Thursday, December 1, 2016

என்னமோ நடக்குது மர்மமா இருக்குது ஒன்னுமே புரியலை மோடிஜி: கவிஞர் தணிகை

என்னமோ நடக்குது மர்மமா இருக்குது ஒன்னுமே புரியலை மோடிஜி: கவிஞர் தணிகை.

Image result for urjit patel wife name

ரிலையன்ஸ் அம்பானிகளின் ஆதரவுடன் அவர்களின் நிதி பெற்று அமெரிக்கன் ஸ்டைலில் தேர்தலில் பங்கு பெற்று வென்றதும், முகேஷ் அம்பானியின் மனைவியை ஏர் இந்தியா ராஜா வணங்குவது போல முதுகை வளைத்து விமான தளத்தில் வணங்கியதும், அவர்களின் ஒன்னேகால் இலட்சம் கோடியுடன் சேர்த்து அதானி, ஜிந்தால் போன்றார் கட்ட வேண்டிய 7 இலட்சம் கோடி பற்றி வாய் திறக்காமல் சாதரண மனிதர்களை அவர்களின் ஊதியத்தை எடுக்கவும் விடாமல் நடுரோட்டில் காய வைத்திருப்பதும்,

முகேஷ் அம்பானியின் சகலபாடி (சகலை என்றும் சொல்வார்) ஒரே வீட்டில் பெண் எடுத்த இருவர் ....என்ற வதந்தி பொய் என்ற போதிலும் தற்போதைய இந்திய ரிசர்வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜனுக்குப் பின் வந்தவர் முகேஷ் அம்பானியின் பரிந்துரையின் பேரில் நியமிக்கப் பட்ட உர்ஜித் பட்டேல்  இவர் அரசு பணியிலும் அம்பானியின் நிறுவனத்திலும் இவர் மனைவியும் அம்பானி நடத்திய பள்ளியிலும் ஆசிரியராக இருந்தவர்தான்.

இருவரும் அம்பானியின் குடும்பத்திற்கு மிகவும் வேண்டியவர்கள் என செய்திகள் உறுதிப்படுத்துகின்றன. மேலும் இவர் முகேஷ் அம்பானியிடம் பணிபுரிந்தவர் இப்போது இந்தியாவின் ரிசர்வ் வங்கியின் ஆளுனர்.

இதெல்லாம் சொல்ல நாம் இந்த பதிவுக்கு வரவில்லை. நமது நண்பர் ஒருவர் முகநூலில் (அன்பழகன் வீரப்பன் என நினைக்கிறேன்) இந்த 500 ,1000 பணம் செல்லாது என அறிவிக்கும் முன்பே ஆயிரம் கோடி உள்ளது அதை மாற்றித் தர கமிஷன் தருகிறேன் முடியுமா எனக் கேட்டதாக சொல்லி இருந்தது பழம் செய்தி .Image result for ambani


அதை ஒட்டிய சில செய்திகள்: மேற்கு வங்கத்தின் பாரதிய ஜனதா கட்சியின்  மாநிலக் கிளை இந்த மோடியின் திட்டம் அமலுக்கு வரும் முன் 2 கோடிக்கும் மேல் ஸ்டேட் வங்கியில் அன்று இரவு 8 மணிக்கு கட்டி இருக்கிறது

சில தினங்களுக்கும் முன் சேலம் பாரதிய ஜனதா கட்சி பிரமுகரிடமிருந்து எல்லாம் 2000 ரூபாய் புது நோட்டுகளாக 20 இலட்சம் பணம் கைப்பற்றப்பட்டிருக்கிறது.

நக்கீரன் இதழில் தமிழக முதல்வராக இருக்கும் பன்னீர் செல்வம் 7 இலட்சம் கோடி பணத்துடன் ரிசர்வ் வங்கி சென்று ஒரு இலட்சம் கோடி கமிஷன் கொடுத்து விட்டு 6 இலட்சம் கோடி புதுப் பணத்தை பெற்றதாக செய்தி வெளியிட்டதாக அதைப் படித்த எவரோ ஒரு நண்பர் சொல்லக் கேட்டேன்

எந்த பெரும்பணக்காரரும், அரசியல் கட்சி பிரமுகர்களும் வங்கியில் வந்து வரிசையில் நிற்கவில்லை, மோடியின் தாயும், ராகுல் காந்தியும் விதிவிலக்கு.

