Saturday, November 19, 2016

ஆக்சன் மோடியின் அதிரடித் தாக்குதலும் அம்பானிகளின் அசைவின்மையும் ஒரு சந்தேகம்: நகைச்சுவை பார்வை. கவிஞர் தணிகை

ஆக்சன் மோடியின் அதிரடித் தாக்குதலும் அம்பானிகளின் அசைவின்மையும் ஒரு சந்தேகம்: நகைச்சுவை பார்வை. கவிஞர் தணிகை


Image result for modi economy


அம்பானி, அதானி, மோடி, லலித், மல்லையா இப்படி பல பேர்கள் எல்லாம் வட இந்திய பேர்கள், நம்பள்கி ஜெ பர்மெனட்கி ஜெ...தாய் மண்ணே வணக்கம். அண்ணே வணக்கம். தற்கொலை செய்யும் சத்தம் அடங்கி மை வைக்க வரிசைக்குள் போய் நின்று நாலு ஆயிரத்தை இரண்டாயிரமாக்கினாலும் வயிறு பசிக்க க்யூவில் நிற்கும் இந்திய ஜனநாயகம் ஓட்டுப்போட்டாலும், மை, வங்கியில் பணம் எடுக்கையிலும் மை, கொஞ்ச நாள் பொறு தலைவா மிரகிள் நடக்கும் என்கிறார் ஜெட் லீ..நாற்பது ஐம்பது பேர் அம்பேல் ஆன பிறகும்

கொஞ்ச நாளில் என்ன நடக்கும் என்பதே தெரியாத நிலை என நண்பர் ஒருவர் பயமுறுத்துகிறார், மற்றொருவரோ எல்லாம் நன்மைக்கே நீங்கள் செத்தாலும் பரவாயில்லை எல்லாருக்கும் நல்ல நேரம் பின்னால் இருக்கிறது கொஞ்சம் பொறுத்திருந்து பாருங்கள் இந்தியப் பொருளாதாரம் நிமிர்ந்து எழுந்து நம்மை வாழவைக்கப் போகிறது என்கிறார் இன்னொருவர். இரண்டு பேருமே பதிவர்கள். நண்பர்களே..

இரண்டுக்கும் நடுவே இடையே நடு சென்டரில் நாம்....இன்டியன்ஸ் அட் கிரஸ் ரோட், இன்டியன் எகானாமிக்ஸ் அட் கிராஸ் ரோட், ஒருவர் சொல்கிறார் அம்பானி எல்லாம் வரிசையில் வந்து நின்றால்தான் நிலை சரியாகும் என நம்புவீர்களா என...எனக்கும் கூட ஏதோ தப்பா தப்புத் தப்பா எக்குத் தப்பா நடக்கறா மாதிரியே தெர்யுதே...அடங்கொய்யால நம்பள் கிட்ட டாஸ்மாக் பயக்கம் எல்லாம் இல்ல சாமி...

Image result for modi economy

ஆனா டாஸ்மாக் சூபர்வைசர் சொல்றார், அவிக கடைக்கு வரும் சுமார் இரண்டு இலட்சம் பணம் அன்னாடம் பேங்கல கட்டறதெல்லாம் அப்படியே அரசியல் வியாதிகள் கிட்ட சாரி அரசியல் சாமிங்ககிட்ட முச்சூடும் சில்லறையா அந்த பழைய நோட்டுக்கு பதிலா போய்டுதாமே...இது என்னா நியாயம்? எப்படி எப்பூடி? இது எந்த க்யூ, இது எந்த வரிசை? வரிசையே இல்லாம, க்யூவே இல்லாம...

அதே போலதான் அதாங், எங்க எப்படி சில்லறையா வந்த பணம் வந்தாலும் இந்த பணக்காரப் பயங்ககிட்டயும் அரசியல் வியாதிங்க கிட்டயும், அரசாங்க பதவி மாருகிட்டயும் அப்படியே சில்லறை 100  50 எல்லாம் பூடுதாமே...
Image result for modi economyயோவ் மோடி நான் ஒன்னே ஒன்னு கேக்கறேன்: ஸ்ரீ புரம், அம்மா அமிர்தம், ஈசா பூசா, மேல்மருவத்தூர் 4 அம்மா, திருப்தி எழ்மலை,ஐயப்ப நாடு நம்பூதிரி பாடு தேவசம் போர்டு, திருவனந்தபுரத்து பாதாளம்,இப்படி நம்ம நாட்டில் எக்கச் சக்கம் கொட்டிக்கெடக்குதே , அத்தை விடு, எத்தனை டிவிக்கள், எத்தனை அறக்கட்டளைகள், பள்ளிகள், கல்லூரிகள் அத்தை எல்லாம் முந்தி எடுக்கறதை வுட்டுப் போட்டு எங்க அடி வயித்துல கை வைச்சுட்டியே அய்யா, உம் மூஞ்சில பீச்சாங்கையை வைக்க...அட அவங்க இன்னும் 500 1000 அப்படியே பழ்சானும் போடுங்க என நன்கொடை, வாங்க அது எப்படிய்யா செல்லும் ? அவகளுக்கு ஒரு நீதி, சட்டம், ஒரு அவசர்மா ஒரு ஒன்னுக்கு, ரெண்டுக்கு அல்லா நடுத்தர கீழ்த்தட்டுக்கும் வேற ஒன்னா? இதே நீதியா? மோடி ஒன்னை இன்னா இன்னாவோ சொன்னாங்க ஓட்டைப் போட்டாங்க, வெளி நாட்டுல பாச்சா பலிக்கல..இங்க எங்க கிட்ட கை வச்சிட்டிய மவராசா  ஏர் இந்தியா மவராசா
Image result for modi economy


முச்சூடும் எங்க பணத்தை மறுபடியும் புடுங்கி பேங்க் வழியா அதானி, மதானி, அம்பானி, பிர்லா, டாட்டா எல்லாம் டிங்கிகளுக்கும் கொடுத்துட்டு வாராக் கடன்னு சொல்லி அவனுங்களுக்கு விசுவாசம் காட்டப் போறீயா? அவங்க காசலதான் பதவிக்கு வந்த அவங்களுக்கு நேர்மையா நடந்துக்கறே. காங்கிரஸ் அடுத்து மறுபடியும் வர வழி செஞ்சுப்புட்டியே கோட்டை வித்த மோடியே...அங்க ட்ரம்ப் பல்ப்..இங்க உனக்கு இனி ஆப்புதான்..

மறுபடியும் பூக்கும்  வரை

கவிஞர் தணிகை.

2 comments:

  1. சிறந்த அறிஞர்களின் புதிய பதிவுகளைப் படிக்க, நாட வேண்டிய ஒரே குழு உலகத் தமிழ் வலைப்பதிவர்கள்! மறக்காமல் படிக்க வாருங்கள்! நீங்களோ உங்கள் நண்பர்களோ வலைப்பதிவர்கள் ஆயின் உங்கள் புதிய பதிவுகளையும் எமது குழுவில் இணைக்கலாம் வாருங்கள்!
    https://plus.google.com/u/0/communities/110989462720435185590

    ReplyDelete