுவண் அரசை தமிழக அரசும் மக்களும் கெஞ்சாத நிலையை தராமல் இருக்க வேண்டும் . இதை மனிதர்கள் செய்ய வேண்டும்.

இயற்கை அளிக்கும் கொடை உயிர்களுக்கு இருந்து கொண்டேதான் இருக்கிறது. மனிதம் யாவற்றையும் கெடுத்துக் கொண்டே இருக்கிறது.

2  தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செந்தில்குமார் வருகை:
Image result for dharmapuri mp present present senthilkumar
நேற்று தர்மபுரி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் செந்தில்குமார் எம்.டி.ஆர்/டி. எம்.பி எங்கள் தொகுதியில் ஊர்களில் நன்றி அறிவிப்பு செய்து மக்கள் மனுக்களைப் பெற்றார் நானும் அணை இவ்வளவு அருகிருந்தும் நீர் இவ்வளவு வந்திருந்தும் மக்களுக்கு 1/போதிய குடி நீர் விநியோகம் இல்லாமையை   2.பயணிகள் போக்குவர்த்து ரயில் மாலை 5 மணிக்கு வராமல் நிறுத்தப்பட்டிருப்பதை  3. குடிநீர்க் கட்ட்ணத்தை மீட்டர் ரீடிங் இல்லாமல் 50 ரூ என்றிருந்ததை 220க்கு உயர்த்தியதை, 4. தெருவிளக்குகள் ஆண்டுக்கணக்காய் எரியாமல் இருப்பதை, புகை, மது, ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் இல்லாத தொகுதியாய் மாற்றவும் என்றெல்லாம் எனது மனக்குறையை வெளிப்படுத்தினேன்

முதலில் கை குலுக்கி வாழ்த்து சொல்லிவிட்டு வாய் வார்த்தை மொழி மூலம் இவைற்றை எல்லாம் சொன்னேன் மனுவையும் கொடுத்தேன், எல்லாம் எழுதி இருக்கிறீர் அல்லவா எனக் கேட்டு மனுவைப் பெற்றுக் கொண்டுள்ளா. பார்ப்போம் என்ன விளைவு இருக்கிறது என...ஏன் எனில் இது குறித்தெல்லாம் ஏற்கெனவே உரிய துறைகளுக்கும் மாவட்ட ஆட்சியருக்கும் முதல்வருக்கும் பிரதமருக்கும்  கூட எழுதி இருந்தேன் பயனில்லை

வேறு ஒருவராக இருந்தால் இதை புகைப்படம் எடுத்து, வீடியோ எடுத்து முக நூலில் போட்டுக் கொள்வார்கள் போட்டு இருப்பார்கள் என்றேன்....மகன் இதெல்லாம் என்னாப்பா .... என்ற மறு மொழி கொடுத்துவிட்டான்...

ஆக அவரும் மிக எளிமையாகவே இருந்ததைக் கண்டேன். நானும் மிக எளிமையாகவே சென்று எனைப்பற்றி அறிமுகமெல்லாம் இல்லாமல் ஒரு சாதாரணக் குடிமகனாகவே இந்தக் கோரிக்கையை வைத்துள்ளேன் அவர் முன்.

Saturday, September 7, 2019

72 ஆயிரம் கோடி ரஷியாவுக்கு கடன் இந்தியா தந்தது சரியா: கவிஞர் தணிகை

72 ஆயிரம் கோடி ரஷியாவுக்கு கடன் இந்தியா தந்தது சரியா: கவிஞர் தணிகை

Image result for loan to russia from india

பிரதமர் நரேந்திர மோடியின்  அண்மைக் கால ரஷிய பயணத்தின் போது ஒரு பில்லியன் டாலர் அதாவது 72 ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை ரஷியாவுக்கு கடன் அளிப்பதாக மோடி அறிவித்துள்ளது பற்றி ஒரு தொழில் நலிந்து வரும் இந்தியாவின் கடைக்கோடி குடிமகன் என்ற நிலையில் எனது ஆட்சேபணையைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ரஷியா ஒரு வல்லரசு. அமெரிக்காவுக்கு இணையான பேரரசு. உலகின் இரண்டாம் நிலையிலுள்ள நாடு. அதற்கு ஈடு இணையாக இல்லாத ஒரு நாடாக உள்ள இந்தியாவின் தலைவர் அவர் இஷ்டம்போல மக்களது பணத்தை வாரிக் கொடுத்து வருவது எந்த வகையில் நியாயம் என்றே தோன்றவும் இல்லை தெரியவும் இல்லை.
Related image
ஆய்தம் வாங்கினோம், விமானம் வாங்குகிறோம், ஏவுகணை வாங்குகிறோம்  என அமெரிக்காவுக்கும், ரசியாவுக்கும், இஸ்ரேலுக்கும், பிரான்சுக்கும் கொட்டிக் கொடுப்பது ஒரு ரகம். அது கூட வியாபாரம். சரி விட்டு விடலாம்.

