Thursday, November 17, 2016

ஜஸ்டிஸ் ஜான் மைக்கேல் டி குன்‍ஹா பற்றிய ஒரு நற்செய்தியும்...ம்ம்ம் : கவிஞர் தணிகை

ஜஸ்டிஸ் ஜான் மைக்கேல் டி குன்‍ஹா பற்றிய ஒரு நற்செய்தியும்...ம்ம்ம் : கவிஞர் தணிகை
Image result for john michel d cunha


கூடுதல் நீதிபதியாக கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் பணியாற்றுவார் அதன் பின் சில ஆண்டுகளில் உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக‌ பணிபுரிவார். இது போல தமிழகத்திலும் நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்ற போதிலும் இந்த குன்ஹா செய்தி என்னைக் கவர்ந்தது. எனவே...

ஜஸ்டிஸ் ஜான் மைக்கேல் டி குன்ஹாவை இந்தியாவின் நீதித் துறை மறந்திருக்க முடியாது. பார்ப்பன அக்ரஹாரகச் சிறையும், தமிழகத்தின் மாபெரும் கட்சியும் அதன் நிரந்தர முதல்வரும் வாழ்க்கையில் மறந்திடவே முடியாது. நினைவிருந்தால் தானே மறப்பதற்கு....மறந்திருந்தால்தானே நினைப்பதற்கு.. நான் காதல் பாடலைச் சொல்கிறேன்

காலச் சக்கரம் எப்படி எல்லாம் சுழல்கிறது பார்த்தீர்களா? மைக்கேல் டி குன்ஹா சொன்ன தீர்ப்பு சரியில்லை என்ற குமார சாமி ஓய்வு பெற்று இருக்கும் இடம் தெரியாமல் இருக்க அந்த தீர்ப்பால் பாதிப்படைந்த தமிழக முதல்வர் சில மாதங்களாக தம் இன்முகம் காண்பிக்காமல் படுத்த படுக்கையாக இருக்க‌

தர்மம் சக்கரமாய் மெல்லச் சுழல்கிறது.

இந்த நீதிபதியும் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதியாக  அங்கே 65 பேர் வேண்டுமாம் 28 பேர் தான் இருக்கிறார்களாம்....எனவே தற்போதைய உயர்வு பெற்ற நீதிபதிகளில் குன்ஹா முதன்மையாக கருதப் பட்டு பதவி உயர்த்தப் பட்டு கூடுதல் நீதிபதியாகி சில ஆண்டுகளில் உயர் நீதிமன்ற நீதிபதியாக இருப்பார் என செய்தி ஊடகங்கள் தரும் செய்தி எவ்வளவு உண்மையாய் வாய்மையே வெல்லும் என்று சொல்கிறதோ?!

இந்த ஒரு செய்திக்குள் எப்படிப்பட்ட செய்திகள், எப்படிப்பட்ட உண்மைகள், தர்மங்கள், நீதிகள் சொல்லப் படுகின்றன, சொல்லப்பட்டிருக்கின்றன என மனித குலம் உணரத் தலைப்பட வேண்டுவது அவசியம். எனவே கதையை விட வாழ்க்கை நிதர்சனமான சம்பவங்கள் மிகவும் முக்கியமானவை. என்ன காலம்தான் பொறுமையாய் நம்மை காத்திருக்க வைத்து காலத்தின் வல்லமை எத்தகையது என நிரூபணப்படுத்த தக்க கால அவகாசம் எடுத்துக் கொள்கிறது

Image result for john michel d cunha

குன்ஹா தமது கடமையை செவ்வனே செய்திருக்கிறார். அவருக்கு காலம் கை கொடுத்திருக்கிறது. இது மத்திய அரசின் ஒப்புதலுடன் செய்யப்படும் ஒரு பதவி உயர்வு. இந்த வழக்கில் உள்ள ஏனையோர் பற்றி குறிப்பிட என்னதான் பெரிதாக சிறப்பாக இருக்கிறது...என்று எனக்குத் தெரியவில்லை. நவநீதகிருஷ்ணன் என்பார் பலனடைந்திருக்கிறார், குமாரசாமி பலனடைந்திருக்கிறார், குற்றம் சாட்டப்பட்டு குற்றவாளியாய் தண்டனை பெறப்பட்ட தமிழக முதல்வர் பலனடந்திருக்கிறார் இந்த நீதிபதி கொடுத்த தீர்ப்பை மாற்றி  அமைத்ததன் மூலம்...ஆனால் இன்றையக் காலக்கட்டத்தில் சொல்லப் போனால் சொன்னால் அதெல்லாம் பெரிய பலனாகத் தோன்றவில்லை. ஆனால் குன்ஹாவுக்கு கிடைத்த பதவி உயர்வு ஒரு நல்ல சமுதாயத்தின் அடையாளமாய் அவரின் உழைப்புக்கு கிடைத்த் அங்கீகாரமாய் இருக்கிறது.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment