Thursday, November 17, 2016

நவம்பர் 18 வ.உ.சிதம்பரம் பிள்ளை நினைவு நாள் மட்டுமல்ல எம் தந்தை சுப்ரமணியம் தாய் தெய்வானை நினைவு நாளும் கூட: கவிஞர் தணிகை

நவம்பர் 18 வ.உ.சிதம்பரம் பிள்ளை நினைவு நாள் மட்டுமல்ல எம் தந்தை சுப்ரமணியம் தாய் தெய்வானை நினைவு நாளும் கூட: கவிஞர் தணிகை

செக்கிழுத்த செம்மல், கப்பல் கை விட்ட பின்னும் இல்லை இல்லை இந்திய மக்கள் கை விட்ட பின்னும் வக்கீல் தொழில் புரிய விடாமல் எவ்வளவோ சூழ்ச்சிகள், அவரின் வாரிசுகள் மிகவும் கீழ் தட்டில் வாழ்ந்தது வரலாறு,சூரியன் எமைக் கேட்டுத்தான் எழும் விழும் என்ற மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை எதிர்த்த மாமேதை மாபெரும் துணிச்சல் பேர்வழி. எம் தந்தை 4 விசைத்தறியின் பிரேக் தள்ளி இரவு பகல் சிப்ட் பாராமல் உழைத்து எமது குடும்பத்தில் அப்போது இருந்த 10 பேரின் வாயும் வயிறும் நிறையக் காரணமாயிருந்தார். இருவருக்குமே சொல்லிக் கொள்ள ஏதும் கிடைக்கவில்லை. கடமை முடிந்ததும் காடு சென்றேகினார்கள். அவர்கள் இருவரையும் வணங்குகிறேன் உடன் என் தாய் படிக்காத தெய்வானை பெரும் குடும்பத்தை நிர்வகித்து அனைவரையும் மேலுக்கு கொணர்ந்த தமிழன்னை அவருடனும் சேர்த்து.

Image result for very huge trees

கவிதை ஒன்றும் எழுதத் தோன்றவில்லை. உழைத்து விட்ட வந்த உடல் அயற்சி.என்றாலும் நாளையை நான் நினைத்துப் பார்க்கிறேன். பிரார்த்தனை செய்வதன்றி பெரிதாக வேறு ஏதும் செய்ய இல்லை. வழக்கப்படி இப்போதும் சொல்கிறேன், எனது தந்தையின் உடல் வீடு வந்து சேர ஒரு வாடகைக் காருக்கு பயன்பட்ட எனது அப்போதைய சேமிப்பு வெறும் 750 ரூபாய் மட்டுமே நான் அவருக்காக செலவு செய்தது இல்லை இல்லை அவர் உடலை வீட்டுக்கு கொண்டு வர நான் செலவு செய்தது.

காலம் தான் எவ்வளவு விரைவாக போய்விட்டது. நான் பிறக்கும்போது அவர் வயது தோராயமாக 40 .1986ல் அவரது 65 வயதுடைய‌ மறைவு எனக்கு அவ்வளவுதான் என்ற பேருணர்வைக் கொடுத்தது. அதற்கும் மேல் என்ன செய்ய வேண்டும் அவரது மறைவுக்குப் பின் என்ற உணர்வு பொறுப்பை, கடமையை எப்பாடுபட்டாவது அவரது துணையான எனது தாயை அவரது , எனது தந்தையின் கோணத்திலிருந்து காத்து செல்ல வேண்டும் கண்ணும் கருத்துமாக போற்ற வேண்டும் என.

Related image

அதை நிறைவேற்றி விட்டதாகவே நம்புகிறேன். தந்தை இறந்து 30 ஆண்டுகள் ஓடி விட்டன. தாய் இறந்து 10 ஆண்டுகள்.ஆம் அவர் மறைவு 2006.

