மோடிஜியின் கேஷ்லஸ் இந்தியா இப்போதைக்கு லஸ்கேஷ் இந்தியா: கவிஞர் தணிகை.
மேற்கத்திய நாடுகள் போல கார்டுகளை உரசி பணத்தை பரிமாறிக் கொள்ள படித்தவர்கள் படிக்காத முதியோர்களுக்கு சொல்லித் தர வேண்டும் அதுவும் முறைசாராக் கல்வி கற்பிப்பது போல ஒருவர் சுமார் 30 பேருக்கு அப்படி சொல்லிக் கொடுக்க வேண்டும் என்றெல்லாம் வானொலி வீணொலி செய்கிறார் எமது பிரதமர்.
இந்தியா என்பது இன்னும் கிராமங்கள் நிறைந்த நாடு. அதற்குள் உள்ள பெரும் எண்ணிக்கையிலான மக்களுக்கு இன்னும் படிப்பறிவும் இல்லை,எழுத்தறிவும் இல்லை, வங்கிக் கணக்கும் இல்லை. வங்கிகள் எண்ணிக்கை 100 பேருக்கு ஒன்று என்று இருந்தால் இவ்வளவு கூட்டம் வழிந்திருக்குமா? இறப்புகளும், காத்திருப்புகளும் நடந்திருக்குமா? அதில் இருந்தே நாம் தெரிந்து கொள்ள முடியும் இந்தியாவின் நிலை எத்தகையது என்று
அடுத்து உரசி உரசி பார்த்து கணக்கை முடித்துக் கொள்க என்கிறார். யோவ் காசு இருக்கறவன், கார்ட் இருக்கறவன் மால்களில் உரசி உரசிப் பார்க்கலாம் அய்யா கடன் வாங்குவார் எப்படி உரசி உரசிப் பார்ப்பார்?
இந்த நாட்டின் முக்கிய முன்னணி வங்கி ஸ்டேட் பாங்க் விஜய் மல்லய்யா கணக்கை முடிக்க முடியாமல் திணறி வருகிறதே, அந்த ஆள் சொத்தை ஏலம் எடுக்க எவருமே முன் வரவில்லையே அதெல்லாம் என்ன கணக்கு?
சில மாதங்களுக்கும் முன் தான் சீனாக்காரன் எல்லா மெஷின் வழியாகவும் ஊடுருவி விட்டான். எல்லாம் பாஸ்வேர்ட் மாற்றிக் கொள்க என ஓலமிட்டன எல்லாவகையிலும் முன்னணியில் உள்ள ஸ்டேட் பாங்க் உட்பட...
செல்போன் திருட்டை நம்மால் எப்போது தடுத்து நிறுத்த முடியுமோ, அப்போது செல்போன் வழியே எல்லாம் செய்து கொள்ளலாம்....மேலும் ஏமாந்தால் வங்கியில் இருக்கும் கொஞ்சம் பணத்தையும் ஸ்வாகா செய்வதை தடுக்க முடியாத அரசு பணத்தை எப்படி கார்டு வழியில் செலவளிப்பது என சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று மட்டும் சொல்கிறது
பணத்தை எப்படி சம்பாதிப்பது, வேலை கொடுப்பது போன்றவற்றில் துளியும் கூட கவனமில்லாத அரசு இருக்கிற பணத்தை எப்படி எடுப்பது கழிப்பது, கொடுப்பது என்பது பற்றி மட்டும் அதிக கவனத்துடன் சொல்லித் தரத் தயாராக இருக்கிறது
இன்னும் பெரும்பாலானவர்களுக்கு வங்கியின் நடைமுறைகள் பிடிமானமாகவில்லை என்னும்போது 130 கோடிக்கும் மேல் இருக்கும் இந்த பெருநாட்டுக்கு எந்தவித தயாரிப்புமில்லாமலே எல்லாமே சொல்லிக் கொடுத்து முடித்து விட்டார் வானொலியில் மோடிஜி.ஹி ஹி ஹி என பெரும்பாலான பிரபலங்கள் மோடி போல உண்டா என பாராட்டுகின்றன.
பாமரன் இதனால் அடையும் துன்பம் துடைக்க வழியும் சொல்லப்படவில்லை. அதை எல்லாம் கணக்கில் வைத்து திட்டம் தீட்டப்பட்டு நாட்டின் பொருளாதார சீர்திருத்தம் மேற்கொள்ளப் படவில்லை. இதெல்லாம் உங்கள் கவனத்தில் இருக்க வேண்டும்.
இன்னும் அடிமட்டத்தில் இருக்கும் இந்தியனுக்கு சுகாதாரம், உணவு, குடிநீர், பாசன நீர்,உடை, இருப்பிடம், மருத்துவத்திற்கும், பாதுகாப்பான வாழ்க்கைக்கும் எந்த அரசுகளாலும் உத்தரவாதம் அளிக்க முடியவில்லை. காரணம் இதெல்லாம் தான் என மோடி அயரா துணிச்சலும் இந்த மாற்றத்தைக் கொண்டு வந்து விட்டதாக சொல்கிறார்கள். சரி எதுக்கு இந்த 2000 ஒரே நோட்டு...இந்த காமன் மேனை வாழவைக்கவா? சம்திங் ராங்..
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

வங்கியில் கணக்கு தொடங்கும் முன்பு ஒரு வேலைக்கு ஏற்பாடு செய்து மாத வருமானத்திற்க்கு மோடிஜியை உத்தரவாதம் கொடுக்க சொல்லுங்க. சில ஜால்ராக்கள் இவரை உசுப்பேற்றி விட்டதால் தான் செய்வது எல்லாம் சரி என்று நினைத்து விட்டார் மிஸ்டர் பர்பெக்ட்.
ReplyDeletethanks for your feedback on this post. vanakkam.please keep contact
ReplyDelete