ஆனால் இந்தியாவில்  மொத்த உள் நாட்டு உற்பத்தி என்பது 5 சதத்துக்கும் குறைவாகப் போய்க்கொண்டிருப்பதாக பொருளாதார வல்லுனர்கள் கவலை தெரிவிக்கும் நிலையில் நமது படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பே இல்லாமல் தொழில்கள் முடங்கி வேலையை விட்டு இலட்சக்கணக்கான குடும்பங்கள் உணவுக்கே அல்லாடி வரும் நிலையில்
Image result for loan to russia from india
இப்படி அவரவர் இஷ்டம்போல இயங்குவது தேவையா அவசியமா...லால்பகதூர் பாகிஸ்தான் யுத்தத்தின் போது இந்தியா வறுமையில் இருந்தபோது வீட்டில் சமைக்கும்போதெல்லாம் ஒரு கைப்பிடி அரிசியை மட்டும் எடுத்து நாட்டு சேமிப்புக்காக வைத்துக் கொடுங்கள் என்று கேட்டது எல்லாம் இந்த நாடு மறந்து விட்டது.
poverty in india
ஜி.எஸ்.டி, டி மானிட்டிஷேசன்  என ஏழைகளின் பணத்தை எல்லாம் கொணர்ந்து வங்கியில் போடவைத்து அவர்களை வேண்டும்போது அவர்கள் பனத்தையே எடுக்க விடாமல் செய்து வங்கிகளை இணைக்கிறோம் வளைக்கிறோம் என்று தகிடு தத்தம் செய்து அம்பானிமார்களை வாழவைத்து தனியார் முதலாளிகளிடம் தேர்தல்நிதி பெற்றி வெற்றி இலக்கை அடைந்து விட்டு மக்கள் நலத்தை எல்லாம் மறந்து விட்டு என்ன நினைத்துக் கொண்டு இப்படி பணத்தை வெளி நாட்டுக்கு அள்ளிக் கொடுத்து வருகிறார்கள் என்றுதான் தெரியவில்லை...புட்டின் புத்திசாலியா மோடியா...

 விவசாயம் நலிந்து விட்டது, தொழில்கள் நசிந்து வருகின்றன, வேலையில்லாத் திண்டாட்டத்தில் நாடே அல்லோகலப்பட்டுக் கொண்டிருக்கின்றன மக்களுக்கு ஒன்றும் செய்யத் துணியாத அரசு இது வரை குடி நீருக்கும் மருத்துவத்துக்கும், கல்விக்கும், உணவுக்கும் இருப்பிட்த்துக்கும் எதையும் செய்யா அரசு, அதாவது உத்தரவாதம் செய்யா அரசு  வெளி உலக நாடுகளின் மத்தியில் எங்கள் நாடு பெரிய நாடு என சீனா போல வளர்ந்து விட்டோம் என வெளிவேஷம் போடவா இப்படி கொடுத்து இருக்கிறது...
Image result for loan to russia from india
முன்னால் பிரதமர் மன்மோகன் சிங்க் கூட தான் பிரதமராக இருக்கும்போது ஏதோ ஒரு நாட்டுக்கு இப்படிப் படி அளந்து வந்ததாக படித்த நினைவும் இருக்கிறது ஆனால் அமெரிக்காவுக்கும், ரஷியாவுக்கும், பிரான்சுக்கும் இங்கிலந்துக்கும் படியளக்குமளவு இந்தியாவில் என்ன கிழிக்கிறது என்று எனக்கும் கேட்க உரிமை இருக்கிறது ஒவ்வொரு நாளிலும்  எனது உழைப்பிலும் நாட்டுக்கு வரி என்று போய்க் கொண்டிருக்கிறது என்பதால்...

ஒரு அநியாயம் இணையத்துக்கு கட்டணம் என்று பி.எஸ்.என்.எல்லில் 690 என வசூலிக்கும் பணத்துக்கு. 135 ரூ ஜி.எஸ்.டி என மாதம் ஒன்றுக்கு கட்டுகிறேன்

900 கோடியில் சந்திராயன் தயாரிப்பை இஸ்ரோ செய்வதும் எத்தனை சிக்கனமான முயற்சி டைடானிக், அவ்தார் போன்ற சினிமா எடுக்கும் பணத்தில் அரைப் பாதி அளவுதான் இதற்கு ஆனதாம் சுமார் 16,500 அறிவியல் விஞ்ஞானிகள் இதில் ஈடுபட்டதாக ஒரு செய்தி.., கார்ப்ரேட், தனியாருக்கு கொடுத்த பணக் கடன்களை வாங்காமலே இப்படி நாடு பொருளாதாரத்தில் மொத்த உற்பத்தியில் 5 சதத்துக்கும் கீழ் இறங்கி வரும் நிலையில் இந்த கடன் விவகாரம் தேவைதானா தலைவரே..
Image result for loan to russia from india
குடிப்பதற்கு குடிநீர் தர முதலில் உத்தரவாதமில்லை, கழிவறைகள் இல்லா சுத்தம் சுகாதாரம் இல்லா நாட்டின் தலைமை உலகின் வல்லரசிற்கு கடன் அதுவும் 72 ஆயிரம் கோடி தந்துள்ளதை வரலாறு மன்னிக்காது.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Thursday, September 5, 2019

தரமில்லா ஆசிரியர்களால் நேர்ந்த கதி: கவிஞர் தணிகை.

தரமில்லா ஆசிரியர்களால் நேர்ந்த கதி: கவிஞர் தணிகை.
Image result for teachers day voc birthday teresa memory day
ஆசிரியர் தினம்,வ உ சி ,டாக்டர் ராதாகிருஷ்ணன் ,பிறந்த நாள் மற்றும் அன்னை தெரஸா நினைவு நாள்: கவிஞர் தணிகை.

இந்த நாளில் ஒவ்வொரு ஆண்டும் நிறைய எழுதியாகிவிட்டது. அனைவரும் பிரபலமான வார்த்தைகளையே அள்ளி வீசிக் கொண்டிருப்பார்கள். அதற்கு நிறைய ஆசிரியர்களையும் சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.அவரவர் ஆசிரியர் அவரவர்களுக்கு அதிசயம்தான்.

ஒரு நல்ல முதல் ஆசிரியர்: இயற்கை
இரண்டாம் ஆசிரியை: தாய்
மூன்றாம் ஆசிரியர்: தந்தை
நான்காம் ஆசிரியர்கள்: சகோதர சகோதரிகள் மற்றும் குடும்பம்/
ஐந்தாம் ஆசிரியர் என்றால் அது உறவுகள்
ஆறாம் ஆசிரியர் என்றால் அது நட்பு
எழாம் ஆசிரியர் என்றால் புற உலகு

ஏராளமான ஆசிரியர்களை சந்தித்து அஞ்சலி செலுத்தவே நானும் கூட ஒரு ஆசிரியர் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை பெறுகிறேன். அதுவும் எந்தவித ஊதியமும் பெறாத ஆசிரியர்.

எமது குடும்பத்தில்  ஆசிரியர் எண்ணிக்கையில் நிறைய‌ உள்ளனர்.

அவர்களுக்கு அடிப்படையாய் ஒரு சிறு துரும்பாய் உதவி இருக்கிறேன்.

சரி சொல்ல வேண்டியதை சொல்லில் விடுவோமா:
கலாமின் ஆசிரியர் சுப்ரமணியர் என்பார் சொல்வாராம்: ஒரு நல்ல மாணவர் ஒரு கெட்ட ஆசிரியரிடமிருந்தும் கூட கற்றுக் கொள்ளலாம், ஒரு கெட்ட மாணவர் ஒரு நல்ல ஆசிரியரிடமிருந்தும் கூட எதையும் கற்றுக் கொள்ள முடியாது என்றாராம்.

கெட்ட ஆசிரியர் அப்போதும் இப்போதும் எப்போதும் இருந்தே வருகிறார்கள்.அவர்களால் நேர்ந்த கதிதான் யாவற்றுக்கும் அடிப்படை.அதாவது இன்று இருக்கும் நிலை மோசமான சொல்லத் தரமில்லாது போய்க் கொண்டிருக்கும் உலகின் நிலைக்குக் காரணம்.

குடித்துவிட்டு பள்ளிக்கு செல்லும் ஆசிரியர்
தன்னை விட வயது குறைவான மாணவரை மணந்து கொண்ட ஆசிரியை
தன்னிடம் படிக்க வரும் பெண்ணையே மணம் செய்து கொள்ளும் ஆசிரியர்
புகைக்கும், போதைக்கு அடிமையான ஆசிரிய குலம்
 குடித்துவிட்டு மதுபானக் கடையில் விழுந்து கிடந்த ஆசிரியர்க்கு நல்லாசிரியர் விருது என்று கொடுத்த அரசின் நிலைமை
பணத்தைப் பெருக்குவது மட்டுமே குறிக்கோள் எனக் கொண்டு எல்லா வகையான உத்திகளையும் கையாண்டு எல்லா தொழில்களையும் நேர்முகமாகவும் மறைமுகமாகவும் செய்யும் நிலை...
அக்காவையும் தங்கையையும் சேர்ந்து மணந்து கொண்ட நிலை
தனது பிள்ளைகளை சரிவர வளர்க்காத ஆசிரியர்கள்...

இவர்களை எல்லாம் நேராக நேர் கொண்ட பார்வையுடன் நேர்மையுடன் செயல்பட வைக்காத அரசு....

இப்படி நான் சொல்லிக் கொண்டே போகலாம்...அதெல்லாம் உங்களது கோணத்திற்கு பிடிக்காமல் போகலாம் இவர்களால் கெட்டழிந்து போன சமுதாயமும் மாணவர்களும் என்ன பெரிதாக சாதித்துவிடப் போகிறார்கள்...அறிவியலை காமக் களியாட்டத்துக்கு எரிய விடும் விட்டில்கள் அவர்கள் குறுகிய கால அளவிலேயே அழிந்து போகிறார்கள். இந்தியாவில் தான் இன்றைய உலகில் அதிகம் இளைஞர்கள் இருக்கிறார்கள் என்ற செய்தியும் நம் கவனத்தில் கொள்ள வேண்டியதாயிருக்கிறது.

இன்றைய காலக் கட்டத்தில் எனக்குத் தோன்றுவது என்னவெனில் : மாணவர்க்கு எது தேவையோ அந்தப் பாடத்தை சுருங்கச் சொல்லி விளங்கி வைப்பார் யாரோ அவரே நல்லாசிரியர் எனச் சொல்லத் தோன்றுகிறது. பாடமுறைகளை பாரமுறைகளாக அல்லாமல் எளிய முறையில் அதன் சூழலுக்கே சென்று இயற்கை உறவுகளுடன் கலந்து புரியும்படிச் செய்வாரே நல்லாசிரியர் எனத் தோன்றுகிறது. சிங்கம் என்பது பொம்மை அல்ல வார்த்தை அல்ல அது நமது மொழியில் ஒரு விலங்கின் பேர் அது இதுதான் என நேரிடையாக விளக்கவும் யானையைக் காட்டவும் காட்டை நோக்கி சென்று அதைக் காட்டவும் இப்படி எது விளக்கமோ அதை வார்த்தையில் சொல்லாமல் அவர்களுக்கு அதன் அருகாமையை கொண்டுவரச் செய்வதையே நல்லாசிரியரின் கடமையாகக் கொள்ள வேண்டும் அப்படிப்பட்ட ஆசிரியரிடம் கற்றுக் கொள்ளும் மாணவரே ஒரு நல்லாசிரியராக முடியும்

நமது உலகில் ஒவ்வொரு மனிதருமே ஒரு நல்ல மாணவராக இருந்ததை ஒரு நல்ல ஆசிரியராகவும் இருந்து காட்ட வேண்டும். அதன் மூலம் நிரூபிக்க வேண்டும்

நல்லாசிரியர் விருதை பெறுவார்தான் நல்லாசிரியர் என்றால் மற்ற ஆசிரியர் எல்லாம் நல்லாசிரியர் இல்லையா...இந்த போட்டி பொறாமைகளை முதலில் ஒழிக்க வேண்டும்

ஒரு நல்ல ஆசிரியர் என்பார் ஒரு தனிப்பட்ட பாட நூலில் மட்டுமல்லாது மாணவர்களுக்கு தங்கள் அனுபவத்தை பகிர முடியுமளவு நல்ல  வாழ்வு முறையையும் கொண்டிருப்பது அவசியம்/

மொழி என்ற கல்வி அறிவு அறிவை அளக்க கருவி அல்ல என்பதை  யாவருக்கும் உணரும் அளவு நல்ல கல்வி முறையை இந்தியாவில் கொண்டு வரவேண்டும். ஆங்கில, அமெரிக்க இங்கிலாந்து முறைகள் எல்லாம் தேவையுமல்ல அப்படி இருப்பாரை அந்த நாட்டினரே கூட ஊக்குவிப்பதில்லை என்பதை உணரவேண்டும்.

இந்தப் பதிவை எனது தமிழாசிரியர் மறைந்த இராசசேகரன் என்பார்க்கு காணிக்கையாக்குகிறேன்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.




Wednesday, September 4, 2019

என் நட்பின் நனி சிறந்தவர்கள்: 2. கோவிந்தன் செம்பண்ணன் டி.எம்.இ; பி.ஈ.மெக்கானிகல்: கவிஞர் தணிகை

என் நட்பின் நனி சிறந்தவர்கள்: 2. கோவிந்தன் செம்பண்ணன் டி.எம்.இ; பி.ஈ.மெக்கானிகல்: கவிஞர் தணிகை

Image result for tharamangalam

அந்த நாளை என்னால் மறக்கவே முடியாது ஏன் எனில் அவனை பிலாய் இரும்பாலையில் இள நிலை மேலாளர் பதவியின் பயிற்சியில் சேர்ந்த புதிய நாட்களின் கடைசியாக அவனுடன் பிலாய் சென்று அவனை விட்டு விட்டு நான் வீடு திரும்பிய அன்று எனது தந்தை மறைந்தார். 1986. எனைப் பார்க்கவே அந்த உயிர் இருந்திருக்கும் போலும். அப்போதெல்லாம் இவ்வளவு சுலபமான தொடர்பு சாதனங்களே இல்லை. போனால் போனதுதான் வந்தால் வந்ததுதான் என்ற எனது போக்கும்

இந்தப் பதிவின் பின்னல் இழையே தொடர்பு இடைவெளியால் எப்படி ஒரு நட்பின் பாலம் உடைந்து போனது என்பதற்காகத்தான்.

அவன் பள்ளியில் படிக்கும்போதே தொழில் முறைக் கல்வியில் வொக்கோசனல் க்ரூப் படித்து முடித்து விட்டு மெக்கானிக்கல் பிரிவில் சேர்ந்தவன் 1978ல் ஆண்டுகளில் அறிமுகமான உறவு அவனது திருமணம் வரை நீடித்தது. திருமணத்திற்கும் பின்னும் சில ஆண்டுகள் பட்டும் படாமல் நீடித்தது.

அதுபோன்ற ஒரு உறவை நட்பை வார்த்தை மூலம் விளக்குவது இயலாதுதான். கட்டையன் எனச் சொல்லப்பட்ட இப்போது சேலம் பால்பண்ணையில் பணி செய்து ஓய்வு பெற்ற அல்லது ஓய்வு பெற இருக்கிற செல்வன் மூலம் தான் இந்த செம்பண்ணனும் எனக்கு அறிமுகமாகி இருக்கக் கூடும் என இப்போது நினைத்துப் பார்த்தால் தோன்றுகிறது...இதே செல்வனால்தான் எனக்கு நான் ஒரு கதாநாயகன் என்ற அங்கீகாரம் பெற்றது தெரியவந்ததும் எனது வாழ்வின் பாதையே மாறியதும் கூட அது வேறு கதை.
Image result for tharamangalam
இப்போது இது செம்பண்ணன் காதை. காசு பணம், ஆடை எதுவுமே எங்களைப் பிரிக்கவே இல்லை. சொல்லப் போனால் சேர்த்தே வைத்தது. எப்படி ஒன்றிணைந்தோம் என்றும் சொல்ல பெரிதாக ஒரு காரணமும் இல்லை. அவன் என்னைப் புரிந்து கொண்டதும் என்னை ஒரு பெரிய நபராய் அவன் கணக்கில் எடுத்துக் கொண்டதும் அவனுடைய அன்பின்  முன் நான் கரைந்து போனதும் அந்த இளமையில் நடந்தது.

மிக மெதுவாகவே படிப்படியாக வளர ஆரம்பித்த நட்பு அது ஒரு கட்டத்தில் உச்சியில் ஏறி நின்று கொண்டிருந்தது. எனது சகோதரிகளின் குடும்பங்களும், எனது பெற்றோரின் மூதாதையரின் குடும்பங்களும் தாரமங்கலம் என்ற சரித்திரப் புகழ் பெற்ற ஊராக இருந்ததால் அந்த ஊரின் இடுகாடு மற்றும் சுடுகாடு அருகே அல்ல சுடுகாட்டை ஒட்டியே அவன் வீடு இருந்தது மிக வித்தியாசமாக இருந்ததாலும் எனக்கு அவனது வீட்டுக்கு அடிக்கடி போக வழி வகுத்தது.

அவனும் எங்களது வீட்டிலும் வந்து தங்கி இருந்ததும் என் நினைவில் இருந்து விலகவே இல்லை. அவன் கருப்பூர் பொறியியல் கல்லூரியில் பொறியியல் பட்டப்படிப்பு படித்தபோதும் நான் காடு மலை வனங்களில் அலைந்து திரிந்தபோதும் நடுவண் அரசின் நேரு இளையோர் மையத்தில் தேசியத் தொண்டராக பணி புரிந்து குறிக்கோள் இல்லாமல் வாழ்ந்து வந்த போதும் அவன் ஒரு இளைப்பாற ஒரு புகலிடமாய் இருந்தான்.
Image result for tharamangalam
அவனுக்கு ஒரு முறை குடல் வால் அறுவை சிகிச்சை செய்தபோது கிருஷ்ணன் செட்டி சேலம் மருத்துவ மனையில் அவர்களது வீட்டாரையோ பெற்றோரையோ கூட அருகு வைத்துக் கொள்ளாமல் என்னை மட்டுமே தன்னுடன் கவனித்துக் கொள்ள இருக்க வைத்துக் கொண்டான். அப்போது அவன் கருப்பூர் பொறியியல் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான்.