எனது தாயுடன் தாம் எத்தனை மன்றாடல்கள், அவரை அவ்வளவு சாதாரணமாக எவருமே நிறைவடைய வைத்து விட முடியாது. அவ்வளவு பேராசை உடையவர் என்றா பொருளில்லை இதற்கு தாம் என்ன எண்ணுகிறாரோ அதன் வழி செல்ல வேண்டும், அதன் வழி மட்டுமே செல்ல வேண்டும் என்ற குணாம்சம் நிறைந்தவர்.அவர்களின் இருவரின் கலவை தான் நாங்கள் அனைவரும். சமுதாயத்தின் நல்ல மரங்களாக கிளைவிட்டிருக்கிறோம். வேர் ஊன்றி இருக்கிறோம்.அனைவருக்கும் பயன்படும் வண்ணம் .பூமிக்கு பாரமாக அல்ல புனித பூமியின் புதல்வராகவே. அந்தளவுக்கு படிக்காத பாமரத் தனம் உடைய பெற்றோர், இந்த அளவுக்கு எம்மை உருவாக்கியமைக்கு ஒரு நன்றி சொல்ல வேண்டாமா? எப்படி நன்றி சொன்னாலும், எத்தனை நன்றி சொன்னாலும் அதற்கெல்லாம் ஈடாகுமா?

தந்தையின் மறைவுக்குப் பிறகு சுமார் 20 ஆண்டுகள் எம் தாயுடன் இருந்த வாய்ப்பு எமக்கு. இதை பாக்யம் என்று சொல்லமா எனத் தெரியவில்லை. ஏன் எனில் பெரும் குடும்பத்தின் அத்தனை பூசல்களும் அதில் அடக்கம் என்பதை சொல்லாமல் விட முடியாது. எனக்கு மூடி மறைத்து பேச எப்போதுமே பிடிக்காது. பேசாமல் இருந்து விடுவேன். பேச ஆரம்பத்தால் அத்தனையும் உண்மை வரவேண்டும், வெளிப்படையாக வேண்டும்...

Related image

ஆனால் இதெல்லாம் மனித குலத்திற்கு சற்று அல்ல பெரிதும் இடைஞ்சலானவை அது பிறர்க்கு இடைஞ்சலாகிறதோ என்னவோ எமது வளர்ச்சிக்கு பெரிதும் முட்டுக்கட்டைகளே.

அந்த அந்த காலத்தின் உண்மை உணர முடியாமல் போய்விடுவதுதான் வாழ்க்கை என நான் அடிக்கடி குறிப்பிடுவது உண்டு. இதே வீட்டில் சற்று மாறுபட்டு காட்சி அளிக்கும் இதே வீட்டில் பிறந்தவன் இன்றும் இப்போது உங்களுடன் பேசிக் கொண்டிருக்கும் இதே சூழலில் வளர்ந்தவன். எத்தனை பேருக்கு இப்படிப் பட்ட வாய்ப்பு கிடைக்கும். எனது வீட்டின் கூரை ஓடுகள் மேல் விழாத குறை ஒன்றுதான் மற்றபடி எதற்கும் குறை சொல்ல முடியாது.

இங்கேதான் சிறுவர்களாக சண்டையிட்டு,விளையாடி, கோடை,குளிர் என பருவ காலம் மாறி மாறிச் செல்ல, பருவம் அடைந்த பெண்கள், திருமணமாகிய பெண்கள், பிள்ளைபேறு பெற்ற பெண்கள், பெயரன் பெயர்த்தி எடுத்த பெண்கள் இப்படி சென்று கொண்டே இருக்கிறது...
Related image


எத்தனை மர வகை, எத்தனை செடி வகை, எத்தனை மனித வகை என எத்தனை தொடர்புகள்..எத்தனை பாம்புகள், எத்தனை தேள்கள், எத்தனை பூச்சி இனங்கள், எத்தனை பறவை இனங்கள் எல்லாவற்றுடன் வளர்ந்தோம். காடு, மாடு, பதநீர், கடலைக் கொடி, கடலைச் செடி,கொட்ட முத்து எனும் ஆமணக்கு,அரப்புத் தூள் கொடுக்கும் அரப்பு மரம், சீத்தாப் பழம், எத்தனை விளையாட்டு எல்லாம் எப்படி சொல்ல முடியும்? ஆனால் சொல்ல வேண்டும்

