Saturday, November 12, 2016

நதி நீர் இணைப்புக்கு இந்தப் பணத்தை விரயமாக்காமல் பயன்படுத்த அரசு திட்டமிடலாமே? :‍ கவிஞர் தணிகை

நதி நீர் இணைப்புக்கு இந்தப் பணத்தை விரயமாக்காமல் பயன்படுத்த அரசு திட்டமிடலாமே? :‍ கவிஞர் தணிகை

Image result for Indian money 500 1000 burned out

தொப்பூர் கணவாய்ப் பள்ளத்தாக்கில் 12.5 கோடி பணம் தூக்கி விசிறப்பட்டது, உ.பி கணக்கிலடங்கா பணம் எரிக்கப்பட்டது, காடு விற்ற பணத்தை 45 இலட்சத்தை வைத்துக் கொண்டிருந்த பெண் தற்கொலை செய்தார் மாற்ற முடியாதோ செல்லாது என உறவுகள் எல்லாம் சாட‌, ஏ.டி.எம் மில் பணம் எடுக்க க்யூ வரிசையில் நின்ற 2 பேர் சாவு, இரண்டாயிரம் புது நோட்டை (ரூ.2000 )செலுத்த முடியாமல் கூலித் தொழிலாளி அதை சாலையில் கிழித்து எறிந்தார். அரவிந்த் கெஜ்ரிவால் சொல்வது போல ஏற்கெனவே பாரதிய ஜனதாக் கட்சியினர்க்கு ஏற்கெனவே இந்த நிகழ்வு தெரிந்ததால் கடந்த செப்டம்பர் முதல் வங்கிகளில் இருப்பு உயர்ந்தது, உதாரணமாக மேற்கு வங்கம் கொல்கொத்தாவில் அந்தக் கட்சிப்பணம் வங்கியில் போடப்பட்டுள்ளதாகவும் அந்த நாள் மட்டும் அந்த வங்கி இரவு 8 மணி வரை செயல்பட்டதாகவும் ஆதாரங்களுடன் தெரிவித்திருக்கிறார்கள் ஊடகவியலாளர்கள்.

எங்கு பார்த்தாலும் ஒரே களேபரமாக காணப்படும் சூழல், அஞ்சலகத்தில் தபால் வில்லைகள் கூட வாங்க முடியவில்லை தபால் அனுப்ப(போஸ்டல் ஸ்டாம்ப்ஸ்) ஏகக் கெடுபிடி. காவல்துறையும் வங்கித்துறையும் மட்டுமே சுறுசுறுப்பாக செயல்படுகின்றன என்ற தோற்றம்.

ஆனால் ரயில்வே நிலையம், மருத்துவமனை, அரைகுறையாக பெட்ரோல் பங்குகள், எல்லாம் வாங்கி வருகின்றன.மேலும் இந்த பழைய நோட்டுகளை த.நா.மி.வாரியம் மின்சார கட்டணத்துக்காகவும்‍‍ பில்லுக்காகவும், பி.எஸ்.என்.எல் பில்லுக்காகவும் வாங்குவதாக அறிவித்து வாங்குகின்றன.ஊராட்சி ஒன்றியங்கள் குடிநீர் கட்டணத்துக்காக இந்த பழைய நோட்டுகளை வாங்கி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Image result for merger of Indian rivers

இப்படி எல்லாம் அரை குறையாக இருப்பதற்கு மாறாக எல்லா அரசு அலுவலகங்களுமே பெற்றுக் கொள்ளலாம் என்று விதி சட்டம் இருப்பின் பொதுமக்கள் அவதி பெரிதும் தீர்ந்திருக்கும் வியாபாரிகள் தவிக்கிறார்கள். எங்கும் வியாபாரம் இல்லை. கறிக்கடைக்காரர் வெட்டிய கறி வீணாகக் கூடாதே என கடனுக்கு கொடுத்து விடுகிறார். உணவகம், ஒன்றில் செய்து வைத்த பொருட்கள் வீணாகிடக் கூடாதே என இலவசமாகவும் கொடுப்பதை கொடுங்கள் எனப் பயணிகளுக்கு வாரி வழங்குவதாக புண்ணியம் கட்டிக் கொள்வதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Image result for merger of Indian rivers

200 சதம் வரி, அதையும் மீறி வரி தண்டனை என்றெல்லாம் பயமுறுத்துவதை விட இந்தப் பணம் செல்லாதுதான் ஆனால் நதி நிர் இணைப்புக்கு பயன்படுத்தப் படும் என்றும் வரிவிலக்கு உண்டென்றும் அப்படி வழங்குவோர்க்கு அவரவர் அளவுக்கேற்ப பரிசு, விருது , கௌரவம் அளிக்கப்படும் என்றும் அந்த திட்டம் நிறைவேற்றும்போது அவர்கள் பெயர்கள் பொறிக்கப்படும் என்றும் சொல்லி எல்லாப் பணத்தையும் அரசு திரட்டி இருக்க வேண்டும், நதி நீர் இணைப்புக்கு பயன்படுத்த வேண்டும், அந்த அரிய பெரிய வாய்ப்பை இந்த மோடி அரசு நழுவ விட்டு விட்டு கோட்டை விட்டு விட்டு ஏதோதோ சொல்லி பயமுறுத்தி பொதுமக்களுக்கு அல்லல் செய்து வருகிறது.
Image result for merger of Indian rivers


காசு வைத்திருக்கும் மகாப் பிரபுக்களும் இந்த வாய்ப்பை வரி கட்டி பயன்படுத்தி வெள்ளையாக்காமல் எரித்தும், கரைத்தும், விரயம் செய்து இந்தியாவின் செல்வ வளத்தை கேலிக் கூத்தாக்கி வருகிறார்கள்

பெரும் மோசடியாக, எண்ணற்ற 130 கோடி மக்கள் தொகைக்கும் மேலான உள்ள நாட்டில் சரியாக திட்டமிடாமல் பொதுமக்களின் வாழ்க்கையை தமது வாழ்வின் ஆதாரத்துக்காக தாம் ஈட்டிய  தமது செல்வத்தையே பெற விடாமல் மக்களாட்சி என்ற பேரில் முதலாளித்துவ ஆட்சியாக நெருக்கடி கொடுத்து வருகிறார்கள்.

Image result for merger of Indian rivers

Image result for merger of Indian riversமறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment