Monday, November 7, 2016

ஷின்ட்லர்ஸ் லிஸ்ட் விமர்சனம் சுரேந்திரன் நிதர்சனம்: கவிஞர் தணிகை

ஷின்ட்லர்ஸ் லிஸ்ட் விமர்சனம் சுரேந்திரன் நிதர்சனம்: கவிஞர் தணிகை

சேலம் மாவட்ட மருத்துவ மனை அப்போது. அங்கு உள் நோயாளியாகச் சேர இலஞ்சம் கேட்ட அரசு மருத்துவரை செருப்பால் அடித்து விட்டு சிறை புகுந்த சசிபெருமாளை உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. செல்பேசி கோபுரம் ஏறி மதுவிலக்குக்காக உயிர் விட்ட சசிபெருமாளைப் பற்றி கூட விவரம் அறிந்த சிலருக்கே தெரிந்திருக்கிறது.

Image result for sasi perumal with meஉலகில் இதுவரை வெளிவந்த மிகச் சிறந்த 100 திரைப்படங்கள் என அமெரிக்கன் திரைப்பட நிறுவனம் பட்டியலிட்டதில் ஷின்ட்லர்ஸ் லிஸ்ட் என்னும் இத்திரைப்படத்திற்கு 8 வது இடம் கொடுத்துள்ளது ‍ 2007ல்.ஆஸ்கார் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட 12 பிரிவுகளில் 7 ஆஸ்கார் பரிசை அல்லது அகடமி அவார்டை பெற்றது. இது வரை தயாரிக்கப்பட்ட திரைப்படங்களில் மிகச் சிறந்த படம் என்று புகழப்படுகிறது.

Image result for schindler's list

1993 நவம்பர் , டிசம்பரில் வெளியிடப்பட்ட இந்தப் படத்தைப் பற்றி இப்போது ஏன் எழுதுவானேன் எனக் கேட்கிறீர். காரணம் இருக்கிறது.
முதலில் சில காட்சிகள், இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மானியர் போலந்தில் உள்ள யூத இன மக்களை சுமார் 60 இலட்சம் பேரை கொன்று குவிக்கின்றனர் காரணமில்லாமலே பொட்டு பொட்டு என சுட்டுத் தள்ளுகின்றனர். பிணக்குவியலை பெரும் அகழிகள் வெட்டி அதில் எந்திரம் கொண்டு தள்ளி புதைக்கின்றனர்

சிறுவர், குழந்தை, முதியோர், பெண், ஆண் என வேறுபாடு இன்றி பின்னந்தலையில் அல்லது நெற்றியில் சுட்டு ஒரே குண்டில் சாய்க்கின்றனர் மண்டையிலிருந்து இரத்தம் பீறிட்டு குருதி மண் சிவக்கிறது...அதிலும் பீங்கான் குளியல் தொட்டியை ஒரு சிறுவன் சுத்தம் செய்கிறான், வழவழப்பாக  பள பளப்பாகவும் செய்ய முயல்கிறான். எஜமான கோத் வந்து பார்க்கிறான். சற்று சொர சொரப்பாக இருக்கிறது. சிறுவன் முறையிடுகிறான் இது போன்ற வேலைகள் செய்து பழக்கமில்லாத காரணத்தால் முழுதும் நிறைவடையவில்லை என.
Image result for schindler's list


அவனை அனுப்பி விடுகிறான். ஒருவேளை இவன் திருந்தி விட்டானோ ஆஸ்கார் ஷின்ட்லரைப் பார்த்து என நாம் ஐயப்படும்போது சிறுவன் ஒரு மைதானத்து வழியே சென்று கொன்டிருக்கும்போது குண்டுகள் அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் வெடிக்கிறது சும்மா பயமுறுத்துகிறான் என நாம் நினைக்கும்போது குண்டு அந்த சிறுவனை இட்சக் ஸ்டென்(பென் கிங்க்ஸ்லி) முன்னிலையில் துளைக்கிறது காரணம் இவன் வந்த பிறகு அந்த கொடுமைக்கார கோத் கண்ணாடியை தடவிப் பார்த்ததுதான். அந்த பளபளப்பை இவன் குளியல் தொட்டியில் உணராதது தான். இது பரவாயில்லை எந்தவித காரணமும் இன்றியே வேலை செய்து கொண்டிருப்போரை காலையெழுந்து வார்ம் அப் செய்வதற்காக துப்பாக்கிக்கு சிலரை இரையாக்குகிறான். இப்படி படம் முழுக்க யூதர்கள் வேட்டையாடப் படுகிறார்கள். காரண காரியமின்றியே.

இதனிடையே வருகிறார் ஆஸ்கார் ஷின்டலர் என்னும் ஒரு வியாபாரி அல்லது முதலாளி. இவரும் ஒரு ஜெர்மானியர் என்னும்போதும் இட்சக் ஸ்டென் இவனது கணக்குப்பிள்ளை அல்லது அக்கவுண்டன்ட். இவனது உதவியுடன் இவன் சுமார் 1000 யூதர்களை எப்படி காப்பாற்றுகிறான் என்பதுதான் கதை.

ஆஸ்திரேலியாவின் தாமஸ் கின்லி என்னும் எழுத்தாளர் எழுதிய உண்மை சரித்திரமான ஷின்ட்லர்ஸ் ஆர்க் என்னும் நாவலை படமாக்கியுள்ளார் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க். இவர் எடுத்த படங்களில் இதுதான் இவருக்கு மிகவும் பிடித்ததாம் ஜுராஸிக் பார்க் போன்றவை எல்லாம் இல்லை என அவரே கூறியிருக்கிறார்.
Image result for schindler's list


22 அமெரிக்கன் மில்லியன் டாலர் செலவளிக்கப்பட்டு எடுத்த இப்படம் 321.2 அமெரிக்கன் டாலர்களை ஈட்டியுள்ளதாக செய்திகள்.பாக்ஸ் ஆபிஸ் ஹிட். உண்மையில் இதைப் படமாக பார்க்கவே முடியாது  ஒரு சரித்திரப் பதிவு. ஆவணப்படுத்தலாகவே காணமுடிகிறது.

லியாம் நீசன் என்பவர் ஆஸ்கார் ஷின்டலராக வாழ்ந்திருக்கிறார் இவரும் பென் கிங்க்ஸ்லீயும் தயாரித்து காப்பாற்றியோர் யூதர்களில் பட்டியல்தான் ஷின்டலர்ஸ் லிஸ்ட். ஆனால் அதற்குள்தான் எப்படி அந்த  ரயிலானது தடம் மாறிப் போகிறது? அதை எப்படி இலஞ்சம் கொடுத்து இவர் திருப்புகிறார்,

எவ்வளவு கொடுமைக்கார, கொடூரமான, படு கண்டிப்பான நாஜிக்களின் ஹிட்லரின் படையில் ஆஸ்கார் ஷின்ட்லர் டைரக்டர் என அழைக்கப்படுகிறார் எல்லாருக்கும் ஒரு விலை கொடுத்து தமது காரியத்தை சாதிக்கிறார், வாட்ச், மோதிரம், பணம், வைரக் கற்கள் இப்படி எல்லாம்.

ஒரு கம்பெனி எனாமல் பாத்திரங்கள், நாம் அலுமினியம் அல்லது ஈயம் என்று சொல்லலாமா? அப்படி ஒரு கம்பெனி நடத்துவதாக சொல்லி இந்த போலந்தின் யூத அடிமைகளை எல்லாம் விலைக்கு வாங்கி காப்பாற்றுகிறார் கடைசியில் இவரிடம் பணம் ஏதும் அறவே இல்லை ரஷியா போரில் வெற்றி பெற்று இந்த அடிமைகளை விடுதலை செய்கிறது ஜெர்மனியின் கை தாழ்கிறது. இவர் வழியாக காப்பாற்றப் பட்ட யூதர்கள் பல்கிப் பெருகி பல்லாயிரமாக மாறுவதாகவும்( ஒன்பதாயிரம் எனச் சொன்னதாக பார்த்ததாக நினைவு ) மற்ற யூதர்கள் வெறும் 4ஆயிரம் மட்டுமே இருப்பதாகவும் ஒரு புள்ளி விவரம் தருகிறார்கள்.

Image result for schindler's list


66 ஆண்டு வாழ்ந்த ஷின்டலர் ஒரு சதுக்கத்தில் மரம் நட அழைக்கப்படுவதாகவும் எல்லா மனிதர்களின் பெருமதிப்பைப் பெறுவதாகவும், கோத் தமது மனிதாபிமானமற்ற செய்கைகளுக்காக் தூக்கிலிடப்பட்டதாகவும் படம் நிறைகிறது. ஷின்டலர் மணவாழ்வில் தோல்வியும், கம்பெனி நடத்துவதில் எந்த வெற்றியும், இலாபமும் ஈட்டாமல் ஆயிரம் மனிதர்களை காப்பாற்றிய பெருமையை பெறுகிறார். ஒரு மனிதரின் வாழ்வை காப்பாற்றினாலே நீங்கள் உலகை காப்பாற்றிய பெருமை பெற்றவராவீர் என்ற நிறைவு மொழிக்கேற்ப...அவரது கல்லறையில் வண்ணப் படமாக மாறி வரிசையாக வந்து ஒரு சிறு கல்லை வைத்து அஞ்சலி செலுத்துகிறார்கள் படத்தில் ஷிண்ட்லராக நடித்த லியாமி நீசன் வந்து வைப்பதுடன் படம் முடிகிறது.

சரி இதை நான் ஏன் சொல்லி இருக்கிறேன் எனில், கண்ணதாசன் ஒரு இடத்தில் சொல்வார், குழந்தை பிறக்கும்போதே கையை விரித்தபடியே பிறக்கிறது அது  பெறத் தயாராக இருக்கிறது என எனவே இலஞ்சத்தை ஒழிக்க முடியாது என்பார். மதுவை ஒழிக்கலாம் என்பார் எல்லாவற்றையும் தாமே குடித்து முடித்துவிடுவதாக இருந்தால் என்பார். அது போல  ‍ஹெரால்ட் ராபின்ஸ் ஒரு கதையில் எ ஸ்டோன் பார் டேனி பிசர் என நினைக்கிறேன் இறந்த மனிதரின் உடலில் இருந்து கல்லறையில் அல்லது இடுகாட்டில் சுடுகாட்டில் இருந்து அந்த உடலை கடைசிக்கு இட்டுச் செல்லும் ஒரு நண்பர்கள் சிலர் தங்கப் பல்லை எரியும் சிதையிலிருந்து எடுத்துக் கொள்வார்கள், மேலும் என்ன என்ன எல்லாம் உபயோகப்படுமோ அதை எல்லாம் எடுத்துப் பிழைப்பார்கள் அவ்வ்வ்வ்ளவு வறுமையிலிருந்து கதை ஆரம்பிக்கும்.Image result for schindler's list


அது போல மனிதர்களை காக்க இந்த ஷிண்ட்லர் இலஞ்சம் கொடுத்து நாஜி படையின் தலைவர்களை விலைக்கு வாங்குகிறார் எனில் எமது சேலம் மாவட்டத்து சுரேந்திரன் என்னும் இளைஞர் தொழில் முனைவோர் ஆக எவ்வளவு பேரிடம் சுமார் 15 பேரிடம் இலஞ்சம் கொடுத்த காட்சிகளை படப்பதிவு செய்து வெளியிட்டு அதனால் 4 மின்வாரிய ஊழியர்கள் இடைநீக்கம் செய்ததாக செய்தி. இவர் போன்ற இளைஞர்கள் இந்த இந்திய நாட்டின் முன்னேற்றத்திற்கு இன்றியமையாதவர்கள். எனவே எமது சுவர் எழுத்துகளில் கூட அவர் பற்றி எழுதியுள்ளோம் இவர் போல இன்னும் முன் வர மாட்டார்களா என, சேலம் மாவட்ட மாரியப்பன் தங்கவேலு செய்தது ஒரு சாதனைதான் என்றாலும் அது போல இதுவும் சாதனைதான். இது போன்ற சாதனைகளால் தான் சமுதாயத்தின் முதுகெலும்பு நிமிரும்.

