Sunday, November 27, 2016

ஃபிடல் காஸ்ட்ரோ பற்றிய ஆதங்கம்: கவிஞர் தணிகை

ஃபிடல் காஸ்ட்ரோ பற்றிய ஆதங்கம்: கவிஞர் தணிகை
Related image



638 முறை அமெரிக்க கொலை முயற்சியிலிருந்து தப்பி 90 வயதில் இயற்கையாக காலமான ஃபிடல் காஸ்ட்ரோ பற்றி 20 ஆம் நூற்றாண்டின் மாமனிதர்களில் ஒருவர் மறைந்த நிகழ்வை உலகே உச்சரிக்கின்றபோது நானும் எழுத வேண்டியதாகிறது. காலத்தைப் பதிவு செய்ய வேண்டியாவது. இவரின் வாழ்க்கை நமக்குச் சொல்லும் பாடம் உயிர் போக வேண்டும் என்பது இயற்கையில் முடிவாக வேண்டி அதன் கையில்தான் இருக்கிறதோ என்ற ஒரு ஐயப்பாட்டை ஏற்படுத்துகிறது. வியப்பேற்படுத்தும் வாழ்க்கையும் அதன் முடிவும்.

Related image

tyrant  கொடுங்கோலன் தமது மக்களை சர்வாதிகாரம் கொண்டு அடக்கியவன் என அமெரிக்க வருங்கால குடியரசு தலைவர் டொனால்ட் ட்ரம்ப் மட்டுமல்ல கியூபாவிலிருந்து பஞ்சம் பிழைக்க வெளியேற்றப் பட்டு அமெரிக்காவில் தஞ்சம் அடைந்த‌ பல முதியவர்களும் கூறுகின்றனர்.

prop   கியூபாவை பெரும்பாலும் ரஷியாவே முட்டுக் கொடுத்து வாழ வைத்துக் கொண்டிருந்ததாக் வரலாறு சொல்கிறது. அமெரிக்காவின் நுழைவாயிலில் உலகின் சர்க்கரைக் கிண்ணமான இந்த கியூபாவை அமெரிக்காவின் ஆதரவு பெற்ற பாடிஸ்டா என்ற அதிபரை கொரில்லாப் படைத் தாக்குதல் மூலம் மிகச் சொற்பமான 82 படை வீரர்கள வைத்தே ஆரம்பத்தில் போராடி பிடித்த சரித்திரம் ஃபிடல் காஸ்ட்ரோவுடையது... ஆனால் அதற்கு சே குவேராவின் துணையும் வீரமும் இன்றியமையாதிருந்திருக்கிறது.

கம்யூனிச நாடு ஆட்சி அதிகாரம் என்ற போதிலும் இந்த நாடு அதிபரின் பிடியிலிருந்து இன்று வரை விலகியதாக செய்திகள் இல்லை.இவருக்கும் பின் இவர் தம்பி ரேல் காஸ்ட்ரோவே குடியரசு தலைவர் மற்றும் பிரதமர்.

இங்குதான் சற்றே நெருடல்: இவருக்கு அடுத்த இடம் படை நடத்தும்போது சேகுவேராவுக்கே இருந்திருக்கிறது. நாட்டை இவர்கள் கைக்கொண்டது முதல் சே வுக்கு நிதி, மத்திய ரிசர்வ் வங்கி அதிகாரம் போன்றவை வழங்கப்பட்டிருந்தாலும் ரேல் காஸ்ட்ரோவின் இடையூறுகள் சேவுக்கும் ஃபிடலுக்கும் இடையே இருந்ததாக வரலாற்றிலிருந்து நாம் படித்தறிய முடிகிறது. அப்படி நேரும்போது ஃபிடல் ரேலின் பக்கம் சாய்வது போன்றே சே உணர்ந்ததையும் அறிய முடியுமளவு எழுத்திலக்கியம் நமக்கு போதிக்கிறது.

அதனாலும் அடிப்படையிலேயே ஓரிடத்தில் இருந்து ஆட்சி ,அதிகாரம், பதவி, நிர்வாகம் போன்றவற்றில் நாட்டமில்லாமல் சே இருந்ததாலும் கிடைத்த இடத்தை விட்டுப் புறப்பட்டு விடுவதாகவும் உலக வலம் வர விரும்பியதாகவும் அவர் வரலாறு குறிப்பிடுகிறது.