அவனது நண்பரகளும் அறை நண்பர்களும் கூட எனக்கு மிகவும் பரிச்சயமாகிப் போனார்கள் விவேகானந்தன், செங்கோட்டுவேலு, ஜெய்சங்கர் இப்படி பல பேர்கள் இன்னும் என் நினைவில் இருக்க அவனுடைய சுந்தரம், உறவான மதியழகன் போன்றோரும் என் தொடர்பில் இருந்தார்கள் அவன் தூரம் தொலைவில் இருந்தபோதும்.

நாச்சிமுத்து தொழில் நுட்பக் கல்லூரியில் இருவரும் வேறு வேறு படிப்பில் இருந்தோம் என்றாலும் ஒரு நட்பின் குடையின் கீழ் மிகவும் நெருக்கமாக இருந்தோம் அந்தப் பட்டியலில் அவனுடைய பேர்தான் எனக்கு முதலாவதாக வரும் வண்ணம்.
Image result for tharamangalam
அவனது ஊரைச் சேர்ந்த செல்வனோ, இளங்கோவனோ கூட அவனை அடுத்துதான் எனக்கு நட்பாக இல்லாதபோதும் உறவாக இருந்தார்கள். அவன் வழி இராசேந்திரன் வனவாசி, ராமலிங்கம் போஸ்டல், குப்பண்ணன், நாச்சிமுத்து திருமூர்த்தி, நாராயண மூர்த்தி காளியப்பன் இப்படி பலருமே அவன் மூலம் எனக்கு பிரியமாக அவன் ஒரு நட்புப் பாலம் போட்டு என்னை அரிய நபராக ஆக்கி இருந்தான்.

அவனது சட்டையை நான் போட எனது சட்டையை அவன் விரும்பி நன்றாக அது இல்லாதிருந்த போதும் வாங்கி அவன் அணிய , நிறைய நிறைய வாய்ப்புகள், சந்தர்ப்பங்கள் சினிமா, ஊர் பயணம், இப்படியாக...

ஒரு முறை ஹைத்ராபாத்திலிருந்து பெங்களூரு அவன் இருந்ததால் வந்தேன் மடிவாலா என நினைக்கிறேன் வழி தெரியாது அவனிருப்பிடம் செல்கிறேன் ஒரு ஆட்டோ பிடித்து அந்த ஆட்டோவோ சென்று கொண்டிருக்கிறது. சென்று கொண்டே இருக்கிறது அவ்வளவு தூரம் கடைசியில் 1985ல்  ஆட்டோ வாடைகை 100 ரூபாய்க்கும் மேல் ...அவன் எனக்காக  மனங்கோணாமல் கொடுத்தான் சொல்லப்போனால் அப்போது அவனுக்கு அந்தத் தொகையை இழக்க நான் காரணமாகிவிட்டேனே சொன்ன வழியில் சரியாக வந்து சேராமல் என்ற குற்ற உணர்வுடன் இருந்தேன்....

எனது நிறுவனத்தின் தலைவர் கூட ஒரு முறை நீங்கள் ஏன் ஹைத்ராபாத்திலிருந்து வீட்டுக்கு செல்லும்போது பெங்களூர் செல்கிறீர் எனக் கேட்டார் அதை ஒரு அன்பின் நிமித்தம் என்று சொல்லாமல் அங்கும் ஒரு திட்டப்பணி ஆரம்பிக்கலாமா எனத் திட்டமிடுகிறேன் கல்லுடைக்கும் தொழிலில் உள்ளார்க்கு என்றதும், அப்படித்தான் வருவது சேலம், மேட்டூர் போன்ற ஊர்களுக்கு குறுக்கு வழி என்றும் சொல்லியதெல்லாம் நினைவில் உள்ளது.
Image result for tharamangalam
மேலும் அவனது தந்தை வலது கையில் கல்லுடைக்கும் வேட்டுப் பணியில் சிக்கி சில விரல்களை ஏன்  உள்ளங்கைய்ல் பாதியே கூட போயிருக்கும். கல் காண்ட்ராக்ட் என்பார்களே அப்படி ஒரு தொழிலை செய்து வந்தார்.

இவன் ஒரே மகன் இவனுக்கு ஒரு தங்கையும் உண்டு. தங்கைக்கு இவனுக்கு முன்னதாகவே மணம் செய்வித்து குழந்தையும் குடித்தனமாக இருந்ததைப் பார்த்திருக்கிறேன்.

அவன், செல்வன், இளங்கோ, சுந்தரம், மதி இப்படி ஒரு செட் சேர்ந்து தாரமங்கலத்து கார்த்திகேயன், வெங்கடேசா தியேட்டர்களில் படத்துக்காக இல்லாமல் சேர்ந்து கலந்து மகிழ்வதற்காக நட்புக்காக நாங்கள் இணைந்து இரண்டாவது ஆட்டம் சினிமாவுக்கு பல முறை சென்றிருக்கிறோம். அமர்க்களமான நாட்கள் அந்த வட்டத்தில் மிக முக்கியமான நாயகம் என்னுடையதாகவே இருந்தது.

 அவன் என்னுடைய எழுத்தின் வாசகன், கவிதையின் இரசிகன், அனேகமாக கணையாழியில் வந்த கவிதைக்காக அந்தப் புத்தகத்தை அவனே வைத்துக் கொண்டிருந்தான் என நினைக்கிறேன்.  நிழல் வீறிடல் என்ற ஒரு கணையாழியில் அரைப் பக்க அளவில் அந்த கவிதை சுஜாதா , கா.நா.சு போன்றவர் , திருப்பூர் கிருஷ்ணன் போன்றோர் எழுதும்போது என்னையும் எழுத வைத்து வெளியிட்டது.
Image result for pollachi npt college
அனேகமாக சுமார் 10 ஆண்டுகள் அல்லது அதற்கும் மேலும் நீண்டு கொண்டிருந்த நட்பை  முதலில் ஒரு முடிச்சிட்டது அவனுடைய நிச்சயதார்த்தம். அதில் அவனது பெற்றோர்க்கும் பெண்ணின் வீட்டார்க்கும் ஏதோ கொஞ்சம் நெருடல்கள். அவன் என்னிடம் தெரிந்தே சொல்லிவிட்டான் நீ நிச்சயத்துக்கு எல்லாம் வராதே என....அது என்னடா இவன் இவ்வளவு இருந்தும் இப்படி சொல்லி விட்டானே என ஒரு உட்குழிவு என்னுள் விழுந்து விட்டது.

ஒரு  வேளை நான் சென்றிருந்தால் அவனது பெற்றோரை ஆதரித்து அந்தப் பெண் வீட்டை மணம் செய்யாமல் தடுத்துவிடுவேனோ என்ற பயம் கூட இருந்ததோ என்னவோ. யாமறியோம் பராபரமே.

சரி அடுத்து திருமணம் எல்லாம் மகிழ்வுடன் செய்தோம் வாழ்த்தினோம், பிலாயில் ஒரு முறை ஸ்கூட்டர் சாய்ந்து காலை எல்லாம் ஒடித்துக் கொண்டிருந்தான். மணமாகி ஒரு பெண் பிள்ளைக்கும் தந்தையானான். தன் பெண் பிள்ளையை ஒரு மாவட்ட ஆட்சியராக்குவேன் என்றெல்லாம் சொல்லியதாக கேள்விப்பட்டேன்.

இன்னும் என்ன வெல்லாம் எழுத....அவன் திருமணம் முடிந்து ஊட்டிக்கு தேனிலவு செல்கிறேன் என என்னிடமிருக்கும் தொழில் முறைக் காமிரா அது எனது திட்டப்பணிக்காக வாங்கி இருந்ததைக் கேட்டான். நான் சாதாரணமாக இருந்திருந்தால் தந்திருப்பேன் ஆனால் அவன் என்னை நிச்சயத்திற்கு கூப்பிடாது விட்டமைக்காக தண்டனையாக அதை தர மறுத்துவிட்டேன்.நட்பில் இங்கொரு முடிச்சு விழுந்தது.