Image result for schindler's listஎனது சொந்த அனுபவத்தில் நான் ப்யூஸ் மனுஸ் போல் கட்சி சார்ந்த மனிதக் கூட்டத்திடை அகப்பட்டு விழிக்க ஆரம்பிக்கும் வரை எமது பேர் ஒரு பயமுறுத்தும் ஆய்தமாக பயன்படுத்தப்பட்டது எல்லா இடங்களிலும்.ஊராட்சி அலுவலகத்திலிருது, தேசிய உடைமயாக்கப் பட்ட வங்கிகள், மின்வாரிய அலுவலகங்கள், வட்டாட்சியர், நகராட்சிகள் எல்லாம் நிறைய இலஞ்ச எதிர்ப்புப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. சில ஆண்டுகள் கூட இதன் விசாரணைகள் நடந்தன. முதல்வர் வரை கொண்டு செல்லப்பட்ட மக்கள் குறை தீர்க்கும் பிரிவுகள் மூலம் சில நல்ல முடிவுகள் ஏற்பட்டன, அப்போதெல்லாம் செல்பேசி போட்டோ வசதிகள் எல்லாம் இல்லை எல்லாம் கடிதத் தொடர்புகள் மூலம் நடக்கும் போராட்டங்கள்தான். ஆதாரங்கள் சாட்சிகள் எல்லாம் மனிதர்களும் உண்மைகளும்தாம்.

அந்த ஆபத்து  வளையத்தில் இருந்து வெளி வந்து எனைக் காப்பாற்றிக் கொண்ட கடிதமாகவே அப்துல் கலாம் அவர்களின் கடிதமும்  இருந்தது

ஆனால் இப்போது தம்பி சுரேந்திரன் செய்திருப்பது தெ‍ஹல்கா செய்தது போல அளவில் மிகப் பெரிய இலஞ்ச ஒழிப்பு முயற்சி இல்லாமல் போனாலும் தனிப்பட்ட மனிதராய் நாட்டுக்கு நாட்டை அதன் இழிவை காட்டும் முயற்சி.

சங்கர் திரைப்பட இயக்குனர் ஜென்டில்மேன், இந்தியன், முதல்வன், அந்நியன், சிவாஜி போன்ற படங்களை இலஞ்ச ஒழிப்பு செய்திகளை அடிப்படையாக வைத்தபோதிலும் இந்த நாட்டில் எவருமே தமது வாழ்வில் பயன்படுத்த முன்வருவதில்லை. ஆனால் இதுபோன்று செய்திகள் அவ்வப்போது வந்த வண்ணமே இருக்கின்றன. அங்கு அவர் கைது, இங்கு இவர் கைது என. ஆனாலும் இலஞ்சமும் ஊழலும் இன்னும் பெருகியபடியே இருக்கிறதே ஒழிய குறைந்தபாட்டைக் காணோம். காரணம் ஆள்வோர்.

பிறநாட்டில் சட்டத்தை மீறுவதற்காக இலஞ்சம் பேசுகிறது என்பார், இங்கு சட்டப்படி தமது வேலையை செய்வதற்கே இலஞ்சம் வேண்டிய நிலை. துர்ப்பாக்கியம், வாங்கினேன் பிடித்துச் சென்றார்கள், கொடுத்தேன் விட்டு விட்டார்கள் என ஒரு கவிஞர் சொல்லியபடி அதைப் பேசப் போனால் கூட அந்தப் பேச்சரங்கில் இவனை விட்டால் மீறிவிடுவான் என ஒரு புல்லுருவியை பக்கத்தில் வைத்து நாம் பேசியதை எல்லாம் அவனை பேச கற்றுக் கொள்ள வைத்து நம்மை கழட்டி விட்டு விட்டு அவனை எடுப்பார் கைப்பிள்ளையாக, தேவையானபடி வனைந்து கொள்ளும் மண் பொம்மையாக ஒரு  அரங்கம் செய்து கொண்டது எல்லாம் என் நினைவில் ஏன் நிழலாடுகிறது என்றுதான் புரியவில்லை.

நாளை மறுபடியும் எனது நாள் அதிகாலை 4 மணி முதல் ஆரம்பிக்கிறது என்பதால் உங்களுடன் இது வரை தான் பேசமுடிகிறது.

https://www.youtube.com/watch?v=HmoLhL5Gdg4
https://www.youtube.com/watch?v=5YX9_3tRxV0

இந்தியாவில் இலஞ்சம் கொடுக்கும் தொடர்கதை முடியாத சிந்துபாத் கன்னித் தீவு ஆதலால் பொறுக்க மாட்டாமல் பாம்புகளை அவிழ்த்து அலுவலகத்தில் விட்ட கதை எல்லாம் உண்மைச் சம்பவமாக நடந்தேறியதுதான்...
நன்றி
வணக்கம்
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment