இந்தியப் பிரதமர் மோடிக்கும் அரசுக்கும் சில கேள்விகள் மட்டும்: கவிஞர் தணிகை.
500, 1000 என்பதே பேச்சு ஆயிரம் தொலைஞ்சி போச்சி 2000 புழக்கத்துக்கு வரலாச்சு. 1. ஆயிரம் ரூபாயே வேண்டாம் என்னும்போது எதற்கு 2000 ரூபாய்?
2. 500 ரூபாய் புது நோட்டுடன் நிறுத்திக் கொள்ள வேண்டியதுதானே?
3. இந்த அதிரடியால் சரி பாகிஸ்தான் கள்ள நோட்டை சரி செய்கிறோம், உள் நாட்டில் கறுப்புப் பணத்தை பிடிக்கிறோம் செயலற்றதாக்குகிறோம் என்பதெல்லாம் சரி,ஸ்விஸ் வங்கியில் பிடிப்பதாக சொல்லி ஆட்சிக் கட்டில் ஏறியதை மறந்து இந்த செயல் மூலம் நல்ல பேர் வாங்க முடியுமா?
4. கள்ள நோட்டையும், கறுப்புப் பணத்தையும் கருவறுக்க, வேரறுக்க இது ஒன்றுதான் வழியா? வேறு எதுவுமே இல்லையா? அப்படி பணவீக்கத்தை சரி செய்து பொருளாதாரம் சரி செய்ய வேண்டுமெனில் எதற்கு இந்த அதிக மதிப்புடைய நோட்டுகள்? 100 ரூபாய் வரை கூட போதாதா?
5. ரிலையன்ஸ் குருப்ஸ் வங்கிகளில் தேசத்திடம் வாங்கியுள்ள ஒன்னேகல்\/ ஒன்னேகால்
இலட்சம் கோடியை எப்போது கட்டப் போகிறது?
6. வாராக் கடனாக வங்கி வைத்திருக்கும் முழுத் தொகை எவ்வளவு அதை எப்போது எப்படி வங்கிகள் வசூல் செய்யப் போகின்றன?குறு முதலாளிகளை இதன் மூலம் அடக்குகிறீர் சரி.பெருமுதலாளிகள் கொடுத்த தேர்தல் நிதி மூலம் தானே நீங்கள் பதவிக்கு வந்ததே? அவர்களுக்கு எல்லாம் எதிராக எப்போது நடவடிக்கை எடுக்கப் போகிறீர்?
7. விஜய் மல்லையா, லலித் மோடி, இன்னும் எங்கள் நினைவில் இல்லாத எத்தனையோ பெரு வியாதிகள் பெரு ஊழல்களில் இந்தியப் பணத்தை கொள்ளையடித்த கதையில் உங்கள் நடவடிக்கை ஏன் பலிக்கவே இல்லை? நடவடிக்கை எடுக்கவே இல்லையா?
8. இப்படி அதிரடியாக நள்ளிரவிலிருந்து 500 , 1000 ரூபாய் பழைய நோட்டை முடக்கும் உங்களால் வெறும் சனி ஞாயிறுகளில் மட்டும்தான் வங்கிகளை செயல் பட வைக்க முடியுமா? ஏன் வங்கிகளின் 24 மணி நேரச் சேவை வழங்கி வேலை இல்லா இளைஞர்க்கு வேலை கொடுத்து இந்தப் பண பரிமாற்றத்தை சுலபமாக பொதுமக்களுக்கு சிரமம் இல்லாமல் மாற்றம் செய்திருக்க முடியாதா? புது நோட்டுகளை நாட்டில் இறக்கி விட முடியாதா?
9. ஒரு அரசு என்றால் அது பெரும்பான்மையான எண்ணிக்கையாளர்களுக்கு தொல்லை தருவதாக இருக்கக் கூடாது அது பெரும்பான்மையானவர்க்கு வாய்ப்பு தருவதாக இருக்க வேண்டும். சிறுபான்மையானவர்க்கு நன்மை செய்ய பெரும் அளவிலான அதுவும் கீழ்த் தட்டு, நடுத்தர மக்களை பாதிப்பதை மட்டுமே இந்திய அரசு இதுவரை செய்திருக்கிறது அதிலிருந்து உங்களிடமும் மாற்றம் இல்லையே ஏன்?
