Saturday, November 12, 2016

அச்சம் என்பது மடமையடா: கவிஞர் தணிகை

Image result for acham enbathu madamaiyada
அருமையான பாரதி வரிகள் : அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பது இல்லையே...எனச் சொல்லும் கண்ணதாசன் அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உரிமையடா..வரிகள் மன்னாதி மன்னனில் எம்.ஜி.ஆர் பாடலாக வரும்...ஆனால் இந்த அச்சம் என்பது மடமையடா :சிம்புவுடன் வாசு தேவ் மேனன் ஆக்கத்தில்.ஆனால் சிம்புவுக்கு கடைசியில் ஐ.ஏ.எஸ் வேடம், கமலுக்கும், சூரியாவுக்கும் பொருத்தமாகிய அளவு கதையில் ஊட்டம் இல்லாமல்...


அச்சம் என்பது மடமையடா: கவிஞர் தணிகை

அருமையான பாரதி வரிகள் : அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பது இல்லையே...எனச் சொல்லும் கண்ணதாசன் அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உரிமையடா..வரிகள் மன்னாதி மன்னனில் எம்.ஜி.ஆர் பாடலாக வரும்...ஆனால் இந்த அச்சம் என்பது மடமையடா :சிம்புவுடன் வாசு தேவ் மேனன் ஆக்கத்தில்.ஆனால் சிம்புவுக்கு கடைசியில் ஐ.ஏ.எஸ் வேடம், கமலுக்கும், சூரியாவுக்கும் பொருத்தமாகிய அளவு கதையில் ஊட்டம் இல்லாமல்...

மஞ்சிமா மோகன் என்னும் புது முகமும் சிலம்பரசன் என்கிற சிம்புவும் கொஞ்சம் விண்ணைத் தாண்டி வருவாயா என்ற படத்தைப் போல காதலில் பறக்கிறார்கள். சில பாடல்கள் நன்றாக இருக்கின்றன. இராசாளி, தள்ளிப் போகாதே போன்றவை. மேலும் இடம் தேர்வு எல்லாம் நன்றாகவே இருக்கின்றன்.

கதை சிறிது நேரத்தில் த்ரில்லர் இரகமாக மாறுகிறது என்ன ஏது என்று தெரியாமலே அட்டாக் செய்யப்பட்டு கொலை முயற்சி நடக்கிறது. கடைசியில் மஞ்சிமா மோகனின் பெற்றோர் சமூக ஆர்வலர்கள் என்றும் அவரது எதிரிகள் எவ்வளவோ தடுக்க வேண்டும் காப்பாற்ற வேண்டும் என்ற முயற்சிக்குப் பின்னும் அவர்களைக் கொன்று விடுகிறார்கள், சிம்புவின் நண்பர் சிம்பு மற்றும் மன்ஞ்சிமாவையும் கொன்றுவிடத் துடிக்கிறார்கள்.கொன்று விட்டார்கள் என நினைக்கும்போது மஞ்சிமா மறுபடியும் உயிரோடு வருகிறார்.

கடைசியில் சிம்பு கதை சொல்கிறார் இரண்டரை வருடம் தலைமறைவாக இருந்து சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி, கிடைத்த ஐ.ஏ. எஸ் தகுதியையும் வேண்டாம் எனச் சொல்லி விட்டு ஏற்கெனவே பழி வாங்கிய எதிரிகளின் எச்ச மிச்சத்தை கொன்று தீர்க்க அதே மஹாராஷ்ட்ராவுக்கு போஸ்டிங் வந்து விட்டதாக.

மற்றபடி சொல்ல பெரிதாக ஏதுமில்லை, எல்லாமே ஒரே துப்பாக்கி சண்டை, கைகலப்பு, கொஞ்சம் லவ் , கொஞ்சம் குடும்பம்.ஏனோ பின்னால் கதையில் அழுத்தம் வலு குறைவாகி விடுவதால் முதலில் பார்க்க இருக்கும் நமது ஆர்வம் நீர்த்துப் போய் விடுகிறது.

ரஜினிகாந்த் என்ற தமது பேரை வைத்துக் கொண்டு அதான் தமிழகத்துக்கே நமைப் பற்றி தெரியுமே என தற்பெருமை பேசுகிறார் சிம்பு. கொஞ்சம் கௌதம் வாசுதேவ மேனம் படமாகவும் கொஞ்சம் சிம்புவின் படமாகவும் பாலும் டிகாசனுமாக கலந்ததால் சிம்பு இரசிகர்களுக்கு படம் பிடிக்கலாம். நமக்கும் பாதிவரை நன்றாக இருப்பது போன்றும் குறிப்பிட்ட நேரத்துக்கும் பின் ஏற்றுக்    கொள்ள முடியாமல் போகிறது.

அச்சம் என்பது மடமை என திரும்பி, திருப்பி எதிரிகளைத் தாக்குவேன் என காதலை விட்டு விட்டு , காதலியை எங்கு செல்ல வேஎண்டுமோ அங்கே இறக்கி விட்டு விடுவதாக சொல்லி பைக்க திருப்பி கதையை திருப்புகிறார். காதலி இவருடனே வருவதாகவே சொல்கிறார்.

கதை, பின்னால் சொன்ன விதம் எல்லாம் கொஞ்சம் விரைவாக அடிப்படை இல்லாமல் இருப்பதால் இந்தப் படம் சிம்புவுக்கு எப்படியோ ஆனால் வாசுதேவ மேனனுக்கு சறுக்கல்தான். சட்டென்று மாறுது வானிலை என 2013ல் பேர் வைக்கப் பட்டு வெளிவந்திருக்க வேண்டிய படம், டீசர் 2014ல் ட்ரைய்லர் 2015ல் என  வெளியிடப்பட்டு எப்படியோ டிசம்பர் 11ல் இந்த ஆண்டு 2016ல் வெளியாகிவிட்டது.

நிறைய சிரமப்பட்டிருக்கிறார்கள். ஆனால் அவ்வளவு நிறைவில்லை. இளைஞர்களுக்கு இதன் பாடல் பிடிக்கிறது. படம் முழுதாக பிடிக்க வாய்ப்பில்லை.
Image result for acham enbathu madamaiyada


நூற்றுக்கு முப்பத்தைந்து  கொடுக்கலாம். சிம்புவும் மஞ்சிமாவும் நன்றாகவே இருக்கிறார்கள். 3 வருடத்துக்கும் முன்பா தற்போதா எனத் தெரியவில்லை. நிறைய பேருக்கு காப்பி டீ எல்லாமே சூடாக இருந்தால் பிடிக்கும். இது ஆறிவிட்ட காப்பி, டீ எனைப் போன்றவர்க்கு அதிகம் சூடாகவும் அதிகம் கூலாகவும் சாப்பிடக்கூடாது என்ற நிலை எனவே உங்களுக்காக பார்த்து வைத்து  சொல்லி விட்டேன் பார்ப்பது பார்க்காததும் உங்களின் முடிவு. பார்க்காததால் இழப்பு இருப்பதாகவும் இல்லை. பெரும் சுக இழப்பு ஏதுமில்லை.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.


No comments:

Post a Comment