பாரதிய ஜனதா கட்சியின் எம்.எல்.ஏ ஒருவரே இந்த பணம் செல்லாது என்பது பற்றி முன்பே எங்களுக்குத் தெரியும் என பேட்டி கொடுத்துள்ளார்.ஊடகங்களில் வந்திருக்கிறது.

சொந்த மாத ஊதியத்தைக் கூட‌ ஆயிரத்துக்கும் மேல் தரமாட்டேன் என தகராறு செய்து கொண்டிருக்கும் வங்கிகள் எல்லாம் பணம் இல்லை என பாமரனை ஏமாற்றி வரும் காலம்...

அதே நேரத்தில் 2000 ரூபாயை வெளியிட்டு சில்லறைக்கு நாயாய் பேயாய் அலையவிட்டு மாற்ற முடியாமல் மனிதர்களை ஏளனத்துடன் கேலிக்கிடமாக்கிய இந்த ஆட்சி

ஒரு சில இடங்களில் ஊராட்சிகளில் மறுபடியும் ஆதார் கார்டு மற்றும் வங்கிக் கணக்கு விவர நகல்களை எல்லாம் டிசம்பர் 2 ஆம் தேதிக்குள் ஏன் எதற்கு என்றே காரணம் சொல்லாமல் கேட்டு வாங்கி வருகிறது. அதெல்லாம் தெரியாது மத்திய அரசிடம் இருந்து இ.மெயில் வந்தது செய்கிறோம்  எனவே கொடுங்கள் எனக் கேட்டதாக ஊடகங்களும் வீடுகளிலும் நேரடிச் செய்திகள்

500க்கு 1000க்கு பழைய நோட்டுக்கு என 100களின் மடங்குகளில் கமிஷன் வைத்து நோட்டுகளை மாற்றும் பிசினஸ் ஒரு பக்கம், அது டாஸ்மாக் தமிழகத்தில் தலைவிரித்தாடி கடந்த 20ஆம் தேதி வரை வங்கியில் டெபாசிட் செய்தவர்களுக்கு இடைநீக்கம் செய்யுமளவு நிலை இருக்கிறதாம்.

டாஸ்மாக்கில் உருளும் புரளும் பணத்தை யாவற்றையும் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்ட உடனே அரசும், அரசியலும் அடுத்த நாளே ஆள் வைத்து வங்கி மேலாளரை கைக்குள் போட்டுக் கொண்டு மாற்றிக் கொள்வதாகவும் செய்திகள்...


Image result for modi and nita ambani

இதை எல்லாம் பார்த்தால் ஏழைக்குத்தான் இவர்கள் வேட்டு வைத்துள்ளார்கள். மாத சம்பளம் வாங்குவாரும் வங்கியில் கணக்கை வைத்துக் கொண்டு , சர்க்கரை என தாளில் எழுதி நக்கிக் கொண்டே இனிப்பை சுவைக்குமளவு செய்து விட்டது இந்த மோடி அரசு.

ஒரு வியாபார நிமித்தம் பேசும்போது ஒருவர் சொல்கிறார், 50% கறுப்பு, 50% வெள்ளை, அதுவும் இந்த டிசம்பர் 30க்குள் முடித்து விட முடியுமாம் எல்லாவற்றுக்குமே 15% கொடுத்தால் மாற்றிக் கொள்ள ஆட்களும் வழியும் இருக்கிறதாமே...அப்படியானால் நாட்டின் நிலை அவலம் எப்படி இருக்கிறது இந்த ஏமாற்றுத்தனம் எல்லாம் யாருக்கு? யாரை எல்லாம் இந்த மோடி அரசு புது புது வரயறைகளை வைத்து  எல்லைகளை சுருக்கி திண்டாட வைத்துக் கொண்டிருக்கிறது? என்னமோ நடக்குது மர்மமா இருக்குது ஒன்னுமே புரியலை மோடிஜி. எங்கோ குட்டிச் சுவராகிக் கொண்டிருக்கிறது என்றுதான் அது பளிச்சிடுமோ வெளியில் வெளிச்சமாக ...தமிழக அம்மா நிலை போல இந்தியாவின் நிலையும் இன்று வெறும் செய்திகளாகவே இருக்கிறது..

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

3 comments:

  1. நிறைய பேசினால் தேசதுரோகி என்று சொல்லிவிடுவார்கள் ஐயா...!

    ReplyDelete
    Replies
    1. yes you may be right sir.thanks vanakkam.please keep contact

      Delete
  2. ஒன்றுமே புரியவில்லைதான் நண்பரே

    ReplyDelete