Thursday, November 10, 2016

பணக்கற்றைகளை எரிக்காதீர் நற்சேவைக்கு பயன்படுத்துவோர்க்கு வரி விலக்கு...கவிஞர் தணிகை

பணக்கற்றைகளை எரிக்காதீர் நற்சேவைக்கு பயன்படுத்துவோர்க்கு வரி விலக்கு...கவிஞர் தணிகை

Image result for burning 1000 and 500 rupee notes lump


பணக்கற்றைகளை எரிக்காதீர் , விரயம் செய்யாதீர்,குழி நோண்டி புதைக்காதீர், ஆற்றில் வீசி எறியாதீர் நாட்டின் ஆக்க பூர்வமான பணிகளை மேற்கொண்டால் அதற்கு உங்கள் பேரை வைத்துக் கொள்ளலாம், உங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படும், உங்கள் மேல் அரசின் பழி வாங்கும் நடவடிக்கை அல்லது தண்டனை பாயாது என மத்திய அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

பணக்கற்றைகளை பெரும் எண்ணிக்கையில் பெரும் மதிப்புடைய நோட்டுகளை எரிக்கும் செய்தி, படிப் படியாக சிறுகச் சிறுக வர ஆரம்பித்துள்ளன. இது 50 நாட்களுக்கும் பிறகு அல்லது ஜனவரி 2017 வாக்கில் அதிகமாகலாம்.

எப்படி இவர்களுக்கு எல்லாம் இப்படி மனசு வருகிறது? ஒன்று இல்லாதவர்க்கு கொடுத்து விட கொடுத்து உதவ வேண்டும் பயமாக இருந்தால் காட்டிக் கொடுத்து விடுவார்கள் என எண்ணினால் எவருக்கும் தெரியாமல் எங்காவது வைத்து விட்டால் கூட அது எப்படியாவது பிறருக்கு உதவியாக சென்று சேர்ந்து விடும். பிறரின் வயிற்றைக் கட்டி, பிறரின் வயிற்றில் அடித்து சம்பளம் கூட சரியாக கொடுக்காமல் இப்படி சேர்த்த பணப் பாவத்துக்கு புண்ணியம் தேடிக் கொள்ளலாமே...ஏன் இந்த குரூரம்? ஏன் இந்த வஞ்சனை? மனிதமே நீ மிருகத்தை விட கேவலாமாகவே இருக்கிறாயே?

இருக்கவே இருக்கிறது எத்தனயோ கோடிக் குடும்பங்கள் இந்தியாவில் மிகவும் ஏழ்மையாக அவர்களுக்கு நேரடியாக உதவ முடியாமல் போனாலும் வேறு நபர்கள் மூலம் தெரியாமல் முகம் அகம் அடையாளம் தெரியாமல் உதவலாமே...அல்லது அரசிடமே ஒப்படைத்து விடலாமே..அப்படி ஒப்படைத்து விட்டால் அவர்களை துன்புறுத்துவதும் கூடாது அல்லது நன்கொடை அளித்து விடலாம் என்றெல்லாம் ஊக்கப்படுத்தும் சட்ட திட்டங்கள் அறிவிக்கப் படவேண்டியது அவசியம்.

அதை எல்லாம் விடுத்து இப்படி எரிப்பது அவர்களுக்கும் நாட்டுக்கும் பெருத்த நஷ்டம்.

எனவே மத்திய அரசும் நிதித் துறையும் பிரதமர் மோடியும் ஒரு உத்தரவாதம் தர வேண்டும் எவர் மீதும் எந்த சட்டமும், பாயாது அவர்கள் அதை நல்ல நாட்டின் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு பயன்படுத்தினால் அதற்கு வரி விலக்கும், அவர்கள் பேரையும் அதற்கு வைத்துக் கொள்ளலாம் என இந்த நேரத்தில் அறிவித்து திட்டம் வகுத்துக் கொடுக்க வேண்டிய கடமை அரசுக்கும் தேச நேசர்களுக்கும் அவசியம் உண்டு.


Image result for burning 1000 and 500 rupee notes lump
எப்படியாவது இது போன்ற செயல்கள் நடைபெறாமல் காக்க வேண்டும் மாற்று ஏற்பாடு செய்து. அவர்களை 200 சதவீதம் அபராதம் மற்றும் வரி என்றெல்லாம் சொல்லி எதற்காக இந்த அதிரடித் திட்டத்தை நள்ளிரவு முதல் அறிவித்ததோ அந்த நோக்கம் நிறைவேறாமல் போய்விடக் கூடாது....

அதென்ன இந்தியா சுதந்திரம் அடைந்ததும் நள்ளிரவில், இப்படிப் பட்ட திட்டங்களின் அறிவிப்பும் நள்ளிரவில்...தூங்கும்போது தாக்குவது கோழைத்தனமல்லவா?


இது போன்ற பெரும் தொகையை எல்லாம் சேர்த்து நதி நீர் இணைப்பு,இயற்கை பேரிடர் போன்றவற்றிற்கு அரசு பயன்படுத்த வேண்டியதவசியம்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

5 comments:

  1. thanks for your feedback on this post sir. vanakkam. please keep contact

    ReplyDelete
  2. thanks for your participation in this discussion S.Raman, Vellore .vanakkam. please keep contact.

    ReplyDelete
  3. a good appeal to the people but a few would listen and follow...

    ReplyDelete
    Replies
    1. yes Sir you are right. Nobody will listen and Govt too. Anyhow thanks for your feed back on this post vanakkam. please keep contact

      Delete