எந்தையும் தாயும் மகிழ்ந்தது இந்நாடே என்ற பாரதியின் வரிகளுக்கேற்ப கடன் , பொருளாதாரப் பிரச்சனைகள் எத்தனை வந்துற்ற போதும் வயிறுகள் முழுதாக நிறையாத காலக்கட்டஙக்ள் எப்படி இருந்த போதும்..வளர்ச்சி இருந்து கொண்டே இருந்து...சிட்டுக் குருவியை வாயுக்குள் அனுப்பிக்கொண்டிருக்கும் பச்சைப் பாம்புகள் தலை கீழாய் தொங்கிக் கொண்டிருப்பதை பார்த்திருக்கிறீர்களா? எமது சிறுவயதில் அந்த வாய்ப்பெல்லாம் எமது வீட்டின் புழக்கடைத் தோட்டத்தில் எமது மரத்திலேயே எமக்கு கிடைத்தது குருவி உயிர் போகும் மரண அவஸ்தையுடன் கீச் கீச் எனக் கத்தியபடி சத்தம் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கும் பாம்பின் வாயுள்...அதற்கு இரை வேண்டுமே....அதுதான் நிதர்சனமான வாழ்வின் தடம்.

எல்லாம் மனிதம் என்று சொன்னாலுமே மிருக குணம் இல்லா மனிதமே இல்லை. குறைந்தபட்சம் அப்படி பிறந்து இருக்க வாய்ப்பில்லை என்று கூட சொல்லி விடலாம்.  அதிலிருந்து மேல் எழும் ஆன்மாவின் பயணம்தான் இந்த வாழ்க்கை.
Image result for very huge trees


நான் உங்களை எங்கோ இட்டுச் செல்கிறேன் அது எம் நோக்கமல்ல. குமுதம் வாங்கி படித்த அப்பா,(இவர் மில் தொழிலாளியாக பியர்ட்செல் நிற்வனத்தில் இருந்து தொழில் முறையில் கல்வி கற்றவர் சுமார் 5 ஆம் வகுப்பு வரை படித்த  அளவில் சான்றிதழ் அந்த தொழிலாளர்க்கு கல்வி அளித்த நிறுவனமே சான்றிதழும் அளித்திருந்ததை பல்லாண்டுகள் எமது சுவரில் சட்டமிட்டு பிரேம் செய்து மாட்டியிருந்தோம். அது இப்போது கூட எங்கோ இருக்கிறது. அது எங்கிருக்கிறது எனத் தேடி எடுக்கத்தான் இப்போது நேரமில்லை.

கோபத்தில் உடல் எல்லாம் கிடு கிடுவென நடுங்கும் அப்பா, இரத்த அழுத்தம், மாரடைப்பால் இருதய அடைப்பால் இறந்த அப்பா, நாங்கள் அண்ணன் என்று அழைத்த அப்பா, அதிகமாக கோபம் வந்தால் எமை அடித்த அப்பா, அன்பாக செல்லமாக பால் டீ வாங்கிக் கொடுத்த அப்பா,தொண்டைப்புண் வாய்ப்புண் நீக்க விட்டா கெக்ஸ்ட், பிலாஸம் என்ற ஒரு டானிக்கை, தூள் மருந்துப் பொடியை மருத்துவரிடம் சென்று பரிசோதித்துப் பார்த்து வாங்கிக் கொடுத்த அப்பா, மறுபடியும் அதை வாங்கிக் கொடுத்து தொடர முடியாமல் பொருளாதாரம் இடம் கொடுக்காதப்பா,நான் ஆண்பிள்ளைகளில் கடைசி.

கடைசியில் எமது இப்போது உங்களுக்கு இந்த செய்திகளை பரிமாறும் அதே அறையில் கிடத்தி வைக்கப் பட்ட உடலாகியிருந்த அப்பா,24 வயதில் 4 வயதிலிருந்து நினைவு என எடுத்துக் கொண்டாலும் நான் அவருடன் 20 ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறேன். தாயுடன் சுமார் 40 ஆண்டுகள் அனுபவத்துடன் வாழ்ந்திருக்கிறேன்.

நாமெல்லாம் யார், விவேகானந்தர் சொல்வது போல ஒரு அலையின் தொடர், மறு அலையாக, நமது மக்கள் சொல்ல வேண்டும் இதே போல...

ஆமாம் நீ பெரிய காந்திதான் என ஒரு முறை அவர் எனைச் சொன்னாலும், எனது வளர்ச்சியில் பொறுப்பான மருத்துவர்கள், எனது பதிவேட்டில், எனது வேலை மகாத்மா காந்தி, மதர் தெரஸா வேலை போன்றிருக்கிறது என ஆதாரத்துடன் பறை சாற்றி சென்றிருக்கிறார்கள்...ஆக தந்தை சொல் மிக்க மந்திரமில்லை வெறுப்பில் சொன்னாலும் அதில் பலிக்கும் முகாந்திரங்கள் அமைந்து விடுகின்றன.

அதிலும் திருமணம் என்ற கட்டத்தில் ஒவ்வொரு தந்தையின் பங்கும் தலையானது உச்சக் கட்டமானது. ஆனால்  தாய் தவிக்கிறார் மகனானானல் எங்கே எமை விட்டு விடுவானோ என, ..

எம் வீட்டு பூவரசு டைனிங் டேபிள் கால்களாகி இன்னும் பேர் சொல்கிறது.கொய்யா மரங்கள் இல்லை . அடையாளமாக நரை விழுந்த, முடிந்து போன எச்சமாக அத்தனைக்கும் சாட்சியாக ஒரு மரம் மட்டும் இன்றோ நாளையோ எனக் கதை முடிய கரணமாயிருக்கிறது. ஆனால் எத்தனை கதைகளைப் பார்த்த சாட்சியாய் இருக்கிறது.

மலையாக மண்ணாக கோயிலாக, மரமாக ஆகியிருக்க வேண்டும் நமது ஆயுள் அதிகமாக...
வரலாறுகள் மாறுகின்றன. மனிதம் சுருக்கமாக சேதி சொல்லி சென்று விட...நிறைய பேர் எதுவும் செய்யாமல் சொல்லாமல் பூமிக்கு பாரமாக இருந்தே சென்று விட...அப்படிப்பட்ட பிறப்பு இல்லை நான் தற்போது பகிர்ந்து கொண்டுள்ளது. நாட்டுக்கும் வீட்டுக்கும் எதை எதையோ எத்தனையோ பகிர்ந்துண்டு வாழ்ந்து சென்றிருப்பது. தியாகத்தின் திருவுருவமாய்.. ஒரு மனிதன் தனக்கு கிடைத்த கூட்டுறவு சங்கத்தின் வழியே கிடைத்த ஒரு சிறு பாக்கெட்ட, அதில் சில இனிப்புகள் மட்டுமே இருக்கும் கொஞ்சம் மிக்சர் இருக்கலாம் அதைக் கூட தம் குடும்பத்தாரிடம், பிள்ளைகளிடம் பகிர்ந்தளிக்க வேட்டியில் வைத்து எடுத்து வந்து வளர்ந்த கதை எங்கள் குடும்பக் கதை. ஆனால் அது இப்போது இருக்கும் மது அடிமைகள் கதையை என்றும் பிரதிபலிக்காது.

Related image


சுருக்கமாக் சொல்ல வேண்டும்: அவர்கள் சிகரத்தில் எமை ஏற்றி வைக்க ஆழ ஆழ புதைந்து போனார்கள்...அவர்களுக்கு என்றும் எமது தலை தாழ்ந்த வணக்கம். அஞ்சலி. தாய் மண்ணே வணக்கம். என்பது போல அவர்கள் வாழ்ந்த உண்டு உறங்கி, நடந்து உயிர்த்து, மரித்த அதே மண்ணில் வாழ்ந்து வருகிறேன் என்ற ஒரு பிடிப்புடன் என்றும் எம் இணக்கம். இந்த வணக்கம். பதிவு. இசைவு.
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.


2 comments:

  1. those who fondly respectfully recollect their parents would always be successful in their lives.... KAVIGNAR THANIGAI

    ReplyDelete
  2. thanks Nat Chander for your feedback on this post sir. vanakkam.please keep contact.

    ReplyDelete