அடுத்து மிகவும் பொருளாதார கடினச் சூழலில் எனக்கும் பயிற்சிக்காலம் அல்லது கடினமான காலம் தான் அவனுக்கு ஒரு இரண்டாயிரம் தேவைப்பட எனது சகோதரி வீட்டில் குடியிருந்த ஒரு குடும்ப நட்பு பாராட்டியவரிடம் இரண்டாயிரம் வாங்கிக் கொடுத்து இருந்தேன். அதற்கு சரியாக வட்டி கட்டி வந்தான்.
Image result for friendship broken
அதன் பின் எனக்கு சற்று சுதாரித்தபின் அந்த தொகையை நான் கட்டி விட்டேன் நீ இனி வட்டி கட்ட வேண்டாம் எனக்கு அந்த தொகையைத் திருப்பி அசல் மட்டும் கொடுத்தால் போதும் என்றேன். நான் ஒரு பிடிவாதக்காரன் மனதில் ஏதாவது விழுந்து விட்டால் அதை செய்யாமல் விட மாட்டேன். என்ன இருந்தாலும் கடன் கடன் தானே என அப்போது மட்டுமல்ல இப்போதும் பொருளாதாரத்தில் நான் பெரும் நிலையை எட்டி விட வில்லை என்பதால் அதைக் கேட்டேன் பாதி கொடுத்தான் பாதியக் கொடுக்கவில்லை. நானும் அதன் பின் விட்டுவிட்டேன். ஆனால் நாங்கள் கேவலம் காசு பணத்துக்காக பிரிந்து போய் விட்டோமே ...என்ற நிலையும், நான் அவன் எனக்கு எவ்வளவோ செய்திருக்க கொடுத்த காசைத் திருப்பிக் கொடுத்தே ஆக வேண்டும் என்ற நிர்பந்தத்தை அவனுக்கு அவனது நிலையை அறியாமலே அவனை துன்பபடுத்தி விட்டேனே என்றெல்லாம் தோன்றச் செய்வது பொருளாதாரப் பிணிகள்.

எப்படியும் ஒரு நட்பு தொடர்பு இடைவெளியால் பிரிந்து போனது அல்லது:
மயிர் ஊடாடா நட்பில் பொருள்
ஊடாடிக் கெடும் என்ற பொருளுக்கேற்ப  விட்டுப் போனதுதான்.

அவன் கொடுத்த ஒரு ஆங்கில அகராதி இன்னும் அவன் நினைவு சொல்கிறது
உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு என்பார்....

ஆனால் ஆரம்பம் முதல் இன்று வரை பொருளாதாரத்தில் சிக்கனம், தாராளமின்மை, போதிய வருவாய் இன்மை போன்றவற்றிலும், சரியான உணவு கூட அல்லது ருசியான உணவு கூட இல்லாதிருந்தே போதுமான அளவு  இல்லாதிருந்தே வளர்ந்த விதம் ஆகியவை பொருளாதாரத்திற்கு விட்டுக் கொடுத்து செல்லும் போக்கை என்னுள் வளரச் செய்யவில்லை. அந்த நட்பு குலைந்து போனதற்கு அவனை விட என்னையே நான் பெரிய காரணமாக வைப்பேன்.

அவன் என்னை வசந்தபவன் என்ற ஒரு சேலத்தில் அந்தக் காலத்தில் பிரபலமாக விளங்கிய உணவகத்துக்கு அழைத்துச் சென்று முந்திரி முறுகல் தோசை கேஷ்யூநட் ரோஸ்ட் வாங்கிக் கொடுத்தது கூட பல முறை உணவகங்களில் சேர்ந்து உண்ட நினைவுகளுடன் ....கடந்து போன நாட்களை முடிந்த வரை கரைக்க முயல்கிறன் ஆனால் அவை அவ்வளவு சாதாரணமாக கரைந்து போகக் கூடியதா என்ன...

இளையராஜாவும் பாலுவும் கட்டிப் பிடித்துக் கொண்டு இணைந்து போனார்களாம். அது போல செம்பண்ண்னை இணைத்துக் கொண்டு செல்ல ஆசைதான். ஆனால் அது முதல் அவனுக்கும் எனக்கும் எந்த தகவலுமே இல்லை. பரிமாற்றமே இல்லை. அவன் சொல்வான்: நீயெல்லாம் தணி காதலிக்கவே முடியாது என்பான். ஏன் எனில் உணர்ச்சி பூர்வமாக வெளிப்பாட்டுத் திறம் உள்ளார் காதலிக்க முடியாது என்பதைத்தான் அவன் அப்போதே உணர்ந்து சொல்லி இருக்கிறான். உண்மைதான் காதல் என்பது திருட்டு எண்ணமா அது வெளியே தெரிந்தால் அதன் புனிதம் கெட்டு விடுமா என்றெல்லாம் சிந்தித்த காலத்தில் தோன்றிய நட்பு உதிர்ந்த கதை இது.

அவனுங்களுக்கு எல்லாம் இறுதித்தேர்வு முடிந்து விட்டது. எங்களுக்கு மறு நாள் தேர்வு உண்டு எனத்தான் நினைக்கிறேன் என்னையும் அழைத்துக் கொண்டு பாலைவனச் சோலை என்ற படத்தைச் சென்று பார்த்ததாக நினைவு.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.