10. எரி வாயு, ஆதார் கார்ட், பெட்ரோல் டீசல் விலை இப்படி அதிகம் எதை பொதுமக்கள் பயன்படுத்துகிறார்களோ அதை வைத்து அதில் கை வைத்து ஆட்சி நடத்துவதை தவிர வேறென்ன பொருளாதர கொள்கையை உங்களது அரசுகள் இதுவரை சுதந்திரம் அடைந்ததிலிருந்து செய்திருக்கின்றன?
11. ரயிலுக்கு இனி தனி பட்ஜெட் இல்லை என்றீர், சரி எம்.பிக்களுக்கும் மந்திரிகளுக்கும், குடியரசு தலைவர் வரை சம்பளம் இரட்டிப்பு எனச் சொல்லியிருக்கிறீர்கள், மின் கட்டணம், எரிவாயு, குடிநீர், செல்பேசி, வெளி நாட்டுப் பயணம், சமையல்காரர்கள்,உதவியாளர்கள், கார்கள், ஓட்டுனர்கள்,பாதுகாவலர்கள்,எடுபிடிகள், தோட்டக்காரர்கள், வேலையாட்கள் இப்படி அனைவரையும் அரசுப் பணத்தில் அதாவது பொதுமக்கள் பணத்திலிருந்து பயன்படுத்திய பிறகும் எதற்கு உங்களுக்கு எல்லாம் சம்பளம்?
மக்கள் பணியாளர்களாக , அரசியலில் தேர்தலில் வெற்றி பெறும் நபர்களில் ஊராட்சி கவுன்சிலர்கள், உறுப்பினர்களிலிருந்து குடியரசுத் தலைவர் வரை எவருக்கும் அரசின் சம்பளம் இருக்கக் கூடாது என்ற ஆணை பிறப்பிக்க உங்களால் முடியுமா? அப்படி இருந்தால் எங்களைப் போன்றவர் பணி செய்ய சேவையாற்ற முன் வரத் தயாராய் இருக்கிறோம்...ஏற்றுக் கொள்வீரா? சோறு, நீர், எல்லாமே அரசிடம், பொதுமக்களின் பணத்திலிருந்து பெற்றுக் கொண்டு உங்களுக்கு எதற்கு இலட்சங்களில் சம்பளம் இலட்சியம் இல்லாமல் அதை முதலில் உங்களால் சரி செய்ய முடியுமா?
11. நதி நீர் இணைப்பு உங்களால் கையால் ஆகுமா?
12. 40 அடி மட்டுமே தண்ணீர் இருக்கும் மேட்டூர் அணையின் நீர் அளவு தமிழகத்துக்கு எதிர்காலத்தில் பல கேள்விகளை எழுப்பும்போது ஒரு பிரதமராக தமிழக மக்களுக்கு குடி நீருக்கும், பாசன நீருக்கும் என்ன செய்திருக்கிறீர்.
13.எல்லாவற்றையும் விட ஒரு முக்கியமான கேள்வி: உங்களால் வந்து நேராக எங்க நோய்வாய்ப்பட்டிருக்கும் அம்மாவை அப்பல்ல்லோவில் நேராக பார்த்து உண்மை நிலவரத்தை நாட்டுக்கும் ஆவலுடன் காத்திருக்கும் தமிழக மக்களுக்கும் வெளிப்படுத்த முடியுமா? உணர்த்த முடியுமா இப்படி இப்படியாக....எல்லாவற்றுக்கும் நன்றி வணக்கம்.
14. டொனல்ட் ட்ரம்ப் ட்ரம்ப் ஆக வெற்றி அடைந்து விட்டார் அங்கிருக்கும் இந்தியர்களை துரத்தாமல் தக்க வைத்த்து அமெரிக்க வாழ்க்கைக்கு அவர்களுக்கு உத்தரவாதம் அளிக்க அவர்களுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்?
இப்படி இன்னும் பல கேள்விகள் இந்த முக்கியமான தருணத்தில் கேட்க எமக்கு அவா....
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

அருமை. நன்றி.
ReplyDeletethanks for your feedback on this post sir. vanakkam.
ReplyDeletethanks for your participation in this discussion S.Raman, Vellore .vanakkam. please keep contact.
ReplyDeleteunfortunately your S.Raman,Vellore feedback also deleted with karuththu kanthasamy,sorry for that.
ReplyDelete