ஃபிடல் அணி சேரா நாடுகள் பணியில் பெரும் ஒத்துழைப்பு நல்கியதாக நேரு காலத்திலிருந்தே இந்தியாவும் அதன் ஆட்சியாளர்களும் அவரை நல்ல நண்பராக கருதுகிறார்கள். இந்தியா கியூபாவின் தேவையான பஞ்ச நேரத்தில் நிறைய தானியமாக பணமாக உதவியிருக்கிறது.இந்தியா கொடுத்த பிரட் என பெருமையாக அதை ஃபிடல் சொல்லி இருப்பதாகவும் சான்றுகள் உள்ளன.

அடுத்து அவர் தமிழ் ஈழப் பிரச்சனையில் இலங்கை ஆட்சி அதிகார கொடுங்கோலன் மஹிந்த இராட்சச பட்சே  பக்கமே சாய்ந்ததாகவும் தமிழ் ஈழ பிரபாகரனின் விடுதலைப்புலிகளுக்கு ஒரு போதும் ஆதரவாக இல்லை என்றும் ஈழத் தமிழ் பதிவர்கள் முக நூலில் பல முறை தங்கள் ஆதங்கத்தை வெளியிட்டிருந்தார்கள்.

தமது தாடியை நாட்டை நல்ல முறை ஆள்வேன் நல்ல வழி காட்டுவேன் என நம்பிக்கை வரும்போது  எடுப்பேன் என்றும் இயற்கை தம்மை விடுதலை செய்யும் என்றும், நம்பிக்கை கோட்டை ஃபிடல்: நம்பிக்கை, காஸ்ட்ரோ : கோட்டை என்றும் பெயர் கொண்டிருப்பவர். பணக்கார தந்தைக்கு பிறந்து தமது நிலத்தை எல்லாம் அனைவர்க்கும் பிரித்துக் கொடுத்து ...இப்படி கலவைக் குவியலாக விளங்கிய ஃபிடல் தமது எச்சமாக‌ உடலை விட்டுப் போய்விட்ட அதை டிசம்பர் 3 /4 தேதிகளில் உலகும் கியூபாவும் முடித்து வைக்கிறது.

Image result for fidel castro rare photos

தமது நாட்டின் விபச்சாரிகள் கூட பட்டதாரிகளாக இருக்கிறார்கள் எனப் பெருமைப் பட்ட ஒரு நாட்டின் தலைமையை காலமும் இயற்கையும் முடித்து வைத்திருக்கிறது. இன்னும் ரஷியாவில் இருக்கும் கம்யூனிசம்...அடையாளமாக இருக்கிறது. உலகெங்கும் மறுபடியும் கம்யூனிசம் பூக்கும் முன் நாமெல்லாம் இருக்க மாட்டோம் என எண்ணுகிறோம்.

எல்லாம் அமெரிக்கா சார்பாகவே காலம் இயற்கை எல்லாம் தற்காலத்தில் சென்று கொண்டிருக்கிறது...டொனால்ட் ட்ரம்ப் போன்ற முதலாளி அந்த நாட்டின் தலைவராக மறுபடியும்  மறுஓட்டு எண்ணிக்கை ஒரு சிறு கீற்றாக தடுப்பரணாக இருக்கிறது. என்னதான் இருந்தாலும் நமது கணக்கு ட்ரம்பை விட மிஸஸ் கிளின்டன் வந்தால் பரவாயில்லை என்றே தோன்றுகிறது. ஆனால் ட்ரம்புக்குத்தான் ரஷியாவும் புடினும் ஆதரவாய் இருக்கிறார்கள் என்கின்றன செய்திகள்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.





3 comments:

  1. Fidel Castro will always be remembered as a key figure ohe greatest leveller for us allf the TWENTYTH CENTURY as iconoclast a revolutionary .
    Fidel Catro was a great egalitarian and larger than life.
    But DEATH is the greatest leveller for us all

    ReplyDelete
  2. Fidel castro will always be rembered as a key figure of the twentyth century an iconoclat a revolutionary
    Fidel Castro was a great egalitarian and larger than life.
    But death is the greatest leveller for us all

    ReplyDelete
  3. thanks for your feedback on this post Nat Chander.Vanakkam. please keep conatc.

    ReplyDelete